Tuesday, March 08, 2016

கலைஞர் - ஸ்டாலின் லடாய்! ??

1  காஞ்சீபுரத்தில் நாளை தே.மு.தி.க. மாநாடு; மாநாட்டின் வெற்றியை தடுக்க முயற்சி என்று விஜயகாந்த் குற்றச்சாட்டு # டாஸ்மாக் லீவ் விட்டுட்டாங்களா?



============



2  குஷ்பு எனக்கு பாட்டி முறை-இளங்கோவன் # அப்போ நக்மா கொள்ளுப்பாட்டி முறையா? சுந்தர் சி தாத்தா முறையா? சும்மா எதுனா அடிச்சு விடக்கூடாது


============

3 தேர்தலுக்கு பின்னரும் நமக்கு நாமே பயணம் தொடரும்- ஸ்டாலின் #  கடைசி வரை நடந்துட்டுதான் இருப்பீங்க, சி எம் கனவு நடக்காதுனு தெரிஞ்சிடுச்சா?


--================

ஈரோட்டில் விவசாயிகள் கடன் விடுதலை மாநாடு: ஸ்டாலின், , வைகோ, வாசன், ராமதாஸ் பங்கேற்பு # தேர்தல்  வருது தேர்தல் வருது டும் டும் டும்


==============


கடனை திருப்பிச் செலுத்தாததால் நடவடிக்கை: விஜய் மல்லையா  சொத்துகளை விற்பனை செய்ய 4 வங்கிகள் திட்டம் # நாலு பேருக்கும் நாமம் போட்டுட்டாரா?


==============

பயணத்தை நிறுத்திக்கொண்டது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்! # அடடா, இனிமே அது எக்ஸ் PRESS தானா?


===============


எந்த வழக்கானாலும் சந்திப்போம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #  நம்ம மேல மட்டும்  ஏன் இத்தனை வழக்கு வருது? சிந்திப்போம்



==============


'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் ஹீரோவாக ரஜினி: உறுதி செய்தார்  இயக்குநர் சித்திக் #  நைஸ். டைட்டில் காதல் தந்திரன்?


=============

சுற்றுப்பயணங்களை முடித்த பிறகே கூட்டணி முடிவை அறிவிப்பேன்- ஜி கே வாசன் # முருகர் இப்டி கிளம்பி தான் விநாயகர் கிட்டே கோட்டை விட்டாரு


================

10 இந்த ஆட்சியின் முடிவுக்காக நாட்களை எண்ணிக்கொண்டு வருகிறோம்- ஸ்டாலின் # 5 * 365 = 1825 நாட்களும்  எண்ணிக்கிட்டே இருப்பீங்களா?


===============


11 வெள்ளம் பாதித்த  அனைத்து தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முடிவு ..காங் அதிர்ச்சி # வெள்ளத்தால காங்கிரஸ் கட்சிக்கு ரொம்பவே பாதிப்பு போல

===============

12  . முதல்வர் சித்தராமையா, மோடியை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.- பி.எஸ்.எடியூரப்பா  # வெளிநாடு டூர் போக சித்தமாகிட்டார், டோண்ட் ஒர்ரி


==============


13 கடிகார விவகாரத்தை திசை திருப்ப முயற்சி:தேவகவுடா குற்றச்சாட்டு # சித்த ராமையாவுக்கு அரசியலில் டைம் சரி இல்லையாம், என்ன பண்ணுவாரு ? பாவம்


=============

14  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தமாமியாரை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் கைது  # புருஷனுக்கு தலையணை மந்திரம், மாமியார்க்கு தலையணை எந்திரம்

================

15   ஜெ., அறிவித்த சலுகைகள் போதாது: போராட்டத்தை தொடர அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு # பேராசை பெரு நஷ்டம், பணிக்கு திரும்பலைன்னா ரொம்ப கஷ்டம்


================



16  ஊட்டி நகராட்சியின் வருமானத்தை உயர்த்த அதிரடி தீர்மானங்கள் # ஊரார்  காதலை “ஊட்டி” வளர்த்தால்  ஊட்டியின் வருமானம் தானே உயரும்



================


17  தொகுதி செல்லாத எம்எல்ஏ வை  நீக்குவோம்-ஸ்டாலின்  # அப்பா மேல 1000 கோபம் இருந்தாலும் பேசி தீர்த்துக்கனும்



=================


18  மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா!- அன்புமணி  #  ஏமாற்று , முன்னேறு , அரசியல் சதுரங்க வேட்டைகள்


=================


19  சீர்திருத்த திருமணங்கள் தான் சிறந்தது- அன்பழகன், # 50 பவுன் சீர் தர்றேன்னா 75  பவுன் கேட்டு சீர் திருத்தம் செய்த திருமணம்?


================

20  , ஜெ சென்னையை தவிர, வேறு எந்த ஊர்களுக்கும் சென்று, மக்கள் பிரச்னையை கேட்கவில்லை.-EVKS # ஜெயா நியூஸ் ல மக்கள் நலம்னு சொன்னாங்களாம்


=======================

ரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்

1  சார், லைக்கா  நிறுவனத்தை எதிர்த்த 24  தமிழ் அமைப்புகள் இப்போ எங்கே?

இப்போ வர மாட்டாங்க, ரிலீஸ் அன்னைக்கு முந்தின நாள் கோர்ட்ல கேஸ் போடுவாங்


===============

2 பொண்ணுங்க  சேலைகட்டும்போதுஅழகாஇருக்காங்களா? சுடிதார் போடும்போது அழகா இருப்பாங்களா?

சாரி மிஸ், பொண்ணுங்க டிரஸ்சிங்ரூம் எட்டிப்பார்க்கமாட்டேன்

==================

3 டியர், பாம்பு படம் எடுக்கறதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும்

 எங்கேம்மா, இப்போ மனுசன் எடுக்கும் படமே சரியா ஓட மாட்டேங்குது



===============


4 டியர், எனக்காக யார் ஒரு சொட்டு கண்ணீராவது விடறாங்களோ அவங்க தான் என் லவ்வர்

 அட பேக்கு, யார் விட்டாலும் 2 சொட்டு கண்ணீர்தான் மினிமம் வரும்


=============

5  டியர், 2016 மே  மாசத்தோட நம்ம காதல் முடிவுக்கு வருதா? ஏன்?

ஆட்சி தான் 5 வருசத்துக்கு ஒரு டைம் மாறனுமா? காதல் மாறக்கூடாதா?


==================



6 மிஸ்! ஒரு மனிதன் வாழ்க்கைக்குத்தேவையான  எல்லா விஷயங்களும் உங்க படைப்புகளில் வெளிப்படுது

 நிஜமாவா?

 யா, இப்போ என் வாழ்க்கைக்கு நீங்க தேவை


===============


7  தொட்டது தொண்ணூறுக்கும் சந்தேகப்பட்டா எப்படிதாய்யா லவ் பண்றது?


லவ் பண்ற ஒரு பெண்ணை மட்டும்  தொடவும், மீதி 89 பேரை டாட்டா காட்டி அனுப்பிடவும்


=================




8  தலைவரே! 5 முறை முதல்வரா  இருந்தப்போ  செய்யாததை எல்லாம் இப்போ ஜெயிச்சா செய்வேன்னா எப்டி நம்பறது?

 ஆறு மனமே ஆறு, ஆறாவது தடவை ஜெயிச்சா பாரு


==================


9  டைரக்டர் சார், இண்ட்டர்வல்  ட்விஸ்ட்ல என்னை நகம் கடிக்க வெச்சுட்டீங்க

நெய்ல் கட்டர்ல வாரம் ஒரு டைம்  கட் பண்ணிட்டா பிராப்ளம் இனி வராதில்ல?


===============


10 கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு எழுதுனா எழுத்தில் உத்வேகம் பிறக்கும்

 அதெப்டிங்க? ஆக்சிலரேட்டர் எடுத்தாத்தானே வேகம்?


==================

11 லாரிக்கு தூய தமிழ் சொல் சரக்கு உந்து

 டீச்சர், அப்போ சைடு டிஷ் உந்து  எதுக்கு வரும்?


==================


12 டாக்டர், கால் 2 ம் வலிக்குது
மேடம், புருசனை கால் அமுத்தி விடச்சொல்றதுதானே? இதுக்குப்போய் க்ளினிக் வருவாங்களா?



============


13 மிஸ்! பொண்ணுங்க பெரும்பாலும் கார்த்திக்-கை காதலிக்கறாங்களே, சினிமா ல அது ஏன்?

”கார்”த்திக் கிட்டே கார் இருப்பதால் காரிகைகள்  மனம் மயங்கி


================


14 டியர், நீங்க போட்டிருக்கும் செண்ட் ஸ்மெல் எனக்குப்பிடிக்கவே இல்லை.

இந்த வாசனை தானே? மாத்திட்டா போச்சு, ஜி கே வாசனையையே மாத்திடறாங்க


=================


15  தலைவரே! வெள்ளம் பாதித்த தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர மாட்டீங்களா?

 அஸ்கு புஸ்கு, நான் என்ன தியாகியா?தனக்குப்போகத்தான் தான தர்மம்


================


16  யோவ் , பி ஏ, நமக்கு ஜெயிக்க வாய்ப்பே இல்லாத தொகுதி லிஸ்ட் எடு

எதுக்கு தலைவரே?

 கூட்டணிக்கட்சிக்கு பிச்சை போட்ருவோம்


====================

17  தலைவரே! ரத யாத்திரைக்கு கூட்டம் வர்லைன்னா என்ன செய்ய?

 ரதி மாதிரி  கேரளா ஃபிகர்ஸ் 10 பேரை ரதத்தில் ஏத்துய்யா


=================



18  மேடம், எலக்சன் டைம் என்பதால் எப்படியும் நீங்க இறங்கி வந்துதான் ஆகனும்னு நினைக்கறாங்க

நான் இரங்கி வருவேன், ஆனா இறங்கி வர மாட்டேன்


=================



19  தலைவரே! நமக்கு ஜெயிக்க வாய்ப்பில்லாத ஆனா கூட்டணிக்கட்சி ஜெயிக்க வாய்ப்புள்ள தொகுதியை அவங்களுக்கு கொடுத்திடலாமா?


அய்யய்யோ வேணாம், நமக்கே அது



=============

20  தலைவரே! நம்ம கூட கூட்டணி வைக்க 500 கோடி கேட்கறாரு, கொடுத்துத்தொலைச்சிடலாமா?

 வேணாம், அதை சம்பாதிக்க  ஒரு வருசம் ஊழல் பண்ணனும்


====================

Monday, March 07, 2016

30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா?

1  பொண்ணுங்க  நமக்கு வணக்கம் வைக்கறதே பெருசு. ஒரு பெருசு ஏதாவது படம் போட்டு வணக்கம் வைக்கலையா?ன்னு கேட்கறாரு, அய்யோ ஊர்மிளா



================



தனியார் டீச்சர் டிகிரி முடிச்ட்டு பிரைவேட்ல 800 ரூபா சம்பளத்துக்கு கஷ்டப்படறாங்க.+2் முடிச்ட்டு 30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா?




============



3 அனைவருக்கும் சுழற்சி முறையில் அரசு வேலைத்திட்டப்படி 5 வருடங்கள் மட்டுமே அரசுப்பணி எனும் நிலை வந்தால் போராட்டம் ,வேலை வாய்ப்பின்மை இருக்காது



============



4 திமுக வாதிகள் ஊழல்வாதிகள்னு கோர்ட்ல நிருப்பிச்சி இருக்காங்களா?"



கலைஞர் ஊழலில் சாணக்கியத்தனமானவர் ,ஜெ போல் அலட்சியமா தப்பு பண்ணி மாட்டிக்க மாட்டார்



=




============



5 உன் கூட பேசப்பிடிக்கலைனு ஒரு பொண்ணு சொன்னா விலகிடனும்.ஏன் பிடிக்கலைன்னு கேட்டா வெறுப்பு இன்னமும் அதிகமாகுமே தவிர குறையாது



=============



6 காதலி கோபத்துல ”என் கிட்டே பேச வேணாம் போ”-ன்னா டக்னு போய்டக்கூடாது,சரி, 5 அடி தள்ளி நின்னு பேசலாமா?ன்னு மொக்கை போடனும்




================



மரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு பசை தடவி அமர்ந்து கொள்ள வேண்டும்னு நினைக்காதீங்க, மாமியார் வீட்ல 3 நாள் மேல இருந்தா மதிப்பே இருக்காது




=================



செஸ் போர்டை காலேஜ்ல இருந்து திருடிட்டு வந்துட்டா அதுதான் சதுரங்க ஆட்டை




==============



ஆஃபீசில் இருக்கும்  சுமார் ஃபிகர்களையும் ரசிக்கப்பழகிக்கொண்டால் உன் பணிமேன் மேலும் சிறக்கும்




===============




10  பிரபல ட்வீட்டர் கடல் கன்னி ஆசைப்பட்டபடி  சி எம் ஆகிட்டா  மக்கள் என்ன நினைப்பாங்க?


உப்பைத்தின்னவன் தண்ணியைக்குடிச்சுதானே ஆகனும்?



================




11  11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்


===========

12 குங்குமம் வைக்காத தமிழ்ப்பெண் அழகில் தேவதை எனினும் ரசிப்பில் ஒரு மாற்று குறைவே !

============

13 உடன் பிறப்பே! கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?என ஜெ ஆட்சியில் கண்டுபிடிக்கவே இல்லை.கழக ஆட்சி அமைந்தால் பாகம் 2 பார்த்து கண்டுபிடிப்போம்


============

14 போலீஸ் சப்ஜெக்ட் படங்கள் ல ஹீரோ மீசை முறுக்கற மேனரிசம் தவறாம வந்திடுது.லேடி போலீஸ் னா ஜடையை திருகிக்குவாங்களா?


============

15 3 மணிநேரம் பொறுமையா படம் பார்த்து 1 மணிநேரம் மாங்கு மாங்குனு விமர்சனம் டைப்பிஅப்டேட்டினா அதைப்படிச்சுப்பார்க்காம படம் எப்டி?னு கேட்டா எப்டி?

===============


16 எதிரியை  அடிக்கனும்னா அவகாசம் கொடுக்கக்கூடாது, நெருக்கடியான கால கட்டத்தில் தான் தாக்கனும்


=================

17 உள்ளாடை தெரியுது   என பெண்ணிடம்  சொல்ல இடம் பொருள் ஏவல் உண்டு. 4 பேர் முன்னிலையில் சொன்னால்  கோபப்படாமல் கொஞ்சுவாங்களா?


=================


18 ஆடை விலகிய  பெண்ணிடம் நேரடியாக சொல்லாமல் அவர் அருகில் இருக்கும் பெண்ணை அழைத்து  சொல்லி அவர் மூலம் தகவல் போனால் அதுவே சரி


=============


19  உங்கள் கையில் அதிக பணம் இருக்கும்போது  உங்கள் அப்பாவை நினைத்துக்கொள்ளுங்கள்.அவர் சிக்கனம் உங்களுக்கும் வரும்,வீண் செலவு செய்ய மாட்டீர்கள்


==================


20  800 VAO  போஸ்ட்டுக்கு 10 லட்சம் பேர் அப்ளை பண்ணி இருக்காங்களாம், ஆனா தமிழக முதல்வர் போஸ்ட்கு 10 பேர் கூட அப்ளை பண்ணலை. ரெண்டே பேர் தான்


====================

மீசை வெச்ச சாக்ரடீசே

தலைவரே! நம்ம கட்சி இந்த தேர்தல்ல சிக்சர் அடிக்கும்னு எப்டி சொல்றீங்க?

6% வாக்கு வங்கி இருக்கே? அதை வெச்சுத்தான்


==============

2 இன்ஸ்பெக்டர்! எங்க கட்சிக்கு பாதுகாப்பு வேணும்.

எதுக்கு?

4% வாக்கு வங்கி உள்ள கட்சி. வங்கின்னா பாதுகாப்பு வேணுமில்ல?


================


3  தொப்பை குறையனும்னா உங்க நாக்கை அடக்கனும்.


டாக்டர்! நாக்கைஅடக்கறதும், தாலி கட்ன சம்சாரத்தை அடக்கறதும் இந்த உலகில் யாராலும் முடியாததாச்சே?


===================


4  டாக்டர்! மைனர்  ஆபரேசனுக்கும், மேஜர் ஆபரேசனுக்கும் என்ன வித்யாசம்?


மைனர் ஆபரேசன்னா என் பேரன் செய்வான், மேஜர் ஆபரேசனை நான் செய்வேன்


===============


5  யார் விலகினாலும்  எங்கள் கட்சிக்கு பாதிப்பு இல்லை, அவ்வளவு ஏன்? எங்கள் கட்சியின் தலைவரே விலகினாலும் எந்த பாதிப்பும் இல்லை



===============


6  எனக்கு மஞ்சள் தான் ராசி, சிகப்பு ஒத்து வராது, அதனால கம்யூனிஸ்ட் கூட கூட்டணி வேணாம்.

ஓஹோ, உங்க உடம்புல ஓடும் ரத்தம் என்ன கலர்?தலைவரே!


==============


7  தலைவரே! குண்டர் தடுப்புச்சட்டத்தை  ஏன் எதிர்க்கறீங்க?


நம்ம கட்சில எல்லாப்பயலும் கிடாக்கணக்கா இருக்கானுகளே?



===============


தலைவரே! மேடைல பேசும்போது சம்பந்தமே இல்லாம நயன்தாரா, ஹன்சிகானு சினிமா நட்சத்திரங்க பேரை எதுக்கு சொல்றீங்க?



நட்சத்திரப்பேச்சாளர்னு பேர் எடுக்க

================


9 தலைவரே! உங்க பையன் எட்டாம் கிளாஸ்ல ஃபெயில் ஆகிட்டான்

அடடா! அப்புறம்


தோல்விக்கு பொறுப்பேற்று ஸ்கூலை விட்டு விலகிட்டான்

==================


10  தலைவரே! போன தேர்தல்ல ஏன் தோத்தீங்க?

 தோல்வின்னு சொல்லிட முடியாது.வெற்றி பெறவில்லைன்னு வேணா சொல்லலாம்

இந்த கெத்து தான் தலைவரே உங்களை வாழ வைக்குது


==================


11  என் சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்.

 தலைவரே! அதை ஒரு டைம் படிச்சு முடிக்கவே 2 வருசம் ஆகுமாமே?


===================


12   கச்சத்தீவை மீட்போம்னு எல்லாரும் சொல்லிட்டாங்க


 தலைவரே! அதுக்காக கன்னித்தீவை மீட்போம்கறதா?அது தினத்தந்தி படக்கதை தான்


==================


13  படம் பூரா ஹீரோ  ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலைனு பைக்ல போய்க்கிட்டே இருக்காரே?

 ஏகப்பட்ட டர்னிங்க் பாயிண்ட்ஸ் உள்ள படமாச்சே?


=================


14  கேரளா ஸ்பெஷல் முந்திரி ஒரு கிலோ 400 ரூபா


கொஞ்சம் குறைச்சுச்சொல்லுங்க


சரி, அரை கிலோ  200 ரூபா மேடம்


 ரொம்ப தேங்க்ஸ்ங்க. அரை கிலோ குடு

==================


15   தலைவரே! குற்றப்பத்திரிக்கை வந்திருக்கு, சைன் பண்ணுங்க

வ்ழக்கமா பேப்பர், பத்திரிக்கைன்னா வீசிட்டுப்போய்டுவாங்க இல்ல, எதுக்கு  சைன் பண்ணனும்?


================


16  ஜட்ஜ் = 211 கோடி ஊழல் செஞ்சீங்களா?


கைதி=  எனக்கு கணக்கு வழக்கு எல்லாம் தெரியாதுங்களே எஜமான்


=================

17  தலைவரே! இத்தனை ஊழல் செஞ்சும் இத்தனை வருசமா எப்படி அரசியல்ல ஃபீல்டு அவுட் ஆகாம இருக்கீங்க?உங்க நினைவாற்றலாலா?



மக்களோட ஞாபகமறதியால


===============

18   எதிர்க்கட்சித்தலைவரை திட்டிப்பேச 40 கெட்ட வார்த்தை ரெடி பண்ணிட்டேன்

 வெரிகுட். இன்னா நாற்பது, அதன் மூலம் உனக்கு இன்னோவா 40, டேக் இட்


==================

19   மீசை வெச்ச சாக்ரடீசே!ன்னு எதுக்கு தலைவரே அவரைப்புகழ்றீங்க?

இன்னைக்கு பார்ட்டில அவருக்கு விஷம் வெச்சு கொல்லப்போறோம்


==============



20  தலைவரே! பொதுத்தேர்தல் நடத்த 4000 கோடி செலவாகுமாம்

 அடேங்கப்பா, அந்த காண்ட்ராக்ட் நமக்குக்கிடைச்ச்சா 2000 கோடி சுருட்டலாம்


======================


Sunday, March 06, 2016

ரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்?

டாக்டர்.டெய்லி லேப்டாப்பை மடில வெச்சு ஒர்க் பண்றேன்.எனக்கு ஏதாவது ஆகுமா?


எதுவுமே ஆகாது.சாரி


===========

2 மாப்ளை மிருதுவான டைப்னீங்க.பொண்ணோட கையைப்பிடிச்சு கடிச்சு வெச்ட்டாராமே?


நீங்க.சரியாப்புரிஞ்சுக்கலை.மிருதன் டைப்ங்க அவரு



=============

3 திராவிடக்கட்சிகளுடன் கூட்டு கிடையாதுனு பரவலா பேச்சு வருதே தலைவரே?நிஜமா?


நான் தான்யா பரப்பி விட்டேன்.அப்போ தான் பேரம் படியும்..500 கோடி, துணை முதல்வர் போஸ்ட்


============
4 ஃப்ரீடம் இண்டியா Rs.251 செல் பதிவு செய்தீரா?"

சதுரங்க வேட்டை படம் பாத்துட்டேன் சார்

============

5 நம் அரசியல் முறையில் என்ன மாற்றம் வேண்டும்?

ஆண்டாண்டு காலமா தமிழன் ரெண்டே ஆப்சன்ல மாத்தி மாத்தி குத்திட்டு இருக்கான்,அது மாறனும்


================

6  ஜாதிக்கட்சிகளை  ஏன் ஆதரிக்கக்கூடாது?ன்னு சொல்றீங்க?

ஊழல் கட்சி, ஆணவக்கட்சி இந்த இரண்டு கட்சிகளை விட ஆபத்தானது ஜாதிக்கட்சி


================


7 சம்சாரம்  கோபத்துல கடுகு மாதிரி பொரியும்போது என்ன செய்யனும்?

கொதி எண்ணெயில் கடுகு பொரியும்போது அடுப்பைவிட்டு விலகி இருப்பதுபோல்  அப்போதைக்கு வீட்டை விட்டு கிளம்பிடனும்


================

8  ஆஃபீஸ்க்கு டெய்லிலேட்டா வர்றியே? உன் வீட்டுக்கு உள்ளேயே ஆஃபீஸ் வெச்சாலாவது கரெக்ட்டைம்க்கு வருவியா?

 2 வீடு இருக்கு, எந்த வீட்டுக்கு உள்ளே



==============


9 மாப்ளை, என் பொண்ணு கொஞ்சம் மக்குப்பொண்ணு, நீங்க தான் அட்ஜஸ் பண்ணிக்கனும்

மாமா, இப்போதைக்கு கூட்டணில சேர்த்துக்கறேன்



===============


10  தப்பே பண்ணலை, ஆனா தண்டனை அனுபவிக்கறேன்

 எப்டி?

லவ் பண்றப்ப காதலி கூட எந்த தப்பும் பண்ணலை, ஆனாலும் அவளையே கட்டி வெச்ட்டாங்க


====================

11 யாரையாவது அறையலாம் போல இருக்கு

 மிஸ்!உங்க  ஹாஸ்டல் ரூம் மேட் பக்கத்துல தானே இருக்கு? அறை த்தோழிக்கு அறை கொடுங்க, மேட்சுக்கு மேட்ச்


===================

12  மாங்குமாங்கென தேவையில்லாத வேலைகளைச் செஞ்சிட்டு இருக்கேன்

 டியர், மாங்கா சாதம் கழறிக்கொடு, மாங்கு மாங்குன்னு சாப்பிடுவாங்க எல்லாரும்



================

13  என்னை நான் விரும்பாத பொழுது.  .  .
நீ எப்டி விரும்புகிறாய் என்னை?!?

டியர், உனக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தி, எண்ணெய் சேர்த்தக்கூடாது,நான் அப்டியா?



=================


14 தலைவரே! லிஸ்ட்ல நீங்க தான் டாப்ல இருக்கீங்க! வாழ்த்துகள்


நன்றி! என்ன லிஸ்ட்?
சட்டசபைல கேள்வி கேட்காதோர் பட்டியலில் நீங்க முதல்இடம்

=============


15 தலைவரே! நம்ம கட்சிக்கு  நக்மா,குஷ்பூவால ஆதாயம் இருக்குமா?

“மேட்டுக்குடி” மக்கள் வாக்கு நக்மாவால, பழங்குடி மக்கள் வாக்கு குஷ்பூவால கிடைக்கும்


==================


16  மிஸ்!  உங்க வீட்டு ஏரியாவை விட்டு ஒரு அடி கூட ஸ்கிப் பண்ண முடியல

  ஏன்?

 மொட்டை மாடில நின்னு ஸ்கிப்(பிங்க்) பண்ணிட்டு இருக்கீங்களே?


================

17 பஸ்ல ஒரு லேடி என் தோள் மீது தூங்கி  விழும்போது அன்னை தெரேசாவா மாறிடறேன்


மிஸ்! நல்லா செக் பண்ணிப்பாருங்க,..அது பையனாத்தான் இருக்கும், மாறு வேசத்தில் வந்திருப்பான் உங்களை  கேத்ரீன்தெரேசாவா திங்க் பண்ணிட்டு இருக்கப்போறான்


================

18 ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.

எப்டி?புரியலையே?
மிருகம் + மனிதன் = மிருதன்

==============

19 டாக்டர்.காய்ச்சல் 100 டிகிரி தாண்டிடுச்சு.குறைக்க எதுனா வழி இருக்கா?

சாரு வின் ஜீரோ டிகிரி படிச்சுப்பாருங்க.

=============


20 வாழ்க்கை போர் அடிக்குது.

ஓஹோ.நீ சிக்சர் அடிச்சுப்பாரு

===================