Showing posts with label OTHERS (2025)- அதர்ஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts
Showing posts with label OTHERS (2025)- அதர்ஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts

Tuesday, November 11, 2025

OTHERS (2025)- அதர்ஸ் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ,மெடிக்கல் க்ரைம் திரில்லர்)

                             




ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 - நள்ளிரவில் ஒரு கொள்ளை முயற்சி நடக்கிறது.சாலையின் நடுவில் ஒரு பாறாங்கல்லைப்போட்டு தடுமாறி விபத்துக்கு உள்ளாகும் வண்டியிலிருந்து கொள்ளை அடிக்க ஒருவன் திட்டமிட அவன் வலையில் மாட்டியதோ ஒரு கொலைகாரன்.ஆல்ரெடி கொலை செய்த 3 பேர் உடல்களை வண்டியில் வைத்து அதை விபத்துக்கு உள்ளானதைப்போல சித்தரிக்கும் முயற்சியில் கொலைகாரன் முயலும்போது  இந்த விபத்து நடக்கிறது.போலீஸ் ஆபீசர் ஆன நாயகன் இந்தக்கேசை விசாரிக்கிறான்


சம்பவம் 2 - நாயகி ஒரு டாக்டர்.நாயகனுடன் திருமணம் நிச்சயம் ஆனவர்.நாயகி பணி புரியும் ஹாஸ்பிடலில்  செயற்கை முறையில் கரு தரிக்க வைக்கும் பிராசில் ஒரு முறைகேடு நடப்பதைக்கண்டு பிடிக்கிறார்


சம்பவம் 3 - வில்லன் பெண். ஆக இருந்து ஆணாக மாறியவர்.இந்த சமூகம் தனக்கு இழைத்த கொடுமைகளுக்குப்பழி வாங்க எதிர் காலத்தில் ஆண்கள்,பெண்களுக்கு இணையாக எண்ணிக்கையில் திருநங்கைகள், திருநம்பிகளை உருவாக்கும் முயற்சியில் இருப்பவர்


மேலே சொன்ன 3 சம்வங்கள்,3 கேரக்டர்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது நிகழும் சம்பவங்கள் தான் மொத்தத்திரைக்கதையும்


நாயகன் ஆக அறிமுக நாயகன் ஆதித்யா போலீஸ் ஆபீசர் ஆக கம்பீரம் காட்டி இருக்கிறார்.ஜிம் பாடி செம பிட் பாடி.


நாயகி ஆக  "வெயிட்" ஸ்பெஷலிஸ்ட் போராளி கவுரி கிஷன் கச்சிதமான நடிப்பு.ஒரு டூயட்டில் இளமை அழகை அள்ளித்தெளிக்கிறார்.நிஜ வாழ்வில் அந்த யூ ட்யூபரை மடக்கியது போல படத்தில் ஒரு லேப் டெக்னீஷியனை மடக்கும் காட்சியில் தியேட்டரில் ஆரவாரம்.இனி இவர் படங்களில் இது போல காட்சி ஒன்றாவது நிச்சயம் இடம் பெறும்

 வில்லன் ஆக வித்தியாசமான வேடத்தில் ஜெகன்.காமெடியன் ஆகப்பார்த்து வில்லன் ஆக ஜீரணிக்க ஆரம்பத்தில் சிரமம் ஆக இருந்தாலும் தன் நடிப்பால் வசீகரிக்கிறார்.


வில்லனின் அப்பாவாக இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் நல்ல குணச்சித்திர நடிப்பு.


காமெடியன் ஆக முனீஷ்காந்த்  எடுபடவில்லை.


நாயகனின் கொலீக் ஆக வரும் அந்த லேடி போலீஸ் நடிப்பு அருமை


அர்விந்த்சிஙகின் ஒளிப்பதிவு கச்சிதம்.நாயகியைக் க்ளோசப் காட்சிகளில் அழகாகக்காட்டி இருக்கிறார்.


இசை ஜிப்ரான்.ஒரு பாடல் ஹிட்.பின்னணி இசை பிரமாதம்

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் அபி ஹரிஹரன்



சபாஷ்  டைரக்டர்


1. வில்லனின் கேரக்டர் டிசைன் அருமை.வேதா,வேதிகா,மாரி இந்த மூன்று பேரை வைத்து போலீசிடம் ஆடும் கண்ணாமூச்சி அருமை.

2 முதல் பாதியை விட பின் பாதி விறுவிறுப்பு,திருப்பஙகள்,வேகம்  அதிகம்


  ரசித்த  வசனங்கள் 


1 கிஃப்ட் இருக்கு , ஆனா  கிட்டே  வந்தாதான் கொடுப்பேன் 

2 போலீசை ஏமாத்தும் கிரிமினல்ஸ் இருக்காஙக,ஆனா போலீசிடம் மாட்டாத கிரிமினல்ஸ் யாருமே இல்லை


3  தப்பு பண்ற எல்லாருக்கும் அவஙக தரப்பு நியாயம்னு ஒண்ணு இருக்கும்,ஆனா நீ பண்றது நியாயமே இல்லை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர்) படத்தில்  நாயகியுடனான காதல் , ஊடல் , டூயட் எல்லாம்  ஸ்பீடு பிரேக்கர்ஸ் தான் 

2  தன்னைப்போட்டுத்தள்ளதான் அந்த   மூவரும் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அந்த வேன் டிரைவர்  என்ன தைரியத்தில்  வேனில் ஏறுகிறார்? பின் சீட்டில் இருவர் அருகில் ஒருவர் .   மூவரை  எப்படி சமாளிப்பார் ? 


3  அந்த மூவரும்  கூலி  அதிகமாக்கேட்கிறார்கள் , தர்லைன்னா வேற  பக்கம்  வேலைக்குப்போகலாம், அதுக்காக ஒரு கொலை செய்வார்களா? 

4 முனீஷ்காந்த் போலீஸ்  கேரக்டருக்காக என்ன மெனக்கெட்டார்? ஹிப்பித்தலை , பானைத்தொப்பை. சகிக்கலை 

5 நாயகன்  போலீஸ் ஆஃபீசர், ஆனால் போலீஸ்  ஹேர் கட்டிங்க்  இல்லை . லைட்டா தாடி வேற 

6 வில்லன் தரப்பில் லாஜிக்கே இல்லை.தமிழக மக்கள் தொகை 7 கோடி +.தனி ஒரு ஆளாய் வில்லன் எத்தனை குழந்தைகளை அவனைப்போல உருவாக்கி விட முடியும்?

7 வில்லனின் நடிப்பு வேட்டையாடு விளையாடு வில்லன் டேனியல் பாலாஜி  நடிப்பைக்காப்பி அடிப்பது ஏனோ?

8 கடைசி 30 நிமிடங்களில் இவர் தான். வில்லன் என ஒருவரைக்காட்டி பின் இல்லை இவர் இல்லை என சொல்லி மீண்டும் வில்லன் இவர் தான் எனக்குழப்புவது ஏன்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம்.   திரில்லர் ரசிகர்களுக்குப்பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 41. குமுதம் ரேன்க்கிங் ஓக்கே

ரேட்டிங் 2.5 /5