Showing posts with label INTERVIEW. Show all posts
Showing posts with label INTERVIEW. Show all posts

Wednesday, May 16, 2012

9 தாராவின் 2 வது முன்னாள் கணவர் பிரபுதேவா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7js69IRL6cb5XO5JwvfklGjOI42je_ktBc-f20JpEbPLxe8-oNEb_w0zVXdqlj5Icy2LyeiViM8xtBjUo54taOQcRE3-TzBxCGJOi-pgVUl8aMcFho7yz_UMta3EDJ7JMXXnQ0QEWOsEf/s1600/sonakshi-sinha-stills028.jpg 
அண்ணனோட லேட்டஸ்ட் ஹி ஹி - சோனாக்‌ஷி சின்ஹா



ம்லத்துடனான விவாகரத்தோ, நயன்தாராவுடனான பிரிவோ... எப்போதும் சென்சேஷனல் செய்திகளில் தவறாமல் இடம் பிடிக்கிறது பிரபுதேவாவின் பெயர். மும்பை விமான நிலையத்தில் ஃப்ளைட் பிடிக்கக்  காத்திருந்த இடைவேளையில் பேசியதில் இருந்து...



1. '' 'ரவுடி ரத்தோர்’ இந்திப் படத்தில் அக்ஷய் குமாருடன் நம்ம விஜய் டான்ஸ் ஆடி இருப்பது பெரிய ஆச்சர்யம். அப்படியே அவரை இந்தியில் நடிக்கவும் வெச்சிருவீங்களா?''


சி.பி - தமிழ்ல்ல எப்படி நடிச்சாரோ அதே மாதிரி ஹிந்திலயும் நடிப்பாரா? ஐ மீன் பஞ்ச் டயலாக்?



''தமிழ் 'சிறுத்தை’ ரீ-மேக்தான் 'ரவுடி ரத்தோர்’. படத்தில் ஓப்பனிங் ஸாங்கா வர்ற 'ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா’ பாட்டுக்கு விஜய் சார் ஆடினா நல்லா இருக்கும்னு தோணுச்சு.  'ஓ.கேங்ண்ணா.... பண்ணிடலாம்ண்ணா’னு ரெடியாகி வந் தார் விஜய். விஜய்க்கு தேங்க்ஸ். அதே போல விஜய்க்கு ஓ.கே-ன்னா, அவருக்காக இந்தியில படம் பண்ண நான் ரெடி!''


சி.பி - அண்ணே, ஹிந்தில நடிக்கனும்னா முகத்துல எக்ஸ்பிரஸ்சன்ஸ் காட்டனும்னா. கெட்டப்ல சேஞ்ச் பண்னனும்.. 



2''அப்படியே மும்பையிலேயே செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?''


சி.பி - அண்ணன் மும்பைல செட்டில் ஆகறாரா? இல்லையா? என்பதை ஹன்சிகா தான் முடிவு பண்ணுவார் 


''உண்மையைச் சொல்லணும்னா... நான் அடுத்தும் இந்திப் படம்தான் இயக்குறேன். தமிழுக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனா, கையில இருக்கும் கமிட்மென்ட்ஸ்லாம் முடிச்சுட்டு தமிழ்நாடு பக்கம் வர எப்படியும் பத்துப் பதினைஞ்சு வருஷம் ஆகிடும்போல. நெஜமாத்தாங்க சொல்றேன்... அவ்வளவு வேலை மும்பையில் இருக்கு. நம்புங்க!''


சி.பி - ரத்தோர் டிரெய்லர் பார்த்தேன், படு கேவலமா இருந்தது, அந்த படம் ஊத்திக்கிச்சுன்னா  இதே வாய் , எனக்கு தமிழ் தான் மூச்சு, அதுல தான் பேச்சுன்னு பேக் அடிக்கும் பாருங்க. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPaCMPFMe0eLhdHkLMoxEZ6xykFDqAVeHAzLjyHXiiquvv7cv11L0yDNbT_imEYEloo85BpN9cYC1hfafd708MmasWTjZ8CJPTR4SIeFmbsczj_aCjU38lEZq2XUDs3xYGK37KoYAy8ow/s1600/Sonakshi+Sinha+Hot+Wallpaper.jpg
3.''ஒரு பேட்டியில், 'நான் உண்மையா இருந்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை’னு உங்களைப் பற்றி நயன்தாரா சொல்லியிருக்காங்களே..!''


சி.பி - அவங்க சொன்னது தப்பு. அதாவது அம்மணி அவங்களோட 2 வது காதலருக்கு உண்மையா இருந்தாங்க, அய்யா  முதல் மனைவிக்கு உண்மையா இருந்தாங்க. இதுல என்ன தப்பு? கீப்னா அடக்கி வாசிக்கனும், இப்படி ஆக்ரமிக்க நினைக்கக்கூடாது , அப்புரம் உள்ளதும் போச்சுடா கில்மாக்கண்ணான்னு போக வேண்டியதுதான். 


''போன கேள்வியோடவே பேட்டியை முடிச்சிக்குங்க. போதும்'' என்றவரிடம், ''இல்லீங்க... இன்னும் நாலைஞ்சு கேள்விகள் இருக்கு'' என்றதும், ''ஓ.கே. நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...'' என்றார்.

http://cinema.lankasri.com/photos/full/others/prabhudeva_party_003.jpg


4. ''உங்க பிறந்த நாள் விழாவில் த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக போஸ் கொடுத்தது யாரையோ காயப்படுத்தத்தான்னு சொல்றாங்களே?''


சி.பி - இது பெரிய பூமாராங்கா? அதுக்குத்தான் பதிலடியா “சிம்பு கூட நடிக்கத்தயார்”னு அம்மணி அறிக்கை விட்டாங்களே?



''ஐயையோ... நெக்ஸ்ட் நெக்ஸ்ட்...''


5. ''நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சோனாக்ஷி சின்ஹானு உங்க ஹீரோயின் எல்லார்கூடவும் உங்களைச் சேர்த்துவெச்சுப் பேசப்படுறதைப் பத்தி?''



''ஏங்க போதும்ங்க... ஃப்ளைட் வந்துடுச்சு. கிளம்புறேன்!''


 சி.பி - கடைசி 2 கேள்வியை நிஜமா கேட்டீங்களா? சும்மா நீங்களா போட்டுக்கறீங்களா? 

http://www.thedipaar.com/pictures/resize_20101126115258.jpg


Thursday, May 10, 2012

வழக்கு எண் 18/9 - டீம் மீட்டிங் + டைரக்டர் பேட்டி - வீடியோ

ப்போது தமிழ்நாட்டின் பரபரப்பான வழக்கு இதுதான்... 'வழக்கு எண் 18/9’. 'காதல்’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படைப்பு!  


 ''காரைக்குடி தியேட்டர்ல படம் முடிஞ்சதும் எழுந்து நின்னு கை தட்டுறாங்களாம் சார்!'' - முகம் நிறைந்த புன்னகையுடன் பூரிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி. 'திருப்பதி பிரதர்ஸ்’ அலுவலகத்தில் குழுமி இருக்கும் 'வழக்கு எண் 18/9’ டீம், வந்து குவியும் வாழ்த்துகளால் உற்சாகமாக இருக்கிறார்கள்.


'' 'காதல்’ படம் மாதிரி இதுவும் ஒரு உண்மைக் கதைதான். ஆனா, ஒரே கதை இல்லை. பேப்பர்ல படிச்ச பல கதைகளை ஒண்ணுசேர்த்து ஒரே கதையா மாத்தியிருக்கேன்!'' - 'வழக்கு’ விவரம் சொல்கிறார் பாலாஜி    சக்திவேல்.
படத்தில் நடைபாதைக் கடை இளைஞனாக பாக்குக் கறைபடிந்த பற்களுடன் பங்கரையாக நடித்திருக்கும் ஸ்ரீ, நேரில் செம ஸ்மார்ட். ''சார் 'கல்லூரி’ பண்ணும்போது சான்ஸ் கேட்டுப் போயிருந்தேன். கிடைக்கலை. அப்புறம், விஜய் டி.வி. 'கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடிச்சேன். அதைப் பார்த்துத்தான் சார் கூப்பிட்டார்.



 ஒருநாள், 'உனக்கு ஷாட் இல்லை’னு சொல்லிட்டாங்க. பொழுது போகாம பக்கத்தில் இருந்த பார்க்கில் படுத்துத் தூங்கிட்டேன். திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா, என்னைச் சுத்தி எந்தச் சத்தமும் இல்லாம கேமரா ஷூட் பண்ணிட்டு இருக்கு. எனக்கு அப்படியே ஒரு மாதிரி கண் கலங்கிருச்சு'' என்று நெகிழ்கிறார் ஸ்ரீ.


ப்ளேபாய் வில்லத்தனம் செய்யும் மிதுன் முரளி, கேரளத்துப் பையன்.''குழந்தை நட்சத்திரமா மூணு மலையாளப் படம் பண்ணி இருக்கேன். பெரிய ரோலில் நடிக்கிறது இதுதான் முதல் தடவை. ஷூட்டிங்ல நடிக்கிற மாதிரியே இல்லாம ரொம்ப கேஷ§வலா நடிச்சோம். இப்போ தியேட்டர்ல பார்த்தா, 'நாங்களா இப்படி நடிச்சோம்’னு ஆச்சர்யமா இருக்கு. எல்லாமே சார்தான்!'' என்று பாலாஜி சக்திவேலை நோக்கி கை நீட்டுகிறார்.


வேலைக்காரப் பெண் பாத்திரத்தில் வரும் ஊர்மிளா மஹந்தா, பூனே பெண். ''சார்கிட்ட வாய்ப்பு கேட்கும்போது, 'கதைப்படி நீ ஒரு பிராஸ்டியூட். உன்கிட்ட வந்த ஒருத்தன் காசு கொடுக்காம ஓடிப் போயிடுறான். இன்னொரு நாள் அவனைத் தெருவுல பிடிச்சுட்டே. எப்படி ரியாக்ட் பண்ணுவே, நடிச்சுக் காட்டு’ன்னு சொன் னார். இந்தி, குஜராத்தி, மராத்தி, அசாமின்னு பல மொழிகள்ல கெட்ட வார்த்தை பேசி திட்டி நடிச்சேன். பயந்துபோய் சார் வாய்ப்பு கொடுத்துட்டார். ஆனா, படத்துல 'அம்மா, சர்ஃப் தீர்ந்துபோச்சு’, 'பொறுக்கி’, 'கத்தி எல்லாம் கையில வெச்சுக்கக் கூடாது’... இவ்வளவுதான் நான் பேசுற டயலாக்!'' என்று சிரிக்கிறார்.


படத்தில் இன்ஸ்பெக்டராக வரும்முத்து ராமனின் நடிப்பு 'பக்கா புரொஃபஷனல்’ என்று பாராட்டுகள். ஆனால், சாருக்கும் சினிமாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. லெதர் தொழிலில் இருக்கிறார். ''எனக்கு பாலாஜி சக்திவேல், லிங்குசாமி எல்லாரும் உதவி இயக்குநரா இருக்கும்போதே பழக் கம். இந்தப் படத்தில் கூப்பிட்டு இன்ஸ் பெக்டர் டிரெஸ்ஸைப் போட்டுவிட்டு, 'உங்களை ஒரு போலீஸ்காரனா நினைச்சுக் கோங்க... இதுதான் கதை. இஷ்டப்படி நடிங்க’ன்னு சொல்லிட்டார் இயக்குநர். பெருசா எதுவும் மெனக்கெடாம நடிச்சேன். பல காட்சிகள் ஒரே டேக்கிலேயே ஓ.கே. ஆச்சு!'' என்பவர் 'காதல்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் ரெஜிஸ்ட்ரார் ஆக நடித்திருக்கிறார்.


மொத்தப் படத்தையும் கேனான் 5டி என்ற டிஜிட்டல் கேமரா மூலம் படம் பிடித்து தொழில்நுட்பக் கவனம் குவித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். ''நார்மல் சினிமா கேமரா, 35 கிலோ எடை இருக்கும். கேனான் 5டி ஸ்டில் கேமராபோல இருக்கும். நிறையக் காட்சிகளில் கதாபாத்திரங்களுக்கு நடுவில் கேமராவைத் தூக்கிப் போட்டுப் படம் பிடிச்சது மாதிரி இருக்கும். இது ரசிகர்களுக்கு, தானே ஸ்பாட்டில் இருந்து கவனிக்கும் உணர்வைக் கொடுக்கும்!'' என்கிறார்.  


அந்தப் பள்ளிக்கூட கரஸ்பாண்டென்ட் பெயர் ஜெயலட்சுமி, செல்போனில் ஆபாச க்ளிப்பிங்ஸ் வைத்திருக்கும் பையனின் அப்பா பெயர் தூய இருதயம், கெமிஸ்ட்ரியில் சந்தேகம் என இருவரும் படித்துக்கொண்டு இருப்பது ஆசிட்பற்றிய பாடம், ஆங்காங்கே பல ஃப்ரேம்களில் லோ ஆங்கிளில் கிடக்கும் பாட்டில், ஆசிட் வீச்சுக்குப் பிறகு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போது பின் பக்கம் இருந்து கேட்கும் 'ஒரு ஆஃபாயில்’ குரல், வேலை பார்க்கும் வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் செருப்பை எடுத்து ஓரமாக வைக்கும் வேலைக்காரப் பெண் எனப் படம் நெடுகிலும் விரவிக்கிடக்கும் நுணுக்கமான காட்சிகள் பல கதைகள் சொல்கின்றன.



இந்தப் படத்தில் 'கூத்துக்காரன்’ சின்ன சாமி இணைந்த கதை சுவாரஸ்யமானது.


''எங்க ஊர், தருமபுரி பக்கம் எர்ரப்பட்டி. எனக்கு படிப்பு வரலை. அதான் நாலைஞ்சு வருஷமாக் கூத்து கட்டுறேன். மஹாபாரதம், ராமாயணம் எல்லாம் நடிப்போம். நான் பொண்ணு வேஷமும் கோமாளி வேஷமும் போடுவேன். அதுக்குத்தான் முடியெல்லாம் வளர்த்துவெச்சிருக்கேன். அப்படி ஒரு தடவை மேய்ச்சேரியில கூத்து நடக்கிறப்போ, குண்டா ஒருத்தர் கேமராவை வெச்சு நான் நடிக்கிறதைப் படம் பிடிச்சாப்ல.


 'சினிமாவுல நடிக்கலாம்’னு கூப்பிட்டாப்ல. 'எனக்குத் தோதுப்படாது’னு சொல்லிட்டேன். அப்புறமா, 'நடிக்கிறது ஈஸிதான், அப்படி, இப்படி’னு சொல்லி நைஸ் பண்ணிக் கூப்பிட்டு வந்துட்டாப்ல. சினிமாவுல எல்லாமே புதுசா இருந்துச்சு. இங்கே தப்பா நடிச்சா உடனே நிறுத்திட்டு, மாத்தி நடிக்கச் சொல்றாங்க. ஆனா, கூத்துல அதெல்லாம் முடியாது. சினிமாவை விட கூத்துதான் கஷ்டம்!'' என்கிற சின்னசாமிக்கு 17 வயது. கூத்து என்பதைத் தாண்டி உலகமே தெரியவில்லை.


''நிறையப் பேர் பாராட்டுறாங்க. 'நம் தகுதிக்கு மீறிய பாராட்டோ?’னு தோணுது. ஆனாலும், இதை அடுத்த நல்ல சினிமாவை எடுக்கிறதுக்கான பெட்ரோல் மாதிரி எடுத்துக்கிறேன்'' என்று அதிர அதிரச் சிரிக்கிறார் பாலாஜி சக்திவேல்! 


தமிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்... இந்த 'வழக்கு’!

 எளிய மனிதர்களின் பிரியங்களை  அதிகாரமும் வக்கிரமும் எப்படிக் குதறிப் போடுகின்றன என்பதை அத்தனை அசலாக ஆகச் சிறந்த செய்நேர்த்தியுடன்  நேர்மையாகச் சொல்லிய விதத்தில்... பாலாஜி சக்திவேல், தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் தடம் பதிக்கிறார்!


முழுக்க முழுக்க அறிமுகங்கள்... புதுமுகங்கள்... அதுதான் படத்தின் நம்பகத்தன்மைக்கான நங்கூரம்.


ஒரு அபார்ட்மென்டில் வீட்டு வேலை செய்யும் ஊர்மிளா முகத்தில் யாரோ ஆசிட் அடித்துவிடுகிற வழக்கின் விசாரணையில் தொடங்குகிறது கதை. போலீஸ்       விசாரணையில் ஊர்மிளாவோடு தகராறு பண்ணும் பிளாட்ஃபார இட்லிக் கடைப் பையன் ஸ்ரீ சிக்குகிறான்.

ஊர்மிளாவை ஒருதலையாகக் காதலித்த ஸ்ரீ மீது சந்தேகம் பாயும்போதே, உண்மையான குற்றவாளி, அதே அபார்ட்மென் டைச் சேர்ந்த பணக்கார பையன் மிதுன் முரளிதான் என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியவருகிறது. மிதுன் முரளியின் அம்மா, மந்திரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் பணமும் அதிகாரமும் விளையாடுகின்றன. கடைசியில் இன்ஸ்பெக்டரின் நயவஞ்சகத் தால் ஸ்ரீ குற்றவாளியாக்கப்படுகிறான். இதற்குப் பதிலடியாக ஊர்மிளா என்ன செய்தாள் என்பது உலுக்கி எடுக்கும் க்ளைமாக்ஸ்!


மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். மொபைல் போன், இணையம் போன்ற அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும்போது பள்ளி மாணவர்கள் வரை எவ்வளவு சீரழிவு வரும் என்பதையும் சொல்லும் இந்தப் படம்... நமக்குப் பாடம். பிடிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்கும் மோசமான கலாசாரத்தைப் பற்றிய கதையில், கந்துவட்டிக் கொடுமை, கொத்தடிமைக் கொடூரம், எளிய மக்களின் அன்பு, பணக்கார சூது, பள்ளி மாணவி களின் பருவ ஈர்ப்புபோன்ற பல விஷயங்களுடன் உண்மைக்கு நெருக்கமாக ஊர்வலம் வருவதில்,  இயக்குநரின் கடும் உழைப்பு தெரிகிறது.


ஒருவன் பசியால் நடைபாதையில் மயங்கிக்கிடக்கும்போது டிஃபன் பாக்ஸோடு கடந்தோடும் கால்கள், அந்த ஜெயலட்சுமி போன்    பேசும்போது பின்னால் சிரிக்கும் நித்யானந்தா போட்டோ, ஊர்மிளாவின் கம்யூனிஸ அப்பாவின் பெயர் பாலன், ப்ளாட் போட விவசாய நிலங்கள் எனப் படம் முழுக்க எவ்வளவு நுணுக்கங்கள்!


இட்லிக் கடைப் பையனாக வரும் ஸ்ரீ அப்பாவி பையன் கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். அத்தனை வருடங்கள் கொத்தடிமையாக இருந்த போதெல்லாம் கோபம் காட்டாமல், பெற்றோர் இறந்த தகவலை மறைத்தது தெரிந்து கொந்தளித்து எழுவது, ரோஸி அக்காவிடம் பரிதாபம்கொள்வது, ஊர்மிளாவைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தில் வெட்கப் பிரகாசம் காட்டுவது என ஸ்ரீ ஆச்சர்ய அறிமுகம். இன்ஸ்பெக் டர் வஞ்சகமாகப் பேச,  குழப்பமும்காதலு மாக அழுது அரற்றிச் சம்மதிக்கும்               அந்தக் காட்சி... மாஸ்டர் பீஸ்!


முழுதாக இரண்டு வரி வசனம்கூட இல்லாமல் 'கண்கள் இரண்டால்’ மட்டுமே படம் முழுக்க பேசுகிறார் ஊர்மிளா மஹந்தா. அதுவும் க்ளைமாக்ஸில் ஸ்ரீயைப் பார்க்கும் அந்த ஒற்றைப் பார்வையிலேயே... காதல், கருணை, ஏக்கம் என அனைத்தையும் பிரதிபலிப்பதில் வெல்டன் ஊர்மிளா!


யாரப்பா அந்த இன்ஸ்பெக்டர் முத்துராமன்? குள்ளநரி போலீஸ் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு அழகாக உயிர் கொடுத் திருக்கிறார்.  'அந்த முறுக்கு கம்பெனிக்காரன் மேல கொதிக்கிற எண்ணெயை நீ  ஊத்தியிருக்கணும்டா...’ என்று ஸ்ரீக்கு ஆதரவாகப்  பேசுவதும், 'நீங்க இனிமே எதுன்னாலும் என்கிட்டயே ஸ்ட்ரைட்டா வந்திருங்க...’ என அயோக்கிய முகம் காட்டுவதுமாக... எந்த உணர்ச்சியும் காட்டாமல் காவாளித்தனம் செய்யும் ஒரு காவல் அதிகாரியின் மனப்போக்கை கச்சிதமாகப் பிரதிபலித்து இருக்கிறார்.
படம் நெடுக நடமாடும் சீரியஸ் மாந்தர்களுக்கு நடுவில் 'யோவ்... யோவ்...’ என்றபடி வரும் சின்னசாமி, பெரிதாகக் கவர்கிறான். கிராமத்துக் கூத்தில் சிறுமியாக வேடமிட்டுப் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று 'மார்பில்’ நோட்டுக் குத்திக்கொள்வதாகட்டும், படம் முழுக்கவே பெண்ணின் மெல்லிய உடல்மொழியுடன், அலட்டல் பந்தாவுடன் வலம் வருவதாகட்டும்... யோவ்... உனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குய்யா!


தன்னிடம் 'ஃப்ளெர்ட்’ செய்கிறான் என்று தெரிந்தே தயக்கத்துடன் அதை அனுமதிப்பதிலும், மிதுனின் மொபைலில் வீடியோ பார்த்து அதிர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் காரிலேயே 'காய்ச்சல் காரணம்’ சொல்லி வீட்டுக்குப் பத்திரமாக வந்து இறங்கும் துணிச்சலிலும், மனீஷா யாதவின் உடல்மொழி மெட்ரோ கான் வென்ட்  மாணவியைக் கண்ணில் நிறுத்துகிறது!
காஃபி டே அவுட்டிங், பார்ட்டி டேட்டிங் கலாசாரத்தில் திளைக்கும் அலட்சியமான, வக்கிரமான பணக்கார வீட்டுப் பையனாக மிதுன் முரளி கடுப்பேற்றுவதில்... கச்சிதம்!


'பொறுக்கி... பொறுக்கி’ என ராகம் போட்டுக்கொண்டே இருக்கும் பார்வதி, ரோஸி அக்காவாக வரும் தேவி, வண்டிக் கடைக்க£ரராக வரும் ஜெயபாலு என அத்தனை பேரும் இயல்பான அழகான தேர்வுகள். படம் முழுக்க படு இயல்பான வசீகரமான வசனங்கள் பெரிய பலம். 'அய்யே அந்த தியேட்டர் வேணாம்க்கா... ஒரே கலீஜ்!’ என்று 'தொழில் நிலவரம்’ பேசும் பாலியல் தொழிலாளிகள், 'கருவாடு இருக்குற இடத்துலதான்யா பூனை இருக்கும்’ என்று போலீஸை வைத்தே   கஞ்சா விற்பவனை அடையாளம் காண்பது என்பதெல்லாம் சாம்பிள்கள்! கவர்ச்சியின் எல்லையைத் தொட அனுமதிக்கும் கதையிலும் கவனமாக விலகி நடந்திருப்பது, வசதியான வீட்டுப் பெண் என்பதால் 'கெட்ட பெண்’ணாகக் காட்டாமல் வயதுக்கு உரிய இயல்போடு மனீஷா பாத்திரத்தை வடிவமைத்திருப்பது, 'இனிமே குடிக் காதக்கா. உனக்கு நான் இருக்கேன்க்கா...’ என்று பாசத்துடன் ஸ்ரீ காசு கொடுத்ததும் நெகிழும் ரோஸி பிளாஸ்டிக் கப்பை மிதித்துவிட்டுச் செல்வது, ஊர்மிளாவை கோர்ட் வளாகத்தில் போலீஸார் அடிக்கத் தொடங்க, பெண் வக்கீல்கள் ஓடிவந்து அவளைச் சூழ்ந்து நின்று காப்பாற்றுவது எனப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பொதுமக்களின் மீதான அக்கறை தொனிப்பதற்கே... இன்னொரு சபாஷ்!


புகைப்படம் எடுக்கும் கேனான் 5டி டிஜிட்டல் கேமரா ஒளிப்பதிவில், பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப் போல நெருக்க உணர்வை அள்ளித் தருகிறது விஜய் மில்டனின் கேமரா. கதை மெதுவாக நகரும் நேரங்களில் எல்லாம் விதவிதமான கேன்டிட் ஷாட்கள்தான் படத்தை தூக்கிப் போகின்றன. ஆனால், நடிகர்களின் உடம்போடு கேமராவை இணைக்கும் 'பாடிகேம்’ ஷாட்களில் மட்டும் அங்கங்கே கார்ட்டூன் எஃபெக்ட்!


பாடல்களே இல்லாத இப்படியான ஒரு படத்தில் பின்னணி இசை எவ்வளவு முன்னணி வகித்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங்.  இசையே இல்லாமல் ஒலிக்கும் 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்..’, 'ஒரு குரல் கேட்குது பெண்ணே..’ கவிதைகள் நல்ல ஆறுதல்.


தவறான மனிதர்களின் மீதான பெருங்கோபத்தையும் எளிய இதயங்களின் மேல் பேரன்பையும் கிளறிவிட்டு மனிதத்தைப் பேசும் இந்த வழக்கை, எந்த வாய்தாவும் வாங்காமல் ஆதரிக்க வேண்டியது சினிமா ரசிகர்களின் கடமை... தவறவிடக் கூடாத உரிமையும்கூட!

நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  

ஜெ , கலைஞர்- இருவரையும் திணற வைக்கும் வை கோவின் கலக்கல் பேட்டி இன் விகடன்

18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg


 1.''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''


''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.


பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது.


 ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம்.


 திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான்    அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''


'' 2. 2.'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கிறாரே ஜெயலலிதா?''


''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா? செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்?


தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''




3.''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா?''


''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம்.

 தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-ymYvJGv58xC5KYG-BbiE-SPfVCG21CrpEQ2-9y8-2UQGOLGAFs_sYkLc-uIh-2GrYP0CKD9ZP7y2rGC31QNLwePeCbDx_MswPnwccSctTtSIQpACIkbsCyuSkLDSC_yTjt1txBdnFZw/s1600/vaiko_2.jpg


4. ''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா?''


''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.


ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார்.

 இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். 

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. 

அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.


இரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.


மூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம்.


 ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்!''

http://www.vaiko-mdmk.com/vaiko_img/nadaipayanamhtml/img/vaiko_big61.JPG


5. ''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி?''


''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே!

 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!



யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.



நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன? தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.


 தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.


தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAXA2BaLH5NRLgz1z51PXObXERn1U6BSLlQU1VNBsN1j3fYYVomcZVKIKskaVzuJ8CFEz6hANjzSr3nh8kTNzDQeZDhzhXEGgrglf5PAifBbDndDpu2PYWQ2GDw372O1FCD6vVgTdFf5I/s1600/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg

6.''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே?''


''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்?


கருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு.

 திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.


எந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்!''




7.''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது?''


''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.


இதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''


8.''குறிப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே?''


''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்!''

http://seithy.com/siteadmin/upload/vaiko13-072011x411.jpg


9.''புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்பீர்களா?''


''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''
- கை கூப்பி முடிக்கிறார் வைகோ
 
நன்றி - விகடன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.  
 
 

சந்தானம் பேட்டி - இன் ஆனந்த விகடன்


http://moviegalleri.net/wp-content/gallery/karthi-ranjani-wedding-reception/karthi_ranjani_reception_photos_487.jpg 

1. ''நீங்க கவுண்டமணியைப் பயங்கரமா இமிடேட் பண்றீங்கனு நான் சொல்றேன்... கரெக்டா?'' 


சி.பி - கொலம்பஸ்.. புதுசா கண்டு பிடிச்சுட்டாரு.. இரிடேட் பண்ணாம தானே இமிடேட் பண்றாரு?  


''அது என்ன மாய மந்திரம்னு தெரியலை... விகடன் ஆளுங்க எடுக்குற பேட்டியில மட்டும் இந்தக் கேள்வி ரிப்பீட் ஆகிட்டே இருக்கு. இதை வாசகர்கள்தான் கேக்குறாங்களா, இல்ல... விகடன்ல உள்ளவங்களே எழுதிப்போட்டுக் கேக்குறாங்களானு தெரியலை. பரவாயில்லை... இந்தவாட்டியும் சமாளிப்போம்.


என் முதல் படம் 'மன்மதன்’. அதுல ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுக்க கவுண்டமணி சார்தான் காமெடி. செகண்ட் ஹாஃப்லதான் என் காமெடி. மகுடேஸ்வரன் சொல்ற மாதிரி, அவரை நான் இமிடேட் பண்ணி இருந்தா, படம் முடிஞ்சதுமே, 'அடேய்... இந்த சந்தானம் பய கவுண்டமணி மாதிரியே பண்றான்ப்பா’னு சொல்லி அப்பவே காலி பண்ணியிருப்பாங்க.



 ஆனா, அப்படில்லாம் எதுவுமே நடக்கலையே நண்பா. ஒருவேளை நான் சப்ஜாடா எல்லாரையும் கலாய்க்கிறதால, நீங்க இப்படிச் சொல்றீங்கனு நினைக்கிறேன். வழக்கமா கவுண்டமணி சார் செந்திலை மட்டும்தான் அதிகமாக் கலாய்ப்பார். நான் என்கூட நடிக்கிற எல்லாரையுமே செந்திலா நினைச்சுக் கலாய்க்கிறேன். அதனால, அவரைஇமிடேட் பண்ற மாதிரி உங்களுக்குத் தோணலாம். ஆனா, உங்க கிரீடம் மேல சத்தியமா நான் அவரை இமிடேட் பண்ணலை மிஸ்டர் மகுடேஸ்!''


சி.பி - நாத்திகம் பேசி  கருத்து சொன்னா அது விவேக் காமெடி, அடிவாங்கி அழுதா வடிவேல் காமெடி, எல்லாரையும் நக்கல் அடிச்சு துவைச்சு காயப்போட்டு தொங்கப்போட்டா அது கவுண்டமணீ காமெடின்னு  தமிழன் மனசுல ஃபார்ம் ஆகிடுச்சு.. மாற்ற முடியாது.. நமக்கு சிரிப்பு வருதா?ங்கரதுதான் முக்கியம்..



2. ''விஜய், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யானு ஹீரோக்களே சேர்ந்து நடிக்கிறாங்க. ஆனா, வடிவேலு - சந்தானம் காம்பினேஷன் இனிமேல் சாத்தியமா? எங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்க ஆசையா இருக்கே?'' 



''எனக்கும் அந்த ஆசை இருக்கு. நான் ரெடிங்க!''




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzJzfOMOWF2Bf8npCN_g8Tqy4Hlac6W2T7KEoAtA_YE3vhItFwhf-JI8bM9I-mq6zE_r-yvlR7owcCzx2AJZ3lddEXo4GHIsQsJlqeLwLFwOGqq-58jyDQxYn-g1-ls-5K1Mw_FEY-_9ji/s1600/san+(1).jpg

 3. ''நீங்க பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஆனாலும், பக்கா மெட்ராஸ் பாஷை பேசி ஒரு படம்கூட நடிக்கலையே நீங்க... ஏன்?'' 


''என்ன திவ்யா... நம்மகிட்டயே காமெடி பண்றீங்க. இப்ப நான் பேசுறது எந்த ஊர் பாஷைனு நினைச்சுட்டு இருக்கீங்க? 'எப்டிக்கீற? நாஷ்டா துன்னியா? இட்னு வா... வலிச்சுனு வா’னு பேசுற பழைய மெட்ராஸ் பாஷையை மனசுலவெச்சுட்டுக் கேக்குறீங்கனு நினைக்குறேன்.


 அப்படிலாம் இப்ப சென்னையிலயே யாரும் பேசாதப்ப, நான் மட்டும் பேசினா ரொம்ப கேரிங்கா இருக்குங்க. இப்பல்லாம் மெட்ராஸ் பொண்ணுங்க செம டீசன்ட்டா இங்கிலீஷ்லதான் கலக்கு றாங்க. அவங்களுக்கு ஈக்குவலா இல்லாங் காட்டியும் பசங்களும் தமிழையே இங்கிலீஷா ரீ-மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க. 


அதைத்தான் நானும் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக் கேன். இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ படத்துலகூட பக்கா ட்ரிப்லிக்கேன் பாஷைதான் பேசி யிருப்பேன். அதைக் கவனிக்கலையா நீங்க? ஆங்... பை தி பை... திவ்யகுமாரி, நீங்க லூஸ் மோகன் ரசிகையா?''


4.''தமிழ் சினிமாவில் காமெடின்னா ஆண்கள்தானா... ஏன் பெண்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கவே மாட்டேங்கிறீங்க?'' 


''எப்பவுமே இப்படினு சொல்ல முடியாது. ஒருகாலத்துல மனோரமா ஆச்சி கொடுத்த ஸ்பேஸ் போகத்தான் எல்லாருக்கும் இடம் இருந்தது. தங்கவேல் சார், நாகேஷ் சார், சந்திரபாபு சார்னு வளைச்சு வளைச்சு எல்லாருக்கும் ஜோடியா நடிச்சுட்டு இருந்தாங்க ஆச்சி. அதுக்குப் பிறகு, கோவை சரளா மேடம் அடிச்சுத் தூள் பண்ணிட்டு இருந்தாங்க. 


ஆனா, அவங்களுக்கு அப்புறம் யாரும் வரலை. பார்ப்போம்... யாராவது வருவாங்க... அது வரைக்கும் 'அவள் வருவாளா... அவள் வருவாளா’னு நாம பாட்டு பாடிட்டு இருப்போம்!''



சி.பி - ஏன்? ஷகீலா, ஆர்த்தி 2 பேரும் இப்போ காமெடி டிராக்ல ட்ரை பண்ணிட்டுதானே இருக்காங்க? ஓக்கே ஓக்கே ல உங்க கூட நடிச்ச தேன்ன்ன்ன்ன்ன் அட கூட காமெடில கலக்க வாய்ப்பு இருக்கு.



5''நயன்தாரா,  தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி... இவங்கள்ல யார் உங்களுக்கு நெருக்கமான தோழி?'' 




''நல்ல வேளை... என் நெருக்கமான தோழி பேரு இந்த லிஸ்ட்ல இல்லை. கிரேட் எஸ்கேப்!''




6. ''தமிழில் எந்த ஹீரோவுடன் நடிப்பது உங்க கனவா இருந்தது?'' 


''ரஜினி சார்தான். அந்த அளவுக்கு அவரோட தீவிர வெறி பிடிச்ச ரசிகன்.  'எந்திரன்’ மூலம் அந்தக் கனவும் நிறைவேறிடுச்சு. 'எந்திரன்’ ஷூட்டிங்ல என் டயலாக்கை எல்லாம் மறந்துட்டு, ரஜினி சார் நடிக்கிறதையே பார்த்துட்டு நிப்பேன்.


 'ஏன்... ஏன்... என்ன... என்ன... என்ன ஆச்சு சந்தானம்?’னு சார் பதற்றமா கேட்பார். 'இல்ல சார்... நீங்க நடிக்கிறதையே பாத்துட்டு இருந்துட்டேன்’னு சொல்வேன். 'ஓ.கே. நான் நடிச்சதைப் பார்த்துட்டீங்க. நீங்க என்ன நடிக்கிறீங்கனு நான் பார்க்கணும்ல. அதுக்காகவாவது நடிங்க சார்’னு கிண்டலடிப்பார்.


 நாம ஏதாவது செட்ல காமெடி பண்ணா, அவரும் ஜாலியா சேர்ந்து கலாய்ப்பார். சீன்ல என் காமெடி டயலாக் டெலிவரி எல்லாத்தை யும் ரசிப்பார். 'சூப்பர்... சூப்பர்’னு என்கரேஜ் பண்ணுவார். கடைசியில ஒரு சீரியஸான சீன். நான் ரொம்பவே திணறிட்டேன். 'அப்பா, காமெடின்னா மட்டும் பபபபனு பேசிடுற. சீரியஸ் சீன்ல சிக்கிக்கிட்ட பார்த்தியா’னு சிரிச்சார். சார் செம ஸ்ட்ரிக்ட்டு... ஆனா, செம சாஃப்ட்டு!''



7 ''எப்பவும் ஹீரோவுக்கு நண்பனாவே காமெடியன் வர்றது ஏன்?'' 



சி.பி - அப்போத்தானே படம் பூரா வர முடியும்?  காமெடி களை கட்டும்? வில்லனா வந்தா ஹீரோயின் இருக்கற சீன்ல அதிகமா வர முடியாதே? 


''இந்தக் கேள்வியைத்தாங்க நானும் எல்லா டைரக்டர்கள்கிட்டயும் கேட்டுட்டே இருக்கேன். அட... ஹீரோவுக்கு மட்டும்தான் உலகத்துல ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்களா? அந்த ஹீரோயின் ஹீரோயின்னு ஒருத்தங்க நடிக்கிறாங்களே... அவங்களுக்குலாம் பசங்க ஃப்ரெண்ட்ஸா இருக்க மாட்டாங்களா? 


 'அந்த கேரக்டர்ல ஒரு பொண்ணுதான் நடிக்கணும், நீ பையன். நடிக்கக் கூடாது’னு ஏதோ சினிமா இலக்கணத்தை மீறக் கூடாதுங்கிற மாதிரி சொல்றாங்க. அட... இந்த மாற்று சினிமா... ரியல் சினிமானு ஏதேதோ சொல்றாங்களே... அதுலயாச்சும் ஹீரோயினுக்கு ஒரு காமெடி யனை ஃப்ரெண்ட் ஆக்குங்கப்பா... அன் லிமிடெட் கால்ஷீட் தர்றேன்.''


சி.பி - அதுல ஒரு பிரச்சனை இருக்கு.. பெரும்பாலான படங்கள்ல ஹீரோவை விட நீங்க பர்சனாலிட்டில தூக்கலா தெரியறதால உங்களூக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா அப்புறம் ஹீரோ ஷூட்டிங்க்ல டம்மிஆகிடுவார்.. 

http://www.dailomo.com/wp-content/uploads/2011/11/siruthai-Santhanam-Karthi-Tamanah.jpg



8 ''நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ஸ்கூல்ல வாத்தியார்கிட்ட  அடிலாம் வாங்கி இருக்கீங்களா? ('சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா’னு கலாய்க்கக் கூடாது!)'' 


''டிப்ளமோ இன் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்... சுருக்கமா டி.இ.சி. படிச்சிருக்கேன். அதுவே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் படிச்சேன். வாத்தியார்களையே கலாய்ச்ச  சம்பவம்தான் நிறைய இருக்கு.

 ஒரு சின்ன சாம்பிள்... கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் நான் படிச்சேன். காலையில நாலு பீரியட், மத்தியானம் மூணு பீரியட். மத்தியானம் சாப்பிட்டு முடிச்சுட்டுப் போறப்ப ஒரே ஒரு புக்கை மட்டும் கைல வெச்சு ஸ்டைலா சுத்திக்கிட்டே ஸ்கூலுக்குப் போவேன். அப்படி ஒரு தபா போனப்ப, 'எங்கடா என் சப்ஜெக்ட் புக்?’னு வாத்தியார் கேட்டாரு.


என்ன பண்றதுனு தெரியாம, 'இல்லைங்க சார்... வர்ற வழியில ஒருத்தர் புடுங்கிக்கிட்டாரு’னு சமாளிச்சேன். அப்புறம் அப்புறம் அவர் கேட்டப்பவும் அதே காரணத்தைச் சொன்னேன். ஒரு நாள் என்னை இறுக்கிப் புடிச்சுட்டாரு... 'புக்கை எவனாவது புடுங்குவானா? உன்கிட்ட புத்தகத்தைப் புடுங்குனது யார்னு சொல்லு... நான் என்னன்னு கேக்குறேன்?’னு என்னை ஸ்கூட்டர்ல தூக்கிப் பின்னால உட்காரவெச்சுக்கிட்டு கிளம்பிட்டாரு. 


 'என்ன பண்ணி டபாய்க்கலாம்’னு யோசிச்சுட்டே போறேன். ஒரு நாலு ரோடு சந்திப்புல ஸ்கூட்டரை நிப்பாட்டச் சொன்னேன். 'எங்கடா, யார்றா அது?’னு சுத்திமுத்திப் பார்த்துட்டே கேட்டார். 'அதோ அவருதான் சார்’னு கை காமிச்சுட்டு, வீட்டுப் பக்கம் ஓடிட்டேன். வாத்தியார் திரும்பிப் பார்த்தா, அங்கே கையில புத்தகத்தை வெச்சிட்டு சிலையா நிக்கிறார் பாரதியார். 




பயங்கர காண்டாயிட்டார் மனுஷன். 'டேய்...’னு நடுரோட்ல நின்னுட்டு ஆந்திரா வில்லன் மாதிரி கத்தினார். அக்கம்பக்கத்துல நின்னவங்க கூடி விசாரிச்சதும், விஷயத்தைச் சொல்லியிருக்கார். 'ஏன்யா, வாத்தியார் வேலைதானே பாக்குற... அறிவில்லையா உனக்கு. சின்னப் பையன் சொல்றான்னு கேட்டுக்கிட்டு இவ்ளவு தூரமா வருவ?’னு எல்லாரும் அவரைப் போட்டுக் கலாய்ச்சிட்டாங்க. இந்த மாதிரி மத்தவங்களை மாட்டிவிட்டு பிரச்னை ஆனது நிறைய இருக்கு!''


- அடுத்த வாரம்... 


''ஓ.கே... தியேட்டர்ல நீங்க வர்றப்போ எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா, நாகேஷ், சந்திரபாபு மாதிரி உங்க காமெடிகாலா காலத்துக்கும் நிலைச்சு நிக்குமா?'' 


''இப்போதைக்கு காமெடியில் உச்சகட்ட கலைஞன் வடிவேலு என்பேன். உங்கள் கருத்து என்ன?'' 


''சில சமயம் பெண்களைப் பற்றி சற்று ஓவராக கமென்ட் அடிக்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறீர்களா?'' 


- இன்னும் கலாய்க்கலாம்...


http://jeevafans.com/wp-content/uploads/2011/08/VV-Santhanam-Jeeva.jpg
THANX - VIKATAN


டிஸ்கி - சந்தானம் பேட்டி பாகம் 2 படிக்க http://www.adrasaka.com/2012/05/blog-post_4450.html

சந்தானம் பேட்டி பாகம் 3 படிக்க http://www.adrasaka.com/2012/05/2.html


சந்தானம் பேட்டி பாகம் 4 படிக்க -http://www.adrasaka.com/2012/06/blog-post_8565.html 

Friday, May 04, 2012

அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள்- சார்மி! பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Q7_jWKolIDyauk9dZjBukm3bHeyEHXJtGnHcE0tMPz4JvZu762-7SEYkooKzBwMsoGsdDSwPLoj18FQaPgUBdERl44my2jCfaIdFynicXoeaololBFcH3fBg0rI-4gx3haxkszvhR3fR/s1600/Charmi-hot-in-white-saree.jpg 

ரண்டாவது ரவுண்டில் இன்னும் சார்மிங்காக... சார்மி!   


சி.பி - எல்லா நடிகைகளூம் “ நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்பாங்க.. ஆனா இடுப்பு அளவுல ஓக்கே.  நடிப்பு அளவுல நாட் ஓக்கே.. 

1.  ''ஜெமினி டி.வி. நடுநிசிப் பாடல்களில் மட்டும்தான் உங்களை இப்போ பார்க்க முடியுது... என்னாச்சு சார்மி?''


சி.பி - நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கேன்னு எடிட்டர்ட பேட்டா வாங்கிட்டு அண்ணன் மிட் நைட் மசாலாதான் பார்த்திருக்காரு போல.. 

''சின்ன கேப் விழுந்திருச்சுல்ல... ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லை. பாலிவுட் பாட்ஷா அமிதாப்கூட நடிச்ச 'புத்தா... ஹோகா தெரா பாப்’ படம் அங்கே செம ஹிட். அமிதாப்பைக் காதலிக்கிற சின்னப் பொண்ணு கேரக்டர். 'க்யூட் லிட்டில் பார்பி டால்’னுதான் அமிதாப்ஜி என்னைச் செல்லமாக் கூப்பிடுவார். அப்புறம் விவேக் ஓபராயோட ஒரு படம், மம்மூட்டிகூட ஒரு படம் பண்ணிட்டு வந்திருக்கேன்.


சி.பி - நீங்களா வந்தீங்களா? அவங்களா அனுப்பிட்டாங்களா? ஹி ஹி 

நடுவுல 'பலே தொங்கலு’, 'கிங்’, 'ரகடா’, 'மகாத்மா’ படங்கள்ல ஃப்ரெண்ட்ஷிப்புக்காக நான் ஆடின அயிட்டம் டான்ஸைத்தான் நீங்க பார்த்திருக்கீங்கனு நெனைக்கிறேன். இப்போ ரவி தேஜாவோட ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள் பிஸி.'' 



சி.பி -நட்புக்காக -ன்னு டைட்டில்ல போடவே இல்லையே? சம்பளத்துக்காக... அப்டினுதானே போட்டாங்க..? அப்புறம்.”அடுத்த வருஷம் முழுக்க நான் நாட் ரீச்சபிள்னு சொல்றீங்களே.. செல் ஃபோன் சிம்மை கழட்டி வெச்சுட்டு என்ன பண்ணுவீங்க?

2. ''தமிழ்ல யார்கூடயாச்சும் டச்ல இருக்கீங்களா? சிம்புகூட நடிச்சிருக்கீங்களே... பேசிக்குவீங்களா?''



சி.பி - இதென்னய்யா வெ ஆ மூர்த்தி டைப் கேள்வி? தமிழ் சினி ஃபீல்டுல யார் கூடவாவது தொடர்புல இருக்கீங்களா?ன்னு கேட்டிருக்கலாம்.. ஹி ஹி 

 சிம்பு கூட பேசுனது இல்லையாம்.. ஏன்னா எந்த நடிகையையும் அவர் பேச விடறதில்லையாம்..  லிப்லயே ஒரு கிஸ் அடிச்சுடராராம்.


''தமிழ்ல பெர்சனல் ஃப்ரெண்ட்ஸ் கிட்டத்தட்ட இல்லை. 


சி.பி - ஹா ஹா ஃபிரன்ட்ஸ்ல பர்சனல் ஃபிரண்ட், பப்ளிக் ஃபிரண்ட்னு 2 வெரைட்டி மெயிண்ட்டனிங்க்கா? 

பிரபு சாலமன் சாரோட 'மைனா’ பார்த்துட்டு வாழ்த்து சொன்னேன். சிம்புகூட 'காதல் அழிவதில்லை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசினதுதான். இப்போ ரீசன்ட்டா ஹைதராபாத்ல ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சப்போ, ரொம்ப ஃபார்மலா அஞ்சு நிமிஷம் பேசினார். ஆனா, அவரோட அப்பா பத்தி நிறைய ஃபார்வர்டு மெயில்ஸ் வரும். அப்போ சிம்புதான் ஞாபகத்துக்கு வருவார்.''



http://www.shotpix.com/images/94744121137960471609.jpg

'3. 'ஹீரோயின் கேரியர்ல பாதியைத் தாண்டிட்டீங்க... இன்னும் கிளாமர் இமேஜைத் தாண்டலையே?''


சி.பி - இவங்க ஹீரோயினா? குத்தாட்ட ஸ்பெஷலிஸ்ட்டா?

''அதுக்கு நான் மட்டும் காரணம் கிடையாது. ஏஞ்சலினா ஜோலி நடிச்ச 'சால்ட்’ பார்த்திருக்கீங்களா? அப்படி ஒரு படத்துல பறந்து பறந்து சாகசம் பண்ண ஆசைதான். ஆனா, ஹீரோயினுக்கு அப்படி ஒரு  ஸ்க்ரிப்ட் இங்கே யார் கொடுப்பா? 






சி.பி  - பாப்பா இன்னும் வைஜயந்தி ஐ பி எஸ், பிரியதர்ஷனின் சிநேகிதியே , அருந்ததி, சந்திரமுகி  படங்கள் எல்லாம் பார்க்கலை போல

 அப்படி ஒரு ஸ்க்ரிப்ட்டோட வந்தா, அன்லிமிடெட் கால்ஷீட் கொடுக்க நான் ரெடி. ஏதோ என்னால் முடிஞ்ச வரை தேடிப் பிடிச்சு ஒரு கால் கேர்ள் தொழிலாளி கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன்.


 சி.பி - அடடா.. ஒரே ஒரு கால் உள்ள கேர்ளா நடிக்கறீங்களா?

அனுஷ்கா மாதிரி ஒரு ரோல் மாடல் இருக்கும்போது, எனக்கு என்ன கவலை? 



சி.பி - இப்படியே நீங்க எக்சசைஸ் பண்ணாம  இருந்தா ரோடு ரோலர் மாடல் ஆகிடுவீங்க.. 


டைரக்டர் சந்து சாரோட ஸ்க்ரிப்ட் அவ்வளவு சூப்பர்.


சி.பி - டைரக்டர் பேரே சரி இல்லை.. ஜாக்கிரதை.. 

பாலியல் தொழிலாளி ஒருத்திக்கு ஒரு பாடகரோட காதல். அந்தக் காதல் கல்யாணத்தில் முடியுதா, அவளால நார்மல் வாழ்க்கை வாழ முடியுதாங்கிறதுதான் கதை. அந்த கேரக்டர்ல சார்மி இன்னும் கவர்ச்சியா இருப்பானு நம்பி தியேட்டருக்கு வராதீங்க. அதுல இதுவரை நீங்க பார்க்காத சார்மியைப் பார்ப்பீங்க.''



சி.பி - உங்களை குணச்சித்திர நடிகையா பார்க்கற அளவு யாரும் இன்னும் மெச்சூரிட்டி ஆகலைங்க.  ஆனா சோக காட்சில கூட  2 இஞ்ச் ஆழத்துக்குப்பவுடர் போட்டிருக்கீங்களே.. உங்க கிளாமர்.. பிடிச்சிருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYyDYkN9xQc788MtExP_5iF8hWBNX1s1iBF1UcRA20ZVK_nxCx4ybhpkQdB_j-KH5gWBM3PLfXlpSUFneYh4nPXaqLddXH1p4PcyfLvUJ0BRJMUOp8r4mq9IGQe_QBUsPrhvDQMV8UHXeQ/s1600/charmi_16days.jpg


4. ''எப்போ கல்யாணம்?''

சி.பி - மார்க்கெட் சுத்தமா டவுன் ஆனபிற்பாடு, எவனாவது ஒரு இ வா தொழில் அதிபர் வசமா சிக்குன் பிற்பாடு.. ஹி ஹி 

''முதல் படத்துல நடிச்சப்போ எனக்கு 14 வயசு. 10 வருசமா நடிச்சுட்டு இருக்கேன். இவ்வளவு சின்ன வயசுல எதுக்குக் கல்யாணம்? இன்னும் பத்து ஹிட்ஸ் கொடுக்கணும். தமிழ்ல ஒரு மெகா ஹிட் கொடுக்கணும். அப்புறம் அதைப்பத்தி யோசிப்போம்!''


சி.பி - முதல் படத்துல நடிச்சப்ப ஜஸ்ட் 14 வயசு தானா.. ரொம்ப கம்மியா இருக்கே.. நாங்க எல்லாம் நம்பவே இல்லை தெரியுமா? அபாரமான வளர்ச்சி ..  ஐ மீன் சினி ஃபீல்ட்ல.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9l1EMNgQFUC1_lcQKvBTvbHmkJlQpAiXjVO2oXjpf4xSd6ahKbo3FCuC1ujSJ1xzXTZk8UERH9ODvGCV0PF_OXWdp6MCzf028ojwCFi_eDSisDvFeY5WZ_4u75T_EX1x9K9zFC_UFaDuv/s400/c11.jpg d

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 


Tuesday, April 24, 2012

நடிகையர் திலகம் சாவித்திரி பொக்கிஷ பேட்டி - 1975

http://www.tollycircle.com/wp-content/uploads/2008/01/20060421016601.jpg 


ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங்களாகிவிட்டன.  இந்த 1975... அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. அவரைப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அந்தக் காலம் எப்படி, இந்தக் காலம் எப்படி? சாவித்திரி சொல்கிறார்.


 நான் நடிக்க வந்தபோது...


''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்தனை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த புதுசுலயே நான் எட்டுப் படங்கள்ல நடிச்சேன். சேர்ந்தாற் போல எட்டுப் படங்களில் ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறது அப்போது எல்லாம் பெரிய காரியம். அதோட அப்போ வந்த எட்டுப் படங்களும் இப்போ வர்ற 40 படங்களுக்குச் சமம்... எல்லாவிதத்திலும்தான்!''



மூணு மாதம் ரிகர்சல்!


''நான் நடிச்ச படங்களில் எல்லாம் கதைதான் பிரதானம். முழுக்கக் கதை வசனம் எழுதிடுவாங்க. பிறகு, எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையும் ஆபீஸுக்கு வரச் சொல்லி இரண்டு, மூணு மாசம் ரிகர்சலில் இருப்போம்.
இப்போ உள்ள நிலைமை? திடீர் புதுமுகங்கள் நாற்காலியைக் கையோடு கொண்டுவந்து மூலையில் போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியது. இன்னும் சில பேர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதுபோலக் கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு 'படிப்பது’. யாராவது, எதாவது கேட்டால், 'எங்களுக்கு எந்தவித வம்பும் தேவையில்லை’ என்று 'ஸ்டாக் பதில்’ ஒன்றைச் சொல்லிவிடுவது!''


எங்களுக்குக் கற்றுத்தருகிறார்கள்!


''அப்போதெல்லாம் ரிகர்சல் பண்ணிட்டுத்தான் செட்டுக்குள் நுழைவாங்க. இதனால், எல்லோருடைய போர்ஷனும் எல்லோருக்கும் மனப்பாடமாக இருக்கும்.


இப்போ?


எல்லாமே 'ஆர்ட்டிஃபிஷியல்’. நடிப்பு முக்கியமாப் படலை. ஒவ்வொரு சீனுக்கும் என்ன ஹேர் ஸ்டைல், என்ன டிரெஸ் சேஞ்ச் பண்றதுங்கிறதுதான் முக்கியமான விஷயமாப்போயிடுச்சு.


முன்பெல்லாம் புதுமுகம்னு வந்தா, முதல்ல ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்துடுவாங்க. ரிகர்சல் பண்ணிக்கிட்டு ரெடியா இருக்கணும்.


இப்போ வந்திருக்கிற 'திடீர்’ ஆர்ட்டிஸ்ட்டுகள் மேக்கப் போட்டுக்கிட்டு நேரே செட்டுக்கு வந்துடுறாங்க. உள்ளே நுழையும்போதே 'ஷாட் ரெடியா?’னு கேட்டுட்டே நுழையறாங்க. எங்களைப் போன்ற அனுபவம் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தால், ஒரு மரியாதை கூடக் கிடையாது. சிலர் எங்களுக்கே 'இப்படி டயலாக் சொல்லுங்க... அப்படி டயலாக் சொல்லுங்க’னு கத்துத்தர்றாங்க!''


தொழிலில் அக்கறை இல்லை!
''நான் சிவாஜி அண்ணனோடு நடிக்கும்போது 'யார் ஸ்டுடியோவில் முதலில் இருப்பது’ என்று எங்களுக்குள் போட்டி இருக்கும். அப்படித் தொழில்ல அக்கறைகொண்ட நட்சத்திரங்களை இப்ப படவுலகில் விரல்விட்டுத்தான் எண்ண வேண்டி இருக்கு.


அந்தக் காலத்துல தயாரிப்பாளர், டைரக் டர்னா எவ்வளவு நடுக்கம் தெரியுமா? கேமரா மேன் நிக்கச் சொன்னார்னா, அவர் 'உட்காரு’னு சொல்ற வரைக்கும் நாங்க உட்கார மாட்டோம். ஆனா, இப்போ இருக்கிற புதுமுகங்கள், 'கேமரா லைட் நம் மீது விழும்போது எழுந்து நின்றுகொள்ளலாம்’ என்று உட்கார்ந்துவிடுகிறார்கள்.


ஐஸ் பாக்ஸ் முன்னே, நடிகை பின்னே!


இப்போ புதுமுகங்கள் கார்ல வந்தா, உடனே கார்லருந்து இறங்கி வர மாட்டாங்க. முதல்ல ஐஸ் பாக்ஸ் வரும். அடுத்தது மேக்கப் பாக்ஸ் வரும். அதுக்கு அடுத்தது நாற்காலி வரும். இதெல்லாம் வந்த பிறகுதான், ஆர்ட்டிஸ்ட் மெதுவாக இறங்கிவருவார்.
எங்களுக்கென்று தனியாக நாற்காலி  கொண்டுவரும் பழக்கத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்களே நானும் நாகேஸ்வரராவும்தான். தயாரிப்பாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்றுதான் இதை ஆரம் பித்தோம். இப்படித் தனியாக நாற்காலி கொண்டுவருவதற்கு நாங்கள் முதலில் எப்படிப் பயந்திருக்கிறோம் தெரியுமா? இப்போதோ எல்லாமே சர்வ அலட்சியமாக இருக்கிறது!''



நல்ல விஷயங்களே இல்லையா?


முன்பெல்லாம் நாங்கள் நடிக்கும்போது, செட்டுக்கு வெளியே எல்லோருமாகச் சேர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருப்போம். ஆனால், 'ஷாட் ரெடி’ என்றதும் அந்த மூடுக்கு வந்து விடுவோம். இவர்களுக்கு ஷாட்டுக்கு முன்பே அந்த 'மூடு’க்கு வரத் தெரியாது. அழுகிற சீன்கள் வந்தால்கூடப் பெரிய கொண்டை போட்டுக்கிட்டு, அமர்க்களமா டிரெஸ்பண்ணிக் கிட்டு வந்து நிக்கறது... டைரக்டர் 'ரிகர்சல் பாருங்கம்மா’னு சொன்னா, 'அதெல்லாம் டேக்கிலே பார்த்துக்கறேன் சார்’னு சொல்றது... டேக் எடுக்கும்போது டயலாக் சொல்லத் தெரியாம முழிக்கிறது... டைரக்டரைப் பார்த்து, 'அடுத்த தடவை கரெக்டா சொல்றேன் சார்’னு அசடு வழியறது... இதைத்தான் இப்போ வர்ற புதுமுகங்கள் செஞ்சுட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல இவங்க எங்களுக்கு டயலாக் சொல்லித் தர்றாங்களாம்!''


தியேட்டரில் படம் பார்ப்பேன்!

http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-002.jpg


''சாதாரணமாக நான் தியேட்டர்களில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவேன். ஏனென்றால், அப்போதுதான் ரசிகர்களுடைய உண்மையான கருத்துக்களை அறிந்துகொள்ள முடியும். யாராவது தனியாகப் படம் போட்டுக்காட்டினால், நான் போவது ரொம்பவும் அரிது. அப்படிப் பார்க்கப் போனால், ஒரு சீன் நல்லாயில்லேன்னா 'என்னங்க இது... இந்த சீனை இப்படி எடுத்திருக்கீங்களே’னு வெளிப்படையாகக் கேட்டுவிடுவேன். சில பேர் இதை விரும்ப மாட்டாங்க. இதனாலேயே நான் போறதில்லை. நான் நடிச்ச படங்களைப் பார்க்கிறபோது, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்புப் பண்ணியிருக்கேன்னும் பார்ப்பேன்.


இப்போ இருக்கிற சில ஆர்ட்டிஸ்ட்டுகள் 'ஆஹா, என்னமா நாம நடிச்சிருக்கோம்’னு தங்களைத் தாங்களே பாராட்டிக்கிறாங்க!''


வதந்திகள் கிளம்பும் இடம்!


''ஒரு காலத்துல நான் குண்டா இருந்தேன். அது என்னுடைய ரசிகர்களுக்குப் பிடிக்கல. வாஸ்தவம்தான். அதை நானும் ஒப்புக்கிறேன். பிறகு, நடுவுல ஜான்டிஸ்ல படுத்து இளைச்சுப் போயிட்டேன். இப்போ 'ஃப்ளூ’ வந்து ரொம்ப இளைச்சுப் போயிருக்கேன். இளைச்சுப்போனா லும், 'சாவித்திரிக்கு என்னமோ வியாதி’னு ஒரு வதந்தி.


இந்த மாதிரி வதந்திகள் கிளம்பற இடம் எது தெரியுமா? பாண்டி பஜார். ரொம்ப மோசமான இடம். சினிமாவில் சான்ஸ் கிடைக்காத சில பேர்வழிகள் இங்கே அரட்டை அடித்துக்கொண்டு கிளப்பிவிடுகிற சங்கதிகள்தான் வதந்திகளாக உருவாகின்றன!''

http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-001.jpg


உத்தரவுகள் போட்டதில்லை.


''நான் ஒரு படத்தில் நடிச்சிட்டு இருந்தபோது, ஒரு புதுமுகத்தை என்னோடு நடிக்கிறதுக்கு அழைச்சிட்டு வந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட என் பெரியப்பா, 'புதுமுகமா, வேண்டாம். நிறைய டேக் எடுக்க வேண்டி இருக்கும். இதை நீ ஏத்துக்காதே’ என்று என்னிடம் சொன்னார். 'பெரியப்பா! நானும் ஒரு காலத்தில் புதுமுகமா இருந்தவதான்... ஞாபகம் வெச்சுக் குங்க’னு பெரியப்பாகிட்ட சொல்லி, பிறகு அந்தப் புதுமுகத்துக்கும் தைரியம் கொடுத்தேன். யாருக்கும் கெடுதல் செய்யணும்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.


எங்க காலத்துல 'இந்த ஆர்ட்டிஸ்ட்டைப் போடு, அந்த ஆர்ட்டிஸ்ட் வேண்டாம்’ என்ற உத்தரவுகள் எல்லாம் இருந்தது இல்லை. இப்போ சொல்லவே வேண்டாம்.


என்ன தைரியம்?

http://www.cinegoer.com/personalities/appuchesi.jpg


இப்போ வர்ற படங்களுக்கு கதாநாயகிகள் 'கிளாமரா’ இருந்தாப் போதும். ஜீன்ஸ், பெல்பாட்டம், மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டாப் போதும். நான் நடிச்ச வரை பாவாடை, தாவணி, புடவை இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும். அதான் எங்க லிமிட்!


ஒருநாள் திடீர்னு தயாரிப்பாளர் ஒருத்தர், 'ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப்போறேன். நடிக்கிறீங்களா?’னு கேட்டார். நானே முன் கோபக்காரி... எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேண்டும்? என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்க... போட்டுக்கங்க’னு சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பிவைத்தேன்!''

http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-003.jpg


Friday, April 13, 2012

டாஸ்மாக் வருமானத்தில் வாழும் அரசு -மனுஷ்யபுத்திரன் பேட்டி இன் விகடன்




மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிப்பவை மனுஷ்யபுத்திரன் கவிதைகள். சமூக, அரசியல் யதார்த்தங்களை உரக்கப் பேசும் இவர், சமகாலத்தின் குரல்.


1.  ''தமிழர்களின் இலக்கிய ரசனை எந்த அளவுக்குச் செறிவாகி இருக்கிறது?''


சி.பி - தமிழன் கிட்டே இலக்கிய அறிவு எப்பவும் கம்மிதான்.. சாப்பாடு பற்றிய அறிவு தான் ஜாஸ்தி..
''முதலில் தமிழர்களுக்கு இலக்கிய ரசனை என்று ஒன்று இருக்கிறதா? ஒரு துறையில் அதன் தாக்கத்தை அளவிட, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் அதில் ஈடுபட வேண்டும். எட்டுக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்ச் சமூகத்தில் எவ்வளவு பேர் இலக்கியம் அறிந்து உள்ளனர்? எவ்வளவு பேர் புத்தகங்கள் படிக்கின்றனர்?


 இன்னும் பலருக்குப் பத்திரிகைக்கும் புத்தகங்களுக்குமான வேறுபாடே தெரியவில்லை.


சி.பி - டீக்கடைல போய் ஓ சி ல படிச்சா அது பத்திரிக்கை.. லைப்ரரில போய் ஓ சி ல படிச்சா அது புத்தகம். இதுதான் தமிழனோட பார்வை 


 மக்களுக்கு அன்றாட வாழ்க்கை யில் ஏராளமான கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இடையில்தான் சினிமா பார்க்கின்றனர், டி.வி. பார்க்கின்றனர், மற்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இலக்கியம் என்பதும் ஒரு கேளிக்கைதான். அது ஓர் உயர்தரமான, மனிதனைச் செம்மைப் படுத்தக்கூடிய கேளிக்கை. சக மனிதனைப் புரிந்துகொள்ளவும் வாழ்வை இன்னும் இலகுவாக்கவும் இலக்கியம் சொல்லித்தருகிறது.

திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள்... அதுபோன்ற படைப்பை ஒரு தனி மனிதன் உருவாக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவுநிலை அப்படி ஓர் உயர்மட்டத்தில் இருந்தால்தான் அது சாத்தியம். அதேபோல, திருவள்ளுவர் ஒருவர் மட்டும் இருந்திருக்க முடியாது. அவருக்கு முன்னும் பின்னும் பல்லாயிரம் படைப் பாளிகள் இருந்துள்ளனர்



 அப்படியானால், திருவள்ளுவர் எதனுடைய கண்ணி? எதனுடைய தொடர்ச்சி? இதை எல்லாம் நாம் என்றைக்கேனும் யோசித்தோமா? இரண்டாயிரம் வருடத் தமிழ் அறிவின் சாரமான திருக்குறளை, அதன் கவித்துவத் தைக் கெடுத்து, அதன் அறவியல் நோக்கத்தை உதறிவிட்டு, வெறுமனே மனப்பாடப் பொருளாக நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறோம். தமிழ் இலக்கிய ரசனை இந்த அளவில்தான் இருக்கிறது!''


2. ''-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என இன்றைய இளைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் (virtual world) வாழ ஆரம்பித்துவிட்டதா?''


சி.பி - நம்மாளு காலைல பல்லு விலக்குறதையே  செல் ஃபோன்ல படம் பிடிச்சு ஸ்டேட்டஸா போடறான். சென்னைல நில நடுக்கம் வந்தப்பக்கூட மாடிப்படில இறங்கி ஓடிட்டே ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றான்.. . 
''இணையத்தின் வழியாக நமக்குத் திறந்துவிடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனிதகுல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொருபோதும் இருந்தது இல்லை. தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு, அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம். இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது

சி.பி - முன்னே எல்லாம் கில்மா படம் பார்க்கனும்னா அதுக்குன்னு இருக்கற தியேடர்க்குப்போய் இண்டர்வெல் பெல் அடிக்கற வரை காத்திருக்கனும்.. இப்போ எல்லாம் நடிகைங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் எடுத்து குளிக்கறப்பக்கூட அதை செல் ஃபோன்ல படம் பிடிச்சு  நெட்ல ரிலீஸ் பண்ணிடறாங்க.. டெக்னாலஜி ஈஸ் வெரி வெரி டெவலப்டு.. 




 ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மனிதர்களை மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும் கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே, நான் இதை எதிர் மறையாகப் பார்க்கவில்லை. யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்துவிட்டுள்ளது.

 சி.பி - இந்த சேட்டிங்க் மேட்டர்ல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.. சாரு மாதிரி பாவாத்மாக்கள் கிட்டே மாட்டிக்கிட க்கூடாது



 இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த சைபர் ஸ்பேஸ் மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள்தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்!''



சி.பி - வீட்டில் நெட் வைத்திருப்பவர்கள் குழந்தைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்திருப்பது நல்லது. நெட் செண்ட்டர் அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் குழந்தைகளுடன் பெற்றோரில் ஒருவர் உடன் செல்வது நலம்..  

3. ''காதல் இப்போதும் புனிதமானதுதானா?''

சி.பி - காதல் எப்போதும் புனிதமானதுதான்.. ஆனால் காதலர்கள் தான் பாவம் பண்ணி பேரை கெடுக்கறாங்க. 
''காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்தது இல்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும்போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில்கூடக் கலப்படம் வந்துவிட்ட உலகில், காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்

 சி.பி - இந்த உலகில் கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் ,இளநீரும் தான்



 ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால், காதல் புனிதமானதாக இருப்பது இல்லை!''  

4. ''இலக்கு நிர்ணயித்து விற்பனையைப் பெருக்கும் அளவுக்கு அரசு டாஸ்மாக் மீது கரிசனத்துடன் இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - கவர்மெண்ட்டோட முக்கிய வருமானமே சரக்குல தானே?

''ஓர் அரசுக்குக் குறைந்தபட்சப் பொறுப்பு உணர்வு வேண் டாமா? டாஸ்மாக் மூலம் வரும் பணத்தை அரசு வருமானமாகப் பார்க்கிறது.அது எங்கே இருந்து வருகிறது? கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் உழைப்பை விற்றுச் சம்பா திக்கும் பணம்


 பிள்ளை களுக்குப் பால் டின் வாங்க வும் அடுத்த வேளை உண வுக்கு அரிசி வாங்கவும் வைத்திருந்த பணம். சாரா யத்தை ஊற்றிக்கொடுத்து, அவன் போதையில் இருக் கும்போது அந்தப் பணத்தை வழிப்பறி செய்வது அயோக்கியத்தனம் இல்லையா? ஆனால், இது குறித்து அரசாங்கத்துக்கு வெட்கமே இல்லை.
லாட்டரிச் சீட்டை ஏன் தடை செய்தார் கள்? ஏழைக் குடும்பங்களைப் பாதிக்கிறது என்றுதானே? அதே காரணம் குடிக்கும் பொருந்தாதா? அதைவிடவும் பன்மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும் குடியை ஊக்குவிப் பதும் பரவலாக்குவதும் மக்கள் நல அரசு செய்யும் வேலையா?
உலகின் பல சமூகங்களில் குடி என்பது ஓய்வு நேரப் பொழுதுபோக்கு. இங்குதான் வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எத்தனை லட்சம் குடும்பங்கள் நிர்கதி ஆக்கப்பட்டு உள்ளன? எத்தனைகுழந் தைகள் அநாதைகளாக அலைகின் றனர்? எத்தனை லட்சம் தொழிலாளர் கள் உழைக்கும் திறனை இழந்து, நோய் களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்? 



ஏன் அரசு இது குறித்த சிறு அக்கறையும் இல்லாமல் இருக்கிறது? குடியைத்தடை கூடச் செய்ய வேண்டாம்... குறைந்த பட்சக் கட்டுப்பாடு கொண்டுவரலாம் அல்லவா? ஏன் நாள் முழுக்க டாஸ் மாக் கடை திறந்திருக்க வேண்டும்? அரிசி இத்தனை கிலோதான் என்று கட்டுப்பாடு இருக்கும்போது சாராயத் துக்குக் கட்டுப்பாடு இருந்தால் என்ன தப்பு?''
5. ''இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால்களாக நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?''



சி.பி - இளைஞர்கள் இப்போது சந்திக்கும் மிகப்பெரிய சவாலே வேலைதான்.. அதுவும் ஐ டி டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்யனும்னு துடிக்கிறான்.. அதுல தான் அதிக வருமானம் வருது. இப்போ பெண் வீட்டாரும் அதுதான் விரும்பறாங்க.. டாக்டர், எஞ்சினியர் காலம் எல்லாம் மலை ஏறிடுச்சு
''முந்தைய தலைமுறை மீது இல்லாத அழுத்தமும் சுமையும் இன்றைய இளைஞன் மீது படிந்திருக்கிறது. அவன் எதிர்கொள்ளும் மன நெருக்கடிகளும் சவால்களும் மிக அதிகம். குடும்பத்தின் தேவைகள், அலுவலக நெருக்கடிகள், வேலை கிடைக்காத சூழல் என அவன் எப்போதும் அவநம்பிக்கை யோடு வாழ்கிறான்.



 35, 40 வயதுகளில்கூட திருமணம் குறித்தோ, எதிர்கால வாழ்க்கை குறித்தோ சிந்திக்கக்கூடத் திராணியற்ற இளைஞர்களை நகரங்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நாம் பேசுவோம். வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இங்கு பணிபுரிகின்றனர். அவர்களை எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் குறைந்த கூலிக்குச் சுரண்டுகிறோம். முறையான வாழ்விடம் தரப்படுவது இல்லை.



 வட மாநிலக் குழந் தைகள் படிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள அவர்களை முதலில் பரிவுடன் அணுக வேண்டும்.அவர்களின் குற்றச் செயல்கள் தொடர் பான விசாரணைகள் தனி. ஒரு குறிப்பிட்ட சமூகம் பெரும் அளவில் இடம்பெயர்ந்து வரும்போது, அதில் ஒரு பகுதியினர்குற்றச் செயல்களில் ஈடுபடுவது இயல்பானதுதான். அதற்காக ஒட்டுமொத்தக் குற்றங்களுக்கும் வட மாநிலத்தவர்களைக் காரணமாக்குவது தவறு.


தமிழ்நாட்டில் நடைபெறும் அத்த னைக் குற்றங்களையும் வட மாநிலத் தவர்கள்தான் செய்கிறார்களா என்ன?''

6. ''தனி நபர்களை மையமாகக்கொண்ட அரசியல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும்?''



சி.பி - மன்னராட்சி போய் மக்கள் ஆட்சி வந்தாலும் தமிழன் இன்னும் அதுல இருந்து மீண்டு வர முடியலை.. நேரு பரம்பரை மத்தியிலும், கலைஞர் பரம்பரை மாநிலத்திலும் தொடரும் அபாயம் இருக்கு. 
''ஓர் இயக்கம்தான் கோட்பாட்டு முடிவு களை எடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் எனத் தனி நபர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்தான் நடக்கிறது. இந்தத் தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகள்தான் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலின் திசையை, தன்மையைத் தீர்மானிக்கின்றன


 இது ஓர் அரசியல் சூனியத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறது. இது நீடிக்கும் வரை தமிழர்களின் எந்தப் பிரச்னைக்கும் ஒரு நியாயமான தீர்வை நம்மால் எதிர்பார்க்க முடியாது!''