டாப்லெஸ் நாயகர்கள் என தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தவர்கள் மூவர். 1 கமல் 2 சரத் குமார் 3 அர்ஜூன்.இவர்கள் மூவருமே ஜிம் பாடி என்பதால் கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ சட்டையைக்கழட்டி டாப்லெஸ் ஆக வரும் ஒரு சீன் நிச்சயமாக இருக்கும்.(ரசிகைகளைக்கவரவாம்).அந்த செண்ட்டிமெண்ட்டை ,வைராக்யத்தை ஆக்சன் கிங் அர்ஜூன் உடைத்து ஒரு சீனில் கூட டாப்லெஸ் ஆக வராத படம் இது. அந்த வகையில் அர்ஜூனின் திரை வாழ்க்கையில் இது ஒரு மைல் கல் படம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு ஸ்கூல் டீச்சர்.உடல் நலம்,மன நலன் குன்றிய சிறப்புக்குழந்தைகள் பயிலும் ஸ்கூல் அது.
நாயகன் தூக்கம் வராதவர்களைத்தூஙக வைக்கும் வித்தியாசமான வேலை செய்பவர்.
ஆன் லைன் வெப் சைட்டில் நாயகனின் மேட்ரிமோனியல் விளம்பரம் பார்த்து நாயகி அப்ளை செய்கிறார்.இருவரும் பழகுகிறார்கள்.இது ஒரு டிராக்.
ஒரு ரைட்டர் படுகொலை செய்யப்படுகிறார்.அந்தக்கேசை விசாரிக்க ஒரு போலீஸ் ஆபீசர் வருகிறார்.இது ஒரு டிராக்.
வில்லன் ஒரு அபார்ட்மெண்டின் ஓனர்.ரைட்டரின் நண்பன்.அந்த அபார்ட்மெண்டின் வாட்ச்மேன்,அயர்ன் செய்யும் நபர் ,அபார்ட்மெண்ட் ஓனர் என வரிசையாகக்கொலை நடக்கிறது.
இந்தக்கேசை. எப்படி டீல் செய்கிறார்கள் என்பது மீதிக்கதை
நாயகி ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.காதல் காட்சிகளில் சுணக்கம் காட்டுகிறார்.நாயகன் புதுமுகம் என்பதாலோ?
நாயகன் ஆக பிர"வீன் " ராஜா தனக்குக்கிடைத்த நல்ல வாய்ப்பை வீண் செய்திருக்கிறார்.நடிப்பு சரியாக வரவில்லை.அவரது நண்பர் ஆக வருபவர் செய்யும் மொக்கைக்காமெடி சகிக்கவில்லை.அவர் பெயர் ராகுல்.
போலீஸ் ஆபீசர் ஆக ஆக்சன் கிங் அர்ஜூன் வந்து போகிறார்.லிப்ட் பைட் ,க்ளைமாக்ஸ் பைட் இரண்டிலும் முத்திரை பதிக்கிறார்.இந்த வயதிலும் தொப்பை இல்லாமல் உடம்பை பிட் ஆக வைத்திருக்கிறார்.
வில்லன் ஆக ராம் குமார் சிவாஜி நடித்திருக்கிறார்.கோமாளி மாதிரி இருக்கிறார்.
ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட சிறுமி,அவளது அம்மா இருவர் நடிப்பும் அருமை.அந்த சிறுமியின் அம்மா நாயகியை விட அழகு.பைவ் ஸ்டார் புகழ் கனிகா வின் முகச்சாயல்.அபிராமி என்று பெயர் போல.
வேல ராமமூர்த்தி , நல்ல குணச்சித்திர நடிப்பு.
ஒளிப்பதிவு சரவணன் அபிமன் யு.சுமார் ரகம்.இசை பாரத் ஆசீவகன்.பரவாயில்லை ரகம்.கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடாமல் டொம் டொம் எனக்காதுகளைப்பதம் பார்க்கிறார்.பாடல்கள் ரொம்பவே சுமார் ரகம் தான் எடிட்டிஙக் லாரன்ஸ் கிஷோர்.127 நிமிடஙகள் ஓடுகிறது
இயக்கி இருப்பவர் தினேஷ் லட்சுமணன்
சபாஷ் டைரக்டர்
1 லைப்ரரில புக்ஸ் எடுத்துப்படிக்கும் வாசகர்களை உயர்த்தியும் ,புத்தகத்திருவிழாவில் வெட்டி ஜம்பத்துக்காகப்பணம் கொடுத்து புக் வாங்கி அதைப்படிக்காமலேயே வைத்திருக்கும் வாசகர்களை நக்கல் அடித்தும் ஒரு ரைட்டரே பேசுவது போல் வைத்த அருமையான சீன்.
2. போலீஸ் ஆபீசர் ஆக வரும் அர்ஜூனுக்கு ஒரு சீனில் கூட போலீஸ் யூனிபார்ம் இல்லாமல் சமாளித்த சிக்கனம்.
3 காமெடி டிராக் எழுத நல்ல ரைட்டரை புக் பண்ணாமல் ஈரோடு மகேஷ ,மதுரை முத்து மாதிரி சொந்த சரக்கு இல்லாத மொக்கை ஆட்களை வைத்து வசனம் எழுதிய விதம்
ரசித்த வசனங்கள்
1 சார் ,ஸ்வீட் எடுத்துக்குஙக,நான் அப்பா ஆகப்போகிறேன்
இந்த ஒரு வேலை தான் யா நீ உருப்படியா செஞ்சிருக்கே
2 மேடம் ,வீட்டில் லேடீஸ் யாரும் இல்லைஙகளா?
வாட்?
3 இந்த நைட்ல மோர் சாப்பிட வெளில கூப்பிடறீங்களே?
ஏன்?டின்னருக்கு பீர் தான் குடிப்பீங்களோ?
4. ஊருக்குள்ளே நாலு பேர் ஏதாவது சொல்வாங்களோ?ந்னு ப்யந்து நம்ம வாழ்க்கையை நாம் தொலைச்சுடக்கூடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 போலீஸ் ஆபீசரான நாயகன் தாடியோடு இருப்பது எப்படி? ஓப்பனிங சீனிலேயே தன் பர்சனல் வேலைக்காக ஆபீஸ் ஜீப்பை எடுத்துப்போகிறாரே?ஸ்டேசனில் எல்லோரும் யூனிபார்மில் இருக்க இவர் மட்டும் மப்டியில் இருக்கிறார்
2 க்ரைம் ஸ்பாட்டில் ஒரு போலீஸ் ஆபீசராக விசிட் செய்யும் நாயகன் ரவுடி மாதிரி சட்டை பட்டன்களைக்கழட்டி விட்டிருக்காரே?
3 கொலை செய்யப்பட்ட ரைட்டர் சர்ச்க்குப்போகும் பழக்கம் இல்லாதவர்.ஆனால் கொலையாக ஒரு மாதம் முன் ரெகுலராக சர்ச்சுக்குப்போய் வரும் பழக்கத்தை உண்டாக்கிக்கொழ்ண்டார் என்ற தகவல் கிடைத்ததும் போலீஸ் அந்த சர்ச் பாதரிடம் பாவமன்னிப்புக்கேட்க வந்தாரா? என்ன பாவம் என விசாரிக்கவில்லையே? ஏன்?(ஓப்பனிஙகிலேயே விசாரிக்க வேண்டியது,இடைவேளைக்குப்பின் ரொம்ப லேட்டாதான் விசாரிக்கிறார்)
4 நாயகி மேஜர் சுந்தர்ராஜனின் ரசிகையா? அடிக்கடி ஏதாவது தமிழில் சொல்லிட்டு அதையே இங்க்லீஷல்யும் சொல்றாரே?
உதா - இது உனக்குப்பிடிச்சிருக்கா? டூ யூ லைக் இட்!?
5 முதல் 2 கொலைகளை மாஸ்க் போட்டு உடல் முழுக்க ஓவர் கோட் போட்டு கொன்ற கொலையாளி அடுத்த இரண்டு கொலைகளை ஏன் பட்டவர்த்தனமாய் செய்யனும்?
6 இரவு நேரத்துல ஒரு ஸ்பெஷல் சைல்டை தனிமையில் விட்டு விட்டு யாராவது போவார்களா?
7 அவ்வளவு உயரமான கட்டிடத்தில் இருந்து விழும் நபர் உடல் பாகஙகளுக்கு எதுவும் ஆகாமல் வாயில் இருந்து ரத்தம் மட்டும் வருமா?
8 அவ்வளவு பெரிய அபார்ட்மெண்ட்டில் சிசிடிவி கேமரா இருக்காதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - புளித்துப்போன கதை,பழகிப்போன திரைக்கதை ,யூகிக்க வைக்கும் ட்விஸ்ட் உடன் ஒரு சராசரி படம்.விகடன் மார்க் யூகம் 39.குமுதம் ரேங்க்கிங்க் சுமார்.ரேட்டிங்க். 2 /5
