Tuesday, April 05, 2016

மிஸ்! அவனை மட்டும் லவ் பண்றீங்களே?என்னையும் லவ் பண்ணலாமில்ல?

மிஸ்!6,வருசமா ஐ லவ் யூ சொல்றேன்.பதிலே இல்லை.நான் என்ன தான் பண்ண?

பொறுக்கவும்
வாட்?
ஐ மீன் ,பொறுத்திருக்கவும்.அக்காவுக்கு மேரேஜ் ஆகட்டும்

============

2 தலைவரே! இது ரோசியோட மோதிரம்னு எதுக்கு பிரஸ் கிட்டே உளறினீங்க?

இது ராசிக்கல் மோதிரமா?ன்னு கேட்டாங்க.ரோசியோடதுன்ட்டேன்


===============

3 டாக்டர்.CLTநர்ஸ் நளினி னு போட்டிருக்கீங்க்ளே?அப்டின்னா என்ன?

CURRENTLY LISTENING TO NURSE NALINA


==============

4 மிஸ்! அவனை மட்டும் லவ் பண்றீங்களே?என்னையும் லவ் பண்ணலாமில்ல?

யோவ்.நான் என்ன பாமக.வா?தேமுதிக வா?5,வருசத்துக்கு ஒருக்கா மனசை மாத்த



==============

5 தலைவரே!மேடைல எல்லாரும் நின்னுட்டே பேசும்போது நீங்க மட்டும் உக்காந்துக்கறீங்களே?

கிரிமினல்கள் தேர்தல் ல நிக்கக்கூடாதுன்னாங்க.அதான்்



===========

6 மிஸ்! ஆளைப்பார்த்தா சைவ பட்சிணி போல் இருக்கீங்க.ஆனா மாமிசபட்சிணி னு சொல்றீங்களே?

ஆமா.சிக்கன் சாப்ட்டா உடம்பு சிக்குனு இருக்குமாம்

===========

7 மாமியாரை மையமா வெச்சு ஒரு நாவல் எழுதறேன்.

ஓ.எப்போ முடிப்பே?
இப்போ தான் முதல் அத்தை யாயம் எழுதிட்டிருக்கேன்


=============

8 ரெவின்யூ இன்ஸ்பெக்டர் விஜய் ரசிகர்னு எப்டி கண்டுபிடிச்சே?
தெRI-னு நேம் போர்டு வெச்சிருக்காரே?


===============

9 ஜட்ஜ் = டைவர்ஸ் வேணுமா? உன் பிரச்னை என்ன?
என் சம்சாரம் ஓஹோ, அதுக்கு என்ன தீர்வு?
மச்சினி



===============

10 தலைவரே! நீங்க எதுக்காக கட்சி ஆரம்பிச்சீங்க?
2 கட்சிகளும் ஊழல் கட்சின்னு
2 ல 1. ஏன்னா கட்சியை வளர்க்கனுமில்ல?
இப்போ யார் கூட கூட்டணி?



==============
11 500 கோடி தர்றோம், எங்க கூட சேர்ந்துடுங்க
நான் கட்சியை அடகு வைக்க மாட்டேன்
ரொம்ப நன்றிங்க.டீல்
சரி, 750 கோடி? விற்க மாட்டேன் 1000?


===============

12 டியர்! லெக்கின்ஸ் போட்டா ஒரு பொண்ணு அழகா தெரிவாளா?
தெரியும்


===============


13 தலைவரே! உங்களுக்கு உடம்பு சரி இல்லைனு ஒரு புரளியை கிளப்பி விடுங்க
எதுக்கு?
மரியாதை நிமித்தமா கேப்டன் பார்க்க வரும்போது அமுக்கிடலாம்

=================

14 தலைவரே! போயும் போயும் ஒரு நடிகர் பின்னால இப்டி தரம் தாழ்ந்து கெஞ்சுறது கஷ்டமா இருக்கு
எனக்கும் தான், என்ன பண்ன, NO PAIN NO GAIN

===============

15 தலைவரே! பூவேபூச்சூடவா போகுது சன்டிவி ல எதுனா குறியீடா?
பிஜேபி கூட பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா டெல்லி போய் இருக்காங்க,அவங்களுக்கு அழைப்பு


=============


16 தலைவரே! எப்டியாவது ஜெயிச்சிடனும்னு துடிக்கறீங்களே?இது பதவி வெறி தானே?இது எப்டி வந்தது?
வெற்றி என்ற சொல்லிலேயே வெறி இருக்கே?


===================


17 மேடம், பெண்களுக்கு அதிக சீட்  ஒதுக்க  என்ன காரணம்?

ட்விட்டர்ல, FB ல பெண்களுக்குதான் ஃபாலோயர்ஸ் சீக்கிரம் எகிறுது, அந்த ஃபார்முலாதான்


====================


18 சார், உங்க பேங்க்ல  10,000 ரூபா லோன் வேணும்

வீட்டுப்பத்திரம், ரேஷன் கார்டு, ஐடி கார்டு, டெபாசிட் 5000  எல்லாம் தரனும்


==================

19 என்னய்யா பேங்க் நடத்தறீங்க? விஜய் மல்LIEயா, பேர்ல யே பொய் இருக்கு, அந்த ஜெனரல் நாலெட்ஜ் கூட தெரியலை, 7000 கோடி லோன் குடுத்துட்டீங்க, போச்சா?


================


20 நான் ஃப்ரீயா இருக்கும்போதெல்லாம் ஃபேஸ்புக்ல தான் குடி இருப்பேன்

 மேடம், அப்போ உங்க வீட்ல குடி இருக்க மாட்டீங்களா? வாடகை வேஸ்ட்டா?


================

Monday, April 04, 2016

டாக்டர்! டெய்லி அரை கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்கு

1 சார், எங்க பட டீசர் மார்ச் 13 ல வருது, நியூமராலஜி எப்டி இருக்கு?

13/3/2016 =1+3+3+2+0+1+6=16 =1+6 = 7 வருது,  ஏழுக்குப்பின் வருவது ஏழரை


============

2 ஏய் மிஸ்டர்! நான் எது சொன்னாலும் நீ நம்பிடுவியா?

 அப்டி இல்லையே?எல்லாரும் என் அழகைப்பாராட்னதா  நீங்க சொன்னதை நம்பலையே?


============

தலைவரே! குளம் சம்பந்தப்பட்ட தொகுதி தான் நமக்கு ராசியா?எப்டி?


சிம்ப்பிள் லாஜிக்.மகாமகம் குளம்.எதிரிக்கு கண்டம்.அப்போ குளம் நமக்கு ராசிதானே?



==========

4 இன்னைல இருந்து பொண்ணுக கிட்ட பேசவே கூடாது.


ஆமா மாப்பி.10 அடி யாவது கேப் விடனும்.நீங்க 10 இஞ்ச் கேப் கூட விடாம கிட்ட போய் கடலை



============

5 டியர்.போன வருசமும் ஜிமிக்கிதானே பர்த்டே கிப்டா தந்தீங்க?இந்த வருசமும் அதே ஜிமிக்கி தானா?


ஆமா.அதே தான்.அடமானம் வெச்சிருந்தது


===========

6 மேடம்.பாரத ரத்னா விருது கிடைக்கும்னு எப்டி நம்பறீங்க?


ரத்தத்தின் ரத்தம் ல ரத் இருக்கே?



=========


7 டாக்டர்! டெய்லி அரை கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்கு
அப்போ ஸ்லோமோஷன் பிராப்ளம் போல. பேதி மாத்திரை சாப்ட்டா சரி ஆகிடும்


============


8 பழம் நழுவி பால்ல விழப்போகுது, வெற்றி நமக்குதான்
தலைவரே! ஏற்கனவே கெட்டுப்போன ,திரிஞ்சு போன பால்ல பழம் விழுந்தா யாருக்கு என்ன லாபம்?


===============



9 டியர், என்னை பிடிச்சிருக்கா? இல்லையா? தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லு
இருங்க, இன்னும் 3 பேர் ப்ரப்போஸ் பண்ணி இருக்காங்க
நீ என்ன தேமுதிகவா?



===============




10 பழம் கனிஞ்சிடுச்சு
தலைவரே ! கனிஞ்சாத்தான் அது கனி, பழம், இல்லைன்னா காய்.




===============




11 மிஸ்! சைட் அடிச்சா கூட கீழ குனிஞ்சு பாக்குறிங்க ஏன்?
லூசு. மேலே பார்த்தா சூரியகிரஹணம் இல்ல?




================



12 தலைவரே! கூட்டணி முடிவை எப்போ அறிவிப்பீங்க?
சூரியகிரஹணம் முடியட்டும், சொல்றேன்
ராக்கெட் ஏறிப்போய் சூரியன் கூடயா கூட்டணி வைக்கப்போறீங்க?



===============




13 மிஸ்! உங்க ட்வீட்டை நீங்களே லைக் பண்ணிக்கறீங்களே? ஏன்?
நம்ம படைப்பை நாமே லைக்கலைன்னா மத்தவங்க எப்படி லைக்குவாங்க?




================




14 தலைவரே! ஏகப்பட்ட ரத்தினக்கற்கள் வாங்கி குவிச்சிருக்கீங்களே?எதுக்கு?
இந்தியாவிலேயே அதிக ரத்னக்கல் நம்மகிட்டேதான், பாரத ரத்னா நமக்கு தானே?



===============


15 தலைவரே! உங்க குழந்தை 500 ரூபா நோட்டை முழுங்கிட்டானாமே?
ஆமா, அப்பனுக்குப்பிள்ளை தப்பாம பிறந்திருக்கான், பிற்காலத்துல பெரிய ஆளா வருவான்



===============


16 ஜட்ஜ் = 134 பேங்க்ல லோன் வாங்கி இருக்கே, எதுக்கு?
கைதி= முதல் பேங்க்ல வாங்குன கடனை 2 வது பேங்க்ல லோன் வாங்கி அடைப்பனுங்க



===============



17 அரிசியை விட கம்புதான் உடலுக்கு நல்லது, கம்பு கூழ் டெய்லி சாப்ட்டா வலுவாகும் உடல்
டாக்டர்! உங்க “கம்பு”ராமாயணத்தை கொஞ்சம் நிறுத்தறீங்களா?



================



18 எங்க ஊர்ல தண்ணிப்பஞ்சம் இருப்பதால் நான் வாரம் ஒருவாட்டி தான் குளிப்பேன்
மேடம், கவர்ச்சி நடிகை இப்போ கவுச்சி நடிகை ஆகிட்டீங்க



==============


19 நிச்சயதார்த்த விழாவில் செம சரக்கு பார்ட்டியாம்
அப்போ நிச்சய”தீர்த்தம்”னு சொல்லு



==============


20 தலைவருக்குப்பிடிச்ச தமிழப்படம் எது?
பாலும் பழமும் பிடிச்ச பாட்டு ?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பாலிருக்கும்,பழமிருக்கும் பசி இருக்காது



==================

எதிர் வீட்டு ஃபிகர் பேரு மேரி, நான் சொன்னது தப்புன்னா ஐ ஆம் வெரி சாரி

மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..# மு"CASH" அம்பானி பேர்லயே துட்டு இருக்கு


============



2 கொளத்தூரில் மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின் # குளம் மூழ்கடிக்காம இருந்தா சரி.வழுக்கி விடாம பார்த்துக்குங்க



==========



3 தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. -கலைஞர் # நம்பிக்"கை"ல தானே வாழ்க்"கை" இருக்கு தலைவரே




==============



4 ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட அதிமுக எம்பிக்கள்.. # எவ்ளோவ் விலையா இருந்தாலும் பரவால்லையாம்




==========



5 இளங்கோவன் தலைவர் ஆனதால் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது: நடிகை குஷ்பு பாராட்டு # இது இளங்கோவனுக்கே அதிர்ச்சி தகவல்




==========



6 கருணாநிதியிடம் விஜயகாந்த் ஏமாந்து விடக்கூடாது: வைகோ #,ஏற்கனவே ஏமாந்தவர் எச்சரிக்கை



=========



7 இந்த தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கம் இருக்காது: இளங்கோவன் # க"பாலிடிக்ஸ் இல்லாம தமிழக அரசியலா?




==========



8 தேமுதிக கூட்டணி


பழம் கனிந்துவிட்டது
பாலில்
முடிவாகவில்லை-மு.க
எப்போது விழுமென
# எப்படியாவது ஜெயிச்சுடலாம்னு மனப்பால் குடிக்காதீங்க தலைவரே!


==========

9 கருணாநிதியிடம் விஜயகாந்த் ஏமாந்து விடக்கூடாது: வைகோ
$ மக்கள் ஏமாற மாட்டாங்க.கவலைப்படாதீங்க

==========

10 விஜய்மல்லையா நாட்டை விட்டு வெளியேறத் தடை கோரி வங்கிகள் வழக்கு # லோன் குடுக்கும்போது அள்ளி அள்ளி குடுத்துட்டு லோ லோ-னு அலையறாங்க

============

11 திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது-மு.க # பால் இருக்கும் பழம் இருக்கும்கூட்டம் போட்டா கூட்டம் வரும்.ஓட்டு வராது

===========

12 கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டியிட தயார்: தமிழிசை சவுந்தரராஜன் # எனக்குப்பொண்ணே கிடைக்கலை, ஆனா கல்யாணமண்டபம் போகத்தயார்னானாம்


============

13 மதுவினால் அதிக பெண்களை விதவையாக்கியது அதிமுக -கனிமொழி # ஊக்க”மது” கை விடேல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல



==============




14 மின் வாரியத்தில் ரூ.11,000 கோடி முறைகேடு... # நிஜமாவே இது தான் ”ஷாக்”கிங்க் நியூஸ்,மின் வாரியத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?




================




15 ஷரபோவா ‘ஷாக்’: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் -செய்தி # ஜெயிலுக்குப்போ, தண்டனை அனுபவிச்ட்டு வா, ஷர ”போ””வா”




============




16 பெண்களை இழிவாக பேசிய குற்றச்சாட்டு : மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா # எதிர் வீட்டு ஃபிகர் பேரு மேரி, நான் சொன்னது தப்புன்னா ஐ ஆம் வெரி சாரி



============




17 அதிமுக ம.ந. கூட்டணி இடையேதான் போட்டி: தேர்தலில் திமுக 3-வது இடம் - இரா.முத்தரசன் கணிப்பு # தவறான கணிப்பு,ஊழலில் நெ 1 தேர்தல் முடிவில் நெ 2



=============



18 வங்கிகளில் வாராக்கடன்களில் 73% பேர் ஒரு கோடி ரூ க்கு மேல் வாங்கியவர்களே ! # ஏழை மனசாட்சிக்கு பயந்து கட்டிடுவான், பணக்காரன் ஏமாத்துவான்



=============

19 சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் கூட்டணி - ராதிகா # கடந்த 5 வருசமா அவருக்கு பாதிப்பே வர்லையா?வாட் எ மெடிக்கல்மிராக்கிள்


============

20 நல்லாட்சியிலேதான் நல்லவர்களுக்கு தீமை வராது; - கலைஞர் # முயல் விழிப்புணர்வுடன் இருந்தால் ஆமை முதல் இடம் வராது


==========

Sunday, April 03, 2016

பக்கத்து வீட்டுல இருக்கும் பக்கா பிகரை கரெக்ட் பண்ண முடியாதவன்

அதிர்ஷ்டம் உள்ளவன் தோட்டத்தில் ரோஜா மலர்ந்தால் துரதிர்ஷ்டம் கொண்டவன் வீட்டின் முற்றத்தில் ஆர் கே செல்வமணி இருப்பார்


============




2 உடன் பிறப்பே! அனைவருக்கும் விடுமுறை தின ராத்திரி வாழ்த்து



========




3 பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் சில நிர்ப்பந்தங்களுக்காக மனசாட்சியை அடகு வைக்க வேண்டியதாகிடுது. GANGAA JAL(HINDI)



===========



4 கேப்டனுக்குத்திராணி இருந்தால் கூட்டணிக்கட்சியுடனான பேரத்தை சாரி பேச்சு வார்த்தையை லைவ் ஒளிபரப்பு செய்ய அனுமதிப்பாரா?




==========



5 சிவ(கார்த்திகேயன் பட)பூஜைல டி ராஜேந்தர் நுழைஞ்சா மாதிரி நாம பொண்ணுங்க கிட்டே கடலை/மொக்கை போடும்போது யாராவது இடைஞ்சல் பண்ண வந்துடறாங்க




============



6 பொண்ணுங்க நம்மை தூ-னு துப்புனா வருத்தப்படக்கூடாது, ஹிந்தில தூ (THOO)ன்னா நீ -னு அர்த்தம். நீ என்னை காதலிக்கறியா?னு கூட அர்த்தமா இருக்கும்




=============




7 சிவராத்திரிக்கு சிவன் கோவில்களில் கூட்டம் அதிகம் இருப்பதால் பெருமாள் கோவிலுக்கு புத்திசாலித்தனமாக காதலியுடன் சென்றவர்களுக்கு வாழ்த்து



============



8 வருசத்துல 364 நாட்களும் பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டு இன்னைக்கு மட்டும் அப்டியே நல்லவர் மாதிரியே பெண்கள் தின வாழ்த்து சொல்பவர்க்கு வாழ்த்து




==========



9 மாதாந்திர வலி , பிரசவ வலி , துரோக வலி,அலட்சிய வலி நிராகரிக்கப்பட்ட வலி என பல வலிகளை என்றும் சுமக்கும் மகளிர்க்கு வணக்கங்களுடன் வாழ்த்து




===========



10 அறிமுகம் அதிகம் இல்லா ஃபிகரை அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு தான் இந்த மகளிர் தினம், வாழ்த்து சொல்ற சாக்கில் இண்ட்ரோ ஆகிக்கலாம்




============




11 தானைத்தலைவர் புரட்சித்தலைவிக்கு ஏன் மகளிர் தின வாழ்த்து இன்னும் சொல்லலை?னு ஒருத்தரும் இன்னும் கிளம்பலையா?



============




12 வெற்றிப்படிகளில் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பவன் உயரத்தை அடந்ததும் தடுமாறுவான், தோல்விப்படியில் மீண்டும் மீண்டும் சறுக்குபவன் பலம் ஆவான்




===============




13 ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் சகாக்கள் முன் தன் எளிமையான பெற்றோர்களை அறிமுகப்படுத்த கூச்சப்படுவதைப்போல் உன் அழகுக்கு முன் என் பணிவு



============



14 யாரிடமாவது கை நீட்டி உதவி பெற்று விட்டால் கடனை அடைக்கும் வரை கூனிக்குறுகி இருப்பவனே நேர்மையாளன்




=============




15 இன்று ஒரு வெட்டித்தகவல் - மிருதுளா வீட்டுக்கு பக் வீட்டுக்காரன் வாட்சப்ல மகளிர் தின வாழ்த்து சொல்லி இருக்கான், அவனைக்கண்டுபிடிச்சா போதும்



================



16 ரெகுலரா இங்கனயே டேரா அடிச்ட்டு இன்னைக்கு மட்டும் எஸ் ஆனவங்க லிஸ்ட் எடுத்திருக்கேன், டி எம் ல பிசி யா இருப்பாங்கன்னு யூகிக்கிறேன்




============




17 பொதுவா பொண்ணுங்க யாரையாவது லூசு, பக்கி, இப்டி திட்னா அவனைப்பிடிச்சிருக்குனு அர்த்தமாம் # லேடிசாலஜி




===========



18 அன்பே! நான் திமுக போல் கெஞ்சிக்கொண்டே இருக்க நீ தேமுதிக ் போல் ரொம்பவே முரண்டு பிடிக்கிறாயே?அது ஏன்?


============

19 ட்விட்டர் வந்தா என்ன யூஸ்?னு கேட்கறாங்க.இங்கன வந்து தான் அயிஷா ,எயினி ,லிவிதா ரா ரா நீ,க்கெல்லாம்.ஸ்பெல்லிங் கத்துக்கிட்டேன்


==============

20 பக்கத்து வீட்டுல இருக்கும் பக்கா பிகரை கரெக்ட் பண்ண முடியாதவன் 7 கடல் 7 மலை தாண்டி இருக்கும் பாரீன் பிகருக்கு FB ல நூல் விட்டானாம்

=================


வசூல் மன்னன் ரஜினி? அஜித்?, விஜய்? - தீர்ப்பு

1 சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவாக வேண்டும்: பிரதமர் மோடி # மாற்றத்தை அவரவர் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாமே?


==============


2 தனித்துப் போட்டியி டுவதாகக் கூறி தேர்தல் நிதி வசூலிக்கும் தேமுதிக! # வசூல் மன்னன் ரஜினியோ, அஜித்தோ, விஜய்யோ இல்லை, நம்ம கேப்டன்தான்


==============

3 சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது # டைட்டில் கல்நாயக் கவிதைகள்?


===============

4 அனைத்து கிராமங்களுக்கும் 2018ம் ஆண்டுக்குள் மின்வசதி எரிசக்தி பியூஷ் கோயல் #  நீங்கஆஃபீஸ்போய்ட்டா “ஃபியூஸ் போயிடுச்சு”ம்பாங்களா? உங்க வீட்ல


===============


“என்னை புரிந்து கொண்ட கதாநாயகன், விமல்” நடிகை அஞ்சலி # அப்போ ஜெய் ,மு களஞ்சியம் ?



============



6 10 நாட்களில் பா.ம.க. தேர்தல் அறிக்கை டாக்டர் ராமதாஸ் #11 வது நாள் திமுக தேர்தல் அறிக்கை




============




7 பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் தி.மு.க.கருணாநிதி மகளிர்தினவாழ்த்து

,ராசாத்தி,தயாளுஅம்மாள்,துர்காஸ்டாலின்,காந்தி அழகிரி

==========

8 தே.மு.தி.க.வில்இருந்து 300பேர் பா.ம.க.வில் சேர்ந்தனர்:விலகி வந்தவர்களுக்கு பதவி வழங்குவதாக ராமதாஸ் அறிவிப்பு
# நல்ல தலைவர்யா டாக்டர் அய்யா

===========

9 BJPதனித்து போட்டியிட தயார் நிலையில்- தமிழிசை # ஊரெல்லாம் பொண்ணு தேடியும் கிடைக்காதவன் நான் அய்யப்ப பக்தன் அதான் மேரேஜ் பண்ணலைன்னானாம்


===========

10 தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் முதல் கையெழுத்து: ஸ்டாலின் # கள்ளுக்கடை திறப்பு 2 வது,எலைட் சாராயம் 3 வது

============

11 தி.மு.க.வுடன்கூட்டணி:மயிலாடுதுறை தொகுதியில்போட்டியிடசீட் கேட்கும் டி.ராஜேந்தர்
# வாடா என் மச்சி வரப்போகுது நம்ம ஆட்சி. னு பாடுவாரா?

============

12 அரசு அலுவலகங்களில் இருந்து ஜெ படங்கள் உடனடியாக நீக்கம.# ்லட்சுமிராய்க்கே லட்டா? அமாவாசைக்கே அல்வாவா?ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கரா?


===========

13 அதிமுக அமைச்சர்கள் என்னோடு மேடையில் விவாதிக்க தயாரா? : மு.க.ஸ்டாலின் சவால்# பேசா மடந்தை னு தெரிஞ்சிட்டு பில்டப்.அவங்க எப்போ வாயைத்திறந்தாக

===========

14 விஜயகாந்தை கிங்மேக்கராக பார்க்க விரும்புகிறேன்: நடிகர் கார்த்திக் # நல்ல வேளை.சோடா மேக்கராப்பார்க்க விரும்பலை


=============

15 திமுக - காங் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் தேரை இழுப்போம் - வீரமணி # கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தேரை இழுத்தா கடிச்சிடும்


===============


16 ஸ்மிருதி இரானி எங்களுக்கு உதவவில்லை: விபத்தில் சிக்கியவர்களின் புகார்# மகளிர் தின சிறப்புப் புகாரா?விபத்துக்குக்காரணமே இரானியின் காரா?


=============

17 மனைவியை விற்க விரும்புவதாக முகநூலில் பதிவு செய்தவர் மீது வழக்கு # இனி எந்த முகத்தை வெச்சுக்கிட்டு மனைவி முகத்தில் விழிப்பார்?

===========

18 ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலகதுணைஇயக்குநருக்கு, 3 ஆண்டு சிறை # அப்போ 66 கோடி, 200 கோடி சுருட்டுனவங்களுக்கு?


==============

19 "எம்.பிக்களின் ஃபாரின் விசிட்”- புதிய நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு # இந்த விதி பிரதமருக்கும் பொருந்துமா?அவர் விதிவிலக்கா?

============

20 அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படவில்லை- ராஜேஷ் லக்கானி # இரண்டு வாழை இலைல சாப்ட்டீங்களாமே?அப்போ இரட்டை இலைக்கு ஆதரவுதானே?


==============