Skip to content

Monday, February 08, 2016

வீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதிக்க முடியாததை சாதித்துக்காட்டிய தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் அதிர்ச்சி

கமல் இன் ட்வீட்டர் - 4 பேரு ஆர் டி பண்றாங்கன்னா என்ன ட்வீட் வேணாலும் போடலாம், எதுவுமே தப்பில்லை


==============




ஐந்தறிவு ஜீவன்களான சேவல்கள் அதிகாலை 4 மணிக்கு எழுகையில் ஆறறிவு ஜீவன்களான நாம் 5 மணிக்கு எழ முடியாதா?# அதிகாலையில் துயில் எழுவோம்




===============




அதிகாலையில் வெறும் வயிற்றில் 1 லிட்டர் ( 4 டம்ளர்) தண்ணீர் குடிப்பது உடல் உள்ளுறுப்புகளுக்கான சிறந்த வாட்டர் வாஷ்



================



அன்பே! வெட்கத்தால் உன் கைகளால் உன் முகத்தை மறைக்கும்போது அழகாக இருக்கிறாய், கைகளை விலக்கும்போது பயமாய் இருக்கிறது, முழு முகமும் தெரிஞ்சிடுது



===================



வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிப்பது அசிடிட்டியை உருவாக்கும், அத்யாவசியம் எனில் கொடை ஆரஞ்சு( கமலா ஆரஞ்சு) ஜூஸ் ஐஸ் போடாமல் குடிக்கலாம்




=================



6  வாகனங்களின் டீசல் ,பெட்ரோல் புகை கலக்காத தூய காற்றை சுவாசிக்க அதிகாலை நடைப்பயிற்சி அத்தியாவசியம்




=============



7 மலைப்பிரதேசங்களில்.வசிப்போர் மலை உச்சி வரை சென்று வருவது நல்லது.ஓஜோன் காற்றை சுவாசிக்கலாம் ( சென்னிமலை,சிவன் மலை,மருதமலை ETC)



============




8 எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நம் மீது முழு அக்கறை கொண்டிருப்பது நம் பெற்றோர் மட்டுமே!மற்ற உறவுகளில் லேசான சுயநலம் கலந்திருக்கும்




===========



9 ஓட்டப்பந்தயத்தில் 2 வதாக ஓடிவருபவனின் வேகம் தான் முதலாவதாக ,மூன்றாவதாக வருபவரின் வேகத்தை தீர்மானிக்கும்




=============



10 ஆரோக்யம் தொடர தினமும் நடைப்பயிற்சி நல்லதுன்னா நான் ஆரோக்யமாத்தானே இருக்கேன்? சுகரா இருக்கு? என நுணை நாட்டியம் பேசுவான் தமிழன்



=================



11 ஒருவருடைய வாயை அடைத்துவிட்டால் அவரை வென்றுவிட்டதாக ஆகிவிடாது! என சொல்லி விட முடியாது,காதலன் காதலி லிப் கிஸ் விதிவிலக்கு





==============




12 இன்று சந்திராஷ்டமம் என்பதால் உங்கள் ஆஃபீசில்  சந்திரா, நிலா,மூன்மூன் சென் போன்ற ஃபிகர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்





================




13 ஒரு ஆள் 4,5 பேர லவ் பண்றாங்களே

எந்த ஆளோட லவ்வர்ஸ் டே கொண்டாடுவாங்க.?
சிம்ப்பிள் 1 = 5 டூ 8 2 = 9 டூ 11
5 =,6டூ8
3 = 12 டூ 3 4 =,4 டூ 6

============


14 முன்னணி.நட்சத்திரங்கள் ட்விட்டரில்் கணக்கு தொடங்கி இருக்கலாம்.அதற்காக அப்படி தொடங்காதவர் முன்னணி நட்சத்திரம் இல்லை என சொல்லிவிட முடியாது


=============

15 ஏழையின் பசியை உணர அருகில் உணவிருந்தும் உண்ணவாய்ப்பிருந்தும் 10 மணி நேரம் சாப்பிடாமல் இருந்து பாருங்கள்

==============

16 ஹனுமான் பிரம்மச்சாரி ன்னா ஹனுமலர் பிரம்மச்சாரினி யா?ன்னு என் கிட்டே கேட்டா எனக்கு எப்டி தெரியும்?


==============


17 யாராவது விருது கொடுத்தால் உடனே வாங்கி விட்டால் நீ சாதா எழுத்தாளன்.இல்ல இந்த விருது வேண்டாம் என மறுத்து விட்டால் நீ தான் பிரபல எழுத்தாளன்

============

18 கமல் = பேவரைட் பன்றதுன்னா என்ன தெரியுமா? RT.பண்ணத்தெரியாத மாதிரி நடிக்கறது # கற்பனை


=============



19 ஹனுமலர் வீட்டு வாசல் கேட்ல என்ன எழுதி வெச்சிருப்பாங்க?
"ஹனு"மதி பெற்று உள்ளே வரவும்

===========

20 நம்ம நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி.செஞ்ச ஆங்கிலேயரைப்பழி தீர்க்கக்கிடைத்த வாய்ப்பு தான் நம்ம ஆள் தனுஷ் ஹாலிவுட்டில் நடிப்பது.


============

ச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்வி ராதிகா?

இந்தியாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை.. இங்கேயே வாழ்ந்து சாக வேண்டும்! - ஆமிர்கான்  # என்ன? அரசியல்வாதி போல் மாத்திமாத்திப்பேசறீங்க?



==================




சகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது-ஸ்ரீ ரவிசங்கர்# ஆமா, தாலி கட்ன சகி என்ன கொடுமை பண்ணாலும் ”சகி”ச்சுக்குவான்




====================




பள்ளி வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை- # எதுக்கு?கட் அடிச்ட்டு 4 ஷோ பார்க்கவா?4*3=12


=============


4 தமிழைக் காக்க வேண்டும் என்பதே தி.மு.க. நோக்கம்: கலைஞர் #-தெரியும் தலைவரே.சன் டிவி ,கே டிவி எல்லாம் தூய தமிழ் தானே?


==============

5 இந்தியாவை விட்டு வெளியேறுவதாக ஒருபோதும் கூறியது இல்லை’ நடிகர் அமீர்கான் விளக்கம் # அப்போ மீடியாக்கள் மக்கள் எல்லாரும் லூசுங்களா?


=============

6 DMKகூட்டணியில் தே.மு.தி.க. எப்போது சேரும்? மு.க.ஸ்டாலின் பதில் # பேரம் நடந்துட்டிருக்கறப்போ ஊடால் பூந்து ஊடகங்கள் குழப்பக்கூடாதுன்னாரா?


================

7 கேப்டன் 234 தொகுதியில் எங்கு வேணாலும் நிற்பார் - பிரேமலதா # என் கணிப்புப்படி "தூ"த்துக்"குடி" தான் கேப்டன் நிக்க மேட்சான இடம்


============

8  ச ம க தொண்டர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என முடிவு-சரத் குமார் # ராதிகா, வரலட்சுமி இந்த 2 பேர் தானே? சட்டுபுட்டுனு கேளுங்க


=====================


தமிழக ஆண்களில் பாதிப் பேர் மதுவுக்கு 
அடிமை:  - டாக்டர் ராம்தாஸ் # மீதிப்பேர் மாதுவுக்கு அடிமை,மொத்தத்துல தமிழன் யாருக்காவது அடிமையாவே


================


10  பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள ரஜினிக்கு கருணாநிதி வாழ்த்து.# இப்போ வாழ்த்தி வெச்சோம்னா தேர்தல் டைம்ல வாய்ஸ் கொடுங்கன்னு கேட்கலாம்


================



11 என் திருப்திக்காகவே படமெடுக்கிறேன்- உதய நிதி ஸ்டாலின் # என் படத்தை ஹிட் ஆக்கலைன்னா அரசியலில் குதிப்பேன்னு மிரட்டுங்க தலைவா, செம ஹிட் ஆகிடும்


===============


12 என் திருப்திக்காகவே படமெடுக்கிறேன்- உதயநிதி # படம் எடுக்க எப்படி உங்களுக்கு உரிமை இருக்கோ அதே மாதிரி விமர்சனம் பண்ணவும் எமக்கு உரிமைஉண்டு


================


13  விளம்பரத்தை விரும்பாத நடிகர் "இளைய தளபதி" - இமான் அண்ணாச்சி # இல்லையே, அவர் நடிச்ச ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பிடிக்கும்னாரே?


================

14 கூட்டணி குறித்து விரைவில் முடிவு: இளங்கோவன் -செய்தி  # தனி ஒருவன் ஆக நின்றால் முதல்வர்தான்னு குஷ்பூ சொல்லீட்டாங்களே?எதுக்கு கூட்டணி?


===================

15 நாட்டில் கருத்துசுதந்திரம் இல்லை என்று கூறமுடியாது’ அத்வானி # இல்லைன்னு சொல்லிட முடியாது, ஆனா சொன்னாஆபத்தில்லைன்னும் சொல்லிட முடியாது,அதானே?


=======================


16 சென்னை மேயராக இருந்ததில் பெருமை: ஸ்டாலின் # சென்னை வெள்ள சேதத்துக்கு நீங்களும் ஒரு மறைமுக காரணிதானே?ஆக்ரமிப்புகளை அகற்றி இருக்கலாமே?


================


17 அதிமுக தொண்டர்கள் தம் வாழ்க்கையையே மக்கள் பணிக்காக அர்ப்பணித்துள்ளனர் -ஜெ # கூழைக்கும்பிடு போடுபவர்கள் எப்படி கர சேவை செய்யமுடியும்?


=================

18 சமூகப் பணியாற்றுவோம்: அரசியலுக்கு அழைத்த இளைஞர்களுக்கு சகாயம் விளக்கம்# அரசியலில் நுழைந்து தீய சக்திகளை விரட்டியடிப்பதும் ஒரு சமூகப்பணிதானே?


=================


19  

மக்கள் சக்தியால் அதிமுக, திமுகவை வீழ்த்துவோம்: மக்கள் நல கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை#இந்த டைம் மக்கள் சக்தியே குழம்பி இருக்கு


==================



20 இந்தியாவின் மிக பிரபலமான தலைவர்  மோடி: கருத்துகணிப்பில் தகவல்    இருப்பவர்களில் யார் பிரபலம்?னு இன்னொரு கணிப்பு எடுங்க


=====================

Sunday, February 07, 2016

எல்லோருமே தானே தலைவர்களே!

பிற்காலத்தில் ஹாஸ்பிடலுக்கு நடையாய் நடந்தாலும் கிடைக்காத உடல் ஆரோக்யம் இளமைக்காலத்தில் தினசரி 4 கிமீ நடந்தால் நிரந்தரமாய் கிடைக்கும்



===================



2 தான் சம்பாதித்த சொத்துகளை  தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும், தானே அதற்கு பாத்யதை என  கொண்டாட நினைப்பவர்கள் எல்லோருமே தானே தலைவர்களே!




==================




குடி மக்கள் குடிச்சு நாசமாப்போனாலும் அரசாங்க கஜானா நிரம்பினாப்போதும் என நினைக்கும் திராவிடக்கட்சிகளுக்கு குடி அரசு தின  வாழ்த்து




==================



நடிகைகளும், அரசியல்வாதிகளும் ஒன்றே. யாருடன் வேண்டுமானாலும் ஜோடி சேரத்தயாராக இருப்பார்கள்




===================





5 போட்டியில் பங்கெடுக்காத ஓய்வு பெற்றவரால் தரப்படும் ஆலோசனையே 100% நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும்




==============



6 வாழ்க்கை உப்பு சப்பில்லாம போகுது என புலம்பும்
அன்பே சப்னா! கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவி ருசிச்சா போதும்!




=============



7 சுகர் ,பிபி ,கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் தான் வாக்கிங் போவார்கள் என நினைப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!



===========



8 காலை டிபன் ,மதியம் லஞ்ச் ,இரவு டின்னர் என எப்போது உணவு உட்கொண்டாலும் அதற்குப்பின் 4 மணி நேரம் தண்ணீர் தவிர எதும் உட்கொள்ளாதீர்!




===========



9 அன்பே! நீ அருகில் இருந்தாலும் விலகினாலும் என் வசம் எப்போதும் உன் வாசம்




==============



10 கலைஞர் டூ அமீர்கான் = உடன் பிறப்பே!,நம் கழகத்தில் சேர்ந்து விடு.இப்படி மாற்றி மாற்றிப்பேசி மக்களைக்குழப்புபவர்களுக்கு அரசியலில் எதிர்காலம்



=============




11 அன்பே!உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாமல் இராதே!
உன் ஜன்னல் வெச்ச ஜாக்கெட் பற்றிய கமெண்ட் ஆகவும் இருக்கலாம்




=============



12 அன்பே சஞ்சனா!உன்னை விட
நான் இருக்கலாம் நோஞ்சானா.
டவுன் பஸ்ல நீ போகும்போது
எவனாவது வேணும்னே உன் மேல சாஞ்சானா
அப்பவே ஆகிடுவேன் டானா !-தீனா




================



13 பெண்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்! வாக்குவாதத்தில் அவங்க ஜெயிச்ட்டா நமக்கு அவமானம்.நாம ஜெயிச்ட்டா பிகர் பிரண்ட்ஷிப் கட் பண்ணிடும்




===============



14 மாமா! உங்க பொண்ணுக்கு வெட்கப்படக்கூட தெரியலை.
எப்டி ஏமாந்தீங்க மாப்ளை?
பேரைப்பார்த்துத்தான் ."SHY"AMALAAன்னதால ஷை டைப்னு நம்பிட்டேன்




===============



15 வழக்கமா படத்துக்குத்தான் தடை வரும்.இப்ப டீசர் ,ட்ரெய்லருக்கே தடை போட ஆரம்பிச்ட்டாங்களா? # என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா




================



16  ஒரு சிறந்த படைப்பாளி  தான் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை விட 2 மடங்கு புத்தக வாசிப்புக்கு எடுத்துக்கொள்வான்



=================


17 அன்பே! அன்றொருநாள் அந்தி மாலைநேரம்
நம்கண்கள்  முதல் முதலாக சந்தித்தன
அடுத்த நாள் காலை உங்க அப்பாவின் கை,கால்கள் என் முதுகில் சந்தித்தன


================

18 தன் பட ரிலீசுக்கு முந்தின நாள் ட்விட்டர் வருபவர் மத்தியில் குடியரசு தினத்தன்னைக்கு எண்ட்ரி குடுத்தார் பார்த்தீங்களா? அதுதான் கமல்


===================


19 இணையத்தில் உங்கள்  இணையைத்தேடாதீர்! திடீர் என நாட் ரீச்சபிள் ஆகலாம்


====================

20  தகுதி அற்ற ஒருவருக்கு ஆதரவு அளிக்கும்போது நீங்கள் நீண்ட  நாட்களாக சேர்த்து வைத்திருந்த நன் மதிப்பை  இழக்க நேரிடலாம்


====================

அம்மா அடகுக்கடை

தமிழகத்தின் நலனை அடகு வைக்கிறார் ஜெயலலிதா - ஸ்டாலின் குற்றச்சாட்டு.# விரைவில் அம்மா அடகுக்கடையும் திறந்து வைக்கப்போறாங்களாம் தலைவரே!


==============



2 ரஜினி ரசிகர்கள் மாநாடு.. அரசியல் பேசக் கூடாது... போலீஸ் கண்டிப்பு! ஆட்சி வாழ்க னு சொல்லிக்கலாமா?




=============




3 பத்மஸ்ரீவிருதை பெற மறுத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்!# ரொம்ப சின்னப்பேரா இருக்காம்.ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பத்மஸ்ரீ விருது னு குடுங்க.வாங்கிக்குவார்




=============



4 தி.மு.க. வெற்றி பெற மகளிர் அணியினர் உழைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.# பெண் பாவம் பொல்லாதது.பாவம்.ஏன் வேஸ்ட்டா உழைப்பை வீணடிக்கறீங்க?




===============




5 3மாணவிகள்மரணம் - உடனடியாக மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடமுடியாது - உயர்நீதிமன்றம்.. # சல்மான்கான்க்கு மட்டும் உடனடி ஜாமீன் கிடைச்சுதே,எப்டி?




===============



மக்கள் விரும்பினால் மீண்டும் திருவாரூரில் போட்டி- மு.க # இந்த இடத்தில் மக்கள் என்பதை ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என கொள்க




==============



7  கூட்டணி கதவு திறந்துள்ளது : கருணாநிதி # மெல்லத்திறந்தது கதவு,35% வாக்குப்பதிவாவது நிகழ நீ உதவு





===============





ஐஸ்வர்யாராய் குடியரசு தின விழாவில் பிரெஞ்சு அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார்!- செய்தி # அபிஷேக் பச்சன் ஓரமா உக்காந்து டீ, பன், மிக்சர்?




===============

ரஜினி'காந்த்க்கு பத்ம விபூஷண் விருது- மத்திய அரசு அறிவிப்பு  #  கமலுக்கு தந்த பத்ம பூஷன் விருதை விட இது உயர்ந்ததா? இல்லையா?னு விவாதம் வர்ல?


=================


10 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்  அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா போட்டி? - செய்தி # இதுக்குப்போட்டியாக ஸ்டாலின் மனைவியும் களம் இறங்குவாரா?


==============


11 திமுக வென்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் : கனிமொழி# வழக்கில் ஆஜராக கட் அடிக்காதீங்க, தேர்தல் வாக்குறுதியில் பிட் அடிக்காதீங்க


=================


12 கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை: மு.க.ஸ்டாலின் # குரல் நல்லா கணீர்னு ஒலிக்குது, கை காலெல்லாம் ஏன் தலைவரே கிடு கிடுன்னு நடுங்குது?


================

13 தெறி vs 24: தமிழ்ப் புத்தாண்டில் சூர்யாவுடன் மோதும் விஜய்-செய்தி # தேர்தல் களை கட்டும் முன்னே சினிமா களை கட்டப்போகுது, இரண்டும் ஹிட் ஆகிடும்


==================

14 தனுஷுக்கு அடித்த லக்... ஹாலிவுட்டின்  நடிகையுடன் நடிக்கிறார்!# ஹாலிவுட்டில் தங்க(ற) மகன்,ஒரே உம்மா மயம்தான் படத்துல


===============


15  இலக்கியங்களை கலாச்சாரங்களைக் காக்க தமிழனுடைய பொற்காலம் மீண்டும் உருவாகப் பாடுபடுவோம்!- கலைஞர் # மானாட மயிலாட டான்ஸ் கலாச்சாரம்தானே தலைவரே?


===================


16  குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: பிரணாப் முகர்ஜி # புல்லட் ப்ரூஃப் குடை பிடிச்ட்டே பேசலாமில்ல?


=================


17 தனித்து வாழும் பெண்களுக்கு வரிச் சலுகை அளிக்க பரிந்துரை # இதான் சாக்குன்னு தனிக்குடித்தனம் போய்டப்போறாங்க இந்த பொண்டாட்டிங்க 


===================

18  எந்தக்கட்சி வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் - கருணாநிதி.. # தகுதி தராதரம் ஏதும்  தேவை இல்லை, நமக்கு தேவை ஓட்டு, அப்டித்தானே தலைவரே?



=====================


19  சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்: விசாரணை ஆணையம் முன்பு உம்மன் சாண்டி ஆஜர் # சூரியன் என்றாலே  ஊழல் உதயம் ஆகிடுதே எப்டி?


===================

20  கல்வியறிவோடு தலைமைப் பண்பும் அவசியம்: மாணவர்களுக்கு மும்பை பல்கலை. துணைவேந்தர் அறிவுரை# தலைமுடிக்கு கலரிங்க் டை அடிப்பது தலை மை பண்பு அல்ல


=========================

Saturday, February 06, 2016

விசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழும்

விசாரணை.


கமல் ரஜினி ராம்கோபால் வர்மா போன்ற ஜாம்பவான்கள் பாராட்டிய படம், ஆடுகளம் படத்திற்கு பிறகு ஐந்து வருடம் கழித்து வெற்றிமாறன் படம், உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற படம், என்று உச்ச எதிர்பார்போடு நான் சென்று பார்த்த முதல் படம் - 


இதுவரை திரைப்படங்கள் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்றால் அதிகம் இல்லை என்பதே உண்மை,காதல் பருத்தி வீரனைப் போல எப்போதாவது.. பல படங்களைப போல இப்படத்தையும் எளிதாய் கடக்க ியலவில்லை காரணம் இப்படத்தின் தாக்கம்.. அப்டி என்ன தான் தாக்கம்??
அது எந்தளவிற்கென்றால் படம் முடிந்து வெளியேறிய பிறகும் என்னால் மீள முடியவில்ல படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தது 9.45 மணிக்கு இப்போ இத எழுதிட்டு இருக்கறது 1.30 மணிக்கு.. பாத்துக்கோங்க ஒரு வித பயம் ஏன்னு தெரில இப்டியான மனிதர்களும் இருக்காங்களேனு வந்த பயமாக கூட இருக்கலாம்.. சுயநலவாதிகள் சந்தர்ப்ப வாதிகள் என... படத்திற்குள் போவோம் படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷத்துல கதைக்குள் வந்துடாங்க எப்படியான படம்னு தெரிஞ்சிடுச்சி... படம் போக போக அந்த நாலு பேரோட நானும் அந்த லாக் அப்ல இருக்க மாதிரி ஓரு ஃபீல் .


... அதான் இயக்குனரின் அசாத்திய திறமை.. கரெக்டா 40 நிமிஷத்துக்கு அப்புறம் பேசாம கிளம்பி போயிடலாம்னு கூட நினைச்சேன் ஏன்னா அந்தளவுக்கு இருந்துச்சி அந்த கொடுமைகள்,,, பாக்க முடில.... அந்த போலீஸ்காரங்க அடிக்ற அடியெல்லாம் அவ்ளோ உண்மை... யாருக்கு தெரியும் உண்மையா கூட அடிச்சி இருக்கலாம். அதுலயும் ஒரு மொட்ட போலீஸ் பனைமட்டைய வச்சி தினேஷ அடிக்க வரப்போ கண்ண மூடிக்குட்டேன் :)))) அது எப்டி இருந்திருக்கும்னு என் அக்கா கொடுத்த ச்சை சவுன்ட் ரியாக்ஷன்ல தெரிஞ்சிடுச்சி....


என் அப்பாவும் கூட வந்திருந்தார் அவரோட பக்கத்து சீட்ல தான் உட்காந்து படம் பாத்தேன்.... ஏன் சொல்றனா அவரும் போலீஸ் தான் திரைல நடக்குறத பாத்துட்டு அவர பாக்குறேன் முகத்துல ஒரு ரியாக்சன் இல்லாம பாத்தட்டு இருக்கார்.... அப்பப்ப நா அவர கேவலமா பாக்கறப்ப ஒரு சின்ன ஸ்மைல் என் அப்பா... த்துஊ :)))))) இந்தப் படத்துல நடிகர்களோட நடிப்பை பாராட்ட வார்த்தையில்லை.. வாழ்ந்திருக்காங்க... இன்னும் சொல்லனும்னா ஒவ்வொருத்தங்க கைலயும் ஒரு அவார்ட் கொடுக்கனும்.


உயர் அதிகாரிகள் கொடுக்குற ப்ரஷரால கிஷோர அடிச்சுட்டு சமுத்தரகணி பாக்கற அந்த பயம் குற்றவுணர்ச்சி கலந்த பார்வை...


நாங்க எதுவும் கேக்கல சார் இப்ப தான் சார் வந்தோம்னு அப்பாவிதனமா தினேஷ் விளக்க முயற்சிக்கிற சீன்.. க்ளைமேக்ஸ்ல சமு.கனி கால புடிச்சு கெஞ்சுற சீன்.... எல்லாம் ரொம்ப பாதிச்ச சீன்ஸ்... அசாத்திய நடிப்பு.
படத்தோட வேகத்துல இசைய கவனிக்க மாட்டோம்... ஆனா அதான் ஜி.வியோட மிகப்பெறிய வெற்றியே... படத்தோடு பிண்ணிப்பினைந்த பிண்ணனி இசை.


இந்தப்படம் ஏதோ இதயம் பலவீனமானவர்கள் பாக்க முடியாது அப்டி இப்டி சொன்னாங்க... அதெல்லாம் கிடையாது இளகிய மனம் கொண்டவர்கள் சகித்துக் கொள்ள முடியாது அவ்ளோதான்.. ஏன் சொல்கிறேன் என்பது படம் பார்த்தால் புரியும். அவ்வளவு உண்மையாக காட்சியமைக்கப் பட்டுள்ளது. படம் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பும் போது அப்பாவ கேட்டேன்...இப்டியெல்லாம் இருப்பாங்களாப்பா போலீஸ்னு... ஹே லூசே இது வெறும் படம் அப்டியெல்லாம் இல்லனு சொன்னாரு.... ஆனா நா அதை ஏத்துக்க முடியல...


இது ஒரு உண்மை சம்பவம்னு படத்துலே சொல்லிருக்காங்களே.. அதான்.
ஓவரால் இந்தப் படத்த ஒரு முறை பாக்கலாம்.. இன்னொரு முறை சகிப்புத் தன்மை இருந்தா சாத்தியம் ஆனா என்னால முடியாது :)))


கண்டிப்பா எல்லோரும் பாக்க வேண்டிய மிக மிக அற்புதமானப் படம்.


சுருக்கமா இது ஒரு உலகத்தர படம்... நன்றி தனுஷ் வெற்றிமாறன்.
எழுத்துப்பிழை இருப்பின் தாந்தோன்றிச் செயல்படும் keyboardஐ மன்னிக்ும்.:))))


 நன்றி#JenniferBlessy



சமூக வலைதளங்களில் கவனிக்கத்தக்க சினிமா, எழுத்து ஆர்வலர்கள் 'விசாரணை' பற்றி எழுதும்போது, 'அதிகார வர்க்கம், விளிம்புநிலை, கோட்பாடு, கட்டவிழ்த்தல், குரூரத்தின் நிஜ முகம், பரிணாமம், செரிமானம், குரலற்றவர்களின் குரல், மனித உரிமை மீறல், அத்துமீறல், சாமானியனின் மரண ஓலம், அதிகாரத் துஷ்பிரயோகம், அவதானிப்பு, அவனண்டர்வார்ப்பு...' என்பன போன்ற டரியல் மொழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் நல்லது. இதையெல்லாம் பார்த்துவிட்டு, "விடுங்கடா சாமி... இது நமக்கான படம் இல்லைடா"ன்னு பலரும் தெறிச்சி ஓடக் கூடும்.



அதேபோல், இந்தப் படத்தைப் பார்க்க தனி தைரியம் வேண்டும்; மன உறுதி வேண்டும்; இரும்பு நெஞ்சம் வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்வதையும் நிறுத்துங்கப்பு. முக்கியமாக இந்தப் படத்தைப் பார்த்துட்டு நாலு நாள் தூங்கலை. பருத்திவீரன் கிளைமாக்ஸுக்கு அப்புறம் என்னை தூங்க விடாம பாதிச்ச படம் என்று போகிற போக்கில் உங்கள் சினிமா அறிவை வெளிப்படுத்த நினைக்காதீர்கள் நண்பர்களே!



தொண்டையில் வாய்வைத்துக்கு கடித்துக் குதறும் படக்காட்சிகளை டிவி பொட்டி முன்பு அமர்ந்து, நொறுக்குத் தீனையைக் கொறித்துக்கொண்டே குழந்தைகள் ரசிக்கும் வகையில் தமிழ் சினிமாவை வளர்த்துவிட்டிருக்கிறார்கள். செய்தித்தாள் தொடங்கி செய்தி சேனல் வரையில் அங்கிங்கெனாதபடி ரொம்ப ஈஸியா வன்முறைகளைக் கடந்து போகிற காலத்தில் இருக்கிறோம்.



சின்ன சின்ன செயல்களைக் கூட பேரன்பின் தரிசனம் என்று மிகைப்படுத்துவதும் வழக்கமாகிப் போய்விட்டது. உச்சபட்ச வன்முறை என்பது கழுத்தை நெறிப்பதும், குரல்வளையைக் கடிப்பதும், ரத்தம் சொட்டச் சொட்ட செத்த பிணத்தின் மீது தாக்குதல் நடத்துவதும் படத்தில் இமை கொட்டாமல் பார்ப்பது பழக்கமாகிப் போனது.


இந்த நிலையில், விசாரணை படத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வன்முறைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது போலவும், இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்வது நகைமுரண்!


நிஜத்தில் தாங்கிக்கொள்ளவே முடியாத வன்முறைகளை அப்படியே ர்ராவாக பதிவு செய்யாமல், ப்யூர் சினிமாவுக்கே உரியவகையில், வன்முறைகளின் பாதிப்புகளை மட்டும் ரசிகர்களை உணரவைக்கிறது விசாரணை. ரத்தம் தெறிக்கும் ஓர் இடத்தைக் கூட கறுப்பு - வெள்ளையில் காட்டியதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். வன்முறைக் காட்சிகளை அப்படியே பதிவு செய்வது சாதாரண படைப்பாளிகளின் திறமையை காட்டும். ஆனால், அந்த வன்முறை தரும் வலியை மட்டும் உணரச் செய்யும் வகையில் காட்சிகளை அமைப்பதுதான் அசாத்திய படைப்பாளியின் வல்லமை. அப்படி ஓர் அபார சினிமா படைப்பாளியான வெற்றி மாறனை கொண்டிருப்பது நமக்குப் பெருமை.



வன்முறைகளை முன்வைத்துப் பார்க்கும்போது, 15 வயதுக்கு மேற்பட்ட எவரும் தனியாக அரங்கில் பார்க்கக் கூடிய அளவில்தான் விசாரணை இருக்கிறது என்பது தெளிவு.



இப்படம் குறித்த அனுபவக் கருத்துகளைப் படிக்கிறபோது, இதுதான் காவல்துறையின் உண்மையான முகம் என்கிற ரீதியிலும் கருத்துகள் திணிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நம் காவல்துறையினரின் இருண்ட பக்கம் மட்டும்தான் விசாரணை. மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத் துறையில் உள்ள இருண்ட பக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எது பயங்கரம் என்று விவாதிக்கத் தொடங்கினால் முடிவு எட்டப்படுதல் கடினமே.



இப்படி எல்லா துறைகளிலும் இருண்ட பக்கங்கள் உள்ளன. எல்லா மனிதர்களிடத்திலும் ஓர் இருண்ட பகுதி இருக்கின்றது. ஒரு தனி மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். தன் ரத்த பந்தங்களுக்கு மட்டுமே தெரியும், தன் உறவுகளுக்கு மட்டுமே தெரியும், தன் நண்பர்களுக்கு மட்டுமே, தன் சுற்றத்தாருக்கு மட்டுமே தெரியும் பக்கங்களுக்குடன் இருப்பார். அவருக்குள் உள்ள வக்கிரங்களும் இன்னபிற நெகட்டிவ்களும் அவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிய எளிதில் வாய்ப்பில்லை. இத்தகைய ஓர் இருண்ட பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரை முழுமையாக இப்படித்தான் என்று தீர்மானிப்பது எந்த வகையில் சரி என்பது விவாதிக்கத்தக்கது.



இதுபோலவே, காவல்துறையின் இருண்ட பக்கம் ஒன்றை விசாரணை வெளிச்சப்படுத்தியது என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினரின் உண்மை முகம் இதுமட்டுமே என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதும் சரியல்ல. ஏனென்றால், சென்னை போன்ற பெருநகரில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் போதுமான பாதுகாப்பு உணர்வுடன் பெரும்பாலான மக்கள் வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு என்பது மிகப் பெரியது என்று நம்புகிறேன்.



ஹரி, கவுதம் முதலானோர் படங்களில் வரும் போலீஸ் அதிகாரிகள்தான் காவல்துறையின் உண்மையான முகம் என்று 100 சதவீதம் நம்புவது எவ்வளவு அபத்தமோ, அதற்கு இணையானதுதான் விசாரணையில் காட்டப்பட்ட காவல்துறையினர்தான் காவல்துறையின் 100 சதவீத உண்மை முகம் என்பதும்.


அதேநேரத்தில், நாம் சம்பந்தப்பட்டிருப்பதால், நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காவல்துறையின் இருண்ட பக்கத்தை நேர்மையாகவும் நேர்த்தியாகவும் காட்டிய வகையில் இங்கே விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
*
படப்பிடிப்பில் தொலைந்து போகும் என் படங்களை அடையாளம் காட்டும் படத்தொகுப்பாளர் கிஷோருக்கு இப்படம் சமர்ப்பணம் என்ற வாசகத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி வெற்றி மாறனின் நேர்மையை அங்கீகரித்தது முதல் காரணம்.


பெரிய ஜாம்பவான்கள் கூட இந்தப் படத்தின் தழுவல் என்பதை திரையில் சொல்ல மறுக்கின்றனர். இன்னும் சிலர் நன்றி கார்டுடன் சேர்த்து ரசிகர்கள் உள்வாங்காத 2-3 நொடிகளில் கிரெடிட் கொடுப்பதாக தகிடுதத்தம் செய்கின்றனர். ஆனால், வெற்றி மாறன் அந்த சின்னப்புள்ளத்தனத்தை செய்யவே இல்லை.



சந்திரகுமாரின் லாக்கப் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று ரசிகர்கள் உள்வாங்கும் வரை சில நொடிகள் திரையில் தெரியவைத்தார். மூலக்கதை சந்திரகுமார் என்று கிரெடிட் கொடுத்தார். இதனாலேயே வெற்றி மாறன் மீதான மரியாதையை அதிகரிக்க ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். இது அடுத்த காரணம்.


தன் படைப்புக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார் வெற்றி மாறன். அதனால்தான் படம் முடிந்த பிறகும் எழுத்தாளரின் குரலை பதிவு செய்திருக்கிறார்.
''கோட்டாவுல வந்தவன் சிஸ்டம் புரியாம தொல்லை பண்றான்''


''அப்ஸ்ல-னா அல்கொய்தாவா? ஐஎஸ்ஐஎஸ்-ஆ?''
''தமிழ்னா எல்டிடியா?''
வசனங்கள் மூலம் மற்றவர்களின் பொதுப்புத்தி அடிப்படையிலான சந்தேகப் பார்வையைப் புரிய வைக்கிறார்.
ரஜினிமுருகன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்த டம்மி வில்லன் சமுத்திரக்கனி நடிகனாக ஆக்கிரமிக்கிறார். தினேஷ், கிஷோர், முருகதாஸ் போன்ற நடிகர்களின் ஆளுமையை உணரமுடிகிறது.
இப்படி பல காரணங்களை பட்டியலிடுவதை விட படம் பார்த்து நீங்கள் தமிழ் சினிமாவின் வலிமையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த எளியவனின் வேண்டுகோள்.
இன்னொரு முக்கிய கோரிக்கை: பாலு மகேந்திராவின் ஆன்மா வெற்றி மாறனை வழிநடத்துகிறது. நல்ல சினிமாவை பாலு மகேந்திரா வெற்றி மாறன் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார் என்றெல்லாம் ஆராதிப்பது வெற்றி மாறனின் தொழில் பக்தியை கூறு போடுவதுதான். படைப்பாளியை எந்த ஒப்பீடும் இல்லாமல் கொண்டாடுவதே அவருக்கும், படத்துக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.
*
மொத்தத்தில், விசாரணை... குறியீடுகள் குதறித்தள்ளத்தக்க வகையிலான எந்த பேரறிவும் அவசியம் இன்றி எடுக்கப்பட்ட தமிழின் பெருமித சினிமா.
இப்படிப்பட்ட எளிமையானதும் உருப்படியானதுமான படத்தைப் பற்றி டரியல் மொழிகளிலும் எழுதுவதும், இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்பதால் ஸ்டாரும் மார்க்கும் தரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும், உலகத் தரம் என்ற சொல்லுக்கு புது புது அர்த்தங்கள் புகுத்தி 'ஃபெஸ்டிவல் சினிமா' என்று முத்திரைக் குத்துவது முதலான மேதமை அணுகுமுறைகள், இந்தப் படத்தை சாதாரண மனிதர்களிடம் இருந்து விலகவைத்துவிடும் என்பதே நான் கொண்டிருக்கும் டரியல்.
உண்மையில், சாதாரண மனிதர்களைப் பற்றிய சாதாரண மனிதர்களுக்காகவும் எடுக்கப்பட்ட அசாதாரண படைப்புதான் இந்த விசாரணை!

த இந்து