Showing posts with label காந்தா (2025)- தமிழ் -சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி டிராமா திரில்லர் ). Show all posts
Showing posts with label காந்தா (2025)- தமிழ் -சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி டிராமா திரில்லர் ). Show all posts

Sunday, November 16, 2025

காந்தா (2025)- தமிழ் -சினிமா விமர்சனம் (மிஸ்ட்ரி டிராமா திரில்லர் )

             


          லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜபாகவதர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் தான் "காந்தா" டைட்டில் என சிலரும்,ரத்தக்கண்ணீர்      படத்தில் எம் ஆர் ராதா "அடியே காந்தா" என்ற புகழ் பெற்ற டயலாக்கைப்பேசியதால் எம் ஆர் ராதா கதை என்பதால் காந்தா என்ற டைட்டில் என சிலரும் சொன்னாலும் இரண்டும் உண்மை அல்ல.இது ஒரு கற்பனைக்கதை.


ஆனால் பாகவதர் பேரன் இப்படத்தைத்தடை செய்யக்கோரி வழக்குப்போட்டிருக்கிறார்.ஒருவேளை சில சம்பவங்கள் உண்மையாய் இருக்கலாம்



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு டைரக்டர்.கே பாலச்சந்தர் மாதிரி பல பெரிய ஹீரோக்களை உருவாக்கியவர்.ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய சில படஙகள் தொடர் தோல்வியை சந்திக்கின்றன.


இவர் உருவாக்கிய ஒரு நடிகர் இப்போது பெரிய சூப்பர் ஸ்டார்.தொடர்ந்து 10 மெகா ஹிட் கொடுத்தவர்.நாயகன் ஒரு டைரக்டர் ஆகத்தொடர்ந்து பரிமளிக்க அந்த நடிகர் உதவி தேவைப்படுகிறது.


அந்த நடிகர் தான் படத்தின் வில்லன்.தாலி கட்டிய மனைவி இருக்கும்போதே இன்னொரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதால் தான் இவர் வில்லன்.

நாயகன் ஆன  டைரக்டர் ,வில்லன் ஆன சூப்பர் ஸ்டார் நடிகர் இவர்கள் காம்பிநேசனில்  ஒரு படம் ஷூட் செய்யப்படுகிறது.


அந்தப்படத்தில் ஒரு புது முகம் தான் நாயகி.படத்தில் ஜோடி ஆக நடித்ததால் வாழ்க்கையிலும் ஜோடி ஆக நடிகரும்,புதுமுக நாயகியும் முடிவு செய்கிறார்கள்.


இது நாயகன் ஆன டைரக்டருக்குப்பிடிக்கவில்லை.


ஒரு கட்டத்தில் திடீர் என புதுமுக நாயகி கொலை செய்யப்படுகிறார்.

கொலை செய்தது யார்?


1 தான் கர்ப்பம் ஆக இருப்பதால் உடனே திருமணம் செய்ய வலியுறுத்தியதால் சூப்பர் ஸ்டார் கொலை செய்தாரா?

2 சூப்பர் ஸ்டாரை மாட்ட வைக்க இயக்குநர் கொலை செய்தாரா?

3 சூப்பர் ஸ்டாரின் மனைவி தனக்கு ஒரு சக்களத்தி உருவாகக்கூடாது என கொன்றாரா?

4  சூப்பர் ஸ்டாரின் மாமனார் கொலை செய்தாரா?

5 புதுமுக நாயகியை அடைய நினைத்து அது முடியாமல் போகவே விரக்தியில் புரொடியூசர் கொன்றாரா?


இது தான் படத்தின் மீதிக்கதை


நாயகன் ஆக  படத்தில் டைரக்டர் ஆக வரும்   சமுத்திரக்கனி நடிப்பு அபாரம்.ஈகோ வை முகத்தில் பிரமாதமாகக்காட்டுகிறார்.


வில்லன் ஆக படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வரும் துல்கர் கலக்கல் நடிப்பு.பல இடஙகளில் ஸ்கோர் செய்கிறார்.


நாயகி ஆக புதுமுகம் பாக்யா ஸ்ரீ அட்டகாசமான நடிப்பு.இருவர் படத்தில் வரும் ஐஸ்வர்யாராய் கேரக்டர் டிசைனை நினைவுபடுத்துகிறார்.முக சாயல் 50% ஐஸ்வர்யாராய் 50% பூவே உனக்காக சங்கீதா.ஒரு புது முக நடிகை முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக நடித்தது அருமை


  வில்லனின் மனைவியாக வரும்  காயத் ரி கச்சிதமான நடிப்பு.

இன்வெஸ்டிகேஷன்  ஆபீசர் ஆக வரும் ராணா ஓவர் ஆக்டிங.காமெடி என்ற பெயரில் அவர் சீரியசான ரோலைக்கெடுத்து விட்டார்.

வில்லனின் பி ஏ ஆக வரும் வையாபுரிக்கு அதிக வேலை இல்லை.உதவி இயக்குனர் ஆக வரும் கஜேஷ நாகேஷ் செம நடிப்பு.


வில்லனின் மாமனாராக வரும் நிழல்கள் ரவி அடையாளமே தெரியாத அளவு கெட்டப் அருமை.இன்னொரு போலீஸ் ஆபீசர் ஆக வரும் ஆடுகளம் நரேன் அதிக வாய்ப்பில்லை.போலீஸ் கான்ஸ்டபிள் ஆக  வரும் பகவதி பெருமாள் கவனிக்க வைக்கிறார்.


ஆர்ட் டைரக்டர் ராமலிஙகம் 1950 கால கட்டத்தைக்கண் முன் நிறுத்துகிறார்.

டேனி சஞ்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு அருமை.ஒயிட் அண்ட் பிளாக்கில் வரும் சீன்கள் கலக்கல் ரகம்.இசை ஜானு சந்தர்.பாடல்கள் பரவாயில்லை ரகம்.பின்னணி இசை ஓக்கே ரகம்.


தமிழ் பிரபா,செல்வணி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  திரைக்கதை எழுதி செல்வமணி செல்வராஜ் மட்டும் தனித்து இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1 முதல் பாதி முழுக்க நாயகன் ,வில்லன் ஈகோ கிளாஸ் தான்.செம இன்ட்ரஸ்ட்டிஙக்

2 சமுத்திரக்கனி பேசும் வசனஙகள் பல இடஙகளில் கை தட்டலை அள்ளுகிறது

3 வில்லன் ஆக வரும் துல்கரின் கெட்டப் சில இடஙகளில் எம் ஜி ஆர் ,சில இடஙகளில் சிவாஜி என கலந்து கட்டி இருப்பது நல்ல யுக்தி

4  கண்ணாடியைப்பார்த்தபடி வில்லன் துல்கர் பேசி நடிக்கும் சீன் செம

5 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் யார் கொலையாளி என்று தெரிந்த பின் நடக்கும் இரு சம்பவங்கள் தான் எதிர்பாராத ட்விஸ்ட்ஸ்


  ரசித்த  வசனங்கள் 

1 பணத்தை இழக்கலாம், ஆனா  நல்ல கலைஞர்களை இழக்கைக்கூடாது 


2 ஒரு கதையை  எப்போ  சொல்லணும்னு  அந்தக்கதை  தான்  முடிவு பண்ணனும் 


3  நீ  பறக்க  ஆசைப்பட் டா  உன் சிறகுகளை  வெட்டுவார் 


4    கட்   சொன்ன பிறகு நடிக்காதே 


5   அவரை  ரசிகர்கள்  கடவுளாப்பார்க்கிறாங்க , சாகற  மாதிரி  எப்படி   நடிப்பார்?


 நீ  கடவுள்  வேஷம்  மட்டும் தான்  போட்டிருக்கே 


6 அய்யா,தெரியாம சொல்லிட்டேன்,மன்னிச்சுடுஙக அய்யா


வார்த்தை உதட்டில் இருந்து வர்றதல்ல,இதயத்தில் இருந்து வருவது.புகழ் உன் கண்ணை மறைக்க ஆரம்பிச்சிடுச்சு


6 அய்யா,ஆடியன்சுக்கு இது பிடிக்கும்


நீ சொல்ற ஆடியன்ஸ் 50 வருசங்களுக்குப்பின் இருக்க மாட்டான்,ஆனா நான் எடுக்கும் படம் காலத்துக்கும் இருக்கும்


7 நாம எங்கே இருந்து வந்தோம் என்பதை எப்பவும் மறக்கக்கூடாது

8  நடிப்பு சக்ரவர்த்தினு எனக்கு பட்டம் கிடைச்சுதே?


அது நான் உனக்குப்போட்ட பிச்சை


 நீங்க எனக்கு வாய்ப்பு மட்டும் தான் கொடுத்தீங்க,வாழ்க்கையை இல்லை


9.  சாமி வரம் தர்கைன்னு பூசாரிக்குப்பூ போட்டுப்பார்த்திருக்கான்


அப்டின்னா?


ஹீரோயினைக்கரெக்ட் பண்ண முடியல.சரி தோழியை ரூட் விடலாம் ?


10. ஒரு படத்துல அவர் ஒருவரே 16 வேடஙகளில் நடித்திருக்கார்


ஏன்?ஊரில் வேற நடிகர்களே இல்லையா?


அவரை மாதிரி நடிக்க நடிகர்கள். இல்லை


11. உன்னை அழிக்க 5 நிமிசம் போதும்


ஊதித்தள்ள நான் மண் இல்லை,மலை


12 உண்மையான காதல்னா என்ன?என்பதை அவளை சந்தித்த பின் தான் தெரிந்து கொண்டேன்


13  வாங்க மேடம்,கல்யாணத்துக்குப்போற மாதிரி அலஙகாரத்தோட வந்திருக்கீஙக,ஆனா இது கருமாதி


14. என்னது?2 பேருக்கும் 12 வருசப்பழக்கமா? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கவே இல்லையா?


புரிஞ்சுக்க இவன் என்ன தொல்காப்பியமா? பிராடு


15 எல்லாத்தையும் சிரிச்சுட்டே சொல்லனும்னு சொல்வியே?இப்ப நீ இல்லை என்பதை எப்படி சிரிச்சுட்டே சொல்வேன்?


16. சாவு கிட்டே போராடி ஜெயிச்சு வந்தவ அவ


17 சாவைக்கிட்டே பார்த்த யாரும் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்த்துடனும்னு வைராக்யமா இருப்பாங்க


18 எல்லாமே பொய் ,அவ மட்டும் தான் உண்மைன்னு நம்பினேன்


19 எனக்கான இடத்தை நான் தான் முடிவு பண்ணுவேன்.அந்த இடத்தை யாராலும் அசைக்க முடியாது.


20 என் கிட்டே இருந்து எதை வேணும்னாலும் பறிக்கலாம்,ஆனா நானே கட்டிக்காத்த என் இமேஜை ,என் பிம்பத்தை யாராலும் உடைக்க முடியாது.


21 இதுதான் வாழ்க்கை.இருக்கற வரைக்கும் உண்மையாய் இரு,பணிவாய் இரு.


22 ஆயிரம் சாவுகளைப்பார்த்திருக்கேன்,பல பேரைக்கொன்றிருக்கேன் ஒரு போலீஸ் ஆபீசரா..ஆனா சாகும்போது சிரிச்ச முகமா செத்த ஒருத்தரைப்பார்த்ததில்லை.

23. நீ இனி வாழும் ஒவ்வொரு நொடியும் உனக்கு தண்டனை தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகி ஒரு அப்பாவிப்பெண்,நல்லவள் என சித்தரிக்கப்படுகிறார்.ஆனால் ஏற்கனவே திருமணமானவன் என்று தெரிந்தும் வில்லனுடன் நெருக்கம் ஆவது ஏன்? இன்னொரு பெண்ணின் வாழ்வைக்கெடுப்பது சரியா?

2. பின் பாதி இன்வெஸ்டிகேஷன் போர்சன் செம கடுப்பு.காரணம் முதல் பாதி திரைக்கதை செமயாக இருந்ததால் பின் பாதி கதையே வேறு என மாறி விடுவதால் வரும் ஏமாற்றம்

3. சினிமாவுக்குள் சினிமா என்பது தமிழ் சினிமாவில் ராசி இல்லாத சப்ஜெக்ட்.ஆல்ரெடி கே பாக்யராஜின் தாவணிக்கனவுகள், பிரகாஷ் ராஜ் நடித்த வெள்ளித்திரை உட்பட பல படஙகள் ஓடவில்லை

4 கொலைகாரன் ஒரு பிரபலம்.ஆள் வைத்துக்கொல்லாமல் நேரடியாகவா கொல்வான்?

5. சாந்தா என்று இயக்குனர் வைத்த டைட்டிலை வில்லன் காந்தா என்று மாற்றுகிறான்.பெரிய வித்யாசம் எதுவும் இல்லை.ஒரு எழுத்துத்தான் மாற்றம்.அதுக்கு ஏன் இவ்ளோ அடிதடி?

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - வித்தியாசமான படஙகளை விரும்புவோர்க்கு முதல் பாதி மட்டும் பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 42.குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே.ரேட்டிங்க்  3/5