Showing posts with label தங்கத்தில் முதலீடு: தெரிந்துகொள்ள சில விவரங்கள்!. Show all posts
Showing posts with label தங்கத்தில் முதலீடு: தெரிந்துகொள்ள சில விவரங்கள்!. Show all posts

Saturday, November 14, 2015

தங்கத்தில் முதலீடு: தெரிந்துகொள்ள சில விவரங்கள்!

ந்திய கலாச்சாரத்தில் தங்கத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. கவிதை, கதை, உதாரணம் இப்படி எல்லாவற்றிலும் தங்கம் இடம் பெறும். குழந்தைகளை கொஞ்சுவது... என் தங்கமே, பழமொழி யில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல...பொன்னை வைக்கும் இடத்தில் பூ... பொன்னகைக்கு பதில் புன்னகை... கல்யாணச் சீர்களில் தங்கத்துக்கு முதல் இடம். 


இவையெல்லாம் சேர்ந்து நாம் தங்கத்தின் மேல் ஒரு தீராத, அடங்கா காதல் கொள்ள... நம் நாட்டின் பொருளாதார பற்றாக்குறை 2013-ம் வருடம், 12.49 லட்சம் கோடிகள் ஆக உயர, தங்கத்தின் மீதான ஏற்றுமதி வரி 10% ஆக முதன் முறையாக உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் ஏற்றுமதி 2.23 லட்சம் கோடி குறைந்தது. 



ஆனால், இன்றும் 20,000 டன் தங்கம் உபயோகமில்லாமல் வீடுகளில் பதுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. இதை வெளியே கொண்டு வந்து தங்க ஏற்றுமதியை குறைக்கவும், கிடப்பில் இருக்கும் தங்கத்தை உபயோகத்திற்கு கொண்டு வரவும் தற்போது மூன்று தங்கத்திட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன.



அந்த திட்டங்கள் பற்றி பார்ப்பதற்கு முன்னர் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. ஒரு முதலீடாகப் பார்த்தால் தங்கம், தனி மனிதனுக்கு மிகக்குறைந்த லாபம் தரக்கூடியதுதான். காரணம்,



1. தங்கம் மாதாந்திர வருமானம் ஈட்டிக்கொடுப்பதில்லை



2. பாதுக்காப்பு லாக்கர் சார்ஜ் ஒரு நிரந்தர செலவு.



3. நகையாக இருக்கும் நிலையில் அதை உருக்கும்போது செய்கூலி, சேதாரம் என்று நஷ்டம் ஏற்படும். இவை நாம் வாங்கும் போதும், பின் விற்கும்போதும்.



4. இதையும் மீறி தங்கம் வாங்கப்படுகிறது ஏனென்றால், அறுபதுகளில் வாங்கப்பட்ட நிலமோ, வீடோ, தங்கமோ  நல்ல காபிடல் அப்ரிஸியேஷனைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இப்போது உள்ள கால கட்டத்தில் இதுபோன்ற தூக்கிச்சாப்பிடும் லாபத்தைக் கொடுக்குமா? சந்தேகமே!



முக்கியமாக, இந்த விலை ஏற்றத்தினால் கிடைத்த லாபம் காபிடல் கெய்னாக கருதப்பட்டு வரி கட்டவேண்டியிருக்கும். இதுவே பாதி லாபத்தை முழுங்கி விடும்.



இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தபட்டுள்ள தங்கத்  திட்டங்களில் மேலே கூறப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளதா என்பதை பார்க்கலாம்...



Gold Monetisation Scheme



முதலில் இருந்த Gold Deposit Scheme 1999க்குப் பதிலாக அறிமுகமாயிருக்கிறது. 1999 திட்டத்தில் போடப்பட்டவை. அதன் முடிவு காலம் வரை தொடரலாம். இந்தத்திட்டத்தின் கீழ், நம் கைவசம் இருக்கும் தங்கத்தை collection and Purity Centers (CPTC) – BIS (Bureau of Indian Standards) அங்கீகாரம் பெற்று, மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் 995 தரமாக உருக்கி, அந்தத் தங்கக் கட்டிகளை பரிந்துரைக்கப்பட்ட வங்கிகளில் கொடுக்க வேண்டும்.

திட்ட வகைகள்


1-3 வருடங்கள்  - Short term bank deposit (STBD)



5-7 வருடங்கள் - Medium term bank deposit,.(MTBD)



12-15  வருடங்கள் - Long term bank deposit (LTBD)



STBD, பாங்குகளில் போடப்படும் சாதாரண டெபாசிட்டாகவும், MTBD மற்றும் LTBD ஆகிய இரண்டும்  கவர்மென்ட் டெபாசிட்டாகவும் கருதப்படும்.


premature withdrawal



பாங்குகள் premature withdrawalக்கு தங்களின் விருப்பப்படி அபராதம், குறைந்த பட்ச நாட்கள் (minimum lock in period) அமைத்துக்கொள்ளலாம்.



வட்டி



இந்த திட்டத்தில் வட்டி Medium term bank deposit 2.25%, long term bank deposit 2.5% ஆக இருக்கும். தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு கொடுத்த நாளிலிருந்து அல்லது முப்பது நாட்களுக்குள், எது முன்னால் வருகிறதோ, அன்றிலிருந்து வட்டி கணக்கிட்டு கொடுக்கப்படும். இந்த வட்டியும், முதலீடும் தங்கமாகவே கணக்கில் வைக்கப்படும். எடுக்கும்போது அன்று உள்ள  தங்கத்தின் விலையில் மாற்றப்படும்.


வரம்பு



குறைந்தபட்ச டெபாசிட்டாக 995 தரம் கொண்ட  30 கிராம் தங்கம்.  அதிகபட்ச டெபாசிட் வரம்பு  ஏதும் இல்லை.



யார் போட முடியும்?



Resident Indians அதாவது  தனி நபர்கள், Hindu undivided family, Trusts. அதே சமயம் NRIக்கள் வாங்க முடியாது.



எப்படி தரப்படும்?



முடிவு தேதி அன்று தங்கமாகவோ (கொடுத்த தங்கம் +வட்டி) அல்லது பணமாகவோ மாற்றி வாங்கிகொள்ளமுடியும்.


எப்படி ஆரம்பிப்பது?



இத்திட்டத்தில் கணக்கை ஆரம்பிக்க, ஒரு வங்கிக்கணக்கை திறக்க கொடுக்க வேண்டிய அட்ரஸ்,  ஐடி ப்ரூஃப் போன்றவற்றை கொடுத்தாலே போதும்.



நன்மைகள்



1. பணம் ஈட்டாத தங்கம் இப்போது வட்டி பெற்றுத்தருகிறது.



2. லாக்கர் செலவு, திருட்டு பயம் இல்லை.



3. நினைத்தபோது எடுக்கக்கூடிய லிக்விடிடி உண்டு.



4. இந்த வட்டிக்கு வருமான வரி, சொத்து வரி கிடையாது.



5. தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தாலும் காபிடல் கெயின்ஸ் வரி கிடையாது



பாதிப்புகள்



1. நம் தங்கம் .995 தங்கமாக மாற்றப்படும்போது இழப்பு ஏற்படும்.



2. கற்களும் அகற்றப்பட்டு எடை குறைவும்  உண்டு.



3. இதற்கு முன்னால் தங்கம், வருமான வரி கணக்கில் காட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் கேள்விகள் எழலாம். ரூ.50000 க்கு  மேல் கட்டப்பட்டால், PAN எண் கொடுக்கவேண்டும்.






Sovereign Gold bond Scheme



முதல் திட்டம், கையில் இருக்கும் தங்கம் வருமானம் ஈட்டுத்தர உதவும். இந்தத்திட்டம் புதிதாக தங்கம் வாங்க விரும்புவோர்களுக்காக. தங்கமாக வாங்காமல், இந்த பாண்டாக வாங்கலாம். தங்கத்திற்கான விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2684 என்று கூறப்பட்டுள்ளது.



வரம்பு



ஒரு தனி நபருக்கு குறைந்த பட்சமாக 2 கிராம், அதிக பட்சமாக 500 கிராம் என வரம்பு விதிக்கப்பட்டுள்லது. இரண்டு பேர் சேர்ந்து வாங்கினால் இந்த வரம்பு முதலில் சொல்லப்பட்ட நபருக்குப்பொருந்தும்.



யார் வாங்க முடியும்



Resident Indian entities – Individual, HUF, Trust, Universities, Charitable institution. NRI க்கள் வாங்க முடியாது.



காலம்



பத்திரங்கள் எட்டு வருடத்திற்க்கு அளிக்கப்படும். ஆனால் ஐந்தாவது வருடத்திலிருந்தேகூட வெளியேற முடியும்.



வட்டி



2.75% ஒரு வருடத்திற்கு, இருமுறையாக வழங்ககப்படும்



வர்த்தகம்



பங்குச்சந்தைகளில் நேரடியாக வாங்கி விற்க முடியும்



வரி



வட்டிக்கு வரி உண்டு. பத்திரங்கள் விற்கும்போது கிடைக்கும் லாபத்தில் (Capital gains) தங்கமாக வாங்கி விற்கும்போது எப்படியோ, அதே போல்தான் இதிலும் வரி செலுத்த வேண்டும் . ஆனால் TDS கிடையாது. அந்த வருடம் வரிக்கான ரிட்டர்ன் ஃபைல் செய்யும்போது குறிப்பிடவேண்டும்.



அதிக பட்ச அளவு



ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 500 கிராம் என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வருடத்திய வரம்பு என்பதால், வருடா வருடம் வாங்க முடியும்.



எப்படி ஆரம்பிப்பது?



தங்கம் வாங்கும்போது கொடுக்கப்படும் KYC Norms க்கான அட்ரஸ்,  ஐடி ப்ரூஃப் கொடுக்கவேண்டும்.



நன்மைகள்



1. பணம் ஈட்டாத தங்கம், இப்போது வட்டி பெற்றுத்தருகிறது. இந்த வட்டியும் நம் சேவிங்க்ஸ் பாங்க் கணக்கில் வருடத்திற்கு இரு முறைவருவதால், செலவிற்கும் கிடைத்துவிடுகிறது.



2. லாக்கர் செலவு, திருட்டு பயம் இல்லை.



3. நினைத்தபோது எடுக்கக்கூடிய லிக்விடிடி உண்டு.



4. இவை கடன் வாங்குவதற்க்கு collateral ஆக கொடுக்கப்படலாம்.



5. பங்குச்சந்தைகளில் நேரடியாக வாங்கி, விற்க முடியும்.



6. மூண்றாம் நபருக்கும் மாற்றி கொடுக்க முடியும்.

பாதிப்புகள்


1. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 2684.  நாம் கடைகளில் வாங்கும் விலையை விட அதிகம்.



2. பங்குச்சந்தைகளில் வாங்கி, விற்க்கும் போது அதற்கு உண்டான செலவுகளுண்டு.



3. Indexing பற்றி ஏதும் சொல்லப்படவில்லை.



இவைத் தவிர India gold coin and bullion scheme என்ற இரு திட்டங்களும் அறிமுகமாகி இருக்கின்றன. இவைகளின் நன்மை தீமை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை.



Capital Gains Tax , Wealth Tax 



தங்கம் வாங்கி மூன்று வருடங்களுக்குள் விற்கப்பட்டால், வரும் லாபம் (விற்கப்பட்ட விலையில் இருந்து வாங்கிய விலை கழிக்கப்பட வேண்டும்) Short Term capital Gain ஆக கருதப்பட்டு, நாம் எந்த Tax Rate Bracket ல் வருகிறோமோ, அதில் உள்ள வரி செலுத்த வேண்டும். மூன்று வருடங்களுக்கு மேல் என்றால், Long Term capital Gain ஆகக் கருதப்பட்டு, 20% வட்டி செலுத்தவேண்டும்.



சொத்து வரி, நம்மிடம் உள்ள தங்கம் ரூ.30 லட்சத்திற்கு மேல் இருந்தால், 1% சொத்து வரி கட்ட வேண்டும்.


-லதா ரகுநாதன்

விகடன்