Saturday, March 12, 2016

இமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை

வீடில்லா ஏழை மக்களுக்கு 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி வீடுகள்: பிரதமர் மோடி உறுதி # அடுத்த தேர்தல் வாக்குக்கு இப்பவே ரிசர்வேசன் ஸ்டார்ட்டிங்



==============



நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தனுஷ்   தினசரி செக்ஸ் தொல்லை :கோடாம்பக்கத்தில் பரபரப்பு # தனுசு ராசிக்கு இந்த வாரம் சனி பிடிக்குது





============




திமுகவுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரக்கூடாது என்பதில் உளவுத்துறை கவனமாக செயல்படுகிறது- கலைஞர் # அப்போ காங்க், முஸ்லீம் லீக் எப்டி வந்தாக?



============




4  என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்தியது அதிமுக- சரத்குமார் # பின்னே டெய்லி கறி சோறு போட்டு வளர்த்துவாங்கன்னு நினைச்சீங்களா?




==============




கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கவில்லை .- சரத்குமார் # நாலே முக்கால் வருசமா  கடை பிடிச்ட்டு இருந்தாங்களா? இப்போதான் கடைபிடிக்கலையா?




=============



6  ஜெயலலிதாவை பீதியடையவைத்தது நமக்கு நாமே பயணம்-ஸ்டாலின் # நீங்க வீதிவீதியா சுத்துனது உங்க விதி. அவரு ஏன்  அடையனும் பீதி?




===============



எனக்கு நடிக்க தெரியாது என்னை முதல்வர் ஆக்குங்கள் - கேப்டன்

# நடிக்கத்தெரியாதவங்க கோடம்பாக்கத்தில் கொள்ளைப்பேரு இருக்காக

==========

8 ஜெ வை எதிர்த்து பேச விஜயகாந்தை தவிர ஆண்மகன் தமிழகத்தில் உணடா-பிரேமலதா.# அதுல கேப்டன் LKG,கலைஞர்,ஸ்டாலின் எல்லாம் PHD

============

9 அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது; சரத்குமார் # கண்டுக்கலை.மனுசனாக்கூட மதிக்கலைன்னு ஓப்பனா சொல்ல முடியுமா?


=========

10 மிடி அணிந்து நடிகைகள் கவர்ச்சிக்கு மாறக்கூடாது’ காஜல் அகர்வால் # குணச்சித்திர நடிகை சொன்னாலே கேட்கமாட்டாங்க .கிளாமர் நடிகை சொல்லியா கேட்பாக?


==============

11 திமுக ஆட்சியில் மகிழ்ச்சி என்ற வண்ணத்து பூச்சி அனைத்து இல்லங்களிலும் தவழும்:ஸ்டாலின் # பட்டர்ஃபிளை குக்கர் தேர்தல் பரிசா தரப்போறார் போல


===============


12 ம.தி.மு.க.,வை இழுக்க அ.தி.மு.க., முயற்சி, 10  சீட்  தர முடிவு -செய்தி  மக்கள்  நலக்கூட்டணி அம்போவா?சம்போ சிவசம்போவா?



==============


13 பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு :கிராமங்கள் வளர்ச்சி பெறும்: ஜெயலலிதா # அப்போ சசிகலா ஆதிக்கம் மீண்டும் தலை தூக்குமோ?


===============

14  ஜெயலலிதா மாஸ் லீடர்; கருணாநிதி காசு லீடர்.- ராமராஜன் # நீங்க தமாஷ் நாவல் ரீடர்?


===============


15  'சிங்கம்  பார்ட் 1, 2, 3' என்று வரலாம். ஆனால், அரசியலில் ஒரே சிங்கம் ஜெ மட்டுமே-ராமராஜன் #  சிம்ம ராசிக்காரங்கன்னா சிங்கம் ஆகிடலாமா?



=============

16  பீப் பாடல் விவகாரம்: கோவை காட்டூர் காவல்நிலையத்தில் நடிகர் சிம்பு ஆஜர் # அப்போ கூட COTட்டூர் தானா?


==============

17 அழகிரி கூறியது போல் ஸ்டாலின் ஒரு காமெடி பீஸ் தான்...: ராமராஜன் கிண்டல் # நாமளே அதிமுக வில் ஒரு டம்மி பீஸ் தானே?


============

18 ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்கப் போகிறோம்: பாஜக # இமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை


==============


19 சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க ஜெயலலிதா மனு: #2016 ஜூன் வரை டைம் வேணுமோ?ஏன்னா மே ல தேர்தல் வருது

==============


20 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி -சரத்குமார்
# ஒவ்வொரு தொகுதிலயும்் நீங்களே நிற்கப்போறீங்களா?

=================

குமார சாமிக்கு ஆப்பு ரெடி

1  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க பரிசீலனை #  ஏற்கனவே வீட்டுக்குஉள்ளே பெண்கள் உள்ளாட்சி 100% நடக்குது, இனி இது வேறயா?


==============



நேஷனல் ஹெரால்டு-சோனியா குடும்பத்தினர் ஆதாயம் பெறவில்லை-காங்கிரஸ் # ஆதாயம் பெற்றதுக்கு ஆதாரம் இருக்குன்னு ஆல்ரெடி தாயம் போட்டுட்டாங்களே?




============




நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க புதிய மசோதா: மத்திய அரசு ஆலோசனை # வெரிகுட், குமாரசாமில  இருந்து பிள்ளையார் சுழி போடுங்க




===============




4  ஹரித்வாரில் அர்த்த கும்பமேளா: 15 லட்சம் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு # 15 லட்சம் பேரோட பாவமும், அழுக்கும் கழுவுன நீர் எப்டி புனித நீராகும்?




================




செல்போனில் கணவர் பேசாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை நாகர்கோவிலில் # இதே டெக்னிக்கை ஆளாளுக்கு பாலோ பண்ணப்போறாங்க



===========



6 சொத்து குவிப்பு வழக்கு: கைதான என்ஜினீயர், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றது அம்பலம் சி.பி.ஐ. விசாரணையில் தகவல் #,மனசுக்குள்ள ஆ.ராசா ன்னு நினப்பு



============




7 திமுக-காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்ய கருணாநிதியுடன்13-ந் தேதி குலாம்நபிஆசாத் சந்திப்பு

# பழைய பங்காளிங்க தானே? சேர்ந்துடுவாங்க


=============

8 ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்: பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. அறிவுறுத்தல் # மெடிக்கல் ஷாப் ஆளுங்க " கவனிச்ட்டாங்களா?" நிஜமாவேவா?

==============


9 இந்தியாவில் மத அரசியல் மிக மோசம் - அமெரிக்காவில் கமல் பேச்சு.# தாய் நாட்டின் பெருமையை வெளிநாட்டில் பரப்புங்கள்.குறைகளை அல்ல.

============

10 மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கும் புதியபடம்-செய்தி # அண்ணன் எப்பவும் ஒரு ஜோடியோட திருப்திப்படறதே இல்ல, 2 அல்லது 3 தான்



==============


11  தேர்தலில் போட்டியிட தை அமாவாசை நாளில் 2,000 திமுகவினர் விருப்ப மனு # பகுத்தறிப்பகலவரான தானைத்தலைவர் அதை வளர்பிறை நாளில் பரிசீலிப்பார்

================



12 மணமக்கள் நெற்றியில் ஜெ ஸ்டிக்கர் ஒட்டி ஏழைத் தம்பதியரை அவமானப்படுத்துவதா?- ஸ்டாலின் கண்டனம் # முதுகுல குத்தலையேன்னு சந்தோஷப்படுவோம்



==============


13 ரஜினிகாந்த் கடவுள் போன்றவர் - நயன் தாரா #  ஆமா, அவருக்கு “ஆண்டவர்” , ”ஆண்டுகொண்டிருப்பவர்”னா ஒரு பயபக்தி உண்டு


==============



14  வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவரை உதைத்த மனைவி சென்னை சென்டிரலில் பரபரப்பு# உள்ளூருலயே மாட்டிக்கிட்டானா? ஜாக்கிரதையா அவுட்டோர் போய்இருக்கலாம்

================


15  இந்தியாவிலேயே முதன் முறையாக மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்’ திட்டம் தொடக்கம- ஜெ # டூவீலர் , இரட்டை இலை , குறியியீடு


=================


16 பலர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாலும் ஒருவரை தான் தொகுதியில் நிறுத்த முடியும்-கலைஞர் # பல கட்சிகள் போட்டியிட்டாலும் ஒருவருக்கே வெற்றி


===============


17  எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவு தேர்வை எதிர்ப்போம்-கலைஞர் # எண்ட்ரன்ஸ் எக்சாம்க்கு எண்ட் கார்டு வேணும்கறாரு "END"RANCE EXAM


===============


18  'தமிழகத்தில் பா.ஜனதா ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது': தமிழிசை சவுந்தரராஜன் # உதய சூரியனை , இரட்டை இலையை நம்பியே தாமரை மலர முடியும்


=================


19  கடலூர் -வெடிகுண்டு வதந்தி பல பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை # இதான் சாக்குன்னு லீவ் வேணும்கறவங்க எல்லாம் இதே ஃபார்முலா ஃபாலோ பண்ணிடப்போறாங்க


==================


20 நிலக்கரிச் சுரங்க முறைகேடு: எச்.சி.குப்தா உள்பட 6 பேருக்கு சம்மன் # நம்பினவங்க முகத்தில் கரி பூசிட்டாங்களா?


==================

Friday, March 11, 2016

சொர்ணாக்கா, ரித்திகா,கார்த்திகா, கிருத்திகா,லத்திகா,மவுனிகா யுவர் அட்டென்சன் ப்ளீஸ்

விடியலுக்கு முன் நீ எழுந்து விட்டால் உன் வாழ்வில் விடியலுக்காக நீ காத்திருக்கத்தேவை இல்லை



==================



காதலிக்கும்போது டியர் (DEAR)

பிரிந்தபின் பெண்ணுக்கு TEAR
 ஆணுக்கு பியர் # துயர்


==============

 டியர், டிபி மாத்துடா, இது  உனக்கு செட் ஆகல-நெட் தமிழன் சொன்னா அந்தப்பொண்ணு  அவனுக்கு செட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் இல்லை

==============


4  ஏம்மா, எந்திரி, பிரதோஷம், கோவிலுக்குப்போகனும்

போம்மா தூங்குனதே லேட்,உன்னால  என் சந்தோஷமே போச்சு

ஏன் லேட்?வெட்டியா நெட்லதனே இருந்தே?


=============
5  சொர்ணாக்கா, ரித்திகா,கார்த்திகா  இவங்களோட  லவ்வர் எல்லாம் செல்லப்பேர் கொஞ்சும்போது ஜாக்கிரதையா  இருக்கனும், அக்கான்னு கூப்டறக்கூடாது



=================



யாருக்கும் தராம நீயே சாப்பிடனும் என்பதே ஒவ்வொரு அம்மாவின் டிபன் பாக்ஸ் கட்டளையாக இருக்கும்




===============



7 பாம்பை கட்டிப்பிடிப்பதுதான் உண்மையான அரவணைப்பு, ஏன்னா அரவம் = பாம்பு






========



8  மாநாட்டில்  கலைஞரை திட்டாததால் தேமுதிக  விரைவில் திமுக உடன் கூட்டணி  என அறிவிக்கும் என கணிக்கிறேன், அதில் பேரம் படியாத பட்சத்தில் பிஜேபி



=============



9  அன்பே! எந்த சப்ஜெக்டில் கவிதை சொன்னாலும் உன் செருப்பைக்காட்டுகிறாயே! செருப்பு பற்றி கவிதை சொன்னால் எதை  காட்டுவாய்?




=============




10  நெட் தமிழன்  பொண்ணு கிட்டே DM ல சொல்ல வேண்டியதை TLலில் சொல்லிட்டு TLலிலேயே சொல்லிடவா?ன்னு கேட்கறான், ஏம்ப்பா அதான் சொல்லியாச்சே?




============



11 விஜய் ரசிகர்கள் எல்லாரும் கீர்த்தி சுரேஷ்க்கு அண்ணன் முறை ஆகுதாம், அப்போ அஜித் ரசிகர்கள் எல்லாம் முறை மாமன் முறை தானே? போட்டுத்தாக்கேய்,




==============



12  பொறாமை கோழைகளின் சொத்து  என சொல்லி விட முடியாது. அடுத்தவன் மேல் பொறாமைப்பட்டு அவனைப்போலவே முன்னேற உழைத்தவர்களும் உண்டு




==================




13 நல்ல ட்வீட் போடும்போதுலாம் பாக்காம கடலை போடும்போது பாக்கறீங்க



23 1/2 மணி நேரம் கடலை போட்டுட்டு. அரை மணி நேரம் தனி ட்வீட் போட்டா அப்டித்தான்


=============

14 காதலி பேர பாஸ்வேர்ட் வச்சா ( உமா - சின்ன பேரு )Weak-ன்னு சொல்லுது. அதனாலதா காதல் தோல்வியே ஆச்சு


அங்கதான் தப்பு.காதலி பேரை 10 டைம் இம்ப்போசிசன் போல் டைப்பனும்


==============

15 நீங்க சிம்ம ராசியா இருந்தா சிம்ம வாகனி ராசி ஆகிடும்னு எதிர்பார்க்கக்கூடாது.மீன ராசிக்காரங்க மீனம்மாட்ட கடலை போடலாம்னும் நினைக்கக்கூடாது்


============

16 தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு

2016 - ஜெ
2021 - மு க ஸ்டாலின்
2026- கேப்டன்


===========

17 8 தேமுதிக, 1 பாமக , 1 புதிய  தமிழகம்   என  இன்று மட்டும் 10 எம் எல் ஏக்கள்  விலை போய் உள்ளனர்.அராஜக ஆட்சியின் ஆதிக்கம் ஆரம்பம்


=============

18  சீதை க்காக நடந்த சுயம் வரத்தில் ராவணன் ஏன் கலந்துக்கலை?மேரேஜ் ஆன பின் ஏன் தூக்கிட்டு வந்தாரு?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்குதான் மணம் உண்டு


==============


19  CLT = CURRENTLY LISTENING TO
UPSLT = UPS using & LISTENING TO


=================

20  எதிரியைத்தாக்கும் முன் நாம் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோமா என்பதை உறுதி செய்து பின் தாக்க வேண்டும்


================

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11/3/16 ) 13 படங்கள் முன்னோட்ட பார்வை

1 காதலும் கடந்து போகும்
2 மாப்ள சிங்கம்
3 நட்பதிகாரம் 79
4 அவியல்
5 என்னை பிடிச்சிருக்கா?
6 கதிரவனின் காதல் மழை # 11/3/2016 தமிழ்

HINDI
1 .GLOBAL BABA
2 JD
3 TERAE SUROOR
4 OK MEIN DHOKHA

ENGLISH

5  GRIMSBY
6 THE PERFECT MATCH
7 THE YOUNG MESSIAH  # 11/3/2106



1 காதலும் கடந்து போகும்

சூதுகவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 

படம் காதலும் கடந்து போகும். விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் 

மடோனா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் 

நாராயணன்

மடோனா மலையாளத்தில்  அறிமுகம் ஆன நடிகை. இதில் 

சமுத்திரக்கனி முக்கிய ரோல் ( வில்லன் ?)

ஒரு கொரியன் மூவியின் அதிகாரப்பூர்வமான  ரீ மேக் இது




இளைஞர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு ஆளான ’காதலும் கடந்து போகும்’ படத்தின் டிரெய்லர் நேற்று சூர்யா அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இதுவரை 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றுல் மடோனா செபஸ்டியன் காமெடி மற்றும் ரொமாண்டிக் வசனங்கள் டிரெய்லரை இன்னொருமுறை பார்க்கத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியாது. 
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டியன் , சமுத்திரகனி நடிப்பில் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ள படம் ’காதலும் கடந்து போகும்’. படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது, விஜய் சேதுபதி பட டிரெய்லர் என்றாலே அவரை மீறி யாரும் பெர்ஃபாமென்ஸில் பின்னி எடுத்துவிட முடியுமா பாணியில் லோக்கல் சென்னை பாஷை, அசால்ட், கெத்து என ரவுடிக்கே உரிய தோரணை காட்டுகிறார்.
’பிரேமம்’ படத்தின் செலினா கேரக்டரில் மிகச் சொற்ப சீன்களிலேயே கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் இதில் முழுப் படமும் வந்து கிறங்கடிக்கப் போகிறார் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. ”ண்ணா. நான் உங்களுக்கு ஒரு பழமொழி சொல்ட்டா?, இருங்க வந்து சொல்றேன்” என விஜய் சேதுபதி ஒரு பக்கம் அடடே! என சொல்ல வைத்தால், இன்னொரு பக்கம் ”மூஞ்சி லோக்கலா இருக்குல்ல இவ்ளோ தான் மேட்ச் பண்ண முடியும்” என மடோனா கலாய்ப்புகளும் படம் ரொமாண்டிக் காமெடிக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
சந்தோஷ் நாரயணனின் இசையில் ”கககபோ” பாடல்  டிரெய்லருக்கு கொஞ்சம் பளிச் லுக். கூலர் போட்டுக்கொண்டு போலீஸ் லுக்கில் “ உள்ள போனாலும் அப்படியே இருக்க, வெளிய இருந்தாலும் அப்படியே இருக்க, ஒரு நல்ல தத்திக்கு உதாரணமா வாழ்ந்துட்டு இருக்க” என திடீர் எண்ட்ரி கொடுக்கும் சமுத்திரக்கனியால் படத்தில் சீரியஸ் போர்ஷன்களும் ஹெவியாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
அவ்வப்போது ”நானும் ரவுடிதான்” படத்தின் டிரெய்லர் நினைவு வருவதைத் தான் தவிர்க்க முடியவில்லை. எனினும் நலன் குமாரசாமி என்பதால் கண்டிப்பாக ‘ சூது கவ்வும்’ , ‘ பாணியில்  அடுத்த ட்ரெண்டி படமாக இருக்கும் என நம்புவோம். ”காதலும் கடந்து போகும்”  மக்களின் மனதைக் கடத்திப் போகுமா? அல்லது வெளியாகும் 10 படங்களில் இதுவும் ஒன்றாகக் கடந்து போகுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

2 மாப்ள சிங்கம்


விமல் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மாப்ள சிங்கம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக 3வது முறையாக அஞ்சலிநடித்துள்ளார்.
இப்படம் பல தடைகளை தாண்டி இந்த வாரம் வெளிவரவுள்ளது. நீண்ட நாட்களாக பலரும் இப்படத்தை எதிர்ப்பார்க்கையில், ரசிகர்களின் ஆவலை சற்றும் ஏமாற்றாதாம் இந்த மாப்பிள்ளை சிங்கம்.
விமலும் சமீபத்தில் ஒரு பேட்டியில், களவாணி அரிக்கியை எத்தனை பேருக்கு பிடிக்குமோ, அதை விட அதிகமானோருக்கு இந்த மாப்ள சிங்கத்தை பிடிக்கும் என கூறியுள்ளார்.

  • ‘மாப்ள சிங்கம்’ படத்துக்காக அரசியல் களம் கண்ட அஞ்சலி

1 of 1
சொந்த சித்தியுடனான பிரச்சினைக்குப் பிறகு மீண் டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஞ்சலி. வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், தேர்தல் களத்திலும் குதிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும். அவர் உண்மையான தேர்தல் களத்தில் இறங்கவில்லை. விமலுடன் இவர் நடித்து வரும் ‘மாப்ள சிங்கம்’ படத்தில்தான் அவருக்கு அப்படியொரு களம் அமைந்துள்ளது. இப்படத்தின் கதைப்படி கதாநாயகன் விமலுக்கு எதிராக இவரும் தேர்தல் களத்தில் இறங்குகிறாராம்.
‘மாப்ள சிங்கம்’ படத்தை ராஜசேகர் இயக்கி யுள்ளார். விமல், அஞ்சலி, சூரி, காளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 11ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வழக்கறி ஞரான அஞ்சலி, விமலுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிப்பதுபோன்ற காட்சி ஒன்று இடம் பெறுகிறதாம். இதில், அஞ்சலி வீர வசனங்கள் எல்லாம் பேசி அசத்தியுள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிகக் கவரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பிரதி அண்மையில் இணையத்தில் வெளியானது. எனினும் இதையும் மீறி படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்


3 நட்பதிகாரம் 79

மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கலக்கியவர்ராஜ்பரத். அப்படி செல்வதை விட தம்பா என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
இவர் முதன் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் படம்நட்பதிகாரம்-79. இப்படத்திற்கு சிவகுமார், சூர்யா கிரிக்கெட் வீரர் முரளி விஜய் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித் சாரின் எளிமை மிக பிடிக்கும், அதேபோல் விஜய்யின் மாஸ், விக்ரமின் உழைப்பு, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் சூர்யாவிற்கு பொருந்தும்’ 

என கூறியுள்ளார்.

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ரவிச்சந்திரன். இவர் அடுத்து, நட்பின் பெருமையை சொல்லும் வகையில், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, 'நட்பதிகாரம்-79' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.


இதில், கதாநாயகனாக, 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த ராஜ் பரத் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக, 'வல்லினம்' படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் நிலம்பூர் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ரவிச்சந்திரன். டி.ரவிகுமார் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக, இசையமைப்பாளர் தேவா பாடிய ஒரு பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படம் உருவாகி வருகிறது என்கிறார், டைரக்டர் ரவிச்சந்திரன்.

4 அவியல்

சென்னை: பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தப் படத்திற்கு வைத்திற்கும் தலைப்பு என்னவென்று தெரியுமா? அவியல்.
தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற பெயரில் சொந்தப் படநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் சார்பாக பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 6 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 5 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிடவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இதற்காக ரசிகர்களிடம் தலைப்பு கேட்டு ஒரு போட்டி ஒன்றையும் நடத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.Karthik Subbaraj Next Movie Title Aviyal
இவரது படத் தலைப்புகள் பீட்சா, ஜிகர்தண்டா என்று உணவு சார்ந்தே இருப்பதால் ரசிகர்களும் உணவுப் பெயர்களின் பெயர்களையே தலைப்புகளாக அனுப்பி இருக்கின்றனர்.
வந்து குவிந்த தலைப்புகளில் இருந்து அவியல் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இந்தத் தலைப்பை திருச்சி வாசகர் ராஜ்குமார் என்பவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த முறை உலமெங்கும் இதனை வெளியிட இருப்பதால் அதிக உழைப்பு, அதிக சிரிப்பு, அதிக பொழுதுபோக்கு கலந்து இருக்கும் என்று உறுதிமொழி கொடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
உங்கள் அபிமானத் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது அவியல்.



5 என்னை பிடிச்சிருக்கா?


6 கதிரவனின் காதல் மழை



நன்றி - தினமலர்  தினத்தந்தி  மாலைம்லர்  வெப்துனியா  ஆல் சினி வெப்சைட்