Saturday, October 01, 2022

டைரி (2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி த்ரில்லர்) @ ஆஹா ஓ டி டி


1966 ல் ரிலீஸ்  ஆன  மெட்ராஸ்  டூ  பாண்டிச்சேரி பஸ் ட்ராவல்ல போகும்  க்ரைம் த்ரில்லர் . செம ஹிட் ரஜினி  நடிச்சு 1981 ல  ரிலீஸ்  ஆன  கழுகு படம் பூரா  ஒரு  பஸ்ல  ட்ராவல்  ஆகும்., சூப்பர் ஹிட். 2000ல் ரிலிஸ்  ஆன  பார்த்தேன் ரசித்தேன் (பிரசாந்த்-லைலா) ரொமாண்டிக் சப்ஜெக்ட். ஹிட். பஸ்ல  பெரும்பாலான  காட்சிகள்  இருக்கும் .  நல்ல  ஹிட்/ 2002ல் ரிலீஸ் ஆன  சுந்தரா ட்ராவல்ஸ்  முரளி - வடிவேலு  காம்போல வந்த  செம ஹிட்  காமெடி  மூவி. ஒரு  அடாஸ்  பஸ்  வெச்சு முழு  படத்தையும்  ஓட்டிய  படம். . 2011 ல  ரிலீஸ்  ஆன எங்கேயும் எப்போதும் திரைப்படம் மெகா  ஹிட்.பஸ்ல  ஒரு ஆக்சிடெண்ட் ஆகும் 2012ல எம் சசிகுமார்  நடிப்பில் வந்த  சுந்தர பாண்டியன்  ஹிட் .  ./ 2022ல் ரிலீஸ் ஆன  நயன்  தாராவின்  ஓ 2  மட்டும்  விதி  விலக்கு  இது செம  ஹிட்  ஆகல. சுமாராப்போச்சு 


ஆக  நமக்குத்தெரிய  வரும்  நீதி-  பஸ்  சை  பேஸ்  பண்ணி திரைக்கதை   எழுதுனா  செண்ட்டிமெண்ட்டா  அது  ஹிட்  ஆகிடும் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஃபிளாஸ்பேக்  சம்பவம் 1 -ஒரு  எம் எல்  ஏ வோட  பொண்ணு  தன்  காதலனோட  பஸ்ல  போய்  மேரேஜ்  பண்ணிக்கப்போறா. அது  தெரிஞ்சு  எம் எல்  ஏ  அடியாட்களை  அனுப்பி  அவங்களை  காலி  பண்ணச்சொல்றாரு.அந்த  பஸ்  ஒரு  விபத்துல  மாட்டிக்குது . இந்த  பஸ்ல  யார்  யார்  எல்லாம்  ட்ராவல்  பண்ணாங்களோ  அவங்களுக்கு  ஒரு சின்ன  ஃபிளாஸ்பேக்  கதை  இருக்கு . கிட்டத்தட்ட 45  நிமிடங்களுக்கு  மேல்  நிகழும்  இந்த  பஸ்  கதைல  ஹீரோ  கிடையாது . ஹீரோ  தேடும்  குற்றவாளிகள்  3  பேர்  இதுல  இருக்காங்க 


 ஃபிளாஸ்பேக்  சம்பவம் 2  - ஒரு  குறிப்பிட்ட  ஊர்ல  13  வது  கொண்டை  வளைவு  அமானுஷ்யம்  நிறைந்ததா  சொல்லபப்டுது . அங்கே  அடிக்கடி  விபத்து  நடக்குது/ இதைப்பற்றி  பேசிக்கிட்டே  ஒரு  ஜோடி  கார்ல  போறாங்க, கரெக்டா  அந்த    ஹேர்பின்  பெண்ட்  வரும்போது  அந்த  கார்  ஆக்சிடெண்ட்  ஆகுது. இருவரும்  ஸ்பாட்  அவுட் 


தற்கால      சம்பவம்  1 - ஹீரோ  ஒரு  போலீஸ்  எஸ்  ஐ. அவர்  டியூட்டில  ஜாயின்  பண்ணதும்  இது வரை  தீர்க்கப்படாத கேஸ்  எதையாவது  தீர்க்கனும்னு  கண்ணை  மூடிட்டு  ஒரு  ஃபைலை  தொடறார். அந்த  ஃபைல்  அவரோட  பர்சனல்  லைஃப்ல  ச,ம்பந்தப்பட்டதா  இருக்கும்னு  அவருக்கு  அப்போ  தெரியாது


  மேலே  சொன்ன   3  சம்பவங்களுக்கும்  எ4ன்ன  தொடர்பு  என்பதே  திரைக்கதை 


ஹீரோவா த்ரில்லர்  ஸ்டார்  அருள்  நிதி .  செமயான  ரோல்,  இவருடைய  ஹைட்டுக்கு  இவர்  போலீஸ்  ஆஃபீசர்  மிலிடிரி  ஆஃபிசர்  ரோல்  மேட்சா  இருக்குது .  அதிக  வசனம்  இல்லை ., சொல்லப்போனா  அதிக  காட்சிகளே  இல்லை ,  முதல்  பாதியில்  ஹீரோவுக்கே  அதிக  சீன்கள்  இல்லை  . செகண்ட்  ஆஃப்ல  தான்  சான்ஸ் 


 ஹீரோக்கே  வேலை  கம்மின்னா  ஹீரோயின்? பவித்ரா   மாரிமுத்து   சும்மா  வந்துட்டுப்போறார்


ஒரே  கதைல  அம்மா  செண்ட்டிமெண்ட்  ,  த்ரில்லர்  எலிமெண்ட் , மிஸ்ட்ரி  சீன்ஸ்   ஜீ வி  படத்தில்  வருவது  போல  முக்கோண  விதிகள்  ., தொடர்பியல்  விதிகள்னு  எல்லாத்தையும்ம்  பேக்  பண்ணிக்குடுக்கப்பார்த்திருக்கார்  இயக்குநர்



முதல்  பாதி  ஸ்லோவா  போனாலும்  பின்  பாதி  குறிப்பா   கடைசி  அரை  மணி  நேரம்  செம  த்ரில்

ரசித்த  வசனங்கள்


1  க்ரைம்க்கு  எக்ஸ்பயரி  டேட்  கிடையாது , எப்போ  குற்றம்  வெளில  வருதோ  நிரூபிக்கப்படுதோ  அப்போ  தண்டனை  உண்டு 

2  நேரத்தை  யராலும்  நிறுத்த  முடியாது , ஆனா  அந்த  நேரம்  நம்மை எங்கேயோ  கொண்டு  போய்  நிறுத்திடும் 

3   போலீஸ்  பயிற்சில  சொல்லித்தந்த  முதல்  விஷயம்  நமக்கு  யார்  மேல  ச்ந்தெகம்  வருதோ  அவங்களை  குற்றவளியாவே  கருதிடனும்  அப்டியே  விசாரிக்கனும், அப்போதான்  நமக்கு  தடயங்கள்  கிடைக்கும் 

4   எதிர்காலம்  , இறந்த  காலம்  ரெண்டும்  நம்ம  பக்கத்துலயே  இருக்கு  ஆனா  நமக்கு  அது   தெரியறதில்லை 

5   ஏதோ  தப்பு  நடக்குது  ஆனா  அந்த  தப்பு  மட்டும்  என் கிட்டே  தப்பிச்ட்டே   இருக்கு  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1  கிட்ட்த்தட்ட  பல  வருடங்களாக  ஒரு  கிராமத்தில்  இருக்கும்  ஏரியில்  ஒரு  பஸ்  மூழ்கி  இருப்பது  யாருக்குமே  தெரியவில்லை  என்பது  நம்பும்படி  இல்லை . நகரம்னா  எவனும்  கண்டுக்க  மாட்டான், கிராமம்  அப்படி இல்லை

2   ஒரு  சாதாரண  சப்  இன்ஸ்பெக்டருக்கு  யாரை  வேண்டுமானாலும்  விசாரிக்கலாம் என  வானளாவிய  அதிகாரம்  இருக்கா? 

3  ஒரு  த்ரில்லிங்  மூவி  ஓடிட்டு  இருக்கும்போது  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  டபுள்  மீனிங்  பேசும்  சாம்ஸ்  , ஷாரா மொக்கைக்காமெடி  டிராக்  எதுக்கு ? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொதுவா  அருள்  நிதி  படங்கள்  ஏமாற்றாது ., வழக்கமா  அரைச்ச  மாவை  அரைக்கும்  கதைல  நடிக்க  மாட்டார் . மறுபட்ட  ஒரு  த்ரில்லர்  கதை  இருக்கும்  எனும்  நம்பிக்கையை  மெய்ப்பிக்கும்  படம் .  ரேட்டிங்  2.75 / 5   த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம்  ஆஹா  ஓ டி டில  இருக்கு . முதல்  பாதி  பார்த்துட்டு  போர்னு  பாதில  விட்டவங்க  அதிகம், கடைசி  அரை  மணி  நேரத்தில்  தான்  ஜீவனே  இருக்கு 

0 comments: