Skip to content

Wednesday, February 17, 2016

எதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க? # தீபிகா - ரன்வீர்

பாஜக தொண்டர்களை யாரும் அசைக்க முடியாது- தமிழிசை # "FULL"கட்டு கட்டிட்டு தூங்கிட்டே இருப்பாங்களா?


============




2 பாஜக.வோடு போனால் காணாமல்தான் போவோம்.!-குமுறும் தேமுதிக தொண்டர்கள்# திமுக வோட போனா வீணா போய்டுவமே?




==============



3 அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன

-வைகோ # எப்டி? 5*365=1825 நாட்கள் இன்னும் இருக்குன்னா?


==============


4 திமுகவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு இடம் இல்லை -மு.க.ஸ்டாலின் # அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியலான உலகத்திலே


==============


5 15 நாளில் மிகப் பெரிய இயக்கமாக மாறப் போகிறோம் - தமிழருவி மணியன் # புரிஞ்சிடுச்சு, தனிக்கட்சிக்கு “மிகப்பெரும் இயக்கம்”னு பேர் வைக்கறீங்க?


=================


6  பா.ஜ. - திமுக கூட்டணி - சுப்ரமணியசுவாமி நம்பிக்கை # ஆத்திகமும், நாத்திகமும் ஒண்ணா சேர்ந்தா மாசு( குற்றம்) டா-ன்னு பாடிடப்போறாங்க


================

7  உம்மன்சாண்டிக்கு எதிரான ஆவணங்கள், சிடிகள் விசாரணை கமிஷனில் சரிதா நாயர் தாக்கல்# ஏம்மா, கை வசம் எத்தனை சி டி இருக்கு? வாட்சப்பில் வருமா?


=================


எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை - கமல் #  ஆக்சன் கிங் அர்ஜீன் கிட்டே சொன்னா சுதந்திரம் ஃபுல் DVD ஆக்டிங்க் கிங்க் க்கு தந்துட மாட்டாரா?


================


9  பல அரசியல்வாதிகள் என்னை உடல்  ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் - சரிதா நாயர் # ஓஹோ, உங்க பாடி லேங்குவேஜ் பிரமாதம்னு ஐஸ் வெச்சிருப்பானுங்களே?


=================


10  போக்குவரத்து போலீசாருக்கு ஒரு மாதம் மனவளபயிற்சி
-, மனநல மருத்துவர் அபிலாஷா பாடம் நடத்தினார். # இவங்க வேற, அது முதல் பாவம், இது முதல் பாடம்


=================

11 பெங்களூரில்ு நடிகை சங்கவி திருமணம்: தொழில் அதிபரை மணக்கிறார்..# சங்கம் வளர்த்த மதுரை ல சங்கவி மேரேஜ் வெச்சிருந்தா தெறியா இருந்திருக்கும்



==============




12 அம்மாவின் காலடி சுவட்டை ஒட்டி என் பயணம் தொடரும்- நாஞ்சில் சம்பத்

# அடி மேல் அடி வெச்சாலும் அம்மி நகராது மம்மி என் கிறாரா இந்த டம்மி


============

13 என் நிறுவன வளர்ச்சிக்கும், சரிவுக்கும் காரணம் உம்மன் சாண்டியே: சரிதா நாயர் # பெண்ணாசை பெரு நஷ்டம்.


==============


14 ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும்: சுப்பிரமணியன் சுவாமி # நைஸா.நம்ம தளபதிதான்.சுவாமி கிட்டே கேட்டிருப்பாரோ?


============


15 தி.மு.க மற்றும் தே.மு.தி.க பா.ஜ.க கூட்டணி சேர வேண்டும்- சுப்ரமணியசாமி கட்சில கலகம் ஏற்படனும்.கழகம் உடையனும்.இதான் இவரு லட்சியமோ

===========


16 சரத்குமார் கட்சி இரண்டாக உடைந்தது. .

கட்சில மொத்தம் எத்தனை பேரு?

2 பேருதான்.ஹிஹி



===========

17 சரிதா நாயருடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் பட்டியல்: நாளை கோர்ட்டில் தாக்கல் # லாங்க் சைஸ்.2,குயர் நோட்ல 4 நோட்டாம்.


===========

18 மக்களுக்குச் சேவை செய்யனும்் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் பெண்கள் குறைவு- ரோஜா. சேவை செய்யாதவங்களா சமூகத்துக்கு செய்வாக?



===========



19 பிப். 6 முதல் 10 வரை வேட்பாளர் நேர்காணல்: பாமக அறிவிப்பு # எல்லாரும் ஜாதிச்சான்றிதழ் எடுத்துட்டுப்போய்டுங்க,அதான் முக்கியமா கேட்பாங்க



================


20  பொது இடத்தில் தீபிகாவை முத்தமிட்ட ரன்வீர்!-செய்தி # ஜட்ஜ் - எதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க?
ர- நோ, கன்னம் பிரைவேட் ப்ளேஸ்தானே?


====================

Tuesday, February 16, 2016

கூட்ட்டுக்களவாணிகள்


1 டீச்சர்.போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்கு வந்திருக்கீங்க?
( தெறி படத்தில் )போலீஸ் ஆபீசர் ஸ்கூலுக்கு வந்து க்ளாஸ் எடுக்கறப்போ டீச்சர் ஸ்டேசன் வர்றது தப்பா?



===========



2 திங்கட்கிழமை ஆபீசுக்கு போக சோம்பலா இருக்குனு அடிக்கடி சொல்வீங்களே மாப்ளை?



மாமா.அதுக்காக முதலிரவை செவ்வாய்க்கிழமை வைப்பதா?


==========


3 நான் காலேஜ்ல படிக்கிறேன் வீக்லீ ஒன்ஸ் டேட்டிங் போவேன்"


என்ன மிஸ்?,வாரா.வாரம் ஆனந்த விகடன் படிப்பேன் கற மாதிரி அசால்ட்டா.சொல்றீங்க?



===========


4 சார்.குமார் அப்புறம் னு ஒரு ஊரு இருக்கா? தேடிட்டே இருக்கேன்.கிடைக்கல.
யோவ்.அது குமாரபுரம் (KUMARAPURAM)


==========


5 ஹாய் மிஸ்! சாப்ட்டீங்களா?

 இல்லைன்னா வந்து வாங்கியா தரப்போறே?


 என் கையாலயே சமைச்சே போடறேன் # FB சேட்டிங் அலம்பல்கள்


============


6 டேய், எத்தனை பேரைடா லவ் பண்ணுவீங்க?


மிஸ்! அதை எல்லாம் எண்ணிப்பார்க்கறதில்லைங்க.


===============


7  பெண்கள் முட்டாள்கள் இல்ல, தவறான நோக்கத்தோடு பழகினா கண்டுபிடிச்சுடுவாங்க

கண்டு”பிடிச்சுக்கிட்டா” சரி தான்


=============


8 டியர், நம்ம குழந்தைக்கு என்ன  பேர் வைக்கலாம்?


 பையன் பிறந்தா பிரபுதேவான்னு வைப்போம், பொண்ணு பிறந்தா ஐஸ்வர்யானு வைப்போம் 


==================

9  இல் பொருள் உவமை அணிக்கு உதாரணம் சொல்லு

 இலியானா டீச்சர்


================


10 மாப்ளை, பொண்ணைப்பார்த்தீங்களே? எப்டி?

பாத்த உடனே ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்கே


அவ்ளவ் செம ஃபிகரா?

 இல்லை, வாமிட் வர்ற மாதிரி இருக்கு


================

11 கில்லி ரிலீஸ் ஆன அதே நாள் ல நம்ம புதுப்படமும் ரிலீஸ் ஆகுது, படம் கில்லி மாதிரி இருக்கும்.

 அடடா, கில்லி தான் ஆல்ரெடி பார்த்தாச்சே?


==================


12 டாக்டர்! இப்பல்லாம் சீக்கிரமே பசிக்குது சீக்கிரமே தூக்கமும் வருது


 மிஸ்! விடிஞ்சிடுச்சு. சீக்கிரமே  எழுந்து வீடு போய்ச்சேருங்க


================

13  ட்விட்டர்ல, ஃபேஸ்புக்ல பொண்ணுங்க எது எழுதுனாலும்  அதை கவிதைன்னு கொண்டாடுறாங்களே, அது ஏன்?

 ஏன்னா பொண்ணுங்கன்னாலே கவிதை தானே?


=================



14 கடவுளே! சண்டையே போடாத சம்சாரம் வேணும்

 வரம் கொடுத்தா எனக்கும் என் சம்சாரத்துக்கும் சண்டை வந்துடுமே?


================


15 அப்பா, சினிமாக்குப்போகனும், 2000 ரூபா குடுங்க

 அடப்பாவி, 100 ரூபாதானே டிக்கெட்?

 பெங்களூர் நாட்கள் படத்தை  பெங்களூர்லயே போய்ப்பார்க்கனும்


===================


16  மைக் டைசன் = நான் இறுதிச்சுற்று படம் பார்க்கனும்


மாதவன் = ம்ம்அரேஞ்ச் பண்றேன், அதுக்கு முன் பத்ரி, மான் கராத்தே பார்த்து ரிலாக்ஸ் ஆகிக்குங்க


================


17  தங்கச்சி. ஒரு 5 நிமிசம் வீட்டு வாசல்ல  போய் நில்லு

எதுக்குண்ணா?

வீட்டுக்குள்ளே பொண்ணை வெச்சுக்கிட்டே பொண்ணை கமெண்ட் அடிக்கக்கூடாதாம்



===============


18 சார், என் பென்சில் டிராயிங்க் எப்படி இருக்கு?

 நல்லாருக்கு

 சரி, என்ன தேடறீங்க?


 அதுல பென்சிலையே காணோமே?

===============

19  தலைவரே! ஏன் தனியா வே நிக்கறீங்க இந்த டைம்?


 கூட்டணி அமைச்சா கூட்ட்டுக்களவாணிகள்னு கிண்டல் அடிப்பாய்ங்க


================


20  காலி ஃபிளவர் இருக்கா? 

சாரி, ஃபிளவர் காலி


====================



'புதிய தலைமுறை' தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு-சம பலத்தில் அதிமுக, திமுக; 3-வது இடத்தில் தேமுதிக-

புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏபிடி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக, திமுகவுக்கு சம பலம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது

.
கடந்த ஜனவரி 22 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை தமிழ கம் முழுவதும் 200 இடங்களில் 5 ஆயிரத்து 18 வாக்காளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டுள்ளது. கிராமங்கள், நகரங் கள், பெரு நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் அனைத்துத் தரப் பினரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன.


அதன் விவரம்: எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 33.13 சத வீதம் பேர் அதிமுகவுக்கும், 32.83 சதவீதம் பேர் திமுகவுக்கும் வாக் களிப்போம் என தெரிவித்துள்ளனர்.


தேமுதிக 5.21, பாமக 3.22, பாஜக 2.74, மதிமுக 2.09, காங்கிரஸ் 2.09, இடதுசாரி கட்சிகள் 0.89 சதவீதம் ஆதரவு உள்ளது. இதர கட்சிகளுக்கு 4.81 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 12.99 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.



ஸ்டாலின் முந்தினார்


அனைத்துக் கட்சிகளும் தனித் துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு 119, திமுகவுக்கு 115 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெய லலிதாவுக்கு 32.63, மு.க.ஸ்டா லினுக்கு 18.88, கருணாநிதிக்கு 15.21, விஜயகாந்துக்கு 6.54, அன்புமணி ராமதாஸ் 4.30, வைகோ 4.04, ப.சிதம்பரம் 1.28 சதவீதம் பேர் ஆதரவு தெரி வித்துள்ளனர்.


நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 27.09 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்ததாக 9.71 சதவீதம் பேர் விஜயகாந் துக்கும், 5.61 சதவீதம் பேர் அன்புமணிக்கும் ஆதரவு தெரி வித்துள்ளனர்.


எந்தத் தலைவரின் கரங்களில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு 24.09 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 12.67 சதவீதம் பேர் கருணா நிதிக்கும், 12.90 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கும், 3.85 சதவீதம் பேர் விஜயகாந்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


உங்களைக் கவர்ந்த தலைவர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு 22.96 சதவீதம் பேரும், ஜெயலலிதாவுக்கு 22.22 சதவீதம் பேரும் ஆதரவு தெரி வித்துள்ளனர். ஸ்டாலின் 4.54, விஜயகாந்த் 3.06 சதவீதம் மக்க ளின் ஆதரவை மட்டுமே பெற்றுள் ளனர்.


கட்சிகளின் செல்வாக்கு
தெற்கு, மத்திய மண்டலங்களில் திமுகவும், மேற்கு, வடக்கு, சென்னை மண்டலங்களில் அதி முகவும் முதல் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. வடக்கு மண் டலத்தில் பாமகவும், மற்ற 4 மண் டலங்களில் தேமுதிகவும் உள்ளன.

நன்றி - த இந்து

யூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்

1  தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் கே.சி.வீரமணி #  யூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்னு அம்மா பாராட்டி இருப்பாரே?


===============



விசாரணைகமிஷன்களுக்கு காலநீட்டிப்பு அளிப்பதால் வரிப்பணம் வீண்-கருணாநிதி # சர்க்காரியா கமிசன் பத்தி ஞாபகப்படுத்தி வாக்கு வங்கியை இழக்காதீங்க




================




3  நேர்மையாளர்களுக்கு ஏற்ற தொழில் சினிமாதான்!- கமல் ஹாஸன் #,அப்போ அரசியல் அயோக்கியர்களின் தொழிலா?னு சண்டைக்கு வந்துடப்போறாங்க



==========



4 கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது மீதான தடை நீக்கப்படலாம்: மேனகா" # ஏகப்பட்ட கருத்தம்மாக்கள் கருவோடு அழிக்கப்படுவார்கள்



==========



5 ஜெ தான் தமிழை வளர்க்கிறார்: அமைச்சர் வீரமணி -# இப்டி எல்லாம் சொல்லி வயிறை வளர்த்த வேண்டியதா இருக்கு இல்ல?




===========



6 தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு வியாபாரிகள் துணை நிற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் # நாம பண்ற.அரசியலே ஒரு வியாபாரம் தானே?




===========




7 கமலை சந்திக்க மோடி சம்மதம்.தமிழிசை # கமல் =,எனக்கு இந்த நாட்ல இருக்கவே பிடிக்கல

மோடி = எனக்கும் தான்.வாங்க டூர் போய்க்கிட்டே பேசுவம்

=============

8 அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்று கூறப்படுவது வதந்தியே -ஸ்டாலின்."# அப்டி இணையலைன்னா உங்களுக்கு வசதியே !

===========


9 பழ.கருப்பையாவிற்கு காங்கிரஸ் அழைப்பு -செய்தி # பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் வாங்க விற்க  எங்க கிட்டே வாங்க 



================


10  ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை சிலரால் தாங்கிகொள்ள முடியலை - மோடி # அந்தத்தாய் இந்தியாவில் தான் இருக்கு, பையன் ஃபாரீன்ல, அதைத்தான்..


===============


11  மோடியின் சொத்து மதிப்பு ரூ 1.41 கோடி!
- செய்தி # பீரோவில் அடுக்கி வெச்சிருக்கும் டிரஸ் மதிப்பே 141 கோடி வருமாமே?அப்போ பேங்க் ல?


================


12  அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு முறை சம்பளம்-அன்புமணி # எப்டி? 10,000 ரூபா சம்பளத்தை ரெண்டா பிரிச்சு 1ந்தேதி 5000, 15ந்தேதி 5000?


===============


13 காமராஜர் ஆட்சிக்கு சரத்குமார் அழைப்பு # சித்தப்பா, அவர் ஆடம்பரத்தை நாடார்! வீண் விளம்பரத்தை நாடார்!வசதி வாய்ப்புகளை நாடார்!முடியுமா உம்மால்?


==================

14  இந்தியாவில் ஜிகா வைரஸ் இல்லை : மத்திய அமைச்சர் நட்டா அறிவிப்பு # ஏர்போர்ட்ல தரோவா செக் பண்ணி அனுப்புங்க, ஃபாரீனர்ஸ் பரப்பிடப்போறாங்க


================


15  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 லட்டு கவுன்டர் கூடுதலாக திறப்பு # கண்ணா , இன்னொரு லட்டு கவுண்ட்டர் வேணுமா?ன்னு கேட்டிருப்பாங்களோ?


==================


16 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களிடையே நம்பிக்கை வந்துள்ளது: மோடி # ஆமா, ஊர் சுற்றி  உருப்படவா போறேன்னு அப்பா திட்றதில்லை


==============



17  2 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழலை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் - மோடி # அப்போ இந்திய பிரதமர் இந்தியாவில் இருந்தார் 


================


18  திமுக , பா ஜ க, தேமுதிக  கூட்டணி  உருவாகும் - சுப்ரமணியம் சுவாமி # அப்டி அமைஞ்சா அது இரட்டை இலைக்கு இரட்டைத்தலைவலி தான்


================

19 "எதைப் பேசினால் பிரச்சனை வருமோ அதைப் பேசுபவன்தான் ரியல் ஹீரோ" - கமல் # பேசாமல் காரியம் சாதிப்பவன் உத்தம வில்லன்?


=====================


20  பாஜக தேர்தல் அறிக்கையில் 'பூரண மதுவிலக்கு' இடம்பெறும்: ஹெச்.ராஜா # எக்சாம் ஹால்ல ஒரே பையனைப்பார்த்து எல்லாரும் காபி அடிச்சா தெரிஞ்சுடாது?

===================

Monday, February 15, 2016

வில் அம்பு - சினிமா விமர்சனம்

சுசீந்திரன் தயாரிப்பில் உருவான படம், ஸ்ரீ - ஹரீஷ் கல்யாண் என இரு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்ற இந்த காரணங்களே 'வில் அம்பு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'வில் அம்பு' படம் குறித்து நல்ல விமர்சனங்களும் வரத் தொடங்கிய நிலையில், படம் பார்க்கும் ஆவலுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
'வில் அம்பு' படம் நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றியதா?


கதை: ஸ்ரீ - ஹரீஷ் இருவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாவிட்டாலும், ஒருவர் செய்த தவறு இன்னொருவரை பாதிக்கிறது. தவறு செய்யாவிட்டாலும் ஒருவர் இன்னொருவர் பிரச்சினைக்கு காரணமாக அமைகிறார். ஏன் அப்படி நிகழ்கிறது? அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன? இரண்டு கதாநாயகர்களின் சந்திப்பு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது மீதிக் கதை.


இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதையை மிக நேர்த்தியாகக் கையாண்ட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியத்துக்கு வாழ்த்துகள்.


இரண்டு ஹீரோக்கள் என்றாலே நட்பு, மோதல், அடிதடி, பிரிவு, இணைவு என்று வழக்கமான ஃபார்முலா சினிமா பிடிக்காமல் வித்தியாசமாக கான்செப்ட் சினிமா பிடித்த விதத்தில் இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் கவனிக்க வைக்கிறார்.


கனவுகளோடு பயணிக்கும் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் ஹரீஷ் கல்யாண் நச்செனப் பொருந்துகிறார். இயலாமை,விரக்தி, சோகம், ஆவேசம், ஆதங்கம் என அனைத்தையும் முகபாவனைகளில் பிரதிபலிக்கும் ஹரீஷின் நடிப்பு அழுத்தமானது.


முரட்டு கோபம், வறட்டு துணிச்சல், தப்பே செய்தாலும் தயங்காத குணம் என்று கதாபாத்திரத்துக்குள் வெகு இயல்பாக ஸ்ரீ தன்னை பொருத்திக் கொள்கிறார். படம் முழுக்க ஸ்ரீயின் நடிப்பு சிலாகிக்கத்தக்கது.



காதல் மொழி பேசுவதும், கண் ஜாடை காட்டுவதும், வெட்கத்தில் சிரிப்பதுமாக கதாநாயகிக்குரிய பங்களிப்பை சம்ஸ்கிருதி சரியாக செய்திருக்கிறார்.



அவ்வப்போது தலைகாட்டுவிட்டுப் போகும் சாந்தினி இரண்டாம் பாதியில் தன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.


யோகி பாபுவின் காவல் நிலைய காமெடியில் தியேட்டர் அதிர்கிறது. என்னை அவமானம் செஞ்சிட்ட, முதல்முறையா கௌரவம் செஞ்சிட்ட என்ற யோகி பாபு பேசும் வசனங்களுக்கும் கரவொலி தொடர்ந்தது. இன்னும் நிறைய படங்களில் யோகி பாபுவை தனி காமெடியனாக பார்க்கலாம்.



நந்தகுமார், சிருஷ்டி டாங்கே, ஹரிஷ் உத்தமன், நிஷா கிருஷ்ணன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.


மார்டின் ஜோவின் கேமரா கோவையை கண் முன் நிறுத்துகிறது. கதாபாத்திரங்கள், காட்சிகள் என்று எல்லாவற்றையும் தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார். நவீன் இசை படத்துக்குப் பெரும் பலம். ஆளை சாய்ச்சுப்புட்ட கண்ணாலே பாடலும், குறும்படமே பாடலும் ரசிக்க வைக்கின்றன.


இரண்டு ஹீரோக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை குழப்பமில்லாமல் காட்டிய விதத்தில் எடிட்டர் ரூபனுக்கு சபாஷ் போடலாம்.


ஆனால், முதல் பாதியில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். இரண்டு ஹீரோக்கள் என்றால் அதற்கான கதாபாத்திர வடிவமைப்பு, காட்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய இயக்குநர் இரண்டாம் பாதியில் ஹரீஷ் கதாபாத்திரத்தை சரியாக செதுக்காதது ஏன்? ஹரீஷ் காட்சிக்கு அடுத்து சம்பந்தமே இல்லாத சமயத்திலும் ஸ்ரீயின் காட்சிகளை அடுக்கியது ஏன்? போன்ற கேள்விகளால் திரைக்கதை சரிகிறது.


இப்படி சில விஷயங்களில் சரிவை சந்தித்தாலும், பிரச்சினைகளை அடுக்கிய விதத்திலும் அதற்குரிய வழிமுறைகளை தீர்வுகளாக முன்வைத்த விதத்திலும் 'வில் அம்பு' குறி தப்பவில்லை!


நன்றி - த இந்து

சித்ரம், விசித்ரம் ரம் ரம்

அன்பு கொண்டவருடனான கடைசி சந்திப்பில் பெரும்பாலானோர்க்கு இது தான் கடைசி சந்திப்பு என்பது அப்போது தெரிந்திருக்காது


===========




2 பிரியத்துடன் இருந்தவரை நிரந்தரமாகப்பிரிய நேர்கையில் எந்த வித வெறுப்பும் இன்றி பிரியத்துடன் பிரிந்து விட வேண்டும்



=============

3 டூயல் சிம் ஃபோன் வெச்சிருக்கும் எல்லா ஆண்களும் 2 சம்சாரம் /சமாச்சாரம் வெச்சிருப்பாங்க என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!



=================




கால் மீ என SMSசெய்தாள் காதலி,ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த காதலன் பிளேட்டில் இருந்த லெக் பீசை காதலிக்காக எடுத்து பார்சல் கட்டிக்கொண்டான்




===============




5  மாடர்ன் ஃபிகர்  என நினைத்து GAJAL  லை   ஃபாலோ பண்ணினால் அது GAJALAKSHMI  யின் சுருக் காகவும் இருக்கலாம்




==================




 சிம்பு தேவனும் ,கலைஞரும் ஒரே மாதிரி.ஆரம்பித்தில் வடிவேலுவை ஹீரோ ஆக்கி அழகு பார்த்தார்கள்,அடுத்ததா விஜய் யை ஜீரோ ஆக்கப்பார்க்கறாங்க


=========


7 கலைஞர் = விஜய் யை கட்சிக்கு இழுத்து தெறி க்க விடப்போறோம்.


அட்லீ =ஹூம்.அப்போ தெறி யை ரிலீஸ் ஆக விடமாட்டாங்க?


============


8 ஸ்டாலின் = இப்போ எதுக்கு விஜய் யை கட்சிக்கு இழுக்கறீங்க?கேப்டனைப்பழி வாங்கவா?


கலைஞர் = இல்லை.விஜய் அப்பா SAC யை பழி வாங்க



===========


9 மராத்தான் ல 10 கிமீ ஓடுன அன்புமணி ராம் தாஸ் மாதிரி ஒருத்தரை நம்ம கட்சிக்கு இழுக்கனும்


விழுப்புரம் ரன்னர் ஓக்கேவா?



===========


10 100 கிமீ க்கு மேற்பட்ட பிரயாணத்தை ரிசர்வ் செய்யப்பட்ட ரயில் பயணமாக அமைத்துக்கொள்வது முதுகு தண்டு வடத்துக்கு ,உடல் நலனுக்கு நல்லது


===============


11 குழந்தைகளுடன் நீங்கள் அளவளாவும் நிமிடங்களே நீங்கள் வாழும் அற்புத தருணங்கள்


=============


12 அலைபேசியின் அழைப்பு மணி ஓசை ஒலித்த 5 விநாடிகளுக்குள் நீங்கள்.அதை எடுத்து பேசி விடும் சுறுசுறுப்புடன் இருங்கள்


===========


13 கலைஞர் -விஜய் யை நம்ம கட்சிக்கு இழுப்பதில் ஏதாவது ஆட்சேபனை இருக்கா?



ஒரு உறைல ஒரு கத்தி தான் இருக்கனும்.ஒரு கட்சில ஒரு தளபதி தான் ஜெயிக்கனும்


========


14

கடன் கொடுத்தவரிடம்இருந்து அழைப்பு வந்தால் ஃபோனை அட்டெண்ட் பண்ணலாமா? கட் பண்ணலாமா?


கடன் கொடுத்தது பெண்ணாக இருந்தால் தினமும் நேரில் போய் வாய்தா வாங்கவும் 

=============

15 ஒரு வாய் அருந்திவிட்டு
சர்க்கரை குறைவென
ஹார்லிக்ஸ்் கோப்பையை நீட்டினேன்...,
கோப்பையை அப்டியே அவள் வாயில் கொட்டிக்கொண்டாள் # பறக்காவெட்டி

==============


16 உடன் பிறப்பே! அன்புத்தம்பி விஜய் நம்ம கட்சிதான்.ஆனா தேர்தல் பிரச்சார டைம்ல கத்தி படத்தை போட்ராதீங்க.அதில் 2ஜி ஊழல் வசனம் இருக்கு.

===============

17 இந்தப்பொண்ணு தான் என் சம்சாரம் ஆனா பார்ட்டி கொஞ்சம் அகலம் அப்டிங்கறதை சுருக்கமா விஸ்"தாரமா" இருக்கு னு சொல்லலாம்


================

18 நடிகை-என்கணக்குவழக்கைஆடிட்டருடன்அமர்ந்துபார்த்து கொள்கிறேன்,
இடையில் நீ யார் என்னை  என் இடுப்பில் கிள்ள?


ஏம்மா, நான் தான் உன் 5 வது புருசன்


==================


19 பெண்களே! ஆறுதல் சொல்ல வலியனா வரும் ஆண்களை நம்பாதீர்! உங்க முதுகை தடவிட்டு புறமுதுகு காட்டி ஓடிடுவான்


===================

20  நீ ஒரு விசித்ரமான பொண்ணு என்பதை சித்ரா கிட்டே சொல்லும்போது சுருக்கமா நீ ஒரு விசித்ரா னு சொல்லிடக்கூடாது.கோவிச்சுகும்


===========================