பெரியார் பிறந்த ஊர்,மஞ்சள் மாநகரம் என்பது போக ஈரோட்டுக்கு பல பெருமைகள் உண்டு.. பல பிரச்சனைகள் உண்டு.. ஊர் வாழ் மக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் ஒரு பார்வை பார்ப்போம்..
1. ஆன்மீகம் - இங்கே கோட்டை ஈஸ்வரன் கோயில் ரொம்ப ஃபேமஸ்... ஈரோடு பன்னீர் செல்வம் பஸ்டாபில் இருந்து ஒரு கி மீ தூரத்துல இருக்கு..அதுக்குப்பக்கத்துலயே பெருமாள் கோவில் இருக்கு.. இங்கே துளசி தீர்த்தம் வாங்கி குடிச்சா பல நோய்கள் குணமாவதா ஒரு ஐதீகம் உண்டு.. பொதுவா துளசியே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் நிவாரணிதான்..பெரிய மாரியம்மன் கோவில் உண்டு.. இது ப செ பார்க் அருகிலேயே இருக்கு.. வருடா வருடம் கம்பம் பிடுங்கும் விழா மிக சிறப்பா கொண்டாடப்படுது.. ஈரோட்ல இருந்து 9 கிமீ தூரத்துல திண்டல் மலை இருக்கு பேருக்குத்தான் மலை.. ரொம்ப கம்மியான படிகள் தான்.. முருகர் ஆலயம்.. இங்கே லேடீஸ் காலேஜ் 1 இருக்கு வேளாளர் மகளிர் காலேஜ்.. அதை வெச்சுத்தான் இந்த கோடில் ஃபேமஸ் ஆச்சு.. இது போக நகரை சுற்றிலும் மொத்தம் 37 கோயில்கள் உள்ளன..
2. போக்குவரத்து - டிராஃபிக் ஜாம் இல்லாத முக்கிய நகரம் எங்கே இருக்கு? எல்லா ஊர்லயும் இது பெரிய பிரச்சனைதான்.. பஸ் ஸ்டேண்ட்ல இருந்து ஒரு கி மீ தூரத்துல ஜி ஹெச் பஸ் ஸ்டாப் நால் ரோடு சிக்னல் தான் நகரின் மையமான டிராஃபிக் ஜாம் ஏற்படும் இடம்.. காலை 8 டூ 10 செம ரஷ்ஷா இருக்கும்.. மாலை 4 டூ 9 வரை கேட்கவே வேண்டாம்.. ப செ பார்க் ரவுண்ட்டனாவுலயும் இதே அளவு டிராஃபிக் ஜாம் இருக்கும்.. மணிக்கூண்டு ஸ்டாப் - இங்கேயும் பல ஜவுளிக்கடைகள் சங்கமமா இருக்கறதால செம கூட்டம் தான் எப்பவும்..
3. வணிகம் - பெட்ஷீட் சேல்சில் தமிநாடு அளவில் மட்டும் அல்ல இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊர்.. இது.. வாரா வாரம் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் கனி மார்க்கெட் கூடுது.. நாள் ஒன்றுக்கு சர்வசாதாரணமாக 4 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் ஆகும்.. பல மாநிலங்களில் இருந்து மொத்தமாக பர்ச்சேஸ் பண்ண இங்கே வருவாங்க..
மஞ்சள் மண்டி ஸ்டார் தியேட்டர் அருகே இருக்கு.பிஸ்கெட், சோப் அயிட்டங்கள் எல்லாம் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல சீப்பா அதாவது MRP ரேட்டை விட 1 ரூபாவாவது கம்மியா இங்கே கிடைக்கும்.. மற்றபடி மளிகை சாமான்கள், பருப்பு வகைகள் எல்லாம் மணிக்கூண்டு வணிக வளாகத்தில் சீப்பாக கிடைக்கும்.. .சத்தி ரோட்டில் ஆயில் மில்களில் எண்ணெய் வகைகள் தரமாக , நியாயமான விலையில் கிடைக்கும் , பொது மக்கள் இங்கே சில்லறையாகவே வாங்கி செல்வார்கள்
4. பள்ளிகள், கல்லூரிகள் - சவீதா பஸ் ஸ்டாப் பின் புறம் உள்ள கலைமகள் கல்வி நிலையம் பாரம்பரியம் மிக்கது.. அதற்கு எதிரே உள்ள செங்குந்தர் மேல் நிலைப்பள்ளியும் அதே.. போல் ஆண்களுக்கானது , ப செ பார்க் அருகே உள்ள சி எஸ் ஐ ஸ்கூல் செம ஃபேமஸ்.. மூலப்பாளையத்தில் கார்மெண்ட் ஸ்கூல் செம காஸ்ட்லி.. அதே போல் திண்டலில் உள்ள பி வி பி ஸ்கூல் ஹை க்ளாஸ் மக்களுக்கானது..
வீரப்பன் சத்திரம் அருகே உள்ள சி என் சி காலேஜ் , சித்தோடு அருகே உள்ள வாசவி காலேஜ், ரங்கம்பாளையம் அருகே உள்ள ஆர்ட்ஸ் காலேஜ் ஆகியவை முக்கிய காலேஜ்கள்..
5. ஹாஸ்பிடல்கள் - ஈரோடு ஜி ஹெச் தான் பெரும்பாலான நடுத்தர , ஏழை மக்களின் கலங்கரை விளக்கம்.. காலை 8 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை செயல் படுகிறது.. அவசர சிகிச்சைப்பிரிவு 24 மணிநேரமும் செயல் படுகிறது.. ஒரு நாளில் கிறைந்த பட்சம் 6800 நபர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
மூலப்பாளையத்தில் உள்ள லோட்டஸ் அப்போலோ ஹாஸ்பிடல் தான் தனியார் ஹாஸ்பிடலில் செம காஸ்ட்லி.. இப்போதெல்லாம் மக்கள் காஸ்ட்லி ஹாஸ்பிடல் என்றால் அது நல்ல தரமான ஹாஸ்பிடல் அப்டினு நினைச்சுக்கறாங்க..
பெருந்துறை ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் செண்ட்டர், செந்தில் நரம்பியல் மருத்துவனை காசு புடுங்கறதுல மிச்சமான ஆளுங்க..
தொடரும்----