Sunday, October 02, 2022

PLAN A PLAN B (2022) ( ஹிந்தி) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


இந்தப்படத்தைப்பார்க்க  ரெண்டே  காரணங்கள் தான், லெமன் விமன் தமன் ஹீரோயின், டோட்டல் டைம் ட்யூரேஷன்  ஒண்ணே  முக்கால்  மணி  நேரம்தான். நெட்  ஃபிளிக்ஸ்ல ரிலீஸ். . இது  ஸ்லோவாதான்  மூவ்  ஆகும். ஃபைட் , மொக்கை  காமெடி  டிராக்   இல்லை , அந்த  டேஸ்ட்  உள்ளவங்க  ஒன்  ஸ்டெப் பேக் 


ஸ்பாய்லெர்  அலெர்ட்


கல்யாண  மாலை  மாதிரி  ஒரு  ஆஃபீஸ்  வெச்சு  ரன்  பண்றாரு  ஹீரோயின் , இவருக்கு ஆல்ரெடி  ஒரு லவ்வர்  இருந்தாரு. ஹார்ட்  அட்டாக்ல  இறந்துட்டாரு. அவரை  மறக்க  முடியாம  தவிக்கறாரு 


 அதே  ஆஃபீஸ்  பக்கத்துல  டைவர்ஸ்  காலை   மாதிரி  ஆஃபீஸ்  நடத்தறாரு  ஹீரோ .இவர்  ஒரு  லாயர். குறிப்பா  டைவர்ஸ்  லாயர் . அவரோட  வேலை கருத்து  வேற்றுமை  கொண்ட  தம்பதிகளைப்பிரித்து  வைப்பது  , டைவர்ஸ்  வாங்கித்தருவது


 இவங்க  ரெண்டு  பேரு  ஆஃபீசும்   பக்கத்துலயே  இருப்பதால்  , இருவரின்  தொழிலும்  கேரக்டர்களும்  எதிர்  எதிர்  துருவங்கள்  என்பதால்  அடிக்கடி  இருவருக்கு  மோதல்  வருது 


ஹீரோக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகிடுச்சு . ஆனா  மனைவி  டைவர்ஸ்  கேட்டுட்டு  இருக்காப்டி, ஆனா  இவரு  தராம  இழுத்தடிச்ட்டு  இருக்காரு 


மோதலில்  ஆரம்பிச்ச  ஹீரோ  ஹீரோயின்  நட்பு  காதலில்  முடியுது. அந்த  காதலை  ப்ரப்போஸ்  பண்ற  டைம்ல  திடீர்னு  ஹீரோ  நான்கு  நாட்கள்  ஆளே  அட்ரஸ்  இல்லாம  போறாரு  ஆஃபீசே  வர்லை 


 அவரை  எல்லாரும்  தேடறாங்க . அவர்  எங்கே  போனார்?  க்ளைமாக்ஸ்ல  அவரு  சொந்த  சம்சாரம்  கூடவே  சேர்ந்தாரா? புது  சம்சாரமா  ஹீரோயினை  கட்டிக்கிட்டாரா?  என்பது  திரையில்  காண்க 


ஹீரோவா  ரித்தீஷ்  தேஸ்முக். இவரை  இப்போதான்  முதல்  முறையா  பாக்கறேன். . ஆக்டிங்  ஓக்கே 


 ஹீரோயின்  ஒண்டர்  விமனா, மஞ்சள்  அழகி  லெமனா  வந்த  தமனா . பாகுபலிக்குப்பின்  இதுல  அழகாவே  இருக்காரு கோபமான  கொந்தளிப்பான  காட்சிகளை  விட  காதலில்  விழுந்த  பின் காட்டும்  முக  பாவனைகளில்  ஸ்கோர்  பண்றார்


ஹீரோவின்  முதல்  மனைவியா  வர்றவரு   சுமாரா  இருக்காங்க . 


ஹீரோயினின்  அம்மாவாக  60  வயசு  லேடி  நடிப்பு  குட் 


 ஹீரோவின்   ஆஃபீஸ்  ரிசப்ஷனிஸ்ட்டா  வரும்  நடிகை  க்ளைமாக்ஸ்ல   ஒரு செண்ட்டிமெண்ட்  டயலாக்  எல்லாம்  பேசி  கலக்கி  இருக்கு 


சபாஷ்  டைரக்டர் 


1   விஜய்  ஆண்ட்டனி  வக்கீலா  நடிச்ச  இந்தியா  பாகிஸ்தான் ( 2016)

PURPLE HEART (2022) , LOVE  IN THE   VILLA (2021)  இந்த  மூன்று  படங்களையும்  பார்த்து  அதுல  இருந்து  பட்டி  டிங்கரிங்  பண்ணிய  சாமார்த்தியம் 


2   நான்கே  கேரக்டர்களை  வெச்சு  ஒரே  ஒரு  ஆஃபீஸ்  செட்டப்ல  லோ  பட்ஜெட்ல  எடுத்து  முடிச்ச  சாமார்த்தியம் 


3  ஹீரோ - ஹீரோயின்  மோதல்  காட்சிகள்  பல  படங்களில்  பார்த்தவைதான்  என்றாலும்  சில  காட்சிகள்  ரசிக்கும்படி  எடுத்தது 
ரசித்த  வசனங்கள்


1  நீங்க  ரெண்டு  பேரும்  உங்க  வாழ்க்கைல  அடுத்தவங்க  குறையைக்கண்டுபிடிக்கறதுலதான்  அதிக  நேரம்  செலவு  பண்ணி  இருக்கீங்க 


2  கல்யாணம்  எந்த  அளவுக்கு  பலருக்கு  சந்தோஷத்தைத்தருதோ  அந்த  அளவுக்கு  டைவர்சும்  பலருக்கு  சந்தோஷத்தைத்தந்திருக்கு 


3  உறவுகளுக்கு  கேரண்ட்டி  கார்டு  கிடையாது


4  இன்னைக்கு  4  கல்யாணங்களில்  3  கல்யாணங்கள்  டைவர்ஸ்ல தான்  முடியுது 


5   ஃபோன்ல  பழைய  ஃபோட்டோஸ்  வீடியோஸ்  ஓவரா  சேர்ந்துட்டா  லாக்  ஆகிக்கும்  அப்பப்ப  அதை  ரீ  பூட்  பண்ணனும், இது  ஃபோனுக்கு  மட்டும்  இல்லை  நம்ம  மனசுக்கும் 


6   இவன்  என்ன  ஜி எஸ் டி  மாதிரி  நம்ம  கூடவே  ஒட்டிக்கிட்டான் ? 


7  கல்யாண  மாலை  நடராஜனுக்கே  கல்யாணம்  ஆகாம  இருந்தா  கஸ்ட்மர்ஸ்க்கு  எப்படி  நம்பிக்கை  வரும் ? அனில்  அம்பானியே  ஜியோ  சிம்  யூஸ்  பண்ணலைன்னா  எப்படி ?


அப்படிப்பார்த்தா  ஸ்வீட்  கடை  வெச்சிருக்கறவனுக்கு எல்லாம்  சுகர்  இருக்கனுமா? 


8   எனக்கு  என்ன  வேணும்?னு  எனக்கு  முன்னாடியே  அவனுக்கு  தெரிஞ்சிடும், அப்படி  இருந்தவன்  என்னை  ஏன்  விட்டுட்டுப்போனான்>?


9  உனக்கு  எப்படி  இந்த  எல்லா  விஷயமும்  தெரிஞ்சுது ?

 ஒருத்தனுக்குப்பொண்டாட்டி  இருந்தா  அவனுக்கு  உலக  விஷயம்  எல்லாமே  தெரிஞ்சிடும்


  லாஜிக்   மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோயினோட  அம்மாவுக்கு  60  வயசு. அவங்க  ஒரு  சீன்ல  எனக்கு  சின்ன  வயசுலயே  மேரேஜ்  ஆகிடுச்சு . உடனே  இவ  பிறந்தானு  டயலாக்  சொல்றாரு . ஆவரேஜா  அவருக்கு  மேரேஜ்  ஆகும்போது  20  வயசுனு  வெச்சுக்கிட்டாக்கூட  தமனாவுக்கு இப்போ 30  வயசுனு  வெச்சாலும்  அம்மாவுக்கு  50  வயசு தானே  இருக்கும்   ( நாட்டுக்கு  ரொம்ப  முக்கியமான  பிரச்சனையா  இது ? ) 


2  ஹீரோவின்  மனைவி  டைவர்ஸ்  கேட்பதற்கு  ஸ்ட்ராங்கான  காரணம்  சொல்லவே  இல்லை .  டைவர்ஸ்க்கான  மெயின்  காரணங்களான  வரதட்சணை ,  இ எம் ஏ , குழந்தை  பாக்யம்  போன்ற  எந்த  பிரச்சனைகளையும்  அவள்  சொல்லவில்லை . ஓ சினாமிகா  பட  ஹீரோயின்  மாதிரி  காரணமே  சொல்லாம  பிரிவது  ஏனோ ? 


3  ஹீரோ - ஹீரோயின்  தப்பு  பண்ண  ஒரு  வாய்ப்பு  வந்தப்ப  அந்த  ரூம்ல  ஹீரோவின்  முதல்  மனைவி  ஃபோட்டோ  இருந்ததால்  என்னால  முடியல  என  ஹீரோ  நழுவுவது  நம்ப  முடியல அந்த  ஃபோட்டோ வை  எடுத்து  பக்கத்து    ரூம்ல  வைக்கக்கூடாதா?  இதுக்காக  மெனக்கெட்டு  ஹோட்டல்ல  ரூம்  போடலாமா? என  கேட்பது  நகைக்க  வைக்குது 


4  ஹீரோ திடீர்னு 4  நாட்கள்  காணாம  போறார் திரும்பி  வரும்போது  சாரி  சொல்றார். ஏன்  வாட்சப்ல  ஒரு  மெசேஜ்  கூட  அனுப்பலை ?  ஒரு  கால்  கூட  பண்ணி  சொல்லலை  என்பதற்கு  சரியான  பதில்   இல்லை , சும்மா  சஸ்பென்ஸ்க்காக சால்ஜாப் 


சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பார்த்தே  தீர  வேண்டிய  படம்  எல்லாம் கிடையாது  . சும்மா  டைம்  பாஸ்  மூவியா  பார்க்கலாம் .  ரேட்டிங் 2 / 5 

0 comments: