Friday, September 16, 2022

MODERN LOVE MUMBAI (HINDI) (2022) - மாடர்ன் லவ் மும்பை - வெப் சீரிஸ் விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரிஸ்) @ அமேசான் பிரைம்


 இந்த  வெப் சீரிஸ்ல  6 குறும்படங்கள்  இருக்கு , ஆறும்  தனித்தனி  கதைகள். எல்லாமே  ரொமாண்டிக்  சப்ஜெக்ட்ஸ்தான். ஆறுல  ஒரு  கதை  மட்டும்  ஹோமோ  கதை  போல. நமக்கு  அது  அலர்ஜி  என்பதால்  அதை  ஸ்கிப்  பண்ணிட்டு  மீதி  அஞ்சும்  பார்த்தாச்சு . . கமலின்  முன்னாள்  மனைவி  சரிகா  கமல்  நாயகியா  நடிச்ச விவகாரமான  கதை  ஒண்ணு  இதுல  இருக்கு ., கமலைக்கடுப்பேத்தறதுக்காகவே  நடிச்சிருப்பார்  போல , 6  கதைகளும்  சராசரியா  35  நிமிசம்  டூ  40  நிமிசம்  மொத்தம்  கிட்டத்தட்ட  4  மணி  நேரம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ராத் ராணி ( ராத்திரி  ராணி )  = டைட்டிலைப்பார்த்து  தப்பான  முடிவுக்கு  வர  வேணாம் , கண்ணியமான  கதைதான் ஹீரோயின்  லவ்  மேரேஜ்  பண்ணிட்டு  வீட்டை  விட்டு  ஓடி வந்தவர் . லிவிங் டுகெதரா  வாழ்க்கை  நடத்திட்டு  இருக்கறப்போ  புருசன்  காரன்  எந்தச்காரணமுமே  இல்லாம  நாயகியைப்பிரிஞ்சு  வாழறான்,  நாயகி  தனியாப்போராடி  நைட்  கடை  மாதிரி  தள்ளுவண்டிக்கடை  வெச்சு  ஜீவனை  ஓட்றா. ஒரு  கட்ட்த்துல  நாயகன்  சேர்ந்து  வாழ  வரும்போது  நாயகி  என்ன  முடிவு  எடுக்கறா  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


 இதுல  நாயகி  நடிப்பு  அட்டகாசம்.  மொத்தப்படத்தையும் ஒத்தை  ஆள்  தாங்கி  நிற்கறது  சிரமம்  தான். ஸ்க்ரிப்ட்ல  பெருசா  எதுவும்  இல்லை , நாயகி  நடிப்பை  மட்டுமே  நம்பி  இருக்கும்  கதை.  ஆனா  பிரமாதப்படுத்திட்டாப்டி 


படத்துல  பாதி  நேரம்  நாயகி  சைக்கிள்  ஓட்டிட்டே  இருக்காப்டி. ஆனா  அவர்  சிரமப்பட்டு  அந்த  மேடான  சாலையில்  ஏறுவது  நம்ம  மனசுல  பதிஞ்சிடுது. அதைப்பார்க்கும்போதுதான்  நாயகியின்  புருசன்  மேல  நமக்கு  கடுப்பு  ஜாஸ்தி  ஆகுது 


பெற்றோர்கள்  நிச்சயிக்காம  தன்  இஷ்டத்துக்கு  வாழ்க்கையைத்தேடும்  பெண்களுக்கு  இது  ஒரு  படிப்பினைக்கதை 


( அரேஞ்ச்டு  மேரேஜில்  விட்டுட்டுப்போய்ட்டா  நியாயம்  கேட்க  ஆள்  உண்டு . ஆனா  லவ்  மேரேஜ்ல  அவன்  பாட்டுக்கு  விட்டுட்டுப்போய்ட்டா  யார்  போய்க்கேட்பது) 


3   மும்பை  டிராகன் - இதுலயும்  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  லிவ்விங்  டுகெதரா  வாழ்றாங்க, ஆனா  ஹீரோவோட  அம்மாவுக்கு  அது  தெரியாது . மகன்  மேல  ஓவரா  பாசம்  வெச்சிருக்காங்க . சமையல்  கில்லாடி அம்மா , சைனீஸ். ஹீரோவும்  சைனீஷ்,  அம்மா  குடி  இருக்கறது  ஒரு  பக்கம் , மகன்  குடி  இருப்பது  ஒரு பக்கம்  வாரம்  ஒரு  டைம்  அம்மா  வீட்டுக்கு  வந்தா  ஒரு  நாள்  தங்கி  இருந்துட்டு     ரிட்டர்ன்  போறப்ப  4  நாளுக்குத்தேவையான  சாப்பாடு  பார்சல்  போகுது


ஆனா  எல்லாம்  ஃபிரிட்ஜ்ல  வெச்சு  வீணாகுது . மனைவிக்கு  அது  பிடிக்கலை .  ஹீரோ  அம்மா  கிட்டே  மென்னு  முழுங்கறான். அம்மா  பிடிவாதமா  சாப்பாடு  பார்சல்  கொடுத்து  விட்டே  தீருவேன்கறா


 இதுல  அம்மா  மகன்  பாசம்  பிரமாதமா  சொல்லப்பட்டிருக்கு . ஹீரோ  ரேடியோவில்  பாட  ஆசைப்படுவதும்  அந்த  லட்சியத்தில்  ஜெயிப்பதும்  விக்ரமன்  படம்  பார்ப்பது  போல  இருக்கு 


 கவித்துவமான  ஒரு  சீன்  உண்டு . அம்மா  கோவிச்ட்டு  குப்புறப்படுத்திருக்கும்போது  ஹீரோ  முதல்ல  பார்சல்  சாப்பாடு  வேணாம்னு  சொல்லிட்டு  பின்  அம்மா  வின்   அழுகை  கண்டு  சரி 1  நாள்  மட்டும்  என  சொல்ல  அம்மா  பிடிவாதமாய்  3  என  கை  காட்ட   செம  டச்சிங்கான  சீன்

ஹீரோ  ஹீரோயின்  அம்மா  என  மூன்றே  முக்கிய  கேரக்டர்களை  வைத்து  ரசிக்க  வைக்கும்  செண்ட்டிமெண்ட்  கதை 


4 , மை ப்யீட்டிஃபுல் ரிங்க்கிள்ஸ் -  இதுதான்  சரிகா  கமல்  ந்டிச்ச  படம் . 60  வயசான  ஒரு  பொண்ணு  அவங்க  வயசு  உள்ள  பெண்களை  மீட்  பண்றாங்க , அவங்கவங்க  அனுபவம்  பற்றி  ஷேர்  பண்ணிக்கறாங்க . இதுல  டைவர்சி யிம் உண்டு , விடோ  வும்  உண்டு . ஃபேமிலி  லேடியும்  உண்டு . 


நாய்கி  60  வயசு  ஆனவர்னு  தெரிஞ்சும் 30  வயசு  ஆன  நாயகன்  அப்ரோச்  பண்றார். தம்பி  உன்  வயசு  என்ன  ? என்  வயசு  என்ன>  என  கேட்டு  நாயகி  ரிஜெக்ட்  பண்ணிடறா/.


 ஆனா  அதுக்குப்பின்  அவ  மனசுல அப்டி  ஒரு  எண்ணம்  வருது 


 ஃபேண்டசி  ஆஃப்  இலுசினேசன்... அதாவது  க்ற்பனையில்  சுகம்  காண்பது  பற்றி  அவ  யோசிக்கிறா.  இறுதியில்  என்ன  முடிவு  எடுத்தா  என்பது  க்ளைமாக்ஸ்


  கதை  ஒன்லைனைக்கேட்டதும்  கோக்குமாக்கான  கதை  , காட்சிகள்  இருக்குமோ?னு  யாரும்  பயப்[பட  வேண்டாம், டீசண்ட்டான  மேக்கிங்  தான் 


சரிகா  கமல்  தோற்றம் நடிப்பு  இரண்டும் குட் 


ஐ  லவ்  தானே -  டைட்டிலைப்பார்த்து  யாரும்  குழம்ப  வேணாம் . தானே  என்பது  ஒரு  நகரத்தின்  பேரு .படம்  போட்டு  முதல்  20  நிமிசம்  இது  என்ன  மாதிரி  கதைன்னே  புரியாது ., அதுக்குப்பின்   புரிஞ்சிடுமா?னு  கேட்டா  அதுவே  பழகிடும்னு  மொக்கை  போட  வேண்டியதா  இருக்கு 


 ஹீரோயின்  குதிரை  வால்  ஹேர்  ஸ்டைல்னா  எல்லாருக்கும்  பிடிக்கும், ஆனா  குதிரைமாதிரி  முகம்னா  எல்லாருக்கும்  பிடிக்காது .  கேரக்டர்  டிசைனும்  என்னமோ  மாதிரி  இருக்கு .  48  டைம்  ஒரே  கெட்ட  வார்த்தையைப்பேசிட்டு  இருக்கு (  வேவ்வேற  கெட்ட  வார்த்தை  பேசுனாப்பரவால்லியா  மேன் ? ) 


நல்ல  பர்சனாலிட்டியா  வர்ற  ஆட்களை  எல்லாம்  ரிஜெக்ட்  பண்ணிட்டு  ஹீரோயினுக்கு  தம்பி  மாதிரி  இருக்கற  பையனை  செலக்ட்  பண்றதைப்பார்த்தா  சிரிப்பா   இருக்கு . சரி  மாடர்ன்  கேர்ள்ஸ்  இல்லையா? 


 பார்த்த  அஞ்சுல  கொஞ்சம்  போரிங்கா  போனது  இதுதான் .  ரொம்ப  செயற்கையான  இங்க்லிஷ்  டயலாக்ஸ்


 இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனனோட  ரசிகரா  இருப்பாரு  போல  படத்தோட  இயக்குநர்




கட்டிங்  சாய்  - நாயகி  ஒரு  ரைட்டர். நாயகன் அவளை  லவ்  பண்ணி  மேரேஜ்  பண்ணிக்கிட்ட  கணவன்., ஆஃபீஸ்ல  மல்ட்டி  டாஸ்க்கிங்  பர்சன்னு  பேர்  எடுத்தவர் . ஆனா  வீட்ல  எந்த  வேலையும்  செய்யறதில்லை .  மனைவிக்கு  எந்த  உதவியும்  செய்யறதில்லை . இவங்களுக்கு  ஒரு  பொண்ணு 


  லவ்  பண்றப்ப  இருந்த  அன்னியோன்யம்  குதூகலம்  இப்போ  இல்லை 

 நான்  லீனியர்  கட் ல  திரைக்கதை  அவங்க  லவ்  லைஃப்  இப்போதைய  ஃபேமிலி  லைஃப்னுபோய்ட்டு  வருது 


 இதுல  ஹீரோய்ன்  நடிப்பு  அருமை 


  ஓவர்  ஆல்  எல்லாப்படங்களுமே  ஆர்ட்  டைரக்சன் , ஃபோட்டோகிராஃபி  நல்லா  இருந்தது 


சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குறும்படங்களின்  தொகுப்பு  சிலருக்கு  பிடிக்காமல்  இருக்கலாம், ஃபுல்  மீல்ஸ்  தான்  வேணும்  , வெரைட்டி  மீல்ஸ்  வேணாம்கறவங்க  இதை  அவாய்ட்  பண்ணலாம். அடலட்   கண்ட்டெண்  எதுவும்  இல்லை . ஃபேமிலியோட  பார்க்கலாம் . டீசண்ட்  மேக்கிங் தான்  

 ரேட்டிங்  2.75வ் / 5 


 டிஸ்கி  1  -   புதுப்படங்கள்  நிறைய  ரிலீஸ்  ஆகி  இருக்கே |?  பார்க்கலையா?னு  யாரும்  கேட்க  வேணாம். எஸ்  டி  ஆர்  நடிச்சு  ரைட்டர்  ஜெயமோகனின்  ராசியான  கதை  வசனத்தில்  வெளியான  வெந்து  தணிந்தது  காடு   டப்பா  படம்னு  ரிசல்ட்  வந்ததால்  போகலை . பில்லா பாகம் 2  படத்தின்  அட்லீ  ஒர்க்காம் 


 டிஸ்கி 2 - அருண்  விஜய்  நடிச்ச   சினம்  படம்  கார்த்தி  நடிச்ச  நான்  மகான்  அல்ல படத்தின்  பட்டி  டிங்கரிங்  ஒர்க்காம், அதனால  அதுக்கும்  போகல .  காசு  கொடுத்து  தியேட்டர்ல  போய்  மொக்கை  வாங்குவதற்கு  வீட்ல  ஹாயா  ஓ ட்டி டி  ல்  படம்  பார்ப்பது  பர்சுக்கு  நல்லதுனு  தோணுது   

0 comments: