Showing posts with label வேதாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label வேதாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, November 10, 2015

வேதாளம் - சினிமா விமர்சனம்

ஹீரோ  ஒரு டாக்சி டிரைவர்.( ஆட்டோ  டிரைவரா காட்டினா பாட்சா உல்டாம்பாங்க, இப்போ சொல்ல முடியாதில்ல? )அவர் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். அவ்வளவு ஏன்? சிம்பு படத்துக்குக்கூடப்போகாதவர். அவருக்கு  ஒரே ஒரு தங்கச்சி.கண்ணும் கருத்துமா பார்த்துக்கறார். ட்விட்டர்ல , ஃபேஸ்புக்ல நம்ம நெட் தமிழர்கள் முன்னே பின்னே  அறிமுகமே இல்லாத  பொண்ணுங்க கிட்டே இல்லாம் ஓடிப்போய் தங்கச்சி தங்கச்சி சாப்ட்டியா தங்கச்சின்னு டி எல்லில் பயங்கர பாசமா கேட்டுட்டு அடுத்த நாளே டி எம் பக்கம் வாம்மா, ஒதுங்கலாம்னு கூப்பிடற மாதிரியான  கால கட்டத்தில்  இப்டி ஒரு அண்ணனா?அப்டின்னு நாம  எல்லாம் வியந்துட்டு  இருக்கும்பொது 2 ட்விஸ்ட் வருது.

 அண்ணன், தம்பி 2 பேரு மொத்தம் 3 பேரு  வில்லன்கள், அவங்களை ஹீரோ  என்னமொ 1000 கோடிக்கு அசால்ட்டா தியேட்டர்  விலைக்கு வாங்கற மாதிரி ஒன் பை ஒன்னா  கொன்னுட்டு இருக்கார். 

அது சொந்தத்தங்கச்சி இல்லை, வளர்ப்புத்தங்கச்சியும் இல்லை, வழில சந்திச்ச சாதா தங்கச்சி ( தங்கச்சி பாசத்தில்  டி ஆரையே  மிஞ்சிட்டார்பா)

இந்த 2 ட்விஸ்ட்டும்  இடைவேளை டைம்ல  வருது. அதுக்குப்பின் லைட்டா நமக்கு  தூக்கம் வருது. அதுக்குப்பின்  என்ன நடந்ததுங்கறதை வெண் திரையில் காண்க 


ஹீரோவா அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.முன் பாதில  பாட்ஷா  ரஜினி மாதிரி கேரக்டராப்போனதால ரொம்பவும் அந்த அளவு பம்மி  இருக்கத்தேவை இல்லை.டிரஸ்ஸிங்  சென்சும்  ரொம்பவே மோசம். ஆனா அதுக்கெல்லாம்  வட்டியும்  முதலுமா  மனுசர் அந்த  சைக்கோ நடிப்பில்  பின்னிப்பெடல் எடுக்கறார். தியேட்டரில் ஆரவாரமான கரகோசம்.


ஹீரோயினா ஸ்ருதி ஹாசன் , புலியில் வந்ததில் பாதி அளவு காட்சி கூட இவருக்கு இதில் இல்லை. ஏதோ அட்டெண்ட்டென்ஸ் போடறார்

 தங்கையா  4 வருசமா டென் த் எக்சாம் வருசா வருசம் எழுதிட்டே  இருக்கும் கும்கி மேனன் சாரி லெட்சுமிமேனன்.இவருக்கு படம் முழுக்க வாய்ப்பு . வாங்குன சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாத நடிப்பு . பல காட்சிகள் ல அப்பா, பொண்ணு மாதிரி  தெரிவது  வேற விஷயம் 


அனிரூத்  பிஜி எம் வழக்கம்  போல் .தெறிக்குது. ஆலுமா  டோலுமா பாட்டில் அரங்கம் அதிருது.அதுக்கு அஜித்  டான்ஸ்  ஹிஹி 


இயக்கம் வீரம் சிவா. படம்  பூரா  ரசிகர்கள்  கிட்டே  கிளாப்ஸ்  வாங்கற மாதிரி காட்சிகள் வைப்பதில்  கவனம் காட்டிய  இயக்குநர்  திரைக்கதை வடிவமைப்பில் அக்கறை காட்டலை , நம்பகத்தன்மை பல காட்சிகளில் இல்லை . லாஜிக்  சொதப்பல்கள்  ஏகப்பட்டது  இருக்கு.


ஒளிப்பதிவு  ஓக்கே ரகம் . ஸ்டண்ட்  காட்சிகள்  தெறிக்குது. வசனகர்த்தா  6  இடங்களில்  கை தட்டல்  வாங்கறார்








மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. சூரி = உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?


அஜித் =!!!!

தியேட்டரில் ஆரவாரம் அடங்க 5 நிமிசம் ஆச்சு


2. சூரி = நீ ட்விட்டர்ல இருக்கியா?


அஜித் = நோ

அப்போ கருத்து சொல்றேன்னு யார் மனசையும் காயப்படுத்த மாட்டே


3. சூரி டூ ஸ்ருதி = அவரைத்தாக்கப்போறியா? என்னைத்தாஆஆஆண்டி தொட்றி பார்க்கலாம் #,அப்ளாஸ்.சீன்

4. நம்ம நாட்ல பொண்ணுங்க ஏன் முன்னால வர்றதில்லைன்னா பின்னால எவனாவது வர்றான்னுதான்.பொண்ணுங்களை பாலோ பண்ணாதீங்க # வே

5. பொண்ணை கட்டிக்கொடுக்கறது ஆணை நம்பி மட்டும் இல்லை.வீட்ல இருக்கும் பொண்ணுங்களை நம்பியும்தான் #,வே ஆன் த வே

6. பணத்தைப்பத்தி நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.என் குணத்தைப்பத்தி தெரிஞ்சா #,வே

7. நான் காசுக்காக எது வேணா.செய்வேன்.ஆனா தன்மானத்துக்கு ஆபத்துன்னா,., #,வே

8. ஒரு ஆம்பளையைக்காப்பாத்துனா ஒருத்தனைக்காப்பாத்துன மாதிரி.ஒரு பொண்ணைக்காப்பாத்துனா ஒரு பரம்பரையையே காப்பாத்துன மாதிரி # வே



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. கோவை சாந்தி தியேட்டரா? ராகவேந்திரா கல்யாண மண்டபமா? ட்ரம்ஸ் எல்லாம் போட்டுத்தெறிக்க விடறாங்க.படம் பார்க்க விடமாட்டாங்கன்னு நினைக்கேன்2. தியேட்டர்ல ஒரு பயலும் சீட் ல உக்கார்லை.நின்னுட்டேதான் பார்ப்பாங்க போல

3. தியேட்டருக்குள்ளே பட்டாசெல்லாம் வெடிக்கறாங்க.படம் பட்டாசா இருக்கும்போல.

4. தியேட்டர்ல எல்லாரும் படத்தை வீடியோ எடுத்துட்டு இருக்காங்க.தியேட்டர்காரங்க 1 ம் சொல்லலை.விஜய் ரசிகரா இருக்குமோ?

5. கோர்ட் சீன் காமெடி ஓக்கே ரகம்

6. ஹீரோ அன்டர்ப்ளே ஆக்டிங் பன்றார் ,இயக்குநர் அடக்கி வாசிக்கறார்னா விரைவில் தெறிக்க வைக்கும் காட்சி வரும்னு அர்த்தம்.ஐ ஆம் வெய்ட்டிங்

7. வீர விநாயகா பாட்டுக்கு ஹீரோவை விட அவர் ரசிகர்கள் செம ஆட்டம் ஆடறாங்க.

8. தெறிக்க விடலாமா?,பைட் சீன் 3,நிமிசம் தான்.ஆனா ரசிகர்கள் கரகோசம் 30 நிமிசம்

9. பலரும் சொன்னது போல் பாட்சா ரீமேக்கோ மாஸ் உல்டாவோ இல்லை..முன் பாதி ஓக்கே ரகம் #,வே இடைவேளை

10. ஒரே கூச்சலா தெறிக்குது தியேட்டரே.அநேகமா ஆலுமா டோலுமா பாட்டு ஓடிட்டிருக்குன்னு நினைக்கேன்

11. சைக்கோத்தனமாக அஜித் நடந்து கொள்ளும் காட்சிகள் ஆறும் அரங்கம் அதிரும் காட்சிகள்





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  முன் பாதியில்  ஒரு ஆக்சன்  ஹீரோவை அண்டர்ப்ளே ஆக்டிங்  பண்ண விட்டு  பொறுமையாக  கதையை நகர்த்தியது 


2  சூரி , நான் கடவுள்  மொட்டை ராஜேந்திரன்  காமெடிக்காட்சிகள்    ஃபேமிலி ஆடியன்சை  கவரும் வண்ணம் 


3  தெறிக்க விடலாமா  பஞ்ச்  டயலாக்கில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பு 


4  அந்த  லிஃப்ட் ஃபைட்  , க்ளைமாக்ஸ்  ஃபைட்   எல்லாம்  பக்கா மாஸ் 




இயக்குநரிடம்  சில கேள்விகள்



1   கதைக்கு  ஆதாரமான   அண்ணன்  - தங்கை பாசத்தில் அடிப்படை நம்பகத்தன்மையே இல்லை. ரவுடியான  ஹீரோ ஏன் லட்சுமி மீது  தங்கை
 பாசம் வைக்கிறார்? என்பதற்கு பதில் இல்லை ( சமாளிஃபிகேசனாக  ஏன்  அவ மேல இப்டி இருக்கேன்னு  ஹீரோவே  புலம்புவது  போல்  ஒரு சீன் வெச்சு சமாளிச்சு இருக்காங்க) 


2  மலையாளப்படமான உஸ்தாத் படத்தின்  பாதிப்பு இருக்குன்னு  பார்த்தவங்க  சிலர் சொல்றாங்க, ஆனா அதுக்கான க்ரெடிட் படத்தின்  டைட்டிலில்  தர்லை


3 ஹீரோவோட  டிரஸ்சிங்  கொஞ்சம் கூட  ரசிக்கும்படி இல்லை .அவரது  இரு விதமான  தோற்றத்திலும்  சுமார் ரக ஆடை வடிவமைப்புதான். அஜித்க்கு கெத்தே  நடையும் , உடையும்  தானே? ( எப்பா, ரவுடி கேரக்டருக்கு  கோட் சூட்டா போட முடியும்?)



4  கோட் சூட்  போட்ட படிச்ச் அந்த  வில்லன்  ஹீரோ  கிட்டே  மோதுவதில்   தோற்பதில் ரொம்ப  மொக்கையாகிறார்/ வில்லனை  பலமானவனா காட்டினாத்தான்  ஹீரோ  ஜெயிக்கும்போது ஜம்முனு  இருக்கும் ?




சி  பி  கமெண்ட்-. வேதாளம் = அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.மாமூல் கமர்சியல் மசாலா = விகடன் மார்க் =41 ,ரேட்டிங் = 2.5 / 5
ஆரம்பம் ,வீரம் ,என்னை அறிந்தால் படங்களை விட ஒரு மாற்று கம்மி தான்.ரெட் ,அசல் ,ஆழ்வார் போல் பிளாப் இல்லை.மீடியம். புலியை விட பெட்டர்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)- ஓக்கே



 ரேட்டிங்=2.5 / 5


a







a








a






a








a