
கரு பழனியப்பன் அவர்கள் நமது பதிவர்களை விருந்துக்கு அழைத்தது பதிவுலகிலும்,கோடம்பாக்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டும் ,விவாதிக்கப்பட்டும் வருகிறது.இது ஒரு நல்ல தொடக்கம் என சிலரும்,நடுநிலை விமர்சனத்துக்கு பாதிப்பு வரும் எனவும் கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
அதை எல்லாம் ஒதுக்கி விட்டு கும்மி அடிக்கும் வேலையை மட்டும் நாம் செய்யலாம்.இந்த விருந்தில் கலந்து கொண்ட உண்மைத்தமிழன் அண்ணன்,பிரபா உட்பட அனைவரும் என் நண்பர்களே,இந்த நகைச்சுவை பொதுவாக எழுதப்பட்டது,யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.எல்லாம் தமாஷ்தான்.
1 .டைரக்டர் சார்,சினிமா விமர்சகர்கள் அனைவரையும் கூப்பிட்டு விருந்து வெச்சது தப்பா போச்சு.
ஏன்?
இப்போ படத்தை யாரும் விமர்சனம் பண்ணலை.விருந்து எப்படி இருந்துதுன்னு விமர்சனம் பண்ணீட்டு இருக்காங்க...
2. எதுக்காக எப்போதும் இல்லாத புது பழக்கமா விமர்சகர்களுக்கு விருந்து வெச்சுருக்கீங்க?
அவங்க நம்ம படத்துக்கு மருந்து வெச்சுடக்கூடாதுன்னுதான்.
3.பிளாக் ஸ்பாட்ல எழுதற ஆளுங்க எல்லாருக்கும் விருந்து உண்டுன்னு சொன்னாங்களே?
யோவ்,அது சினிமா விமர்சனம் எழுதறவங்களுக்கு மட்டும் தான்,பின்னூட்டம் போடறவங்களுக்கெல்லாம் கிடையாது...
4.சினிமா விமர்சனம் பண்ண வந்த விமர்சகர்களுக்கு இப்போ தர்ம சங்கடமான நிலைன்னு எப்படி சொல்றீங்க?
காலைல 11 மணிக்கு படத்தை போட்டு, 2 மணிக்கு முடிச்சு பசியோட இருக்கறவங்க கிட்டே இப்போ படத்தோட விமர்சனத்தை பாசிட்டீவ்வா எழுதுனாத்தான் விருந்துன்னு சொல்லீட்டாங்களாம்.
5.டைரக்டர் சார்,அவசரப்பட்டுட்டீங்க,மொத்தம் 2000 பேர் விருந்து வேணும்னு வந்திருக்காங்க. இப்போ எப்படி சமாளிக்கப்போறீங்க?
பேசாம பழைய விருந்து புக் 10 கிலோ வாங்கி ஆளுக்கு ஒண்ணு குடுத்து அனுப்பி விட்டுடலாமா?
6.டைரக்டர் சார்,சினிமா விமர்சனத்தை டைப் பண்ணிட்டேன்,பிளாக்ல போடலாமா?
இருங்க,நான்,தயாரிப்பாளர்,டிஸ்ட்ட்ரிபியூட்டர், ஹீரோ,ஹீரோயின் எல்லாரும் படிச்சுப்பார்த்து கரெக்ஷன் சொல்வோம்,அதுக்குப்பிறகு ஃபைனல் அப்ரூவல் தியேட்டர் ஓனர் சங்கத்தலைவர் தருவாரு,அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க.
7.சினிமா விமர்சகர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு கூப்பிட்டு இருக்காரே டைரக்டரு... அது ஏன்?
கொஞ்ச நஞ்ச மனசாட்சியோட எழுதறங்க கூட பக்கத்துல அவங்கவங்க மனைவி தர்ற டோஸ்சால படத்துக்கு சாதகமா விமர்சனம் எழுதத்தான்.
8.திடீர்னு பிளாக் உலகத்துல சினிமா விமர்சனம் எழுதறவங்க எண்ணிக்கை 250 மடங்கா பெருகிடுச்சே? ஏன்?
நல்லா விருந்து வைக்கலைன்னா படம் ஊத்திக்கிச்சுன்னு விமர்சனம் எழுதிடுவோம்னு மிரட்டத்தான்.
9. சி .பி செந்தில்குமாரும்,அவரோட சொந்தக்காரங்களும் விருந்து சாப்பிட லைன்ல நின்னும் டைரக்டர் துரத்தி விட்டுட்டாரே,ஏன்?
பிளாக்கர்ஸ் (BLOGGERS)க்குத்தான் விருந்து,இப்படி பிளாக்கா (BLOCK) இருக்கறவங்களுக்கெல்லாம் விருந்து கிடையாதாம்.
10.யோவ் சிரிப்புப்போலீசு,படம் தான் நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதி இருக்கேனே,அப்புறம் ஏய்யா படம் எனக்குப்பிடிக்கலைன்னு பின்னூட்டம் போடறீங்க?
அப்படிப்போட்டாத்தான் எதிர்காலத்துல பின்னூட்டம் போடறவங்களுக்கும் விருந்து வைக்கலாம்னு நினைப்பாங்க.
11.தமிழனுக்கு செஞ்சோற்றுக்கடன் உணர்வு நிறைய இருக்குன்னு எல்லாரும் புரூஃப் பண்ணீட்டாங்க.
எப்படி சொல்றீங்க ராம்சாமி?
சுமாரான படத்தைக்கூட தமிழ் சினிமாவின் விடிவெள்ளி,பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்,இந்த மாதிரி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.மைல்கல் படம்னு ஆளாளுக்கு அள்ளி விடறாங்களே?
12. என்னய்யா இது ?தியேட்டர் வாசல்ல 50 பேர் நின்னுக்கிட்டு படம் நல்லாலை,படம் ஓடாது அப்படின்னு சொல்லீட்டு இருக்காங்க?
அவங்க எல்லாருமே சி பி மாதிரி வேலை வெட்டி இல்லாத பசங்க,மக்களோட மவுத் டாக் தான் உண்மையான விமர்சனம்னு சொல்லப்படறதால படத்தோட டைரக்டரை ,புரொடியூசரை மிரட்டறதுக்காக அப்படி நெகடிவ் விமர்சனம் சொல்றாங்க?ஏதோ விருந்தும்,குவாட்டர் மருந்தும் கிடைச்சா போதுமாம்.
டிஸ்கி - இந்த ஜோக்ஸ் எல்லாமே பட்டாபட்டி அவர்களின் கட்டுரையை நான் படிக்கும்போது தோன்றியவை,எனவே இந்தப்பதிவின் திட்டுக்கள் அனைத்தும் அவருக்கே உரித்தாகும்.