Showing posts with label யெல்லோ(2025)-தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label யெல்லோ(2025)-தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, November 27, 2025

யெல்லோ(2025)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் ட்ராமா)

               

             

கமர்சியல் ஹிட் ஆகாத இந்தப்படம் அனைவருக்குமான ஜனரஞசகமான படம் அல்ல.பாலகுமாரன் நாவல் ரசிகர்கள் , தேசாந்திரி எஸ் ராமகிருஷணன் எழுத்து ரசிகர்கள் , பயணங்களை விரும்புபவர்கள் மட்டும் பார்த்து ரசிக்க முடிகிற படம்.சிரஞ்சீவி,ரஜினி,விஜய் படங்கள் மாதிரி ஆக்சன் மசாலாவை மட்டும் ரசிப்பவர்கள் தவிர்க்கலாம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு தனியார் வங்கியில் பணி செய்பவர்.அவருக்கு ஒரு காதலன் உண்டு.நாயகியின் அப்பா திடீர் என உடல் நலக்குறைவால் படுத்த படுக்கை ஆகி விட நாயகிக்கு முழு கான்சன்ட்ரேசனும் அப்பா,வேலை என்றாகி விடுகிறது.இதில் காதலன் காண்டு ஆகி பிரேக்கப் செய்து விடுகிறான்.அவனுக்கு வேறு ஒருப்பெண்ணுடன் திருமணம் என நாயகிக்குத்தகவல் வருகிறது


இதனால் மனம் உடைந்த நாயகி மன மாற்றத்துக்காக 3 நாட்கள் ஒரு லாங்க் ட்ரிப் போக முடிவு செய்கிறார்.

நாயகி மேற்கொண்ட பயணம்,அவர் சந்தித்த மனிதர்கள்,அதில் அவருக்குக்கிடைத்த அனுபவம் இவை தான் மீதி  திரைக்கதை


நாயகி ஆக பூர்ணிமா ரவி பிரமாதமாக நடித்திருக்கிறார்.சோனியா அகர்வாலின் மென் சோகம் கொண்ட கண்கள் ,கீதாஞ்சலி ( இதயத்தைத்திருடாதே) கிரிஜாவின் ரோஜா இதழ்கள் ,பூ வேலி கவுசல்யாவின் கண்கள் என  கதம்ப மலர் போல் அவர் முகம் வசீகரம்.

நாயகன் ஆக வைபவ் முருகேசன் சிவகார்த்திகேயன் சாயலில் இருக்கிறார்.நல்ல நடிப்பு 


நாயகியின் தோழியாக வரும் நமீதா கிருஷ்ணமூர்த்தி  வாலி ஜோதிகா சாயல்.துறு துறு நடிப்பு.அவர் வரும் காட்சிகளில் நாயகி டம்மி ஆகி விடுகிறார்.

நாயகியின் அப்பாவாக டெல்லி கணேஷ அனுபவம் மிக்க நடிப்பு.


நாயகியின் முன்னாள் காதலன் ஆக சாய் பிரசன்னா  ஓக்கே ரகம்.

வினோதினியின் நடிப்பும் இதம்.


கிளிபி கிருஷ்,ஆனந்த் காசிநாத் இருவரும் இணைந்து இசைப்பணியை  செய்திருக்கிறார்கள்.பிரமாதம்.7 பாடல்கள்


அபி ஆத்விக்கின் ஒளிப்பதிவு அற்புதம்

ஸ்ரீ வாட்சன் தான் எடிட்டிங 124 நிமிசஙகள்.


திரைக்கதை ,இயக்கம் ஹரி மகாதேவன்



சபாஷ்  டைரக்டர்

1 அமைதியான நதி மாதிரி நாயகி எனில் ஆர்ப்பாட்டமான அருவி மாதிரி நாயகியின் தோழி   இருவரின் நடிப்பும் அருமை

2 நாயகி தன் முன்னாள் காதலனை அவனது மனைவியுடன் சந்திக்கும் காட்சி

3 நாயகன் ,நாயகி இருவரும் ஒரு இரவில் காட்டுப்பகுதியில் இரு ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் சீன்

4 ரயிலில் நாயகன் தன் முன்னாள் காதலியுடனான பிரேக்கப் பற்றி நாயகியிடம் சொல்லும் சீன்

5  எனக்கு மிகவும் பிடித்த லீலா சாம்சன் நடிப்பு இதிலும் அருமை.ஆனால் அவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு



  ரசித்த  வசனங்கள் 

1 உன் கூட இருக்கும்போதுதான் நான் நானாக இருக்கிறேன்

2 இதுதான் நடக்கும்னு வாழ்க்கைல நமக்கு முன் கூட்டியே தெரிஞ்சா ரொம்ப நல்லாருக்குமில்ல?

போர் அடிச்சிடும்

3 போன் பண்ணினா?


சண்ட போடறதுக்காகக்கால் பண்றானா? கால் பண்றதால சண்டை வருதா? எனத்தெரியாத அளவுக்கு

4 அடுத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணாத இந்த சின்னச்சின்ன தப்புக்கள் தான் நம்மை நாமா இருக்க விடுது

5  அடுத்த வினாடி இந்த உலகம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்

6 சில நேரஙகளில் தள்ளிப்போவது நல்லது.சில நேரஙகளில் தள்ளிப்போடாம எதிர்கொள்வதே நல்லது

7 உன்னை பலவீனமாக்கும் சக்தியை நீ இன்னொருத்தருக்குத்தராதே!

8  பிடிச்சுக்கஷடப்படறதை விட நிம்மதி ஆன விஷயம் வேற கிடையாது

9 இந்த உலகத்தில் 2 விதமான மனிதர்கள்

1 தனக்கு வர்ற கஷ்டத்தால மனசு முடங்கி மூலையில் அமர்பவர்கள்

2 அதே கஷ்டத்தை வைத்து ஒரு புது வழியைக்கண்டறிபவர்கள்


10 முடியப்போறதை நினைத்து எதுக்கு பீல் பண்ணிட்டு ?முடிஞ்சதும் மொத்தமா பீல் பண்ணிக்கலாம்

11 எல்லாத்தையும் விடக்கொடுமையான வியாதி தனிமையில் இருப்பது

12 எனக்கு எதுவுமே கிடைக்காதுன்னா முதலில் எதுக்கு அதெல்லாம் கிடைக்கனும்?

13 கேரளாவில் தமிழ் நாடு உணவு கிடைக்குமா?

அதைத்தமிழ் நாடு போயே சாப்பிட்டுக்கலாமே? எதுக்கு இவ்ளோ தூரம் வரனும்?


14 அவளைப்பற்றி அவளுக்குத்தெரிஞ்சதை விட எனக்குத்தான் அதிகம் தெரியும்னு சொல்லிட்டே இருப்பா

15 எப்போ எல்லாம் எனக்கு சோகம் வருதோ அப்போ எல்லாம் வானவில்லைப்பார்ப்பேன்


16 உன் மெசேஜ் பார்த்தேன்,அதான் கால் பண்ணினேன்

உனக்குக்கால் பண்ணப்பிடிக்காம தானே மெசேஜே பண்ணேன்


17 நம்ம வாழ்க்கைல நடக்கும் பாதி விஷயங்கள் நாம யோசிக்காம செஞ்சதாத்தான் இருக்கும்

18 பழைய ஆல்பத்தைத்தேடி வந்தேன்,புதுசா ஒரு ஆல்பம் கிடைச்சிருக்கு

19 நாம சம்பாதித்து செலவு பண்ணலை,இருக்கற செலவுக்குத்தான் சம்பாதிக்கிறோம்

20 நமக்கான பொறுப்பு,வேலை எல்லாமே கூடிக்கிட்டுதான் போகும் ,ஆனா உனக்கான சந்தோஷத்தை நீ தான் தேடிக்கனும்


21 ஒரு நாள் திரும்பிப்பார்த்தால் நம் வாழ்க்கையில் நாமே இருந்திருக்க மாட்டோம்,நமக்குன்னு எதுவுமே இருந்திருதிரைக்கதை


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நீண்ட பயணத்திற்கு செலவு குறைவான ( கிமீ க்கு 25 பைசா) ,உடல் அசதி இல்லாத பயணம் ரயில் பயணம் தான். ( டாய்லெட் வசதி).ஆனால் ஸ்கூட்டியில் போக நாயகி முடிவு எடுப்பது சினிமாவுக்கு சரி,நடை முறை வாழ்க்கைக்கு சரி அல்ல.

2 நாயகியின் பெயர் ஆதிரை.ஆனால் படத்தில் வரும் வெவ்வேறு கேரக்டர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற்போல ஆதி என்று அழைப்பது எப்படி?

3 நாயகன் ,நாயகி இருவரும் ஒரே திசையில் ஒரே ஊருக்குத்தான் போகிறார்கள்.இரு வேறு பைக்குகளில்.எதுக்கு பெட்ரோல் செலவு? ஒரே பைக்கில் போகலாமே?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரேக்கப்  ஆன காதலர்கள் மட்டுமல்லாமல்  ஏ  சென்ட்டர் ஆடியன்ஸ்  அனைவரும் பார்க்கலாம் . விகடன்  மார்க் யூகம் -45 , குமுதம் ரேங்க்கிங்க்  குட் , ரேட்டிங்க்  3 . 5 


DISKI  -டைட்டிலிலேயே எந்த ஓடி டி என்பதை சொல்லி விடுவேன்.சொல்லாவிட்டால் தியேட்டர் ரிலீஸ் என அர்த்தம்25 நாட்கள் கழித்து ஓடி டி யில் வரும்


Yellow
Theatrical release poster
Directed byHari Mahadevan
Written byHari Mahadevan
Produced byPrasanth Rangasamy
Starring
CinematographyAbi Advik
Edited bySri Watson
Music by
  • Cliffy Chris
  • Anand Kashinath
Production
company
Covai Film Factory
Distributed byUthraa Productions
Release date
  • 21 November 2025
CountryIndia
LanguageTamil