Tuesday, May 01, 2012

அஜித் -ஷாலினி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ( 41)


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து  நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத். இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர் இன்று தனது 41 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரை பற்றிய 41 துளிகள் இங்கே...

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.

தமிழில் 'அமராவதி' என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு 'ஆசை' என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண்.  அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.
http://tamil.cinesnacks.net/photos/movies/Billa-2/ajithin-billa-2-stills-006.jpg

அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.!   ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.


மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.

கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும்  பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான்.  அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
http://www.ajithfanclub.com/wp-content/uploads/2011/10/Ajith-Shalini-Anoushka-Photos-500x375.jpg

பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.

அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை  நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது  நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக  உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.


அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!

வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
http://www.our-kerala.com/newgallery/images/photos/images/anoushka-5.jpg

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!

வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUJjD178qUwpGc-8YVhyphenhyphenB_IxdW9L-fwhC7zjYwzb6JR7EUsub4l2wEfOCf03ZxXD46MfY4m3iNvTEA6qKRGB8DIHEt_-eUb4HLAYc57uC99hzLdkZ8Rlh2ecoYnPVmPt3jddlA2pJ_7hE/s1600/f4.jpg
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!

தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!

'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!

அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!

உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!

எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!

மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!

அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!

தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில்,  'மங்காத்தா' படத்திலிருந்து என் படம் குறித்து  எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.."   என படம் குறித்து பேச  திடமாக மறுத்திருக்கிறார்.



http://www.pkp.in/images/a/Shalini%20Ajith%20(6).JPG

thanx - vikatan


டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.

கிளாமர் இல்லாம பொது வாழ்க்கையில் இருக்க முடியாது -ஐ பி எல் அழகி அர்ச்சனா விஜயா! பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ5Hfvj7zMeLVT7U-8uUh5hOn4CXqL9HB9hyd545JG7g-64Yp_vgChFFeN_ZOyBYDbT9wP60IxNm7uoYgJtW6KvoWt1o6ijqDaPmNTMgLYg4IjGersXC3rby6Zt_JkSzSt-Gg0NdaCqq2O/s400/Archana_Vijaya_Hot.jpg 

சிக்ஸர்கள், சியர் கேர்ள்ஸ், ஒரு பந்து நான்கு ரன்கள் பதற்றம்... இவை போக... இந்த ஐ.பி.எல். பக்கம் கவனம் ஈர்க்கும் கவர்ச்சி ராக்கெட்... அர்ச்சனா விஜயா!
 அழகுப் பெண்ணின் கிரிக்கெட் கமென்ட்ரிக்கு அவ்வளவு மவுசு. ட்விட்டர், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியாக்களில் ஹிட்ஸை அள்ளும் அர்ச்சனா விஜயா விடம் பேசினேன்

1. ''பேர்ல தமிழ் சாயல் இருக்கு. ஆனா, உங்க நடவடிக்கை எல்லாம் ஹாலிவுட் ரேஞ்ச்ல இருக்கே... நீங்க தமிழ்ப் பெண்ணா?''


சி.பி - ஹாலிவுட் ரேஞ்ச்னா எப்படி? ஏஞ்சலீனா ஜூலி மாதிரியா?

''ஹாஹா... எங்கே போனாலும் இதேதான் கேக்குறாங்க. ரொம்ப ஸாரி... நான் தமிழ்ப் பொண்ணு இல்லை. ராஜஸ்தான் என் பூர்வீகம். ஆனா, பிறந்தது, வளர்ந்தது,படிச்சது எல்லாமே கொல்கத்தா. இந்தப் பேர் எனக்குத் தென் இந்தியாவில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொடுத்திருக்கு. அதனால வட இந்தியா, தென் இந்தியானு என்னைக் குறுகிய வட்டத்தில் அடைச்சுடாதீங்க.''


சி.பி - இளைஞர்களை அழகால கொலையா கொல்றதால கொல்கத்தவா? ஓக்கே. உங்களை எப்படி ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க முடியும்? ஹி ஹி ஹி 

2. ''எப்படிக் கிடைச்சது ஐ.பி.எல். காம்பியரிங் வாய்ப்பு?''

''கொல்கத்தாவில் படிச்சிட்டு இருந்தப்ப, சேனல் 'வி’ நடத்துன 'மிஸ் கிளாமரஸ்’ ரியாலிட்டி ஷோவில் ஜெயிச்சேன். தொடர்ந்து மாடலிங், விளம்பர வாய்ப்புகள். இந்தியாவில் நான் கேட் வாக் பண்ணாத ஃபேஷன் ஷோவே கிடையாது.


 அப்புறம் நியோ ஸ்போர்ட்ஸ் சேனல்ல கிரிக்கெட் வீரர்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்படி அப்படியே ஐ.பி.எல். கிரவுண்டுக்குள் இறங்கிட்டேன். உலகப் புகழ்பெற்ற 'நினி’ பத்திரிகை 'ஐ.பி.எல்-ன் சிறந்த கண்டுபிடிப்பு அர்ச்சனா விஜயா’னு புகழ்ந்திருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1PNgSxLUoDLYCWLLMO5ceRuhyHy_6cZmTKrZkmNcoJO7Y4Ld4uL181VhwogjxJuNa_4zRETouyDzsU_sYGgr6Wo8HX38lrXSQKOP3VUFi2sBLToC-bh4d5DPxpCaQMbV2agCccLonpg/s640/archana_vijaya_ipl_host_anchor_vj_hot_latest_photos_1.jpg
3. 3.''கிரிக்கெட் வீரர்களோட நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருப்பீங்க. ஏதாவது ஸ்கூப் சொல்லுங்க?''

''சச்சின் செம சீரியஸ் பார்ட்டினு நினைப்பீங்கள்ல... ஆனா, சார் செமஜாலி. என்னை முதல் தடவை பார்த்ததும் அவர் என்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா? 'எப்படி இவ்ளோ ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கா இருக்கீங்க?’ - அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கலை.


என்ன பதில் சொல்றதுனு தெரியாமத் தடு மாறிட்டேன். எப்பப் பேசினாலும் ஏதாச் சும் கலாய்ச்சுக் காமெடி பண்ணிட்டே இருப்பார் சச்சின். டோனி எப்பவும் அன் லிமிடெட் சேட்டை பார்ட்டி. நான் பேட்டி எடுக்கிற மாதிரியே நடிச்சுக் காட்டிக் கிண்டலடிச்சுட்டே இருப்பார்.


ஒரு தடவை டெல்லியில் இருந்தப்ப, தீபாவளி கொண்டாட நண்பர்களோட பட்டாசுகள் வாங்கிட்டு நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்துட்டார். யுவராஜ் சிங் என் பெர்சனல் ஃப்ரெண்ட். அவரோட எல்லா பிறந்த நாளுக்கும் அவர்கூட நான் இருப்பேன்.''



சி.பி - பொதுவா பசங்க கிட்டே பேசறப்ப  ஒரு முகமும், பொண்ணுங்க கிட்டே பேசறப்போ ஒரு முகமும் வெச்சிருப்பாங்க. அதுக்கு வி ஐ பிகளும் விதிவிலக்கல்ல..


4. ''ப்ளேயர்ஸ் உங்களுக்கு என்னல்லாம் கிஃப்ட்ஸ் கொடுத்திருக்காங்க?''

''அவங்க டி-ஷர்ட்டுகளைப் பரிசா கொடுத்திருக்காங்க. மத்தபடி நீங்க நினைக் கிற மாதிரி எதுவும் இல்லை.''


சி.பி - நாங்க நனைக்கற மாதிரி சாரி நினைக்கற மாதிரின்னா எது அது?


http://www.chitramala.in/photogallery/d/624815-1/Archana-Vijaya-Hot-Stills+_10_.jpg

5. ''சென்னையில் என்ன பிடிக்கும்?''

''முருகன் இட்லிக் கடை, மெரினா பீச். எப்போ சென்னை வந்தாலும் இது ரெண்டையும் மிஸ் பண்ண மாட்டேன்!''


6. ''கிரிக்கெட் கிரவுண்ட்ல இவ்வளவு கிளாமரா டிரெஸ் பண்றது அவசியமா?''


சி.பி - கிரிக்கட் பிடிக்காதவங்க ரசிக்கடுமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான். 

''அப்படி கிளாமரா டிரெஸ் பண்ணி, அதைப் பலர் ரசிக்கிறதாலதானே இப்போ நீங்க வந்து பேட்டி எடுக்குறீங்க. பொது வாழ்க்கையில் கிளாமர் இல்லாம இருக்க முடியாது பாஸ்!''



 சி.பி - பொது வாழ்க்கைல கிளாமர் இல்லாம இருக்க முடியாதா? நல்ல வேளை.... ஹி ஹி
''7. கிரிக்கெட்டர்ல செம ஹாட் யாரு?''

''விராட் கோஹ்லி.''

(அவர் இன்னும் டி-ஷர்ட் கொடுக்கலையா?)


http://www.southmoviemasala.com/wp-content/uploads/Archana-Vijaya-Hot-Images-2.jpga


நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.

ஐ.பி.எல். மவுசு குறைகிறதா?'' இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் பேட்டி

இது ஸ்ரீனிவாசனுக்குப் பொற்காலம்! ஒரு பக்கம், தென்னகத்தின் பெரும் சிமென்ட் நிறுவனமான அவருடைய 'இந்தியா சிமென்ட்ஸ்’ வடக்கிலும் கிளை பரப்பிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், அவருடைய 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ஐ.பி.எல். போட்டிகளில் கோடிகளை வாரிக் குவிக்கிறது.


 இந்தியாவைத் தாண்டியும் கோலோச்சுகிறார் ஸ்ரீனிவாசன். சர்வதேச கிரிக்கெட் ஆணையமே அவர் சொல்படி ஆடுகிறது. புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் மிதக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருடன் ஒரு சந்திப்பு. 



 . 1.''இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிகளில் புரள்கிறது. ஆனால், இன்னமும் பெரும்பான்மை இந்திய இளைஞர்கள் டென்னிஸ் பந்துகளை வைத்துத்தான் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார் கள். இந்த நிலையை மாற்ற என்ன செய்யப்போகிறீர் கள்?''

''வாரியத்துக்கு வரும் வருமானத்தில் 70 சத விகிதத்தை மாநிலச் சங்கங்களுக்கும் 26 சதவிகிதத்தை வீரர்களுக்குச் சம்பளமாகவும் கொடுத்துவிடுகிறோம். எஞ்சிய தொகையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குகிறோம். இதுதான் கணக்கு.


 இப்போது தேனியில் தொடங்கப்பட்டு இருக்கும் கிரிக்கெட் அகாடமியைப் போல, நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் கிரிக்கெட் அகாடமிகளைத் தொடங்க இருக்கிறோம். விளையாடுவதற்குத் தேவையான பொருட்களை இலவசமாகத் தர இருக்கிறோம். சூழல் விரைவில் மாறும்!''

'2.'ஆண்டுக்கு 2,000 கோடி வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியத்துக்கு வருமான வரிவிலக்கு தேவைதானா?''

''தேவையா, இல்லையா என்பது இல்லை. இவ்வளவு காலம் வருமான வரிவிலக்கு இருந்தது. அது மேலும் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்... அவ்வளவுதான். ஆனால், வருமான வரிவிலக்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இத்தனை ஊர்களில் இன்றைக்கு நீங்கள் கிரிக்கெட் மைதானங்களைப் பார்க்க முடியாது!''


3.''சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆதிக்கம் செலுத்துகிறதா?''


''சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மீது காலங்காலமாக யார் ஆதிக்கம் செலுத்திவந்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இன்றைக்கு கிரிக்கெட்டை ஆடும் மக்கள், பார்க்கும் ரசிகர்கள், கிரிக்கெட்டில் கொட்டும் பணம் எல்லாமே இந்தியாவில்தான் அதிகம். முன்புபோலன்றி, இப்போது நாம் நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம். இது எப்படி ஆதிக்கம் ஆகும்?''

'4. 'அரசியல்வாதிகளாலும் தொழிலதிபர்களாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிர்வகிக்கப்படும் சூழல் எப்போது மாறும்?''

''கிரிக்கெட் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களால் அது நிர்வகிக்கப்பட வேண்டும். அவ்வளவுதானே? ஏன் தொழிலதிபர்களாலோ, அரசியல்வாதிகளாலோ நிர்வகிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் அப்பா காலத்தில் இருந்து 'இந்தியா சிமென்ட்ஸ்’ கிரிக்கெட்டை ஆதரித்துவருகிறது. வீரர்களுக்கு நிறுவனத்தில் வேலை அளித்துவருகிறது. அணிகளை நடத்திவருகிறது. ஒரு தொழிலதிபர், கிரிக்கெட் ரசிகராக இருக்கக் கூடாதா?''

5. ''கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் இருக்கும் நீங்களே, ஐ.பி.எல்-ல் ஓர் அணியைச் சொந்தமாக்கிக்கொண்டது தவறு இல்லையா?''

'' 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ ஒரு ஸ்ரீனிவாசனுக்கு மட்டும் சொந்தம் இல்லை. 'இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களின் சொத்து அது. இந்தியா சிமென்ட்ஸுக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள தொடர்பு அரை நூற்றாண்டுக்கும் மேலானது. 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ தவிர, 12 அணிகள் எங்களுக்குச் சொந்த மாக இருக்கின்றன. அவை எல்லாம் தவறாகாத போது, இது மட்டும் எப்படித் தவறாகும்?''

6. ''ஒரு தமிழராக தமிழகத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் உரிய இடம் கிடைத்திருப்பதாகக் கருதுகிறீர்களா?''

''இல்லை. இன்னும் நிறையப் பேர் ஆட வேண்டும். ஆனால், அது வாரியம், தேர்வாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீரர்களின் தகுதி சம்பந்தப்பட்டது. நீங்கள் நன்றாக விளையாடினால், உங்களுக்கான இடம் நிச்சயம்!''



'7.'ஐ.பி.எல். மவுசு குறைகிறதா?''

''ஒருபோதும் குறையாது. இடையில் லலித் மோடி செய்த தவறுகளால் ஐ.பி.எல். மீது ஒரு களங்கமான தோற்றம் உருவானது உண்மை. ஆனால், அதைக் கடந்து வந்தாயிற்று. இப்போது ஆட்டம் நடக்கும் மைதானங்களுக்குப் போய்ப் பாருங்கள். எங்கும் ஹவுஸ்ஃபுல்!''

'8. 'தேர்தலுக்காக ஐ.பி.எல். போட்டிகளை இந்திய அரசு தள்ளிவைக்கச் சொன்னபோது மறுத்துவிட்ட  வாரியம், இப்போது சஹாரா நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் விதிகளையே தளர்த்தும் அளவுக்கு அடிபணியக் காரணம் என்ன?''

''முதல் ஆண்டு ஐ.பி.எல். பெரும் வெற்றி பெற்று, மக்கள் இரண்டாவது சீஸனுக்காகக் காத்திருந்த காலகட்டம் அது. அப்போது போட்டிகளைத் தள்ளிவைத்து இருந்தால், மக்களும் ஏமாந்திருப்பார்கள்; எங்களை நம்பிப் பணம் கொடுத்த தொலைக்காட்சி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மறுத்தோம். சஹாராவைப் பொறுத்த அளவில் அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. அதை ஏற்றதால் யாருக்கும் இழப்பு இல்லை. அதனால் ஏற்றோம்.''


9. ''ஒரு கிரிக்கெட் ரசிகராகச் சொல்லுங்கள்... க்ளாஸிக் கிரிக்கெட்டை 20-20 அழித்துக்கொண்டு இருக்கிறதுதானே?''

''முதன்முதலில் 20-20 ஆட்டத்தைப் பார்த்தபோது, எனக்கே அதை ஏற்றுக்கொள்வதில் நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால், அது இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சி, நிச்சயம் ஒரு கிரிக்கெட் புரட்சி. ஒரு புதிய பார்வையாளர் படையையே அது கொண்டுவந்து இருக்கிறது. முக்கியமாகப் பெண்களையும் சிறுவர்களையும். இனி கிரிக்கெட் என்றால்... அது டெஸ்ட், ஒன் டே, 20-20 மூன்றையுமே குறிக்கும். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்றைக்குமே அழிந்துவிடாது. க்ளாஸிக் இஸ் க்ளாஸிக்!''


10. ''கிரிக்கெட்தான் இந்தியாவில் எல்லா விளையாட்டுகளையும் அழுத்துகிறது. பரிகாரமாக கிரிக்கெட் வாரியம் ஏன் பணம் இல்லாத ஏனைய விளையாட்டு அமைப்புகளுக்கு உதவக் கூடாது?''

''நிறைய உதவ நினைக்கிறோம். உதவிக்கொண்டும் இருக்கிறோம். இப்போதுகூட அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்புக்கு  12.5 கோடி ரூபாய் கொடுத்தோம்.''

11. ''தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தித் துறையை வளர்த்தெடுத்ததில் உங்களுக்குப் பெரிய பங்கு உண்டு. சுற்றுச்சூழல் சார்ந்து தமிழகம் இப்போது அதற்குப் பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதை உணர்கிறீர்களா?''


''சிமென்ட் என்பது ஒரு நாட்டின் உள் கட்டமைப்பின் உயிர்நாடி. ஒரு சிமென்ட் தொழிற்சாலையை சுண்ணாம்புக் கல் கிடைக்கும் இடத்தில் மட்டும்தான் நிறுவ முடியும். இந்தியாவில் எட்டு மாநிலங்களில் - அங்கும் சில இடங்களில் மட்டும்தான் சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. ஆனால், சிமென்ட் தேவையோ ஒட்டுமொத்த நாட்டுக்குமானது.


40 வருடங்களுக்கு முன் நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இந்தியாவின் சிமென்ட் உற்பத்தி 1.9 கோடி டன். இன்றைக்கு தமிழகத்தின் உற்பத்தியே 3.5 கோடி டன். நாடும் வளர்ந்து இருக்கிறது. நாமும் வளர்ந்து இருக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னையில் இப்போது எல்லா சிமென்ட் ஆலைகளுமே கவனம் செலுத்திவருகிறோம். மாசற்ற தொழில்நுட்பம், மரம் வளர்ப்பு என்று நாங்களும் சூழலைப் பாதுகாக்க நிறைய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.''

12. ''இந்தியாவில் சிமென்ட் விலை கூடிக்கொண்டேபோகிறது. ஆலை அதிபர்களின் சிண்டிகேட், குறிப்பாக உங்கள் தலைமையிலான லாபிதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுவதுபற்றி என்ன சொல்கிறீர் கள்?''

''அர்த்தமற்ற குற்றச்சாட்டு இது. சிமென்ட் ஆலைகளுக்கான நிலக்கரி விலையில் இருந்து எங்களுக்கான வரிகள் வரை எல்லாமே உயர்ந்து இருக்கின்றன. விலைவாசி உயர்வைப் பற்றி நீங்கள் எல்லாம் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். நாங்கள் பேசவில்லை.


 அவ்வளவுதான். எங்களுக்கு எதுவுமே குறைந்த விலையில் கிடைக்காதபோது, நாங்கள் மட்டும் எப்படிக் குறைந்த விலைக்கு சிமென்ட்டைக் கொடுக்க முடியும்?''


 மக்கள் கருத்து 

1.காரிகைத் தமிழ்மன்னவன்

 
1. முதலில் பிசி சிஅய் என்பது தனியார் அமைப்பா அல்லது பொதுநல அமைப்பா அல்லது அரசு அமைப்பா என்று தெளிவு செய்யுங்கள்

2. அரசு அமைப்பு என்றால் ஆர்.டி.அய்க்கு கீழ் கொண்டுவாருங்கள். சி.ஏ.ஜி. ஆடிட் செய்யுங்கள்

3. தனியார் அமைப்பு என்றால் அவர்களுடைய கிரிக்கெட் அணியை ஏன் இந்திய அணின்னு சொல்றீங்க?? அதைக் கலையுங்கள். கார்பரேட் ரேஞ்சுக்கு வரி போடுங்கள் ... வோடஃபோன் மாதிரி 1962 ல் இருந்து முன் தேதியிட்டு வரி வசூல் செய்யுங்கள்


4. பொது நல அமைப்பு என்றால் லாபம் கூடாது ,,,அதற்கேற்ற சட்ட வழிமுறைகளை நிர்பந்தியுங்கள் ....


எந்த வரைமுறைக்குள்ளும் வராத ஒரு வித்தியாச அனிமலாக இருக்கிறது !!!!
2.Cavith

 
கிரிக்கெட் ஒரு விளையாட்டல்ல, பணம் சம்பாதிக்க நடத்தும் கேளிக்கை என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
3. நடராஜன்
 
ஆண்டுக்கு 2,000 கோடி வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியத்துக்கு உச்ச பட்ச (40% அல்லது மேலாக) வரி விதிக்கலாம்

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.