Showing posts with label அந்தரன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அந்தரன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, July 30, 2026

அந்தரன் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்ட்ரி திரில்லர்) @ZEE5 மற்றும் Simply South

 அந்தரன் என்ற சொல்லுக்கு வேடன் என்று அர்த்தம்.மறைந்திருந்து தாக்குபவன் என்றும் பொருள் கொள்ளலாம்.ஏற்கனவே எம் ஜி ஆர் நடிப்பில் வேட்டைக்காரன்,சரத்குமார் நடிப்பில் வேடன் போன்ற டைட்டில்களில் படங்கள் வெளிவந்திருப்பதால் சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்து இந்த டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.



                             

ப்ரஜின் பத்மநாபனின் முதல் படம் டிஷ்யூம்(2006)ஆக இருந்தாலும் அவர் நாயகனாக நடித்த முதல் படம்  மணல் நகரம் (2015).மலையாளம்,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது.இதுவரை பெரிய கமர்ஷியல் வெற்றியைப்பெறாத இவர் 20 வருடங்களாகப்போராடி முதன் முதலாக ஒரு ஹிட் படத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி தன் அப்பாவுடன் வசித்து வருகிறார்.நாயகியைத்திருமணம் செய்ய முயற்சித்தாலோ,காதலித்தாலோ,நெருக்கமாகப்பழக முயற்சித்தாலோ அவர் மர்மமான முறையில் இறக்கிறார்.இது போல் மூன்று மரணங்கள் நிகழ்கிறது.


தன் அப்பாதான் ஜாதி வெறியில் அவர்களை ஆணவக்கொலை செய்து விட்டாரோ என நாயகி சந்தேகப்படுகிறார்.


போலீசில் நாயகி புகார் கொடுக்கிறார்.நாயகன் தான் இந்தக்கேசை விசாரிக்கும் போலீஸ் ஆபீசர்.இந்தக்கேஸ் சம்பந்தமாக நாயகியை அடிக்கடி பார்க்க வந்தவர் ,சந்தித்தவர் ஒரு கட்டத்தில் நாயகியின் மீது காதலில் விழுகிறார்.


நாயகியை சின்ன வயசிலேயே காதலித்து விட்டு ஊரை விட்டு ஓடிப்போனவர் தான் நாயகன்.இப்போது நாயகனுக்கும் மரண தேதி நெருங்குகிறதா?யார் கொலையாளி என்பதை எப்படிக்கண்டு பிடித்தார்?என்பதே மீதித்திரைக்கதை.


நாயகியாக இவானா அமைதியாக அழகாக நடித்திருக்கிறார்.இந்தப்பூனையும் பால் குடிக்குமா?ரேஞ்சுக்கு இருந்தவர் கடைசி அரை மணி நேரத்தில் பை போலார் டிஸ் ஆர்டர் பாதிக்கப்பட்டவராக கண் சிமிட்டும் நேரம் பட கார்த்திக் மாதிரி மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார்.


நாயகனாக பிரஜன்.போலீஸ் ஆபீசருக்குண்டான க்ளோஸ் கட்டிங்க்ஹேர் ஸ்டைல்,உடல் மொழி,போலீஸ் தோரணை  எல்லாம் பக்கா


போலீஸ் என்கொயரி டீமில் இருப்பவர்களாக வரும் ஐஸ்வர்யா கண்ணன் ,பிரியங்கா செல்வி இருவரும் நல்ல நடிப்பு.ஆனால் அவர்ககுக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குறைவு.இன்னமும் நன்கு பயன்படுத்தி இருக்கலாம்.

டாக்டராக வரும் அனுபமா குமார் கச்சிதம்.அவர் சொல்லும் சில விஷயங்கள் நமக்குப்புதுசு.


நாயகியின் அப்பாவாக வரும் சாம்பசிவம்  நல்ல நடிப்பு.இவர் தான் படத்தின் தயாரிப்பாளர்.

ஆதிரன்,பத்மென்,செந்தில் குமாரி என அனைவருமே அவரவருக்குத்தந்த ரோல்களை சரியாகக்கையாண்டு இருக்கிறார்கள்.


ஹரி எஸ் ஆர் தான் இசை.ஒரு டார்க் திரில்லர் படத்தில் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று உணர்ந்து பி ஜி எம் அமைத்திருக்கிறார்.


கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.நாயகிக்கான க்ளோஷப் ஷாட்ஸ் ,இரவு நேரக்காட்சிகளைப்படமாக்கிய விதம் இரண்டும் குட்.


சசிகுமாரின் ஆர்ட் டைரக்சன்கச்சிதம்.

ஆக்சன் சீக்வன்சை வடிவமைத்த ராம்குமார் பாராட்டுக்குரியவர்

இக்னேசியஸ் அஸ்வின்,சதீஷ் குரோசோவா இருவரும் எடிட்டர்கள்.முதல் பாதி மிக நீளம்.பல காட்சிகளில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.டயலாக்சை இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

கதை,திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் சந்தோஷ் ராவணன்.முதல் பாதியை குடும்பப்படம் போலவும் ,பின் பாதியை சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர் போலவும் இயக்கி இருக்கிறார்.





சபாஷ்  டைரக்டர்

1கடைசி அரை மணி நேரக்காட்சிகள் படத்துக்குப்பெரிய பிளஸ்


2 நாயகியின் அப்பா ,அல்லது நாயகன் இருவரில் ஒருவர் தான் கொலையாளி என்பது போல் மாறி மாறி சந்தேக வளையத்துக்குள் கொண்டு வருவது நல்ல யுக்தி


3 நாயகியின் வித்தியாசமான பை போலார் டிஸ் ஆர்டர் நடிப்பு தமிழ் சினிமாவுக்குப்புதுசு ( மயக்கம் என்ன ?,3 ஆகிய படங்களில் தனுஷ் செய்த ரோல்)

4 முத்தம் சம்பந்தப்பட்ட ஒரு க்ளூவை வைத்து இன்வெஸ்டிகேஷன் செய்யும் இடம் பரபரப்பு ( இது போல் ஒரு ஐடியா தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை)

5 கொலைகாரனைக்கண்டுபிடிக்க நாயகன் போடும் திட்டமும்,விரிக்கும் வலையும் அருமை.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முதல் பாதி மிக நீளம்.தேவை இல்லாத காட்சிகள் ,வசனஙகள்

2 பெண்களுக்கு அட்வைஸ் சொல்வது போல் சில காட்சிகள் இருக்கிறது.ஏன் ஆண்களுக்கு யாரும் அட்வைஸ் செய்வதில்லை?அவர்கள் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரர்கள் என்பதாலோ ?






 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான ,பரபரப்பான ,விறுவிறுப்பான லோ பட்ஜெட் க்ரைம் சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர் இது .பார்க்கலாம்.ரேட்டிங் 2.5 / 5