Tuesday, January 05, 2016

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெயலலிதாவுக்கு 3 கேள்விகள்!

பேச்சுதான் அரசியலுக்கு மூலதனம். 'பேசிப்பேசியே ஆட்சியை பிடித்தார்கள்' என திராவிடர் இயக்கத்தை சொல்வார்கள். ஆனால் இன்று மேடைப்பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது பல மணி நேரம் காத்திருந்து மேடைப்பேச்சை ரசித்து கேட்ட தலைமுறை இப்போது ஓய்ந்து விட்டது. மற்றொன்று கொள்கையை பற்றி பேசிய மேடைகள் எல்லாம் இப்போது கட்சித்தலைமையை வரம்புக்கு மீறி புகழ்வது, எதிர்கட்சிகளை அளவு கடந்து விமர்சிப்பதுமாக மாறி விட்டது. தமிழகத்தில் பேச இப்போது ஆட்களில்லை. இருக்கும் சிலரும் கட்சியின் உத்தரவுக்கிணங்க (?) பேச வேண்டி இருப்பதால் அவர்களில் பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது. 


நாவை சுழற்றி பேசியவர்கள் எல்லாம் இப்போது எதை பேசுவது என தெரியாமல் தத்தளிக்கும் நிலைதான் இன்று உள்ளது. அதில் ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். அபாரமான பேச்சாற்றலுக்கு சொந்தமானவர். பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். எந்த பேச்சால் பெரும்பாலானோரால் கவரப்பட்டாரோ அதே பேச்சால் இப்போது கட்சி பதவியை இழந்து, அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத். 



'மதிமுகவில் நாஞ்சில் சம்பத்'



அரசியலில் பின்னால் நடக்கப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே அறிவிக்க கூடியவர்களாக கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் இருப்பார்கள். தங்களால் வெளிப்படையாக சொல்ல முடியாததை, கட்சியின் நம்பிக்கையான இரண்டாம் கட்டத்தலைவர்கள் மூலமாகத்தான் கட்சித்தலைவர்கள் வெளிப்படுத்துவார்கள். அப்படி ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர், கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். நெருக்கடியான நேரங்களில் கட்சி எடுக்க கூடிய முடிவுகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துபவராகவும் அவர் இருந்திருக்கிறார்.



2006 சட்டமன்ற தேர்தல் நேரம் அது. தி.மு.க.வுடன் கூட்டணி என அறிவித்து, கலைஞரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் இருந்தது ம.தி.மு.க. அப்போது அ.தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதிமுகவோடு உறவு வைத்துக் கொள்ள, வைகோவின் கைது படலம் தடையாக இருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் காளிமுத்து.

'அதிமுக உடன் கூட்டு என்பதை முதலில் அறிவித்தவர்'


அந்த நேரத்தில் காளிமுத்துவின் அழைப்புக்கு நன்றி சொல்லி பேசியதோடு, தி.மு.க.வுக்கு தனது பேச்சின் மூலம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத். "மதிமுகவை அலட்சியப்படுத்திவிட்டு இனி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  வைகோ கை காட்டுபவர்தான் அடுத்த முதல்வர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதிமுகதான் எதிர்க்கட்சியாக அமரும், மதிமுகவுக்கு அதற்குரிய கெளரவம் கொடுக்காவிட்டால் தனித்துப் போட்டியிட நாங்கள் முட்டாள்கள் இல்லை, அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடுவோம்" என அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து முதலில் பேசியது நாஞ்சில் சம்பத்தான்.



நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவிக்க, அதற்கு வைகோ வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அடுத்த சில நாட்களில் நாஞ்சில் சம்பத் பேசியபடியே போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தது ம.தி.மு.க. "நேற்று வரை தி.மு.க.வில் இருந்து கூட்டணி பேச்சு நடத்திக்கொண்டே, அ.தி.மு.க.விலும் கூட்டணி பேச்சை நடத்தியிருக்கிறார்" என வைகோ மீது விமர்சனங்கள் வந்து விழுந்தபோது அதையும் தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத்.



"மு.க.முத்துவை முன்னிலைப்படுத்த எம்.ஜி.ஆரை நீக்கினார்கள். மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வைகோவை வெளியேற்றினார்கள். இரண்டு இயக்கமும் ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்டவை. ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்ட இரு இயக்கங்கள் ஒன்றிணைவதில் என்ன தவறு இருக்கிறது?" என நாஞ்சில் சம்பத் எழுப்பிய கேள்விகள்தான் அதிமுக உடனான கூட்டணியை நியாயப்படுத்தியது. அதன் பின்னர் வைகோவின் பேச்சைப்போல் நாஞ்சில் சம்பத்தின் பேச்சை கவனிக்கத்துவங்கினர் அரசியல் விமர்சகர்கள்.



'நெருக்கடியை பேச்சால் சமாளித்த சம்பத்'



ம.தி.மு.க.வுக்கு அது ஒரு சோதனை காலம். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறிய சூழலில், மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தது ம.தி.மு.க. கட்சியின் எதிர்காலம் அவ்வளவுதான் என விமர்சனங்கள் முன்வந்தபோது தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத். "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில், அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. 



ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது," இப்படி நாஞ்சில் சம்பத் மேடைக்கு மேடை பேசிய பேச்சு, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தது. நாஞ்சில் சம்பத்தின் பேச்சு கட்சிக்காரர்களை கட்டிப்போட்டது.



'கலைஞருக்கு வைகோ... வைகோவுக்கு சம்பத்...'



தொடர் தோல்விகளால் தி.மு.க. தொண்டர்கள் சோர்வுற்ற எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் அது. அ.தி.மு.க.வின் தலைவர்கள் ஒரு கோஷத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். 'கருவாடு மீனாகாது. கறந்த பால் மடியேறாது. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது' என்பதுதான் அது. அதற்கு பதில் சொன்னவர் கருணாநிதியின் போர்வாளாக இருந்த வைகோ. 'எங்கள் தலைவன் வெற்றிகளை இழந்திருக்கலாம். ஆனால் களம் காண்பதை நிறுத்தி விடவில்லை' என வைகோ பேசிய பேச்சு தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுத்தது போல, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது நாஞ்சில் சம்பத்தின் பேச்சுதான்.

ம.தி.மு.க.வில் தான் நினைத்ததை எல்லாம் பேசும் வல்லமை பெற்றவராக இருந்தார் நாஞ்சில் சம்பத். 2006 தேர்தலின்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை நாஞ்சில் சம்பத் பேசியது ஒன்றே அதற்கு சாட்சி. அதற்கு வைகோ மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டாரே தவிர, நாஞ்சில் சம்பத் மீது கட்சி நடவடிக்கை பாயவில்லை. ஆனால் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்த பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதன் உச்சம்தான் கட்சி பதவி நீக்கம். 


'பேச்சாளர்களை பற்றி கவலைப்படாத அதிமுக'



பொதுவாக பேச்சாளர்கள், கட்சியின் நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருப்பார்கள். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பேச்சாளர்களுக்கு கட்சித்தலைமை தெளிவாக விளக்கும். நெருக்கடியான சூழலில் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், மக்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக கட்சித்தலைமை சொல்லும். சில நேரங்களில் பயிற்சி பட்டறைகளை கூட நடத்தும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை பின்பற்றுவதில்லை. பேச்சாளர்களைப்பற்றி கவலைப்படாத கட்சி அ.தி.மு.க. கட்சி பொதுக்குழுவில் கூட யாரும் பேச அனுமதிக்காத கட்சியாகத்தான் அ.தி.மு.க. இருக்கிறது. 



கூட்டணி குறித்து தேவைக்கேற்ப முடிவு செய்வோம் என ஜெயலலிதா பேசியதோடு சரி. ஜெயலலிதா எதை நினைத்து அதை பேசினார் என்பது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாருக்கும் தெரியாது. இந்த சூழலில் பேச்சாளார்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களிடம் எதை கொண்டு சேர்ப்பார்கள். கட்சித்தலைமையை புகழ்வதும், எதிர்கட்சிகளை எல்லை மீறி திட்டித்தீர்ப்பதும்தான் பேச்சாளர்களின் வேலை என நினைப்பதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.



'பாவம்... நாஞ்சில் சம்பத் என்ன செய்வார்?'



நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட விவகாரத்துக்கு வருவோம். நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதற்கு சொல்லப்படும் ஒற்றை காரணம் தொலைக்காட்சி பேட்டிதான். இரு தொலைக்காட்சிக்கு ஒரே நேரத்தில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அதில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்தான் காரணம். பேட்டியில் 3 சர்ச்சைகள் எழுந்தன. ஒன்று தமிழக முதல்வர் குறித்து அவர் தெரிவித்த கருத்து. இரண்டாவது அ.தி.மு.க. கூட்டணி அமைக்க கூடும் என்ற கட்சிகளை திட்டித்தீர்த்தது. மூன்றாவது ஏற்கனவே அ.தி.மு.க. மீது கோபத்தில் இருக்கும் மக்களை மேலும் கோபப்படுத்தும் வகையில் பேசியது.



முதலாவது முதல்வர் ஜெயலலிதா குறித்து நாஞ்சில் சம்பத் சொன்ன கருத்துகளை பார்ப்போம். நாஞ்சில் சம்பத்திடம், வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவில்லையே என கேட்டதற்கு, 'ஆம் முதல்வர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சந்திக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அவரால் முடியும்போது சந்தித்தார்கள். இப்போது சந்திக்க முடியவில்லை" என பதிலளித்திருந்தார். இதில் என்ன பொய் இருக்கிறது?



மற்றொரு தொலைக்காட்சி பேட்டியில், ஏன் ஜெயலலிதாவை வரவேற்க இவ்வளவு ஆடம்பரம் என்ற கேள்விக்கு பதிலளித்த சம்பத், "அத்திப்பூ பூப்பதை போல எப்போதாவது வரும் ஜெயலலிதாவை கட்சியினர் ஆர்வம் காரணமாக ஆடம்பரமாக வரவேற்கிறார்கள்' எனசொல்லியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலிலும் உண்மை இல்லை என சொல்லி விட முடியாது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்தித்திருந்தால், அடிக்கடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜெயலலிதா நிகழ்த்தி இருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது.

'கோபப்பட வேண்டியது சம்பத் மீது மட்டுமல்ல'


இரண்டாவது பாரதிய ஜனதா, ம.தி.மு.க., இடதுசாரிகள் போன்ற கட்சிகளை விமர்சித்தது. இந்த கட்சிகள் யாவும் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கின்றன. மறுபுறம் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது என்ற விவரம் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை. இந்த சூழலில் கட்சியின் பேச்சாளராக தங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் கடமையைதான் நாஞ்சில் சம்பத் செய்திருக்கிறார். யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்தியிருந்தால், நாஞ்சில் சம்பத் கவனமாக இருந்திருக்க கூடும். ஆனால் அந்தக்கட்சியில்தான் அந்த உரிமை யாருக்கும் கிடையாதே. அவரென்ன செய்வார்...பாவம்!



மூன்றாவது மக்களைப்பற்றி பேசியது. வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா? யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும் என்பன போன்ற பதில்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அது. 



நேரடியாக நாஞ்சில் சம்பத் இந்த பதில்களை சொல்லவில்லை. ஆனால் எப்படியோ சமாளிக்க முயன்று, தோற்றுபோன தருவாயில்தான் இந்த பதிலை நாஞ்சில் சம்பத் உச்சரித்தார். சென்னையில் பெரு வெள்ளம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அங்கு மிக பிரம்மாண்டமாய் பொதுக்குழுவை நடத்தியது தான் இதற்கெல்லாம் காரணம். எனவே கோபப்பட வேண்டியது நாஞ்சில் சம்பத் மீது மட்டுமல்ல.

'கட்சிகள் விரும்புவதில்லை'


வெள்ள பாதிப்பின் போது மக்களை நேரில் சென்று சந்தித்திருந்தால்... யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு, யாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை கொள்கை பரப்பு செயலாளர்களுக்காவது தெரிவித்திருந்தால்...பொதுக்குழுவை குறைந்த பட்சம் விமரிசையாக நடத்தாமல் எளிமையாகவாவது நடத்தியிருந்தால், சர்ச்சைக்குரிய இந்த 3 கேள்விகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. பதில்களும் சர்ச்சைக்குரியதாகியிருக்காது. ஆக அந்த 3 கேள்விகள் ஜெயலலிதாவுக்குரியது!



அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கு அவர் மட்டும் காரணமல்ல. எந்த பேச்சும் இதயத்தில் இருந்து வரும்போதுதான், மக்களை ஈர்க்கும் என்பார்கள். ஆனால் இப்போது இதயத்தில் இருந்து எந்த பேச்சாளர்களும் பேசுவதில்லை. காரணம் எந்த கட்சித்தலைமையும் அதை விரும்புவதில்லை.

- ச.ஜெ.ரவி

thanx - vikatan

வாங்கிக்கட்டிக்கோ நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி

1]அப்பாடா.FBல இன்னைக்கு சாப்பாடு போட்டோ போட்டாச்சு,


மேடம்.ஆத்துக்காரருக்கு சாப்பாடு போட்டாச்சா?அன் பாலோ பண்ணிடப்போறாரு.



==============

2]ஜட்ஜ்= செய்தியாளர்களை சந்தித்தபோது எச்சில் துப்பினீங்களா?


கைதி = ஏன் மென்னு முழுங்கறீங்க?னு கேட்டாங்க.துப்பிட்டேன்




===============

3]தலைவரே! உங்களை துப்பு கெட்ட மனுசன் னு வீட்ல பேசறாங்க.


வெளில?

துப்பி கெட்ட மனுசர் னுதான்



==================

4]மிஸ்! ஐ லவ் யூ.


தூ.வெட்கமா இல்ல?

ஏம்மா நீ என்ன பெரிய கேப்டனா?,


=================

5]எடிட்டர் சார்.கேப்டன் என்னை துப்பிட்டாரு,


சரி.சென்சேசனல் நியூஸ்.உனக்கு இன் க்ரீமென்ட் 2000 ரூபா




===============


6]உங்க பையன் எங்கே?


வீட்ல இல்ல

எங்கே போய்ட்டாரு?
தெரியாது.ஆனா நாட்டை விட்டுப்போகல.ஏன்னா கைல காசில்லை



=================
7]கேப்டன்.உங்க மேல எடிட்டர் வழக்கு போட்டிருக்கார்.


ஓஹோ

என்ன வழக்கு?
அவ தூ தூறு வழக்கு தான்



==============

8]இன்ஸ்பெக்டர்.இந்த கேஸ்ல ஏதாவது துப்பு கிடைச்சுதா?


எனக்கு கிடைக்கல.ஆனா பிரஸ் ரிப்போர்ட்டருக்குக்கிடைச்சுது.கேசே அதுதான் சார்



================


தலைவரே.நல்ல வேளை. நீங்க சிங்கப்பூர்ல இல்ல.இருந்தா டெய்லி துப்புனதுக்கு அபராதம் கட்டியே ஏழை ஜாதி ஆகி இருப்பீங்க

=================


10]தலைவரே.வாங்கிக்கட்டிக்கோ நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி.பத்திரிக்கையாளரை தூ ன்னு துப்புனதுக்கு ஒரு டெமோ காட்டுங்க.ஜனங்க ஆர்வமா காத்திருக்காங்க


==================

11]மேடம்.உங்களுக்கு BROAD MIND னு இண்டஸ்ட்ரில பேசிக்கறாங்களே,நிஜமா?

யா.என் யு நெக் ஜாக்கெட் கட்டிங் டிசைனைப்பாருங்க.அகலமா இல்ல?


==============

12]மேடம்.அரிசி மாவுல கோலம் போட்டா எறும்பு சாப்பிடும்.எதுக்கு பஜ்ஜி மாவுல கோலம் போடறீங்க?

சாயங்காலமா அதை அப்டியே வாணலி ல பஜ்ஜி பொரிச்சுடுவேன்


======================


13]லேடி ஜட்ஜ் = சர்ச்சைக்குரிய அந்த பீப் சாங்கை ஒரு டைம் பாடி காட்டுங்க

சிம்பு = என்னைப்பாடச்சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்

===========


14]மிஸ்! என்ன விஷயத்துக்காக போராட வந்திருக்கீங்க?

சிம்புவின் ஆபாசப்பாட்டு
சரி. டிசர்ட் பட்டன் 3 கழண்டு கிடக்கே.அத போடுங்க முதல்ல


==============

15]மிஸ்.பாத்ரூம்ல நீங்க குளிக்கறதை எதுக்கு செல்பி வீடியோ எடுத்துப்போடறீங்க?

சிம்பு பாத்ரூம்ல பாடுன ஆபாசப்பாட்டுக்கு இப்டி எதிர்ப்பு தெரிவிப்பு

===============

16]டாக்டர்.கூந்தலுக்கு செம்பருத்தி பூ ,மருதாணி சேர்த்து அரைச்சுத்தடவுனா இளநரை கறுப்பாகுமா?

நோ.மருதாணி பட்டா கருங்குழலி செங்குழலி ஆகிடுவீங்க


================

17]நியூ இயர் அன்னைக்கு குடிச்ட்டு பைக் ஓட்னா பைன் னு எச்சரிச்சும் ஏன் குடிச்சே?

31 ந்தேதியே குடிச்ட்டேன்.நியூ இயர் தானே குடிக்கக்கூடாது?


==================

18]நெட்ல இப்போ அஜித் விஜய் வம்புச்சண்டை கொஞ்ச நாளா நடக்கலையே?

அதுக்கு ப்பதிலாத்தான் சிம்புச்சண்டை நடக்குதே?


====================

சார்.உங்க சம்சாரத்தை டிவி பார்த்ததும் ஏன் அழுதீங்க?
மேக்கப் இல்லாம க்ளோசப் ஷாட் காட்னாங்க


===================

20\மேடம்.வெள்ள நிவாரணப்பிரச்னையை மக்கள் மறக்க என்ன செய்யனும்?


சிம்பு வின் பீப் சாங் ,கைது ,கேப்டனின் தூ் இப்டி டெய்லி ஒரு பூதத்தை கிளப்பனும்


===================

Monday, January 04, 2016

நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்தது என்ன? ஒரு அலசல்

னியார் தொலைகாட்சிக்கு நாஞ்சில் சம்பத், அளித்த பேட்டியில் வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக விமர்சித்ததுதான், நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

அண்மையில் நடந்து முடித்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார். தற்போதைய சூழலில் தமிழகத்தை பொறுத்த வரை, அதிமுக அசுர பலத்துடன் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் கொண்டு வருவதை கடந்த 4 சட்டமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதை அதிமுக அறியாமல் இல்லை.
இதனால் மற்ற தேர்தல் போல, வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுக தலைமை கருதவில்லை. கடுமையான போட்டி இருக்கும் என்றும் பார்டரில்தான் பாசாகும் நிலை இருக்கும் என்பதையும் அதிமுக தலைமை புரிந்து வைத்திருக்கிறது. அதனாலேயே பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக தலைமை இப்படி ஒரு சூசக அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.கவுடன் நெருங்கி வரும் வேளையில், தே.மு.தி.க சண்டிக்குதிரையாக திரியும் நிலையில், அதிமுகவுக்கு கூட்டணி சான்ஸ் மக்கள் நல கூட்டணியுடன் மட்டும்தான் அமைக்க முடியும்.  இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்பவர் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சி,   இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் உள்ளனர். தற்போது வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நல கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நல கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் எளிதாக மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விட வாய்ப்புண்டு. அதனை கருத்தில் கொண்டே சூழலுக்கு ஏற்ப கூட்டணி என்ற அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

இந்நிலையில்தான் நாஞ்சில் சம்பத் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் நல கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். மக்கள் நல கூட்டணி ஒரு வெத்து வேட்டு எனும்விதத்தில் மதிமுக தன்னால்தான் வளர்ச்சி பெற்றதாகவும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அந்த பேட்டியில் நாஞ்சில் வைகோ பற்றி இவ்வாறு கூறுகிறார், '' மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வைகோ. அவருக்கு கட்சினு ஒன்று தமிழ்நாட்டுல இருக்குதா?. அந்த கட்சியை ஊர் ஊராக சுமந்தவன் நான். அந்த கட்சிக்கு வானமும் சிறகுமாக இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.கட்சியில் இருந்து  யார் யார் விலகினார்கள் என்ற விபரம் வைகோவுக்கு தெரியாது. அந்த கட்சி தரை மட்டமாகி விட்டது  தமிழ்நாட்டில் வரவில்லாத ஒரே கட்சி மதிமுகதான். சங்கரன்கோவிலில் அவரது சொந்த தொகுதியில், வைகோவை ஆதரித்து வீதி வீதியாக பேசியவன் நான்.  அங்கேயே கரை சேர முடியதவர் வைகோ '' என்றார். 

வைகோவை மட்டுமல்ல  மற்ற மக்கள் நல கூட்டணித் தலைவர்களையும் விமர்சிக்க நாஞ்சில் சம்பத் தவறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் கூட நாஞ்சில் சம்பத் கடுமையாக தாக்கிப் பேசினார். சூழலுக்கு தக்க பேசுவோம், என்று அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், நாஞ்சில் மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசியதை  அதிமுக தலைமை ரசிக்கவில்லையாம். விளைவு நாஞ்சிலின் பதவி பறிப்பாம்!


நன்றி- விகடன்

-வீரலட்சுமி-வரலட்சுமி

1] சிம்பு மன்னிப்பு கேட்டால் மன்னித்து மறந்துவிடலாம் - சீமான் # யோக்கியர் சொல்லிட்டாரு சிம்பு வைத்தூக்கி உள்ளே வை மொமெண்ட்


==============

2]சிம்புவுக்கு ஆதரவு அளித்த பெண்களுக்கு நன்றி... டி.ஆர். உருக்கம்! # 4 பேருக்கு நன்றி
நயன் தாரா ஹன் சிகா வீரலட்சுமி ,வரலட்சுமி


==============

3]மக்கள் நலக் கூட்டணி் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் - வை.கோ# 10%ஓட்டு வாங்கி ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டை பிரிச்சு அதிமுகவை ஜெயிக்க வைக்கும்

===============

4]தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ. சீட் வெற்றி பெறமுடியுமா?விஜயகாந்த், வைகோவுக்கு அன்புமணி கேள்வி # சார்.அவர் பெயிலானது சரி.நாம பாசா?பெயிலா?


===============

5]தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா? திமுகவுக்கு ராமதாஸ் சவால் # நம்ம வீட்டுக்கு யாரும் வர்ல.எதிர் வீட்டுக்கும் யாரும் வரக்கூடாது மொமெண்ட்


==============

6]விஷால் மீது பாயாத வன்கொடுமை சட்டம் சிம்பு மீது பாய்வதேன்? கேட்கிறார் வீரலட்சுமி #,வாம்மா வரலட்சுமி.த பால் ஈஸ் ஆன் யுவர் கோர்ட்.பதிலடி தரவும்


===============

7]சிம்பு திருந்துவார் என்று 'காத்திருக்கிறேன்-் நாஞ்சில் சம்பத் # இவரு பெரிய நயன் தாரா.காத்திருந்த மல்லி பூத்திருக்கு துள்ளி னு பாட்டு பாடறாரு

===============

8]சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
# நோ வேக்கப்.ஒன்லி லாக்கப்


==============

CMவேட்பாளராக அன்புமணி.OKசொன்னால் பாஜக கூட்டணி + துணை முதல்வர் பதவி: ராமதாஸ் ஆஃபர் # எடுக்கறது பிச்சை.இதுல சுடுசோறுதான் வேணும்னு கண்டிசன் வேற

===============


10]திமுக சதியால் அன்புமணிக்கு எதிராக சகாயம்- ராமதாஸ் சதி பண்ணி கலைஞருக்கு எதிரா சகாயத்தை ரெடி பண்ணுங்க

================

11]நியூஇயர்- குடித்துவிட்டு ஈ.சி.ஆரில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை # தில் இருந்தா 2 நாளும் டாஸமாக் லீவ் விடவும்்


================

12]ஆபாசப் பாடல்: நடிகர் சிம்புவுக்கு எதிரான பா.ம.க. வழக்கு- திடீர் வாபஸ்"# எதிரி(ஜெ) க்கு எதிரி நண்பன் பார்முலா?


===============

13]முதலாளிகளின் கைக் கூலிகள் தான் பத்திரிக்கையாளர்கள்...மன்னிப்பு கேட்கவே முடியாது...விஜயகாந்த்
# புரொடியூசருக்கு ஹீரோ என்ன உறவு?


================

14]ஒரே மாதத்தில் 40 விவாகரத்து. போதை கணவர்களை தூக்கி எறியும் காஷ்மீர் பெண்கள்# அப்டியே மொட்டை மாடில இருந்து தூக்கி எறிங்க.குடிகாரன் க சாகட்டும்


===============

15]யாகசாலை பந்தலில் தீ பிடித்தது நல்ல சகுனம் -சொரூபனந்தா சுவாமி! # இந்தாளோட உண்மையான சொரூபம் என்ன?


===================

16]பணத்திற்கு அரசியல் செய்யும் விஜயகாந்த், ஏலம்விட்டு கூட்டணி வைக்கலாம்!'- நத்தம் விஸ்வநாதன்#,மார்க்கெட் இருக்கும் மவராசன் டிமாண்ட் பண்றார்.


=================

17]சேலத்தில் கபடி ஆடி அசத்திய அன்புமணி!# நல்லா காலை வாரி விட்டாராமே? அரசியல்வாதிக்கு கை வந்த கலை சாரி கால் வந்த கலை


===============

18]பணத்திற்கு அரசியல் செய்யும் விஜயகாந்த்..நத்தம் விஸ்வநாதன்
# நாம மட்டும் சேவை யா செஞ்சோம்?


================

சாதாரண டிராபிக் கான்ஸ்டபிளுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களா?: அதிர்ச்சியடைந்த லோக் ஆயுக்தா போலீசார்
# ட்ராBIG கான்ஸ்"டபுள்"!!

==================

20]மியான்மரில் ராணுவ சீருடையை நையாண்டி செய்து பேஸ்புக்கில் விமர்சித்த இளம்பெண்ணுக்கு ஆறுமாதம் சிறை
# அய்யய்யோ.அலர்ட்டா இருந்துக்கோ ஆறுமுகம்


======================

புத்தாண்டு 2016: முதலீட்டு தீர்மானங்கள் 10!- சேமிப்பது எப்படி? டிப்ஸ்

நாம் சேமிப்பதில் கில்லாடியாக இருக்கிறோம். ஆனால், அதனை முதலீடு செய்வதில் கில்லாடியா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பணத்தை பெற்று 4% மட்டுமே வருமானம் தரும் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்கிறோம். அல்லது, வருமானம் எதுவும் தராத தங்கத்தில் மட்டுமே பணத்தை போட்டு வைத்திருக்கிறோம். இதனை தவிர்த்து நாம் சேமிக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்தால் புத்தாண்டு நமக்கு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
புத்தாண்டு முதலீட்டு தீர்மானங்களுக்குள் போகும் முன், சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள சிறிய வித்தியாசத்தை பார்த்து விடுமோம். நீங்கள் உண்டியலில் பணத்தை போட்டு வைப்பது சேமிப்பு, ஆண்டு ஆரம்பத்தில் அதில் 1,000 ரூபாய் போட்டு வைத்திருந்தால் அது ஆண்டு கடைசியிலும் 1,000 ரூபாயாகவே இருக்கும். இதற்கு பதில் இந்த பணத்தை 10%  வருமானம் தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் ஆண்டு இறுதியில் 1,000 ரூபாய் என்பது 1,100 ரூபாயாக அதிகரித்து இருக்கும். இது முதலீடு.

இனி புத்தாண்டு தீர்மானங்களை பார்ப்போம்.

வரவு - செலவு கணக்கு...

இது வரைக்கும் வரவு-செலவு கணக்கு எழுதவில்லை என்றால், புத்தாண்டில் ஆரம்பியுங்கள். இதற்கு 30 பக்க நோட்டுபோதும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பக்கம். அதில் அன்றைய செலவுகள் மற்றும் வரவுகள் எதையும் விடாமல் எழுதி வாருங்கள், மாதம் முடிந்ததும் ஒவ்வொரு பிரிவிலும் உதாரணத்துக்கு உணவு, சினிமா, செல் போன் ரீசார்ஜ் என செலவு எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பாருங்கள். இதில், பலவற்றுக்கு தேவை இல்லாமல் அதிகம் செலவிட்டிருப்பது தெரியும். இதன் மூலம் அடுத்து வரும் மாதங்களில் தேவை இல்லாத செலவை குறைக்க முடியும்.

பட்ஜெட்... 

கட்டாயம் சம்பளம் வாங்கியதும் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள். பட்ஜெட் போடும்போது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் தேவை இல்லாத செலவுகளை குறைக்க வழி பிறக்கும்.

கடன் மறு ஆய்வு...

வர வேண்டிய கடன், கொடுக்க வேண்டிய கடன், முடிக்க வேண்டிய கடன் உள்ளிட்ட விஷயங்களை அலசி ஆராயுங்கள். எந்தக் கடனுக்கு அதிக வட்டி (பர்சனல் லோன், கிரெடிட் கார்ட் கடன்) செல்கிறது என்று பார்த்து அதனை முதலில் அடைக்க திட்டமிடுங்கள்.

முதலீட்டுக்கு முன் இன்ஷூரன்ஸ்...

நாம் சம்பாதிப்பதே நம் குடும்பம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். அதனால், வருமானம் ஈட்டும் நபராக இருந்தால் உங்களின் ஆண்டு சம்பளத்தைபோல் குறைவான பிரீமியம், நிறைவான கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுங்கள். இதேபோல், மருத்துவச் செலவுக்கு கைகொடுக்கும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை உங்களின் ஓராண்டு சம்பளத் தொகைக்கு இணையாக எடுங்கள்.

பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும் முதலீடு...

உங்களின் முதலீடு, பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும்படி இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) 5 சதவிகிதம் என்றால், உங்கள் முதலீடு இதனைவிட அதிகமாக வருமானம் தருவதாக இருக்க வேண்டும்.

அதாவது, வங்கிச் சேமிப்பில் ஆண்டுக்கு (4%), உண்டியலில் வைத்திருந்தால் நஷ்டம்தான். இதற்கு பதிலாக ஆர்.டி, எஃப்.டி., மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீட்டை மேற்கொண்டால் பணவீக்கத்தை தாண்டி அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தொடர் முதலீடு...

சிலர் வருட ஆரம்பத்தில் முதலீடு செய்கிற ஆர்வத்தில் இருப்பார்கள். சில மாதங்கள் முதலீடு செய்வார்கள். பிறகு விட்டு விடுவார்கள். இதற்கு பதில், சம்பளத்திலே இந்த முதலீட்டு தொகையை பிடிப்பதுபோல் அல்லது மாதா மாதம் வங்கி கணக்கிலிருந்து செல்வது போல் பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னை வராது.

கெட்ட பழக்க வழக்கங்களுக்கு நோ..!

சிலருக்கு விளையாட்டாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு சாதாரணமாக தினம் ரூ.35 ரூபாய். மாதம் சுமார் ரூ.1,000. ஆண்டுக்கு ரூ.12,000. பத்தாண்டுக்கு ரூ.1,20,000. 30 ஆண்டுகளுக்கு ரூ.3,60,000. சிகரெட்டுக்கு செலவாகும் மாதம் ஆயிரம் ரூபாயை 10% வட்டி தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டு வந்தால் 30 வருடம் கழித்து உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 22.60 லடசம். அதாவது, 30 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர் ரூ. 22.60 லட்சத்தை புகையாக விட்டிருக்கிறார்.

பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்துதல்...

சிலருக்கு அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் 3 முதல் 4 கி.மீ தூரம் இருக்கும். பஸ்சில் போனால் அதிகபட்சம் ரூ.15. ஆனால், இவர்கள் ஆட்டோவுக்கு தாராளமாக ரூ.50 செலவு செய்வார்கள். இவர்கள் ஆட்டோவுக்கு பதில், பொது வாகனமாக பேருந்தை பயன்படுத்தினால் தினம் மிச்சமாது ரூ.35. மாத சேமிப்பு கிட்டத்தட்ட ரூ.1,000 என வைத்துக் கொள்வோம். இது 30 ஆண்டுகளுக்கு செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். 30 ஆண்டுகளுக்கு 10% வட்டி வரும் முதலீட்டில் போட்டால் ரூ.22.60 லட்சம் கிடைக்கும். இனி, இடை இடையேயாவது பொது வாகனத்தை பயன்படுத்துவீர்கள்தானே.

முதலீட்டில் பிரிவினை நல்லது..!

பொதுவாக தங்கம் விலை உயரும்போது, பங்குச் சந்தை நன்றாக செயல்படாது. இதேபோல், பங்குச் சந்தை சிறப்பாக செயல்படும்போது, தங்கம் விலை இறங்கும். இதனை சாதாரணமானவர்களால் கணிப்பது கஷ்டம். எனவே, முதலீட்டை எஃப்.டி., மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்  என பிரித்து மேற்கொண்டால், ஒன்று வருமானம் கொடுக்கவில்லை என்றாலும் மற்றது கொடுக்கும். முதலுக்கு மோசம் இல்லாமல் இருப்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டம்..!

பயணங்களுக்கு முன் கூட்டியே திட்டமிடுவது மூலம் ஓட்டல் கட்டணம், விமானக் கட்டணம் போன்றவற்றை கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.

மலிவு விலை கடை...

இன்றைய தேதியில் மலிவு விலை கடை என்பது ஒரு நகரத்துக்கு ஒன்றாவது இருக்கும். இந்தக் கடைகளில் மற்ற கடைகளைவிட சுமார் 5% விலை குறைவாக இருக்கும். மேலும், வீட்டுக் தேவையான விரைவில் கெட்டுப் போகாத மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்வது மூலம் மலிவாக வாங்குவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

இப்படி மிச்சமாகும் தொகையை முதலீடு செய்து வந்தால், அது நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தரும். உதாரணத்துக்கு மாதம் ரூ.100 மிச்சமாகிறது என்றால் அதனை 30 வருடம் தொடர்ந்து 10% வருமானம் தரும் ஏதாவது திட்டத்தில் முதலீடு செய்தால், அது கிட்டத்தட்ட ரூ.2.26 லட்சமாக பெருகி இருக்கும்.

இனி மேற்சொன்னவற்றை புத்தாண்டின் முதலீட்டு தீர்மானங்களாக எடுத்துக் கொண்டு பயன்படுத்துவீர்கள் தானே!

- சி.சரவணன்

நன்றி - நாணயம் விகடன்