Showing posts with label nandhitha das. Show all posts
Showing posts with label nandhitha das. Show all posts

Thursday, November 29, 2012

நீர்ப்பறவை


நம்பர் ஒன் ஆக வேண்டாம்!





நேற்று வரை கடற்கரை வாசம். கஷ்டம், நஷ்டம், கண்ணீர் எல்லாம் பார்த்த நாள்கள். மக்களோடு மக்களாக வாழ்வது ஒரு கலைஞனுக்கு முக்கியம். இப்போதுதான் அது எனக்கு கிடைத்திருக்கிறது.'' பக்குவத்துடன் பேசுகிறார் நாயகன் விஷ்ணு. "நீர்ப்பறவை' டப்பிங் முடிந்த நாளில் பேசியதிலிருந்து...




.
அறிமுக சினிமாவில் இருந்தே அதிக நிதானம் காட்டுகிறீர்கள். கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள். இருந்தும் முதல் படத்தை தவிர மற்ற படங்கள் எதற்கும் பெரிய அடையாளம் இல்லையே?




எனக்கு உண்மையில் கிரிக்கெட் மீதுதான் உயிர். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுதான் அதிகம். ஏனோ சரியாக அமையவில்லை. அதன் பின்தான் சினிமாவுக்கு வந்தேன். வீட்டில் பெரிய கஷ்டம் இல்லை. கேட்டதெல்லாம் கொடுக்கிற வீடுதான். ஆனாலும் சினிமாவில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. தொடர் முயற்சிகள், சினிமா சம்பந்தமான ஆள்களுடன் சந்திப்புகள் என நாள்கள் கடந்து கொண்டே இருந்தது. சினிமா அவ்வளவு பெரிய விஷயமாக இருந்தன. அதனாலேயே நிச்சயம் இதில்தான் பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.



 அப்போதுதான் இயக்குநர் சுசீந்திரன் சார் அழைத்து வெண்ணிலா கபடி குழு வாய்ப்பு தந்தார். நல்ல படம், எனக்கான நல்ல அடையாளத்தை உருவாக்கி தந்தது. கதைதான் ஹீரோ என்பதை நம்புகிற அளவுக்கு படம் பார்த்தவன் நான்.சினிமாவுக்கு வந்த பின்பும் அதுதான் நிஜ சினிமாவாக இருக்கும் என எண்ணினேன். ஏதோ சில காரணங்கள் சில விஷயங்கள் கை கூடி வரவில்லை. எல்லாமே நம்பி நடித்த படங்கள்தான். சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம். ஆனால் பெரிய பாதிப்பு இல்லை. இப்போது "நீர்ப்பறவை'. அவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. நிச்சயம் வேறுபட்ட சினிமா. நான் நினைத்த சினிமா இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இது என்னை நல்ல இடத்துக்கு கொண்டும் போகும்.




ஒரு படம் ஹிட் ஆனாலே நம்ம ஹீரோக்கள் தாறுமாறாக பிஸி ஆகி விடுகிறார்கள். ஆனால் நீங்கள் வருடத்துக்கு ஒரு படம் கூட நடிக்கவில்லையே?




ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு பாணி. எனக்கென ஒரு வட்டம் இருக்கிறது. எந்த இடத்திலும் எந்த தவறும் செய்யக் கூடாதென கட்டுப்பாடுடன் இருக்கிறேன். அதற்குள் மட்டும்தான் என்னால் இயங்க முடியும். கிடைக்கிற இடத்தில் இருந்து விட்டு போகலாம் என நினைத்தால், ஒன்றுக்குமே ஆகாத படங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன். சினிமாவுக்கு வந்த வேகத்தில் இந்நேரம் 15 படங்களை கடந்திருக்கலாம். அது தேவை இல்லை. நான் பெரிய அழகன் இல்லை. மற்ற ஹீரோக்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு எனக்கு பலசாலியும் இல்லை.



எனக்கான இடம் ஒன்று இருக்கும். அதற்கு போராடிக்கொண்டு இருக்கிற சின்ன பையன் நான். என்னால் எந்த மாதிரியும் நடிக்க முடியும். "வெண்ணிலா கபடி குழு', "குள்ளநரி கூட்டம்", "துரோகி', "பலே பாண்டியா' எல்லாவற்றிலுமே தனித் தனி அடையாளங்கள். சாக்லேட் பாய் கேரக்டர் எனக்கு சரி வராது என்பது எனக்கே தெரியும். எல்லோருமே நல்ல அடையாளத்துக்குதான் வந்திருக்கிறோம். அது எனக்கும் வேண்டும். பல தரப்பட்ட கதைகளில் நடிக்க நிச்சயம் என் உடம்பு செட் ஆகும். அதனால்தான் நடித்த படங்களில் எல்லாவற்றிலுமே தனி அடையாளங்களை காட்டியிருக்கிறேன்




. அப்ப எந்த மாதிரியான சவாலான வேடம் வந்தாலும் ஏற்றுக் கொள்வீர்களா?



நிச்சயம். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் என்னோடு சினிமாவுக்கு வந்த ஹீரோக்களுக்கு கிடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு கிடைத்த கேரக்டர்களும் அப்படி. காமெடி, ரொமான்ஸ், கிராமம் சார்ந்த கதை, சிட்டி பேஸ் கதைகள் என நடித்த நான்கு படங்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறேன். இதுவே நான் நல்ல சினிமாவுக்கான தேடலில் இருக்கிறேன் என்பதை காட்டும். ஒரே விதமான சினிமாக்கள் செய்வது என் எண்ணம் இல்லை. தமிழில் எதிர்பார்த்த கதைகள் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. தேசிய விருது இயக்குநர் சீனுராமசாமி சார் இயக்கத்தில் நடிப்பது நல்ல விஷயம். எனக்கென எந்த பிராண்டும் இல்லை. தவறான முடிவை எடுத்து விட்டோம் என சொல்லி வருத்தப்படவும் ஒன்றும் இல்லை. எந்த மாதிரியான வேடத்துக்கும் நான் தயார். நான் கிரிக்கெட் வீரர். எந்த பந்தைப் போட்டாலும் சமாளிக்க வேண்டும். சினிமாவிலும் அப்படித்தான் இருப்பேன். நம்பர் ஒன் இடம் வேண்டாம். எல்லோருமே கவனிக்க வேண்டும். அது போதும்.

http://cdn3.supergoodmovies.com/FilesFive/nandita-das-about-neer-paravai-a1f5946e.jpg


ரொம்பவே எதார்த்தத்துக்கு பக்கத்தில் போய் படம் எடுப்பார் சீனுராமசாமி. கஷ்டம் அதிகமாக இருந்திருக்குமே?





ஆமாம். அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். எப்போதுமே நல்ல காட்சிகளுக்காக காத்திருப்பார். இயல்பாக, உண்மையாக வர வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார். ""உங்கள் முகத்தில் ஒரு உண்மை இருக்கிறது. அதுதான் இந்த கதைக்கு வேண்டும். கதை சொல்லலாமா"" என்று கேட்டார். கதை கேட்டேன்.


""நான் இத்தனை வருடமாக இதற்குதான் காத்துக்கொண்டிருந்தேன். நடிக்கிறேன்.'' என என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டேன். இது வேண்டும், அது வேண்டும் என்கிற தேடலில் இருப்பாரே தவிர, நமக்கு முழு சுந்திரம் கொடுத்து விடுவார். ""இதுதான் காட்சி. உன்னால் எப்படி நடிக்க முடியுமோ அதை கொடு'' என்று சொல்லி விடுவார். நிச்சயம் அவரின் வேலை வித்தியாசமானது. இது மாதிரி ஒரு கதை பிடித்ததற்காகவே அவருக்கு விருது தரலாம். நாமெல்லாம் தினமும் சந்திக்கிற செய்தி. அது ஒரு செய்தியாகத்தான் நம்மை கடந்து போகிறது. அதற்கு தீர்வு சொல்ல ஒரு கதை. அந்த கதைக்கு நான் ஹீரோ. நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்.



ஒரு முத்த காட்சியில் நடித்தாலே இங்கு ஆயிரம் பிரச்னைகள். ஆனால் நீங்களோ சுனைனாவுக்கு எண்ணிக்கையில் அடங்காத முத்தங்கள் கொடுத்திருக்கிறீர்களாமே?



இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். மற்றபடி கிசுகிசுக்களுக்கோ, பிரச்னைகளுக்கோ இடம் இல்லை. சுனைனாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இதுவரை என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. என்னை இப்படியே விட்டு விடுங்கள்.



அப்புக்குட்டி தேசிய விருது வரைக்கும் போய் விட்டார். "பரோட்டா' சூரிக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் உருவாகி வருகிறது. உங்களுடன் வந்தவர்கள் ஒவ்வொரு இடத்துக்கு போய் விட்டார்கள். அவர்களையெல்லாம் பார்ப்பது உண்டா? அவர்களைத் தவிர வேறு யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?




அப்புக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்ததில் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அதுவும் சுசீந்திரன் சார் படத்துக்கு. உனக்கு ஒரு தவிர்க்க் முடியாத இடம் இருக்குன்னு அப்புக்குட்டியிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். அதற்கு இப்போது அர்த்தம் கொடுத்திருக்கிறார்.சூரியின் காமெடிக்கு நல்ல வரவேற்பு. அவ்வப்போது பார்ப்பது உண்டு. அடிக்கடி பார்க்கா விட்டாலும் நல்ல, அழகான நட்பு இன்னும் அப்படியே இருக்கிறது. சினிமாவில் எனக்கு யாரையும் தெரியாது. ஸ்டார் கிரிக்கெட்தான் எனக்கு பலரையும் நண்பனாக்கியது. விஷால், ஆர்யா, பரத், சாந்தனு எல்லோருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸ். "நீர்ப்பறவை' வந்த பின் இன்னும் ஆழமான சில நட்புகள் நிச்சயம் கிடைக்கும்.
 நல்ல சினிமாவுக்கு உண்மை மட்டுமே போதும்!"



http://cdn4.supergoodmovies.com/FilesFive/6a7b8b4455af420b9ec86b8ac192547f.jpg


நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ் 


க.நாகப்பன்

'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் கிராமத்தைக் கையாண்ட இயக்குநர் சீனுராமசாமி, கடலைக் களம் ஆக்கி இருக்கிறார் 'நீர்ப்பறவை’யாக.


 ''இது இலங்கைத் தமிழர்களின் கதையா?''



''நடுக்கடல்ல ஒரு படகில் பலர் இறந்துகிடக்கிறாங்க. அதில் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருக்கான். தென் இலங்கையைச் சேர்ந்த அவனை ஒரு மீனவன் தமிழகத்துக்கு அழைச்சிட்டு வந்து வளர்க்குறான். அவன்தான் விஷ்ணு. இதுல புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியை 14 நிமிஷங்கள் சமரசம் இல்லாமல் பதிவு செஞ்சுருக்கேன். மத்தபடி முழுக்க கிறிஸ்துவ மீனவக் கிராமத்தின் அசலான பதிவு இந்தப் படம். 'நீர்ப்பறவை’ தண்ணீரில் இரை தேடும்.''





''வசனங்கள் ரொம்பக் காட்டமா இருக்கும்போலத் தெரியுதே?''



''ஜெயமோகன் வசனம் எழுதி இருக்கார். அதைத் திரைமொழிக்குத் தகுந்தபடி வலுவாக்கி இருக்கேன். சினிமாவுல எல்லாரும் ஜெயிக்கணும்னு நினைக்கிற ஒரே ஆத்மா சமுத்திரக்கனிதான். 'அண்ணே, நான் உங்க படத்துல நடிக்குறேன்’னு உரிமையாக் கேட்டார். 'நம்மகிட்ட ஒத்துமை இல்லை. 30 தொகுதி மீனவனுக்கு இருந்தாத்தான் நம்ம சத்தம் கேட்கும். இல்லைன்னா, அலை மாதிரி நம்ம சத்தம் நமக்குள்ளதான் இருக்கும்’னு  சமுத்திரக்கனி பேசுற ஒவ்வொரு வசனத்துலயும் உண்மை சுடும்.''




''படத்தில் அரசியல் அதிகமா?''



''கடல் அரசியல்தான் 'நீர்ப்பறவை’. கடல்தான் இந்த உலகத்துல மூத்த உசுரு. எல்லாவித இறக்குமதி, அந்நியப் படையெடுப்பு, மதம் வந்து இறங்கிய இடம்னு சகலமும் நடக்குற இடம். இப்போ அங்கே மீனவன் வாழ்றதுக்குப் பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரே ஒரு தக்கையை எல்லையா வெச்சு இந்திய எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாதுனு சொல்றாங்க. தக்கை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அங்கேயும் இங்கேயும் தள்ளிப்போகுது. கடலுக்கு நடுவே காம்பவுண்டு சுவரா இருக்கு? நாட்டுப் படகில் மீன் பிடிக்கப்போகும் சட்டை இல்லாத மீனவனை ஒரு அந்நிய நாடு சுடுறதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய வன்முறை. முப்படைகளும் கொண்ட இந்திய நாட்டின் கடலோரப் பிள்ளைகளை இன்னொரு நாடு சுட்டுக் கொல்றதை எப்படிப் பொறுத்துக்க முடியும்?  இதை எல்லாம் என் படம் கேட்கும்.''



''படம் முழுக்கப் பிரச்னைகள் மட்டும்தானா?''



''இரானில் இருக்கும் இயக்குநர்கள் இரான் பிரச்னைகளைத்தான் படமா எடுக்குறாங்க.  நான் தமிழ்நாட்டு மீனவர்களின் கதையை எடுக்குறேன். எதிரிகள்கூட இந்தப் படத்தைப் பார்த்தா இரக்கப்படுவாங்க. மற்றபடி விஷ்ணுவுக்கும் சுனைனாவுக்கும் இடையிலான சுவாரஸ் யமான, நெகிழ்வான காதல் கதை இருக்கு.''



''கதைக்கு நந்திதாதாஸ் எப்படித் தேவைப்பட்டாங்க?''



''நம்ம மீனவர்களின் அபயக் குரல் நாடு முழுக்க ஒலிக்கணும்னு ஆசைப்பட்டேன். உடனே, நந்திதாதான் எனக்கு நினைவுக்கு வந்தாங்க. நான் இதுவரை நேரில் பார்த்திராத நண்பர் ரவி.கே.சந்திரன்,அவங்க கிட்ட 'தைரியமா சீனுராமசாமி படத்துல நடிக்கலாம்’னு சொல்லி இருக்கார். கதையைக் கேட்ட நந்திதா, 'படத்துல நிறைய உண்மைகள் இருக்கு. ஆனால், சினிமாவுக்கு உண்மை போதுமா?’னு கேட்டாங்க. நான் நல்ல சினிமா வுக்கு உண்மை மட்டுமே போதும்னு சொன்னேன். நம்பிக்கையா நடிச்சுக் கொடுத் தாங்க.''

நன்றி - விகடன்

அட்ரா சக்க: நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/11/blog-post_9009.html