Saturday, September 24, 2022

மற்றவை நேரில் (1980) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( முக்”கேன”க்கள்ளக்காதல் கதை )

இயக்குநர்  மவுலியை  நடிகரா  பலருக்கும்  பிடிச்சிருக்கும், ஆனா  அவர்  காமெடில , டயலாக்ஸ் ல  கலக்குவார். மவுலியின்  இயக்கத்தில்  பி சி  ஸ்ரீராம்  ஒளிப்பதிவில்  ஒரு  படம்னு  சொன்னதும்  எனக்கு ஆச்சரியம்  ஆகிடுச்சு. இது  கேள்விப்ப்டாத  காம்பினேஷனா  இருக்கே? பார்த்துடுவோம்னு  களம்  -இறங்குனேன். ஆனா  டைட்டில்ல  வி  பிரபாகரன்  ஒளிப்பதிவுனு தான்  வருது 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோயின் வாய்  பேச  முடியாத  காது கேட்காத  நபர். அவருக்கு  கார்டியன்  அவரோட  அக்கா. . மேரேஜ்  ஆகியும்  கணவரை  விட்டுப்பிரிந்து  வாழ்கிறார். காரண்ம்   கணவர்  ம்னைவி  இல்லாத  டைமில்  மச்சினியை பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாக்கிடறார். அந்த  அதிர்ச்சில  தான்  ஹீரோயினுக்கு  பேச  முடியாம   ஆகிடுது . இதை    சரி  பண்ணிடலாம்னு  டாக்டர்  சொல்றாங்க 


ஹீரோ ஒரு  வெட்டாஃபீஸ். வேலை  எதும்  கிடைக்கலை  . அலைஞ்சுட்டு  இருக்காரு . நடைமுறை  வாழ்க்கைல  ஒழுக்கமா  வேலைக்கு  போறவனையே  இந்தப்பொண்ணுங்க  கண்டுக்கற்தில்லை .,, ஆனா  சினிமாவில்  மட்டும்  தான்  பொறுக்கி , ரவுடி   , கஞ்சா  கேஸ் ,  மொள்ள  மாரி , வெட்டியா  ஊரைச்சுத்தறவனை  லவ்  பணறாங்க 


 ஹீரோயின்  ஒரு  தலையா  ஹீரோவை  லவ்  பண்றது  தறுதலையா  சுத்தற  ஹீரோவுக்கு  தெரியாது 


இப்போ  அந்த  ஊருக்கு  ஒரு  மேரேஜ்  ஆன  தம்பதி  வருது  (  டேய்  , மேரேஜ்  ஆனாத்தான்  தம்பதி )  சோப்  பவுடர்  கம்பெனி  ஆரம்பிக்கறாங்க , ஹீரோவுக்கு  அதுல  வேலை  கிடைக்குது 


அந்த  ஓனர்  ஓனரம்மா  இருவர்ல  ஓனர்  டம்மி . ஓனர்  அம்மா தான்  டாமினேசன் 


ஓனரம்மா  அடிக்கடி  ஹீரோ  கிட்டே  தன்  புருசனைப்பத்திக்குறை  சொல்லுது .  நீ  வ்ந்த  பின்  தான்  என் வாழ்க்கைல  வசந்தம்  வந்ததுங்குது 


 ஹீரோ  இதை  அவனோட  ஃபிரண்ட்  கிட்டே  சொல்றான், அவன்  உசுப்பேத்தி  விடறான்.  முதலாளிய்ம்மா  உன்னை  லவ்  பண்ணுது  போல,  நீ  ப்ரப்போஸ்  பண்ணுங்கறான் 


20  வய்சே  ஆன  ஹீரோ 35 +  வயசான  ஆண்ட்டியை  ப்ரப்போஸ்  பண்ணாரா? இல்லையா?  யார்  கூட  ஜோடி  சேர்ந்தார்  என்பதை  திரையில்  காண்க


  இது  பத்தாதுனு  ஸ்கூல்  லவ்  ஜோடி  ஒண்ணு  குறுக்க  மடுக்க  ஓடிட்டு  இருக்கு . அந்த  கேனங்க  யாரு? மெயின்  கதைக்கும்  அவங்களுக்கும்  என்ன  சம்பந்தம்னு  தெரியல 


  ஹீரோவா  புதுமுகம்  பாஸ்கர் .   இவரைப்பார்த்த  பின்  தான்  பாஸ்கர்  ஒருய்  ராஸ்கல்னு  டைட்டில்  வெச்சு  ஒரு  படம்  ரெடி  பண்ணி  இருப்பாங்க  போல 


ஹீரோயினா  புதுமுகம்  ராணி பத்மினி .  வாய்  பேச  முடியாத  கேரக்டர்  என்பதால்  வசனம்  பேசற  வேலை  இல்லை 

ஓனரா  விஜயன் . கண்ணியமான  நடிப்பு . அவர்  ம்னைவியா  ஜெயதேவி . கச்சிதமான  நடிப்பு 


 இசை  ஷ்யாம் .

நினைத்திருந்தது  நடந்து  விட்டது 

 நினைத்த  மந்திரம்  பலித்து  விட்டது  

இன்று  ஆடி மாதக்காற்று  வந்து  மோதும்

நம்மைக்கூடி  நின்று  மேகம்

செம  ஹிட்  மெலோடி  சாங்.படம் ப்டம்  பார்க்க  விருப்பம்  இல்லாதவங்க  கூட  இந்த  பாட்டை  மட்டும்  கேளுங்க  யு  ட்யூப்ல  கிடைக்குது படத்துல 1.38 டியுரேசன்ல  பாட்டு  ரசித்த  வசனங்கள்


1  எக்ஸ்க்யூஸ்மீ, செப்பல்  அறுந்துடுச்சு..  பின்  இருக்குமா?


 நான்  எதுக்கும்  பின்  வாங்கறதில்லை 


2  மிஸ்! நான்  ரொம்ப  கஷ்டத்துல  இருக்கேன்,  தனியாதான்  இருக்கேன், நிங்க தான்  ஹெல்ப்  பண்ணனும்.. 


 சரி  என்ன  ஹெல்ப் ?


 நீங்க  என்னை  லவ்  பண்ணனும்


 ஓ  எத்தனைநாளைக்கு?


 உங்களுக்கு  ஒரு  இடத்துல  எனக்கு ஒரு  இடத்துல  கல்யாணம்  ஆகும்  வரை


3  என்ன  சார்?  பொம்ப்ளை  கேட்க  வேண்டிய  கேள்வி  எல்லாம்  நீங்க  கேட்கறீங்க, ஆம்பளை  கேட்க  வேண்டிய  கேள்வி  எல்லாம்  அவங்க  கேட்கறாங்க ?


  அவங்களுக்கு  உயரம்  கம்மி,  இல்லைன்னா  அவங்க  தான்  எனக்கு  தாலி  கட்டி இருப்பாங்க 


4  ஃபேனுக்கு  அடில  டை  கட்டிட்டு  ஒயிட்  காலர்  ஜாப்  வேணும்னு  எல்லாரும்  நினைக்கறதாலதான்  நாட்டில்  வேலை  இல்லாத்திண்டாட்டம்  பெருகிடுது 


5 சேமிப்பது  கூட  ஒரு  சம்பாதிப்புதான்


6  சுமை  கூலி  மிச்சமாகிடும்னு  ஒருத்தன்  சுடுகாட்ல  வீடு  கட்டினானாம்


7   மரியாதை  தர்றது  நல்ல  பழக்கம், ஒருத்தர்  கிட்டே  டைம் என்ன?னு  கேட்டா  7னு  சொல்வாரு ., அதே  சார்  டைம் என்ன?னு  மரியாதையா  கேட்டா  அக்குரேட்  டைம் 6 57னு  சொல்வார் 


8  ஆடை  என்பது  நம்ம  சவுகர்யத்துக்காக  போடறது 


 புருசன்  தான்  பாத்துட்டானேனு  யாரும்  நடுக்கூடத்துல  குளிக்கறது  இல்லை \


9  ஒரு  முறை  உணர்ச்சிவசப்பட்டு  தப்பு  ப்ண்ணிட்டேன். அது   தப்பா?


என்  புருசன்  வித்தியாசமானவன் , உணர்ச்சி வசப்பட்டா  தன்  சம்சாரம்  அவன்  கண்ணுக்கு தெரியாது , ஊர்ல  இருக்கற  பொண்ணுங்க  தான்  தெரியும் 


10   மேடம், உங்க  வீட்டுக்காரர்  வெளியூர்  போய்  இருக்காரே? லெட்டர்  போடுவாரா?


 அவருக்கு  அதெல்லாம்  தெரியாதுங்க , வெளியூர்  போனா  லெட்ட்ர்  போடனும், வெளியூர்ல  இருந்து  வீட்டுக்கு  வர்றப்போ  பொண்டாட்டிக்கு  எதுனா  வாங்க்ட்டுப்போகனும்..  அவர்  த்னி  கேரக்டர்


11  மறுபடி  எப்போ  இந்த  ஊருக்கு  வருவீங்க ?


 பையனுக்கு  மொட்டை  போட  இங்கே  வந்துதானே  ஆகனும் ?


 பிறக்கப்போறது  பையன் தான்னு  எப்படி  சொல்றீங்க ?

 சபாஷ்  டைரக்டர் ( மவுலி)


 1  பொண்டாட்டிஒரு  ஆளை  இண்ட்டர்வ்யூ  எடுக்கறா. புருசன்  அவளுக்குப்பின்னால  நின்னு  சில  க்ளூ  கொடுக்கறான், இந்த  சீன்  ர்சிக்கற  மாதிரி  அமைஞ்சு இருந்த்து 


2  புருசனை  முதலாளி மேடம் டைவர்ஸ்  பண்ண  வக்கீல்  ஆஃபீஸ்க்கு  வந்த ஹீரோ  அங்கே  அதே  மேடத்தின்  புருசன்  வேற  விஷயமா  வக்கீலைப்பார்க்க  வரும்போது  பம்முவது   செம  காமெடி 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1    ஒரு  சீன்ல  ஸ்டூடண்ட்ஸ்  டீச்சர்  கிட்டே   ஃபீஸ்  தர்றாங்க . ம்றந்துடாதீங்க  டீச்சர்னு  சொல்றாங்க . ஏன்? நோட்ல  நோட்  பண்ண  மாட்டாங்களா? அனாமத்து  டொனேசன்  கலெக்சனா  அது ?


2   அவளோட  ராவுகள் அப்டினு ஒரு  மாதிரியான  மலையாளப்படத்துக்கு  ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் 2  பேரு  போறாங்க. பையனுக்கு  மீசையே  இல்லை .   18  வயசு  ஆள்  இல்லைனு  உள்ளே  விடலை , ஆனா  அந்தப்பொண்ணை  விட்டுட்டாங்க . எந்த  ஊர்ல  1980 ல  அந்த  மாதிரி  படத்துக்கு  லேடீசை  அலோ  பண்ணுனாங்க ? ( 2005 க்குப்பின்  இப்போ  வரை  நிலை  மாறிடுச்சு )


3  உலகத்துல  எந்த  மாங்கா  மடையனாவது  தன்  சொந்த  சம்சாரம்  சினிமாக்கு  கூப்பிடும்போது  எனக்கு  இண்ட்ரஸ்ட்  இல்லை ,   நீ  வேணா   இவன்  கூட  போய்ட்டுவா  அப்டினு  தன்  கம்பெனில  வேலை  செய்யற  ஆள்  கூட  அனுப்ப  ரெடி  ஆவானா? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - நல்ல  ஒளிப்ப்திவு , விஜ்யன் -ஜெயதேவி  நடிப்பு , ஒரே  ஒரு  பாட்டு பார்க்கலாம்னா  பாருங்க , யூ  ட்யூப்ல  கிடைக்குது , ரேட்டிங்  2 / 5 . இவர்கள்  வித்தியாசமானவர்கள்  எனும்  படம்  தான்  இயக்குநர்  மவுலியின்  முதல்  படம் . இது  இரண்டாவது  படம். கடைசி  2  படங்கள்  பம்மல்  கே  சம்பந்தம் , நள  தமயந்தி 


மற்றவை நேரில்
இயக்கம்மௌலி
தயாரிப்புடி. ஆர். எம். சுகுமாரன்
பொன்மலர் ஆர்ட்ஸ்
தமிழரசி
இசைஷியாம்
நடிப்புவிஜயன்
ஜெயதேவி
வெளியீடுஅக்டோபர் 31980
நீளம்3636 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: