Monday, March 14, 2016

ஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வீட்டர்களும்

நெட் தமிழன் திடீர்னு டி ஆர் ரேஞ்சுக்கு பாச மழை பொழியறாக.அவக அக்கா தங்கச்சிப்பாசம் கண் கலங்க வைக்குது



===========



2 பாமக தனித்துப்போட்டியிடுவதில் கூட ஒரு அர்த்தம் உண்டு.4%,வாக்கு வங்கி உண்டு

10 தொகுதியில் டெபாசிட் வாங்கிடும்.சமக.வுக்கு 0.5% கூட இல்லையே


===========

3 ஒரு கற்பனாசக்தி மிக்க இயக்குநர் ரீமேக் படம் இயக்க மாட்டார்.
ஒரு கற்பனை வளம் மிக்க ட்வீட்டர் மீள் ட்வீட் போட மாட்டார்

==========

4 பக்தி மயக்கத்தில் அலகு குத்திக்கொள்வது ஏற்க முடியாத  சோகம் எனில் பதவிக்காக, பணத்துக்காக அலகு குத்துவது மகா கேவலம், பிச்சை எடுக்கலாம் இதுக்கு


===============

விஜய் கேப்டன் கட்சில சேர்ந்தா நல்லதா?


 நோ, விஜய் அப்பா SAC  டைரக்சன்ல கேப்டன் நடிச்சப்போ ஏகப்பட்ட திட்டு வாங்குனாராம், பழி வாங்கிட்டா?


==================


யார் யார் எல்லாம் அன் பாலோ பண்றாங்க?
யார் யார் எல்லாம் பிளாக் பண்றாங்க?இதை எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தா ட்வீட்சே போடமுடியாது


===========


7 ஆராதனா கூட ஆறாது சினம் சினிமாக்குப்போய்ட்டு வந்தா ஆராதனாவோட அப்பாவுக்கு கோபம் வருமில்ல?



=============




8  2  நெட் தமிழன்கள் ஒரு பொண்ணோட  2  கையை பிடிச்சு ஒரே டைமில் இழுத்துட்டு இருக்காங்க


 தப்பில்லையே? வலது கை, இடது கைன்னு 2 இருக்கில்ல?

=============


மக்களே! மார்க்கெட்டிங்க்காக வரும் விளம்பரங்களை நம்பாதீர்! அஸ்கா சர்க்கரை சேர்க்கப்பட்ட எல்லா இனிப்புகளும் உடல்நலனுக்கு , பற்களுக்கு கேடு



============

10 சந்துல சிந்து பாட முடியலைன்னா என்ன செய்யனும்?
சிந்துகிட்டேசொல்லி சவுண்ட் கிளவுடுல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி பாடச்சொல்லனும், பின் சந்துல லிங்க்

==============

11  காலை வணக்கம் கறதை சுருக்கி  ஒரு பொண்ணு கிட்டே கா வன்னேன். கா ( டூ)  இல்லை , பழம் தான் -குது, லாலலல்லலலாலலலா



==============


12 அஸ்காசர்க்கரை சேர்த்திருப்பதால்  திருப்பதிலட்டு  கெடுதல், நாட்டுச்சர்க்கரை  சேர்த்திருப்பதால் பழனி பஞ்சாமிர்தம் உடலுக்கு நல்லது # தமிழேண்டா


===============

13 தமிழ் நாட்டுல ஒரு குக்கிராமத்துல இருந்துக்கிட்டே  நான் லண்டன் ல இருக்கேன்னு ஸ்டேட்டஸ் போடறது தான் மாடர்ன் ஃபிகர்களுக்கு பிடிச்ச விளையாட்டு


==================


14 தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்களை ஆதரிப்போரும் தமிழ் இன துரோகிகளே!

==============

15  உடன் பிறப்பே! பரம்பரை பரம்பரையாக  ஊழல் புரியும் திறனும், வாய்ப்பும் , வாரிசுகளும் எமக்கே இருப்பதால் ஆதரிப்பீர் உதய சூரியன்


================


16  பதவிக்காகவும் ,பணத்துக்காகவும் ,வாக்குப்பிச்சை எடுக்கும் எல்லா அரசியல்வாதிகளும் கேவலமானவர்களே!,

============


17 திருவனந்தபுரத்தில் 20 கிமீ க்கு சாலையின் இருபுறமும் மக்கள் பொங்கல் வெச்சு கொண்டாடுறாங்க.ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா.10 லட்சம் பேர்


=============

18 எம்ஜிஆரிடம் தொண்டர்களுக்கு/கட்சிக்காரர்களுக்கு இருந்தது உண்மையான பாசம்.ஜெ விடம் காட்டும் பணிவு ,விசுவாசம் எல்லாம் 100%,நடிப்பு


============

19 இவங்களுக்கு: யாராவது ஐ லவ் யூ சொல்ல ஆசைப்பட்டா மென்னு முழுங்காம + 14 சொன்னா போதும்.புரிஞ்சுப்பாங்க(129+14=143)


==============


20 ட்விட்டர் கிசு கிசு.கண்ணியமான ட்வீட்டர் ஒருவர் 50 பொண்ணுங்களை வெச்சு வாட்சப் க்ரூப் நடத்திட்டு வர்றாராம்.கிகிகி


==============

உடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை சம்பவம்

ள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் மிகக் கொடூரமாக,  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது ஒரு கும்பல். இதில் இளைஞர் சங்கர் இறந்து விட... படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் கவுசல்யா.

கல்லூரியில் துவங்கிய காதல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளமோ படித்து முடித்த சங்கர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வியில் சேர்ந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த பழனியைச் சேர்ந்த கவுசல்யாவுக்கும், சங்கருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கவுசல்யாவின் வீட்டுக்கு இது தெரியவந்தது.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகக் கடுமையாக எதிர்த்தனர் கவுசல்யாவின் பெற்றோர். அத்தோடு அவரது உறவினர் வழியில் ஒருவருக்கு கவுசல்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்க, அதிர்ந்து போன சங்கர் - கவுசல்யா ஜோடி,  வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டது. அப்போது சங்கர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கவுசல்யா 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர், தனது மகளை சங்கர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர். அப்போது 'என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பிதான் இவரோடு வந்தேன்' என கவுசல்யா சொல்ல... அவர் மேஜர் என்பதால் சங்கருடனே அனுப்பி வைக்கப்பட்டார். 'கவுசல்யா இல்லாவிட்டால் நான் உயிர் வாழவே மாட்டேன்' என சங்கர் சொல்ல, சங்கரின் தந்தை இருவரையும் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றார். சில நாட்களில் நிலைமை சீராகும். நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த சங்கர் - கவுசல்யா ஜோடிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'காதல்' பட பாணியில் ஒரு மிரட்டல்

திருமணமான சில தினங்களில் அதாவது ஜூலை 24-ம் தேதி,  சங்கரின் வீட்டுக்கு வந்தார் கவுசல்யாவின் தாத்தா. மிக அன்பாக பேசினார். ஸ்கூட்டி பைக் ஒன்றை கொண்டு வந்து கவுசல்யாவுக்கு கொடுத்தார். 'எல்லாம் சரியாகிடும். பாத்துக்கலாம். நீ ஒண்ணும் பயப்படாதே' என ஆறுதல் கூறினார். சிறிது நேரத்தில் என்னை இந்த ஹாஸ்பிட்டல் வரைக்கும் விட்டுட்டு வந்துடுறியாமா என தாத்தா கவுசல்யாவிடம் கேட்க, மகிழ்ச்சியுடன் பைக்கில் சென்றார் கவுசல்யா. ஹாஸ்பிட்டல் முன்பு தயாராக இருந்த காரில் அப்படியே கடத்தி செல்லப்பட்டார். காதல் படத்தில் நாயகனையும், நாயகியையும் சந்திக்கும் நாயகியின் சித்தப்பா, அவர்களுக்கு ஆதரவாக பேசி கடத்தி செல்லும் சம்பவத்தை போன்றே அரங்கேறியது இந்த சம்பவம்.

கவுசல்யாவை காணவில்லை என சங்கர் மடத்துக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஒரு வாரத்துக்கு பிறகு போலீசில் ஆஜர்படுத்தப்பட்டார் கவுசல்யா. இந்த ஒரு வாரகாலம் கெஞ்சியும், மிரட்டியும் துளியும் அவர் அசரவில்லை. காவல்நிலையத்தில் சங்கரை பார்த்த உடன்,  வேகமாய் வந்து கட்டியணைத்துக்கொண்டார் கவுசல்யா. ஆனால், அத்தோடு கவுசல்யாவின் குடும்பத்தினர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் கவுசல்யாவை மிரட்டிக்கொண்டே வந்தனர். அவ்வப்போது சங்கரும் இதில் சிக்காமல் இல்லை. அவரும் மிக இழிவான பேச்சுகளை கவுசல்யாவின் பெற்றோர்களிடம் இருந்து பெற நேர்ந்தது.

தொடர்ந்து வந்த மிரட்டல்கள்

'நீ வா. அவன் உன்னையா லவ் பண்றான். அவனுக்கு படிச்சா வேலை கூட கிடைக்காது. நீ கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும்' என பெற்றோர் எதிர்காலத்தை காட்டி அச்சுறுத்திய அத்தனை வார்த்தைகளையும் எளிதில் சமாளித்தார் கவுசல்யா. நாட்கள் சென்று கொண்டே இருந்தது. அவ்வப்போது மிரட்டலையும், இழிச்சொற்களையும் கேட்டுக்கொண்டே இருந்தார். சங்கர் கல்லூரி படிப்பை முடிப்பார். நல்ல வேலை கிடைக்கும். அப்போது வாழ்க்கையை இனிதாக துவங்கலாம் என காத்திருந்தார் கவுசல்யா.

எதிர்பார்த்த நேரம் வந்தது. கடந்த வாரத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் சங்கர். அத்தோடு வளாக நேர்காணலில் வென்று வேலையும் பெற்றார். சென்னை சென்று வந்து வேலையை உறுதி செய்தார். ஏப்ரல் மாதத்தில் கவுசல்யாவின் பிறந்த நாள். இந்த மகிழ்வோடு, கவுசல்யாவுக்கு புத்தாடை வாங்கிக்கொடுக்க நினைத்தார் சங்கர். எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருந்த நேரம், கவுசல்யாவுக்கு வந்த ஒரு போன் கால் எல்லாவற்றையும் மாற்றியது.

எமனாக வந்த போன் கால்

போனில் பேசியது கவுசல்யாவின் குடும்பத்தார். எப்போதும் போல் எங்களோடு வந்து விடு என்ற அழைப்பு தான் அங்கு பிரதானமாய் இருந்தது. 'அவனுக்கு வேலை கிடைக்காது. அவனை நம்பி போய் என்ன பண்ணப்போறேன்?'னு கேட்டது கவுசல்யாவுக்கு நினைவுக்கு வந்தது. பெருமிதமாக சொன்னார். 'அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. சீக்கிரம் சென்னை போகப்போறோம். இப்போ என் பர்த்டேவுக்கு டிரெஸ் வாங்கித்தர்றேன்னு சொன்னார். இப்போ டிரஸ் எடுக்கதான் கிளம்பிட்டு இருக்கோம்'னு சொல்லியிருக்கார்.

அங்குதான் வந்தது பிரச்னை. இவர்கள் எப்படி நன்றாக இருக்கலாம் என நினைத்தார்களோ அல்லது சென்னை சென்று விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. உடுமலை பஸ் நிலையம் அருகே துணிக்கடையில் இருந்து வெளியே வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள்,  அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். ஓடஓட இவர்களை கொடூரமாக வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில்தான் சங்கர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் அல்ல... சாதி வெறியாட்டமே காரணம்

ஒரு காதல்தான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமா என்றால் நிச்சயம் இல்லை. சாதி வெறியாட்டம் தான் காரணம்.  சங்கர் என்ற தலித் இளைஞன், கவுசல்யா எனும் மேல்சாதி என சொல்லப்படும் மற்றொரு சாதி இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. ஊர் பெரியவர்கள் மூலம், காவல்துறை மூலம் என எப்படியாவது கவுசல்யாவை பிரித்துவிட திட்டமிட்டனர். ஆனால், நாங்கள் இணைந்து வாழ விரும்புகிறோம் என உறுதிபட கூறி மறுத்து விட்டனர் காதல் ஜோடி. ஆனால், அத்தோடு இதை விட யாருக்கும் மனமில்லை. மீண்டும் மீண்டும் மிரட்டல், கடத்தல் என பல வகையில் காதல் ஜோடியை பிரிக்க முயற்சி நடக்கிறது. தான் உறுதியாக நின்று அத்தனையையும் தவிர்க்கிறார் கவுசல்யா. 'அவன் உன்னை வைச்சு காப்பாத்த மாட்டான். நீ நல்லாவே இருக்க மாட்டே' என பல சாபங்களை கடந்துதான், சங்கருக்கு வேலை கிடைத்து, சென்னை செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இவர்கள் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். சாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சாதியமைப்பை தகர்ப்பதில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுதான் இவர்களுக்கான பிரச்னை. இதுதான் சாதி வெறியை அதிகரிக்கச் செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கின்றன.

நாடக காதல் என்றால் பெண்ணை கொல்வது ஏன்?

காதலித்து கரம் கோர்த்த இவர்கள்,  கண்ணியமாக வாழ வேண்டியதை தடுப்பது ஏன் என்று கேட்டால் இது நாடக காதல் என்கிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி, திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவதாகவும் சொல்கிறர்கள். அப்படியென்றால் வேலை கிடைத்து வாழ்வை இனிமையாக துவங்க வேண்டிய இவர்களை கொன்றது ஏன்? அப்படியே இளைஞர்தான் ஏமாற்றினார் என்றால், அந்த பெண்ணையும் வெட்டி வீழ்த்த உங்களை தள்ளியது எது?

திருமணமான 8 மாதங்களில் தன் காதல் கணவரை இழந்து விட்டு நிற்கிறார் கவுசல்யா. இப்போது கூட, ''இத்தனைக்கும் காரணம் என் பெற்றோரும், மாமாக்களும்தான். நான் நன்றாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை" என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

"இந்த கல்யாணத்துல எங்க அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. முதல்ல என்னை கடத்திட்டதாக சங்கர் மேல புகார் கொடுத்தாங்க. ஆனா, நான் மேஜருங்கறதாலயும், நான் அவரோடதான் போவேன்னு சொன்னதாலேயும் என்னை பிரிக்க முடியலை. தொடர்ந்து என் கணவரை பத்தி தப்பா சொல்லியும், சாதி பெருமை பேசியும் என்னை கூப்பிட்டாங்க. நான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கலை. கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டேன். கெஞ்சியும், மிரட்டியும் பாத்து நான் ஒத்துக்காததால எங்களை கொல்ல முடிவு பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு நான் முக்கியமில்லை. சாதியும், வறட்டு கவுரமும்தான்.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களை துரத்துனாங்க. அப்போ தப்பிச்சிட்டோம். கல்யாணம் ஆகி 8 மாசமாகிட்டதால இனி எந்த பிரச்னையும் இருக்காது. நல்லா வாழலாம்னு நினைச்சோம். இப்படி பண்ணிட்டாங்க. இதுக்கு என் அப்பா, அம்மா, மாமாக்கள்தான் காரணமா இருப்பாங்க" என தனது உடல் பிரச்னைகளை மறந்து ஆவேசமாக முறையிடுகிறார் கவுசல்யா.

இந்த சமூகம் சாதி வெறிப்பிடித்த சமூகமாக மாறிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் கடமை அரசுக்கும், வாக்கு கேக்க தயாராகும் அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது.

இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காதிருக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்.


-ச.ஜெ.ரவி

நன்றி - விகடன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு


விஜயகாந்த்துடன் முதல்சுற்று பேச்சு முடிந்து விட்டது- தமிழிசை# மாதவனின் இறுதிச்சுற்று போல் இந்த
இறுதிச்சுற்று வெற்றி பெற வாழ்த்து



============



2 லைவ் ஒளிபரப்பில் மீடியாக்களை வறுத்தெடுத்த விஜயகாந்த்.. சங்கடத்தில் டிவி சேனல்கள் # ஆகாத மாமியார்.வீட்டுக்கு ஆக்கங்கெட்டு ஏன் போகனும்?




===========



3 விஜயகாந்த்துடன் முதல் சுற்றுப் பேச்சு முடிந்து விட்டது.. - தமிழிசை


# எதுக்கு ஜா"கிங்"போய்க்கிட்டே பேசலாம்கறீங்க?
கிங்கா இருக்கனும்


=========

4 விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு #  நரசிம்மா  மேல சிம்ம ராசிக்கு  ஏன் இம்புட்டு கோபம்? செல்வாக்கு கூடுதுன்னா?


==============


எங்களுடன் விஜயகாந்த் சேர்ந்தால் இன்னும் வலுப்பெறுவோம்: வைகோ  #  நீங்க வலு  பெறுவீங்க, சரி  கேப்டன் பெட்டி பெறுவாரா?தர முடியுமா?உங்களால்?


===============

6  மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்தை 'கிங்' ஆக்க பரிசீலிப்போம்- திருமாவளவன்   # ஓஹோ, பரிசீலிக்கும் அளவு பெரிய ஆள்ஆகிட்டீங்களா? 


=============

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் பாஜகவுக்கு தயக்கம் இல்லை- முரளிதர ராவ்  # சார், 5% ம் 12 % ம் சேர்ந்தா  17% தானே  ஆச்சு? எப்டி CM?



===============


என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் #   தேர்தல் வருது. இமேஜ் மெயிண்ட்டெயின்   பண்ணனும்


=============

வண்டலூரில் மார்ச் 27-ல் பாமக மாநில மாநாடு: தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு  # வடலூர் ல வெச்சிருந்தா மேட்சா இருக்கும், பாமக கோட்டை


============


10 புதிய கூட்டணி ஒரு வாரத்தில் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் தகவல் # திமுக, மக்கள் நலக்கூட்டணி ரெண்டே சாய்ஸ்தான்


================

11 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: உயர்கல்வித் துறை அமைச்சர் # 34 சீட் கூட விட்டுக்கொடுக்க மாட்டீங்களா?-கலைஞர் 


===============

12  சாக்லெட் சாப்பிட்டால் மூளைத் திறன் வளரும்! ஆய்வில் தகவல் # சுகர் வரும், பல்லுக்கு கெடுதல் இதெல்லாம்  ஆய்வில் தெரியலையா?


================


13  வாடகைதாரர்களிடம் இனி அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வருகிறது வாடகை மாதிரிச் சட்டம் # யோவ், ஹவுஸ் ஓனரு, வாங்குன அட்வான்சை எடுத்து வைய்யா


=================


14  ஸிகா வைரஸூக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு # இந்தியாவில் இந்த நோய் இல்ல, ஆனாலும் மருந்து கண்டுபிடிச்சாச்சு, அதுதான் இந்தியா


=====================


15  பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி # காலையும் நீயே  மாலையும் நீயே!ன்னு அப்பவே  படம் பண்ணிட்டாப்ல கேப்டன்


===============


16  ஜெ வின் பெயரில் "ஜெய ஜெய லலிதே' என்ற ராகத்தை கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா உருவாக்கினார்.#  நெடுஞ்சாண் கிடையா குப்புற விழுந்து பாடனுமா?


=================

17 மாணவர்களுக்கு சூரிய சக்தி மேஜை விளக்குகள் வழங்கும் திட்டம்- ஜெ  # அதெப்டி ? நமக்குதான், உதய சூரியன் ஆகாதே?


===============

18  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம்? நேர்காணலில் விஜயகாந்த் கேள்வி # இண்ட்டர்வ்யூக்கு வந்தவங்க கிட்டேயே என்ன போஸ்ட் வேணும்னு கேட்கறமாதிரி


===============


19  வாய்ப்பு கொடுத்தால் ரூ.5 கோடி செலவு செய்யத் தயார்!வேட்பாளர் நேர்காணலில் திமுகவினர் உறுதி # கடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு


================


20 இந்தியா பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடக்கம் # தீவிரவாதிங்களுக்கு ரொம்ப சவுகர்யமாப்போச்சு


==================

Sunday, March 13, 2016

திமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்? ( ட்விட்டர் & ஃபேஸ்புக்)

1  தலைவரே! நேத்து நைட் ஏழரை மணிக்கு மாநாட்டில்  தாக்கி பேசுனீங்க. இப்போ நமக்கே ஏழரை ஆகிடுச்சு பாருங்க. நம்ம கட்சி MLAக்களை விலைக்கு வாங்கிட்டாக



================




டியர், பிரேக்கப் பண்ணிக்கலாம், இனி நம்ம 2 பேருக்குள்ள எந்த டச்சும் வேணாம்



 சரி, உனக்கு கிஃப்டா கொடுத்த டச் ஃபோனை திருப்பிக்குடு


=============


3 சர்வர்! ரோஸ்ட் சொல்லி 10 நிமிசம் ஆகுது  .ஏன் இன்னும் வர்லை?


251 ரூபா கொடுத்துட்டு 4 மாசம் ஃபோனுக்காக  வெயிட் பண்றீங்க?20  நிமிசம் வெயிட்


===============


4  என் திறமைக்கு யாராலும் தீனி போட முடியலை

 மேடம், ஷூட்டிங்க் ஸ்பாட்ல டெய்லி 2 கிலோ மிக்சர் நொறுக்குத்தீனி சாப்டறீங்களாம், கட்டுபடி ஆகுமா?


==============


5 பேசிக்கலாவே நான் சாந்த சொரூபி.

மிஸ்! தம் அடிக்கனும், ரூபி தீப்பெட்டி கொடுங்க

டேய், என் கிட்டே எதுக்கு கேட்கறே?

இப்போதான் சாந்தசொரூபினீங்க


=================

6  கூட்டணி தர்மத்தை  ஏன் கடைப்பிடிக்கலை?

வீட்டோட மாப்ளையா போறவங்க மரியாதையை எதிர்பார்க்கக்கூடாது, மாமனார் வீட்டில் அதிகாரமும் பண்ணக்கூடாது


==============

7 டாக்டர், நார்த்தங்காய் சாப்பிட்டா  நார்ச்சத்து வருமா?


 விட்டா  இரும்புக்குதிரைகள் நாவல் படிச்சா  இரும்புச்சத்து வருமா?ன்னு கேட்பே போல


==============

டியர்! நேத்து என் கனவுல  மௌனராகம் டைம் ரேவதி வந்தாப்டி

 வாவ், என்ன பொருத்தம் பாருங்க, என் கனவில் புதிய முகம் டைம் சுரேஷ்மேனன் வந்தாரு



=============

டாக்டர், வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டா  பித்தம் தலைக்கேறுமா?

 ஆமா, நர்ஸ் கிட்டே நான் இல்லாதப்போ வந்து கடலை போட்டா என் கோபம் தலைக்கேறும்

================

10  தலைவரே! பிலிம் இன்ஸ்ட்டிடியூட் பிரின்சிபால் உங்களைப்பார்க்க.வந்திருக்கார்


எதுக்கு?
எனக்கு நடிக்கத்தெரியாதுனு ஆதங்கப்பட்டீங்களாமே?

===============

11 மேடம்.காஞ்சிபுரம் மாநாட்டால உங்களுக்கு லாபமா? ந்ட்டமா?


லாபம் தான்.20 கோடி க்கு சரக்கு வித்திருக்கு டாஸ்மாக்ல



===========


12 ஹாய் மிஸ்!,நல்லாருக்கீங்களா? எங்கே இந்தப்பக்கம்?


சாரி.நீங்க யார்னே தெரிலயே?
எனக்கும் தான் தெரில.தெரிஞ்சா மாதிரி கடலை போடலை?



===========

13 சார், உங்க ஜோக்ஸ்  எல்லாம் பிளாக் காமெடி வகையறான்னு சொல்றாங்களே? நிஜமா?

ஆமா, நானும் பிளாக், என் ஜோக்சும் பிளாக்

=================

14  எதுக்காக  என்னை சனியன்னு சொல்றீங்க?

 டிய, சனிக்கிழமை  தானே  நாம முதன் முதலா சந்திச்சோம்? அப்போ  சனியன் தானே?அதுவரை நான் தனியன்

============


15 அடம்பிடித்து ஆர்ப்பரிப்பவர்களை, செல்லமாக  ”ரொம்பச்சி” னு  சொல்வாங்களாம் 

 அப்போ  அடம் பிடிக்காதவங்களை  கம்மியச்சிம்பாங்களா?


===============


16 டிவியில் எந்த TALK ஷோ பார்த்தாலும் "இது ஃபேக். இதல்லாம் போய் பாக்கறியே?ங்கறார்  என் ஆளு

 ஓஹோ, அப்போ DOG  ஷோ பாருங்க, வாலை சுருட்டிக்குவார்

=============


17  திமிர் பிடிச்ச  பொண்ணுங்க  இங்கே யார் யார்?

 தெரிலயே? விஷாலைத்தான் கேட்கனும், “ திமிரு” பிடிச்சவங்க யார் யார்?னு


================


18  தலைவரே! நம்ம கட்சிக்கு இது இறங்கு முகம்தான்


எப்டி?
நெத்தில ஒட்டிட்டு இருந்த ஸ்டிக்கரை தோள்பட்டைல ஒட்ட ஆரம்பிச்ட்டோமே?

=============

19 தலைவரே! அரண்மனை 1 ,அரண்மனை 2,எந்த டிவிடி வேணும்.


எதுக்கு?
எப்போதும் கிங்கா இருக்கனும்னு ஆசைப்பட்டீங்களே ?


============


20 கலைஞர் = ஏம்மா, எந்திரிம்மா, நான் உட்காரனும்

ஜெ = சாரி, இது லேடீஸ் சீட், நான் இருக்கும் வரை நான் தான் உட்கார்வேன்



==================

மிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்

தலைகீழாக நின்றாலும் வை கோ வை கோவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதும் ஒரு வித நேமாலஜி  மூட நம்பிக்கையே! # வைகோ=கோவை


============



கேப்டன் = நான் கிங் கா இருக்க  தொண்டர்கள் ஆசைப்படறாங்க


ஜெ= அதான் ராஜா வுக்கு செக் மேட் வெச்சேன் இல்ல? # எதிர்க்கட்சி அந்தஸ்து இழப்பு

=============

3 தனுஷ் = ஜோசியரே!  என் ஜாதகம் இப்போ எப்டி இருக்கு?


கீர்த்தியால உங்க கீர்த்திக்கு பங்கம் வரப்போகுது


==============

4  இண்ட்டர்வ்யூவில் 

 கண்ணம்மா பேட்டை எங்கே இருக்கு?

 ட்விட்டர் அடிக்ட் 1 = தஞ்சாவூர்ல

ட்விட்டர் அடிக்ட் 2 = கனடா ல


==============

5  டியர்! பக்கம் பக்கமா மெசேஜ் அனுப்புனா ஒரு வார்த்தையில் ரிப்ளை பண்றீங்களே  , அது ஏன்?

அது வார்த்தை இல்லை, வாழ்க்கை

=============


6 சிவகார்த்திகேயன் = கீர்த்தியை தொந்தரவு பண்ணீங்களா?

தனுஷ் = ச்சே ச்சே ஆதரவு தர்றேன்னு சொன்னேன், அவ்ளோவ் தான் # கற்பனை

============


7  ஜட்ஜ் =  ஏம்மா, அவர் டெய்லி  உன்னை டார்ச்சர் பண்ணினாரா?

நடிகை= ஆமாங்க, ஏதோ ஒரு நாள் சாப்பாடு போட்டேன், டெய்லி சாப்பிட வந்துடறாரு


===============

8  அதிமுக கூட்டணி - ச”ரத்து” குமார்

===================


மச்சி, செம கவிதைடா, இதை குமுதத்துக்கா  ரெடி செஞ்சே?

 இல்லை எதிர் வீட்டு குமுதாக்கு


==============


10 தினமும் அதிகாலையில் நீ எழுந்து விடும் பார்முலாவை கடைப்பிடித்தால் கணிதன் ஆவாய்!
4கிமீ நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்யன் ஆவாய்

============

11 அன்பே ! ரோஷினி!
ரோஸ் மில்க்கே வெட்கப்படும் அளவு நேச்சுரல் ரோஸ் நீ!


==========

12 பாக்கட்ல பணமே இல்ல ,ஆனாலும் என் சந்தோஷத்துக்கு குறைச்சல் இல்ல னு நெட் தமிழன் சொன்னா கள்ளக்காதலி 2 பேர் இருக்காங்கனு அர்த்தம்

==================

13 பெண்ணிடம் என்னென்ன சொல்லக்கூடாதோ எல்லாத்தையும் சொல்லிட்டு சமாளிஃபிகேஷனா “ எனக்கு தான் பொய் சொல்ல தெரியாதே பேபி”னு பிட் ஓட்டுவான்நெட் தமிழன்



===========

14 அன்பே! நொறுக்குத்தீனி தின்பதில் நீயே ஒரு மினி கிரைண்டர் தான்.உன் வீட்டில் எதுக்கு தனியா ஒரு கிரைண்டர்?


===========


15 புது மாடல் போன் தினம் 1 வந்தாலும் வசதி இருக்கே என புதுசு வாங்காமல் இருப்பதைக்கொண்டே வாழ்பவர்கள் தான் எளிமையான நிம்மதியானவர்கள்


==========

16 பிகருங்களை நாசூக்கா பார்க்காம அவங்க தப்பா நினைச்சாலும் பரவால்லைன்னு தீர்க்கமா முறைச்சுப்பார்க்கும் நாம் எல்லோரும் தீர்க்க தரிசிகள் தாம்

===============


17 ஒரு படைப்பாளியின் படைப்பு மெருகேறுவது அவன் சோகமான மன நிலையில் இருக்கும்போதே


==========


18 பாமர மக்களுக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் தன் படைப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வான் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளன்


==============

19 துலாபாரம் பற்றிய கதாகாலேட்சபத்தை மிருதுளா செஞ்சா அதுதான் மிரு"துலா பாரம்"



=============

20 அன்பே மோகினி !
உடல் நலனுக்கு ஊறு விளைவிக்காத ராகி நீ!


===============