Showing posts with label 300-Rise of an Empire - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label 300-Rise of an Empire - சினிமா விமர்சனம். Show all posts

Friday, March 07, 2014

300-Rise of an Empire - சினிமா விமர்சனம்


ஓப்பனிங்க்லயே வில்லியோட ஃபிளாஸ்பேக்கை பார்த்துடுவோம்.ஆனா இயக்குநர்  ஹீரோவின் கண்ணோட்டத்துலதான் கதை சொல்றார். ஆனா அப்படிச்சொன்னா தமிழனுக்குப்புரியாது . இதுல என்ன முக்கியமான விஷயம்னா தனக்குப்புரியலைன்னா வேற யாருக்குமே புரியாதுன்னு தமிழன் நினைச்சுக்குவான் .( அந்தத்தமிழன் நான் தான் ) 


வில்லி சின்ன வயசுல  தன் கண் முன்னால கிரேக்கப்போர் வீரர்களால் தன் அம்மா சிதைக்கப்படுவதைப்பார்த்து பதர்றாங்க . அப்புறம் பெற்றோர் கொலை செய்யப்படறாங்க. பலரால் வில்லி சின்னா பின்னம் ஆக்கப்படறாங்க .குத்துயிரும்  குலை உயிருமா சாலையில் வீசிட்டுப்போறாங்க .யாரோ  ஒரு நல்லவர் அவரைக்கண்டெடுத்து வளர்த்தறார். 


 போர்க்கலை , வாள் சண்டை கத்துக்கிட்டு பெண் புலியா மாறுது வில்லி . அவரோட ஒரே நோக்கம் கிரேக்கர்களை அழிக்கனும் . கிரேக்கர்களுக்கு எதிரான சாம்ராஜ்ய சக்ரவர்த்தி கிட்டே வில்லி  இருக்கு. ஃபிளாஸ் பேக் ஓவர் 




 இப்போ கிரேக்க மன்னர் , இளவரசர் எல்லாம் போர் முனைல இருக்காங்க . கடல் போர் நடக்குது , சாண்டிலயனின்  யவண ராணி , கடல் புறா வில் வருவது  போல்  கப்பற்படைகள் மோதிக்குது . 


 மன்னரை வில்லி அம்பால் தாக்கி கொன்னுடுது . இப்போ இளவரசர் படைக்கு த்தலைமை தாங்க வேண்டிய சூழல். ஆனா சின்னப்பையன் . 

 இப்போ தான் ஹீரோ தளபதியா எண்ட்ரி . இவர் வெறும் 300 வீரர்களைக்கொண்டு அநாயசமா பெரும்படையை சமாளிக்கறார். 


 அது எப்படி முடியும்?னு தமிழன் குறுக்குக்கேள்வி கேட்க மாட்டான். ஏன்னா அவன் ஆல்ரெடி  விஜய் , விஷால் வகையறாக்கள் ஒரே ஆளா  50 பேரை அசால்ட்டா அடிச்சதை ப்பார்த்தவன் ஆச்சே? 


வில்லி தனது பெரும் படை சின்னாபின்னம் ஆவதைக்கண்டு திகைக்கிறா. இதுக்குப்பின்னால இருக்கும் மாஸ்டர் தளபதின்னு தெரிஞ்சுக்கறா. 


 தளபதியைத்தனிமையில் சந்திக்கனும்னு தூது விடறா 




 இப்போத்தான்  தமிழன் தலை  நிமிர்ந்து உட்கார்றான் . ஏன்னா 50  நிமிஷமா ஒரே போர் , ரத்தம், சத்தம் , மரண  ஓலம்னு கேட்டுட்டு இருந்தவனுக்கு செம கிளுகிளுப்பான  கில்மா சீன் வரப்போவதைத்தெரிஞ்சுக்கறான்


வில்லி அதுவரை ஃபுல்லா கவர் பண்ணின பர்தா மாதிரி டிரஸ் போட்டுட்டு இருந்தவ சில்க் ஸ்மிதா மாதிரி கிளாமரான டிரஸ் ல ஹீரோவை வரவேற்கறா. 


இப்போ வில்லி  ஒரு டீல் சொல்றா. அதாவது  ஹீரோ வில்லியை டேஸ்ட் பார்த்துட்டு அங்கேயே செட்டில் ஆகி அவங்க படைக்கு தலைமை தாங்கனும் . 

ஹாலிவுட் கில்மாப்படமான டிஸ்க்ளோசர்ல கம்பெனி லேடி எம் டி யே  ஹீரோவை ரேப் பண்ணும் புதுமையான காட்சி வந்துதே , இந்திர விழாவில் கூட அதை உல்டா பண்ணி நமீதா  ஸ்ரீகாந்த்தை அட்டெம்ப்ட் ரேப் பண்ணுச்சே அதே  சீன் இப்போ இங்கே  ஓடுது . 

 ஹீரோ தன் கண்ணியத்தை விட்டுக்கொடுக்கலை .பிடிச்சுத்தள்ளி விட்டுடறார். திரும்பி அவர் படை இருக்கும் இடத்துக்கே போயிடறார்.


 போர் நடக்குது . அதுல யார் ஜெயிச்சாங்க ? என்பதே கதை . 




வில்லி ஈவா க்ரீன் தான் நாயகி ரேஞ்ச்சுக்கு கலக்குது . அவர் ஃபிளாஸ்பேக் சீனில் துடிப்பது , போர் காட்சிகளில் உக்கிரம் , ரொமான்ஸ் காட்சியில் காதல் என நடிப்பில் பின்னிப்பெடல் எடுக்கறார். தமிழ்ப்பொண்ணுங்க மாதிரி கண்ணுக்கு ஐ டெக்ஸ் மை எல்லாம் ஏகப்பட்டது அப்பிக்கு அசத்துது பொண்ணு. க்ளைமேக்ஸ் ஃபைட் காட்சியில்  ஹீரோவுக்கு  நிகரா  சண்டை போடுது . அபாரம் 


ஹீரோவா  Sullivan Stapleton, இவர் வரும்போது  ஓப்பனிங்க் சீன்லயே அப்ளாஸ் வாங்கறார் . எல்லாம் முதல் பாகம் பார்த்த ரசிகர்கள்  தான் . இவரது துடிப்பான நடிப்பு படத்துக்கு பிளஸ் 


கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அபாரம் . ரத்தம் நம்ம முகம் மேலயே தெறிப்பது மாதிரி  ஒரு உணர்வு . இதை பெங்களூர்ல 580 ரூபா கொடுத்து 3 டி ல யாரும் பார்த்துடாதீங்க.  சாதா வா பார்த்த எனக்கே லைட்டா வாமிட் வர்ற மாதிரி  ஃபீலிங்க் 


போர்க்காட்சிகளின்  பிரம்மாண்டம்  இன்னும் கண்ணுக்குள் நிக்குது . பெட்ரோல் குண்டு தாக்குதல் , வாள் சண்டைக்காட்சிகள் என சிலாகிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம் .




 இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. வில்லி  ஹீரோ கிட்டே   “ நீ என்னுடன் சேர்ந்துக்கிட்டாதான் கில்மா “ அப்டினு கண்டிஷன் எதுவும் போடலை . மேட்டர்க்கு வாலண்ட்ரியா  கூப்பிடறா . ஹீரோ  மேட்டரை  முடிச்சுட்டு  சிம்பு மாதிரி   அசால்ட்டா கிளம்பி  இருக்கலாமே? ஏன் ஆரம்பத்துலயே   ஒதுக்கிட்டு கிளம்பனும் ?  ( நம்க்கு ஒரு சீன் போச்சேனு ஒரு ஆதங்கம் தான் ) 


2   போர் நடந்துட்டு இருக்கும்போது  எதிரி ஆளை  தன் கப்பலுக்குள் வர வைப்பது அபாயம் இல்லையா?  பலம் எது ? பல்வீனம் எது?னு தெரிஞ்சுடாதா?


3   வில்லி மேல எந்தத்தப்பும்  இல்லையே ? நியாயமாப்பார்க்கப்போனா  ஹீரோ தான் வில்லன், வில்லிதான் நாயகி . அப்போ  வில்லி இறக்கும்போது அனுதாபம் தானே நமக்குப்பிறக்குது ? இது திரைக்கதையில் தோல்வி ஆகாதா?  





 நச் வசனங்கள் 



1. உனக்காக உதிரம் சிந்துபவனை விட உனக்கு நெருக்கமானவன் உல்கில் யாரும் இல்லை !# 300 patt 2


==============


2 பொக்கிசங்கள் குவிந்திருக்கும் நகரம் எதிர் காலம் இன்றி அழியும்


================

3 என் கோபத்தை எதிரியிடம் மட்டும் தான் காட்டுவேன்


==============

4 ஒரு ஆணின் முகத்தை விட அவன் கைகளை அதிகம் நம்புகிறேன்.அவன் வீரத்தை கைகள் காட்டிக்கொடுக்கும்


=======================


5 கடந்த காலத்தில் நடந்ததை வைத்து நிகழ்காலத்தில் பாடம் கற்றுக்கொள்வான் வீரன்


=================


6 வெறும் பேச்சு வார்த்தையால் மட்டும் தீர்வு கண்ட நாடு ஏதும் உண்டா?


=================

7 அவள் ஆன்மாவை மரணத்திற்கு அர்ப்பணித்து விட்டாள்


=============


8 அரசியல்வாதிகள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தங்கள் போர்வீரர்களின் உயிரைப்பணயம் வைக்கிறார்கள்


==================


9 உனக்கு சமமான வீரன் நான் ஒருவன் தான் , என்னையும் கொன்று விட்டால் நீ யாருடன் போர் புரிவாய் ?


====================




சிபி கமெண்ட் - 300-Rise of an Empire -102 நிமிடப்படத்தில் 60 நிமிடங்கள் போர்க்காட்சிகள் தான் -ரத்தம் தெறிக்குது- ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன். ஒன்றரை மணி நேரப்படம் தான் 

ரேட்டிங்க் = 2.5 /5 

பெண்கள் தவிர்க்கவும் . நானும் தான் பார்ப்பேன் , அது என் சவுகர்யம் என கிளம்பும் பெண்கள் ஒரு வேளை பெண்ணியவாதிகளாக  இருக்கக்கூடும்