Showing posts with label மதராஸ் மாபியா கம்பெனி (2025)--தமிழ்- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label மதராஸ் மாபியா கம்பெனி (2025)--தமிழ்- சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, November 18, 2025

மதராஸ் மாபியா கம்பெனி (2025)--தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி ட்ராமா)

             

            டைட்டிலையும்,போஸ்டர் டிசைனையும் பார்த்து இது அடி தடிப்படமோ என யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு மொக்கைக்காமெடி மெலோ ட்ராமா.14/11/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விரைவில் டி வி யில் வரும்  


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு லோக்கல் தாதா.அவனுக்கு சட்டப்படி ரெண்டு சம்சாரம்,செட்டப் படி ஒரு சமாச்சாரம்.பெரிய அரசியல்வாதியா வரத்தகுதியான ஆளு.இவருக்கு 4 எதிரிகள்

1 இவரை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளத்துடிக்கும் நாயகி ஆன போலீஸ் கமிஷனர்

2  இவருக்கு லெப்ட் ஹேண்ட் ஆக இருக்கும் ஆள் .இவரைப்போட்டுத்தள்ளி விட்டால் நாம் தான் லீடர் என நினைப்பவன்,கூடவே இருப்பவன் ( இவனுக்கு வை கோ மாதிரி கெட்டப் வேற)

3 நீ இந்தத்தொழிலுக்கு சரிப்பட்டு வர மாட்டே என நாயகனால் அவனது கேங்கை துரத்தி அடிக்கப்பட்ட காமெடியன்

4 நாயகனின் தொழில் போட்டி எதிரி

5 தனது காதலுக்கு எதிரியாக இருக்காரே? காதலனைக்கொன்று விட்டாரே?என அவர் மேல் கோபமாக இருக்கும் நாயகனின் மகள்


இவர்கள் ஐந்து பேர்களில் யாரால் நாயகனுக்கு ஆபத்து? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக ஆனந்தராஜ்.மாநகரக்காவல்,படத்தில் வில்லனாக வந்தாலும் கெட்டப்பில் அசத்தி இருப்பார்.ஆனால் நாயகனாக வந்தும் இதில் அந்த அளவுக்கு தோரணையான நடிப்பு இல்லை.காமெடிக்கேரக்டர் என்பதால் சமாளிக்கிறார் 


காமெடியன் ஆக வரும் முனீஷ் காந்த் நாயகனைக்கொல்ல முயலும் காட்சிகள் எல்லாம் நல்ல காமெடி.

முதல் சம்சாரம் ஆக தீபாவும் ,2வது சம்சாரம் ஆக லயாவும் அவர்கள் பங்குக்கு வந்து போகிறார்கள்.


போலீஸ் ஆபீசர் ஆக வரும் சம்யுக்தா ஆள் ஜம் என்றிருந்தாலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிஙகோ என எண்ண வைக்கிறார்.

நாயகனின் மகளாக வருபவர் குட்.ஆனால் மகளின் காதலன் ஆக வருபவர் கஞ்சாக்கேஸ் மாதிரி இருக்கிறார்.

இசை ஸ்ரீகாந்த் தேவா.ஒரு குத்துப்பாட்டு சுமாரா இருக்கு.பின்னணி இசை பரவாயில்லை ரகம்

எடிட்டிங பரவாயில்லை.126 நிமிடங்கள். அசோக் ராஜின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.


இயக்கம் ஏ எஸ் முகுந்தன்



சபாஷ்  டைரக்டர்


1 காமெடியன் நாயகனைக்கொல்ல முயற்சிக்கும் அந்த நான்கு வெவ்வேறு முயற்சிகள் சிரிப்பு

2 டபுள் மீனிங்கில் கண்ணியமான காமெடி வசனஙகள் பரவாயில்லை ரகம்

3  போர் அடிக்காமல் திரைக்கதை அமைத்த விதம்


  ரசித்த  வசனங்கள் 

1 விசுவாசம் என்னும் வட்டத்துக்குள் ஒரு தடவை நீங்க விழுந்துட்டா பின் நீங்களே நினைச்சாலும் அதுல இருந்து வெளில வர முடியாது


2 நாட்டு மக்களுக்கு நான் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருக்கலாம்,ஆனா நாட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன்


3  இனிமே அவ வீட்டுப்பக்கம் போவீங்க?


ச்சே ச்சே..வீட்டுக்குள்ளே வேணா போவேன்


4. பாழாப்போனது பசுவின் பால் அப்டினு சொல்வாங்க,இப்போ ஒரு பசுவே பாழாப்போகப்போகுது


5  என்னடா உனக்கு பொண்டாட்டி பாசம்.அவ உனக்கு நாலாவது சம்சாரம்.நீ அவளுக்கு மூணாவது புருசன்


6 Fun பண்றதுக்கு எல்லாம் பஞ்சாஙகம் பார்க்கலாமா?

7 பகலில் பக்கம் பார்த்துப்பேசு,டாஸ்மாக் பாரில் அதுவும் பேசாதே


8  சண்டை செய்யற எல்லாராலும் சம்பவம் (கொலை) செய்ய முடியாது

9 கண்ணி வெடின்னு தெரியாம காலை வெச்சுட்டே,எரிமலைனு தெரியாம எச்சில் துப்பிட்டே

10 கோமதி,நீ தொழிலில் ரொம்ப சுத்தம் தான்,ஆனா நீ சுத்தம் இல்லை


11 என்னை விட்டுடுங்க,நான் உங்க கிட்டே தொழில் கத்துக்கிட்டவன்

அதனாலதான் உன்னை விடக்கூடாது

12 எனக்கும் ,பூங்காவனத்துக்கும் நடப்பது  சாதா சண்டை இல்லை.கழுதைப்புலிக்கும் ,காட்டு யானைக்கும் நடக்கும் சண்டை

அப்போ நீங்க தான் அந்த கழுதைப்புலியா?

13.  கசாயம் வித்த காசு கசக்காது

கள் வித்த காசு ஆடாது


14 ஏம்மா கோமதி.அந்த ஏரியா தாதா ஆனதுல இருந்து எத்தனை பேரைப்போட்டிருப்பே?(கொலை)

போங்க.பப்ளிக்கா கேட்டா கூச்சமா இருக்காதா?

அடச்சே!அவரை கொலையைப்பத்திப்பேசிட்டு இருக்காரு


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகனின் மகளை தன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் அக்கா பையனை மியூசிக் கிளாசில் சேர்த்து விடுகிறார்.பல நாட்கள் பாலோ பண்றார்.ஆனால் ஒரு காட்சியில் மியூசிக் கிளாஸ் லேண்ட் லைன் போன் நெம்பரே அவருக்குத்தெரியாமல் தடுமாறுகிறார்

2  நாயகன் தனது மகளின் காதலனை கோபத்தில் அடிக்கிறார்.அவன் தலையில் காயம் பட்டு பின் ட்ரீட்மெண்ட் நடந்து சில நாட்களில் இறக்கிறான்.அது ஆக்சிடெண்ட்டல் டெத் தான்.அது கொலை என மகளே சொல்லல.ஆனா போலீஸ் சொல்லியது எப்படி?

3  நாயகன் தாடி வைத்து கெட்டப் சேஞ்ச் செய்து வரும்போது 3 சம்சாரங்களுக்கும் அடையாளம் தெரியாதா? எம் ஜி ஆர் படத்தில் தான் அப்படி வரும்

4 நாயகனுக்கு எதிராக யாருமே சாட்சி சொல்ல முன் வராத போது மகள் தயார் என்கிறாள். லட்டு மாதிரி வாய்ப்பு.உடனே சாட்சியைப்பதிவு பண்ணாமல் நீ நாளை வா என சொல்வது காமெடி.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போடும்போது பார்க்கக்கூடிய அளவில் ஒரு சுமாரான மொக்கைக்காமெடிப்படம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங்க் சுமார்.ரேட்டிங்க் 2/5