Showing posts with label ஹாலிவிட் சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஹாலிவிட் சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, April 18, 2012

CRASH POINT BERL IN - ஹாலிவுட் த்ரில்லர் சினிமா விமர்சனம்

http://i41.tinypic.com/20f43ef.jpg 

90 பேர் பயணம் செய்யும் ஃபிளைட் கிளம்பறப்ப ரன் வேல ஒரு மோதல்.... லைட்டா விமானத்துல அடிப்பட்டுடுது... விமானி கவனிக்காம மேலே போயிடறார்.. ஐ மீன் டோட்டலா இல்ல.. வானத்துல மேலே போயிடறார்.  விமானம்  தி மு க கட்சி மாதிரி ஜாம் ஆகிடுது.. 

தலைமை விமானி ஜெ மாதிரி.. தான் சொல்றது தான் சரின்னு சொல்ற ஈகோ பிடிச்ச ஆள்.. துணை விமானி தான் ஹீரோ.. அவர் ராகுல் காந்தி மாதிரி.. எந்தக்காலத்துல ராகுலுக்கும், ஜெவுக்கும் ஒத்து போய் இருக்கு?இருக்கற ஆபத்து பத்தாதுன்னு 2 பேரும் வாக்குவாதம் பண்ணியே டைம் வேஸ்ட் பண்றாங்க.. 

இப்போ பிரச்சனை என்னன்னா விமானத்துல அடிப்பக்கம் ஓட்டை ஆகிடுச்சு. விமானம் எங்காவது விழுந்து மோதப்போகுது.. விமானத்துல  ஏகப்பட்ட பயணிகள் இருக்காங்க.. 


http://i2.listal.com/image/904066/600full-crash-point%3A-berlin-screenshot.jpg

 விமானம் விழப்போகும் இடம் பெர்ல் என்ற இடம்.. மினிஸ்டர் என்ன நினைக்கறார்னா ஆனது ஆகிடுச்சு விமானம் இங்கே வந்து விழுந்தா ஏகப்பட்ட உயிர் பலி ஆகும்.. அதனால கடைசி வரை முயற்சி பண்றது. காப்பாத்த முடியலைன்னா 2 ஜெட் விமானம் அனுப்பி நடு வானிலேயே அந்த பயணிகள் விமானத்தை அழிச்சிடறது.. 


இப்போ விமானத்தில் பயணம் செய்யும் ஒரு எலக்ட்ரிக்கல் எஞ்சினியர், ஒரு சின்னப்பையன் உதவியோட  ஓரளவு  விமானத்தை சரி பண்ணிட்டாங்க.. ஆனா அந்த விமானத்தை அழிக்க ஜெட் விமானம் 2ம் வந்துடுது.. 

 பயணீகள் நிலை என்ன? உயிர் தப்பிச்சாங்களா? ஹீரோவான துணை பைலட்டும், ஹீரோயினான ஏர் ஹோஸ்டலும் லிப் டூ லிப் கிஸ் அடிச்சாங்களா? போன்ற சுவராஸ்யமான கேள்விகளுக்கு படம் பாருங்க.


கிட்டத்தட்ட பயணம் கதை போல் தான்.. அதுல தீவிரவாதி இருக்கான். இதுல அதெல்லாம் இல்லை. மற்றபடி பிரச்சனை ஒண்ணுதான்.  பயணம் செய்யும் எல்லா பயணிகளையும் நம் மனசில் பதிய வைக்க இயக்குநர் கையாளும் உத்தி கிளாஸ்.. 

விமானி,உதவி விமானி இருவருக்குமான உரையாடல்கள் குட்.. ஹீரோயின் செம ஃபிகர்ப்பா என கொண்டாட முடியாவிட்டாலும் மொக்கை ஃபிகர் என திண்ட்டாட தேவை இல்லை

60 டன் எடை உள்ள விமானம் 400 கிமீ வேகத்துல போகுது.. 35 நிமிஷத்துல மோதப்போகுது என டெம்ப்போ ஏத்தும் விஷயத்தில் இயக்குநருக்கு கிடைப்பது வெற்றி

http://myfilms.pl/thumb/1_11077.jpg


மனம் கவரும் வசனங்கள்


1. ஏமாறுவதற்காகவே உருவான இனம் தான் பெண் இனமா? ( மனசுக்குள்ள நயன் தாரான்னு நினப்பு )


2.  மிஸ். நைட் டின்னர்க்கு வர்றீங்களா?

 அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்.. 

 நீங்க சாப்பிடுவீங்களா? எப்பவும் சாப்பிடவே மாட்டீங்களா? 

இப்படியே 2 பேரும் கடலை போட்டுட்டே இருந்தா  ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவீங்க. 


3. ஹாய் மிஸ்.. என் கூட வந்துடறீங்களா? உங்களை “ வெச்சு” காப்பாத்துறேன்

 ஹா ஹா கண்டிப்பா.. பைலட் கிட்டே சொல்லிட்டு இப்பவே வந்துடறேன்.. 


4.  எதுக்காக என்னை கிஸ் பண்ணுனீங்க? 

 ஹி ஹி சும்மா குடுத்துப்பார்த்தேன்


5.  எப்படி 50 வருஷமா ஒரே மனைவி கூட  காலம் தள்ளறீங்க?

 எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருக்கறப்பவே நம்ம மனசுல இருக்கறதை சொல்லிட்டா எப்பவும் சண்டையே வராது.. 


6. தைரியமா இருக்கற மாதிரி நடிக்காதே.. அது உன்னால முடியாது


7. நம்ம மேரேஜ் ரிங்க் எங்கே?

 அது தொலைஞ்சு  ஒரு வாரம் ஆகுது.. அதையே இப்போ தான் பார்க்கறீங்களா? ( ஏம்மா. புருஷனுக்கு 1000 வேலை இருக்கும், சம்சாரத்தோட விரலை எல்லாம் பார்க்க நேரம் இருக்குமா? ஹி ஹி )


8.  விமானத்துல ஒரு கோளாறு.. சரி பண்ண 4 பேர் கீழே வரனும்.. 

 நீங்க போகாதீங்க.. வேற யாராவது போகட்டும். 

 யாரும் போற மாதிரி தெரியலை


9. இந்த உலகத்துல ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு நமக்கு நெருக்கமான உறவோட உயிர் இறப்பு


http://www.carl-duisberg-deutschkurse.de/uploads/pics/berlin_03_daf_06.jpg


10. சப்போஸ் இந்த விபத்துல நாம தப்பிச்சுட்டா அதுக்குப்பிறகு வாழும் வாழ்வு ரொம்ப புதுசாவும் அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்.


11. கோல்டு மெடலிஸ்ட் பொண்ணு மாதிரியா அவ நடந்துக்கறா? எல்லாத்துலயும் அலட்சியம். இந்த உலகத்துல கஷ்டப்படாம முன்னேறனும்னு நினைக்கறதே தப்பு

12. அவருக்குப்பதிலா நீங்க யாராவது போய் செத்து இருக்கலாமே. இப்படி அநியாயமா செத்துட்டாரே..? இல்லை நீங்க தான் அவரை கொன்னுட்டீங்க.



13. ஒரு கை  மட்டும் நல்லா  இருக்கற பைலட்டால எனக்கு எந்த வித பயனும் இல்லை. அதனால.......


14.  இந்த ஐ பேட்ல 500 பாட்டு இருக்கு.. சாகரதுக்கு முன்னால எந்தப்பாட்டை கேட்டா நல்லது?

15. பறந்துட்டு இருக்கறப்ப முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் பைலட்டுக்கு மட்டுமே உண்டு. வேற எவனுக்கும் அது கிடையாது


16. வயசாச்சுன்னாலே பல பிரச்சனைகளை நாம சந்திக்க வேண்டி வருது

17. இந்த விமான விபத்தால நீங்க கத்துக்கிட்டது என்ன? 

நமக்கு கிடைச்ச இந்த லைஃப்ல மத்தவங்களைப்பற்றியும் திங்க் பண்ணனும்


http://nylonsmovies.com/images/cache/screen_image_237861.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள்


1.  விமானத்தில் அவ்வளவு பெரிய ஓட்டை விழுந்து இருக்கு.. விமானம் 3400 அடி  உயரத்துல 400 கி மீ வேகத்துல போகுது.. அங்கே எவ்ளவ் காத்து இழுக்கும்? கிட்டே போனாலே இழுத்து தூக்கி வெ:ளீல வீசிடுமே.. ஆனா விமானத்துல இருக்கற அந்த குண்டு எஞ்சினியர், விமானி கேப்டன், துணை விமானி அந்த சின்னப்பையன்னு எல்லாரும் என்னமோ போயஸ் தோட்டத்துக்குள்ள சசிகலா போற மாதிரி சர்வ சாதாரணமா போய்ட்டு வர்றாங்களே.. அது எப்படி?

2. விமானத்துல போறப்ப செல் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கனும்கறது விதி ( ரூல்ஸ்) ஆனா ஒரு ஆபத்து  வந்த பின் சிக்னல் கிடைக்கலை.. எல்லாரும் செல் ஆஃப் பண்ணுங்கன்னு சொல்றாங்களே அது ஏன்? அதைக்கேடு ஒரு ஆள் இதென்ன புதுக்கதையா இருக்கு? செல் ஆஃப் பண்ண முடியாதுனு சொல்றாரே?

3. துணை பைலட்டுக்கு விமானத்தை காப்பாத்தவும், கேப்டன் கிட்டே வாக்குவாதம் செய்யவும் தான் நேரம் சரியா இருக்கு. ஹீரோயின் கூட ரொமான்ஸ் பண்ண நோ சான்ஸ்.. அதுக்குப்பதிலா எலக்ட்ரிக்கல் எஞ்சினியருக்கு ஹீரோயினை ஜோடியா போட்டிருந்தா ரொமான்ஸ்க்கு ரொமான்ஸ்.. ஜாலிக்கு ஜாலி ( சும்மா ஜோக் )

3. விமானம் இறக்க முடியலை, எல்லா பயணீகளும் முன்னால வந்து உக்காருங்கன்னு சொன்னதும்.. எல்லாரும் எந்திரிக்கற மாதிரி காட்றாங்க.. ஆனா மறுபடி வர்ற சீன்கள்ல எப்பவும் போல அவங்கவங்க சீட்ல தான் இருக்காங்க.. 

4. க்ளைமாக்ஸ்ல கேப்டன் விமானத்தின் ஓட்டைக்கு கீழே அந்தரத்தில் தொங்கறார்.. அப்போ காத்து பயங்கரமா அடிக்கும்.. ஆனா வீரபாண்டியக்கட்ட பொம்மன் மாதிரி வசனம் எல்லாம் பேசறார்... அது எப்படி கேட்கும்?

5. ஜெட் விமானம் 2ம் விபத்து நடந்த விமானத்தை அழிக்க கிட்டே போய் நிக்குது.. இன்னும் 35 செகண்ட்ல நீங்க அந்த விமானத்தை அழிக்கலாம்னு ஆர்டர் வருது.. ஆனா அதுக்குப்பிறகு 20 நிமிஷமா சும்மாவே இருக்காங்க.. 


6. அந்த 60 வயசான ஜோடிங்க மேல எரிச்சல் தான் வருது.. பாசமோ அல்லது பரிதாபமோ வர்லை.. ஒரு வேலை வயசுக்கு மீறிய காதலில் இருப்பதாலா? தெரியலை.. 


http://berlin.cafebabel.com/public/berlin/Berlinale/2011/20110081_6.jpg

பரபரப்பான, விறு விறுப்புகுறையாத இந்த த்ரில்லரை அனைவரும் பார்க்கலாம்.. பெண்கள் பார்க்கும் தரத்தில், குழந்தைகளூம் பார்க்கும் விதத்தில் படம் இருக்கு.. 

 ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன். இது 2009ல ரிலீஸ் ஆன படம் 90 நிமிஷங்கள் ஓடுது.. இது உண்மைச்சம்பவத்தை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட படம்

Director:

Thomas Jauch

Writers:

Bettina Platz, Marc Hillefeld

Stars:

Peter Haber, Maximilian von Pufendorf and Bernadette Heerwagen
http://www.probertencyclopaedia.com/photolib/people/Bernadette%20Heerwagen%20(PD).jpg