Wednesday, March 18, 2026

SECRET STORIES : ROSLIN (2026)-மலையாளம் /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் திரில்லர் ) @ ஜியோ ஹாட் ஸ்டார்

                              

திரிஷ்யம்  (பாபநாசம் ) புகழ்  ஜீத்து ஜோசப்பின்  தயாரிப்பில் பாடல் ஆசிரியர் ஆன விநாயக்  சசிகுமாரின் கதை , திரைக்கதையில் , சுமேஷ் நந்தகுமாரின்  இயக்கத்த்தில்  உருவான  இந்த  வெப்  சீரிஸ் இப்போது  தமிழ்  டப்பிங்கில்   ஜியோ  ஹாட் ஸ்டார்  தளத்தில்  27/2/2026 முதல்  காணக்கிடைக்கிறது .


மொத்தம்  6 எபிசோடுகள் , ஒவ்வொரு எபிசோடும்  25 - 35  நிமிஷங்கள்  டைம்  டியூரேசன் , ஆக  மொத்தம்  180   நிமிடங்கள் , அதாவது   3 மணி நேரத்தில்  ஒரே சிட்டிங்கில்  பார்த்து விடலாம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ரோஸ்லின்  18  வயது  ஆகப்போகும்  டீன் ஏஜ் கேர்ள் . அம்மா, அப்பா, ஒரு  தம்பி  என  மொத்தம்  நான்கு பேர்   கொண்ட  குடும்பம் .நல்ல   வசதியான  பங்களாவில்  குடி இருக்கும் செல்வந்தர்கள்   தான்   இவரது   பெற்றோர் . நாயகிக்கு   இரவில்   அடிக்கடி  பயமுறுத்தும் கனவு வருகிறது . பச்சைக்கலர்   கண்கள்   உடைய  ஒரு நபர்     துரத்துவது போலக்கனவு   காண்கிறார் .  அம்மா, அப்பாவிடம்  சொன்னால்   அவர்கள்  அதை பெரிதாக நம்பியது போலத்தெரியவில்லை 


கனவில்   வரும்  பச்சை நிறக்கண்கள்  உடைய  மர்ம  நபர்  நாயகியைக்கொலை செய்ய முயற்சிப்பது  போல அடிக்கடி கனவு வருகிறது , நூறாவது  நாள்  படத்தில  நளினிக்கு   இது போல  கனவு   வந்து பின் அதே   போல்  நடக்கும் ., நாயகிக்கு ஒரு குழப்பம் , அது போல   எதிர்  காலத்தில்  நடக்க  இருக்கும் நிகழ்வுகளா? இல்லை   வேறு ஏதாவதா?  என்பதில் குழப்பம் 

நாயகியின்  அண்ணன்    மூன்று   வருடங்களுக்கு   முன்புதான்  இறந்தான் , அதற்கும் , இந்தக்கனவுக்கும் சம்பந்தம் இருக்குமோ ?  என்றும்   நாயகி   நினைக்கிறார் . அண்ணனின்  இறப்புக்குத்தான் தான்  காரணம்   என்ற   எண்ணம்   நாயகிக்குக்குற்ற உணர்ச்சியாக  இருக்கிறது 

 வீட்டுக்கு  கெஸ்ட்   ஆக வந்த  ஒரு நபருக்கு  கனவில் வந்து மிரட்டிய ஆள் போலவே  தோற்றம்  இருப்பதால் நாயகிக்கு ஒரு பயம் வந்து  விடுகிறது 


இதற்குப்பின்  நடந்த  சம்பவங்கள்   தான்  மீதித்திரைக்கதை . நாயகி , நாயகியின்  உடன் பிறப்பு , அம்மா, அப்பா  இந்த நான்கு  பேர் , ஒரு வீடு  இந்த  முக்கியமான   நான்கு  கதாப்பாத்திரங்களை  வைத்தே  மொத்த    வெப் சீ ரிஸையும்   முடித்து      விட்டார்கள்  


 நாயகி  ரோஸ் லின் ஆக சஞ்சனா  தீபு , அம்மா ஆக   மீனா , அப்பா ஆக  வினீத்  மூவரும்  கச்சிதமான  நடிப்பு,நாயகியின்  அம்மாவின்  இளவயது  தோற்றத்தில் சிஜா   ரோஸ்  அழகாக வந்து போகிறார்  


சைக்காலஜிஸ்ட்  ஆக   வரும்  சங்கர்   ராமகிருஷ்ணன் , ஏஞ்சல்   ஆக   வரும் மானசா , பாதிரியாராக   வரும்  டி ஜி ரவி , ஹக்கீம்  ஷாஜகான் , அனிஷ்மா அணில் குமார்   என   அனைவர்  நடிப்பும் கனகச்சிதம் 

இந்த   மாதிரி  திரில்லர்   மூவிஸ் க்கு பிஜி எம்   ரொம்ப  முக்கியம் , விஷ்ணு  ஷியாம்   அதை  உணர்ந்து  இசை அமைத்து இருக்கிறார் . பி எம்  உன்னி கிருஷ்ணனின்  ஒளிப்பதிவு   தரம் . எடிட்டிங்க்  ரி யாஸ் . இன்னமும்  கிரிஸ்ப்  ஆக ட்ரிம்  பண்ணி   இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர்


1  கடைசி  2 எபிசோடுகள்   அபாரம் . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  ட் விஸ்ட்   யாராலும்   யூகிக்க முடியாத வகையில் ஓரு  ஜெர்க்   கொடுத்தது  

2  க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்க்கான  க்ளூ  வை ஆரம்பத்திலேயே  கொடுத்த   விதம் அருமை 

3    பின்னணி  இசை , ஒளிப்பதிவு  போன்ற   டெக்னிக்கல் அம்சங்கள்  நச் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  பொதுவாக   வெப் சீரிஸில்  ஒவ்வொரு எபிசோடு  முடியும்போதும்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கும் . அடுத்த எபிசோடில்  என்ன ஆகுமோ ? என்ற   பரபரப்பு  ஆடியன்ஸை  தொற்றிக்கொள்ளும் ,. ஆனால்  இதில்  அவை எல்லாம் மிஸ்ஸிங்க் 


2   முதல்  3 எபிசோடுகளில்  சொன்ன விஷயத்தை   சுருக்கி ஒரே  எபிசோடில்  முடித்து    இருக்கலாம் . நாயகி கனவு காண்பது , பயப்பது , அம்மா, அப்பாவிடம்    சொல்வது  என்று   திருப்பித்திருப்பி  ஒரே  விதமான காட்சிகள்  தான் 

3  நாயகிக்கு நிஜமாகவே   கனவு   தான்  வருகிறதா?  அல்லது   அவளது  பிரமையா?  கற்பனையா?  என்பதில் தெளிவு இல்லை 

4  முதல்  எபிசோடு , ஐந்தாவது , ஆறாவது   எபிசோடு  மட்டும்  பார்த்தாலே  போதும்  . மொத்தக்கதையும்  புரியும் .  2,3 ,4   ஆகிய   3  எபிசோடுகளைத்தேவை இல்லாமல்   இழுத்து  விட் டார்கள் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13 + குடும்பத்துடன்  பார்க்கலாம் 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  3 எபிசோடுகளைப்பொறுமையாகக்கடந்து  விட் டால்  அடுத்த   3 எபிசோடுகள்  செம சுவராஸ்யம் . க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் காகப்பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 




Secret Stories: Roslin
GenrePsychological thriller
Written byVinayak Sasikumar
Directed bySumesh Nandakumar[1]
Presented byJeethu Joseph
StarringSanjana Dipu
Meena
Vineeth
Music byVishnu Shyam
Country of originIndia
Original languageMalayalam
No. of seasons1
No. of episodes6
Production
ProducerMathew George
CinematographyPM Unnikrishnan
EditorRiyas K Badhar
Running time25-36 minutes
Production companyCentral Advertising
Original release
NetworkJioHotstar
Release27 February 2026

Tuesday, March 17, 2026

MERCY(2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (சயின்ஸ் பிக்சன் க்ரைம் திரில்லர்)@அமேசான் பிரைம்

                              

23/1/2026 முதல் திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் 20/2/2026 முதல் அமேசான் பிரைம் தளத்தில் தமிழ் டப்பிங் கில் காணக்கிடைக்கிறது.60 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 53 டாலர் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது.



ஸ்பாய்லர்  அலெர்ட்

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள பிரச்சனை கோர்ட்டில் ஒரு கேஸ் நடந்தால் தீர்ப்பு வர வருடக்கணக்கில் ஆகும்.இந்த தாமதத்தைக்களைய ஆர்ட்டிபிசியல் இண்ட்டெலிஜென்ஸ் மூலம் ஒரு ஜட்ஜை உருவாக்கி 90 நிமிடங்களில் ஒரு கேசை முடிக்கத்திட்டம் இடுகிறார்கள்.இங்கே வக்கில் வாதம்,வாய்தா எதுவும் கிடையாது.குற்றம் சாட்டப்பட்ட நபர் ,ஜட்ஜ் இருவர் மட்டுமே.குற்றத்தை செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ம்


நாயகன் போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் டிடெக்டிவ் ஆக வேலை செய்கிறான்.இந்த ஏ ஐ ஜட்ஜூக்கு மெர்சி என்று பெயர்.இதுவரை 18 கொலைக்குற்றவாளிகள் இந்த மெர்சி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழஙகப்பட்டு இருக்கிறது.


நாயகன் தன் மனைவி ,மகளுடன் 16 வருட இல்லற வாழ்க்கையை இனிதே நடத்தி வருபவன்.ட்யூட்டியில் சக அலுவலக நண்பன் இறந்ததால் அந்த துக்கத்தை மறக்க குடிக்கிறான்.முதலில் அவனுக்குக்குடிப்பழக்கம் இருந்தது.ஆனால் திருமணத்துக்குப்பின் அதை விட்டு விட்டான்.இப்போது மன உளைச்சலால் மீண்டும் குடிகாரன் ஆகி விட்டான்.


நாயகி ஒரு கெமிக்கல் கம்பெனியில் உயர் அதிகாரியாகப்பணியாற்றுகிறார்.அந்தக்கம்பெனியில் திருட்டுத்தனமாக கெமிக்கல்சை திருடி வெளியே கொண்டு செல்லும் ஊழியனை நாயகி கண்டு பிடிக்கிறார்.


நாயகி தன் கணவன் குடிகாரன் ஆன பின்பு வேறு ஒரு நண்பருடன் பழக்கம் கொள்கிறாள்

இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் நாயகி கொலை செய்யப்படுகிறாள்.சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் அவள் கணவன் ஆன நாயகனைக்குற்றவாளி என்று சொல்கிறது.

நாயகன் கைது செய்யப்பட்டு  மெர்சி கோர்ட்டில் நிறுற்றப்படுகிறான்.90 நிமிடங்களில் அவன் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும்.இல்லை எனில் நாயகனுக்கு மரண தண்டனை.


நாயகியைக்கொலை செய்தது குடி போதையில் இருந்த கணவனா?புது பாய் பிரண்டா?நாயகியின் ஆபீசில் பணிபுரிந்து நாயகியிடம் மாட்டிய திருடனா?

இந்தக்கேள்விககுக்கு விடை சொல்வது தான் இந்தப்படத்தின் மீதித்திரைக்கதை.


உலகின் சிறந்த உதட்டழகி பட்டத்தை வென்ற ஏஞ்சலீனா ஜூலி நடித்த வாண்ட்டட் Wanted(2008) படத்தை இயக்கிய  டிமுர் பெக்மம் பெபோவ் தான் இந்தப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில் நடக்கும் இதன் திரைக்கதையை எழுதி இருப்பது  மார்க்கோ வான் பெல்லே.


நாயகன் ஆக நடித்திருப்பது  கிறிஸ் பிராட்.90 நிமிடப்படத்தில் 60 நிமிடங்கள் ஒரு சேரில் அமர்ந்தபடி முக பாவனைகளாலேயே நடிக்க வேண்டியப்பணி .சிறப்பாக செய்து இருக்கிறார்.க்ளைமாக்சில் ஆக்சன் சீனிலும் நன்கு பங்களிப்பு செய்திருக்கிறார்.

மெர்சி என்னும் ஜட்ஜ் ஆக  ரெபக்கா பெர்குசன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாத ரோபோ வாக தத்ரூபமாக நடித்திருக்கிறார்.மிஷின் இம்பாசிபிள் படத்தில் நடித்தவர் தான் இவர்.

மற்ற அனைவருமே அவரவர் கேரக்டரை சிறப்பாக  மெருகேற்றி இருக்கிறார்கள்.




சபாஷ்  டைரக்டர்

1 பெற்றோருக்குத்தெரியாமல் டீன் ஏஜ் மகன்/மகள் சோசியல் மீடியாவை எப்படி எல்லாம் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதை காட்டிய விதம்.

2  கிளவுட்சில் சேமிக்கப்படும் க்ளிப்பிங்க்ஸ்,வீடியோக்கள்,போட்டோக்கள் இவற்றை வைத்தே நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்ற கதைக்களம் நமக்குப்புதுசு

3 என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனித ஜட்ஜூக்கு இருக்கும் மனிதாபிமானம் ,உள்ளுணர்வில் இவன் குற்றவாளியா?இல்லையா?என்பதைக்கண்டுபிடிக்கும்  திறமை இவை எல்லாம். ஏ ஐ ஜட்ஜூக்குக்கிடையாது என்பதை சொன்ன விதம்.

4. நாயகன் கண்டு பிடிக்கும் ஒரு ட்விஸ்ட் + படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள் ,க்ளைமாக்ஸ்


  ரசித்த  வசனங்கள் 

1 கோர்ட்டில் ஒரு ஜட்ஜா நான் கத்துக்கிட்ட ஒரு விஷயம்  எல்லோரும் பொய் சொல்வார்கள்

2 எனக்கு எதுவும் நினைவில்லை யுவர் ஆனர்.

மனைவியைக்கொலை பண்ணுனது கூடவா ?

3  தப்புப்பண்ணுனவங்கதான் ஓடுவாஙக.

பயப்படறவஙகளும் ஓடுவாஙக

4 மனிதனா இருந்தாலும், ஆர்ட்டிபிசியல் இண்ட்டெலிஜென்சா இருந்தாலும் எல்லாரும் தப்பு செய்வாங்க


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 கடந்த 16 வருடங்களாக ஒற்றுமையாகக்குடித்தனம் செய்த நாயகி தன் கணவன் கடந்த சில நாட்களாகக்குடிக்கிறான் என்பதற்காக புது உறவை நாடிச்செல்வது நம்ப முடியவில்லை.

2 கோர்ட்டில் வேக வேகமாக ஆதாரங்களைக்காட்டி மறையச்செய்வதால் ஆடியன்சால் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.

3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை யூகிக்க முடிகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+ க்ளீன் யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான சயிண்ஸ் பிக்சன் க்ரைம் திரில்லர் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5


Mercy
Theatrical release poster
Directed byTimur Bekmambetov
Written byMarco van Belle
Produced by
Starring
CinematographyKhalid Mohtaseb
Edited by
Music byRamin Djawadi
Production
companies
Distributed by
Release dates
  • January 19, 2026 (Regal Cinemas)
  • January 23, 2026 (United States)
Running time
100 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$60 million[2]
Box office$53.6 million[3][4]

Monday, March 16, 2026

ரகசிய போலீஸ் 115 (1968)--தமிழ்--சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் ட்ராமா) @ யூ ட்யூப்

         

       ரகசிய போலீஸ் 115 (1968)--தமிழ்--சினிமா விமர்சனம் (ஸ்பை ஆக்சன் ட்ராமா) @ யூ ட்யூப்             


ஸ்பாய்லர்  அலெர்ட்

ஒரு பணக்காரக்குடும்பத்தில் தேசத்துக்கு எதிரான நாசவேலை சதிகள் அரஙகேறுவதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது.அந்தக்குடும்பத்தில் குடும்பத்தலைவர்,நாடகத்தில் நடிக்க ஆட்கள் தேவை என பத்திரிக்கையில் விளம்பரம் தருகிறார்.


நாயகன் ஒரு ரகசிய உளவாளி.அவரது அம்மா,தங்கைக்குக்கூட அவர் போலீஸ் டிபார்ட்மெண்ட் சீக்ரெட் ஏஜெண்ட் என்பது தெரியாது.


ஒரு நாடக நடிகன் போல அந்தக்குடும்பத்தில் ஊடுருவி உண்மைகளைக்கண்டு பிடிக்க டிபார்ட்மெண்ட் உத்தரவிடுகிறது.


அந்தக்குடும்பத்தலைவரின் மகள் தான் நாயகி.மகன் தான் வில்லன்.அதாவது நாயகியின் அண்ணன் தான் வில்லன்.தேசத்துக்கு எதிரான நாசவேலைகளை வில்லன் ரகசியமாக செய்வது வில்லனின் அப்பாவுக்குத்தெரியாது.


வில்லனுக்கு ஒரு காதலி உண்டு.நாயகனுடன் நெருக்கமாகப்பழகி உண்மைகளைக்கண்டு பிடி என வில்லன் சொல்கிறான்.நாயகியோ நாயகனிடம் நீங்கள் ஒரு ஜமீன்தாரர் என பொய் சொல்லி என் அண்ணனின் காதலியுடன் பழகி அவளை உங்கள் காதல் வலையில் விழ வையுங்கள்.என் அண்ணன் அவளிடம் சிக்கி சொத்துக்களை எல்லாம் இழந்து விடுவான் போல் தெரிகிறது என்கிறாள்


இப்போது நாயகனுக்கு 3 டாஸ்க்குகள்

.1 டிபார்ட்மெண்ட் உத்தர்வுப்படி குடும்பத்தில் நடக்கும் ரகசிய சதி வேலைகளைப்பற்றிய விபரஙகளைத்தெரிவிக்க வேண்டும்

2 வில்லனின் காதலியைக்காதலிப்பது போல் நடிக்க வேண்டும்

3 நாயகியை நிஜமாகக்காதலிக்க வேண்டும்


மேற்கண்ட மிக சிரமமான ஒரு வேலை,ஜாலியான இரு வேலைகளை நாயகன் செய்தாரா?என்பது மீதித்திரைக்கதை


நாயகன் ஆக புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்.வழக்கமாக ஏழை பங்காளன் ஆக வருபவர் இதில் சீக்ரெட் ஏஜெண்ட் ,ஜமீன் தாரர் ரோல்களில் வருவதால் சீன் பை சீன் ஆர்ப்பாட்டமான ,ஆடம்பரமான உடைகள் தான்.


எப்போதும் கோட் சூட் தான்.கம்பீரமாக வருகிறார்.ஜாலியாக டூயட் பாடுகிறார்.வில்லன்களுடன் பைட் போடுகிறார்.

மெயின் கதைக்கு சம்பந்தம் இருக்கோ,இல்லையோ எம் ஜி ஆர் படஙகளில் அம்மா ,தங்கை செண்ட்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கும் ( விதி விலக்கு - அன்பே வா) இதிலும் அவை உண்டு.

நாயகி ஆக புரட்சித்தலைவி ஜெயலலிதா.பணத்திமிர்,செல்வ செருக்கு ,பொறாமை ,காதல் போன்ற உணர்வுகளை பிரமாதமாக உடல் மொழியில் கொண்டு வருகிறார்.

மன்னன். விஜயசாந்தி ,படையப்பா ரம்யா கிருஷ்ணன் போன்ற ஆர்ப்பாட்டமான வில்லி கேரக்டர்களுக்கு இவர் தான் முன்னோடி.

மெயின் வில்லன் ஆக அசோகன் உடல் மொழியில்,நடிப்பில் கலக்குகிறார்.இன்னொரு வில்லன் ஆக எம் என் நம்பியார்.இவர் இரு வேடங்கள் என்ற க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டும் உண்டு

வில்லனின் காதலி ஆக வெண்ணிற ஆடை நிர்மலா.ஆர்ப்பாட்டமாக அறிமுகம் ஆகி அதிக வாய்ப்பில்லாமல் ஒதுங்கி நிற்கிறார்.

நாயகனின் தங்கை ஆக குமாரி பத்மினி கெஸ்ட் ரோலில் வருகிறார்.

மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு காமெடி டிராக்கில் நாகேஷ் + அம்முக்குட்டி புஷ்பமாலா வருகிறார்கள்.ஆள் மாறாட்டக்குழந்தை காமெடி ரசிக்க வைக்கிறது.

இவர்கள் போக  என்னத்த கன்னையா,உசிலைமணி,ஜஸ்டின் ஆகியோர் சின்ன ரோல்களில் வந்து போகிறார்கள்.

எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 6 சூப்பர் ஹிட் பாடல்கள்.வி ராமமூர்த்தியின் ஒளிப்பதிவில் எம் ஜி ஆர் ,ஜெ இருவரும் கல்ர்புல் கலக்கலாகத்தெரிகிறார்கள்.டார்க் ஷேடு உடைகள் எம் ஜி ஆருக்குப்பிரமாதமாக செட் ஆகி இருக்கிறது.குறிப்பாக சிவப்பு வண்ண உடை அவருக்கு மிகப்பொருத்தம்.


ஆர் தேவராஜனின் எடிட்டிங் கில் படம் 163 நிமிடங்கள் ஓடுகிறது

ஜி பாலசுப்ரமணியம்  எழுதிய கதை,திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர்  பி ஆர் பந்துலு.



சபாஷ்  டைரக்டர்

1 நாயகன் பாகிஸ்தானில் இருந்து தப்பி வரும் ஓப்பனிங சீன் அசத்தலான அறிமுகக்காட்சி

2 ஸ்பை ஆக்சன் டிராமா என்றாலும் கமர்ஷியல் விஷயங்களை அதாவது டூயட்,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்,காமெடி என விறுவிறுப்பாகப்படத்தைக்கொண்டு சென்ற விதம்

3 எம் ஜி ஆர் + ஜெ இருவரின் கலக்கலான ஸ்க்ரீன் பிரசன்ஸ்

4 எம் ஜி ஆர் பேசும் உள் குத்து வசனங்கள், பஞ்ச் டயலாக்ஸ்

5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல அந்தக்காலத்திலேயே ரகசிய மைக்,பென் டைப் காமரா வை நாயகன் உபயோகிப்பது

செம  ஹிட்  சாங்க்ஸ்


1. கண்ணே ! கண்ணே ! 

கனியே!கனியே!

முத்தே! முத்தே! அருகே வா( வில்லனின் காதலியை மயக்க நாயகன் ட்ராமா டூயட் சாங்க்)


2 உன்னை எண்ணி என்னை மறந்தேன் ( வில்லனின் காதலி நாயகனை மயக்க ஆடும் நடனம்,சோலோ சாங்க்

3: கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ ( வில்லன் உடைய காதலி நாயகனை மயக்கப்பாடும் சாங்க்)

4  என்ன பொருத்தம்?நமக்குள் இந்தப்பொருத்தம் ? ( நாயகன் +நாயகி டூயட் சாங்க்

5  பால் ,தமிழ்ப்பால் ( வாலியின் வார்த்தை விளையாட்டுக்கவிதைநயத்துடன் வரும் நாயகன். நாயகி சாங்க்

6. சந்தனம் ,குங்குமம் கொண்ட தாமரைப்பூ (க்ளைமாக்ஸ் க்கு முன்பு வரும் சாங்க்)



  ரசித்த  வசனங்கள் 

1 காதலிக்கனுமா?என்ன வயசு அவளுக்கு?

18 வயசு என 18 வருசமா சொல்லிட்டு இருக்கா.வார்த்தை மாறாதவ போல,என்னைக்கும் ஒரே பேச்சு.

2.  சினிமா பார்க்காத லைப்,

சிங்காரிக்கத்தெரியாத ஒயிப்  ரெண்டும் வேஸ்ட்

3  பார்க்கறதுக்குப்பரஙகி மலை மாதிரி இருந்தாலும்  ஆராய்ச்சில இவரை இமயமலை

4  உங்க கைக்கு காப்பு மாட்டும் வரை எனக்குத்தூக்கமே வராது.

வாட்?

ஐ மீன் தங்கக்காப்பு.பிரேஸ்லெட்

5  நான் எப்பவும் ,யாரையும் சரியா அளவெடுப்பேன்

6  ஆறு மாசம்  நீ நாய் படாத பாடு படுவே

ஜோசியரே,அதுக்குப்பின்?

பன்னி படாத பாடு படுவே

7  ஜோசியரே!எத்தனை வருசமா ஜோசியம் பார்க்கறேள்?

25  வருசமா


ஓ.உங்க வயசு?

23

8.  உலகத்தில் மனிதனுக்கு ஆசைன்னு ஒண்ணு இருக்கும் வரை ஜோசியத்தொழிலுக்கு அழிவே வராது.

9  நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்கோ, இப்போ வந்துடறேன்

பேசத்தான் முடியும்,வேற என்ன செய்ய முடியும்?

10 ஊசிப்பட்டாசு மாதிரி வெடிக்கறாளே?தீபாவளிக்குப்பிறந்தவளா இருப்பாளோ?

11 ஆறு மணிக்குக்கரெக்ட்டா வந்துடுவீஙகளா?

ஆறை ( யாரை) மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்

12 உங்களைத்தாழ்த்திப்பேசியே எல்லார் மனதிலும் உயர்ந்து விடுகிறீர்கள்

13 பிள்ளைகள் விஷயத்தில் பெண்கள் பொய்யே சொல்ல மாட்டாங்க

14 அதிகமான பிரியம் பிரிவுக்கு வழி வகுக்கும்

15 காதல் என்பது ஆணின் இதயத்தையும் ,பெண்ணின் இதயத்தையும் மாற்றிக்கொள்வது


ஓ,மேஜர் ஆபரேசன்?

16. இது எத்தனை நாள் நடக்குது?


நாலைந்து வருடங்களா

ஒரே பாட்டையா நாலஞசு வருசமாப்பாடிட்டு இருக்கீஙக?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஓப்பனிங சேசிங் சீனில் நாயகனை வில்லன் கூட்டம் துரத்தி வரும்போது எல்லார் கைகளிலும் துப்பாக்கி இருக்கும்,ஆனா யாரும் சுட மாட்டாங்க,ஆனா நாயகன் ஆற்றில் குதித்தபின் தண்ணீரை நோக்கி தண்டமா சுட்டுட்டு இருப்பாஙக

2 நாயகன் ஒரு சீக்ரெட் ஏஜெண்ட் என்பது தெரிந்த பின் வில்லன் உடனே நாயகனைக்கொல்லாமல்   வேடிக்கை பார்ப்பது ஏன்?


3 நாயகன்  ஹோட்டல் ரூமில் தங்கும்போது இரவில் தூங்கும்போது கூட கோட் சூட் டக் இன் பண்ணி ஷூ கூட கழட்டாமல் தூங்குவது ஏன்?லுங்கி,வேட்டி கட்டி ரிலாக்சா தூங்க மாட்டாரா?

4 வில்லனின் காதலி கொலைக்கேசில் நாயகனை மாட்ட வைக்க போலீஸ்க்குக்கிடைக்கும் தடயம் ரத்தக்கறை படிந்த கர்ச்சீப்.அது நாயகனுடையது.ஆனால் லேடீஸ் கர்ச்சீப் மாதிரி பூப்போட்ட டிசைனில் அது இருக்கும்.ஆண்கள் கர்ச்சீப் கட்டம் போட்டது ,ஸ்ட்ரைப்ஸ் டிசைன்ல தான் இருக்கும்.

5 வில்லன் கட்டளைப்படி நாயகனைக்கொலை செய்தால் போதாதா?அடியாட்கள் எதற்காக டெட் பாடியை ஒரு  சவப்பெட்டியில் போட்டு தண்டமாக சுமந்து வில்லனின் இருப்பிடத்துக்கு கொண்டு வர வேண்டும்?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஆக்சன் மசாலாப்படம்.ரேட்டிங்க் 3 /5


link https://www.youtube.com/watch?v=leAq2gZxlAk




சில சுவராஸ்யத்தகவல்கள்


1 இயக்குநர் பி ஆர் பந்துலு + எம் எஸ் விஸ்வநாதன் இருவரும் இணைந்து பணியாற்றிய 3 வது படம் இது


2. இந்தப்படத்தில் 6 பாடல்கள் இருந்தாலும் நாயகிக்கு 3 பாடல்கள் தான்.வில்லனின் காதலிக்கு 3 பாடல்கள்.இதில் ஜெ வுக்கு மன வருத்தம். எம் ஜி ஆர் ஜெ வை சமாதானம் செய்தார்

3 இந்த காலகட்டத்தில் ஜெ சிவாஜி ஜோடில்பொருத்தம் அருமை என இண்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு இருந்தது.அதைப்போக்கும் விதமாக  எம் ஜி ஆர் கண்ணதாசனிடம் ஆலோசனை செய்து அதன்படி பாடலின் முதல் வரியில் எம் ஜி ஆர் +ஜெ ஜோடியை சிலாகிக்கும் வகையில் பாடல் எழுத வைத்தார் ( என்ன பொருத்தம் நமக்குள் இந்தப்பொருத்தம்)

4 பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் பாடலில் தேன் என்ற சொல் ரிப்பீட்டாய் வருவது போல இதிலும் ஒரு பாடல் வேண்டும் என  எம் ஜி ஆர் கேட்டுக்கொள்ள அதன்படி வாலி எழுதிய பாடல் தான்  பால் தமிழ்ப்பால் பாடல்

5 எம் ஜி ஆர்  எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட நேரம் காவல் காரன் பட ஷூட்டிங் டைம்.அதற்கு அடுத்த ஆண்டு வெளியான படம் இது என்பதால் வசன உச்சரிப்பில் ஒலி மாற்றம் தெரிய வேறு ஒருவரை டப்பிஙக் பேச வைக்கலாம் என இயக்குநர் கூற எம் ஜி ஆர் பிடிவாதமாக அவரே  டப்பிஙக் பேசினார்

6 க்ளைமாக்சில் சவப்பெட்டியில் இருந்து எம் ஜி ஆர் உயிருடன் எழுந்து வந்து நான் உயிரோட தான் இருக்கேன்  என்று வசனம் பேசும்போது தியேட்டரில் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்களாம்

7 எம் ஜி ஆர் +  ஜெ இருவருக்குமான உடை தேர்வு ஜெ தான் செய்தார்.ஒரே கலர் டிரஸ் மேட்சுக்கு மேட்சாக இருக்கும்

8 வேட்டைக்காரன் க்கு முன்பு வரை காதல் காட்சிகளில் எம் ஜி ஆர் சோபிப்பது இல்லை என பத்திரிக்கைகள் விமர்சனம் எழுதின.இதில் எம் ஜி ஆர் +ஜெ கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனதாக விகடன் விமர்சித்தது

9 கல்கி வார இதழ் விமர்சனத்தில் படத்தில் டைட்டிலுக்கு  ஏற்றபடி 115 மைனஸ் பாயிண்ட்ஸ் என கிண்டல் செய்து இருந்தது.அசோகனின் நடிப்பு டாப் என்என்றது

10 இந்தப்படத்தில் இறப்பதாகக்காடப்படும் வெண்ணிற ஆடை நிர்மலா இப்போது உயிருடன் இருக்கிறார்.மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள்.



Ragasiya Police 115
Theatrical release poster
Directed byB. R. Panthulu
Story byG. Balasubramaniam
Produced byB. R. Panthulu
Starring
CinematographyV. Ramamoorthy
Edited byR. Devarajan
Music byM. S. Viswanathan
Production
company
Padmini Pictures
Release date
  • 11 January 1968
Running time
163 minutes
CountryIndia
LanguageTamil


Sunday, March 15, 2026

ANAGANAGA OKA RAJU(2026)-தெலுங்கு/தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்

                

ANAGANAGA OKA RAJU(2026)-தெலுங்கு/தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்


            அனகனக ஒக்க ராஜூ என்றால் ஒரு ஊரில் ஒரு ராஜா    இருந்தான் என்று அர்த்தம்.இந்த லோ பட்ஜெட் படம் 14/1/2026 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி முதல் 20 நாட்களில்  100 கோடி வசூலித்த வெற்றிப்படம்.இப்போது 11/2/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் தமிழ் டப்பிஙகில் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தக்க யு படம்


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின் தாத்தா ஒரு பெரிய ஜமீன்தார்.ஆனால் சத்யராஜ் நடித்த  மல்லுவேட்டி மைனர் படத்தில்  வருவது போல தனது சொத்துக்களை எல்லாம் ஆசை நாயகிகளுக்கும்,பார்க்கிற பெண்களுக்கும் தானமாகக்கொடுத்து விடுகிறார்.ஜமீன் பங்களா கூட அடமானத்தில் இருக்கிறது.சுருக்கமாகச்சொல்லப்போனால் நாயகன் இப்போது ஒரு டம்மி பீசு.கைவசம் காசில்லை.ஆனால் வெட்டி பந்தாக்களுக்கு மட்டும் குறை இல்லை.


ஊர் மக்களுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது.அதனால் நான்கு அல்லக்கைகளை வைத்து நாயகன் வெட்டி பந்தா பண்ணிக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.


ஒரு நாள் நாயகன் தன் அத்தை மகளின் திருமண விழாவுக்கு சென்றபோது அத்தையால் அவமானப்படுத்தப்படுகிறான்.அப்போதே அங்கேயே சவால் விடுகிறான்.நானும் உன்னைப்போல ஒரு பெரிய இடத்தில்,கோடீஸ்வரப்பெண்ணைக்கட்டுகிறேன்,முதல் பத்திரிக்கை உனக்கு வைக்கிறேன் என்கிறான்.


இதற்குப்பின் நாயகன் தீவிரமாகப்பெண் தேடும் படலத்தில் ஈடுபடுகிறான்.அப்போது ஒரு கோவில் விழாவில் நாயகியை சந்திக்கிறான்.நாயகி மிகப்பெரிய ஜமீன் வாரிசு.ஒரு ஏழை அவளிடம் உதவி கேட்க இடுப்பில் கிடக்கும் ஒட்டியாணத்தை சர்வ சாதாரணமாகக்கழட்டி தானமாகத்தருகிறாள்.ஒரு பவுன் ஒரு லட்சத்து 15 ஆயிரம் விற்கும்போது அந்த நகையின் மதிப்பு 3 கிலோ.


நாயகனுக்கு பெரிய ஆச்சரியம்.தான் தேடிய பெண் இவள் தான் எனத்தீர்மானிக்கிறான்.நாயகியைக்கவர ஆபரேஷன் சாரு என்று ஒரு திட்டம் தீட்டுகிறான்.அதன்படி நாயகி கண்ணில் படும் படி தான தர்மம் செய்வது ,வீரசாகசம் செய்வது,உதவுவது என்று டிராமா போடுகிறான்.பிளான் சக்சஸ்.நாயகி நாயகனிடம் காதல் வசப்படுகிறாள்.


நாயகியின் அப்பாவும் சம்மதம் தெரிவிக்க பிரம்மாண்டமாகத்திருமணம் நடைபெறுகிறது.அடுத்த நாள் நாயகனுக்க்ய்ப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.நாயகியின் அப்பா ஊரை விட்டு ஓடி விடுகிறார்.அவர் நாயகனை விடப்பெரிய டுபாக்கூர்.


நாயகிக்கும் ஏகப்பட்ட கடன் இருக்கிறது.நாயகியும் நாயகனைப்போலவே திட்டம் போட்டிருக்கிறாள் என்று தெரிய வருகிறது.


நாயகன்,நாயகி இரு தரப்புக்கடன்களுக்கும் நாயகன் தான் பொறுப்பு என்றும் ,60 நாட்களில் 20 கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என எச்சரித்து விட்டுச்செல்கின்றனர் வங்கி அதிகாரிகள்.


இதற்குப்பின் நாயகன் என்ன செய்தான்?அந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டான்?என்பது மீதித்திரைக்கதை.மேலே நான் சொன்னது முதல் பாதிக்கதை மட்டுமே.


நாயகன் ஆக நவீன் பாலி ஷெட்டி அருமையாக நடித்திருக்கிறார்.அவருக்கு உடல் மொழி ,காமெடி நன்கு வருகிறது.முதல் பாதி முழுக்கக்காமெடி கலாட்டாதான்.


நாயகி ஆக மீனாட்சி சவுத் ரி அழகுப்பதுமையாக வந்து போகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.டூயட்டில் நன்கு நடனம் ஆடுகிறார்.யோகாவில் விருக்சாசனம் கறறவர்  மட்டுமே ஆடக்கூடிய ஒரு பிரமாதமான ஸ்டெப்பை அசால்ட் ஆகப்போடுகிறார்.


நாயகியின் அப்பாவாக ராவ் மகேஷ குணச்சித்திர  நடிப்பை வழங்கி இருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக ப்ரியா ஷைலஜா கச்சிதம்.

வில்லன் ஆக மதுசூதன் ராவ், தலை காட்டுகிறார்.

நாயகனின் நண்பன் ஆக சம்சந்திரா கலகலப்பு ஊட்டுகிறார்.தாரக் பொன்னப்பாவின் நடிப்பு ஓக்கே ரகம்


கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் மாரி.


திரைக்கதையை இயக்குநர் மாரி,நாயகன் நவின் பாலிஷெட்டி ,சின்மய் (நம்ம ஊர் சின்மயி அல்ல) ஆகிய மூவரும்  இணைந்து எழுதி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஜே யுவராஜ்.பாடல்காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார்.கலர் புல் கலக்கல் ஆர்ட் டைரக்சன்  டிசைன்.


இசை மிக்கி ஜெ மேயர்.3 பாடல்கள் தேறுகிறது.பின்னணி இசை கச்சிதம்

எடிட்டிஙக் பக்கா.147 நிமிடங்கள் டைம் டியூரேசன்


சபாஷ்  டைரக்டர்


1 முதல் பாதி முழுக்க நாயகன் அண்ட் கோ செய்யும் லூட்டிகள்,காமெடி அலப்பறைகள் அருமை

2 நாயகியின் முக அழகு,ஆடை வடிவமைப்பில் அவர் காட்டும் கண்ணியம்,நடனக்காட்சிகளில் அவர் நளினம் அனைத்தும் அருமை

3  பின் பாதியில் கொஞ்சம் வேகம் குறையும் திரைக்கதை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் நிமிர்கிறது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி படத்தின் கதையைத்தான்ன்பட்டி டிங்கரிங் செய்திருக்கிறார்கள்.முதல் பாதி கதை அதிலிருந்து தான் உருவி இருக்கிறார்கள்

2 பின் பாதி திரைக்கதை சந்தானம் நடிப்பில் வந்த இங்கே நான் தான் கிங்,சத்யராஜ் நடித்த சுயேச்சை எம் எல் ஏ  ஆகிய படஙகளைத்தழுவி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்

4 நாயகன் பஞ்சாயத்து கவுன் சிலர் போட்டியில் போட்டி இடாமல் தடுக்க வில்லன் அவருக்கு 20 கோடி லஞ்சம் தருவது ரொம்ப ஓவர்.

5 கடனை வங்கியில் போய் அடைக்காமல் நாயகன் வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு வர வைத்து பணம் தருவது நம்ப முடியவில்லை.வங்கியில் போய் பணம் கட்டி ரெஜிஸ்டரில் சைன் செய்ய வேண்டாமா?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல் பாதி டைம் பாஸ் கலகலப்புக்காமெடி ,பின் பாதி  மெதுவான திரைக்கதை,மொத்தத்தில் பார்க்கலாம் ரகம்.ரேட்டிங்க் 2.5/5

Anaganaga Oka Raju
Theatrical release poster
Directed byMaari
Written by
Produced by
  • Suryadevara Naga Vamsi
  • Sai Soujanya
Starring
CinematographyJ. Yuvraj
Edited byVamsi Atluri
Music byMickey J Meyer
Production
companies
  • Sithara Entertainments
  • Fortune Four Cinemas
Release date
  • 14 January 2026
Running time
147 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box office₹100.20 crore[2][3]




Saturday, March 14, 2026

உயிருள்ளவரை உஷா (1983) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

                     


        ஒரு தலை ராகம் (1980), வசந்த அழைப்புகள் (1980),இரயில் பயணங்களில் (1981) , நெஞ்சில்  ஒரு  ராகம் (1982), ராகம்  தேடும் பல்லவி (1982) ,  என  ஐந்து படங்களை இயக்கி அவற்றில்  நான்கு படங்களை  மெகா  ஹிட் ஆக்கிய  டி ராஜேந்தர்  ஆறாவதாக  இயக்கித்தயாரித்த படம்  இது , இவர்  சொந்தமாகத் தயாரித்த பட்டியலில் இது முதல் படம் . உஷாவைத்திருமணம்  செய்த  பின்  வெளியாகிய முதல்  படமும்  கூட .அதனால்  தான்  43  வருடங்கள் கழித்து   ரீ ரிலீஸ்  ஆகும் டி ஆர்  படங்களில்  முதல் இடத்தை இது பிடிக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் , நாயகி  இருவரும்  , அம்மா , அப்பா  இல்லாதவர்கள் . இருவரும்  ஒரே  காலேஜில் ஒரே  வகுப்பில் படிக்கிறார்கள் . இருவரது வீடுகளும்   அருகருகே  இருக்கிறது . நாயகன் அத்தை  வீட்டில்  வளர்கிறான் . நாயகி  அக்காவின் பராமரிப்பில் வளர்கிறாள்  , நாயகிக்கு  ஒரு அண்ணனும்  உண்டு 



காலேஜில்  நாயகன்  நாயகியை  அடிக்கடி  கிண்டல்  பண்ணுவதும் ,  கேலி  பேசுவதுமாக இருக்கிறான் . இது   நாயகிக்குப்பிடிக்கவில்லை . நாயகனைக்கண்டாலே   நாயகிக்கு   வெறுப்பு .ஒரு சமயம்   நாயகன்  நாயகியை எல்லை மீறிப்பேச கோபம் ஆன  நாயகி  நாயகன்  எழுதிக்கொடுத்ததாக  ஒரு பொய்யான லவ் லெட்டரை  ரெடி  பண்ணி  காலேஜ்  பிரின்சிபாலிடம் தருகிறாள் . இதனால்   நாயகனுக்கு காலேஜில் கெட்ட   பெயர் .


 காலேஜில்  நடக்கும்  ஒரு நாடகத்தில்  நாயகனுக்கு துச்சாதனன்  வேடம் , நாயகிக்குப்பாஞ்சாலி  வேடம் . பொய்யான குற்றச்சாட்டு  வைத்த   நாயகியைப்பழி   வாங்க  நாயகன் நாயகியை முத்தம்  இட்டு விடுகிறான் .


நாயகியின்   அண்ணன்  நாயகனை அடி  வெளுத்து  விடுகிறான் . காயம்  பட்ட  நாயகனைப்பார்த்து   நாயகிக்குக்காதல் வருகிறது  .



நாயகனின் அண்ணன்  தான்  இவர்களது  காதலுக்கும் , திரைக்கதைக்கும்   வில்லன் . காதலை  எதிர்க்கிறான்  இவர்களது  காதல்  நிறைவேறியதா:  இல்லையா?  என்பதுதான்   க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக   கங்கா   என்ற  புதுமுக நடிகர்  நடித்து  இருக்கிறார் . சில   காட் சிகளில்   கமல்  சாயலில் , பல காட் சிகளில்  மோகன் சாயலில்  நடிக்க   முயற்சிக்கிறார் 


நாயகி ஆக   புதுமுகம்  நளினி , இந்தப் படத்தில்  நடிக்கும்போது   அவருக்கு வயது 19 .அடர்த்தியான கூந்தலும் , காந்த விழிகளு ம் இவரது பிளஸ் . நடனக்காட் சிகளில்  நன்கு   அபிநயம் பிடிக்கிறார் . இவரது  சிரிப்பு வசீகரிக்கிறது 


செயின்  ஜெயபால்  என்னும்  கேரக்டரில்   டி ராஜேந்தர்    வருகிறார் . காதலர்களை சேர்த்து வைக்கும்  கேரக்ட்டர் . படம்  முழுக்க  இவருக்கு  இரண்டே  காஸ்ட்யும்கள் தான் .. இவர்  அடுக்கு மொழி  வசனம்  பேசி  சண்டை போடும்போது  சி  செண்ட்டர்  ரசிகர்கள் கை   தட்டுகிறார்கள் 


வில்லன் ஆக   ராதாரவி . காமெடி   செய்யும்போது   எம் ஆர்  ராதா குரலிலும் , வில்லத்தனம்   செய்யும் பொது  எம் ஆர்  வாசு குரலிலும் பேசுகிறார் 


எஸ்  எஸ்   சந்திரன் , கவுண்டமணி   இருவரும்   வில்லனுக்கு   அல்லக்கைகளாக வருகிறார்கள் , அதிக வாய்ப்பில்லை 


காலேஜில் புரொபஸராக   வெண்ணிற   ஆடை மூர்த்தி   காமெடி  செய்கிறார் . இவர்   எழுப்பும்   விசித்திர   ஒலிகளுக்கு என ஒரு ரசிகர்  கூட் டம்  உண்டு 


நாயகியின்   அக்காவாக   சரிதா  குணச்சித்திர   ரோல் . வாழாவெட்டியாக  இருக்கும்   தன்னைப்பற்றி   அடிக்கடி  சுய  இரங்கல்   கவிதை   வாசிப்பது  கச்சிதம் 


 நாயகனின்   அத்தையாக  காந்திமதி   இயல்பான  கிராமத்து  நடிப்பு 



ராணிகாந்த் , நாகை  சோமன்  இருவரும் இணைந்து    ஒளிப்பதிவு   செய்து  இருக்கிறார்கள் .நாயகியின்  க்ளோசப்  ஷாட்களில்  இவர்களது கை  வண்ணம் தெரிகிறது . படத்தொ குப்பு   தேவன் , இரண்டே  கால் மணி நேரம் படம் ஓடுகிறது 


பாடல்கள்  எழுதி , இசை  அமைத்து  ,  கதை , திரைக்கதை , வசனம்  எழுதி இயக்கி இருப்பவர்  டி ராஜே ந்தர் 


சபாஷ்  டைரக்டர்


1  முதல் பாதி முழுக்க   காலேஜ்  கலாட்டா , ஆட் டம் , பாட்டம் , கொண்டாட்டம்   என   ஜாலியாக்கப்படத்தைக்கொண்டு போன விதம் 


2  புதுமுக  நாயகியின்   முக அழகு , சிரிப்பு  வசீகரம் 


3   செயின்   ஜெயபால்   தனது   முன்   கதை   சொல்லும்போது   பறவைகளின்  ஓவியங்களை  வைத்தே  காட்சிகளைத்தொகுத்தது 


4  படம்   ரிலீஸ் ஆகும் முன்பே மெகா ஹிட்   ஆன 7  பாடல்களில  கொண்டாட் டமான பாடல்கள்  நான்கை  முதல் பாதியில் , மெலோடி சாங்க்ஸ் , சோகப்பாடல்களை   பின்   பாதியில்   வைத்த  சாமர்த்தியம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   கட்  அடிப்போம்   கட்  அடிப்போம்   காலேஜூக்கு , காதலிப்போம் காதலிப்போம்  மேரேஜூக்கு  (ஓப்பனிங்க் சாங்க் )

2  இந்திரலோகத்து சுந்தரி  ராத்திரி  கனவினில்  வந்தாளோ ? ( ட்ரீம் டூயட் சாங்க் )

3  மோகம்  வந்து தாகம் வந்து என்னை அழைக்க ( ட்ரீம் டூயட் சாங்க் 2  )

4  அடி  என்னடி  பந்தாடும்  பாப்பாக்களே !(  காலேஜ் கலாட்டா  சாங்க் )

5  இதயம்  அதைக்கோவில்   என்பேன்  ( லவ் ப்ரப்போஸ்  சாங்க் )

6   உன்னைத்தானே  அழைத்தேன் உறங்காமல்  தவித்தேன்  (நாயகி  கொண்டாட்ட சாங்க் )

7  வைகைக்கரைக் காற்றே  நில்லு , வஞ்சி தனைப்பார்த்தா  சொல்லு (  சோக சாங்க் )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகி  பொய்யாக்கத்தயாரிக்கும்  காதல்  கடிதத்தில்  வேறு ஒருவர்  எழுதி  இருக்க  அதன்  கீழே நாயகன்   கையெழு த்து   இருக்கிறது .  ஆனால்  வலுவில்லாத  அந்தக்காரணத்தை வைத்து  காலேஜை  விட்டு   டிஸ்மிஸ்  செய்வது எப்படி ?


2   நாயகன்   ஆதி வாங்கியதும்   நாயகிக்கு உடனேயே   காதல்  வருவது  நம்ப முடியவில்லை 


3  முதன் முதலாக   நாயகி  காதலை வெளிப்படுத்திய  அடுத்த   கணமே  நாயகனை  இறுக  அணைப்பதும்   நம்ப முடியவில்லை  


4  க்ளைமாக்சில்  செயின் ஜெயபால்  கேரக்டர்   காதலர்களை   சேர்த்து   வைக்க தன உயிரைத் தருவது  நம்ப முடியவில்லை . அதற்கான   தேவையும் இல்லை  




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மெகா   ஹிட் ஆன பாடல்களுக்காகப்பார்க்கலாம் . டிஜிட்டல்   இசை   சேர்த்து  ஒரிஜினல்   இசையில்      இனிமை   குறைந்து விட்டது . ரேட்டிங்க்  2. 5 / 5 


Uyirullavarai Usha
Theatrical release poster
Directed byT. Rajendar
Written byT. Rajendar
Produced byUsha Rajendar
StarringSaritha
T. Rajendar
Ganga
Nalini
CinematographySoman
Edited byR. Devarajan
Music byT. Rajendar
Production
company
Thanjai Cini Arts
Release date
  • 4 March 1983
Running time
141 minutes
CountryIndia
LanguageTamil






Friday, March 13, 2026

லக்கி த சூப்பர் ஸ்டார் (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ ட்ராமா)@ஜியோ ஹாட் ஸ்டார்

                   

         ஒரு கால கட்டத்தில்  தமிழ்ப் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைத்தால் அரசு மானியம் வழங்கப்படும் என்ற சலுகை இருந்ததால் தூய தமிழில் டைட்டில் வைத்தார்கள்.இப்போ ஓடிடி நிறுவனஙகள் ஆங்கில டைட்டில் வைத்தால் எல்லா மொழிகளிலும்  ரீச் ஆக ஈசி என  ஆங்கிலத்தில் டைட்டில் வேண்டுகிறார்கள்.அதனால் பெரும்பாலான தமிழ்ப்படங்களுக்கு ஆங்கில டைட்டில் தான்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின் அக்காவுக்கு தாரே ஜமீன் பர் ஹிந்திப்படத்தில் இருப்பது போல ஆட்டிசக்குறைபாட்டுடன் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.அவள் சிறுமி ஆக ஆன பின் எதிர் பாராத விதமாக நாயகன் மூலம் ஒரு நாய்க்குட்டியின் நட்பு கிடைக்கிறது.


நாய்க்குட்டி அந்த சிறுமியின் வாழ்வில் வந்தபின் அவளிடம் நல்ல மாற்றங்கள். ஆனால் திடீர் என நாய்க்குட்டி மிஸ் ஆகிறது.


கவுன்சிலர்,எம் எல் ஏ, முதல்வர் என 3 நபர்களிடம் கை மாறுகிறது.


நாய்க்குட்டியின் அம்மா தன் வாரிசைத்தேடி ஒருபுறம்.நாயகன் ஒரு புறம்.வில்லன்கள் மறுபுறம் என ஆளாளுக்கு நாய்க்குட்டியைத்தேடுகிறார்கள்.அப்போது நடக்கும் காமெடி கலாட்டாகள் தான் மொத்தக்கதையுமே.

நாயகன் ஆக ஜி வி பிரகாஷ் நடித்திருக்கிறார்.வழக்கமாக ரவுடி ,ஏழை மாதிரி கேரக்டரிலேயே அவரை பார்த்து சலித்த நமக்கு இது பரவாயில்லை என தோன்றுகிறது.

நாயகி ஆக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்.இவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.ஆனாலும் கண்களுக்குக்குளிர்ச்சியாய் இருக்கட்டும் என படம் முழுக்க ஆங்காங்கே உலவ விட்டிருக்கிறார்கள்.

நாயகனின் அக்காவாக தேவதர்சினி  கச்சிதமான நடிப்பு.நாயகனின் அக்கா கணவர் ஆக சுப்பு பஞ்சு காமெடி நடிப்பில் கவனம் கவர்கிறார்.

இளஙகோ குமாரவேல்,ஆடுகளம் நரேன்,மதுசூதன் ராவ்,நமோ நாராயணா ஆகிய அனைவரும் அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கெஸ்ட் ரோலில் சரத் குமார் வருகிறார்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் உதயபானு மகேஷ் வரன்.

கவிதாலயா பிலிம்ஸ் புஷ்பா கந்தசாமி இந்தப்படத்தைத்தயாரித்து இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு,இசை,பின்னணி இசை ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சராசரி தரத்துடன் இருக்கிறது.


ரன்னிங் டைம் 2 மணி நேரம் 



சபாஷ்  டைரக்டர்

1 குழந்தைகள்,சிறுவர்களுக்கான ஒரு ராமநாராயணன் டைப் கதையைக்கொடுத்த விதம்

2  நாய்களுக்கு பின் குரலாக கோவை சரளா,மொட்டை ராஜேந்திரன் போன்றோரை டப்பிங் பேச வைத்த ஐடியா

3 வில்லன்கள் அனைவரையும் கொடூரமாக எல்லாம் காட்டாமல் காமெடி சீக்வன்சில் காட்டியது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாய் யாரோ ஒருவர் காலில்  யூரின் போவதைக்காமெடி டிராக் ஆக ஒரு முறை பார்க்கலாம்.ஆனால் அடிக்கடி அதே மாதிரி சீன் தேவையற்றது

2 நாய்க்குட்டி அடிக்கடி இடம் மாறுவது ,பாதுகாப்பாக இருப்பது இதிலும் நம்பகத்தன்மை இல்லை

3 நாயகனைத்தேவை இல்லாமல் ஆக்சன் ஹீரோ மாதிரி பைட் எல்லாம் போட வைத்தது எதற்கு?

4 நாய்க்குட்டி யாரிடம் இருந்தாலும் அதிர்ஷ்டம் அவருக்கு அடிப்பது நம்பும்படி இல்லை.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குழந்தைகள்,சிறுவர்கள் ரசிப்பார்கள்,செல்லப்பிராணிப்பிரியர்கள்,ப்ளூ கிராஸ் மெம்பர்கள் ரசிக்கலாம்.சராசரி ரசிகர்கள் அவ்வளவாக விரும்ப மாட்டார்கள்.ரேட்டிங்க் 2.5 /5