Skip to content

Sunday, January 17, 2016

புலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு?

பெற்றோர் சொல்
பெரியோர் சொல் பின்பற்றி நடந்தால் சனீஸ்வரன் உன்னை நெருங்க யோசிப்பான்


=============

2 உன் குடும்பத்துடன் இருக்க செலவிடப்படும் நேரம் நிம்மதிக்கணக்கில் வரவு வைக்கப்படும்


=============

3 ஒரு அஜித் ரசிகன் ஒரு விஜய் ரசிகையைக்காதலித்தால் அதுவும் ஒரு தலைக்காதல் பிரிவில் வரும்.பிரிவு வரும்

==========

4 பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 டூ 5 ,அது தான் படைப்பாளிகளுக்கான நல்ல நேரம். # மழலை,கவிதை,கதை


============

5 அதிகாலையில் எந்நேரத்தில் நீ எழுந்துகொண்டாலும் அது நல்ல நேரம் தான்.


=============


6 மனைவி சொல்லே மந்திரம் என்று நாம் நினைப்பதாய் மனைவியை நம்ப வைப்பதே கூட்டுக்குடும்ப வாழ்வில் நாம் பிழைக்கும் தந்திரம்"


============

7 இருக்கின்ற பணியில் பிரச்சனை வந்தால் பணியிடம் மாற்றாதீர்.எல்லாக்கோயில்களிலும் சனீஸ்வரன் உண்டு.எல்லா கம்பெனியிலும் மேனேஜர் உண்டு


============

8 மஞ்சு வை.விரட்டி விரட்டி லவ் பண்ண ஒரு அரிய வாய்ப்பு.மஞ்சுளாவோட அப்பா கேட்டாக்கூட ம.அரசே மஞ்சு விரட்டுக்கு அனுமதி தந்தாச்சுனு சொல்லலாம்்



============



9 ஒரு மனைவிக்கு நல்ல கணவனா இருக்க முடியாத பல ஆண்கள் தன் குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்கத்தவறியதே இல்லை




==============



10 நேரில் வெளிப்படுத்த முடியாத உன் மீதான என் அன்பு கடிதம் எழுதும்போது முழுமையாக.வெளிப்பட்டு விடுகிறது.அதுதான் எழுத்தின் வலிமை.




===============



11 ஒரு படைப்பாளியின் எல்லாப்படைப்புகளும் மிகச்சிறந்த படைப்பு ஆகிவிடாது.படைப்பாளியின் பலவீனமும் அதுதான்.படைப்பின் பலமும் அதுதான்



================



12 மலையாள ஹீரோ பிருத்விராஜ் இளைய தளபதி விஜய்-ன் தீவிர ரசிகர்



பிருத்விராஜ்-ன் பொங்கல் ரிலீஸ் படம் = பாவாடை

# இரண்டும் வெறு வேறு தகவல்கள்


==================

13  எந்த ஃபிகரையும்  நம்ம கைக்கு ராக்கி கட்ட விடக்கூடாது என்பதே நம்ம முக்கிய வை”ராக்கி”யம்


====================


14  தலைவரே! உங்க பேருக்குப்பக்கத்துல 4 செமீ-னு போட்டிருக்கே? எதுனா குறியீடா?

யோவ், FOR CM என்பதன் சுருக் = 4CM


==================


15 என்ன பாலோ பண்றவங்க எல்லாரும் அதிகம் நைட்ல தான் பாலோ பண்றாங்க ,ஏன்?

மேடம், அப்போ நைட் வாட்ச்மேன் -கதான் உங்க மேக்சிமம் ஃபாலோயர்ஸ்



====================


16  முத நாள் ஒத்தைப்படை நெம்பர் பிளேட் கார், அடுத்த நாள் இரட்டைப்படைக்கார்,இதான் சட்டம்

அப்போ செக்ண்ட் ஷோ போனா காரை எடுக்கவே முடியாதே?

===============


17 திருடனைப்பத்தி தகவல் கிடைச்சா உடனே போலீசுக்கு தகவல் கொடுங்க.


கொடுத்தா?


மாமூல் கொடுக்காம டபாய்ச்சவனை முட்டிக்கு முட்டி தட்டி வசூல் பண்வாங்க

================


18 நாங்க எல்லாம் பொண்ணைப்பார்த்தா மண்ணைப்பார்ப்போர் சங்கம்.
ஓஹோ அப்போ பொண்ணோட அம்மாவைப்பார்த்தா பாறாங்கல்லைப்பார்ப்பீங்களா?



===============


19 சார் .நீங்க கதை கவிதை எழுதுவீங்களாமே?
ஆமா.குடுத்தா பாத்து எழுதுவேன்



==================


20 புலிய பாத்து பூனை சூடு
போட்டுகிச்சாம். ஏன்?
இனிமே இப்டி மொக்கைப்படத்தைப்பார்க்கக்கூடாதுன்னுதான்்



==================

கெத்து - திரை விமர்சனம்

இயற்கை
எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது. கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார்.


குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோ ருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலா னவர். பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு ‘பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடுகிறார். இதனால் சத்யராஜுக்கும் பாரின் உரிமையாளர் ‘மைம்’ கோபிக்கும் இடையே மோதல் நடக்கிறது.



கோபியின் ஆட்கள் தன் அப்பாவைத் தாக்கும்போது அப்பாவைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார் உதயநிதி. மறுநாள் மைம் கோபி கொலையாகிக் கிடக்கிறார். கொலைப் பழி சத்யராஜ் மீது விழுகிறது. அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க உண்மையான கொலைகாரனை கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார் உதயநிதி.


அவரால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அந்தக் கொலைகாரன் யார்? அவனது நோக்கம் என்ன? விஞ்ஞானியைக் கொல்ல முனையும் விக்ராந்துக்கும் குமுளியில் நடக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன தொடர்பு? - இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் த்ரில்லராக விரித்துச் சொல்கிறது திருக்குமரனின் இயக்கத்தின் வெளியாகியிருக்கும் ‘கெத்து’.



தொடக்கக் காட்சியிலேயே கொலைகாரனை அறிமுகப்படுத்தி விட்டு, அவன் குமுளிக்கு எதற்காக வருகிறான் என்பதை மெல்ல மெல்ல விடுவிக்கும் திரைக்கதை, சரியான நேர்கோட்டில் அமைக் கப்பட்டிருப்பதும், திருப்பங்களை அளவாகவும் தெளிவாகவும் வைத்துக் கதையை நகர்த்திச் செல்வதும் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றவைக்கிறது. சர்வ தேசச் சதியுடன் குமுளிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ள விதம் நன்றாக உள்ளது.



அடுத்தடுத்து மர்மமான முறை யில் கொலைகள் நடக்கின்றன. ஆனால் அதற்கேற்ற பரபரப்பு காவல் துறையினரிடம் இல்லை. பல காட்சிகள் எளிதில் யூகித்து விடக்கூடிய விதத்தில் உள்ளன. உதயநிதிக்கு எழும் கேள்விகள் எதுவும் காவல் துறையினருக்கு எழவே இல்லை. இஸட் பிரிவு பாதுகாப்பு வளையத்துக்குள் உதய நிதி சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். பாடல்களும் காதல் காட்சிகளும் கதையுடன் ஒட்டவே இல்லை. காதல் கதையை விட்டு நகர்ந்த பிறகு படம் சிறிதும் திசை மாறாமல் கச்சிதமாக நகர்வதையும் குறிப்பிட வேண்டும்.



மொத்தப் படமும் செறிவான முறையில் நேர்த்தியாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. கதைக் களம், ஒளியமைப்பு, காட்சிகளுடன் இயல்பாகப் பொருந்தும் சிறப்புச் சத்தங்கள், கலை இயக்கம், நட்சத்திரங்களின் தோற்றங்கள், ஆடை வடிவமைப்பு, பின்னணி இசை என அனைத்திலும் காணப்படும் நேர்த்தி படத்துக்கு மிகப் பெரிய பலம். சண்டைக் காட்சிகள் இரண்டையும் வடிவமத்த அன்புறிவ் கவர்கிறார்.


இதுவரை குடும்பப் பாங்கான நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த உதயநிதி, முதல் முறை யாக ஆக்‌ஷன் கதையில் நடித் திருக்கிறார். தனக்குப் பொருந்தும் விதமாக அலட்டல் இல்லாத கதையைத் தேர்ந்தெடுத்த விதம் பாராட்டுக்குரியது. யோகா மற்றும் சைவ உணவு விரும்பியாக அறிமுக மாகும் உதயநிதி, அப்பா தாக்கப் படும்போது அங்கே ஆஜராகித் தன் ஆக்‌ஷன் முகத்தைக் காட்டும் திடீர் கெத்து ரசிக்கும் விதமாக இருக்கிறது.



கதாநாயகி எமி ஜாக்சனுக்குக் கதையுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவரது பங்கு படத் தின் வசீகரத்துக்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறது. கருணாக ரனை நகைச்சுவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றியதற்காக இயக்கு நரைப் பாராட்டலாம்.



முதல்முறையாக எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், பார்வையாலேயே மிரட்டிவிடுகிறார். குணச்சித்திர சத்யராஜுக்கு மேலும் ஒரு நறுக்கான பாத்திரம். அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.


மர்மக் கொலைகள், அதிமுக்கியமான விஞ்ஞானியைக் கொல்லும் சதி ஆகியவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள ‘கெத்து’ நேர்த்தியான படமாக இருந்தாலும் கதைக்கு ஏற்ற பரபரப்பான திரைக்கதையை அமைப்பதில் ஏற்பட்ட சறுக்கலால் கெத்து கொஞ்சம் குறைவுதான்.


நன்றி - த இந்து

நீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்டுனா

1  மேரேஜ் ஆன ஆன்ட்டிக்கு அட்வைஸ் பண்ணுவது எப்படி?



தனித்திருமதி

விழித்திருமதி
பசித்திருமதி


=============

2 தலைவரே! ஆளுங்கட்சியை விட 2 மடங்கு ஆதரவு பெற ஒரு ஐடியா இருக்கு.



சொல்லு

எல்லாருக்கும் 4 துண்டு கரும்பு தந்துடுவோம்


============


3 சார்.திருட்டு டிவிடியால் உங்க படத்திற்கு பாதிப்பே இல்லையாம்: ஏன் ?



கடைல புகுந்து எல்லா டிவிடியையும் திருடிட்டு வந்துடுவேன்




===============


4 நானும் சமையல் செய்ய சம்பளத்துக்கு ஆள் கூப்பிடுவேன்னு கனவிலும் நினைக்கல



மிஸ்.சமையல்காரனை கல்யாணம் கட்டிக்குங்க.மாசம் 5000 ரூ மிச்சம்


============

5 சார்.சாம்சங் போன் பழைய மாடல் போட்டோ எதுக்கு இப்போ அப்டேட்டறீங்க?



S3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்ங்க ( சிங்கம்3)


============

6 மாப்ளை கேட்டரிங் சர்வீஸ் பண்றார்னீங்க.சமைக்கத்தெரியாதா?



ம்ஹீம்.இது CATடரிங்.பூனை விற்கறவர்



==============

7 பட டிக்கெட் ரிசர்வ் பண்ண எதுக்கு ரயில்வே ஸ்டேசன் வந்திருக்கே?



படத்தோட டைட்டில் S3ன்னாங்க




===============

8 சார்.யுனிவர்சல் காப் னு டைட்டில் வெச்சா வரிவிலக்கு கிடைக்காது.



தெரியும்யா.ரிலீஸ் டைம்ல சர்வதேச சிப்பாய் னு மாத்திட்டாப்போச்சு



=============


9 சார்.உங்க பட டைட்டிலை ஆமா 3 ன்னு ஏன் மாத்தீட்டீங்க?



எஸ்.3 ன்னு வெச்சா வரிவிலக்கு கிடையாதாம்



===============

10 எதுக்காக அந்தப்பொண்ணு மேல காய்கறி யை தூக்கிப்போட்டே?



யுவர் ஆனர்.அந்த பிகருக்கு பல வகைல ரூட் விட்டேன்.படியல.பைனலா பீட்ரூட் விட்டேன்



=============

11 இனிமே நீங்க பச்சைக்காய்கறி தான் சாப்பிடனும்



டாக்டர்.அப்போ கேரட் பீட்ரூட் எல்லாம் ரோஸ்,ரெட் கலர் ல இருக்குமே.சாப்பிடக்கூடாதா?



==============

12 டியர்.உனக்கு குளிரும்போது என்னை போர்வையா எடுத்துக்கோ.



ஓஹோ.எங்கப்பா துவைச்சுக்காயப்போட்ருவாரு.பரவால்லியா?



=============

13 ஹலோ மிஸ்டர்! எல்லாப்பொண்ணுங்க மாதிரியும் என்னை நினைச்சுடாதீங்க.ஐ ஆம் டைப்பிகல் கேர்ள்.



அடடே.டைப் தெரியுமா? லோயரா?ஹையரா?



==============

14 டியர், எனக்கு போற பக்கம் எல்லாம்  செம வரவேற்பு

 அப்டியா? எங்கே போனீங்க?


ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு இண்ட்டர்வ்யூ


=================


15 மிஸ்! உங்க FACE CUT பிரமாதம்.


சாரி.எனக்கு முக ஸ்துதி பிடிக்காது.

ஓஹோ!அப்போ கொஞ்சம் இறங்கி வந்து வர்ணிக்கட்டுமா?


===========


16 பெண்கள் போர்க்குணம் மிக்கவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்.


மலையாள நாயகி மஞ்சு வாரியர் டீச்சர்.பேர்லயே போர் இருக்கே?




===============

17 டாடி.நான் அஷ்ட லட்சுமியை லவ் பண்றேன்.


அடப்பாவி.ஏதோ ஒரு லட்சுமியை மட்டும் கல்யாணம் கட்டிக்கோ.8 பேருக்கும் எப்டி செலவு செய்வே?




===========


18  உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிக்குங்க..


அப்டியா? நான் எழுதுன கவிதை ஏதாவது சொல்லுங்க.

அது வந்து ஆங், உங்களைப்பார்த்ததும் உலகமே மறந்துடுது

====================


19 நாய் மாதிரி வேலை செய்யணும்.ஆனா குரைக்க மட்டும் கூடாது.சம்மதமா?

அதுக்கு யானை அளவு சம்பளம் தரனும்.சம்மதமா?


============

20 நீங்க ATMல பணம் எடுக்கும்போது  திருடன் வந்து மிரட்டுனா பின் நெம்பரை திருப்பிப்போடுங்க , போலீஸ் வரும்

என் பின் நெம்பர் 4444, எப்டி திருப்ப?



=====================

Saturday, January 16, 2016

PAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)

பிருத்விராஜ் மலையாளத்தில் 2015-ல் ஹாட்ரிக் ஹிட் கொடுத்துட்டார்.என்னு நிண்டே மொய்தீன் மெகா ஹிட் லவ் ஸ்டோரி( சோகம்), அமர் அக்பர் அந்தோணி ( காமெடி),அனார்கலி (காமெடி வித் லவ்)2016ல் ரிலீஸ் ஆன இந்தப்படமும் ஹிட் அடிக்கும் என யூகிக்கிறேன்


இளைய தளபதி விஜய் அழகிய தமிழ் மகன் இயக்குநர்  பரதன் க்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்கும்போது எல்லோரும் நக்கல் அடிச்சாங்க. தேவர் மகன் இயக்குநர் பரதன் க்கு படம் கொடுத்தாக்கூட தேவல,ஆல்ரெடி சரியா ஹிட் ஆகாத படம் கொடுத்தவர்க்கு ஏன் ஒரு மாஸ் ஹீரோ இன்னொரு சான்ஸ் தரனும்னு. ஆனா ஸ்க்ரிப்ட் மேல ஹீரோவுக்கு நம்பிக்கை இருந்தா அது தப்பே இல்லை.

 அதே போல் தான் பாவாட பட இயக்குநர் ஜி மார்த்தாண்டன் கேசும். இவரது முந்திய இரு படங்களும் அட்டர் ஃபிளாப். தெய்வத்திண்ட ஸ்வந்தம் க்ளீட்டஸ் ,  அச்சா தின்(
Daivathinte Swantham Cleetus’ and ‘Acha Din) இரண்டுமே ஓடாத படங்கள். ஆனா அவரோ ட கதையை நம்பி பலரின் எதிர்ப்புக்கு நடுவிலும் கால்ஷீட் கொடுத்து இப்போ ஹிட் படம் கொடுத்த ஹீரோ என்ற பெயரும் பெற்று விட்டார்.


படத்தோட ட்ரெய்லர் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கையே இல்லை, ஏன்னா படத்தோட கதை ஒரு குடிகாரனின் கதை போல் காட்சிகளும் , வசனங்களும் இருந்துச்சு. ஆனா அதெல்லாம் இடைவேளை வரை தான் , பின் பாதி செம திரைக்கதை.


சரி, மேட்டருக்கு வருவோம்.படத்தோட டைட்டில் பார்த்துட்டு இது ஏதோ மேட்டர் படம்னு எதிர்பார்த்தா ஏமாந்தே போவான் தமிழன்



ஹீரோ பொறுப்பே இல்லாத பருப்பு. இதுல தண்ணி வேற , 24  மணி நேரமும் குடிதான் . இவருக்கு நர்ஸ் கூட மேரேஜ் ஆகுது. 2 பேருக்கும் ஒத்து வர்லை . பொண்டாட்டி கோவிச்ட்டு போய்டுது. தன் குடிப்பழக்கம் தான் இதுக்கெல்லாம் காரணம்னு உணர்ந்து  ஹீரோ போதை மறுவாழ்வு இல்லத்தில் அட்மிட் ஆகறார். அங்கே அவருக்கு குடியின் கோரப்பிடியில் இருந்து விடுபட சிகிச்சை அளிக்கப்படுது

 அங்கே அவர் பண்ணும் காமெடிக்கூத்துகள் தான் இடைவேளை வரை. மெயின் கதைக்கும் இந்த  காமெடி எபிசோடுக்கும் சம்பந்தம் இல்லை.அந்த மறுவாழ்வு மையத்தில்  ரிட்டயர் ஆன புரொஃபசரை சந்திக்கறார்.அவரும் சரக்கு பார்ட்டிதான்.ஹீரோவோட அம்மாவை ஹீரோயினா போட்டு  ஒரு படம் எடுத்தவர், ஆனா அது ரிலீஸ் ஆகலை.


ஃபிளாஸ்பேக்


ஒரு டைரக்டர் . இவரும் சரக்கு பார்ட்டி. இவர்  ஒரு படம் எடுக்கார்.அதுக்கு புரொஃபசர் தான் புரொடியூசர். படம் 75% எடுத்த சூழலில் டைரக்டர் செத்துடறார்.


பல வருசம் கழிச்சு அந்தப்படம் தூசு தட்டப்பட்டு பிட்டு எல்லாம் சேர்த்து  ரிலீஸ் பண்ணலாம்னு ஒரு க்ரூப் ரெடி ஆகுது. ஆனா அந்தப்படம் ரிலீஸ் ஆனா தன் அம்மாவின் இமேஜ் பாதிக்கப்படும்னு ஹீரோ நினைக்கறார். ஏன்னா கதை ஒரு மாதிரியான கதை உள்ள படம்.பல வருசங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் , அதில் தன் அம்மாவை சீன் பட நாயகியா இந்த உலகம் இப்போ பார்த்தா தனக்கு என்ன மாதிரியான மன உளைச்சல்கள் ஏற்படும்? அப்டினு ஹீரோ யோசிக்கறார்



 கோர்ட்ல கேஸ் நடக்குது.அந்தப்படத்துக்கு தடை கேட்டு  ஹீரோ வாதாடறார். அப்டி தடை  விதிக்க முடியாது, புரொடியூசர் எங்களுக்கு படத்தை வித்தாச்சுன்னு வில்லன் க்ரூப் வாதாடுது

 யார் , எப்படி ஜெயிச்சாங்க என்பதே மிச்ச மீதி திரைக்கதை  


ஹீரோவா பிருத்விராஜ். செம கலக்கலான நடிப்பு , இவருக்கு காமெடிக்கான பாடி லேங்குவேஜ் இல்லைனு பல விமர்சனங்கள் மலையாளப்பத்திரிக்கைகளில் வந்தன. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கிட்டார். ஆனா சில இடங்களில் நம்ம ஊர் கார்த்தி போல்  சிரிப்பதும் நடப்பதும்  பண்றார் . தவிர்க்கலாம். பின் பாதியில்  கோர்ட்டில் இவர் வாதாடும் காட்சிகளில் அப்ளாஸ் மழை


ஹீரோயினா மியா ஜார்ஜ் . நர்சா ஒரு தினுசா , சொகுசா, ரவுசா பதவிசா வந்துட்டுப்போற கேரக்டர். நடிக்கவும் வாய்ப்பில்லை. திறமை “ காட்டவும் “ வாய்ப்பில்லை. 


ஹீரோவோட அம்மாவா ஆஷா சரத் . இவர் தான் த்ரிஷ்யம் , பாபநாசம் ல போலீஸ் கமிசனரா கலக்கியவர். இதுல கில்மாப்படத்தில் நடித்த நாயகியா சில சீன்களில் வந்தாலும் பெரும்பாலான காட்சிகள் அம்மாவா வயசான கெட்டப் என்பதால்  மன்சுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. புண் பட்ட மனதை இண்ட்டர்வல்ல பாப்கார்ன் சாப்ட்டு போக்கிட்டு பார்த்தேன் மீதிப்படத்தை


அனூப் மேனன் , மணியம்பிள்ளை ராஜு , நெடுமுடி வேணு என படத்துக்கு சப்போர்ட்டிவ் கேரக்டர்ஸ் நடிப்பு கன கச்சிதம்

 படத்தின் ஒளிப்பதிவு  முன் பாதியில்  சுமாராவும் பின் பாதியில் பக்காவாகவும் இருக்கு

பிஜிஎம்  கோபி சுந்தர்  பல தமிழ் சினிமாவிலிருந்து  உருவி இருக்கார்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

நீ கள்ளனா? எதுக்கு பனை மரத்து மேல திருட்டுத்தனமா ஏறி னே?


கள் குடிக்க ஏறுனேன்.ஆனா கள்ளன் இல்ல. # பாவாட

2 நீ அசோசியேசன் மெம்பரா?


இல்ல.
தியேட்டர்ல பிளாக் டிக்கெட் விக்கனும்னா அசோசியேசன்ல மெம்பரா இருக்கனும்
அடப்பாவிகளா.இதுக்கும் சங்கமா?# பாவாட



3 நர்ஸ் = நீ எந்த க்ரூப்?
சாரி மிஸ்.நான் எந்த க்ரூப்பிலும் கோஷ்டியிலும் இல்ல
யோவ்.பிளட் க்ரூப் கேட்டேன் # பாவாட

4 காதலிக்கறவன் கண்ணுக்கு காக்கையும் கருங்குயிலா தோணும் #,பாவாட ( வைரமுத்து வின் கவிதை உல்டா)


5 உன் ஆளுக்கு போன் பண்ணனும்னு சொன்னியே?லைன் கிடைச்சுதா?
அந்த லைன் கிடைக்கலை.எதேச்சையா இன்னொரு லைன் கிடைச்சுது # பாவாட


6 யாரையும் தோற்கடிக்கனும்னு ஒரு வீரனுக்கு தேவை இல்லை.ஆனா தான் தோற்காம இருப்பதே ஒரு வீரனின் இன்றியமையாத தேவை # பாவாட


7 சரக்கில் தண்ணீர் கலந்து அடிச்சா நம்ம அந்தஸ்து குறையும்.குடிகாரர்களுக்கு அந்தஸ்தே ராவா அடிப்பதே # பா

8 PHONE RINGING
ஹீரோயின் = எஸ்
ஹீரோ = நோ
நீங்க எஸ் னா நான் நோ தானே? # பா
யோவ்.யாரு?


9 சொந்தப்பணியில் ஜெயிக்காதவன்

எந்தப்பணியிலும் ஜெயிக்க மாட்டான்


10 நாம ஜெயிக்கனும்கறதுக்காக அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுப்பதும் ஒரு தோல்வியே.#,PAVADA





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


பிருத்விராஜ் ன் பாவாட படம் 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகியும் செம கூட்டம்.FAHADH FAZIL படம் 2 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி காத்து வாங்குது


2 பிருத்விராஜ் ன் பாவாட மலையாள காமெடிப்படத்தை தமிழ் ல.டப் பண்ணா சரக்கு சங்கரலிங்கம்னு டைட்டில் வைக்கலாம்.சீன் பை சீன் குடி தான்

3 ஹீரோயின் ஓப்பனிங் சீன்ல இடையில் இறக்கை முளைக்குது.ஆரம்பம் டாப்சி பன் உல்டா சீன் # பாவாட



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஃபேமிலி ஆடியன்சின் அமொக வரவேற்பைப்பெறும் அளவுக்கு மிக கண்ணியமான திரைக்கதை எழுதியமைக்கு ஒரு சபாஷ்


2  படத்தின் கதைக்குள் வரும் கதை ஒரு கில்மாக்கதையாக இருந்தாலும்  ஒரு சீன் கூட சீனாக வைக்காமல் விட்டதற்கு ஒரு பாராட்டு ( நற நற)


3 பின் பாதி பிரமாதமான திரைக்கதை , ஒரு சீன் கூட போர் அடிக்காமல் விறு விறுப்பாக போவது அருமை


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  வீரம் பட டீசர் ல அஜித் காட்டும் பாடி லேங்குவேஜை அப்டியே ஒரு துளி கூட மாறா,ம  இண்ட்டர்வ;ல் பிளாக் ஃபைட் சீனில் யுஸ் பண்ணிக்கிட்டது ஏனோ? அதே போல் காமெடி சீன்களில் எல்லாம் சகுனி படத்தில் கார்த்தி  நடந்து வாரும் காட்சிகளை அப்டியே ஜெராக்ஸ் எடுத்தது ஏன்?


2 படத்தோட டைட்டில் ஒரு பின்னடைவு தான் . ஏன்னா லேடீஸ் ஆடியன்ஸ் வர யோசிப்பாங்க . படம் இப்போ ஹிட் ஆனதால் இனிமே ஃபேமிலி ஆடியன்ஸ் வருவாங்க என இயக்குநர் வாதாடலாம், ஆனால் ஓப்பனிங் போச்சே?இதுக்கு டீசண்ட்டா எண்ட அம்மே-ன்னு செண்ட்டிமெண்ட்டா டைட்டில் வெச்சிருக்கலாம்


3 ஹீரோ தன் அம்மா நடிச்ச பழைய கில்மாப்படத்தை ஒரு ரீல் பார்க்கறாரு.ஆஃப் பண்னச்சொல்லிடறாரு. இந்த சீனை ஹீரோவின் கோணத்தில் இருந்து பார்ப்பதால் ஆடியன்சுக்கும் அந்த சங்கடம் வருது. இதைத்தவிர்க்க ஓப்பனிங்ல அவர் தான் ஹீரோவின் அம்மா  என அறிமுகப்படுத்தாமயே புரொஃபசர் எடுத்த படம்னு 2 சீன் காட்டி இருந்தா ஆஷா சரத்தையும்  அமர்க்களமாப்பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும்



4 கோர்ட் சீன்ல  ஹீரோ வாதாடி கை தட்டல் வாங்கனும்கறதுக்காக அவர் சார்பா வாதாடிய  வக்கீலை ஏன் டம்மி பண்ணனும். ஒரு பாய்ண்ட் கூடவா அவரால சொல்ல முடியாது?




சி  பி  கமெண்ட் =PAAVADA (2016)- முன் பாதி சரக்கு காமெடி பின் பாதி வித்தியாசமான திரைக்கதை.பிருத்விராஜ்க்கு ஹாட்ரிக் ஹிட் - ரேட்டிங் = 3/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= ஓக்கே




 ரேட்டிங்-3/ 5







Kerala Trivandrum Aattingal ganga yamuna kauveri complex
Embedded image permalink