Thursday, March 03, 2016

வாலிப வயோதிக அன்பர்களே! வாட்சப்பில் உலா வரும் ஒளிக்கதிர் கீர்த்தி சுரேஷ் குறும்படம்

1  ஒரு நெட் தமிழன் டி எல் போய்ட்டு வர்றேன்.நேத்து லவ்வர்ஸ் டே வை முன்னிட்டு 187 பொண்ணுங்க கிட்டே கடலை போட்டிருக்கார்.அடேங்கப்பா.டிஎம் ல எத்தனயோ


=========



2 ஒரு ஹை க்ளாஸ் பிகரு தங்கக்கொலுசை ரெண்டா கட் பண்ணி.ஹை ஹீல்ஸ் செப்பல் வார் மாதிரி அட்டாச்டு.வாவ்

வாட் எ க்ரியேட்டிவிட்டி

===========

3 சிம்ம வாகனி க்கு சிம்ம ராசி

மதி வதனி க்கு மகர ராசி

தன லட்சுமிக்கு தனுசு ராசின்னு நாமா ஒரு முடிவு எடுக்கக்கூடாது.அவங்க கிட்டேயே கேட்டுக்கனும்

============

4 நறுக்குனு
எதுனா சொல்லுடானு சொன்னா 
 இடுப்பில் நல்லா கிள்ளி வெச்சுட்டேன் , யார் கிட்டே?


=============

உடன்பிறப்பே! கடந்த 5 வருசமாக கழகம் எந்த ஊழலும் செய்யவில்லை,இதிலிருந்தே தூய்மையான  ஊழல் கறை படியாத கட்சி எது? என்பதை உணர்வாயாக!


==============

6  அழகான டிசைனில் ஜாக்கெட் போட்ட பொண்ணு = ரவிக்கை காரிகை

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மாடர்ன் கேர்ள் = ரவிக் கேர்ள்


=================


7  கூட்டணியே இன்னும் முடிவாகாத நிலையில்  வெளி வரும் மீடியாக்களின் எல்லாக்கருத்துக்கணிப்புகளும் பொய்யே!இதுதான் என் கருத்துக்கணிப்பு



===============

ட்விட்டரு, ஃபேஸ்புக் எல்லாம் இப்போ பாத்ரூம் மாதிரி ஆகிடுச்சு, இங்கன வந்து பாட்டெல்லாம் பாடறாங்க 



================
மக்கள் நலக்கூட்டணிக்கு விஜய்காந்த் வந்தால் ஒருவேளை சரித்திரம் மாற 10% வாய்ப்பு இருக்கிறது, அவர் திமுகவில் சேர்ந்தாலோ, தனித்தாலோ “ஜெ”யம் தான்



=============


10 தெரிந்தோ தெரியாமலோ இப்போது கேப்டனின் நிலைப்பாடுதான் சி எம் யார்? என்பதை தீர்மானிக்கப்போகிறது, இது ஜெ , கலைஞர் இருவருக்கும் பின்னடைவு



==============


11  குழந்தைகள் சந்திக்கும் முதல் வங்கி
அம்மா வாங்கித்தரும் தேர்க்கடை உண்டியல்


===============


12 மக்கள் நலக்கூட்டணிக்கு விஜய்காந்த் வந்தால் ஒருவேளை சரித்திரம் மாற 10% வாய்ப்பு இருக்கிறது, அவர் திமுகவில் சேர்ந்தாலோ, தனித்தாலோ “ஜெ”யம் தான்


============

13 பட்ஜெட் கூட்டத்தொடர் பார்த்தா ஜெ என்னமோ அவர் கைக்காசை மக்களுக்காக செலவு.செஞ்ச மாதிரி சிலாகிக்கறாங்க ரத்தத்தின் ரத்தங்கள்

===========

14 உங்க.ட்வீட் அனுமாரை அவமதிக்கற மாதிரி இருக்குனு கேஸ் போடப்போறாங்க.

அர்விந்த் கேஜ்ரிவால் =,நோ.அனுமார் ,ஹனுமலர் ,அனு யாரையும் அவமதிக்கல


============


15 மேடம்.எப்பவும் இலங்கைத்தமிழர்னுதான் சொல்றீங்க.ஏன் ஈழத்தமிழர்னு சொல்றதில்ல?

ஜெ - அது கலைஞர் சொல்ற வார்த்தை.நான் எப்டி சொல்ல?

==========

16 சிவகார்த்திகேயன் டூயட் பாடுன பொண்ணு கூட நாம ஜோடி போடனுமா?ன்னு விஜய் ஈகோ எண்ணம் வர்லை.நல்ல மனசு.ஷாஜகான் விஜய் ரசிகர் மன்றம் .ஈரோடு


========

17 1441 ஃபாலோயர்ஸ் வெச்சிருந்தாலும் நெட் தமிழன் கரெக்டா பொண்ணு கிட்டே தான் மென்சன் போட்டு தேன் மிட்ட்டாய் எடுத்துக்கோங்கறான்.லஞ்ச் பின்ச்


===============

18 வாலிப வயோதிக அன்பர்களே! வாட்சப்பில் உலா வரும் ஒளிக்கதிர் கீர்த்தி சுரேஷ் குறும்படம் அவர் நடித்தது அல்ல, போலி, நிபுணர்கள் ஆராய்ந்து சொன்னது


=============


19 அறிமுக படைப்பாளிகளின் படைப்பை உல்டா செய்து பேர் வாங்கும் பிரபலங்கள் போல் பாமக வின் திட்டங்களை காப்பி அடித்து  பேர் வாங்கத்துடிக்குது திமுக


===============

20 ஃபாரீன் ல எடுத்த சாலை ஃபோட்டோவை தமிழ் நாட்ல எடுத்ததுன்னு ஏமாற்ற முடியாது, ஏன்னா தமிழக சாலைகள்னா குண்டும் குழியுமா இருக்கும்


=====================

Wednesday, March 02, 2016

500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்

எல்லா ஊழலையும் செய்த திமுக, காங். மீண்டும் கூட்டணி ஏன்?... பிரேமலதா அதிரடி கேள்வி # ஊழல் + ஊழல் = மெகா ஊழல் கூட்டணி


============



2 அழகிரி என் பெயரை பயண்படுத்துவதா-கருணாநிதி #

ரத்த சம்பந்தமே இல்லாத குஷ்பூ பயன்படுத்தலாம்.ரத்தத்தின் ரத்தம் சொந்தப்பையன் பயன்படுத்தக்கூடாதா?


==========

3 மு.க. அழகிரி ஒரு துரோகி: கலைஞர் - குருதிப்புனல் னும் சொல்லலாம் தலைவரே.துரோகி யின் நிஜ டைட்டில் குருதிப்புனல் தான்


============

4 காதலர் தினத்தன்று தமிழ்நாட்டில் 9400 பெண்கள் கன்னித்தன்மை இழப்[பு -செய்தி # அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டர்ல சைன் பண்ணிட்டு போன மாதிரி அடிச்சுவிடறாக



===============


இந்தியாவின் சுத்த நகரங்கள்.. 3வது இடத்தில் திருச்சி..! # ஊருக்கான மரியாதை பேருலயே இருக்கே? ”திரு”ச்சி, சபாஷ்

===============


உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் எதிர்ப்பு- நாட்டை விட்டு வெளியேறப் போவதாக அறிவிப்பு   #  மனசுக்குள்ளே கமல்ஹாசன், அமீர்கான்னு நினப்பு


==============


ரயில்வே துறை ஜெர்ஸி பசுவைப்போன்றது, ஆனால் மோடி அதில் இருந்து பால் கறக்கவே இல்லை-லாலு  # டீ மாஸ்டருக்கு தெரியாததா?1300 கோடி லாபம் வந்திருக்கே


================

8  "திமுக - காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சி அளிக்கிறது" - குஷ்பு # எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.இனி எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேப்பீங்க?


===============


9  கருணாநிதி தான் முதல்வராக வேண்டும் : கூட்டணிக்கு ராகுல் வைத்த நிபந்தனை # அப்போதான் 2 ஜி யை வெச்சு கலைஞரை, கனிமொழியை மிரட்டிட்டே இருக்கலாம்


==============


10  எப்படியோஅடித்தகாற்றில்மேலேவந்து கோபுரக்கலசத்தில் ஒட்டிக்கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச்சொல்லத்தான் தெரியும்-கலைஞர்  சொல்றீங்க?


==============


11 இதுவரை ஸ்டாலின் 5 லட்சம் கிலோமீட்டர் பயணித்தார்-செய்தி # அதாவது பிறந்ததில் இருந்து இன்று வரை?


==============


12 "திமுக - காங்கிரஸ்' பொருந்தாக் கூட்டணி: வைகோ விமர்சனம் # கூடா நட்பு மீண்டும் கூடினால் மீண்டும் கேடாய் முடியும்


===============

13 ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தால் ரூ. 1,200 அபராதம்: மும்பை போலீஸ் திட்டம் # இது அதை விட பேராபத்தா இருக்கே?


============


14 } 500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: புதன்கிழமை வெளியிடுகிறது இந்திய நிறுவனம்..# தேர்தல் காலத்துல கட்சிகளுக்கு இது உபயோகமா இருக்கும் , ஒரு ஓட்டுக்கு ஒரு செல்ஃபோன்

==============



15 இடைக்கால பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை: முக ஸ்டாலின்
# ஆமா.பாதிப்பு தான்.பயன் இல்லை.நம்ம கழகத்துக்கு


=============


16 இலங்கைத் தமிழர்களுக்கு நீதிகிடைக்க அம்மா போராடி வருகிறார் -OPS. #,தேர்தல் முடியும் வரை தொடர்ந்து போராடுவார் னு சொல்ல மறந்துட்டீங்க


===========

17 திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் அதன் எதிர் காலம் சிறப்பாக இருக்கும். -கி.வீரமணி #,ஆமா.கேப்டனுக்கு லாபம்.கலைஞருக்கு நட்டம்

===========

18 நமக்கு நாமே என்ற பெயரை ஒரு நாள் முழுவதும் யோசித்து எழுதி கொடுத்தேன்-கருணாநிதி.#,நமக்கு நாமமே ன்னு ஒரு செகண்ட்ல கலாய்ச்சுட்டாங்களே.தலைவா!

==========

19 ‘வாக்காளர்களே பணம் வாங்க வேண்டாம்': இல.கணேசன் வலியுறுத்தல் # ஏமாற்றுபவன் தராமல் இருக்க மாட்டான், ஏமாறுபவன் வாங்காமல் இருக்கமாட்டான்


=================

20  புதிய தமிழகம் கூட்டணி வைக்கும் அணியே வெற்றிபெறும்: கிருஷ்ணசாமி # இருக்கற கோமாளிங்க பத்தாதுன்னு இவர் வேற சிரிப்பு காட்டிட்டு இருக்காரு



================

தி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்

லியனார்டோ டி காபிரியோ நடித்த ‘தி ரெவனண்ட்’ திரைப்படம் 2016 வருட சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. படத்தின் இயக்குநர் அலெஜெண்டரோ கோன்சலே இனாரிட்டு நான்காவது முறையாக ஆஸ்கர் விருதைப் பெறுகிறார். ஒளிப்பதிவாளர் இமானுவல் லூபெஸ்கிக்கும் இது மூன்றாவது ஆஸ்கார். மொத்தமாக மூன்று ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொண்டது தி ரெவனெண்ட் திரைப்படம்.
'Revanant’ – என்றால் சாவின் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவன் என்று அர்த்தம். 2 மணி 36 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் மையக் கதை மகனைக் கொன்றவனான ஜான் ப்ரெட்ஜெரால்ட் (டாம் ஹார்டி) என்பவனைப் பழி வாங்கத் துடிக்கும் தந்தை ஹியூக் க்ளாஸின் (லியானர்டோ டி காப்ரியோ) போராட்டம் தான். பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1843 வருடப் பின்ணனியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அம்சம் நம் வாழ்வில் பயணிக்கவே முடியாத வழித்தடங்களுக்கு நம்மை அறியாமல் அழைத்துச் செலவதே.
வண்டிகள் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில், துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பெல்ட்ஸ் (pelts) எனப்படும் விலங்குகளின் தோலை எடுத்துவர வெள்ளையர் குழுவொன்று காட்டுக்குச் செல்கிறது. அவர்களைத் தடுத்து தாக்குகிறார்கள் செவ்விந்தியர்கள். ஒவ்வொரு தாக்குதலும் மரண அடியாக இருக்கவே அமெரிக்கக் குழுவால் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் இருப்பிடத்திற்கு தப்பிச் செல்ல முடிவு செய்கிறார்கள். தனியாக ஒரு சூழலில் கரடியால் படுபயங்கரமாகத் தாக்கப்படுகிறான் க்ளாஸ். குற்றுயிராகக் கிடக்கும் கிளாஸுக்கு முதலுதவி சிகிச்சை அவன் குழுவினர் செய்தாலும் அவனால் நடக்க முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலில் அவனை வேறு சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஏற்கனவே அவன் மீது காழ்ப்புணர்வுடன் இருக்கும் பிரெட்ஜெரால்ட் அவனை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடலாம் என்று சொல்கிறான். ஆனால் மற்றவர்களுக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. கிளாஸ் பிழைக்க வாய்ப்பில்லை அவனை கொன்று மரியாதையாக அடக்கம் செய்துவிட்டு திரும்பிவிடலாம் என்று தொடர்ந்து அவன் வலியுறுத்தவே அப்படியே செய்யும்படி சொல்லிவிட்டு மற்றவர்கள் முன்னகர்ந்துவிடுகிறார்கள். தனித்து விடப்பட்ட நால்வர் குழுவான க்ளாஸ், பிரிட்ஜெரால்ட், க்ளாஸின் மகன் ஹாக் மற்றும் அவன் நண்பன் ஆகியோர் இரவு ஓரிடத்தில் தங்குகிறார்கள். பிரெட்ஜெரால்ட் தன் முடிவை செயல்படுத்தும் தருவாயில் அவனைத் தடுக்கிறான் ஹாக். அதனால் கோபமுற்ற பிரெட்ஜெரால்ட் க்ளாஸின் கண்முன்னாலேயே ஹாக்கைத் தாக்கிக் கொன்றுவிடுகிறான். அதற்குள் தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்த ஹாக்கின் நண்பன் திரும்பவே பிணத்தை ஓரிடத்தில் மறைத்து வைக்கிறான். அவனிடம் பிரெட்ஜெரால்ட் ஆபத்து மிக அருகே இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று சொல்லவே அவன் ஹாக்கை அழைத்துச் செல்லத் தேடுகிறான். ஆனால் அவனிடம் உண்மையை மறைத்த பிரெட்ஜெரால்ட் அவனுடைய மறுப்பையும் மீறி க்ளாஸை இழுத்துவந்து வெட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் தள்ளுகிறான். அவனைக் கொல்ல வேண்டாம் என்று அவன் தடுக்கவே, இதற்கு மேல் க்ளாஸ் தப்பிக்கவே வாய்ப்பில்லை என்று உணர்ந்த பிரெட்ஜெரால்ட் அங்கிருந்து கிளம்புகிறான்.
க்ளாஸிடம் மன்னிப்பு கேட்டு அவன் மீது ஒரு தண்ணீர் பாட்டிலைப் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான் ஹாக்கின் நண்பன். பேசக் கூட முடியாத வேதனையில், உடல் முழுவதும் ரணமாகிக் கிடக்கும் நிலையில் மகனின் கொடூர மரணம் க்ளாஸை துடிதுடிக்க வைக்கிறது. தன் கண் முன்னால் மகனைக் கொன்றவனைப் பழி தீர்க்க முடிவு செய்து உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிரைத் தக்க வைக்க பிரயத்தனப்படுகிறான்.
அதன் பின்னான க்ளாஸுடைய தனித்த பயணமே மீதிக் கதை. நெடிய மரங்கள் சூழ்ந்த காடுகளிலும், நீர்த் தேக்கங்களிலும், மிகப் பெரிய அருவிகளிலும், குளிர்ந்த நெடிய ஆறுகளிலும், பனிப்பாறைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் விழுந்தும், எழுந்தும், மீண்டும் அவனுடைய பயணம் தொடர்கிறது. தனித்த ஒருவனாக அவன் போராடுவது கொடிய மனிதர்களிடம் இல்லை. இயற்கையிடம். ஆனால் இயற்கை அவனை கைவிடவில்லை. அவன் உயிரோடு இருக்கிறான். இடையில் அவன் சந்திக்கும் ஒரு மனிதன் அவனுக்கு சில உதவிகள் செய்யவே அவனுக்கு குதிரையும் ஆயுதமும் கிடைக்கிறது. எப்படியோ பயணப்பட்டு பிரெட்ஜெரால்டை கண்டுபிடிக்கிறான். ஆவேசமான அவர்களின் இருவரின் சண்டையில் க்ளாஸ் பிரெட்ஜெரால்டைக் கொன்றானா இல்லையா என்பது தான் இறுதிக் காட்சி. பழிவாங்குதல் என்பது நம் கையில் இல்லை. அது இறைவனின் கையில் தான் உள்ளது என்கிறான் க்ளாஸ். டிகாப்ரியோவின் அற்புதமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் நின்று நிலைத்து ஹூக் க்ளாஸ் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளது.
இத்திரைப்படத்தில் ரத்தம் திரை முழுவதும் வழிந்தோடினாலும், அடிபட்ட நாயகனின் உயிர்வதை அதீதமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், யாவற்றையும் மீறி அவனுடைய வாழ்தலுக்கான அவசியம், அதுவும் தன் எதிரியைக் கொன்று பழி தீர்க்கவேண்டும் எனும் வேட்கை அவனை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துப் பயணிக்க வைக்கிறது.
ஒரு படத்தை ரசிகனுக்கு மறக்க முடியாததாக மாற்றுவதற்கும் அற்புத திரை அனுபவத்தைத் தருவதற்கும் ஒரு காட்சி மனத்தில் பதிந்தால் போதும். தி ரெவனெண்டைப் பொருத்தவரையில் அப்படி பல காட்சிகளை சொல்லலாம். அதுவும் முக்கியமாக க்ளாஸ் அவனுடைய மனைவியைப் பற்றி நினைவு கூறும் சில காட்சிகள். அவள் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். சுவாசிக்க கடைசி மூச்சு ஒன்று இருக்கும்வரை வாழ்வதற்காக போராட வேண்டும் என்பாள். தன் குட்டிகளைக் எதிரியிடமிருந்து காப்பாற்றவே அந்தக் கரடி அவனை கொடூரமாக தாக்கி இருக்கும். பின்னர் தன் மகன் சாகும் போது அவனுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும். மனிதனாக இருந்தால் என்ன விலங்காக இருந்தால் என்ன உணர்ச்சிகளும் தாயன்பும் எல்லாவற்றுக்கும் ஒன்று தான். கரடி அவனை கொடூரமாக தாக்கிக் கிழித்து கந்தலாகப் போட்ட நிலையிலும், அது தள்ளிச் சென்றுவிட்டதென எண்ணி தன் துப்பாக்கியை மீண்டும் எடுக்க, அது மீண்டும் வந்து அவன் மீது பாயும் போது க்ளாஸின் போராட்ட குணம் சித்தரிக்கப்பட்டுவிடுகிறது. உயிரே போனாலும் தான் நினைத்ததை சாதிப்பவன் என்பதை கூறாமல் கூறும் காட்சி அது. இப்படிச் சிற்சில சம்பவங்களால் பின்னப்பட்ட இப்படம் இருத்தல் சார்ந்த கேள்விகளை பார்வையாளனுக்கு கடத்துகிறது. உயிருடன் இருப்பது என்பது எவ்வளவு பெரிய அற்புதம் என்பதை கடைசியில் க்ளாஸ் உணர்கிறான் என்று அவனுடன் படம் முழுவதும் பயணுக்கும் நாம் உணர்கிறோம்.
படத்தை மற்றொரு தளத்திற்கு உயர்த்திச் செல்வது இதில் நாயகன் மேற்கொள்ளும் சலிக்காத பயணம், அது தரும் பேரனுபவம். உயர்ந்த மலைகளிலும், பனிப்பாதையிலும் நாமே பயணிப்பது போலத் தோன்றும் காட்சியமைப்புக்கள் அற்புதம். வானுயர்ந்த மரங்களின் நடுவே தென்படும் குளிர் நிலவு, எரிந்து விழும் நட்சத்திரம், பனிப் பிரதேசங்களில் தென்படும் இறந்த மிருகங்களின் தனித்த உடல் என பல காட்சிகளில் உறைய வைக்கிறார் ஒளிப்பதிவாளர். கரணம் தப்பினால் மரணம் எனும் நிலையில் தவழ்ந்தும் நடந்தும் ஓடியும் குதிரையில் பயணித்தும் கடைசியில் தேடியதை தேடியவனைக் கண்டடைகிறான் க்ளாஸ். வாழ்க்கை என்பது வெற்றி தோல்விகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அகமும் புறமுமான தொடர் பயணமும் அதன் மூலம் கிடைக்கும் தெளிவும் தான் மனித வாழ்வை பூர்ணமாக்கும் எனும் கருத்தை நேரடியாகச் சொல்லாமல் பார்வையாளர்களின் பங்களிப்புக்கு ஒரு களம் அமைத்துத் தருகிறார் இயக்குநர்.
'தி ரெவனெண்ட்' போன்ற ஒரு திரைப்படம் நிச்சயம் ஆஸ்கரை அடுத்து பல விருதுகளை வெல்லும். இது போன்ற படங்கள் தரும் பிரமிப்பிலிருந்து மீள, மீண்டும் மீண்டும் அத்திரைப்படத்தைப் பார்ப்பதன்றி வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

thanx - dinamani

உங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா?ன்னு கூப்பிட்டிருக்கா

மிஸ்! பீர் அடிச்சீங்களா?


எப்டி தெரியும்?
வழக்கமா பொண்ணுங்க க்ளுக்னு தானே சிரிப்பாங்க? நீங்க கு”பீர்”னு சிரிச்சதா சொன்னீங்களே?



==========

2  டாக்டர், எந்த பஸ் ஸ்டாப்பைப்பார்த்தாலும் என் பையன் சைட் அடிக்க அங்கே காரை நிறுத்துறான்

ஸ்டார்ட்டிங் பிராப்ளம் போல் ஸ்டாப்பிங்க் பிராப்ளமா?


================


டாக்டர்.நண்டு சூப் குடிச்சா எனக்கு mood வருமா?

வாமிட் தான் வரும்


========

4 யார் வந்தாலும் அரவணைப்போம்னு தலைவர் சொன்னாரா?

ஆமா.அதுக்கென்ன இப்போ?
மகளிர் அணித்தலைவியை கட்டிப்பிடிச்ட்டாரு

==========

5 5,வருசமா லவ் பண்ணியும் என் ஆள் சுண்டு விரலைக்கூட தொட்டதில்லை

ஓஹோஇது வரை கூடா நட்பு ன்னு சொல்.வெரிகுட்


===========

6 சார்.இது கேரளா.பக்கத்து சீட்ல தாராளமா உட்காரலாம்.


இட்ஸ் ஓக்கே மிஸ்! தமிழ் நாட்டு கலாச்சாரத்தை ் எந்த நாட்டுக்குப்போனாலும் பாலோ பண்றவன் தான் தமிழன்


============

7 மிஸ்.தாகமா இருக்கு.தண்ணி தர்றீங்களா?

சாரி.வாட்டர் கேன் ல வாட்டர் இல்ல.இது ஜூஸ்.
டிபன் பாக்ஸ் ல டிபனா இருக்கும்? சாப்பாடுதானே?குடும்மா


============

8 டியர், ஒரு முத்தம் கூட சரியா குடுக்கத்தெரியாதா? தடுமாறிட்டு இருக்கீங்க?


பர்ஃபெக்டா குடுத்தா  நான் எக்ஸ்பீரியன்ஸ்டுனு கண்டுபிடிச்சுடுவியே?


============

9  உங்க காதலியோட பெயர எப்டி போன்ல சேவ் ”பன்னி ” வச்சுருக்குறிங்க?

ஹாய், ஃபன்னி, உங்க கேள்வியிலேயே பதில் இருக்கே?


===============


10   டியர், எனக்கு கிஸ் தராம எதுக்கு என் தங்கச்சிக்கு கிஸ் தந்தீங்க?

 தப்புத்தப்பா தடுமாறி லவ் பண்றவனைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்னியே?



==============



11 அத்தி பூத்தாற்போலத்தான் உன்னைப்பார்க்க முடியுதுன்னு கவிதை எழுதிதரச்சொன்னேனே தந்தியா?

அத்தை பூத்தாற்போலனு தப்பா எழுதி மாட்டிக்கிட்டேன்


==================


12  டியர், ரொம்ப குளிருது

சரி, எவ்ளோவ் நேரம் தான்  ஏடிஎம் ல லவ் பண்றது, வா பார்க் போலாம்


=================


13  டெய்லியும் நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கணும்..அதுக்கு என்ன செய்ய?

 மிஸ்! சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கிட்டே அசிஸ்டெண்ட்டா சேர்ந்திடுங்க


================


14  மன்னா! சமரசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை என் எதிரி ஓலை அனுப்பி உள்ளான்

சம”ரசம்” பண்ண முடியலைன்னா சம”சாம்பார்”க்கு ஓக்கேவா? என கேளும்


=================


15  உங்க அண்ணனுக்கு தண்ணில கண்டம் இருக்கு

 அய்யய்யோ எனக்கு?

உங்களுக்குத்தான் சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லையே? சைடு டிஷ்ல கண்டம் இருக்கு


==================


16 உங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாமா?ன்னு கூப்பிட்டிருக்கா

 அதுக்கென்னா?

 என் பையன் அடி தாங்க மாட்டான்


==================


17  இது போலி டிகிரி சர்ட்டிஃபிகேட்னு எப்டி கண்டு பிடிச்ச?


உங்களுக்கு எந்த டிகிரி வேண்டுமானாலும் குறைந்த செலவில் ரெடி செய்து தரப்படும்னு AD அதுல


====================

18  லோன் வாங்குனதுல இருந்து பேங்க் பக்கமே வர்லையே ஏன்?

பேங்க் வராம இருந்தா வராக்கடன்ல தள்ளுபடி ஆகிடும்னு ஒரு நப்பாசை தான்

==================


19 டீச்சர், மக்காச்சோளம் என்பதே தப்புதான்

பாட்டனி மிஸ் பாரிஜாதம்= எப்டி?

அதை மண்ணில் புதைச்சேன், மக்கிடுச்சு, அப்போ மக்கும் சோளம் தானே?


=====================


20  லஞ்சப்பணத்தை கையால கூட  தலைவர் தொட மாட்டாராமே?

ஆமா, நிஜம் தான், அதைக்கையாள தனி ஆள்  கையாளா வெச்சிருக்கார்


=====================

Tuesday, March 01, 2016

ஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம் தனியார் ஊழியர்

பொண்ணுங்க பாட்டுக்கு  அமைதியா போனாக்கூட ஜடையைப்பிடிச்சு இழுத்து ஏன்  என்னைக்கண்டுக்காம போறே?ன்னு கேக்கறவன் தான்யா நெட் தமிழன்



==============



உப்பு, அஸ்கா சர்க்கரை, மைதா   போன்ற வெள்ளை நிறப்பொருட்களை எந்த அளவு உண்ணுவதைக்குறைக்கிறோமோ/தவிர்க்கிறோமோ அந்த அளவு உடல் ஆரோக்யம் நீடிக்கும்



=============



3   நாளை பார்க் ,பீச்சில் கூடும்  காதலர்களே! ஆர் எஸ் எஸ் இயக்கம்  உங்களுக்கு கல்யாணம் பண்ண திட்டம் போட்டிருக்காம், கிரேட்  எஸ்கேப், ஓடிடுங்க




===================
2016 ல ஜெயம் யாரு பக்கம் இருக்கும்?



இப்போதைக்கு என் கணிப்பு ஜெ யின் பக்கமே ஜெயம்.எதிர்க்கட்சிகளிடம் இருக்கு பயம்



===========

5 இரண்டு பலவீனர்கள் ஒன்று சேர்வதால் இருவரும் பலசாலிகள் ஆகி விட முடியாது


========

6 தேமுதிக+ திமுக ஒன்று சேர்ந்தால் பலம் பெறுமா???"

கேப்டன் பலம், பணம் பெறுவார்


==========

7 சென்னை ,கடலூர் போன்ற வெள்ளம் பாதித்த தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற போராட வேண்டி இருக்க்கும்.மீதி எல்லாம் எழுதி வைத்த.வெற்றி


===========

8 what will happen if DMDK allies with DMK?


கேப்டன் க்கு லாபம்.ஜெ வின் வெற்றி உறுதி,அவரால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது


===============
9 இப்ப நீங்க யாருக்கு ஜால்ரா அடிக்கறிங்க."


நிச்சயம் திமுக அதிமுக வுக்கு அல்ல.2ம் ஒரே குட்டையில் ஊறிய ஊழல் மட்டைகளே"!


=============

10 கோபத்தில் இருக்கும் அன்புக்குரியவரை சமாதானப்படுத்த பெரும்பாடு படவேண்டி இருக்கிறது


=============

11 அன்பின் பலமும் பலவீனமும் அன்பு கொண்டவருடன் வைத்திருக்கும் உடைமை உணர்வே!(பொசசிவ்னெஸ்)


===========


12 இதுவரை அன்புக்கு உரியவரிடம் காதலை சொல்லாமலேயே இருந்தால், மனசுக்குள்ளேயே மருகிக்கொண்டிருதால் அதுதான் தூய்மையான, நிலையான காதல்


=================


13 இந்தியாவிலேயே கலப்பு மணம் குறைவாய் இருக்கும் மாநிலம் என தமிழ் நாட்டை திட்டாதீர்! அது பெற்றோருக்கு செய்யும் மரியாதை.தமிழன் அதில் முதலிடம்


==========



14 வாசிப்பு அனுபவம் இல்லாமல் ஒரு முழுமையான எழுத்தாளன் உருவாகிட முடியாது.



===========



15 நகர்உலா முடித்து வீட்டுக்கு திரும்பும் காதலர்களே! தலைக்குக்குளித்து பின் வீட்டின்உள்ளேசெல்லவும், பரிசுத்தமான பாரதத்தை நோக்கி மேலும் ஒரு அடி!




=================




16 அட்டை கொண்டாந்து மெத்தைல வெச்சாலும் அது காட்டுக்கு தான் போகுமாம்

அத்தையை  தரையில் படுக்கச்சொன்னாலும்  COTக்கு தான் போகுமாம் # எதுனா உளறுவம்


================

17  அரிசி 
ஆண்பாலா / பெண்பாலா...?

நமக்கு உணவு ஊட்டும் எல்லாமே பெண் பால் தான், அம்மா போல்


==============


18  விடியும் வரை  காத்திரு க்காதே! அதி காலையிலேயே எழுந்திடு


==================


19 ஏராளமான சலுகைகள் , சம்பளம், கிம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் அதுவும் பத்தலைன்னா  ராஜினாமா பண்ணிட்டு தனியார்  ஊழியர்களுக்கு வாழ்வு தரலாமே?


================


20 ஆட்சி மாறுவது போல்  5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம் தனியார் ஊழியர் என பிரிச்சு மாற்றி விட்டால் அரசு ஊழியர்களுக்கு புத்தி வரும்


==================