Showing posts with label மர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா ). Show all posts
Showing posts with label மர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா ). Show all posts

Sunday, July 10, 2022

பன்னீர் நதிகள் - 1986 - சினிமா வி,மர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா )

Spoiler alert
 ஹீரோயின்  ஒரு  பரத  நாட்டியக்கலைஞர். இவர்  வீட்டுக்குப்பக்கத்துல  ஹீரோ  குடி  இருக்கறார்  . இவர்  காலைல  வாக்கிங்  போய்ட்டு  வீட்டுக்கு  வந்துட்டா  வெளில  எங்கயும்  போறதில்லை , பூவாவுக்கு  என்ன  பண்றார்?னு  பார்த்தா  நாவல்  ரைட்டராம், அது  தெரிஞ்ச  பின்னும்  ஹீரோயினுக்கு அதே  டவுட்  மீண்டும்  வந்திருக்கனும், ஆனா  வர்லை ஹீரோயின்  சுட்டித்தனமா  பேசி  ஹீரோ  மனசுல  இடம்  பிடிக்கப்பார்க்கறாரு.

ஹீரோயினுக்கு  ஒரு  அக்கா. நர்சா  ஒர்க்  பண்றாரு  இவரோட  பள்ளித்தோழன் கூட  பல  வருசமா  பழக்கம். ரெண்டு பேரும்  மேரேஜ்  பண்ணிக்கலாம்னு  முடிவு  ப்ண்றாங்க. வேலை  விஷயமா டாக்டர்  வேற  ஊரல்  3  வருசமா  பிரிஞ்சு  இருக்கார்  அந்தப்பிரிவால  ஹீரோயினோட  அக்காவுக்கு  எந்த  பாதிப்பும்  இல்ல  ஆனா  ஹீரோ  கூட  கொஞ்ச நாட்களா  பழகுனதுல  அவர்  மனசு  ஹீரோ  பக்கம்  போவதை  உணர்கிறார் . ஹீரோ  3  நாட்கள்  ஊர்ல  இல்லாதப்ப  அவரால  தாங்கிக்கவே  முடியல


 அப்போதான்  ஒரு  விஷயத்தை  அவர்  உணர்கிறார்  தன்  பள்ளித்தோழன்  மீது  வைத்திருந்தது  இன்ஃபேக்சுவேஷன்,  ஹீரோ  மேல  வெச்சு  இருப்பது  தான்  உண்மையான  அன்பு.  தன்  பள்ளித்தோழன்  கிட்டே  விஷயத்தை  சொல்லி  பிரேக்கப்  பண்ணிக்கறார்


ஹீரோ  மேரேஜ்  விஷயமாப்பேச  வரும்போது திடீர்னு  ஒரு  குண்டைத்தூக்கிப்போடறார். மேரேஜ்  நடக்காது  ஏன்னு  கேட்க  வேணாம்

அதனால  மனசு  உடைஞ்ச  ஹீரோ  கொஞ்ச  நாட்கள்  கழித்து  தன்  சொந்தக்காரப்பெண்ணை  மேரேஜ்  பண்ணிக்கறார்


இப்போ  ஹீரோயினுக்கு  ஒரு பைக்  ஆக்சிடெண்ட் அடிபட்டு  பெட்  ரெஸ்ட்  ல  இருக்கார்  அவரைப்பார்க்க  அக்கா  ஊர்ல  இருந்து  அங்கே  வர்றாங்க. டாக்டரும்  பள்ளித்தோழனும்  ஆன  ஹீரோயினோட  முன்னாள்  காதலரும்  அங்கே  வர்றார்.


இந்த  2  செட்  ஜோடிகளில்  யார்  யார்  யார்  கூட  சேர்ந்தாங்க  என்பதே  பின்  பாதி  திரைக்கதை 


 ஹீரோவா  சிவக்குமார் இந்த  மாதிரி  கேரக்டர்  இவருக்கு  அல்வா  சாப்பிடுவது  போல  அசால்ட்டா  பண்ணி  இருக்கார்  , இவரோட  கேரக்டர்  ஸ்கெட்ச்ல  மட்டும்  சில  டவுட்ஸ்  இருக்கு  அதை  லாஜி   மிஸ்டேக்ஸ்  ஏரியாவில  சொல்றேன் .  நடிப்பைப்பொறுத்தவரை  அசால்ட்டா  பண்ணிட்டார்னே  சொல்லலாம் 


ஹீரோயினா  சுட்டிப்பெண்ணா  துடுக்குத்தனம்  மிக்க  அமலா  . இவர்  சேலையிலும் சரி  மாடர்ன்  டிரசிலும்  சச்சிதம்.  ஓப்பனிங்  சீன்ல  ரிவர்ஸ்  ஜாக்கிங்  போய்  பால்காரியிடம்  மோதி  பானையை  உடைப்பது  ஹீரோவை  அப்பப்ப  வம்பிழுப்பது  அக்காவின்  தியாகத்தை  உணர்வது  க்ளைமாக்ஸ்  வசனம்  எல்லாவற்றிலும்  நல்லா  சைன்  பண்ணி  இருக்கார் 


ஹீரோயினோட  அக்காவா  அழகுப்பதுமை    ஜெயஸ்ரீ இவங்க  கிட்டே  ஒரு  ஸ்பெஷல்  உண்டு  கிளாம்ராகவும்  மிளிர்ப்வாம்  குணச்சித்திர  நடிப்பிலும்  நல்லா  சைன்  பண்ணுவார் . இருதலைக்கொள்ளி  எறும்பா  தவிக்கும்  காட்சிகளை  நல்லா  பண்ணி  இருக்கார் 


 ஹீரோவோட  மனைவியா    ஜிவிதா . சின்ன  கேரக்டர்தான்  வந்தவரை  ஓக்கே 


டாக்டராக  நிழல்கள்  ரவி  . இவருக்கும்  சரத்பாபுவுக்கும்  ஒரு  ஒற்றுமை  உண்டு  ஒரே  மாதிரி  கேரக்டர்கள்தான்  இவர்களைத்தேடி  வரும் .  நல்லாதான்  பண்ணி  இருக்கார் 


மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாத  எஸ்  எஸ்  சந்திரன்  கோவை  சரளா  செந்தில்  காமெடி  டிராக்  உண்டு  ரொம்ப  மொக்கை  போடலை  பரவால்ல  ரகம்  தான்


இசை  சங்கர்  கணேஷ் 

1  பனி  விழும்  பருவ நிலா  பரதமும்...

2  ரோசாப்பூ  ஒரு  பெண்ணானதே  ஊதாப்பூ   இரு  கண்ணானதே


 இந்த  2  பாட்டும்   ஹிட் இது  போக  2  சுமார்  ரகப்பாடல்கள்  உண்டு 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  ஹீரோவுக்கு  மேரேஜ்  ஆகிடுச்சுங்கற    விஷயத்தை  ஹீரோயின்  அமலா  கிட்டே  ஏன்  சொல்லலை ? சொல்லி  இருந்தா  அவர்  பாட்டுக்கு  சிவனேன்னு  அவர்  வழில  போய்  இருப்பார்  .  பொதுவா ப்ளே பாய்ஸ் தான்  மேரேஜை  மறைப்பாங்க  இவர்  ஹீரோ  நல்லவர்  யோக்யமா  மேரேஜ்  ஆன  விஷயத்தை  சொல்றதுதானே?


2  ஹீரோ  ஜீவிதா  கூட  கார்ல  போறப்ப    கார்  ரிப்பேர்  ஆகி  வழில  நிக்குது  .   ஏகபப்ட்ட  நகைகள்  போட்டிருக்கற  மனைவியை  தனியா  விட்டுட்டு  லூஸ்  மாதிரி  காட்டுக்குள்ளே  அவர்  போறாரு  அவருக்கு  2  ஆப்சன்  இருக்கு 1  மனைவியைக்கூட்டிட்டு  தண்ணி  எடுக்கப்போகலாம்  2  அந்த     வழில  வாகனம்  வருமா?னு  வெய்ட்  பண்ணி  பார்க்கலாம்


3  ஹீரோவோட  மனைவி   ஜீவிதா தலைல  அடிபட்டு  மன நிலை  பாதிக்கப்பட்டு  ஹாஸ்பிடல்ல  இருக்கார்      ஹீரோ  அடிக்கடி ஜெயஸ்ரீ  கிட்டே  நான்  இன்னும்  பிரம்மச்சாரியாதான்  இருக்கேன்னு  சொல்லிட்டே  இருக்கார்  இது  எதுக்கு ?


4   ஜெயஸ்ரீ  சிவக்குமாரை  லவ்  பண்ணிட்டு  நிழல்கள்  ரவியை  மேரேஜ்  பண்ணிக்க  முடியாதுனு  சொல்லிடறார்  அப்டி  ஓக்கே  சொன்னா  உள்ளத்தை  ஒருவருக்கும்  உடலை  இன்னொருப்வருக்கும்  தருவது  போல  ஆகிடும்கறார். இது  ஓக்கே . ஆனா  ஜெயஸ்ரீ  மேரேஜ்  பண்ணிக்க  முடியாதுன்னதும்  டக்னு  ஹீரோ  தன்  சொந்தக்காரப்பெண்ணை  மேரேஜ்  பண்ணிக்கறார். இது  எப்படி ? இது  போக  அவர்  அடிக்கடி  தன்னை  தியாகி  மாதிரி  காட்டிக்கறது  எரிச்சல் 


5  அமலாவுக்கு  முதல்  டைம்  ஹார்  அட்டாக்  வந்தது  அடுத்த  அட்டாக்  வந்தா  அவர்  உயிருக்கே  ஆபத்துனு  டாக்டர்  சொல்றார். ஆக்சுவலா  மூன்றாவது  அட்டாக்  தானே  ஆபத்து ?


6  க்ளைமாக்ஸ்  சை  எப்படி  முடிக்கனு  தெரியாம  டைரக்டர்  ஜீவிதா  கேரக்டரை  சாகடிக்க  முடிவு  பண்ணிட்டாரு  அதுக்காக  அவர்  பாட்டுக்கு  சிவனேன்னு  ஹாஸ்பிடல்ல  இருந்தவரை  சென்னை  ஹாஸ்பிடலுக்கு  மாற்றி  ஆபரேஷ்ன்  பண்ண  வைக்கறாங்க.இது  செயற்கையா இருக்கு 


சி  பி எஸ்  ஃபைனல் கமெண்ட்  - அப்போ  ரிலீஸ்  ஆன  படத்தை  இப்போ   விமர்சிக்கும்போது  கால  மாற்றங்களில்  சில  வியூகங்கள்  தப்பாத்தோணலாம் ஆனாலும்  இந்தப்படம்  அப்போது  பரவலாகப்பேசப்பட்ட  படம்  பிரமாத  ஹிட்  இல்லை  ஆனா  ஈரோட்ல 40  நாட்கள்  ஓடுச்சு  ஸ்ரீ  கிருஷ்ணா வில் அப்போ  பார்த்ததால்  டயலாக்ஸ்  எல்லாம்  நினைவில்  இல்லை .  பார்க்கலாம்  ரேட்டிங்  2.25 /5