Wednesday, March 23, 2016

டாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்? 18+

1  எங்க தலைவர் 2 மணி நேரம் எந்தக்குறிப்பையும் பார்க்காம மேடைல பேசுனாரு, அதனால அவருதான் சிஎம்

அப்போ மதுரை முத்து கூடத்தான் 3 மணி நேரம் பேசுவாரு  விஜய் டிவில

=================

2 முன்னாள் மினிஸ்டரை Ex-Ministerனு கூப்பிடறோம்! புதுசா மந்திரி ஆக ஆசைப்படறவங்களை, எப்படி விளிக்கிறது?

நப்பாசை அமைச்சர்


===============

3  கேப்டன் - என்னைக்கேட்காம சரத் குமாரை ஏன் உள்ளே வரச்சொன்னீங்க?

பிஜேபி = நீங்க வந்துட்டா அவர் ஆட்டோமேடிக்கா கிளம்பிடுவாரு


===============

4   தலைவரே! எல்லா கட்சியும் தனியா போட்டியிட்டா என்ன ஆகும்?

வாக்கு வங்கி சதவீதம் எல்லார்க்கும் தெரிஞ்சிடும், ஒரு பய மதிக்க மாட்டான்


=================

5  உங்க தலைவர் ஒரு திருடரா? இல்லையா?

அவர் மட்டும் திருடலையா?

 அது பதில் இல்லை. கேட்ட கேள்விக்கு பதில். உங்க தலைவர்  திருடுனாரா?யோக்கியமா?


===============

6 எங்க கட்சி தான் தலித் மக்களுக்கு பதவி தரும் ஒரே கட்சி

 ஓஹோ, அப்போ முதல்வர் வேட்பாளரா உங்க வாரிசை அறிவிக்காம ஒரு தலித்தை அறிவிக்கலாமே?


====================

7 குடும்ப அரசியலை மிக கடுமையாக எதிர்ப்பவன் நான், மேலும்....

 தலைவரே, ஒரு நிமிசம், நம்ம கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?

ஹிஹி, என் பையன் தான்


==================


8  தமிழகத்தை 60 வருடங்களாக அவர் கொள்ளையடித்தார், 20 வருடங்களாக இவர் கொள்ளையடித்தார், எனவே வாக்காளர்களே! எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரவும்!


===============

9  இந்த ஆட்சியில் திருட்டை , திருடர்களை ஒழிக்க முடியவில்லை.. எனவே.....

தலைவரே! நம்மை ஒழிச்சிருந்தா நாம எப்படி தேர்தலில் போட்டி போட?


===============


10 தலைவரே! எதுக்கு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்றீங்க?

  கறுப்பா இருக்கறவனுக்கு ஓட்டு கிடைக்காதாம்


================

11 தலைவரே! எதுக்கு சிகப்பழகு க்ரீம் யூஸ் பண்றீங்க?


கறுப்பா இருக்கறவனுக்கு ஓட்டு கிடைக்காதாம்



==============



12 டாக்டர்! 4 கடை வாய்ப்பல்லில் 1 தான் வளருது ஏன்?
நீங்க வீட்டுக்கு 4 வது கடைக்குட்டியா இருக்குமோ?


=================


13 ஒருத்தன் தன்மான சிங்கமா? இல்லையா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?
அவனுக்கு கல்யாணம் ஆகாம இருந்தா தன்மான சிங்கம்


===============


14 வண்டில PRESSனு எழுதிருந்தா போய் ப்ரெஸ் பண்ணிட்டு ஒண்ணுமே ஆகலையேன்னு பீல் பண்ணுவன் நான்


நல்லவேளை,லேடி பிரெஸ் ரிபோர்ட்டர் யாரும் எதிர்ல வர்ல

=================


15 உங்க தொப்பை குறையனும்னா டெய்லி பத்மாசனம் செய்யனும்
டாக்டர்! பத்மா ஆசனம் செஞ்சா பத்மாவோட தொப்பை தானே குறையும்?



===============



16 மிஸ்! மயில் தோகை போல் நீளமான அழகான கூந்தலை கட் பண்ணி ஏன் பாப் கட்டிங்க் பண்ணிக்கிட்டீங்க?
நான் பாப் சிங்கர் ஆகப்போறேன், மேட்சுக்கு மேட்ச்


====================


17 என்னோட படைப்பை ஃபேஸ்புக்ல பாத்து மோட்டிவேட் ஆகிருக்கீங்களா யாராவது ?
எஸ் மேடம், உங்க பொண்ணு ஃபோட்டோ பார்த்து


==================



18 சங்கீதாவுக்கு sangeetha தானே கரெக்ட் ஸ்பெல்லிங்க்? நீங்க தப்பா போட்டிருக்கீங்க?
நான் ஒரு பாடகி ஆச்சே? அதான் "SONG"EETHAAனு போடறேன்




==================



19 எந்த நல்ல செய்தியா இருந்தாலும் என் கிட்டே தான் சொல்றாங்க, என்னை ராசியா நினைக்கறாங்களோ?



ஓஸி ரோஸியா நினைப்பாங்க போல, எதுனா ஓசி கேட்பானுங்க


==============

20 டாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்?

எதுவும் செய்யக்கூடாது.வாசல் திண்ணைல போய் கம்முனு படுத்துக்கனும் தனியா


================

Tuesday, March 22, 2016

MOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )



 ஹீரோ சாருநிவேதிதா  மாதிரி ஒரு ரைட்டர் மட்டும் இல்லை. ஒரு சினிமா டைரக்டர். அவரு ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக தன் சொந்த சம்சாரத்தோட பஹ்ரைன் வர்றார். சினிமா சம்பந்தப்பட்ட 2 ஆட்களும்  கூட இருக்காங்க. கொஞ்ச நாள் கழிஞ்சதும்  சம்சாரத்தை மட்டும்  ஊருக்கு அனுப்பிட்டு   டைரக்டர்  தனியா  ஃப்ரீயா  ஒரு வாரம்  இருக்க  பிரியப்படறார்

 ஏன்னா  சம்சாரம்  எப்போப்பாரு  தம் அடிக்காத , தண்ணி  அடிக்காதன்னு அவரோட ஆரோக்யத்தின் மேல் அக்கறை  கொண்டு  அட்வைஸ்  பண்றது  பிடிக்கலை. அக்கரை வந்தும் எதுக்கு அக்கறை?னு நினைச்சாரோ என்னவோ?


 நைசா  பேசி  சம்சாரத்தை தனியா பேக் பண்ணி அனுப்பிடறார்.


அதுக்கப்பறம் டைரக்டருக்கு   ஒரு பார்  ஓனர் உடைய நட்பும் அறிமுகமும்  கிடைக்குது. பார்  ஓனர்  ஒரு லேடி.

 இதுவரைக்கும்  வேண்டா வெறுப்பா பார்த்திட்டு  இருந்த  தமிழன்  இப்போ தான் நிமிர்ந்து    உட்கார்றான்.  ஏன்னா இனிமே தானே மெயின் கதையே வருது?

அந்த  பார்  ஓனர்  லேடி  சரிதா நாயரை விட பெரிய    கேடி  போல . தன்னைப்பற்றிய  கதையை எல்லாம் எடுத்து  விடுது’’

 ஒன்றுக்கும்  மேற்பட்ட  காதலர்  உள்ள  பெண்ணை நாம எல்லாம் கொஞ்சம் அசூயையாப்பார்ப்போம். ஆனா டைரக்டர்  அந்த  லேடி  சொன்ன  கில்மாக்கதை  எல்லாம் கேட்ட  பின்னும்  அந்த லேடி  மேல  லவ் ஆகிடறார்.


எப்டியாவது  அவ  கூட சேரனும்னு  துடிக்கறார். ஆனா அந்த லேடி  கேப்டன்  மாதிரி  டேக்கா  கொடுத்துட்டே  இருக்கு   என்ன ஆச்சு என்பதே மிச்ச  மீதிக்கதை 


 இந்த  கதையை  இப்போ நான் சொன்னது போலவே  சிங்கிள்  டிராக்கில்  சொல்லி இருந்தா  அது  ஒரு நீட்டான  லவ் ஸ்டோரியா  இருந்திருக்கும்


 டைரக்டர்  கொஞ்சம்  அதி மேதாவி  போல . கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமா   ஊடால  3  கிளைக்காதல்  கதையை இணைச்சிருக்கார் 

 பாரில்  பணி  புரியும்  பெண்களின்  காதல்  கதை  , மெயின் கதைக்கும்  , இந்த சைடு  கதைக்கும்  எந்த சம்பந்தமும்  இல்லை, ஆனாலும்  படத்தை  இழுப்பதற்காக அல்லது கால்ஷீட் வாங்குனதுக்காக  ஏதோ   ஒண்ணுக்காக 


 அந்தக்கிளைக்கதைகள்  கொஞ்சம்  குழப்புது. அது மட்டுமில்லை, மெயின் கதையின்  தாக்கத்தை  அது  குறைக்குது





 படத்தோட  ஹீரோவா  ( டைரக்டரா)  Joy Mathew    நல்லா  பண்ணி 
இருக்கார். நம்ம  ஊர் பிரதாப்  போத்தன்  மாதிரி  முகச்சாயல். இவர்  ஒரு  பெரிய  டைரக்டர்  என்பதற்கான எந்த வித காட்சியும்  காட்டப்படாதது   திரைக்கதையின் ஆகச்சிறந்த மைனஸ். க்ளைமாக்சில்  இவர்  நடிப்பு  குட்


ஹீரோயினா  மைதிலி , அனு அகர்வால்  போல்  சிரிப்பு , காஜல் அகர்வால் போல்  இளமை, நிஷா  அகர்வால்  போல்  இடை ( என்ன ஒரே அகர்வால்  ஃபேமிலி வர்ணனையா வருது?) 


 இவரது மயக்கும்  சிரிப்பும் , ப்ரா  லேங்குவேஜும் தான்  படத்தின்  ஸ்பெஷல். ( ( பாடி லேங்குவேஜின் லேட்டஸ்ட் வெர்சன்  தான் ப்ரா லேங்க்வேஜ்)


 இந்தப்படத்தில்  வில்லன்களே  இல்லை. சி செண்ட்டர்  ரசிகர்களுக்கு   பெருத்த  ஏமாற்றம். ரேப்  சீன் வைக்க வாய்ப்பு இல்லை



 இசை , ஒளிப்பதிவு  இரண்டும் அருமை அதுவும்  ஓப்பனிங்கில்  பர்ஹைனின் அழகை கேமரா வழங்கிய  விதம் அட்டகாசம்



லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  படத்தில்  சரக்கு அடிக்கும்  காட்சி, தம் அடிக்கும் காட்சி  இதெல்லாம் நீக்கிட்டுப்பார்த்தா 1  மணி  நேரம்  தான்  ஓடும், படம் மொத்தம்  ரெண்டரை மணி  நேரம்  ஓடுது. ஏய்யா  எப்போப்பாரு  யாராவது  குடிச்ட்டே  இருப்பதைக்காட்டிட்டே  இருப்ப்பீங்களா?  ஓசில  சரக்குக்கிடைச்சா  புரொடியூசர்  தலைல இப்டியா மிளகாய்  அரைப்பீங்க?


2  ஹீரோயின்  பார்  ஓனர்  லேடி இளமைஆன ஆள். பல காதலன்களைப்பார்த்த  பதி விரதை. அவர்  ஏன் ஓவரா  டைரக்டர்  கிட்டே  பிகு  பண்ணுது?இத்தனைக்கும்   யூ ஆர்  மெஜஸ்டிகப்டினு  டயலாக் எல்லாம்  விடுது (  சீன் போச்சே  என்ற ஆதங்கம் எல்லாம் இல்ல, நிஜமாவே  கேரக்டர்  புரியலை)


3  பாரில்  பணி  புரியும்  ஒரு பெண்  ஒரு ஆளை  ஏமாற்றி  ஷாப்பிங்க்  மாலில் 1  லட்சம்  ரூபாய்க்கு  டிரஸ் எடுத்து  பின் அதே க்டையில்  அதே டிரசை 60,000  ரூபாய்க்கு விற்பது  போல்  ஒரு சீன். இந்த  சீனில்  ஜவுளிக்கடை  ஓனர்  அந்த  40%  எனக்கு  என சொல்லும்  சீனில் லாஜிக் இடிக்குது. இது என்ன  திருட்டு சரக்கா?அந்த லேடி  ஒண்ணா  அந்த டிரசை  தானே  வெச்சிருக்கலாம். இல்ல அந்த  லூசு ஜொள்  பார்ட்டி  கிட்டே பணமாவே  வாங்கி  இருக்கலாம்.  வீட்ல   அம்மா க்கு உடம்பு  சரி இல்ல இப்டி  பொய் சொல்லி


4   அந்த  லூஸ்  ஜொள்  பார்ட்டி  தன் மகனுக்கு  சீரியஸ்  என்ற  ஃபோன் வந்தும் அந்த  லேடி  பின்னால் சுத்து வது  ஓவர். எந்த ஆணும்  மனைவிக்கு துரோகம்  செய்வான் , ஆனால்  குழந்தைக்கு துரோகம்  செய்ய மாட்டான்


5  படத்தில்   பாரில்  வேலை செய்யும்  பணிப்பெண்களின்  3 கிளைக்கதைகள் , அது போக  பார்  ஓனர்  லேடியின் 4 கில்மாக்கதைகள்  என  இடைசெருகல் ( சிங்கிள்  மீனிங்க்)  காட்சிகள்  குழப்புது


6  ஹீரோயின்   மப்பில்  பெட்ல  படுத்து  இருக்கும்போது  அந்த  நோஞ்சான்  ஓனர் கில்மாக்கு கிட்டே போறான். அது படியுமா? படியாதா? இதெல்லாம்  தெரியாமயே  தன் டிரசை  எல்லாம் கழட்டிட்டு அண்டர்வேரோட  எப்டி தில்லாப்போறான்? அது ஓங்கி  ஒரு உதை  விட்டதும்  வரும் காமெடி  காட்சிக்காகவா? சகிக்கலை



நச்  டயலாக்ஸ்

1  டைரக்டர் சார்.என்னையே பார்த்துட்டு இருக்கீங்களே? ஏன்?



பார்த்துட்டு இருப்பதும் ஒரு சுகம் தான் VALAIYAM





2 கடலுக்கு முன் அமர்ந்திருக்கையில் அது மந்திர சக்தி மிக்க தேவதையாய் தோணும்.தன் அலைகளை அனுப்பி நம்மை அழைக்கும் VALAIYAM

3 ஒரு சினிமாக்காரனுக்கு முக்கியப்பணியே வித வித மாய் கனவு காண்பதே #,MOHA VALAI


4 தூக்கம் தொலைத்த என்னைப்போன்ற பெண்களுக்கு கனவு காண நேரம் இராது VALAIYAM

5 மரியாதை வெச்சிருக்கற ஆண்கள் லிஸ்ட் பெண்ணிடம் ஏராளம் உண்டு.ஆனால் எல்லோரையும் நேசித்து விடமுடியாது அவளால் VALAIYAM

6 வாழ்நாளில் நஷ்டப்படாதவர் என யாருமே இல்லை.ஒவ்வொருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றை இழக்கிறார்கள் VALAIYAM




சி.பி, கமெண்ட் -  ஏ செண்ட்டர்  ஆடியன்சுக்கான    சீன் இல்லாத   கில்மா லவ் ஸ்டோரி, ரேட்டிங்  -  2.5 / 5


 திருவனந்த புரம் நிலா வில் படம்  பார்த்தேன்



கேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........

1 பாகிஸ்தான்ட்ட கிரிக்கெட்டில்  போராடி ஜெயிப்பதும், காதலியிடம் விவாதத்தில் வேணும்னே தோற்பதும் அலாதி மகிழ்ச்சி

============

2 இன்னைக்கு சானியா மிர்சா வீட்டில் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடனும், வெளியே துக்கமா ஆறுதல் சொல்வது போலும்  லேடி கலைஞர் ஆகிடுவாரில்ல?


==============


3 படிப்பறிவு அற்றவர்கள் ஒரு கட்சிக்கு அடிமையாக இருப்பதை மன்னிக்கலாம்,ஆனால் எல்லாம் கற்றுணர்ந்தவர்கள் ஒரு ஊழல் கட்சிக்கு பல்லக்கு தூக்குவதை?


==============

4  திமுக/அதிமுக  கட்சிக்கு பல்லக்கு தூக்குபவர்கள் விவாதங்களில் தங்கள் கட்சித்தலைவர் அப்பழுக்கு அற்றவர், நேர்மையானவர் என சொல்வதே இல்லை


===============

5 டேய், டி வி பார்க்காத , கெட்டுப்போய்டுவே


 போம்மா,நெட்ல கெடாமயா இருக்கான் தமிழன்?



==============

6 நடுநிலையாளர்கள் எப்போதும் தங்களை யாருக்கும் நிரூபிக்க அவசியம் இல்லை. கட்சி சார்பு ஆட்கள் தான் கொண்டையை மறைக்க,
 படாத பாடுபடனும்


================


7 கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் பதவிக்காக தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்குப்பிச்சை கேட்க வீடு தேடி வரும் எல்லா சுயநலவாதிகளும்  ஒழிக!


==============


8  ஒரு திருடன் தன் மகன் திருடன் ஆவதை விரும்பாமல் படிக்க வைக்கிறான். ஆனால் அரசியல்வாதி தன்மகனை  தன்னைப்போலவே கொள்ளைஅடிக்கும் தலைவன் ஆக்குகிறான்


================


9 என் புது ஹேண்டில் நேம் இளந்தளிர் .எப்படி இருக்கு?

அழகுக்கொழுந்துங்க நீங்க!


================

10 நெட் தமிழன் மிருதுளாவை செல்லமா மாதுளா-ங்கறான், அப்போ ஷியாமளாவை சீதாப்பழம்னு சொல்வானோ?


====================

11 நான் சைக்கிள் ஓட்டக்கத்துக்கும்போது ரோட்ல வர்றவன், போறவன் எல்லாம்அட்வைஸ்பண்றான்


மிஸ்,லொக்கேசனை மட்டும் சொல்லுங்க, உங்க 744 ஃபாலோயர்சும் ஆஜர்  ஆகிடுவானுங்க


================


12 என் ஆளைப்பார்க்கப்போறேன்னு ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸ்  போட்டிருக்கு, சன் டே நைட் 9 மணிக்கு என்ன சொல்லிட்டு வீட்ட விட்டுப்போகும்?


==================

13 உங்கள் கோபத்தை யாராவது தூண்ட முயற்சிக்கும்போது வழக்கத்தை விட அதீத அமைதி காட்டுவதே எதிரிக்கு சிறந்த தோல்வியைத்தரும்


================

14 ஒரு திருடனைக்குறை சொல்லும்போது ஒருவருக்குகோபம் வந்தால் அவர் திருடனாய் இருப்பார். ஒரு ஜாதிக்கட்சியை குறைசொல்லும்போது கோபித்தால் ஜாதி வெறியர்  ஆக இருப்பார்

===============

15  ஒரு ஊழல்வாதியை விட, ஒரு ஆணவம் மிக்கவரை விட  ஆபத்தானவர் ஒரு  ஜாதி வெறியர். ஜாதிக்கட்சிகளை அறவே தவிர்ப்போம்


==================

16 ஜாதி வெறியருக்கு பெரிய பதவி வந்தால் அந்த குறிப்பிட்ட ஜாதி மட்டுமே முன்னேறும்.இது சமூக நலனுக்கு ஆபத்து


=================

17 ஒரு சாதாரண ஜாதிக்கட்சி நபரால் தரக்குறைவாக பேசமுடிகிறது எனில் பணபலம், அதிகாரபலம் வந்து விட்டால் ஒரு ஜாதிக்கட்சித்தலைவர் எந்த அளவு ஆபத்து?


================

18 ஜாதிக்கட்சி வீட்டுக்கு நாட்டுக்கு கேடு தரும்
ஜாதிக்கட்சியை அறவே தவிர்ப்போம்
சமூக நலம் காப்போம்


================

19 வராத கடனை வசூலிக்க தொடர்ச்சியான ,சலிப்பில்லாத பாலோ அப் இருந்தால் போதும்.வன் முறை ,தகாத சொல் பிரயோகம் தேவை இல்லை


===============

20 கேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா ஆஸ்கார் அவார்டு வழங்கறதே ஆஸ்கார் ரவிச்சந்திரன் தான்னு சொல்லிடுவாங்க


===============



அன்பு மணி ஓட்டிய செம படம்

1  இப்போது வரும் சினிமா கதைகளில் ஜீவன்  இல்லை பாரதிராஜா பேச்சு # எல்லாப்படத்துலயும்  நான் அவன் இல்லை ஜீவனையே ஹீரோவா போட முடியுமா?
==============

2 கணவர், மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார் # ஹை கிளாஸ் , மிடில் கிளாஸ் னு ஆல் கிளாஸ் பிரச்சனை இந்த டவுரி


================

3 ரூ.251–க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித் தர முடிவு  # அப்போ இதை ஆதரித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த தண்டனை தர வேண்டாமா?


================

4 தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது -ஜெ  # தேர்தல் கிட்டே வருதில்ல?இப்போ கரண்ட் கட் ஆனா ஓட்டு கட் ஆகிடும்


================

5 தமிழ் நாட்டில் 94 லட்சம் பேருக்கு வேலை இல்லை - அன்புமணி # அப்போ நைசா அவங்களை உங்க கட்சிக்கு இழுத்துக்குங்க



================

6 ‘ஆடுகளத்தை கணிக்க தவறி விட்டோம்’–அப்ரிடி # வெற்றி மாறன் + தனுஷ் கூட விருது கிடைக்குனு கணிக்கலையாம், நீங்க எப்டி? ஜி


==============

7 எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது - மு.க. அழகிரி # சொந்த வீட்டில் இருக்கும் மகன் ஆதரவே பெற முடியல,தலைவரால்

===============

8 கருத்தரங்கில் பங்கேற்க சென்ற சுப்பிரமணிய சாமி கார் மீது காங்கிரசார் முட்டை வீச்சு  # வாக்கு சதவீதமும் முட்டை,போராட்ட ஆயுதமும் முட்டை


==============

9 7½ கோடி தமிழக மக்களின் நன்மைக்காக அன்புமணியை முதல்–அமைச்சராக்க வேண்டும் -ராம்தாஸ் # ஏழரை கோடி பேருக்கும் ஏழரை ஸ்டார்ட் ஆகிடும்



=================

10 இந்தியாவிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் மகாராஷ்டிரா; தமிழ்நாட்டுக்கு  2 வது இடம் # இதுல வேணா தமிழன் சீக்கிரம் நெ 1 ஆகிடுWON


================

11 வனத்துறை நிலத்தை அபகரித்த வழக்கு: இமாச்சலப் பிரதேச ஆளும் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ.வுக்கு ஓராண்டு சிறை # பொறம்போக்கு நிலம்னு “கை” வெச்சுட்டாரா?


===============

12 தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை: ஜெ # ஆழ்வார்ப்பேட்டை தமிழ் நாட்ல தானே இருக்கு?னு ஆளவந்தான் ரசிகர்கள் கேட்கறாங்க மேடம்


================

13 பாஜ க உடன் சம க கூட்டணி - சரத்குமார் # அடடே! லாஸ்ட் பெஞ்ச் கூட்டணி போல 


================

14 அதிமுக கூட்டணியில் இருந்ததால் சமக வை வளர்க்க முடியவில்லை -சரத்குமார்  # இது நாலே முக்கால் வருசமா ஜெ கால்ல விழுந்திருந்தப்போ தெரியலையா?


=============

15 சேராதவர்கள் ஒன்றாக சேரும் காலம் தேர்தல் களம் - சரத் குமார் # ஏற்கனவே சேர்ந்தவர்கள் பிரியும் காலமும் இதுவே


==============


16  இந்தத்தேர்தலில் நாங்கள் 6% வாக்கு பெறுவோம்- சரத் குமார்  # 0.6 % அப்டினு சொன்னாலே அதுல பாதிதான் கிடைக்கும்


================

17 அடிப்படை கொள்கை ஒத்துப்போவதால் காங்கிரசுடன் கூட்டணி: கனிமொழி # கொள்ளை அடிப்பதுதானே நம்ம 2 பேர் கட்சியின் முக்கியக்கொள்கை?


===============


18 பா.ஜனதா இறுதிக்கட்ட பேச்சு: விஜயகாந்துடன் பிரகாஷ் ஜவடேகர்  சந்திப்பு # கேப்டன் = சரி, வீட்ல ஒரு வார்த்தை கலந்துட்டு பதில் சொல்லி அனுப்பறேன்


================

19 பாமக-க்கு மற்றகட்சிகள் வந்தால் மகிழ்ச்சி,வராவிட்டால்மிக்க மகிழ்ச்சி-அன்புமணி. # பாமகவுக்கு மக்கள் ஓட்டு போட்டால் மகிழ்ச்சி,  போடலைன்னா மிக மகிழ்ச்சின்னு சொல்ல தயாரா?


=================

20 2 மணி 30 நிமிடங்கள், கையில் எந்த குறிப்பும் இல்லாமல் அன்புமணி போல் இதுவரை எந்த ஒரு தலைவரும் பேசியது கிடையாது  # ஒரு படமே ஓட்டிட்டாரு போல


==================

Monday, March 21, 2016

ஓட்டல் திரிஷா!

வாழ்க்கையில் துணை தேவைப்படும்போது திருமணம் செய்துகொள்வேன்’’ நடிகை சார்மி # சாதா துணையா? தொழில் அதிபர் துணையா?



========



2 என்னை கற்பழிக்க முயன்ற டொனால்டு டிரம்பிற்கு வாக்களிப்பேன் பெண் தொழில் அதிபர் அதிரடி # விடா முயற்சி விசுவரூப வெற்றினு ரேப்பிடப்போறார்



=========



3 வைகோ நான் கேட்ட உதவியைச் செய்யவில்லை! அம்மா என்னை நன்கு வைத்திருக்கிறார் - நாஞ்சில் சம்பத் # அவரே நடந்து போறவர்.அவர் கிட்டே கார் கேட்டா?




===========



4 ஓட்டல் திறக்கிறார் திரிஷா! #,


த்ரீ ஸ்டார் ஹோட்டலா?,
நைட் மட்டும் திறந்திருக்குமா
?,டாட்டு குத்தினவங்களுக்கு முன்னுரிமையா?
பேரு ஆர்யா பவன்?




=========

5 இன்னும் 4 ஆண்டுகளில் BSNL லாபகரமாக இயங்கும்; மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் # அப்போ அதுவரை நாட் ரிச்சபிள்?



============

6 ரெயிலில் வழங்கப்படும் போர்வைகள் 2 மாதங்களுக்கு ஒருமுறை சலவை செய்யப்படுகின்றன # பேகன் இருந்தா மயிலுக்குத்தராம ரயிலுக்கு தந்திருப்பார்


==============




7 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: மு.க ஸ்டாலின் #,அணையப்போகும் தீபம் பிரகாசமாத்தான் இருக்கும்




============



8 அடுத்தவர்கள் பொருளை தொட்டது கூட கிடையாது - கருணாநிதி # நாம தொட்டது பூரா ஊரான் வீட்டு சொத்து தான்




-------------



9 விஜயகாந்த் கிங் ஆவதைவிட, ஜெயலலிதா குயினாகவே தொடரலாம்!- தமிழருவி மணியன் # அரசியல் சதுரங்கத்திலும் ராணிக்கே பவர் அதிகம்.




==============



10 சேர்ந்தே இருப்பது ஜெ ஆட்சியும் , ஊழலும் - வை கோ # சோர்ந்தே இருப்பது மதிமுக கட்சியும்,வை கோவும்?




==============



11 விஜயகாந்த் ஒரு நேர்மையான அரசியல்வாதி - எஸ் வி சேகர் # ஆமாம், ஆமாம், அவர் போட்டுக்குளிக்கும் சோப்பே ஹமாம், ஹமாம்னா நேர்மைதான் கண்ணா




==============



12 நம் ஆட்சியில் சுமையில்லா கல்வி மாணவர்கள் முதுகில் பேக் பதில் ஐபேடு எடுத்து செல்வார்கள் - .அன்புமணி # கட் அடிச்ட்டு சினிமா போக ஈசி



==============



13 அதிமுக வாக்குகளையே மக்கள் நலக் கூட்டணி சிதறடிக்கும்: திமுக வாக்குகளை பிரிக்காது - திருமாவளவன் கணிப்பு # தவறு, திமுக, அதிமுக 2க்கும் பாதிப்பு



============


14 மஹாத்மா காந்தி இருந்திருந்தால் அன்புமணியை வெற்றி பெற வாழ்த்தி இருப்பார் - ராமதாஸ் # மஹாப்பொய், ஜாதிக்கட்சியை சாதா மனிதனே ஆதரிக்கமாட்டான்

==========

15 நாங்கள் படிக்கச் சொல்கிறோம்; ஜெ குடிக்கச் சொல்கிறார்- குரு குற்றச்சாட்டு # “குடி” மக்களுக்கு ஆதரவு தரும் கட்சின்னு சிம்பாளிக்கா சொல்றாரு


============

16 சுயஉதவி குழு பெண்களுக்கு அம்மா கைபேசி வழங்கும் திட்டம்: ஜெ # தங்கர் பச்சான் -ன் அம்மாவின் கைபேசி போல் தோல்வி அடையாமல் வெற்றி பெறுமா?


===========

17 திமுக கூட்டணி வலிமை பெறுவதை தடுக்க பாஜகவுக்கு அதிமுக நெருக்கடி- ஈவிகேஎஸ் # தேமுதிக இல்லாத உங்க கூட்டணி எல்லாம் அதிமுகவுக்கு கொசுக்கடிதான்


===========

18 சீமானுக்கு கூட முதல்வர் ஆசை வந்துவிட்டது-நத்தம் விசுவநாதன் # 90 வயசு தாண்டுனவங்களுக்கே பதவி வெறி இருக்கும்போது 45 வயசுக்கு இருக்கக்கூடாதா?


==========

19 கேரளா தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம்: குடியரசுத் தலைவர் பிரணாப் பெருமிதம் # மரம் வளர்ப்பு, உணவுமுறை, சீரகத்தண்ணீர் இவற்றில் முன்னோடி

============

20 காங்கிரஸுடன் கூட்டணி ஏன்? கனிமொழி விளக்கம் # இதுல விளக்கம் என்ன வேண்டிக்கிடக்கு? 2 பேருக்கும் வேற கதி இல்லை.

================

Darvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)

வை கோ கலைஞர் கூடவே இருந்திருந்தா  இப்போ அல்லது எதிர்காலத்துல நல்ல எதிர் காலம் இருந்திருக்கும் ( எதிர் காலத்தில் ஒரு எதிர் காலம் அடடே!)ஆனா அவசரப்பட்டு ஒரு ஆசைல வந்துட்டார். அந்த மாதிரி  ஹீரோ  ஒரு சின்ன சண்டைல அம்மா கிட்டே கோவிச்சுக்கிட்டு மாசமா இருக்கும் சம்சாரத்தைக்கூட்டிக்கிட்டு  வேற  ஊர் போறார்

 ஹீரோக்கு வேலை இல்லை, கைல காசில்லை. நண்பர்கள் உதவியுடன்  ஒரு வாடகை வீட்டில்  தங்கறார்.

வெள்ள நிவாரண உதவியை மத்திய அரசு கொடுக்கறதை 50% தனக்கு ஒதுக்கிட்டு மிச்ச மீதியை பாதிக்கப்பட்டோர்க்கு  அரசு கொடுத்தது போல்  ஹீரோவே நண்பர்கள் உதவியுடன்  வாழும்போது 
ஒரு வீணாப்போன ரவுடி ஹீரோ சம்சாரத்தின் கழுத்தில்  இருக்கும்  செயினை பறிச்சுட்டுப்போய்டறார்

ஹீரோ செம கடுப்பாகி அந்த ரவுடியை பற்றி  போலீசில் புகார் தர்றார்

 பொதுவா ரவுடிங்கன்னாலே அரசியல் செல்வாக்கு இருக்கும். ஏன்னா முன்னாள் ரவுடி தானே  இந்நாள் அரசியல் வாதி?

 புகார் கொடுத்த்அ  ஹீரோ  வீட்டில் இருந்த  எல்லா பொருள்களும், கூடவே அவர் பைக்கும் திடீர்னு காணாம போய்டுது

 கடுப்பான  ஹீரோ  இதுக்குக்காரணமானவங்களைப்பழி வாங்கப்புறப்படறார். காமெடி ட்ரீட் கதை 




ஹீரோவா  4  மெகா ஹிட்ஸ் வரிசையா கொடுத்த  பிருத்விராஜ். அவரோட அந்த 4 படங்களின்  தரத்தையும் , திரைக்கதையையும் ஒப்பிடும்போது  இது  ஒரு சறுக்கல் படமே , ஆனால்  பொதுவாப்பார்த்தா இது சராசரிப்படமே ( அதுக்காக தியேட்டருக்கு  வரும் ஆடியன்சிடம் எல்லாம்  இதை பொதுவாப்பாருன்னு சொல்ல முடியுமா?)


ஹீரோ ஆக்சன் காட்சிகளில்  ஸ்டண்ட்  சீன்களில்  நல்லா பண்ணி  இருக்கார் .  சோக காட்சிகள்  குறைவு . தப்பிச்ட்டார் 


 வில்லனா வரும்   சேமபன் வினோத்   கலக்கலான நடிப்பு . ஃபிகருக்கு  ரூட் விடுவதும் அதுக்கு  அவரின் ரீ ஆக்சன்களும் அருமை

 பின் பாதியில்  ஹீரோ அவரை பாடாய் படுத்தும்போது காட்டும்  முக எக்ஸ்பிரசன்கள் அழகு 

 காமெடியனா  சவுபின்  மகேஷ் பாபு ரசிகரா வந்து  விஜயை கலாய்க்கும் காட்சிகள் அடடே

 ஹீரோயினா சாந்தினி  அழகு  ஃபிகர் . மாசு மருவே இல்லாத வழு வழு  முகப்பரப்பு ( அப்பா மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரியாம் )


பாடல்கள்   3 தேறுது. ஒளிப்பதிவு  எடிட்டிங்க்   கன கச்சிதம் 



முன்  பாதி  சராசரி  மசாலா  பின் பாதி நம்ப முடியாத ரவுடிச காமெடி

முதலுக்கு  மோசமில்லாத  சராசரி மசாலா காமெடி ஆக்சன் ஃபிலிம்  என்ற அளவில்  ஓக்கே ரகம்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  சுகப்பிரசவம் ஆகனும்னா கர்ப்பிணிப்பெண்கள் வழக்கம் போல் எல்லா வேலையும் செய்யனும்.ஓய்வெடுக்கறேன்னு முடங்கிக்கக்கூடாது பரிணாமம்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தொடர்ந்து 4 மெகா ஹிட்ஸ் கொடுத்த பிருத்விராஜ் ன் 5 வது வித்தியாச படைப்பு டார்வின்ட்ட பரிணாமம் @ திருவனந்தபுரம் விசக்த் 11 30 am show








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


  டைட்டிலும்  ,  போஸ்டர்  டிசைனும்  இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் ஃபிலிம் என தெள்ளத்தெளீவாக சொல்லுது. வெரிகுட் டிசைன்ஸ், ஆனா நிஜத்தில் சாதாப்படம்


2  ஹீரோவுக்கு  ஓப்பனிங்க்  பில்டப் சீன்களோ, பஞ்ச் டயலாக்சோ இல்லாதது ஆறுதல்

3  வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது  அழகு



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  கர்ப்பமான மனைவியை ரோட்டில் அம்போன்னு விட்டுட்டு  ஹீரோ செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ண பெட்டிக்கடைக்குப்போகும்போதுதான் அந்த  செயின் பறிப்பு சம்பவம் நடக்குது. மெடிக்கல் ஷாப்ல காண்டம் வாங்கவே அவனவன்  ஜோடியாப்போறான், இதுக்கு ஏன் மனைவியை விட்டுட்டுப்போகனும்?


2   செயின்  பறிச்ட்டு  ரவுடிகள் தப்பிப்ப்பதை பலரும் வேடிக்கைதான் பார்க்கறாங்க. பட்டப்பகலில் பஜாரில் நடக்கும்போது  யாருமே அவர்களைப்பிடிக்க  முயற்சிக்க மாட்டார்களா?


3  ஓப்பனிங்க்  சீனில் அம்மா -மகன்  பேச்சு வார்த்தை தடித்து  தனிக்குடித்தனம்  போவதில் ஆழம்  இலை. இதை எல்லாம் 4  வெவ்வேறு சம்பவங்களை க்காட்டி நம்ப வைக்கனும். 


4   பின் பாதியில்   சிலைத்திருட்டை வைத்து  வில்லனை  ஹீரோ மிரட்டி பணிய வைக்கும் காட்சிகள்  எல்லாம் காமெடிக்காக இருந்தாலும்  லாஜிக்கே இல்லாதவை




சி  பி  கமெண்ட் -Darvinte Parinamam -  ( மலையாளம்)- பிருத்விராஜ்-ன்   சராசரி காமெடி ஆக்சன் மசாலா தான்.பின் பாதியில் லாஜிக் சொதப்பல்கள் ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - சுமார்



 ரேட்டிங் -2.5 / 5


    Darvinte Parinamam is an Indian Malayalam-language action film directed by Jijo Antony. It stars Prithviraj Sukumaran, Chandini Sreedharan, Chemban Vinod Jose, and Balu Varghese in the lead roles. Wikipedia 
    Initial releaseMarch 18, 2016