Friday, February 12, 2016

உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......

1  சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்..பழ கருப்பையா # அரசியலுக்கு நல்லவர்கள் வருவதில்லை.வந்தால் நல்லவர்களாக இருக்க யாரும் விடுவது இல்லை


============



2 நான்தான் அடுத்த ச.ம.க. தலைவர்: எர்ணாவூர் நாராயணன் அதிரடி! # நாராயணன் னா கலகம் தான் பண்ணனுமா?



============




3 கூட இருந்த ஒரே எம்.எல்.ஏ-வையும் கட்சியை விட்டு நீக்கினார் சரத்குமார் # எம் எல் ஏ வை நீக்குனவங்க எல்லாம் கேப்டனாவோ அம்மாவாகவோ முடியாது




==========



4 சமத்துவ மக்கள் கட்சியை உடைக்க சதி...

அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம்: சரத்குமார்# நீங்க சொன்னா நம்பமாட்டோம்.அம்மா சொன்னாதான் நம்புவோம்


============

5 svs கல்லூரிக்கு அனுமதி அளித்தது குறித்து எனக்கு தெரியாது - அன்புமணி.!# நல்ல வேளை, அப்டி ஒரு காலேஜ் அந்த ஊர்ல இருந்ததே தெரியாதுனு சொல்லலை


==============


திமுக ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கு -ஸ்டாலின் # ராமதாஸ் சொல்றதை  கலைஞரும், அன்புமணி சொல்றதை ஸ்டாலினும் அட்ட்டக்காபி அடிக்கறாக


================

ஆட்சிக்கு வந்தால் 90லட்சம் பேருக்கு வேலை:ஸ்டாலின் # சொல்றது தான் சொல்றீங்க, ரவுண்டா 1 கோடினு அடிச்சு விட்ருக்கலாமில்ல?தலைவா!வரவா போறோம்?


=============


8  திமுக தனித்து நின்று ஒரு வார்டு உறுப்பினர் ஆக முடியுமா? - கேப்டன் #  இதெல்லாம் ரொம்ப ஓவரு கேப்டன், நீங்க எப்பவும் எல்லாத்துலயும் ஓவர்தான்


===============


9  பாமக ஆட்சிக்கு வந்தால் எந்த  காலேஜாக இருந்தாலும் படிப்புசெலவை அரசே ஏற்கும் - ராமதாஸ்  வரமாட்டோம்னு தெரிஞ்சுட்டா அள்ளி விடலாம் போல


==================


10 பல்வேறு சமூக விரோதிகளை நான் மன்னிக்க தயார்-விஜயகாந்த்  #  ஓஹோ, அப்போ திமுக கூட கூட்டணி உறுதினு சொல்றீங்களா?


===============

11  மத்திய அரசு வெளியிட்ட முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் சென்னை, கோவை # இங்கே  எல்லாம் ஸ்மார்ட் ஃபோன் செம சேல்சாம்

===============

12  சோலார் பேனல் ஊழல்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு # முதல்வர்களுக்கு இந்த வருசம் ஜெ யில் ராசி போல


=================


13  எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை: மு.க.அழகிரி தகவல் # கழக  ஆட்சி மலர்ந்தால்  அழகிரி பிறந்த நாள் விழா சிறப்பாகக்கொண்டாடப்படும்


==================



14 'அதிமுக ஆட்சியில் லஞ்சம் அதிகரிப்பு'- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா-பழ.கருப்பையா #  ஏன் நாலே முக்கால் வருசமா பொறுமையா  இருந்தீங்க?


=================

15  சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி  # டைட்டில்  எனக்கு  38  உனக்கு 28? 


================

16 கனிமொழி-இளங்கோவன் தூத்துக்குடியில் சந்திப்பு- செய்தி # எங்க கூடாரத்துல இருந்து வந்த குஷ்பூ எப்படி இருக்காங்க?

 அழகா , லட்சணமா இருக்காங்க


=============


17 விஜயதாரணி குற்றச்சாட்டுக்கு பதில்சொல்லதேவையில்லை - குஷ்பு# நலம்தானா  வாசிக்கத்தெரியாதுன்னு சொல்லுங்க,  வாசிக்க முடியாது, தேவையில்ல சொல்லாதீக

=============


18  த.மா.கா–தே.மு.தி.க. கட்சிகள் மக்கள் நல கூட்டணிக்கு வரும்: திருமாவளவன் பேட்டி # தாமாக வராது, பொட்டி கை மாறுனா வரும்


================


19 ஊழல் குறைவான நாடுகள்: முதல் இடத்தில் டென்மார்க், 76-வது இடத்தில் இந்தியா. # ஓஹோ, போட்டி லிஸ்ட்ல மொத்தம் 76 நாடுகளா?

=================

20  உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்களுக்கு இடம் # சோனியாகாந்தி, கலைஞர், ஜெ இவங்க 3 பேருமா?



=================

Thursday, February 11, 2016

கள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்?

அஸ்கா சர்க்கரை , மைதா மாவு போன்ற வெள்ளை உணவுப்பொருட்கள் உண்ட நாட்கள் உங்கள்  ஆரோக்ய வாழ்வின் கறுப்பு தினங்கள்



=============




2  கோதுமை , கேழ்வரகு ( ராகி) , கம்பு போன்ற மெரூன் கலர் உணவுப்பொருட்கள் உங்கள் ஆரோக்ய வாழ்வை மெருகேற்றும்




=================




பாடையில்  நீ போகும்போதும் 

பாவாடை தாவணி அணிந்த ஃபிகரை ரசிக்க மறக்காதே!


=================


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையும் நீ கட்சியில் சேர்ந்தால்



=============



5 ராஜாவைப்போல் வாழ ஆசைப்படாதீர்கள்.செஸ்சில் ராஜா வுக்கு ஒரு ஸ்டெப் மட்டுமே அனுமதி



================



6 ரசம் சாதம் சாப்பிடுகையில் தமிழன் அப்பளம் கடிச்சுக்கறான்.கேரளன் அப்பளம்/பப்படம் நொறுக்கி புட்டு,ஆப்பம்,தோசையுடன் பிசைஞ்சு சாப்பிடறான்.அய்யகோ




===========



7 ஆற்றில் குளிக்கும் காதலி முதுகுக்கு சோப் போட அழைக்கையில் சோப் மட்டும் போட்டுட்டு வருபவன் சோப்ளாங்கி என அழைக்கப்படுவான்



============




8 சாந்தீனி ,நந்தீனி ,இவர்களெல்லாம் நொறுக்குத்தீனிப்பெயர்ச்சொற்களுக்கு எ கா




=============



9 க்யூட் ஷோபனா னு புது அக்கவுண்ட் வந்திருக்கு.இது க்யூட் புஷ்பா கன்னத்து ல ஓங்கி ஒண்ணுவிட்ட சித்தி பொண்ணாம்




============




10 நம்ம ஊர் தியேட்டர்ல எல்லாம் தண்ணீர் இலவசமா கிடைக்குது.மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வாட்டர் பாட்டில் சேல்சுக்கு ஆசைப்பட்டு் வைப்பதே இல்லை



==============




11 சொந்த சம்சார ராணிக்குத்தெரியா.ம கள்ளக்காதலி யா ஒரு இளவரசியை ராஜா கரெக்ட் பண்றதுதான் கதை மஸ்தானி ஒன் லைன் ஸ்டோரி



============



12 சமூக ஆர்வலராய் இருப்பதை விட முக்கியம் நீங்கள் சக மனிதரிடம் பொறாமை கொண்டு  வார்த்தையை விட்டு உங்கள் நன் மதிப்பை இழக்காதிருத்தல்



=================




13 நெட் தமிழன்  பொண்ணுங்க கிட்டே  டி எம் பாருங்கன்னு என்னமோ இந்த சினிமாப்பாருங்கங்கற தொனில டெய்லி சொல்ல ஆரம்பிச்ட்டான்




================




14  அன்பே! ரோஷினி! ரோஸ் பவுடர் 100 கிராம் போடும்  முன்பே ரோஸ் நீ!




===============




15  100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றவரை முந்திக்கொண்டு எடுத்து வைக்கும் முதல் அடியின் முக்கியத்துவம் போல் தினம் நாம் அதிகாலையில் துயில் எழுவது


============


16 உன்னால் முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளில் உன் பெற்றோரை , பெரியோரை ஆலோசனை கேள்!நமக்கு முன்பே 25 வருடங்கள் இந்த உலகை அறிந்தவர்கள்


==========

17 அதிகாலையில் தினசரி 4 கிமீ
நடப்பதெல்லாம் பிற்கால, தற்கால நன்மைக்கே!


=============


18 கோடிக்கணக்கில்  நீ செலவு செய்து அரண்மனை மாதிரி உன் கள்ளக்காதலிக்கு பங்களா கட்டிக்கொடுத்தாலும் உலகம் அதை சின்ன வீடு என்றே அழைக்கும்


===================


19 சேலரி க்ரெடிட்டட் மெசேஜ் வந்த அடுத்த நிமிடமே ஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர் என லீவ் லெட்டர் எழுதுபவன் தான் தமிழன்

============


20 எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாய் ?செலவு செய்கிறாய் ? என்பதை விட எத்தனை சதவீதம் சேமிக்கிறாய் என்பதைப்பொருத்தே உன் முன்னேற்றம் அமையும்

============

நாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்

1  தலைவரே! எதுக்காக  அவரை கட்சில இருந்து நீக்குனீங்க?

 என்ன தைரியம் இருந்தா  என் எதிர்லயே கொட்டாவி விட வாயைத்திறந்திருப்பாரு?



===============


2 ஜட்ஜ் = எதுக்காக சம்சாரம் தலைல இரும்புக்கம்பியால அடிச்சுக்கொலை செஞ்சீங்க?


கைதி = குடிச்சியா?ன்னு கேட்டு  டார்ச்சர், தலைல அடிச்சு சத்தியம் பண்ணச்சொன்னா,


==================


மிஸ்! 5 இண்ட் 6 =?
இது தெரியாதா?30 வீட்டை கூட்டலையா?னு கேட்டதுக்கு வேலைக்காரி வரனும் எனக்கு பெருக்க வராதுன்னீங்களே?


=============

4 தலைவரே! கருப்பையாவை நீக்கிட்டாங்களாம், என்ன பண்ண?
கருப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு
கருப்பான கையால என்னைப்பிடிச்சான் ரிங்க்டோன் செட் பண்ணு


================

5  என்னய்யா அநியாயமா இருக்கு? சுகர் இருந்ததால தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?


அவர் ஒளிச்சு வெச்சிருந்தது பிரவுன் சுகராம்


=================


6  காலைலயே குஷ்பூ என் கிட்டே பேசிட்டாங்க

 அடேங்கப்பா, பிரமாதம் என்ன பேசுனாங்க?

 குட் மார்னிங்க் மேடம்னேன், நன்றி-ன்னாங்க


===================


7  நாவல் பழம்  கிலோ  125 ரூபாதான், வாங்கிட்டுப்போங்க 

 வேணாங்க, ரொம்ப குறு நாவலா இருக்கு, வீட்ல திட்டு விழும்


=================


8  விஜய் - சார், நாயகன் ரீமேக் ல நடிக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஏதும் அப்ஜெக்சன் இல்லையே?

கமல்- அப்போ தலைவா ல என்ன செஞ்சிருந்தீங்க?


================

டாக்டர்.டெய்லி பகல் டைம்ல ரெகுலரா வருது கனவு.அதுல யாரோ என்னை டச் பண்றாங்க.
மிஸ்! ஆபீஸ் ல தூங்காதீங்க.எவனோ தடவிட்டு இருக்கான்


============

10 டியர்.கண்ணைப்பாத்து பேசற ஆம்பளையைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்குமாம்.
உங்க ரசனைக்காக எங்க ரசனையை விட்டுத்தர முடியாது


=============

11 தலைவரே!,ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதுல போடுவீங்க?
போலீஸ் ஸ்டேசன் ல.கோர்ட் உத்தரவு.டெய்லி லோக்கல் ஸ்டேசன் ல சைன் பண்ணனுமாம்


===========


12 நான் ஃபேஸ்புக்  வந்து முதல்முதலா ஐ லவ் யூ சொன்ன 
பொண்ணு  இதுதான்


 ஓஹோ, அவரு யாரு?


 நான் முதன் முதலா அடி வாங்குனது அவர் கிட்டேதான், புருசனாம்

=================





13 டியர்! உன் சட்டை நானும் போட்டு அலைவேன்....

 தாராளமா அலைஞ்சுக்கோ, ஆனா அதே மாதிரி உன் ஜாக்கெட்டைப்போட்டுட்டு என்னை அலையச்சொல்லக்கூடாது


=================

14 தலைவரே! அவரை ஏன் கட்சியை விட்டு விரட்ட்டீட்டீங்க?


நேர்மையா, நாணயமா  இருக்கறவங்களை கட்சில வெச்சிருந்தா நாம சம்பாதிக்க முடியாது


================


15 DR,என் உடம்பு கூன் போட்ட மாதிரி எப்பவும் வளைஞ்சே இருக்க என்ன செய்யனும்?

ஏன் அப்டி இருக்கனும்?

 அப்போதான் MLA பதவி என் கிட்டே இருக்கும்


==================


16  தலைவரே! ஆட்சிக்கு வந்ததும் எதுக்கு 1 கோடி பேரை டிஸ்மிஸ் பண்றீங்க?

 1 கோடி பேருக்கு வேலை தருவோம்னு வாக்கு கொடுத்தமே? நிறைவேற்றவேணாமா?


================

17  விஜய்  ரசிகை = டியர், என்ன டிஃபன் பண்ண?
அஜித் ரசிகன் = எதோ 1, மேக் இட் சிம்ப்பிள்
வி ர = ஐ, அப்போ உப்புமா பண்ணவா?


================


18  அமைச்சரே! அரண்மனை-2 போஸ்டரை அந்தப்புரத்தில் ஒட்டிய கயவன் யார்?

 ஏன் மன்னா?

 மகாராணி கடுப்பாகி யார் அந்த சக்களத்தி? என்கிறார்


=====================



19  நயன் தாரா - மம்முட்டி  நடிச்ச மலையாளப்படம் ரிலீஸ் ஆகுதாமே?

 யோவ், இது அந்த மாதிரி படம் இல்ல. டீசண்ட்டான படம்

====================



20  நாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்


 தலைவா! இது எங்கேயோ கேட்ட மாதிரி  இருக்கே? 

 இல்லையே? புதிய  சேர்த்திருக்கனே?



=================


Wednesday, February 10, 2016

ஃபர்ஸ்ட் நைட்க்கு ஹெலிகாப்டர்!!!!

சமுதாயத்துக்காகப் பாடுபட்டவர்களை மறக்கக் கூடாது: கருணாநிதி # மறக்க மாட்டோம் தலைவரே! கக்கன் , காமராஜர் இவங்க தான் உண்மையா  நாட்டுக்காக,சமுதாயத்துக்காகப் பாடுபட்டாங்க, மத்தவங்க எல்லாம் அவங்கவங்க குடும்பத்துக்காகத்தானே பாடுபட்டாங்க?


==============




துறைமுகம் MLA  பழ கருப்பையா அதிமுக வில் இருந்து நீக்கம்-ஜெ அறிவிப்பு.# சார்! நீங்க ஏதாவது மீடியால பேட்டி கொடுத்த மாதிரி தெரிலயே?




====================

3  அதிமுக., விலிருந்து பழ. கருப்பையா நீக்கம் - ஜெ  # பழம் நழுவி எதிர் பால் அணியில் விழுந்தா ஆளுங்கட்சிக்குத்தான் நட்டம்


==================


4   தி.மு.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கு: மு.க.ஸ்டாலின் பேச்சு # கையெழுத்தைப்போடறது அப்பாவா?நீங்களா?


==============


5 தி.மு.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கு: மு.க.ஸ்டாலின் #,2 வது கையெழுத்து கள்ளுக்கடை?

============


6 சமக கூடாரமே காலியானது.சரத்குமார் அவசர ஆலோசனை -செய்தி.# கூடாரமே காலி ஆன பின் யார் கிட்டே ஆலோசனை செய்வாரு?


=============


7 மக்கள் புகார்களுக்கு தீர்வு காண தவறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை: -மோடி உத்தரவு # இது MLA ,MP க்களுக்கும் பொருந்துமா?கட்சிகள் திருந்துமா?

===========

8 சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு வக்கீல்கள் துணை போகக்கூடாது : நீதிபதி# BASIC INSTINCTல வருவது போல் வக்கீலையே கரெக்ட் பண்ணிடறாங்க


============

9 அம்மா திட்டமே சும்மா திட்டம்தான்: இளங்கோவன் பேச்சு # அன்னை சோனியா திட்டம் எல்லாம் வெண்ணை திட்டமா?ன்னு அவங்க கேட்பாங்களே?


=============

10 புல்லட் பைக்கை ஓட்டியபடி திருமண அரங்கிற்கு வந்த மணப்பெண்# அடேங்கப்பா.அப்போ பர்ஸ்ட் நைட்க்கு ஹெலிகாப்டர் ல வந்து மொட்டை மாடி ல இறங்குமோ?


=============

11 தமிழகத்தில் தனித்துப் போட்டியிட எந்த கட்சிக்கும் துணிவில்லை-வாசன்# தனியாப்போய் ஓட்டுக்கேட்டா தகராறு.கூட்டத்தோட கோவிந்தா போட்டா வரலாறு


==============


12 போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த கடும் தண்டனை: நீதிமன்றம் கருத்து# சரக்கு அடிச்சா போதை ஏறாத மாதிரி ஊசி போட்டு விட்ருங்க


===============

13 கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதால் ச.ம.க., அழிந்து விடாது-சரத்குமார் # நாட்டாமை சித்தப்பு.நம்ம கட்சில இருந்ததே ஒரு சிலர் தானே?


=============

14 எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் ஒழியாது.எல்லாரும் கூட்டு களவாணிகள்-பழ கருப்பையா # ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்கண்ணா

==============

15 நாட்டுக்கு நல்ல நேரம் மிக விரைவில் வர போகிறது - ஸ்டாலின் # என்ன?வர வர குடுகுடுப்பைக்காரன் ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்ட்டீங்க?


=============

16 146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் க.கணிப்பு # இன்னும் கூட்டணியே முடிவாகலை.அடிச்சு விடாதீங்க


==============


17 கச்சத்தீவை 25 ஆண்டுகளாக தமிழக அரசால் மீட்க முடியவில்லை: ஸ்டாலின் -நுணலும் கழகமும் தன் வாயால் கெடும்.அந்த 25ல 10 நம்ம ஆட்சிதானே தலைவா?


=============


18 விரைவில் இந்தியா வரும் விரிசல் விழாத ஸ்மார்ட்போன்.!# இதை வாங்கி வெச்சுக்கிட்டா கட்சில விரிசல் விழாதா?


===============

19 உம்மன் சாண்டிக்கு ரூ 1.90 கோடி லஞ்சம் கொடுத்தேன்... சரிதா நாயர் அதிரடி புகார்# சுத்தம்.லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக யூ ஆர் அண்டர் அரெஸ்ட்


================


20 ‘GETHU’ என்பதில் ‘கெ’ உச்சரிப்பு வராததால் வரிவிலக்கு தரவில்லை: -அரசு # கெ உச்சரிப்பு வந்தா இது GAY பிலிம்னு கிண்டல் பண்ணுவாங்க இல்ல?


=============

ஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் 50 டூ 62

விகடன் சில மதிப்பெண்கள்!
_____
16 வயதினிலே - 62.5
முள்ளும் மலரும் - 61
விசாரணை - 61
மகாநதி - 60
நாயகன் - 60
ஹேராம் - 60
காக்கா முட்டை - 60

இறுதிச்சுற்று -46
பூவே பூச்சூடவா - 56
அஞ்சலி - 58

அன்பே சிவம் - 47
விருமாண்டி - 48
ஆளவந்தான் - 41
காதலுக்கு மரியாதை - 50
துள்ளாத மனமும் துள்ளும் - 45
கில்லி - 45
சேது - 50

தெய்வத்திருமகள்- 50
பிதாமகன் - 49
வாலி - 45
ரமணா - 43
அலைபாயுதே - 44
ஆய்தஎழுத்து - 40
கன்னத்தில் முத்தமிட்டால் - 49
நந்தா - 44
பேரழகன் - 45
காக்க காக்க - 41
கஜினி - 43
அன்னியன் - 48
முதல்வன் - 43
பரதேசி-55 வழக்கு எண் 18/9 -55
பாரதி - 55
தவமாய் தவமிருந்து - 53
ஆட்டோகிராஃப் - 52
அழகி - 48
7ஜி - 46
பருத்திவீரன் - 46
மொழி - 46
பசங்க - 50
காதல் கோட்டை - 52
மூன்றாம் பிறை - 53
பம்பாய் - 52
முதல் மரியாதை - 54
வாழ்வே மாயம் - 50
வறுமையின் நிறம் சிகப்பு - 55
_____
விகடன் படிச்சவங்க உங்களுக்கு தெரிஞ்ச பெரிய மார்க் (?) எல்லாம் சொல்லுங்க!

நன்றி -@Gurubaai_U1 
பாலகுருநாதன்.மு