திரை அரங்கு களில் வெளியாகாமல் நேரடியாக நெட் பிளிக்சில் 7/8/2026 முதல் தமிழ் டப்பிங் கில் வெளியாகியிருக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தன் மனைவி ,இரு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறான்.ஒரு நாள் வித்தியாசமான முறையில் ,பலத்த மழை பெய்கிறது.வீட்டின் கதவுகள் ,ஜன்னல்கள் எல்லாம் திடீரென லாக் ஆகிக்கொள்கின்றன.வெளியே வர முடியவில்லை.
எதிர் வீட்டில் இதே நிலைமைதான் என்பதை அறிந்ததும் நாயகனுக்கு நிம்மதிப்பெருமூச்சு.நம்ம வீட்டில் கரண்ட் போனதும் கவலைப்படும் நாம் பக்கத்து வீட்டிலும் கரண்ட் இல்லை எனில் அப்பாடா இங்கேயும் கரண்ட் இல்லை ,அங்கேயும் கரண்ட் இல்லை ,எங்கேயும் கரண்ட் இல்லை என்று நினைப்போமே அதே மைண்ட் செட்டில் தான் நாயகன் இப்போது இருக்கிறான்.
இப்போது ஊர்,உலகம் மொத்தமும் கொரோனா காலத்து லாக் டவுன் மாதிரி அடைபட்டு விட்டோம் என்பதை உணர்கிறார்கள்
சரி,மாட்டிக்கொண்டோம்.சாப்பாட் டுக்கு என்ன வழி?வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை வைத்து எத்தனை நாட்கள் சாப்பாடு தயார் செய்ய முடியும் ?எனப்பார்த்தால் இரண்டு மாதங்களுக்குத்தேவையான மளிகைப்பொருட்கள் இருக்கின்றன.அப்பாடா,கவலை இல்லை என நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள்.
ஆனால். 5 வருடங்ககாக இந்த நிலை தொடர் கிறது.போதாக்குறைக்கு ஏலியன்சா?மான்ஸ்டர்சா?என்று தெரியாத மாதிரி ஒரு விசித்திர உயிரினங்கள் தாக்க வருகின்றன.நாயகன் எப்படி சமாளித்தான்?சர்வைவல் ஆனானா?என்பது மீதிக்கதை.
நாயகனாக வாக்னர் மோரா,நாயகியாக க்ரேட்டா லீ கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்.மகன் ,மகளாக எம்மா ஹோ,ஆர்டன் சோ சுட்டித்தனத்துடன் நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு , சவுண்ட் டிசைனிங்க் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை.
படத்தின் ரன்னிங்க் டைம் 112 நிமிடங்கள்
சபாஷ் டைரக்டர்
1 படத்தின் ஓப்பனிங்க் ஷாட்லயே இந்த பூமிக்கு லேண்ட்ஸ்கேப் என பெயர் வைத்தது தப்பு,நிலத்தை விட கடல் பகுதிதானே அதிகமாக இருக்கிறது?என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும்போதே ஏதோ மிஸ்ட்டீரியஸ் மேட்டர் என்பதைக்கோடிட்டுக்காட்டிய விதம்.
2 பக்கத்து வீட்டுப்பெண் மான்ஸ்டரிம் மாட்டி பலியாகும் திகில் காட்சி படமாக்கப்பட்ட விதம்.
3 மான்ஸ்டர் நாயகனின் வீட்டுக்கு வரும் சீனும் அப்போது ஆட்டோமெடிக்காக வீட்டின் கதவுகள் திறப்பதும் திகிலான காட்சி.
4 முதல் 45 நிமிடங்கள் கேரக்டர் டிசைன் ,சிச்சுவேஷன் எல்லாவற்றையும் பிரமாதமாக செட் செய்து எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம் அருமை.
5 டெக்னிக்கல் டீம் ,கம்யூட்டர் கிராபிக்ஸ் ,சவுண்ட் டிசைனிங் ,ஒளிப்பதிவு அனைத்தும் அருமை.
6 ஜன்னல் கண்ணாடியைக்கூட உடைக்க முடியவில்லை என்பதை விஷூவலாகக்காட்டிய விதம் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைத்து காய்கறி செடிகளை வளர்த்து உணவுக்கு ரெடி ஆவது சரி.ஆனால் சூரிய ஒளியே இல்லாமல் அடைபட்ட வீட்டுக்குள் செடி எப்படி வளரும் ?
2 ஒரே வீட்டுக்குள் முழுக்கதையும் நடப்பதால் ,ஒரே குடும்பம் நான்கு பேர் தான் மொத்த கேரக்டர்சும் என்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது
3. க்ளைமாக்சில் தெளிவான விளக்கம் தரப்படவில்லை.அந்த மான்ஸ்டர்ஸ் கேரக்டர்களில் நல்லது ,கெட்டது எனப்பிரிவது நம்ப முடியலை.
4 மான்ஸ்டர்சின் உருவம் பிரமிப்பை ஊட்டவில்லை.இதெல்லாம் சாதாரணமப்பா என சலித்துக்கொள்வது போல் தான் தோன்றியது.
ரசித்த வசனங்கள்
1 மான்ஸ்டரில் நல்லது ,கெட்டது என எதுவுமில்லை.எல்லாமே கெட்டவை தான்.
அடல்ட் கண்ட்டண்ட் வார்னிங் 13+ க்ளீன் யூ. குடும்பத்துடன் பார்க்கலாம்.
CPS கமெண்ட் - வித்தியாசமான ,மாறுபட்ட சர்வைவல் திரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க். 3/5
| The Last House | |
|---|---|
Release poster | |
| Directed by | Louis Leterrier |
| Written by | Matthew Robinson |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Pål Ulvik Rokseth |
| Edited by | Adam Gough |
| Music by | Yair Elazar Glotman |
Production companies | |
| Distributed by | Netflix |
Release date |
|
Running time | 112 minutes[1] |
| Country | United States |
| Language | English |