Saturday, September 17, 2022

இதய தாமரை {தமிழ்} (1990) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


 1986 ல  ரிலீஸ்  ஆன  மவுனராகம்  படத்துல  படம்  முழுக்க  வந்த  மோகன்  நடிப்பை  விட  கெஸ்ட்  ரோலில்  வந்த  கார்த்திக்கின்  துள்ளலான  நடிப்பு  பெரிதாக  பேசப்பட்டது . அதற்குக்கிடைத்த  அபார  வரவேற்பில் மவுன ராகம்  கார்த்திக்  போர்ஷனை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  பல  படங்களில்   காட்சிகள்  வைக்கப்பட்டது. யார்  யாரோ  நம்ம  படத்தை  பட்டி  டிங்கரிங்  பண்றப்போ  நாமே  ஏன்  அதை  செய்யக்கூடாதுனு  கார்த்திக்கிற்குத்தோன்றி  இருக்க  வேண்டும். பி சி  ஸ்ரீ ராம்  ஒளிப்பதிவில்  கே  ராஜேஸ்வர்  இயக்கத்தில்  இந்தப்படம்  பண்றப்போ  யூஸ்  பண்ணிக்கிட்டார்  போல 


 1990 பொங்கல்  ரிலீஸா  ஏகப்பட்ட  படங்கள்  ரிலீஸ்  ஆச்சு. புரட்சிக்கலைஞரின் புலன் விசாரணை  ஈரோடு  ராயலில்  ரிலீஸ்  ஆகி பொங்கல் ரேசில் நெ 1  இடத்தைப்பிடித்தது . ரஜினியின்  பணக்காரன்  ஈரோடு  ஸ்ரீ  கிருஷ்ணாவில்  ரிலீஸ்  ஆகி  2  வது  இடத்தைப்பிடித்தது . பிரபுவுக்கு  2  படங்கள்  நல்ல  காலம்  பொறந்தாச்சு  @ ஆனூர்  மீடியம்  ஹிட் , காவலுக்குக்கெட்டிக்காரன் @  ஸ்டார்  (  கலைஞர்  வசனம்  இருந்தும் ) சுமார்  ரகம் . சத்யராஜின்  உலகம்  பிறந்தது  எனக்காக  அபிராமி யில்  ரிலீஸ்  ஆகி  அட்டர்  ஃபிளாப்  ஆனது.  இதயத்தாமரை  ஈரோடு  பிரபா வில்  ரிலீஸ்  ஆகி  25  நாட்கள்  ஓடின்


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ - ஹீரோயின்  இருவருமே  காலேஜ்  ஸ்டூடண்ட்ஸ் . காலேஜ்  எலக்சன்  பற்றிப்பேசும்போது  ஆண் , பெண்  பேச்சு  பெருசாகி  யார்  பெரியவங்கனு  ஈகோ  கிளாஸ்  ஆகுது . ஹீரோ  பொம்பளதானே  அப்டினு  ஹீரோயினை  மட்டம்  தட்றாரு . உடனே  ஹீரோயின்  டோட்டல்  காலேஜுக்கும்  ஒரு  சவால்  விடறாரு 


 எவனாவது  தில்  இருந்தா  நான்  எந்த  அளவு  ஜாகிங்  போறேனோ  அதே  அளவு  என்  கூட  போட்டிக்கு  வாங்கடா  பார்க்கலாம்  அப்டினு  சவால்  விடுது


காலேஜ்ல  இருக்கற  2489  பேரும்  ஜாகிங்  போறாங்க  ஆனா  எல்லாரும்  2  பர்லாங்  தூரத்துலயே  ஆஃப்  ஆகிடறாங்க, ஆனா  பாருங்க  ஹீரோ  மட்டும்  ஹீரோயின்   ஓடும்  தூரம்  4  கிமீ  வரை   ஜாகிங்  வந்துடறாரு . இதைப்பார்த்து  அதிர்ச்சி  ஆகி , ஆச்சரியம்  ஆகி  இன்னும்  என்னென்னவோ  ஆகி  ஹீரோயின்  ஹீரோவை  லவ்  பண்றாரு


 என்ன  கொடுமை  சார்  இது . நான்  25  வருசமா  ஜாகிங்  போய்க்கிட்டுதான்  இருக்கேன் . இத்தனைக்கும்  முதல்ல  டெய்லி  2  கிமீ  போய்க்கிட்டு  இருந்த  நான்  ஸ்டெப்  பை  ஸ்டெப்பா  ஏத்தி  இப்போ  10  கிமீ  டெய்லி  வாகிங்  ஜாகிங்  கலந்து  கட்டி  அடிக்கறேன் . நம்மளை  எல்லாம்  ஒரு  பொண்ணு  கண்டுக்கலை  


  ஹீரோ  ஹீரோயின்  ரெண்டு  பேரும்  லவ்  பண்றாங்க.ஒரு  நாள்  மழை  வரும்போது  ஓரமா  ஒதுங்கி  10 நிமிசம்  கழிச்சுப்போனா  வேலை  முடிஞ்சுது . ஹீரோ  லாட்ஜ் ல  ரூம்  எடுத்து  தங்கி  இருந்துட்டு  அப்றம்  போலாம்கறாரு ,  அந்த  கேன  ஹீரோயினும்  ஒத்துக்குது


லாட்ஜ் ல  ஹீரோ  தப்பு  பண்ண  ட்ரை  பண்ண ஹீரோயின்  செம  காண்ட்  ஆகி  2  பக்கத்துக்கு  டயலாக்  பேசிட்டு  கோபமா  வெளில  போகுது . லாட்ஜ்  ரூம்ல  வந்து  சுப்ரபாதம்  திருப்பாவை  திருவெம்பாவை  எல்லாம்   சொல்லித்தருவான்னு  நம்பி  ஏமாந்துடுச்சு  போல 


இதெல்லாம்  சும்மா  படத்தை  ஜவ்வா  இழுக்கத்தான் .


 காலேஜ்ல  ஒரு  டிராமா  நடக்குது . அந்த  டிராமாவில்   ஹீரோ  இடத்துல  வில்லன்  வந்து  ஹீரோயினை  கிஸ்  பண்ண  ட்ரை  பண்றான்


 அதுல  ஒரு  தகறாரு  ஹீரோ  வில்லனை  அடிச்சு  ஜெயிலுக்குப்போறான்   4  வருசம்  தண்டனை 


ஜெயில்  தண்டனை  முடிஞ்சு  வெளில  வந்தா  ஹீரோயினுக்கு  வேற  ஒருவர்  கூட  மேரேஜ்  ஆகி  இருக்கு. அதுக்கு  ஹீரோயின்  சொல்லும்  காரணம்  செம  தமாஷ் 


 இது  ஜூஜூபி  லுல்லுலாயிக்கு  செஞ்ச  மேரேஜ் . வில்லன்  என்னை  தொந்தரவு  பண்ணிட்டே  இருந்தான் . அவனை  டைவர்ட்  பணறதுக்காக   மேரேஜ்  பண்ணிக்கிட்ட  மாதிரி  காட்டிக்கிட்டேன்கறா . நல்ல  வேளை  ஒரு  குழந்தை  பெத்துக்கிட்டா  ஆண்ட்டி  ஆகிட்டானு  விட்டுட்டுப்போய்டுவான்கறதுக்காக  பேபி  பெத்துக்கலை 


 இதுக்குப்பின்  ஹீரோ  என்ன  முடிவு  எடுத்தார்   என்பது  க்ளைமாக்ஸ்    


 இந்த  ஒத்தைத்தாலி  செண்ட்டிமெண்ட்டை  வெச்சு  அந்த  ஏழு  நாட்கள்  , யாரோ  எழுதிய  கவிதை  உட்பட  2000  படங்கள்  ரிலீஸ்  ஆகிடுச்சு 


 ஹீரோவா  நவரச  நாயகன்  கார்த்திக். செம  ஆக்டிங் . துறுதுறுப்பான   இளைஞன்  வேஷத்துல   கார்த்திக்கை  முந்த  இனி  ஒரு  ஆள்  பிறந்துதான்  வரனும் .


ஹீரோயினா  ரேவதி அடக்கமான  அழகு . ஓப்பனிங்  சீனில்  மட்டும்  ஹீரோ  விடம்  சவால்  விடும்  ஒரு  சீனில்  மட்டும் துடுக்குத்தன  கேரக்டர்  மற்றபடி  படம்  முழுக்க  அப்பாவித்தனம்  மிளிரும்  நடிப்பு 


 மிலிட்ரி  ரிட்டர்ன்  கேப்டனா  நிழல்கள்  ரவி . ரேவதி  மேல்  ஆசைப்பட்டு  மேரேஜ்  பண்ணி  தியாகி  வாழ்வு  வாழ்பவர்


 சின்னி  ஜெயந்த்  மொக்கை  காமெடி  பண்றார். இவர்  கொடுக்கும்  ஐடியாக்கள்  எல்லாம்  ஏ ஒன்  ரகம்  இல்லை  ஏ ஏ ஏ  ரகம் 


படத்தில்  கேமரா  ஒர்க்  இசை  ரொம்ப  நல்லாருந்தது   திரைக்கதை  நம்பகத்தன்மையே  இல்லை 


 இசை  சங்கர்  கணேஷ்


  செம  ஹிட்  ஆன  பாட்டு  லிஸ்ட் 


1  கண்ணே  கதவு  திறந்திடும்  முன்னே 

2  ஏதோ  மயக்கம்  என்னவோ  நெருக்கம் 

3  யாரோடு  யார்  என்ற 


4  ஒரு  காதல்  தேவதை  பூமியில்  வந்தாள்

5  உன்னை  ஏன்  சந்தித்தேன்

6  ஓ  மை  லவ் 


இந்த  லிஸ்ட்ல  முதல்  3  பாட்டு  செம  ஹிட்டு சபாஷ்  டைரக்டர் 


1   கார்த்திக்  ரேவதி  ஜோடி  கெமிஸ்ட்ரியை  வெச்சு  கல்லா  கட்டிடலாம், திரைக்கதைக்கெல்லாம்  பெருசா  யோசிக்க  வேணாம்  என  முடிவு  எடுத்தது 


2  பாட்டு  ஹிட்  ஆனா  படம்  ஹிட்  ஆகிடும்  என்று  நம்பியது 


3  போஸ்டர்  டிசைன்  எல்லாம்  பிரமாதமாக  ரெடி  பண்ணியது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , மடத்தனமான  திரைக்கதை  நெருடல்கள் 


1  நிழல்கள்  ரவி  மேரேஜ்க்கு  பிரப்போஸ்  பண்றாரு  அப்பவே  ஃபேஸ்  டூ ஃபேஸ்  ரேவதி  எதுவும்  சொல்லாம  ஒரு  கடிதம்   எழுதி  கதவுக்குப்பின்  வைப்பது  அதை  அவர்  படிச்ட்டதா  நினைப்பது 


2   அந்த  கிறுக்கு  வில்லன்  ஹீரோ  4  வருசம்  ஜெயில்ல  இருந்தப்போ  ரேவதியை  என்ன  வேணா  செஞ்சிருக்கலாம்  அதை  எல்லாம்  விட்டுட்டு  ஹீரோ  ரிலீஸ்  ஆனபின்  எண்ட்ட்ரி  கொடுக்கறாரு 


3  ஜெயில்ல  இருந்து  ரிலீஸ்  ஆன  ஹீரோ  ஹீரோயினைத்தேடி  அலையறார். ஏன்  ஹீரோயின்  ஜெயில்ல  வந்து  ஒரு  வாட்டி  கூட  பார்க்கலை ?  பார்த்து  அட்ரஸ்  தந்திருக்கலாமே? 


4 கல்யாணம்  பண்ணிய  பொண்ணுக்கு  பாதுகாப்புக்கிடைக்கும்  என்பதற்காக  ஹீரோயின்    செட்டப்  மேரேஜ்  பண்ண  ஐடியா  பண்ணுவது  மாங்கா  மடையன்  கூட  ஒத்துக்காத  ஐடியா  ஆனா  நிழல்கள்  ரவி  ஒத்துக்கறாரு 


5 ஹீரோயின்  தன்னை  வெறுக்கனும்  என்பதற்காக  ஹீரோ  அபப்டி  நடந்துக்கறாரா?  அலல்து  நிஜமாவே  அவர்  எண்ணம் , குறிக்கோள்  எல்லாம்  அதானா? என்பதில்  தெளிவான  விளக்கம்  இல்லை , இதே  கதை  அமைப்பில்  வந்த  சொர்ணமுகியில்   தெளிவா  விளக்கி  இக்ருப்பாங்க 

6  கொள்ளை  அடிக்கறவங்க  பேங்க்ல  நகைக்கடைல  கொள்ளை  அடிக்காம  நிழல்கள்  ரவி  ஆஃபீஸ்லயா  கொள்ளை  அடிப்பாங்க ?


7  கார்த்திக்  ரேவதி  இருவரும்  அந்த  ஹாலில்  இருப்பதை  நிழல்கள்  ரவி  ஆஃபீஸ்  ஆட்கள்  தப்பா  நினைப்பதா  உருவாக்கப்பட்டும்  சீன்  பயங்கர  டிராமா, மனசில்  ஒட்டவே  இல்லை 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கார்த்திக்  ரேவதி  நடிப்புக்காக  பாட்டுக்காக  பார்ப்பவர்கள்  பார்க்கலாம், யூ  ட்யூப் ல  கிடைக்குது   ரேட்டிங் 2.25 / 5 

0 comments: