Thursday, April 19, 2012

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ நெடுமாறன் பேட்டி வீடியோ



 1. ''கர்மவீரர் காமராஜருடனான உங்கள் நெருக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்...''


''வேலையைச் சரியாகச் செய்தால் தட்டிக்கொடுக்கும் அதேசமயம், யாராவது தவறு செய்துவிட்டால், மிகக் கடுமை யாகக் கண்டிக்கவும் செய்வார் காமராஜர். நான் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநிலப் பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளையும் வகித்த காலத்தில் ஒரு முறைகூட அவரது கோபத்துக்கு ஆளாகியது இல்லை. என் மீது அவருக்குத் தனி பாசம் இருந்தது.
மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நான் புகார் மனு அளித்தேன். தி.மு.. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்என்று கடுமையாக என்னைத் தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.

இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த நான் உள்ளிட்ட அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டோம்


 ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு என் அரசியல் வாழ்க்கை இருந்தது குறித்து இப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. காமராஜர் மரணத்தின்போது அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த ஆறடி உடல் அருகே, நாள் முழுவதும் நான் அமர்ந்திருந்தேன். அவரைப் போன்ற தலைவரை அரசியலில் பார்ப்பது அரிதிலும் அரிது!''  


சி.பி - காமராஜர் ஆட்சி அமைப்போம்னு வெட்கமில்லாமல் கூறும் ஆட்களிடம் காமராஜர் எளீமை வாழ்வு பற்றி ஏதும் தெரியுமா? என கேட்டால் பேந்த பேந்த விழிப்பார்.. 

 http://photos.merinews.com/upload/imageGallery/bigImage/1242711948171-prabhakaran%20family%20photos.jpg
prabakaran son and daughter

2. ''இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்?''  


''1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள ராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக்கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார்.சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, 'மாமாதான் வந்தி ருக்கிறேன். மாமாவின் ஆவி அல்லஎன்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம்.

1989 ஜூலை 24-ம் தேதி 'தி இந்துநாளேட்டில், 'விடுதலைப் புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்த பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகு விரைவிலேயே உணர்த்தியது.
2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நார்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித் தார் தம்பி.
2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது. அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள்.


 ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்த வர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின் றனர். ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசு கிறேன். எனது சொந்த விருப்பத்தில்இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!''


சி.பி - நம்பிக்கைதான் வாழ்க்கை.. உயிருடன் இருக்கிறார்  என்றே நம்புவோம்

http://www.merinews.com/upload/imageGallery/bigImage/1242711801786-prabhakaran%20family%20photos.jpg
3. ''தமிழக அரசியல்வாதிகளில் அதிகபட்ச நேர்மையாளராக நீங்கள் கருதுவது யார் யாரை?''


''ஒரே ஒருவர்தான். அவர்... தோழர் நல்லகண்ணு அவர்கள்!''


சி.பி - நேர்மை, எளிமை, பொது வழ்வில் தூய்மை மூன்றுக்கும் இலக்கணம் ஆனவர்

4. ''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகான தமிழக அரசியல் எப்படி இருக் கும்?''


''காங்கிரஸ் ஆட்சி, அண்ணா ஆட்சி வரை தமிழக அரசியலில் கண்ணியம் இருந்தது. அண்ணா மறைவுக்குப் பின்னர், தி.மு.-வுக்கு கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு நிலைமை படிப்படியாக மாறி, எம்.ஜி.ஆர். வருகைக்குப் பிறகு அது முற்றிலுமாக மாறி விட்டது. இரு தலைவர்களுக்கு இடையே யான தனிப்பட்ட வெறுப்பினால் அரசியல் நாகரிகமும் கண்ணியமும் பறக்கவிடப்பட்டது. அது இன்றளவும் தி.முக - .தி.மு.. சண்டையாகத் தொடர்கிறது.  
காங்கிரஸ் ஆட்சியில் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடந்தபோது, ஆந்திரர்கள் சென்னை நகரத்தையும் கேட்டார்கள். முதல்வராக இருந்த ராஜாஜி, 'சென்னை தமிழர்களுக்கேஎன விட்டுக்கொடுக்க மறுத்தார். அவரைக் காலம் எல்லாம் எதிர்த்த பெரியார், அண்ணா, ஜீவானந்தம், .பொ.சி. போன்றவர்கள் ராஜாஜியை ஆதரித்தனர். தமிழர் நலன் என்ற அடிப்படையில், அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர்ந்தனர். ஆனால், இப்போதைய நிலைமை என்ன?

தி.மு.-வும் .தி.மு.-வும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில்கூட எதிரெதிர் நிலை களை எடுக்கின்றன. தனிப்பட்ட பகையை அரசியலாக மாற்றும் இந்தத் தலைவர்கள் அரசியல் அரங்கில் இல்லாமல்போனால், ஓரளவுக்கு நிலைமை சீராகும்!''


சி.பி - கலைஞருக்குப்பிறகு அழகிரி ஸ்டாலின் வாரிசு சண்டை வந்து ஸ்டாலின் கை ஓங்கும்,, அழகிரி வி என் ஜானகி போல் காணாமல் போவார்.. ஜெவுக்குப்பின் சசிகலா குடும்பம் ஆக்ரமிக்கும், ஆனால் எதிர்காலம் இருக்காது,,

http://www.asiantribune.com/files/images/prabaharan%20wedding_1.img_assist_custom.jpg

5. ''இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?''


''அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசு கள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும்


 அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். வெளியுறவு, ராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும்

 மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல!''

http://3.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SgL_qiaEHsI/AAAAAAAAd48/5iArC6mgucM/s400/LTTE+Leader+Velupillai+Prabhakaran+Photos.jpg

6. ''உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர் கள்?''


''உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக் கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை


 அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு. ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண் பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக் கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது; எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வைஇழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்!''
http://dbsjeyaraj.com/filmalaya/VP1987.jpg

அடுத்த வாரம்....

''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே...''
''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''
''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?''


தொடரும் - நன்றி விகடன்

I AM NON-BRAHMIN -நான் பிராமணன் - ராகுல் காந்தி - என்னய்யா பிரச்சனை?

http://pic.twitter.com/xpwjflPh - 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை டி பி ஃபோட்டோ மாற்றும் ஓவியா  இன் ட்விட்டர்
1.6 யா வுக்காக 3 ஷா, 9 தாரா அடிதடி # நீ பாதி நான் பாதி கண்ணே!


----------------------------

2. டபுள் மீனிங்க் காமெடிகள் எல்லாம் 90 % ஆண்களுக்கானவை.. பெண்களுக்கு புரியாது,தெரியாம ஆர் டி பண்ணி இருப்பாங்க


-----------------------


3. மனதுக்குப்பிடித்தவருடனான மனஸ்தாபங்களை மனசுக்குள்ளேயே வைத்துப்புழுங்காமல் வெளிப்படையாக பேசி விடுவது நல்லது


------------------------------

4.  ஃபிகர் மடியலைன்னு யாரும் அயர்ன் பண்ணிடாதீங்கப்பா 


----------------------------

5. எந்த வேலைக்கும் போகாம ஊரைச்சுத்திட்டு இருந்தா அவன் ஊர்சுற்றி,கவர்மெண்ட்சம்பளம் வாங்கிட்டு உலகத்தையே வெட்டியா சுத்திட்டு இருந்தா ஜனாதிபதி

-----------------------
ஹன்சிகா




6. திருமணப்பதிவு கட்டாயமாகிறது - மத்திய அமைச்சரவை ஒப்புதல் # நல்ல வேளை காதல் பதிவு கட்டாயம் ஆகலை, ரொம்ப சிரமமா இருந்திருக்கும் ஹி ஹி 


-------------------------------

7. பல ஃபிகர்களுக்கு தோலை வெள்ளையா படைச்ச ஆண்டவன் அவங்க மனசை மட்டும் ஏன் நொள்ளையா படைச்சான்?


--------------------------------------

8. நல்ல வேளை நடிகைங்க நாய்க்குப்பதிலா காக்கா வளர்த்தலை. ஃபேரன் லவ்லி விளம்பரம் கொலையா கொன்னிருப்பாங்க


-------------------------------

9. ஹீரோக்களை கட்டிப் பிடித்து நடிப்பது சுத்த போர் - ரீமா கல்லிங்கல் # நீங்க ஏன் அவங்க கட்டியை பிடிக்கறீங்க? நீங்க என்ன டாக்டரா?


------------------------------

10. சிவா மனசுல சக்தி - மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

 பாஸ் எ பாஸ்கரன் - நண்பேண்டா .


 ஓக்கே ஓக்கே - ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு # சந்தானம் ராக்ஸ்

-------------------------------


11. நிறைய பேர் அவங்க DPல முகத்தை நேரா பார்க்காமல் எங்கோ பார்ப்பது போல பார்க்கிறார்கள்? ஏன்?


 ஏன்னா இயல்பா இருக்காங்களாம்


----------------------------------

12. கிராமத்தான் என்றால் ராம ராஜன்களாகத்தான் இருக்க வேண்டுமா? அவினாசி ராஜனாகவோ , ஆர் சுந்தர் ராஜனாகவோ இருக்கக்கூடாதா?


------------------------------

13. கிராமத்தான் என்பதில் என்ன கேவலம்? அதில் தான் பெருமை.கள்ளங்கபடம் அற்ற மனம், தூய காற்று, நீர் கிராமங்களில் மட்டும்



----------------------------

14. இன்று முதல் விஜய் எனும் அணில் துர்ப்பாக்கியன் என அழைக்கப்படுவாராக # நாமன்


--------------------------------

15. அஞ்சலி - சாரி சார், நீச்சல் உடை போட்டுக்க மாட்டேன்.


சுந்தர் சி - அய்யய்யோ. அதையும் போட்டுக்கலைன்னா மசாலா கஃபே மிட் நைட் மசாலா ஆகிடும்


-------------------------------





16. நான் பிராமணன் - ராகுல் காந்தி # I AM NON-BRAHMIN  ன்னு அண்ணன் ஆங்கிலத்துல சொன்னதை நம்மாளுங்க தமிழ்ல இப்படி சொல்லிட்டானுங்களா?


------------------------------

17. நெட்டில்  பிட்டை தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்! # நல்லா டீட்டெயிலா பாருங்க, அதுல தமிழன் தான் முதல் இடமா இருப்பான்


-----------------------------

18.  காம்ரேட்களைத் திருமணம் செய்யாதீர்..கட்சியினருக்கு மமதா உத்தரவு! # மேடம், CALM மா இல்லாம சவுண்ட் குடுக்கற ஆளுங்களை மேரேஜ் பண்ணிக்கவா?


-------------------------------------

19. தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் கடும் முயற்சி எடுத்து வருகின்றோம்-பாகிஸ்தான் # யோசிச்சு சொல்லுங்க, ஒளிக்கவா? ஒழிக்கவா?


---------------------------

20.மனைவியும், கலைஞரும் ஒண்ணு,சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் ஊரைக்கூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணிடறாங்க


------------------------------------

Wednesday, April 18, 2012

CRASH POINT BERL IN - ஹாலிவுட் த்ரில்லர் சினிமா விமர்சனம்

http://i41.tinypic.com/20f43ef.jpg 

90 பேர் பயணம் செய்யும் ஃபிளைட் கிளம்பறப்ப ரன் வேல ஒரு மோதல்.... லைட்டா விமானத்துல அடிப்பட்டுடுது... விமானி கவனிக்காம மேலே போயிடறார்.. ஐ மீன் டோட்டலா இல்ல.. வானத்துல மேலே போயிடறார்.  விமானம்  தி மு க கட்சி மாதிரி ஜாம் ஆகிடுது.. 

தலைமை விமானி ஜெ மாதிரி.. தான் சொல்றது தான் சரின்னு சொல்ற ஈகோ பிடிச்ச ஆள்.. துணை விமானி தான் ஹீரோ.. அவர் ராகுல் காந்தி மாதிரி.. எந்தக்காலத்துல ராகுலுக்கும், ஜெவுக்கும் ஒத்து போய் இருக்கு?இருக்கற ஆபத்து பத்தாதுன்னு 2 பேரும் வாக்குவாதம் பண்ணியே டைம் வேஸ்ட் பண்றாங்க.. 

இப்போ பிரச்சனை என்னன்னா விமானத்துல அடிப்பக்கம் ஓட்டை ஆகிடுச்சு. விமானம் எங்காவது விழுந்து மோதப்போகுது.. விமானத்துல  ஏகப்பட்ட பயணிகள் இருக்காங்க.. 


http://i2.listal.com/image/904066/600full-crash-point%3A-berlin-screenshot.jpg

 விமானம் விழப்போகும் இடம் பெர்ல் என்ற இடம்.. மினிஸ்டர் என்ன நினைக்கறார்னா ஆனது ஆகிடுச்சு விமானம் இங்கே வந்து விழுந்தா ஏகப்பட்ட உயிர் பலி ஆகும்.. அதனால கடைசி வரை முயற்சி பண்றது. காப்பாத்த முடியலைன்னா 2 ஜெட் விமானம் அனுப்பி நடு வானிலேயே அந்த பயணிகள் விமானத்தை அழிச்சிடறது.. 


இப்போ விமானத்தில் பயணம் செய்யும் ஒரு எலக்ட்ரிக்கல் எஞ்சினியர், ஒரு சின்னப்பையன் உதவியோட  ஓரளவு  விமானத்தை சரி பண்ணிட்டாங்க.. ஆனா அந்த விமானத்தை அழிக்க ஜெட் விமானம் 2ம் வந்துடுது.. 

 பயணீகள் நிலை என்ன? உயிர் தப்பிச்சாங்களா? ஹீரோவான துணை பைலட்டும், ஹீரோயினான ஏர் ஹோஸ்டலும் லிப் டூ லிப் கிஸ் அடிச்சாங்களா? போன்ற சுவராஸ்யமான கேள்விகளுக்கு படம் பாருங்க.


கிட்டத்தட்ட பயணம் கதை போல் தான்.. அதுல தீவிரவாதி இருக்கான். இதுல அதெல்லாம் இல்லை. மற்றபடி பிரச்சனை ஒண்ணுதான்.  பயணம் செய்யும் எல்லா பயணிகளையும் நம் மனசில் பதிய வைக்க இயக்குநர் கையாளும் உத்தி கிளாஸ்.. 

விமானி,உதவி விமானி இருவருக்குமான உரையாடல்கள் குட்.. ஹீரோயின் செம ஃபிகர்ப்பா என கொண்டாட முடியாவிட்டாலும் மொக்கை ஃபிகர் என திண்ட்டாட தேவை இல்லை

60 டன் எடை உள்ள விமானம் 400 கிமீ வேகத்துல போகுது.. 35 நிமிஷத்துல மோதப்போகுது என டெம்ப்போ ஏத்தும் விஷயத்தில் இயக்குநருக்கு கிடைப்பது வெற்றி

http://myfilms.pl/thumb/1_11077.jpg


மனம் கவரும் வசனங்கள்


1. ஏமாறுவதற்காகவே உருவான இனம் தான் பெண் இனமா? ( மனசுக்குள்ள நயன் தாரான்னு நினப்பு )


2.  மிஸ். நைட் டின்னர்க்கு வர்றீங்களா?

 அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்.. 

 நீங்க சாப்பிடுவீங்களா? எப்பவும் சாப்பிடவே மாட்டீங்களா? 

இப்படியே 2 பேரும் கடலை போட்டுட்டே இருந்தா  ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவீங்க. 


3. ஹாய் மிஸ்.. என் கூட வந்துடறீங்களா? உங்களை “ வெச்சு” காப்பாத்துறேன்

 ஹா ஹா கண்டிப்பா.. பைலட் கிட்டே சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்.. 


4.  எதுக்காக என்னை கிஸ் பண்ணுனீங்க? 

 ஹி ஹி சும்மா குடுத்துப்பார்த்தேன்


5.  எப்படி 50 வருஷமா ஒரே மனைவி கூட  காலம் தள்ளறீங்க?

 எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருக்கறப்பவே நம்ம மனசுல இருக்கறதை சொல்லிட்டா எப்பவும் சண்டையே வராது.. 


6. தைரியமா இருக்கற மாதிரி நடிக்காதே.. அது உன்னால முடியாது


7. நம்ம மேரேஜ் ரிங்க் எங்கே?

 அது தொலைஞ்சு  ஒரு வாரம் ஆகுது.. அதையே இப்போ தான் பார்க்கறீங்களா? ( ஏம்மா. புருஷனுக்கு 1000 வேலை இருக்கும், சம்சாரத்தோட விரலை எல்லாம் பார்க்க நேரம் இருக்குமா? ஹி ஹி )


8.  விமானத்துல ஒரு கோளாறு.. சரி பண்ண 4 பேர் கீழே வரனும்.. 

 நீங்க போகாதீங்க.. வேற யாராவது போகட்டும். 

 யாரும் போற மாதிரி தெரியலை


9. இந்த உலகத்துல ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு நமக்கு நெருக்கமான உறவோட உயிர் இறப்பு


http://www.carl-duisberg-deutschkurse.de/uploads/pics/berlin_03_daf_06.jpg


10. சப்போஸ் இந்த விபத்துல நாம தப்பிச்சுட்டா அதுக்குப்பிறகு வாழும் வாழ்வு ரொம்ப புதுசாவும் அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்.


11. கோல்டு மெடலிஸ்ட் பொண்ணு மாதிரியா அவ நடந்துக்கறா? எல்லாத்துலயும் அலட்சியம். இந்த உலகத்துல கஷ்டப்படாம முன்னேறனும்னு நினைக்கறதே தப்பு

12. அவருக்குப்பதிலா நீங்க யாராவது போய் செத்து இருக்கலாமே. இப்படி அநியாயமா செத்துட்டாரே..? இல்லை நீங்க தான் அவரை கொன்னுட்டீங்க.



13. ஒரு கை  மட்டும் நல்லா  இருக்கற பைலட்டால எனக்கு எந்த வித பயனும் இல்லை. அதனால.......


14.  இந்த ஐ பேட்ல 500 பாட்டு இருக்கு.. சாகரதுக்கு முன்னால எந்தப்பாட்டை கேட்டா நல்லது?

15. பறந்துட்டு இருக்கறப்ப முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் பைலட்டுக்கு மட்டுமே உண்டு. வேற எவனுக்கும் அது கிடையாது


16. வயசாச்சுன்னாலே பல பிரச்சனைகளை நாம சந்திக்க வேண்டி வருது

17. இந்த விமான விபத்தால நீங்க கத்துக்கிட்டது என்ன? 

நமக்கு கிடைச்ச இந்த லைஃப்ல மத்தவங்களைப்பற்றியும் திங்க் பண்ணனும்


http://nylonsmovies.com/images/cache/screen_image_237861.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள்


1.  விமானத்தில் அவ்வளவு பெரிய ஓட்டை விழுந்து இருக்கு.. விமானம் 3400 அடி  உயரத்துல 400 கி மீ வேகத்துல போகுது.. அங்கே எவ்ளவ் காத்து இழுக்கும்? கிட்டே போனாலே இழுத்து தூக்கி வெ:ளீல வீசிடுமே.. ஆனா விமானத்துல இருக்கற அந்த குண்டு எஞ்சினியர், விமானி கேப்டன், துணை விமானி அந்த சின்னப்பையன்னு எல்லாரும் என்னமோ போயஸ் தோட்டத்துக்குள்ள சசிகலா போற மாதிரி சர்வ சாதாரணமா போய்ட்டு வர்றாங்களே.. அது எப்படி?

2. விமானத்துல போறப்ப செல் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கனும்கறது விதி ( ரூல்ஸ்) ஆனா ஒரு ஆபத்து  வந்த பின் சிக்னல் கிடைக்கலை.. எல்லாரும் செல் ஆஃப் பண்ணுங்கன்னு சொல்றாங்களே அது ஏன்? அதைக்கேடு ஒரு ஆள் இதென்ன புதுக்கதையா இருக்கு? செல் ஆஃப் பண்ண முடியாதுனு சொல்றாரே?

3. துணை பைலட்டுக்கு விமானத்தை காப்பாத்தவும், கேப்டன் கிட்டே வாக்குவாதம் செய்யவும் தான் நேரம் சரியா இருக்கு. ஹீரோயின் கூட ரொமான்ஸ் பண்ண நோ சான்ஸ்.. அதுக்குப்பதிலா எலக்ட்ரிக்கல் எஞ்சினியருக்கு ஹீரோயினை ஜோடியா போட்டிருந்தா ரொமான்ஸ்க்கு ரொமான்ஸ்.. ஜாலிக்கு ஜாலி ( சும்மா ஜோக் )

3. விமானம் இறக்க முடியலை, எல்லா பயணீகளும் முன்னால வந்து உக்காருங்கன்னு சொன்னதும்.. எல்லாரும் எந்திரிக்கற மாதிரி காட்றாங்க.. ஆனா மறுபடி வர்ற சீன்கள்ல எப்பவும் போல அவங்கவங்க சீட்ல தான் இருக்காங்க.. 

4. க்ளைமாக்ஸ்ல கேப்டன் விமானத்தின் ஓட்டைக்கு கீழே அந்தரத்தில் தொங்கறார்.. அப்போ காத்து பயங்கரமா அடிக்கும்.. ஆனா வீரபாண்டியக்கட்ட பொம்மன் மாதிரி வசனம் எல்லாம் பேசறார்... அது எப்படி கேட்கும்?

5. ஜெட் விமானம் 2ம் விபத்து நடந்த விமானத்தை அழிக்க கிட்டே போய் நிக்குது.. இன்னும் 35 செகண்ட்ல நீங்க அந்த விமானத்தை அழிக்கலாம்னு ஆர்டர் வருது.. ஆனா அதுக்குப்பிறகு 20 நிமிஷமா சும்மாவே இருக்காங்க.. 


6. அந்த 60 வயசான ஜோடிங்க மேல எரிச்சல் தான் வருது.. பாசமோ அல்லது பரிதாபமோ வர்லை.. ஒரு வேலை வயசுக்கு மீறிய காதலில் இருப்பதாலா? தெரியலை.. 


http://berlin.cafebabel.com/public/berlin/Berlinale/2011/20110081_6.jpg

பரபரப்பான, விறு விறுப்புகுறையாத இந்த த்ரில்லரை அனைவரும் பார்க்கலாம்.. பெண்கள் பார்க்கும் தரத்தில், குழந்தைகளூம் பார்க்கும் விதத்தில் படம் இருக்கு.. 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன். இது 2009ல ரிலீஸ் ஆன படம் 90 நிமிஷங்கள் ஓடுது.. இது உண்மைச்சம்பவத்தை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட படம்

Director:

Thomas Jauch

Writers:

Bettina Platz, Marc Hillefeld

Stars:

Peter Haber, Maximilian von Pufendorf and Bernadette Heerwagen
http://www.probertencyclopaedia.com/photolib/people/Bernadette%20Heerwagen%20(PD).jpg