Monday, April 11, 2016

கருங்குழலி.,செங்குழலி,பூங்குழலி,வெண்குழலி,அல்டிமேட் குழலி - வரையறு

உன் ஒரே ஒரு (பிளாஸ்டிக் ) வளையலை குளத்தில் வீசினேன்.
இப்போது குளம் பூரா பெருகிக்கொண்டே இருக்கிறது எண்ணற்ற நீர் வளையங்கள்


===================


2  நெட் தமிழன் ஒரு காதல் கவிதை இருந்தா கடன் குடுங்க -னு கேட்கறான், அடுத்து காதலியையே கடன் கேட்பானோ?


===============

3 நைட் 9 மணிக்கு குட் நைட் சொல்லிடறான் நெட் தமிழன், ஆனா மிட் நைட் ஆனாலும் கிளம்பறதில்லை, இங்கனயே தான் சுத்திட்டு இருக்கான்


===========

4 நீங்க வாக்கிங் போக கிளம்பும்போது பூனை குறுக்கே போனா இதுதான் சாக்குன்னு குப்புறப்படுத்துக்காதீங்க.பூனையும் வாக்கிங் தான் போகுது


============



5 வீணா போய்டுமேனு எப்பவும் கவலைப்பட்டுட்டே இருக்கக்கூடாது.வீணா போய்ட்டா அடுத்த நிமிசமே ஒரு ரீணா வோ சோனா வோ FB வந்துடும்




==========



6 ட்விட்டர் பாஷையில்



ககபோ = கடல் கன்னி போகுது



============

7 முதல் 5 வருசம் நான் மொள்ளமாரியா இருப்பேன், அவரு கேப்மாரியா இருப்பாரு. அடுத்த 5 வருசம் நான் கேப்மாரி, அவரு மொள்ள மாரி. வாக்காளர்களுக்கு நன்றி



================



8  மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு  லவ் ப்ரப்போஸ் ( யாராவது ஒரு வேளை )பண்ணி இருந்தா அவனை கலா ரசிகன்னு சொல்லிட முடியாது




==============



கெமிக்கல் கலந்த ஷாம்பூ/சோப் போடாம அரப்பு,சிகைக்காய் தேய்ச்சுக்குளிச்சா நீ கருங்குழலி.
நரை முடி மறைக்க
மருதாணி தேய்ச்சுக்குளிச்சா செங்குழலி



===========

10 தலை முடி அடர்த்தியா மென்மையா வளர செம்பருத்திப்பூ இலை / பூ தேய்ச்சுக்குளிச்சா அது பூங்குழலி


================

11   நரையை அப்படியே விட்டுவிட்டால் வெண்குழலியா?"

இல்லை.அசலா அப்டியே இருந்தா அல்டிமேட் குழலி


==============

12 காதலிக்கும் வரை எல்லா சித்ரா க்களும் மித்ராவா (நட்பா)இருப்பாங்க.கல்யாணம் ஆகிட்டா ருத்ரா ஆகிடுவாங்க


================

13 ஆண்கள் எல்லோரும் அன்புமணி போல்.தன் முடிவை ஓப்பனா ஓப்பனிங்ல சொல்லிடுவாங்க.பொண்ணுங்க விகாந்த் போல்.இழுத்தடிச்ட்டு கடைசில காலை வாரி விட்ருவாங்க

=============

14 மும்முனைப்போட்டி வந்தால்

1,அதிமுக
2,தேமுதிக தலைமையில் கூட்டணி
3,திமுக கூட்டணி
இந்த வரிசையில் ரிசல்ட் வந்துடனும்

=========

15 1 ஒரு பரம்பரைக்கே பல்லக்குத்தூக்கத்தயாராய் இருக்கும் அடிமைகள்

2 ஒரு தனி நபர் காலில் விழுந்து கிடக்கும் அடிமைகள்
என தமிழக அடிமைகள் இரு வகை


=============
16 அன்புக்கு அடிமை ஆனால் நீ வாழ்வாய்.
அழகுக்கு அடிமை ஆனால் உன் காதல் வாழும்.
அரசியல்வாதிக்கு அடிமை ஆனால் அவன் வாழ்வான்.நீ வீழ்வாய்


========

17 எதிரி உன்னை துரத்திட்டு வரும்போது நீ ஓடிட்டே இருக்கனும்னு அவசியம் இல்லை.நீ ஓடிட்டு இருப்பதா அவனை நம்ப வெச்சா போதும்


=============

18 பயம் என்பது கோழைத்தனம் அல்ல.அது சிலசமயம் நீ பாதுகாப்பா இருப்பதற்கான கவசம்

==============

19 நீ புத்திசாலி என எதிரி ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உன் சமயோசிதபுத்திகளை அவனிடம் பட்டியல் இட்டுக்கொண்டிராதே!


============

20 நெட் தமிழன் பார்வையில்
திருமணம் = மெயின் பிக்சர்
நிச்சயதார்த்தம் = ட்ரெய்லர்
பெண் பார்க்கும் படலம் = டீசர்
போட்டோ பார்த்தல் = பர்ஸ்ட்லுக்

============

விஜய் மல்லையாவும், தென் காசி டீச்சரும்

1   மார்ச் டூ மே  வெய்யில் கொடுமை ஜாஸ்தியா இருப்பதும் நல்லதுதான் ஒரு வகைல 

 எப்படி?

சூரியனால் தான் வெய்யில்னு நெகடிவ் ஓட்டு விழ ஒரு வாய்ப்பு இருக்கில்ல?

===============

என் டி எம் ஒர்க் ஆகலை,அதனால யாரும் டி எம் அனுப்ப வேண்டாம்

மிஸ், இதான் சாக்குன்னு அதை செக் பண்ண உங்க ஃபாலோயர்ஸ் எல்லாரும் டி எம்மப்போறாங்க

============

3  யுவர் ஆனர் , கட்சித்தலைவர் கிட்டே நல்ல பேர் எடுக்கத்தான் 3 பேரை உயிரோட எரிச்சோம்

ஓஹோ, அப்போ முதல்ல ஜெயில்ல தள்ள வேண்டியது கட்சித்தலைவரைத்தான்


==================


4 டியர், புது தோசைக்கல்லில் முதல் தோசை நல்லா வர மாட்டேங்குதே அது ஏன்?

விஜய் மல்லைய்யாக்கு கொடுத்த பேங்க் லோனும்,  புதுக்கல்லில் சுடும் தோசையும் 1. வராது


==================


5  சார், உங்க ஜோக்ஸ் எல்லாம் படிச்சா சுவரில் முட்டிக்கலாம்னு தோணுது

 அப்டியா? உங்க ஃபேஸ்புக் WALL ல போடறேன், அதுலயே முட்டிக்குங்க



====================

6  மிஸ்! எதுக்காக என்னை கெட்ட வார்த்தைல திட்டுனீங்க?

என் கிட்டே ஒரு வார்த்தையாவது பேசுனாத்தான் ஃபாலோ பண்ணுவேன்னீங்களே?



================


7 கடல் கன்னியை நேர்ல பார்த்தவங்க இருக்காங்களா?


கடல் கன்னியோட பாலோயர்ஸ் யாராவது எதிர் வீட்டில் குடி இருந்தா பார்த்திருப்பாங்க


============

8 பர்த்.சர்ட்டிபிகேட் பார்்க்காமயே அந்தப்பொண்ணுக்கு 19 வயசுதான் னு எப்டி சொல்றே?


மடோனா செபாஸ்"டீன்" ,அப்போ டீன் ஏஜ் தானே?




============

9 தலைவரே! ஒரு வேளை ( ஒரு பேச்சுக்கு) நீங்க ஜெயிச்சுட்டா துணை முதல்வர் பதவி யாருக்கு கொடுப்பீங்க?

 எனக்கு “வாங்கி”த்தான் பழக்கம். யாருக்கும் தரமாட்டேன்


===================


10   தலைவரே!  உங்க ஆட்சில ஏன் விஜய் மல்லைய்யாவை தப்பிக்க விட்டீங்க?

அவங்க ஆட்சில மட்டும் லலித் மோடியை தப்பிக்க விடலையா?அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா


==================


11 தலைவரே! மாடு எப்படி உங்களை முட்டுச்சு?இப்டி காயம் ஆகி இருக்கு?

4 நாளா தீனி போடலைங்கறது  தெரியாம தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?னு அது கிட்டேப்போய் கேட்டேன்



=================


12 இன்ஸ்பெக்டர், 7000 கோடி ஏமாற்றி நாட்டை விட்டு ஓடிப்போன ஆளை பிடிச்ட்டீங்களா?

 அது முடியலை சார், வீட்டை விட்டு ஓடிப்போன டீச்சரை திருப்பூர்ல பிடிச்ட்டோம்


==================


13 ஏட்டய்யா, நான் மாசமா இருக்கேன். அவர் கூட என்னை சேர்த்து வைங்க
ஏம்மா? 2 பேரும் சேராம எப்டி மாசமா ஆனே?


================


14  சார், உங்க பொண்ணு கடல் கன்னியைக்காதலிக்கறேன்

 உனக்கு நீச்சல் தெரியுமா?

ம்ஹூம்

 அப்புறம் எப்டி டெய்லி நடுக்கடலுக்குப்போய்  அவளைப்பார்ப்பே?


=================


15    நைட் ஓவரா குடிச்சியா?

எப்டி தெரியும்?

வாசல்ல 6 ஃபுல் பாட்டில் கிடக்கே?


================

16 ஒரு பொண்ணு உங்க கிட்ட சாரி கேட்டா நீங்க என்ன செய்வீங்க?

நான் பதிலுக்கு பேன்ட் சர்ட் கேட்பேன்


============

17 பூரி ஒரு செட்

DMK பூரியா? ADMKபூரியா?
அப்டின்னா?
3,பூரி வாடிப்போய் இருந்தா அது DMK பூரி.செட்
2 பூரி பூரிப்பா இருந்தா அது ADMK பூரிசெட்

===========

18 தலைவரே! மேட்டூர் அணையை 80,வருசமா யாருமே தூர் வாரலையாமே ஏன்?

எங்கே டைம்?,ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே நேரம் சரியா இருக்கு


=============

19 டாக்டர்.சந்தோசமா இருந்தா சாப்புட முடியலயே..என்ன பண்ண?

உங்க சம்சாரத்தை நினைங்க.கடுப்பாகும்.டக்னு சாப்ட்ருங்க


===============


20 சார்.ஏழே கால் லட்சம் பேர் உங்களை பாலோ பண்றாங்க.ஆனா நீங்க வெறும் 24,பேரை மட்டும் பாலோ பண்றீங்க?

24 பட ப்ரமோ


================

Sunday, April 10, 2016

கிட்னி கல் பிரச்சனை வராமல் இருக்க

1 இன்றைய  மாப்ள சிங்கம் கேப்டன் தான்
காதலும் கடந்து போகும் என சோகமா  இருப்பது கலைஞர் தான்


=============
2  அறிவாலயத்தில் இனிதே விடியவில்லை



==========



3 நெட் தமிழன் சொந்தமா யோசிச்சு ஒரு ட்வீட் போட்டுட்டு பொண்ணு கிட்டேப்போய் குருவே உங்க யோசனைப்படிதான் இப்டி எழுதுனேன்னு அடிச்சு விடறான்



=========



4 பொன் வைக்கற இடத்தில் பூ வைப்பது போல் விஜய்காந்த் இல்லாத வெற்றிடத்தை தம்பி விஜய் நிரப்புWAR




=========



5 திருவாரூர் இளவரசியா? ஆனந்தியா?ன்னு ஆல்ரெடி நாம குழப்பத்தில் இருக்கும்போது நெட் தமிழன் குட் மார்னிங்க் முனியம்மான்னு சொல்லி புதுசா குழப்பறான்




===========



6 என் மரியாதையை காப்பாற்றவோ, சிதைக்கவோ செய்வது என் கையில்தான் இருக்கிறது.


அப்டியா?மருதாணியும், வளையலும் தான் இருக்கு மிஸ்




==============



7 கடல் சார்ந்த பகுதிகளில் கரை ஓரம் குடி இருப்பதும்,

கடலை சார்ந்த சோசியல் மீடியாக்களில் குடி இருப்பதும் எப்போதும் ஆபத்து




=============



8 நீ நிராகரிக்கப்படுவது முதல் அவமானம்,

4 பேருக்குத்தெரிந்தால் 2வது அவமானம் # காதல், கூட்டணி 2லும்




=============

9 ஒரு பொண்ணு முன்னால தலை குனிஞ்சு ஒரு பையன் நின்னுட்டிருந்தா அந்தப்பொண்ணு மிடி போட்டிருக்குன்னு அர்த்தம்



============



10 சம பலம் உள்ள இரு எதிரிகள் உன்னுடன் போட்டி போடும்போது நீ எதிரிகளின் எதிரிகளை நண்பன் ஆக்கிக்கொள்



=========



11 குற்றவாளிக்குஆதரவாக  ஃபீஸ் வாங்கி வாதாடும் வக்கீல் பிரமோசனில் ஜட்ஜ் ஆனபின் அதே குற்றவாளிடம் பணம் வாங்கிக்கொண்டு சாதக தீர்ப்பு சொல்லமாட்டாரா?



===============


12 நாட்டில் சாமிகள்   அருகி விட்டன,
குமாரசாமிகள்   பெருகி விட்டனர்,


=============

13

 ரஞ்சனி  ஜாகிங்க் ஓடிட்டு இருக்கு =” RUN”JANI


===========

14 மிஸ்! மென் பணி தேவதைனு பேர் வெச்சுக்கிட்டீங்களே? பனி க்கு 2 சுழி ன தானே வரும்
 லூசு, நான் சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றவ. மென் பணி , கரெக்ட் தான்


================

15   மார்ச் 30  ஃப்ரீயா இருக்கேன் வர்றியா?-ன்னு காதலிக்கு மெசேஜ் அனுப்பறப்ப சுருக்கமா 30/3 ?னு அனுப்பினா  அவ இது தெரியாதா? 30/3=10 -ன்னு ரிப்ளை


=====================

16 பக்கத்து வீட்டில் என்ன சமையல்னு பொண்ணுங்க மோப்பம் பிடிச்சுக்கண்டுபிடிக்கறதுல கில்லேடிகள்





=================





17 நான்  ரொம்ப கவலையா  மூடு அவுட்டா இருக்கேன்னு ட்வீட் போட்ட நெட் தமிழன் அடுத்த நொடிலயே  ஒரு பொண்ணு கிட்டே  மிஸ்!டிபி செம அழகு, நீங்களா?ங்கறான்





===================




18  கட்சித்தொண்டர்கள் முட்டாள் தனமாக , மூர்க்கத்தனமாக ஒரு செயல் செய்து விட்டால் அதற்கு தார்மீகப்பொறுப்பேற்று கட்சித்தலைவர் குறைந்த பட்சத்தண்டனை ஏற்றுக்கொள்ளவேண்டும்



===================

19  கிட்னி கல்  பிரச்சனை வராமல் இருக்க வாழைத்தண்டு சாறு மாதம் ஒரு முறை குடிக்கவும். வந்து விட்டால் பூளைப்பூ சாறு குடிக்கவும் கல் கரையும்


==================

20  அடிக்கடி  தண்ணீர்  குடித்து வந்தாலே மனிதனின் பல நோய்கள் வராமலயே தப்பிப்பான், வெய்யில் காலம் முடியும் வரை பழங்கள் , பழச்சாறுகள் ( ஐஸ் , அஸ்கா சேர்க்காமல்)


====================

கட்சில நெ 2 வுக்கெல்லாம் இடம் இல்லை, நெ1 மட்டும் தான்

1  தமிழகத்தின் பிரச்சனைகளை நாங்கள் விஞ்ஞானப்பூர்வமாக அணுகுகிறோம்-அன்புமணி # அப்போ இந்த தேர்தல் உங்களுக்கு ஒரு ஆசிட் டெஸ்ட் டா?



================




2 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்- ஆற்காடு சீதாராமய்யர் # ஜாதகம் யாருக்கும் சாதகம் இல்லையாம்



==============




3 11மாதம்போலீசுக்கு தண்ணி காட்டிய
தென்காசிஆசிரியை-மாணவன் காதல்ஜோடி திருப்பூரில் சிக்கினர் # மேமாசம்தானே மெகாட்வீட்டப்? இப்ப எதுக்கு வந்தாங்க?




=================



4 தி.மு.க., பலமாக தான் உள்ளது: கனிமொழி # அப்புறம் ஏன் தலைவர் கேப்டனை பழமாக கூட்டணிக்கு பாலமாக வர்ணிச்சாரு?வரச்சொன்னாரு?




================




தி.மு.க., வெற்றி பாதிக்காது: ஸ்டாலின் # பாதிக்குப்பாதி பாதிக்கும்னு தேர்தல் முடிவு உங்களுக்கு போதிக்கும்





=================



6  

ஆவிகளுக்கு பயப்படவில்லை:பாவிகளுக்கு பயந்தேன்- சகாயம் ஐ ஏ எஸ் # ஆனந்த விகடன் உட்பட எல்லா இதழ்களும் உங்களுக்கு சப்போர்ட்தானே? எதுக்கு ஆ.வி, ஜூ.வி க்கு பயப்படனும்?



===================


7  இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம். அனுமதிக்க மத்திய அரசு திட்டம்  # 140 தான் லிமிட்டா? ஹை வே ரோடு என்ன ட்விட்டரா?


================


விஜயகாந்தை மீண்டும் அழைக்கிறோம்: வைகோ # மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா சாங்க் டெடிகேட்டட் டூ கேப்டன்


=============

9 கட்டிய பணத்தை திரும்பக் கொடுங்க.விஜயகாந்தை நெருக்கும் தேமுதிக மாசெகள்! # சம்பா கோதுமை வயலை வித்து தந்த பணமாம், சம்பா திக்கலாம்னு பார்த்தாங்க


============


10 விஜயகாந்தின் முடிவுக்கு நான்தான் காரணம்.- டிராபிக் ராமசாமி # இப்போதானே அவருக்கு அரசியல்ல முன்னேற்றம் ஆரம்பம், அதுக்குள்ள ஏன் முடிவு?


==========


11 விஜயகாந்த் ஏன் தவறான முடிவை எடுத்தார் என தெரியவில்லை- இளங்கோவன் # தவமாய் தவமிருந்து பாத்தீங்க, தவறாய்ப்போய்டுச்சு


=============


12 திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச விரைவில் குழு அமைக்கப்படும்- EVKS # மகளிர் குழு நக்மா, குஷ்பூ வை அனுப்புங்க,நிறைய கிடைக்கும்


=============

13 ரஜினி எனக்கு ஆன்மீக குரு மாதிரி!- தன்ஷிகா # ஓஹோ, ஒரு படத்துல கவர்ச்சி காட்டி முடிச்சதும் இமயமலை ல தலையை காட்டிட்டு வந்துடுவீங்க?


===========


14 ஊழலில் தமிழகம் முதலிடம். ஜெ. அரசின் சாதனை இதுதான்: மு.க.ஸ்டாலின் # இந்த தன்னடக்கம் தான் தலைவரே உங்க கிட்ட பிடிச்சதே, நம்மளை வி்டவா?


============


15 தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட முடிவு - செய்தி # இந்த  தேர்தல்ல ஏகப்பட்ட ”தனி ஒருவன்” கள் போல, எது ஹிட் ஆகுமோ?



=================

16  அதிமுக ஆட்சியில்  கலெக்சன் , கரப்சன்,கமிசன் அதிகரித்து விட்டது- ஸ்டாலின் #  என் கண்ணுக்கு கலெக்”சன்” , கரப்”சன்”கமி”சன்” என SON , SUN  தான் தெரியுது


===============


17  நகைக்கடைக்காரர்கள் முதுகில் குத்துகிறார் மோடி:கெஜ்ரிவால் # இருக்காதே, வழக்கமா அவர் ஏழைங்க வயிற்றில் தானே குத்துவாரு?


=================


18 அதிமுக ஆட்சியில் 'கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன்' அதிகரித்து விட்டது: ‪-ஸ்டாலின்‬ #  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக வின் சாதனையை முறியடிப்போம்?


=================



19 

தேமுதிக அறிவிப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சி, பட்டாசு வெடித்துக்கொண்டாட்டம் -செய்தி # வி”ஜெ”யகாந்த்க்கு உள்ளே ஜெ விசுவாசம் இருக்குமோ?



================


20 

அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதவி தொடர்ந்து பறிப்பு # கட்சில நெ 2 வுக்கெல்லாம் இடம் இல்லை, நெ1 மட்டும் தான்


==================