Tuesday, February 23, 2016

அண்ணா சொன்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி? உருப்படாத யோசனைகள்

1  லட்சுமி”கரமான” பொண்ணுன்னா உள்ளங்கைல எப்பவும் பணக்கட்டு வெச்சிருக்கும்னு எதிர்பார்க்கக்கூடாது


==============




2  மிஸ்! தனி ட்வீட் போடாம எப்பவும் பேசிட்டே இருக்கீங்களே? நீங்க கடல் கன்னியா? கடலை கன்னியா? # சும்மா




=============




தனிமையில் இருக்கும்போதும் நீ உன் சாதனைப்பயணத்தை நோக்கி முன்னேறுகிறாய் எனில் உன்னைத்தடுக்க தடங்கல் சாத்தான் யோசிப்பான்




===============




ஒரு ஹை க்ளாஸ் ஹோட்டல்ல மிடில் கிளாஸ் பிகரு சப்பாத்தியை சிரமப்பட்டு ஸ்பூன் போர்க் மூலம் சாப்டுது.உள்ளங்கையால சாப்ட்டா ஒத்துக்க மாட்டாங்க போல



==========



5 மார்வாடிப்பெண்கள் பற்றிய சில அரிய தகவல்களை இன்று அறிந்தேன்.ட்விட்டருக்கு நன்றி.இத்தனை நாளா தெரியாது




============



6 அண்ணா சொன்னாரை ஒறுத்தல் அவர் நாண அவர் தோழியை கரெக்ட் செய்து விடல்




==============




7 நான் சின்னப்பையனா இருக்கும்போது ரிப்பன் பில்டிங் னா பொண்ணுங்க ரிப்பன் சேல்ஸ் பண்ணும் ஷாப்பிங் மால் னு நினைச்ட்டேன்




=============



8 அன்பே! உங்க அப்பா பேட்டா கடை ஓனரா?ஹேன்டில்ல 199 இருக்கே?ரவுண்டா.200 போடக்கூடாதா?




============




9 வெளிநாட்டில்,வெளிஊரில் நாம் மதிக்கப்படவேண்டும் எனில் தாய் நாட்டை /சொந்த ஊரைக்குறை கூற வேண்டும் எனில் அப்படிப்பட்ட மதிப்பே நமக்குத்தேவை இல்லை




============



10 அன்பே!



“அழகானவர்கள் சொல்லும் கருத்து அழுத்தமாக காதில் விழுகிறது. இது அறிவியல் உண்மை ”
என நீ சொன்னது அழுத்தமாக என் மனதில் பதிந்து விட்டது



============

11 உடன் பிறப்பே ! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக அனைத்து ஸ்டிக்கர்களையும் 100 கோடி செலவில் அகற்றுவோம் .வாக்களிப்பீர் உதய சூரியன்

============

12 வரம் வாங்கினால் சாபம் இலவசம்னு சொன்னா தமிழன் வரமும் இலவசமாக்கிடைக்காதா?ம்பான்


=============

13 அரசியல்வாதியின் வாக்கும், பெண்ணின்  பேச்சும் ஒன்று! அடிக்கடி  மாறிவிடும் தன்மையது

============

14 தறிகெட்டுப்போனது   நெசவாளர் வாழ்க்கை

மண் அள்ளிப்போட்டது விவசாயி வாழ்க்கை


================


15  ஆனந்த விகடனில் 50+   மார்க்  வாங்கிய படங்களில் பெரும்பாலானவை கமல் படங்களே! வேறு எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை இது



=================


16 முதலாளிகள் /டேமேஜர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் வேற வழி இல்லாம நகைச்சு வைக்கும் நாம் எல்லோரும் நகைத்தொழிலாளிகளே!


=============


17 பிளாஸ்டிக்கை முழுவதுமாய் அழிக்காதீர்! தண்ணீர் ஊற்றப்பட்ட பிளாஸ்டிக்  பக்கெட் தான் குழந்தைகளின் முதல் நீச்சல் குளம்


=====================



18 ரயிலில்  இருக்கையில் அமர்ந்ததும் பிரம்மச்சாரியின் மனதில் எழும் முதல் கேள்வி - அருகில் அமரப்போகும் அமராவதி யார்?


===============


19  ஆழ் கடல் பார்த்து  வானம் சொன்னது
 என் ஆள் - கடல் நீ!
ஆழ்கடல் நீ!


===============

20  சொர்க்கத்தில் கடவுள் இருக்கிறார் எனில் அவர் இறந்து விட்டார் என் அர்த்தமா?


==================

Monday, February 22, 2016

இது ஒரு ”கல்லா”க்காதல் கதை?

1  தலைவரே! நீங்க குடுத்த  பார்ட்டில சரக்குல போதையே  ஏறலையே? ஏன்?


 இன்னைக்கு  போதை ஒழிப்பு தினம் ஆச்சே?அதான்



==============


2  சுய மரியாதைத்திருமணத்தை நீங்க ஆதரிக்கறீங்களா? எதிர்க்கறீங்களா?


 சுய மரியாதை இருக்கறவன், எதிர்பார்ப்பவன்  கல்யாணமே பண்ணிக்கமாட்டானே?


===============


3 ஏய் மிஸ்டர்! உனக்கு காமன் சென்சே இல்லையா?இப்டி பஸ்ல உரசிட்டு நிக்கறே?

மிஸ்! உங்களுக்கு ரதி சென்சே இல்லையா? ஏன் விலகிப்போறீங்க?  


===================

4 கட்சியின் ஆணிவேராய் இருந்து  மக்கள் பிரச்சனையை தீர்ப்பேன்

 ஆணியே புடுங்க வேணாம் தலைவரே! ரெஸ்ட் எடுங்க


==============


5  அவன் சரியான ஜொள்ளு பார்ட்டினு எப்டி சொல்றே?

MACHINE( மெஷின்)-னு எழுதி இருக்கறதையே மச்சினி-னு தான் படிக்கறான்


===============


6  இண்ட்டர்வ்யூவில்
சார்,  பார்த்து. ஈசியான கேள்வியா கேளுங்க

அய்யய்யோ, நாங்க கஷ்டமான கேள்விகள் மட்டும்தானே மனப்பாடம் பண்ணிட்டு வந்திருக்கோம்?


=============

7  டியர், உனக்கு சுஜாதா புக் வேணுமா?பாலகுமாரன் புக் வேணுமா?


உங்க செக் புக் ல சைன் பண்ணிக்குடுங்க, வேணும்கற புக்ஸ் வாங்கிக்கறேன்


==========


8   கட்சி எனும் ஆலமரத்துக்கு வேராய் இருப்பேன், கட்சியைக்காப்பேன்

 தலைவரே! கட்டுமரம்னீங்களே? அதுக்கு ஏது வேர்?


============


9   தலைவருக்கு இண்ட்டர்நெட் அறிவே இல்லைனு எப்டி சொல்றே?

 உங்க மெயில் ஐடி சொல்லுங்கன்னா நெ20 மெட்ராஸ் மெயில்னு சினிமா டைட்டிலை சொல்றாரே?


==============


10 சார், உங்க ஹோட்டல்  லெமன்  ரைஸ்  பழையதா?


 இல்லியே புதுசுதான், ஏன் கேட்கறீங்க?


 எலு”மிச்ச” சாதம்னு போட்டிருக்கீங்களே, அதான் டவுட்


================


11  உலகில்  இருக்கும் எல்லா முக்கிய ஹோட்டல் சர்வர்களும் இதில் நடிச்சிருக்காங்க

ஓ, அப்போ இது சர்வ(ர் )தேசப்படம்னு சொல்லலாம்

===============


12 ஹீரோயின்  பேங்க்ல கேஷியரா இருக்கா,  படிப்பறிவே இல்லாத ஹீரோ  அவளை லவ் பண்றார்

 அப்போ இது ஒரு ”கல்லா”க்காதல் கதை?


==================


13 மழைக்காதலன் = பெண்களை  நான் தெய்வமா மதிக்கிறேன்

ஓஹோ, டெய்லி ஒரு தெய்வத்தை பீச்சுக்குக்கூட்டிட்டுப்போறீங்களாமே? அது ஏன்?


================



14 மிஸ்! உங்க முகம் கேரம் போர்டு மாதிரியே இருக்கு

 என்ன மேன் உளர்றே?


  அவ்ளோவ் பவுடர் கொட்டிக்கிடக்கு


=================


15   தலைவரே! எதுக்கு திருப்பதி போறீங்க?


எலக்சன்ல ஜெயிச்சா மக்களுக்கு மொட்டை அடிக்கறதா வேண்டுதல் நிகழ்த்தப்போறேன்


=============

16  ஹீரோயின் மாசமா இருக்காராம்

 சூப்பர், அப்போ பட போஸ்டர்ல சக்கை போடு போடும்கறதை எடுத்துட்டு ம”சக்கை” போடு போடும் 50 வது நாள்னு ஒட்டுங்க


================


17 சின்ன வயசுல இருந்தே  நான் பலர்ட்ட பல்பு வாங்கி இருக்கேன்

ஓஹோ, காசு கொடுத்துட்டியா? சும்மாவா?



=============


18   தலைவரே! நம்ம கட்சிக்கொள்கை என்ன?


 களவும்  கற்று மறை,
ஊழல், லஞ்சம்  பெற்று மறை


===============

19  திரட்டி பந்தல்ல  கிளிமூக்கு மாங்கா கிலோ 60 ரூ, செந்தூர மாம்பழம் கிலோ 80 ரூ-ன்னு  லிஸ்ட் இருக்கே? எதுக்கு?


மா”விலை”த்தோரணம்  கட்டுன்னீங்களே?

=============




20 டியர்! கல்யாணத்துக்கு முன் “ தண்ணி அடிக்கும் பழக்கம் இல்லை”ன்னீங்களே?

 மப்புல உளறி இருப்பேன்


=================

அனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு கண்டிஷன் போடறீங்களே? ஏன்?

மேடம், ஷூட்டிங்க் ஸ்பாட்க்கு பெட்ஷீட் போர்த்திட்டு வந்திருக்கீங்களே? குளிர் ஜூரமா?



 கவர்ச்சி 1% கூட காட்ட மாட்டேன், அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்


================


2 எதிர்க்கட்சித்தலைவருக்கு  கல்யாணமாம்


என்னைப்பார்த்து காப்பிஅடிக்கிறார், போன மாசம் தான் எனக்கு ஆச்சு, அதைப்பார்த்து அட்டக்காப்பி அடிச்ட்டார்


=============

3  டிடிஆர் =  ரயிலில் ஏன் டிக்கெட் எடுக்கலை?

சார், கண்டக்டர் வரட்டும்னு ஐ ஆம் வெய்ட்டிங்


================


4  தலைவரே! இந்த  வயசுலயும் அயராமல் நீங்க உழைப்பது நாட்டுக்காகவா? ஓட்டுக்காகவா?

நோட்டுக்காக, என் வீட்டுக்காக


==================


5  ஜட்ஜ் = அரசியல் நாகரீகம் இல்லாம மேடைல பேசுனதா அவதூறு வழக்கு உங்க மேல

 கைதி- அரசியல்ல ஏதுங்க நாகரீகம்?



===============


6  தலைவரே! கூட்டணி தர்மம்னா என்ன?

 கேவலம் ஓட்டுக்காக கட்சிகளிடம் பிச்சை எடுப்பது



=================



7 தலைவரே! நம்ம கட்சியோட பலம் என்ன?

யாராவது ஒருவர் கட்சியை விட்டுப்போகும்போது வேற கட்சில இருந்து 2 பேர் வந்துடறாங்களே?அதான் பலம்


===============

8 காதலிக்கு லெட்டர் எழுதும்போது எப்டி ஆரம்பிக்கனும்?

 அன்புள்ள....

 (சொந்த) சம்சாரத்துக்கு எழுதும்போது?


வம்புள்ள...


================



9  டாக்டர்!  அனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு கண்டிஷன் போடறீங்களே? ஏன்?

 சுகர் பேஷண்ட்ஸ் அஸ்கா , அ(னு)ஷ்கா சேர்த்தக்கூடாது



===================

10
ஆஃபீஸ் மீட்டிங்க் நடக்கும்போது எல்லோரும் செல்லை சைலண்ட் மோடு ல போடனும்

 அது ஓக்கே சார்,, ஆனா லேடி ஸ்டாஃப்ஸ் வாயை எப்டி மூடுவீங்க?


====================


11 லவ் ஃபெய்லியர் ஆனா வருத்தப்படாம ஏன் சந்தோஷப்படறே?


அடிக்கடி லவ் ஃபெய்லியர் ஆனா தான் புதுப்புது லவ்வர் கிடைக்கும்

==============

12 
காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பேன் கறாரே தலைவர், இன்னா மேட்ட்ரு?

 காமன் வெல்த் = பொது சொத்து அப்டினு நினைச்ட்டாரோ என்னவோ?


===============


13  என் சம்சாரத்துக்கும், எனக்கும் கொடுக்கல் வாங்கல்ல தகராறே வராது

 நிஜமாவா?

கோபத்துல அவ எத்தனை அறை கொடுத்தாலும் சலிக்காம வாங்கிக்குவேன்


==============


14  சரக்கு அடிக்கறவங்க எதுக்கு ஊறுகாய் தொட்டுக்கறாங்க?


 தயிர் புளிச்சாலே ஊறுகாய் இல்லாம உள்ளே இறங்காது, நாற்றம் பிடிச்ச சரக்கு உள்ளே போக வேணாமா?


================


15  தலைவரே! நம்ம கட்சிக்குப்பின்னடைவே இனி இல்லைன்னு எப்டி சொல்றீங்க?

டெட் எண்ட்ல இருக்கோம், இனி பின்னால போக இடமே இல்லை


=================


16 தலைவரே!  ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தின கட்சியோட எதுக்கு கூட்டணி வைக்கனும்?

குற்றம் பார்க்கில் கூட்டணி இல்லை


================


17  நம்ம கட்சியோட அடிப்படைக்கொள்கை என்ன?


 அண்ணன், தம்பி, தங்கை  எல்லாரும் அடிச்சுக்காம ஒற்றுமையா  ஊழல் பண்ணனும்


===============

18 சார், உங்க  படம் செம ஸ்பீடு சார்.

 தாங்க்ஸ்ங்க, திரைக்கதைலயா? எடிட்டிங்க்லயா?


  நெட் ல டவுன்லோடிங்க்ல. 8 நிமிசத்துல  14 ரீலும் ஆகிடுச்சு


==============


19    நடிகை = எதிர்காலத்துல  ஒரு தமிழனைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்


 மேடம், உங்க இன ஆட்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?



நிகழ்காலத்துல என் இனஆளைத்தானே கட்டினேன்


================

20   முத   படத்தை விட என்  2 வது படத்துல  ரொமான்ஸ் ஜாஸ்தி

 ஓ, அப்போ  கதை நாஸ்தி?


======================

Sunday, February 21, 2016

Akashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )

ஆகாஷ்வாணி , செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி - இந்த கணீர்க்குரலை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.ஆண்மை கலந்த கணீர்க்குரல்

 அதுக்குப்பின் ஆனந்த விகடன் ல ஆர் பார்த்திபன்  எழுதிய  தொடர் கதை சொர்ணமுகியில்  ஒரு நாயகன் பெயர் ஆகாஷ்

தமிழ் சினிமாவில்   அதிகமான முறை  ஹீரோவுக்கு வைக்கப்பட்ட பெயராய் அமைந்தது கார்த்திக் ( CARத்திக்) , ஆகாஷ் ( aa"cash”)

அவ்ளோவ் தாங்க ஆகாஷ்க்கும்  நமக்குமான பரிச்சயம். ஆகாஷ் வாணி  டைட்டில்  டிசைன்ல ஷ்+ வா  2 க்கும் ஒரு இறுக்கமான முடிச்சு போட்டது நல்லாருந்தது


சரி  பட விமர்சனம் பார்ப்போம்

ஹீரோயின் நீயா நானா? கோபிநாத் மாதிரி ஒருன் பிரபல டாக் ஷோ கோ ஆர்டினேட்டர்.&  சித்தி  ராதிகா போல்  க்ரியேட்டிவ் ஹெட். எப்பவும் அவர் டி வி ல பிசியாவே  இருப்பார்.

ஹீரோ ஒரு கம்பெனி எம் டி. இவரும் ஆஃபீஸ் ஒர்க்ல  எப்பவும்  பிசியாவே  இருப்பார்

 இந்த காதல் தம்பதிக்கு  ஒரு மகனும் உண்டு.

 நல்லா போய்ட்டிருக்கும் இவங்க வாழ்க்கைல  ஒரு பிரச்சனை

ஹீரோயினால  ஃபேமிலிக்கு டைம் ஒதுக்கவே முடியலை.அதனால 2 பேருக்கும்  ஈகோ கிளாஸ் ஆகுது.

ஹீரோ திடீர்னு 5 நாள்  யாரோ ஒரு பொண்ணு கூட அவுட்டிங்க் போகப்போறேன் அப்டி -னு சொல்றார்.2 பேருக்கும்  வாய்த்தகராறு வந்து  ஒரு கட்டத்தில்  ஹீரோயின்   ஹீரோ தலையில் ஒரு போடு போட்டு  சேர்ல உட்கார வெச்சு கயிற்றால் கட்டிடுது


 அப்போ  காலிங்க் பெல். ஹீரோயின்  தொழில் முறை எதிர் அனுப்ச்ச அடியாளுங்க  2 பேர்  சும்மா அவளை மிரட்டறதுக்காக வந்தவங்க. இந்த சூழ்நிலையை சாதகமா பயன்படுத்திக்கறாங்க. ஹீரோயினை கட்டிப்போட்டு  மிரட்ட ஆரம்பிக்கறாங்க


 அதுக்குப்பின் என்ன ஆச்சு? என்பதே திரைக்கதை



ஹீரோவா விஜய் பாபு . நல்ல பர்சனாலிட்டி, ஆனால் முகத்தில்  முதுமை எட்டிப்பார்க்குது. டிரஸ்சிங்க் சென்ஸ் , பாடி லேங்குவேஜ் எல்லாம் பக்கா.,

ஹீரோயின்   காவ்யா மாதவன். ஹோம்லி  ஃபிகர் . மூக்கு மடலின் அருகே இருக்கும் மரு கூட அழகாகத்தெரியும் அழகி. கேமரா மேன் எப்போப்பாரு இவர் முகத்தையே  க்ளோசப்ல காட்டிட்டே இருக்காரு. கணவனிடம் வாதிடும் காட்சி  அபாரம்

 வில்லனா அந்த  2 அடியாளுங்க  மிரட்டல்  தோற்றம்


 வசனங்கள்  அருமை, ஆனா  இன்னும்  நல்லா அதிகமா சேர்த்திருக்கலாம்


 திரைக்கதை அமைப்பில்  கொஞ்சம்  கவனம் செலுத்தி  இருக்கனும். பல  இடங்களில்  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


 இசை , பாடல்கள்  சராசரி அளவில்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

காதலிக்கும்போது இருந்த அதே அன்பு அதே நபரை திருமணம் செஞ்ச பின் குறைஞ்சிடுதே அது ஏன்?விடை தெரியா கேள்வி VAANI(MALAIYALAM)



2 கல்யாணத்துக்குப்பின் ஒரு பெண் தன்னோட அம்மா ,அப்பா வை மறந்துடனும்னு எந்த இதிகாசத்திலாவது எழுதி இருக்கா? VAANI



3 சமூகத்தளத்தில் இயங்குபவனுக்கு சமூகப்பொறுப்பு நிச்சயம் இருக்கனும்.தன் பதவிக்கு ஏற்ப பொறுப்பு எடுத்துக்கனும் VAANI



4 உங்களோட சேர்ந்து வாழறா என்பதற்காக உங்களை சார்ந்து வாழறவனு மனைவியை குறைச்சு எடை போட்றாதீங்க VAANI




5 மாடர்ன் பிகருக்குத்தேவை ஒரு பர்பெக்ட் டம்மி ஹஸ்பெண்ட் VAANI



6 என் அன்பை அலட்சியப்படுத்துனா  தாங்கிக்குவேன்,உன் அன்பு கிடைக்கலன்னா  பொறுத்துக்குவேன்,ஆனா உன் அன்பை வேற யாருக்காவது பங்கு போட்டா. 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1  இண்ட்டீரியர்  டெக்ரேஷன் பிரமாதம் . படத்தின்  பின் பாதி திரைக்கதை  முழுக்க முழுக்க  ஒரு பாத்ரூமில் நடப்பதால் ( நோ கில்மா , த்ரில்லர் )  அழகாக காட்ட வேண்டிய காட்டாயம், ஆர்ட் டைரக்டர் அசத்திட்டார்


2   காவ்யா மாதவன்  அணிந்திருக்கும்  சுடிதார்  டிசைன் ஒவ்வொன்றும்  பக்கா .  ஃபுல் கவரேஜ்

3  ஹீரோயின்  தோழிகளாக வரும் அந்த  2 ஃபிகர்களும்  ரசிக்கும்படி  இருப்பது

4  பின் பாதியில்  வரும் அந்த 2  ட்விஸ்ட்கள்




இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   என்னதான்  தம்பதிகள்  பிசியாக இருந்தாலும்  டெய்லி 2 பேரும் வீட்டில் நைட் 9 மணிக்கு வந்துடறாங்க. காலை 10 க்கு தான் கிளம்பறாங்க. ஆனா 2 பேரும் அம்மா அப்பா விளையாட்டு  கூட விளையாட டைம் இருப்பதில்லை என காட்டி இருப்பது நம்ப முடியலை. மாசம் ஒரு டைம்  கூட கிடையாதுன்னா எப்டி?>


2 கணவர்  தன் மேல் வெச்சிருக்கும் அன்பை தெரிந்து கொள்ள , அல்லது அவரை தூண்டி விட  நாயகி  அடியாள் செட் செய்து  தன்னை கணவர்  முன் அட்டெம்ப்ட்  ரேப்  பண்ண சொல்வது எல்லாம்  ஓவர்.


3  கணவர் , மனைவி இருவருமே கயிற்றால்  கட்டப்பட்டிருக்கின்றனர். என்ன தான் அடியாள் என்றாலும்  திடீர்னு மனசு மாறி நிஜமாவே ரேப் பண்ணினாலோ , கொலை கொள்ளை அடிச்சாலோ என்ன செய்ய முடியும்? இது  ரிஸ்க் இல்லையா?

4   கணவர்  டைரியில்  ஏஞ்சல் பற்றி  எழுதி  மனைவி கண்ணில் படுவது போல் டேபிளில் வைப்பாரா? அது பற்றி மனைவிக்கு சந்தேகம் ஏன் வர்லை?




சி  பி  கமெண்ட் -AAKASH-VAANI (மலையாளம்) - லவ் & பேமிலி டிராமா த்ரில்லர்.இன்ட்டீரியர் டெக்ரேசன் டாப்.லாஜிக் சொதப்பல்-ரேட்டிங் =2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -ஓக்கே



 ரேட்டிங் =2.75 / 5

திருவனந்த புரம் ஏரீஸ் பிளக்ஸ் சினிமாவில் படம் பார்த்தேன்



தொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா

1  என் பட டீசர் செம ஹிட் ஆகிடுச்சு

 டீசர், ட்ரெய்லர் ஹிட் ஆகறது  ஓக்கே, படம் ஹிட் ஆச்சா?ஆகுமா?அதான் மேட்டர்


==============


2  ஜோசியரே! முதல் இரவுக்கு நல்ல   முகூர்த்த நேரம் குறிச்சுக்குடுங்க

நைட் 12 டூ 12.15


இதென்ன சினிமாப்பட டீசரா விடப்போறேன்?

=============


3  தலைவரே! நம்மை திட்டின கட்சிக்கு கூட்டணி அழைப்பு விட சங்கோஜமா இருக்கு


 மேரேஜ் இன்விட்டேசன் வைப்பது போல் நைசா முதல்ல உள்ளே போய்யா


==================


4  மிஸ்! நீங்க தீவிர  விஜய் ரசிகையா?

 எப்டி கண்டு பிடிச்சீங்க?

திரிபுர  சுந்தரிங்கற பேரை   திருப்பாச்சி சுந்”தெறி”ன்னு மாத்திக்கிட்டீங்களே?


=================


5  நீங்க  ஆம்பளைங்க கிட்டே பேச மாட்டீங்களா?

 யா, சின்னக்குழந்தையா இருக்கும்போதே டாக்டர் கிட்டே பேசலையாம், நர்ஸ் கிட்டேதான் பேசுனேனாம்


================


சார், இலக்கிய உலகத்துல இதுவரை உங்க எழுத்து மூலம் என்ன சம்பாதிச்சு இருக்கீங்க? 

 பல பேருடைய எதிர்ப்பைத்தான்


================


7  சார், கவிஞன் ராக்கி பட்டப்பேரு உங்களுக்கு எப்டி கிடைச்சது?

 எந்த ஃபிகருக்கு கவிதை எழுதிக்கொடுத்தாலும் படிச்சே பார்க்காம கைல ராக்கி கட்டுதுக


================


8 டியர், கோபத்தில் உன் மூக்கு சிவந்துடுச்சே ஏன்?

 அடமானம் வெச்ச மூக்குத்தியை  ஒழுங்கு மரியாதையா திருப்பிக்குடுத்துடுங்க


==============


9  டியர்! நான் விரும்பி அதிக முத்தங்கள் வாங்கியது, என் காபி கப்


 ம்க்கும், உயிருள்ள லவ்வருக்கு தராத, ஜடப்பொருளுக்கு குடு, ஜடம் ஜடம்


=============


10  என்ன சார்? ஹோட்டலுக்கு மெடிக்கல் ஷாப் னு போர்டு வெச்சிருக்கீங்க?
உணவே மருந்து.மருந்தே உணவு


==============


11 டியர்.என் கண்ணுக்குள் நிலவு தெரியுதா?
இப்பவெல்லாம் வானத்துலயே நிலவு சரியாத்தெரிய மாட்டேங்குது.உன் கண் ல எப்டி தெரியும்?


============

12 சினிமால ஹீரோ,ஹீரோயின் கட்டிபுடிக்கிறப்ப அவங்களுக்குள்ள ஆசை வராதா?
அவங்களுக்கு வருதோ வர்லையோ நமக்கு வருது

============

13 தலைவரே! கூடா நட்பு கேடாய் முடியும்னு அன்னைக்கு சொல்லிட்டு கூச்சமே இல்லாம கூட்டணி பேச்சு வார்த்தை?


நடந்ததை மறப்போம்.நடக்கப்போவதை நினைப்போம்


=============

14 டியர்.கூடா நட்பு கேடாய் முடியும்னு சொல்லி டைவர்ஸ் பண்ணீங்க.இப்போ ஏன் மறுபடி மேரேஜ் பண்ணிக்கலாமா?னு கேட்கறீங்க?
வேற யாரும் சிக்கலை.


============

15 கேபிள் சங்கர் சாரின் தொட்டால் தொடரும் படத்தை எஸ் ஜே சூர்யா ரீமேக்கினா என்ன டைட்டில் வைப்பாரு?
தொட்டால் தொட ரூம்


===========


16 டாக்டர்.எனக்கு சிகா.வைரஸ் காய்ச்சல் வந்திருக்கா?ன்னு செக் பண்ணுங்க.
ஏன்?டவுட்? தர்"ஷிகா" வை இன்னைக்குதான் ஏர்போர்ட்டில் பார்த்தேன்.

===========

17 சார்.சாப்பாடு எவ்ளோவ்?
100 ரூபா போன டைம் வந்தப்போ 90 ரூ தானே கொடுத்தேன்? ஓஹோ.அப்போ பழைய பாக்கி 10 + 100 =110 ரூபா கொடுங்க


===========

18 வரலாறு மிஸ் வனஜா = ரிப்பன் பிரபு சிறு குறிப்பு வரை
சின்னத்தம்பி ல குஷ்பூ க்கு ரிப்பன் வாங்கித்தந்ததால் ரிப்பன் பிரபு ஆனார்


==============


19 உங்களுக்கு லவ்வர்💘 இருக்காங்களா? இல்லையா?
ஏம்மா இருந்தா பார்க் பீச் போய் இருக்க மாட்டோமா?எதுக்கு இங்கன ஃபேஸ்புக் வர்றோம்?


============


20 எல்லோரும் சாப்புட்டிங்கள மக்களே


சாப்பிடலைன்னு சொன்னா  உங்க 12,345   ஃபாலோயர்சுக்கும்  சாப்படு வாங்கித்தருவீங்களா?

===================