கல்யாண மண்டபத்துல பட்டுச்சேலை சரசரக்க,மல்லிகைப்பூ மண மணக்க,இடையில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் மினுமினுக்க ஃபிகரு பண்ற அலம்பல் பார்த்துட்டு செம ஃபிகர்ப்பான்னு தப்பா நினைச்சிருப்போம்..அவங்களுக்கு முன் தகவல் ஏதும் சொல்லாம திடீர் விசிட்டா வீட்டுக்குப்போய் பார்த்தா பாப்பா 35 மார்க் கூட பெறாத அட்டு ஃபிகரா இருக்கும்.. அங்கே வீடு கூட்டிட்டு இருக்கும்.. அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. (BELOW AVERAGE).
நீரவ்ஷாவின் கலக்கலான ,கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு, +70 மார்க் வாங்கும் ஹோம்லி ஃபிகர் 1 ,75 மார்க் வாங்கும் மாடர்ன் ஃபிகர் 1 என 2 ஃபிகர்கள் ஹீரோயின்ஸாக என முக்கிய பிளஸ்கள் இருந்தும் படம் ஊத்திக்கிட்டதுக்கு முக்கியக்காரணம் கதை நஹி.. + ஹீரோவுக்கு கேன்சர்..
ஹீரோ சித்தார்த் புது ஊருக்கு வர்றாரு.. அங்கே ஒரு ஃபிகர் லவ்வுது இவரை ஒன் சைடா. (தெலுங்கு டப்பிங்க் படம் என்பதைத்தான் சூசகமா சொல்றேன்) இவரு பம்முறாரு. ஃபிளாஷ்பேக்.. இவருக்கு ஏற்கனவே இன்னொரு ஃபிகரோட லவ் ஆகி மேரேஜூம் ஆச்சு.. ஆனா அண்ணனுக்கு கேன்சர்.. அண்ணனை மரண பயம் துரத்துது.. அண்ணனை அண்ணி உட்பட அனைவரும் இரக்கமா பார்க்கறாங்க.. அண்ணனுக்கு இது பொறுக்கல.. கண்காணாத தேசம் போறாரு..
இப்போ மனைவி சந்தோசமா இருக்கறதை பார்க்க நினைக்கிறார்.. மறுபடி அவர் மனைவியோட இணைஞ்சாரா? கண்ணீர் மழையில் நனைஞ்சாரா? என்பதை தில்லு உள்ளவர்கள் தியேட்டரில் போய் பார்க்க...
படத்தில் மணிரத்ன வாடை அதிகம் வீசுவதால் வசனத்திற்கு அதிக வேலை இல்லை.. .
. தேடித்தேடிப்பார்த்ததில் தட்டுப்பட்ட நல்ல வசனங்கள்
1. டாக்ஸி டிரைவர் - சார்.. எங்கே போகனும்?
இந்த 2 விரல்ல ஒண்ணைத்தொடு..வலது விரலைத்தொட்டா டி நகர், இடது விரலைத்தொட்டா அண்ணா நகர்..
டாக்ஸி டிரைவர் - அப்போ சாருக்கு 2 செட்டப்பா?
2. ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சு பேச முடியாது.. டார்ச்சர் தாங்கல..
3. நான் ரொம்ப பயந்துட்டேன்...
பயப்படாதே.. நான் இன்னும் சாகல..
4. ஏங்க. மாப்ளையோட கேன்சர்.. நம்ம பொண்ணையும் கொன்னுடுமோன்னு பயமா இருக்குங்க.. நம்ம பொண்ணை நம்மளோடயே கூட்டிட்டு போயிடலாமா?
5. காசில உயிர விடனும்னு முடிவு பண்ணி இருக்கேன்..
(இப்படி எத்தனை பேரால சாவு நடக்கற இடத்தை தீர்மானிக்க முடியும்?)
6. சாகறதைப்பற்றி கவலைப்பட்டுட்டே இருந்தா வாழும் நாட்கள் எப்படி இன்பமாகும்?
7. தூரத்துல இருந்து அவ சிரிக்கறதை ஒரு தடவை பார்த்துட்டா போதும்.. நான் உயிரை விட்டுடுவேன்.. ..
8. நான் அவ கூட இருக்கற வரை அவ சோகமாத்தான் இருப்பா,விட்டு விலகி வந்துட்டா அவ நார்மல் ஆகிடுவா..
9. அவளைப்பார்க்கனும்னு செல்ஃபிஷ் போல ஓடி வந்தேன், பார்த்துட்டேன், இப்போத்தான் தோணுது பார்க்காமலேயே இருந்திருக்கலாம்..
10. நான் வந்தா சாவும் என் கூடவே வரும், அதைக்கூட தாங்கிப்பேன்,ஆனா அவ முகம் வாடிடும்,அதை என்னால தாங்கிக்கவே முடியாது..
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. படத்தின் ஓப்பனிங்க் சாங்க்கில் ஹீரோ சித்தார்த் சிறுவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் பாடல் நடனக்காட்சி படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவுக்கலைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம்,
2. ஹீரோயின் அடிக்கடி யாருக்கோ வரும் ஃபோனில் மிமிக்ரி பண்ணி பேசுவது..
3. பாடல் காட்சியில் ஹீரோ,ஹீரோயின் விரல்கள் மட்டும் நண்டு ஊறுது ,நரியூறுது விளையாட்டு விளையாடுவது..
4. ஹீரோவுக்கு மரண பயம் ஏற்பட்டதும் காலனின் குறியீடாக மொட்டைத்தலை பாஸ் காட்டப்படுவது..
5 .அழகான 2 ஹீரோயின்களையும் படத்தில் எந்த அளவு தேவையோ அந்த அளவு உபயோகப்படுத்திக்கொண்டது..
6. ஹீரோ ஹீரோயினை ஸ்டெதஸ்கோப் வைத்துப்பார்க்கும்போது ஹார்ட் பீட்டுக்குப்பதிலாக ரோஜா பட பாடலான புது வெள்ளை மழை பாட்டு ஒலிப்பது..

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. ஹீரோ வுக்கு கேன்சர் என்ற அரதப்பழசான ட்விஸ்ட் வைத்தது..இந்த சீனில் சோகம் வருவதற்குப்பதிலாக எரிச்சல்தான் வருது/...
2. டாக்டராக வரும் ஹீரோ அதற்குண்டான பாடி லேங்குவேஜ்ஜில் கவனம் செலுத்தாதது..
3. மவுண்ட் ரோடில் ஆக்சிடெண்ட் ஆகும்போது தலையில் அடிபட்ட ஹீரோயின் கழுத்தில் பேண்டேஜ் உடன் அடுத்த காட்சியில் ஹாஸ்பிடலில் வருவது
4. படம் முழுக்க ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியதில் பாதி கூட திரைக்கதையில் செலுத்தாதது..
5. மரண தேவன் கேரக்டரை அடிக்கடி காண்பித்து கடுப்பேற்றுவது..
இந்தப்படம் காதலர்கள், பதிவர் ராமலட்சுமி மேடம் மாதிரி புகைப்படக்கலைஞர்கள் மட்டும் பார்க்கலாம்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்
சி. பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க..
எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடும். ஏன்னா அடுத்த வெள்ளிக்கிழமைக்கு 7 நாட்கள் பாக்கி இருக்கே..?
ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்..