Skip to content

Wednesday, January 06, 2016

கின்னசில் ஜெ -தமிழக அரசின் அவதூறு வழக்குகள் 192

ரசியல் கட்சித் தலைவர்கள், செய்தி நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.

அதாவது கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு  192 அவதூ று வழக்குகளை பதிவு செய்துள்ளது.  இந்தியாவில்  மாநில அரசு ஒன்றால்,  அதிக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதும் இப்போதுதானாம்.

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா,  பாமக ராமதாஸ், அன்புமணி, சுப்பிரமணியன் சுவாமி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்குள் பாய்ந்துள்ளன.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தர்மபுரியில் பேசிய பேச்சுக்காக தொடரப்பட்ட அவதூறு  வழக்கை, உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, தமிழக அரசு உள்நோக்கத்துடன் அவதூறு வழக்கு தொடர்வதாகவும், விஜயகாந்தின் விமர்சனம் நியாயமானது என்றும் தீர்ப்பளித்து விட்டது.

தமிழகத் தலைவர்கள் மட்டுமல்ல செய்திதாள்களும், பத்திரிகைகள் மீதும் தற்போதைய தமிழக அரசு ஏராளமான அவதூறு வழக்குகளை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவை விமர்சனம் செய்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டதற்காக,  ஹிந்து ஆங்கில நாளிதழ் மீது அவதூறு  வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் 4 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து எழுதியதற்காக ஆனந்த விகடன் மீதும் 18 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதனை மறுபிரசுரம் செய்யதற்காக முரசொலி மீது வழக்கு பாய்ந்தது.

தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக ரெடிஃப் , தெகல்கா, அவரது உடல்நிலை குறித்து ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி மீதும் வழக்கு போடப்பட்டது. ஆனால் அதற்குபின், அவரது உடல்நிலை குறித்து எந்த செய்திகளும் வெளிவருவதில்லை. 

கடந்த 1991 முதல் 1996 ம் ஆண்டு வரை நடந்த ஆட்சியில்,  ஜெயலிலதா அரசு 120 அவதூறு வழக்குகளை போட்டிருந்தது. ஆனால் ஆட்சி முடியும் தருவாயில் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவ்வளவு ஏன்,  தற்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ள நாஞ்சில் சம்பத் மீது கூட 26 அவதூறு வழக்குகள் இருந்தன.  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அவர் அதிமுகவில் ஐக்கியமானதையடுத்து, அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. 

தற்போது ஆட்சி முடியும் தருவாயில் செம்பரப்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர் ஆகிய நாளிதழ்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதான் கடைசி அவதூறு வழக்குகள் என்றும் கூறி விட முடியாது. இனியும் வரலாம்.

ஆனால் அதிமுக தரப்பிலோ, கடந்த திமுக ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வகையில் முதல்வர் கருணாநிதி சார்பில் 52 அவதூறு வழக்குகள் பதியப்பட்டதே... அதற்கு பதில் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். 

தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் 182 அறிவிப்புகளைதான் வெளியிட்டுள்ளார். ஆனால் அதனை விட அவர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் எண்ணிக்கைதான் அதிகம். 

இந்தியாவை பொறுத்தவரை,  மேற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜியும் தனது அரசியல் எதிரிகள் மீது அவதுறு வழக்குகளை தொடர்வதில் வல்லவர்தான்.  தற்போது  அவரையும் தமிழக முதல்வர் மிஞ்சி விட்டாராம். 

இப்போது அவதூறு வழக்குகளின் தலைநகரம் சென்னை என்ற பேச்சு டெல்லியில் அடிபடுகிறதாம்!


நன்றி - விகடன்

மப்புக்கு முன், மப்புக்குப்பின்

1]தனியா நின்னா 100 தொகுதில ஜெயிப்போம்.


தலைவரே! அப்போ அப்டியே நின்னு ஜெயிக்கலாமில்ல?எதுக்கு கூட்டணி பேரம் பேசறீங்க?



=============

2]வந்த ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் நெய் தோசை போட்டே கை வலி வந்தாச்


நீங்க சுட்டதா?
நான் சுட்டா என்ன?என்.ஆத்துக்காரர் சுட்டா என்ன? பரிமாறுனமில்ல?



==================

3]யுவர் ஆனர்.ஊர் ல ஒரு பய மஞ்சு விரட்டு ல கலந்துக்கக்கூடாது.தடை நீடிக்கனும்


நீங்க யாரு?
மஞ்சுவோட புருசன்


===============


4]டாக்டர்.தாய்ப்பால் கொடுப்பதால் ஏதாவது நன்மை இருக்கா?


பால்காரருக்கு ஆகற செலவு குறையும்.ஆரோக்யம் கூடும்



============

5]மேடம்.வாசல்ல கோலம் போட்டுட்டு அங்க சோடா ,கலர் பாட்டில் எதுக்கு வரிசையா வெச்சிருக்கீங்க?


இது தான் கலர்க்கோலம்.


=============


6]டியர்.நியூ இயர்க்கு 5 சேலை எடுக்கனும்


அய்யய்யோ.ரொம்ப செலவு வைக்கும் பஞ்ச சேலைக்கொள்கையா இருக்கே?


================

7] டியர்.கடைசி வரை என்னோடு இணைஞ்சிருப்பீங்கன்னு உறுதி சொன்னா படத்துக்கு வர்றேன்.


க்ளைமாக்ஸ் முடியும் வரை தியேட்டரை விட்டு போகமாட்டேன்.ப்ராமிஸ்


=====================


8 உங்களுக்கு பிடிக்கலன்னா ப்ளாக் பண்ணிட்டு  இருக்கலாமே?


மிஸ்! உங்களைப்பிடிக்காம இருக்கறதுக்கும் BLOG ஓப்பன் பண்றதுக்கும் என்ன சம்பந்தம் ?


============================================================


படத்துல எல்லாம் விஜயகாந்த் வசனம் பேசும் விதம் கணீர் கணீர்னு இருக்கும். இப்ப பேசுறப்ப வழவழப்பு அதிகமா இருக்கே ?



அது மப்புக்கு முன், இது மப்புக்குப்பின்


====================


10 எங்க வீட்ல என்ன சமச்சாலும் எனக்கு மட்டும் முட்டை குடுத்துடுவாங்க 

ஓஹோ, ஸ்கூல் ல படிக்கும்போதும் முட்டை, வீட்ல சாப்பிடும்போதும் முட்டை?



===================


11 எங்க வீட்ல என்ன சமச்சாலும் எனக்கு மட்டும் முட்டை குடுத்துடுவாங்க 

ஓஹோ, ஸ்கூல் ல படிக்கும்போதும் முட்டை, வீட்ல சாப்பிடும்போதும் முட்டை?


=================

12 சார், உங்களை வளர விடுவது தமிழக அரசியலுக்கு நல்லதில்லைனு சொல்றாங்களே?

 ஒரு சின்ன கரெக்சன், தமிழக அரசியல்வாதிகளுக்கு நல்லதில்லை


=========================


13/எந்த மாதிரி பொண்ணு பார்க்கறீங்க மாப்ளே?


ஊர்லயே அவதான் எழில் அரசியா இருக்கனும்
ட்விட்டர் அடிக்ட் = அய்யய்யோ. அப்போ வாயாடியா இருக்கும்,OK?



==============================



14]தமிழ் நாட்ல இருக்கற எல்லா சில்ட்ரன் பார்க்கும் ஒரு விசிட் அடிக்கனும்
ஓஹோ, குழந்தைகள்னா பிடிக்குமா?
அங்கன தான் லவ்வர்ஸ் வருவாங்க


===================



1`5]சார், உங்க தியேட்டர்ல படுத்துட்டே படம் பார்க்கலாமாமே?
ஆமா, ஆனா தனியா படுக்கனும்


===============


16]குருவே! அனுதினம் சிரிச்சுக்கிட்டே இருக்கனும்..னா நான் என்ன செய்யனும்?


அனுவுக்கு டெய்லி கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டே இருக்கனும்

==============


17 டியர், இந்த மாசம் பத்திரிக்கை ஆஃபீஸ்ல எம்புட்டு துட்டு கிடைச்சுது?

துட்டு கிடைக்கலை, துப்பு தான் கிடைச்சது


=============

18 மிஸ்! உங்க லவ்வர்க்கு கை பெண்ட் ஆகி இருக்குமா?
ஏன் கேட்கறீங்க? வளைக்கரம் நீட்டி எனை
வளைத்திடுவாய் என்னவனேன்னு கவிதை சொன்னீங்களே?

============

19 டாக்டர்.டெய்லி கனவுல பன் வருது..தவிர்க்க என்ன செய்யனும்?
டீக்கடைல உக்காந்து தூங்காதீங்க.

===============


20 எதுக்காக அவரை கொலை செஞ்சே?
யுவர் ஆனர்.எப்போப்பாரு சாவு மரணம் தற்கொலை னு கவிதை எழுதி சாகடிச்ட்டே இருந்தாரு.அதான் அவரையே சாகடிச்ட்டேன்

==================

Tuesday, January 05, 2016

விஜயகாந்த் ஏன் கருணாநிதி, வைகோ, பி.ஜே.பிக்கு தேவைப்படுகிறார்? - தி.மு.க. சர்வே சொல்லும் உண்மை!

2005-ல் விஜயகாந்த் 'அரசியல் என்ட்ரி’ கொடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தபோது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'நீண்ட காத்திருப்புக்கு பிறகு தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்துவிட்டது' என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
திரையில் பார்த்த அதே சிவந்த கண்களோடும் கோபத்தோடும் விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வறுத்தெடுத்தார். அவரது தீவிரப் பிரசாரமும் கணிசமான மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் சாதகமாக இருக்க... அப்போது நடைபெற்ற தேர்தலில் 8.38% வோட்டுக்களை அவர் குவித்ததோடு தன் கட்சி சார்பாக தனி ஒருவனாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயித்தார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினரால் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், தே.மு.தி.க. ஒரு கட்சியாக சுமார் 10% வோட்டுகளைப் பெற்றது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஜயகாந்த் உருவெடுத்தார். தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு மாஸ் காட்டி வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் தனது முழு எதிர்ப்பையும் அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.கவின் மீது திருப்பினார். அவரோடு கூட்டணி வைத்துக் கொள்ள பலரும் அப்போது ஆவலாக இருந்தாலும்,  விஜயகாந்த் அ.தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில்  தி.மு.கவை மூன்றாவது இடத்துக்கு தள்ளிய விஜயகாந்தின் தே.மு.தி.க., 29 சீட்டுக்களை வென்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்த்தைப் பிடித்தது. ஆனால், ஜெயலலிதாவுடனான விஜயகாந்தின் கூட்டணி நீண்டநாள் நீடிக்கவில்லை. அதனால் தனக்கு கைவந்த கலையான, தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் அவர் பழையபடியே தாக்கி,  அரசியல் அரங்கில் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருந்தார். 
ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தல் விஜயகாந்தின் செல்வாக்குக்கு ஒரு செக் வைத்தது. பி.ஜே.பி., பா.ம.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்து விஜயகாந்த் மூன்றாவது அணியாகத் தேர்தலில் போட்டியிட்டபோது, எதிர்பார்ப்புகள் எகிறியது. ஆனால், முடிவுகள் விஜயகாந்துக்கு சாதகமாக இல்லை. வெறும் 5% வோட்டுக்களையே அவரது கட்சியால் பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க.,  நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, அவரது கட்சியால் ஒரே ஒரு இடத்தைக்கூட ஜெயிக்க முடியவில்லை. அத்தேர்தலில் பி.ஜே.பி.,  விஜயகாந்தின் தே.மு.தி.கவை-விட அதிக வோட்டுக்களை வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தது.
  (குறிப்பிட்ட வருடத்தை க்ளிக்கினால், அப்போதைய தேர்தலின் புள்ளிவிவரமும், கட்சிகளின் ஏற்ற இறக்கமும் தெரியவரும்!)


.

வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் என நான்கு கட்சிகள் சேர்ந்து அமைத்திருக்கும் மக்கள் நலக் கூட்டியக்கம்,  விஜயகாந்தை சந்தித்து தங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்த வண்ணமிருக்கின்றன.
’விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சியே’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த முஸ்தீபுகளைக் கண்டு அரண்டு மிரண்டு, 'விஜயகாந்த் இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்' என்று பி.ஜே.பி. தொடந்து சொல்லிவருகிறது. இப்படி இவர்கள் எல்லாரும் சேர்ந்து விஜயகாந்தை, 'சி.எம்.  மேக்கர்’ அளவுக்கு நடத்துகிறார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சியின் வீரியம் அந்தளவுக்கு இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
'ம.தி.மு.க. மிக ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு தேர்தலிலும் அது சரிவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. வைகோவைப் போலவே விஜயகாந்தும் சரிவைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி வைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்கக்கூடிய சக்தியோ... அல்லது கூட்டணி வைக்காத கட்சிகளை தோற்கடிக்கக்கூடிய சக்தியோ விஜயகாந்துக்கு இல்லை. கூட்டணி பேரம் பேசும் வலிமையும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது' என்கிறார் அப்சர்வர் ஆராய்ச்சி மைய இயக்குநர் என்.சத்தியமூர்த்தி.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி,  கூட்டணிக்காக விடுத்திருக்கும் அழைப்பில், விஜயகாந்துக்கான எச்சரிக்கையும் அடங்கியிருக்கிறது எனக் கருதுகிறார்  சத்தியமூர்த்தி. ’நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு,  நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளோடு எங்களோடு கூட்டணி அமைக்க வந்தால் சீக்கிரமாக வாருங்கள். இல்லையென்றால் உங்களுக்காக காத்திருக்க முடியாது' என காங்கிரஸுக்கான செய்தி விஜயகாந்துக்குமான சமிக்ஞையும் மறைந்திருக்கிறது என்கிறார் அவர்.
'2011-ல் விஜயகாந்துக்கு கூட்டணி பேரம் பேசக்கூடிய அளவுக்கு வலிமை இருந்தது. இப்போதோ, அவரது வாக்கு வங்கி கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால், அவரது பலத்தை எல்லாக் கட்சிகளுமே அதிகமாக மதிப்பிடுகிறார்கள். ஆனால், முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் விஜயகாந்தின் செல்வாக்கு நிச்சயம் உயர வாய்ப்பில்லை. காரணம், சொந்த கட்சிக்காரர்களை பொது இடத்தில் அடிப்பது, கோபத்தில் கொந்தளிப்பது, உணர்ச்சிவசப்பட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது என விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளும் பொதுவான வாக்காளர்கள் மத்தியில் அவர்மீது நம்பகத்தன்மையைக் குறைக்கலாம். ஒருவேளை தனது மனைவி பிரேமலதாவை முன்நிறுத்தி தேர்தலைச் சந்தித்தால், அந்த வியூகம் நல்ல பலன் கொடுக்கலாம்!’’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான ஜி.சி.சேகர்.


இந்நிலையில் தி.மு.க. தேர்தல் பல்ஸ் அறிந்து கொள்ள தமிழகம் முழுக்க ஒரு சர்வே நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன்படி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் அதற்கு 30-35 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்று கணித்திருக்கிறார்களாம். இது தி.மு.க. தரப்புக்கு அதீத உற்சாகமளித்திருக்கிறது. 'இந்த சர்வே முடிவுகள் எங்களுக்கு தெம்பளித்திருக்கிறது. விஜயகாந்தோடு கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இல்லை. காரணம் இந்த சர்வேயின்படி விஜயகாந்துக்கு 6% வோட்டுக்கள் இருப்பதால்,  அவர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவருக்குத்தான் நல்லது. அவரும் சேர்ந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் அது வெற்றிக் கூட்டணி. ஆனால், அவர் சேராவிட்டாலும் அதை வெற்றிக்கூட்டணியாக மாற்ற நாங்கள் வியூகம் வகுத்துக் கொள்வோம்!’ என்று விறுவிறுக்கிறார்கள் தி.மு.க. தரப்பில்!    



இது தி.மு.கவின் நிலைப்பாடு. மக்கள் நலக் கூட்டணி ஏன் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க முட்டி மோத வேண்டும்? ’’காரணம் பிஜேபிக்கு முதலமைச்சராக முன்னிறுத்த ஒரு வேட்பாளர் வேண்டும்’’ என்று சொல்லும் அரசியல் பார்வையாளர் என்.சத்தியமூர்த்தி,  ’’அதனால்தான் முதல்வர் வேட்பாளர் குறித்த தன் நிலைப்பாட்டில் இருந்து பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் இப்போது இறங்கி வந்து கருத்து தெரிவித்திருக்கிறார். இன்னொருபுறம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வைகோவுக்கு விஜயகாந்த் தேவைப்படுகிறார். காரணம் அவருக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே கதவுகளை அடைத்துவிட்டன. எப்படியும்  ஆட்சி அமைக்கும் அளவுக்கு வோட்டுக்கள் வாங்கப் போவதில்லை என்பதால், மக்கள் நல இயக்கம் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை!’’ என்று முடிக்கிறார் சத்தியமூர்த்தி.


கட்சி துவங்கிய பின் சந்தித்த முதல் சில தேர்தல்களில்,  வாக்குகளைக் குவித்ததைத் தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஆக்கப்பூர்வமாக விஜயகாந்த் எந்த சாதனையும் செய்யவில்லை. ஆனாலும் அவருக்குச் சாதகமாக அரசியல் காற்று  இப்போது வீசுகிறது. இந்த சூழ்நிலையில்... கேப்டன் விஜயகாந்த் பிரமாண்ட பனிப் பாறையை நோக்கிச் செல்லும் தன் கப்பலை திசை திருப்பி கரை சேர்ப்பாரா... அல்லது பாறையில் மோதி கவிழவைப்பாரா என்பதை விஜயகாந்தின் வியூகமே தீர்மானிக்கும்! 

- Sandhya Ravishankar (@sandhyaravishan) 

தமிழில் : பி.ஆரோக்கியவேல்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி 

நன்றி - விகடன்

விஜயகாந்த் அரெஸ்ட் ஆனா 15% ஓட்டு.ஆகலைன்னா 12% ஓட்டு.

1]ஆந்திர சட்டசபை வளாகத்தில் மோதல்: நான் மயக்கமடந்்ததை TVயில் பார்த்து கணவர் கதறி அழுதார்- ரோஜா # மறுபடியும் மாசமா இருக்கீங்கனு நினைச்ட்டாரோ?
2]
=============



2]இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களில் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு அதிகம்" - செய்தி. # ஆனா தேர்தல் நிதி மட்டும் கேப்பாரு




===============



3]விஜய்காந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பத்திரிகையாளர் சங்கம்// படம் பார்க்கல? தமிழ் ல அவருக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு.ஆங்




==============



4]கும்பகோணத்தில் தேமுதிகவினருக்கு சரமாரி அடி உதை கொடுத்த அதிமுகவினர் # எல்லாக்கட்சிக்காரங்களும் இப்டி அடிச்சுக்கிட்டு உள்ளே போய்டுங்க.



===================



5]ஜீன்ஸ் லெகின்ஸ் அணிந்து கோவிலில் நுழையும் போராட்டம் நடத்துவோம் - லீணாமணிமேகலை #,கடவுளே மிரண்டுடப்போறாரு.எப்டியோ நமக்கும்கொண்டட்டம்



======================



6]

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் 31,000ரூபாய் கடன் சுமையை ஜெ ஏற்றி வைத்துள்ளா -கலைஞர் # தலைவா.நாம கிரீடமா சூட்டிட்டுப்போனோம்?


============



7]சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர காங்கிரஸ்கு அழைப்பு: கருணாநிதி ! இண்ட் மைனஸ் பிளஸ் ஆகிடும்னு தலைவர் கணக்கு போடறாரா?




==============






8[கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்: சீமான் அறிவித்தார்...#4,பேர் 4,விதமா பேசினாலும் கட்சில 4 பேர் இருக்காங்க.மகிழ்ச்சி




=================



தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு எடுப்போம்: சரத்குமார் # ஆனா அம்மா மடம் ஆகாட்டி அய்யா மடம்.




=================





10]எதிர்க்கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த், சரியாக பயன்படுத்தவில்லை: அன்புமணி # கபடி , விளையாண்டதே இல்லைங்கறாரா?



================




11]ஐரோப்பாவுக்கு செல்கிறேன்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: ராகுல் காந்தி.# மோடிக்கு டூர் ல டப் பைட் கொடுப்பார் போல




===============



12]BJP என்னிடம் மன்னிப்புக்காக கெஞ்சுகிறது - அரவிந்த் கெஜ்ரிவால் ’டுவிட்’...# கெஞ்சுனா மிஞ்சுவாரு.அவதூறு வழக்கு போட்டு மிஞ்சுனா கெஞ்சுவாரு



==================



13]சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் 11 கோடியாக உயர வாய்ப்பு # இது இனிப்பான செய்தி அல்ல.கசப்பான உண்மை




==============



14]



கூட்டணிக்காக யாருக்கும் தி.மு.க., அழைப்பு விடுக்கவில்லை: ஸ்டாலின் # கதவு எப்பவும் திறந்தே இருக்கும்னு அப்பா அடிக்கடி சொல்வாரே?




==============



15]எங்களுடைய கொள்கைகளுக்கு உடன்பட்டால் பாஜகவுடன் கூட்டணி - ராமதாஸ்..# உங்க கொள்கை என்ன?

எப்டியாவது என் பையனை சிஎம் ஆக்கனும்"




===============




16]ஜல்லிக்கட்டு போட்டிக்காக முதலில் குரல் குடுத்தது நாங்கள் தான் - ராமதாஸ் எது நடந்தாலும் ஒரு குரல் கொடுத்து வைப்போம்.யூஸ் ஆகும்



============



17] விஜயகாந்துக்கு எதிராக போராட்டம் : அதிமுக தொண்டர்களுக்கு ஜெ வேண்டுகோள் #,எதிரியோட பயம் நமக்கு பலம் - கேப்டன் மைன்ட் வாய்ஸ்



===============

18]விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்!

-பத்திரிக்கையாளர் சங்கம்!#,
ம்ஹூம்.வந்தா அடிப்பீங்க
கேப்டன்=கிட்டே வா.சாரி சொல்றேன்.




=============

19 விஜயகாந்த் வீடு, கட்சி அலுவலகம் முன்பாக திடீர் போலீஸ் குவிப்பு.... பதறும் தேமுதிக #,பதறுனது அதிமுக.சிதறுனது நிருபருங்க


==============

20 ஜெ. படம் கிழிப்பு விவகாரத்தில் கைது அச்சம்: மதுரையில் விஜயகாந்த் முன் ஜாமீன் மனு! # அரெஸ்ட் ஆனா 15% ஓட்டு.ஆகலைன்னா 12% ஓட்டு.


===================




பிரேமம்’ -எந்நு நிண்டே மொய்தீன்’ - மெகா ஹிட் ஆன மலையாளப்படங்கள்

மலையாள சினிமாவுக்கு 2015 வெற்றி மேல் வெற்றியைத் தந்த ஆண்டு. பொதுவாக மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றி என்பது குறிஞ்சிப் பூ பூப்பதுபோல. பத்தாண்டு, பன்னிரெண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அபூர்வம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டில் ‘பிரேமம்’ என்னும் மாபெரும் வெற்றியில் மலையாள சினிமா திளைத்துக்கொண்டிருக்கும்போதே ‘எந்நு நிண்டே மொய்தீன்’ படமும் தன் ஜெயக் கொடியைப் பறக்கவிட்டது.


இந்திய அளவில் ஒப்பிடும்போது மலையாள சினிமா மிகக் குறைவான பட்ஜெட் கொண்ட துறை. அதனால்தான் இந்தி, தமிழ், தெலுங்கு சினிமா அளவுக்கு அதிகப் பொருள் செலவில் மலையாளத்தில் படம் தயாரிக்கப்படுவது இல்லை. தமிழ், இந்தியில் தயாரிக்கப்படும் படங்களே மலையாள ரசிகர்களின் பிரம்மாண்ட ரசனையை நிறைவேற்றி வந்தன.



அங்கு பிரம்மாண்டம் என்ற சொல் பிரியதர்ஷன் போன்ற இயக்குநர்கள் வருகைக்குப் பிறகே உச்சரிக்கப்பட்டது. மலையாள சினிமாக்களில் பெரும்பாலானவை, ஊர், தரவாட்டு வீடுகள், சாயா கடை என ஒரே மாதிரியான பின்னணியைக் கொண்டவைதான். பட்ஜெட்டும் மிக மிகக் குறைவானதுதான். மோகன்லால், மம்மூட்டி போன்ற மலையாளா சூப்பர் ஸ்டார்களின் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


தொடராத முதல் பிரமாண்டம்
மலையாள சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படம் 2009-ல் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த கேரள வர்மா பழசிராஜாதான். 27 கோடி ரூபாய் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனாலும் இந்த வெற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கப்படவில்லை.



தமிழ், இந்திபோல மலையாள சினிமாவுக்குப் பரவலான பார்வையாளர்கள் இல்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். கேரளத்துக்கு வெளியே அரபு நாடுகளில் குறிப்பிட்ட அளவில் மலையாளிகள் இருந்தாலும் தமிழ், இந்திப் படங்களுடன் ஒப்பிடும்போது மலையாளப் படங்களுக்கான வியாபாரம் குறைவுதான்.



புதுப்பிக்கப்பட்ட சினிமா
சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ கேரளத்தையும் தாண்டி மலையாளப் படங்களுக்கான பார்வையாளர்களைப் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் ‘பிரேமம்’ சென்னையில் அரங்கு நிறைந்த 200-வது நாளைக் கொண்டாடியுள்ளது. இதை மலையாள சினிமாவின் வியாபாரம் பெருகியிருப்பதற்கான ஓர் அடையாளமாகக் கொள்ளலாம். ‘பிரேமம் அது வரையிலான மலையாள சினிமாவில் வசூல் சாதனைகளை இரண்டே வாரத்தில் முறியடித்துச் சாதனை படைத்தது.



நிவின் பாலி தவிர பெரிய அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து மாபெரும் வெற்றியை அதன் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் சாத்தியப்படுத்தியுள்ளார். அதுபோல தொழில்நுட்ப ரீதியிலும் மலையாள சினிமாவைப் புதுப்பித்துள்ளார். தமிழ், இந்தி சினிமாக்கள், மலையாளத்தில் அடையும் வெற்றியின் சூட்சுமத்தைப் புரிந்து, அந்த ரசனையை ‘பிரேம’த்தில் புகுத்தி வெற்றியைத் தட்டிச் சென்றிருக்கிறார். 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 14 நாட்களில் 20 கோடி ரூபாயை வசூலித்துத் தந்தது. மம்மூட்டி, மோகன்லால், திலீபின் படங்கள்கூட இந்த அளவுக்கு வசூலை ஈட்டியதில்லை. இந்தப் படத்தின் மொத்த வசூல் 60 கோடியைத் தாண்டிவிட்டது.



மேலும் பல வெற்றிகள்
‘பிரேம’த்தின் வெற்றி மலையாள சினிமாவுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வியாபாரத்தின் நிலையையும் உயர்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெளிவந்த ‘எந்நு நிண்டே மொய்தீன்’ படமும் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. பிருத்விராஜ் நடிப்பில் 13 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’, ‘அமர், அக்பர், ஆண்டனி’ ஆகிய இரு படங்களும் இந்த ராஜபாட்டையில் கைகோத்துக்கொண்டன.



இந்த வெற்றி தந்த உற்சாகத்தால் மோகன்லாலின் ‘புலிமுருகன்’, மம்மூட்டியின் ‘மெகா ஸ்டார் 393’ திலிபீன் ‘குமார சம்பவம்’ பிருத்விராஜின் ‘சிமந்தகம்’ ஆகிய பெரும் பட்ஜெட் படங்கள் தயாரிப்பில் உள்ளன. இவை 2016-ம் ஆண்டின் சாதனைகளாக இருக்கலாம். பட்ஜெட் விஷயத்தில் மலையாளப் படங்கள் சிறகுகளை கொஞ்சம் அகல விரிப்பதற்கான தன்னம்பிக்கையைக் கடந்த ஆண்டின் வெற்றிகள் சாத்தியமாக்கியிருக்கின்றன.


நன்றி - த ஹிந்து

அதிமுகவில் 'தொடர் பதவி பறிப்புகள்': காரணம் என்ன?

.தி.மு.க.வில் கட்சிப் பொறுப்பாளர்களின் பதவிகளும், மந்திரிகளின் பதவிகளும் ' திடீர் ' மாற்றத்துக்குள்ளாவது  புதிதான விஷயமல்ல. தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்த செந்தமிழனை இன்று அப்பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் ஜெயலலிதா. அதே வேளையில், திருப்பூர் மாவட்டத்திலும் இப்படி பதவி பறிப்பு நடந்துள்ளது. மேலும் 
அ.தி.மு.க.வின்  பிரசார பீரங்கியாக காட்சியளித்த நாஞ்சில் சம்பத்தின் பதவியைப் பறித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் ஜெயலலிதா. 

"முன்பெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிட்டு அடிப்பாங்க, இப்ப சொல்லாமலே அடிக்கறாங்களே..." என ஜெ.வின் பதவிப்பறிப்பு பட்டியலில் இடம் பெறுபவர்களிடமிருந்து புலம்பல் சற்று அதிகமாகவே எதிரொலித்ததால், கோட்டையில் சற்று காதை கொடுத்தோம். 
 
திருப்பூர் புறநகர் மா.செ. பொறுப்பிலும், துணை சபாநாயகர் பொறுப்பிலும், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பிலும்  இருந்து வந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவர் இப்பதவிக்கு வந்தபோது, தமிழ்நாடு கேபிள் கழக தலைவராக  இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். 'பொள்ளாச்சி' யின் கைகளுக்கு மா.செ. பொறுப்பு போவதற்கு முன்னர் அது 'உடுமலை' கையில்தான் இருந்தது. அந்த பொறுப்பை பிடுங்கித்தான் பொள்ளாச்சி ஜெயராமன் கையில் ஜெயலலிதா கொடுத்திருந்தார். இப்போது பரமபத விளையாட்டில் அதே பொறுப்பு மீண்டும் 'உடுமலை' கைக்குப் போயிருக்கிறது. 

இப்போது துணை சபாநாயகர் பொறுப்போடு, பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் பிரிவு செயலாளராக மட்டுமே இருக்கிறார். பொள்ளாச்சியையும், உடுமலையையும் இருந்த இடத்துக்கே மீண்டும், மீண்டும் மாற்றிப் போட்டு ஒரு 'ஜெர்க்' கொடுத்துள்ள ஜெயலலிதா,  தென் சென்னை மா.செ.வான,  எம்.எல்.ஏ. செந்தமிழனை 'காலி' செய்து அந்த இடத்துக்கு மார்க்கெட் பாபு என்பவரை மா.செ. ஆக்கியிருக்கிறார். உடுமலை, பொள்ளாச்சி ஆகியோருக்கு  'யு' டர்ன் மாற்றம் என்பதால் அது பற்றி பெரிய அளவில் பேச்சு எழவில்லை. ஆனால், செந்தமிழன் கதைதான் பாவம். "சட்ட அமைச்சராக இருந்தவர், ஒருமுறை மா.செ. வாக இருந்தவர்... மீண்டும் அவரைத் தேடிப் பிடித்து கொடுத்த பதவி இப்படியா பறி போகணும்?"   என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

'என்னதான் ஆச்சு?' அவர்களிடமே கேட்டோம். "அண்ணன்தான்  கோட்டூர்புரம் ஏரியாவில் அதிகமா அம்மாவோட பொதுக்குழு பேனரை வெச்சவரு. இதுக்கு முன்னால பொறுப்புல இல்லாதபோதும் அண்ணன் வைக்குற பேனரை அடிச்சுக்க சிட்டியில் ஆளே இல்ல. அதுல நாலஞ்சு பேனருங்க காத்துல கீழே விழுந்து கொஞ்சம் பேருக்கு அடிபட்டிருக்கும்போல. அதை  நம்ம கட்சியில அவருக்கு எதிரா இருக்குற கும்பல் 'அம்மா' கிட்ட வசமா போட்டு விட்டுட்டாங்க . அதுக்குத்தான் இந்த நடவடிக்கைன்னு இப்போதைக்கு சொல்லிக்கிறாங்க... உண்மையான காரணம் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும். பேனர் வெச்சாலும் பிரச்னை, வைக்காமல் போனாலும் பிரச்னைதாங்க" என்கின்றனர். 

தொடர்ந்து அவர்களே, "எங்க கட்சியைப் பொறுத்தவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கினால்தான் கொஞ்சம் சிக்கல். அம்மாவுக்கு கோபம் தீர ரொம்ப நாளாகும், நம்மாளு ஏதோ பெருசா பண்ணிட்டாருன்னு முடிவு பண்ணிக்குவோம், இதுக்குப் பேருதான் 'நீக்கம்'. 

'விடுவிப்பு' என்றால், பதவி பறிப்பு மட்டும்தான். அடிப்படை உறுப்பினர் பதவியில் கை வைக்க மாட்டார்கள். 'நீக்கம்' செய்தால், அந்த அறிவிப்பிலேயே 'இவர்களுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தலைமையால் அறிவுறுத்தப் படுகிறது' என்று அம்மா தெளிவாக கீழே ஒரு லைன் சேர்ப்பார்கள். அத்தோடு அந்த ஆசாமி காலிதான். விடுவிப்பு என்றால் அப்படி ஒரு 'லைன்' சேர்க்க மாட்டார்கள்...' என்று தெளிவாக (!) விளக்கினர்

தென்சென்னை மாவட்டத்தில் இன்னும் சில 'தலை' களும், வடசென்னை மாவட்டத்தில் சில 'தலை'களும் அடுத்தடுத்து உருளும் என்று கட்சி வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியிருக்க,  அச்சத்தில் இருக்கின்றனர் இன்னும் பலர். அதே சமயம் பதவி பறிப்புகள் குறித்து இன்னொரு தகவலும் உலாவருகிறது. அ.தி.மு.க.வில் நிஜமாக கட்சிக்காகப் பாடுபட்டு உழைத்து கட்சியின் இக்கட்டான நேரங்களில் 'அம்மா' வுக்காக சிறைக்குப் போனவர்களுக்கு 'பதவி' கொடுக்கும் முனைப்பில் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாம்.

இதற்கான முன்நடவடிக்கைகள்தான் இந்த 'கட்டம் கட்டும் படலம்' என்கிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை  கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் இண்டு இடுக்கெல்லாம் அறிந்தவர் என்பதால் அவரிடமே களைப்பறிப்பு வேலையை ஒப்படைத்திருக்கிறதாம தலைமை. வட்டம், பகுதி தொடங்கி, அது மாவட்டம் வரை எபெக்ட் கொடுக்கும் என்பதால், வடசென்னை ர.ர.க்கள் அன்றாடம் 'மது' முகத்தில் விழிப்பதே சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். 

- ந.பா.சேதுராமன்

நன்றி - விகட்ன்