Tuesday, September 20, 2022

கூண்டுக்கிளி (1954) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சைக்கோ இ எம் ஏ த்ரில்லர் )

எங்க அப்பா  தீவிரமான  எம் ஜி ஆர்  ரசிகர். எல்லாப்பட  பாட்டுபுக்கும்  வெச்சிருக்கார். ஈரோடு  மாவட்டம்   புங்கம்பாடி  சாலப்பாளையம்  அவரு  சொந்த  ஊரு. . அங்கே  இருந்து 18 கிமீ  சைக்கிள்ல  போய்  ஈரோட்ல  படம்  பார்ப்பாராம். . எங்க  அம்மா  சிவாஜி  ரசிகை . ஆனா  இவங்க  ரெண்டு பேருமே  இந்தப்படம்  பார்க்கலை. ஏன்னு  தெரியல. பல  எம் ஜி யார்  ரசிகர்களே  தவற  விட்ட  படம்  இது . எனக்கு  இயல்பாவே  ஒரு  ஆர்வம்  வந்தது .  இரு  துருவங்களா  இருந்த  எம்ஜியாரும்  சிவாஜியும்  இணைஞ்சு  நடிச்ச  படம்  எப்படி  இருக்கும்? அது  ஏன்  பிரம்மாண்ட  வெற்றி  பெறலை?  பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  அம்மா  அப்பா  ஏற்பாடு  செஞ்ச  ஒரு  பெண்  பார்க்கும்  படலத்துக்கு  வர்றான். பெண்ணைப்பார்க்கறான். ரொம்பப்பிடிச்சிடுது . அந்தக்காலத்துல  எல்லாம்  பெண்கள்  தலை  நிமிர்ந்து  மாப்ளையைப்பார்க்க  மாட்டாங்களாம். அதனால  நாயகி  வில்லனைப்பார்க்கலை 


 சம்பந்தம்  பேசும்போது  ஒரு  பிரச்சனை , பெண்ணோட  அப்பாவுக்கு  ஏகப்பட்ட  கடன்  இருக்கு ., சீர்  எல்லாம்  எதுவும்  செய்ய  முடியாது . இதனால  வில்லனோட  பெற்றோர்  அந்த  சம்பந்தத்தைக்கைகழுவறாங்க 


 ஆனா  வில்லனுக்கு  அந்தப்பெண்ணோட  ஞாபகம்  தான்


அஞ்சு  ஆறு  வருசங்கள்  கழியுது . அந்தபெண்ணைத்தேடித்தேடி  சலிச்சுப்போன  வில்லன்  மனசு  தாங்காம  தற்கொலை  செஞ்சுக்க  முடிவெடுக்கறான் ., அவன்  ரயில்ல  பாய்ஞ்சு  தற்கொலைக்கு  முயலும்போது  ஹீரோ  வில்லனைக்காப்பாத்தறார்.வில்லனின்  பால்ய  சினேகிதன் 


  வில்லனை  தன்  வீட்டுக்கே  கூட்டிட்டுப்போறார்  ஹீரோ  . ஹீரோவுக்கு   மனைவி  , குழந்தை  இருக்கு.


 ஹீரோவின் மனைவியைப்பார்த்த  வில்லனுக்கு  அதிர்ச்சி , அதுதான்  வில்லன் பெண்  பார்த்த   ஆசை  நாயகி .


ஹீரோ  வீட்டுலயே  வில்லன்  தங்கறான். அக்கம்  பக்கம்  எல்லாம்  ஒரு  மாதிரி  பேச  ஆரம்பிக்கறாங்க .  வில்லனையும்  , ஹீரோயினையும்  இணைச்சு  அபாண்டமா  பேசுன  ஒருத்தனை  ஹீரோ  அடிதடி  பண்ணி  ஜெயிலுக்குப்போறார் . ஆறு  மாசங்கள்  சிறை  தண்டனை 


இந்த  ஆறு  மாச  இடைவெளில  வில்லன்  நாயகியை  அடைய  செஞ்ச  மூயற்சிகளும்  அதன்  பின்  விளைவுகளும்  தான்  கதை 


ஹீரோவா  எம் ஜி ஆர் .  சிரிச்ச  முகமாகவே  படம்  முழுக்க  வருபவர்  க்ளைமாக்சில்  மாறுபட்ட  நடிப்பு 


 வில்லனா  சிவாஜி  நடிக்க  அதிக  வாய்ப்புள்ள  கேரக்டர். ஹீரோவை  விட  அதிக  காட்சிகள்  இவருக்குத்தான்  . சொல்லப்போனா  இவருதான்  ஹீரோ  அவரு  கெஸ்ட்  ரோல்னு  சொல்லலாம் 

ஹீரோயினா  பி எஸ்  சரோஜா  (  கன்னடப்பைங்கிளி  ச்ரோஜா  தேவி  அல்ல ) நல்ல  நடிப்பு . எளிமையான  இவரது  உடை  அலங்காரம்  குட் 


  ரெண்டே  முக்கால்  மணி  நேரப்படத்துல  முக்கால்  மணி  நேரம்  ஹீரோ  வில்லன்  இருவருமே  இல்லை  ., இது  திரைக்கதை  அமைப்பில்  பெரிய  பலவீனம் ரசித்த  வசனங்கள்


1  பொண்ணு  எப்படி ? 


உன்னை  மாதிரியா? அம்மியே  கைலாசம், அடுப்படியே  வைகுண்டம்னு... 


2  அவள்  என்  கண்ணானால், அதனால்  பார்க்கும்  பெண்களெல்லாம்  அவள்  ஆனாள், அவள் என்  காதானாள் , அதனால்  கேட்கும்  குரல்  எல்லாம்  அவள்  குரலானாள்


3  பல்லு  போயும்  உங்களுக்கு  பதட்டம்  போகல


4    அவனுக்கு  இவ  மேல  பைத்தியம்


 ஓஹோ  அவனும்  பைத்திய்ம்  ஆக  ஒரு  பெண் தான்  காரணமா?


5  இயற்கை  மனிதனுக்கு  நண்பன்  மட்டும்  அல்ல  எதிரியும்  கூட   எனக்கே  என்  மீது  நம்பிக்கை  இல்லை


6  மண்ணையும்  பொன்னையும்  வேணும்னா  ஒருவன்  தியாகம்  செய்யலாம், ஆனா  தனக்குப்பிடிச்ச  பெண்ணை  தியாகம்  செய்வது  முடியாத  காரியம் 


7  உன்  கிட்டே  இருந்து  என்னைக்காப்பாற்ற  எனக்கு நானே  காவல்  இருக்கனும்  போல 


8     நீ  நினைக்கற  மாதிரி  பணம்  உன்னோட  அடிமை  அல்ல ,அது தான்  நம்  எல்லோருக்கும்  எஜமான் 

 பாட்டு


1  ராத்திரிக்கு  பூவாவுக்கே  லாட்டரி  வாழ்க்கை  லைட்  எரிய  பணம் தானே  பேட்டரி   செம  ஹிட்டு  பாட்டு 


2 யார்  வந்தென்னை  எதிர்த்தாலும்


3   ஆனந்தமாய்  வாழவேண்டும் 


4  சொல்ல  வல்லாயோ  கிளியே 


5  கொஞ்சும்  கிளியான  பெண்ணை


6  பார்  என்  மகளே  பார் 

7  வாங்க  எல்லோரும்  ஒன்றாகவே 

8  காயாத  கானகத்தே  (  வள்ளி  தெய்வானை  நாடக  பாட்டு )


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில நெருடல்கள்


1  மாஸ்  ஹீரோக்கள்  இருவரை  வெச்சு  படம்  எடுக்கும்போது  இருவருக்கும் தனித்தனி  ஓப்பனிங்  சீன் வெச்சு  இருவரும்  வரும்  காம்போ  ஷாட்  எப்போ  வரும்  என  ரசிகர்களை  ஏங்க   வெச்சு  கிட்டத்தட்ட  இண்டர்வெல்  பிளாக்கில்   இணைக்கனும்,  இணைந்த  கைகள்  படம்  போல, ஆனா  ஓப்பனிங்  ஷாட்லயே  இருவருக்கும்  காம்பினேஷன்  ஷாட்


2  அன்னியப்பெண்களை  யார்  வேணா  எப்படி  வேணா  வர்ணிக்கலாம், ஆனா  தான்  கட்டிக்கப்போற  பொண்ணைப்பற்றி  வில்லன்  ம்த்தவங்க  கிட்டே  வர்ணிப்பது  எப்படி? அதுவும்  உடல்  அழகை  விலாவாரியா... 


3    வில்லனுக்கு  எந்த  வேலை  வெட்டியும்  இல்லை . சும்மாதான்  இருக்கார் .  ஹீரோ  ஜெயிலுக்குப்போன  பின்  ஹீரோவின்  மனைவியை  தன்  பணத்தைக்காட்டி  மயக்க  நினைக்கிறார். அவருக்கு  ஏது  அவ்ளோ  துட்டு ? அவரே  அனாதை .. வெட்டாஃபீஸ்


4  ஹீரோ    கவுரமா  ஒரு  வேலை  பார்த்தவர்  . பல  வருடங்களா  ஒரே  கம்பெனில.  அப்போ  சேமிப்புப்பணம்  கொஞ்சமாவது  இருக்காதா? அல்லது  கம்பெனி  உதவி  செய்யாதா?


5   ஹீரோ  ஜெயிலுக்குப்போன  ஆறு  மாச்த்துல  ஹீரோயின்  ஹீரோவைப்போய்  ஜெயில்ல  ஒரு  டைம்  கூட  பார்க்கவே  இல்லையே? அது ஏன்?  இந்த  மாதிரி  சிரமமா  இருக்கு  , பணத்துக்கு  என்ன  பண்ணலாம்னு  கேட்டிருக்கலாமே? 


6  வில்லன்  பெண்  பார்க்கப்போனப்ப  ஒரே  ஒரு  டைம்  தான்  பெண்ணைப்பார்க்கிறார். எதுவும்  பேசலை  பழக்கம் இல்லை. ஆனா  அஞ்சு  வருசம்  அவரையே  நினைக்கற  அளவுக்கோ  அதுக்குப்பின்  தற்கொலை  முயற்சி  பண்ற  அளவுக்கோ  அவ்ளோ  டீப்பா  அவர்  காதல்  இல்லையே?   என்  பர்சனல்  லைஃப்ல  நான் 18 பெண்களைப்பார்த்தேன். எல்லாப்பெண்களுமே  பிடிச்சுதான்  இருந்த்து  ( ஆண்கள்  எவ்ளோ  தியாகிகள்  பாருங்க ..  எங்க  வாய்ல  இருந்து  எந்தப்பெண்ணையும்  பிடிக்கலைனு  சொல்ல  மாட்டோம் ) 


7   வில்லனுக்கு  வேலை  வாங்கித்தர  கம்பெனியின்  ஒரு சாதாரன  ஸ்டாஃப்  காலில்  ஹீரோ  விழுகிறார்  அப்படியாவது  ஓனரா  இருந்தா  பரவால்ல .  அது  கொஞ்சம்  ஓவரோனு  தோணுச்சு (  எம்  ஜி  ஆர்  ஒருவர்  காலில்  விழுவதா? என்று  எம் ஜி ஆர்  ரசிகன்  பார்வையில்  சொல்லலை ) 


8  ஓபனிங்  சீன்ல  வில்லனை  ஹீரோ  காப்பாத்தும்போது  வில்லன்  ஹீரோவை  கன்னத்தில்  பளார்    குடுக்கறார். அப்போ  ஹீரோ  காட்டும்  அதிர்ச்சி  கேரக்டரையும்  மீறி   எம் ஜி ஆர்  முகத்தில்  தெரியும்  அதிர்ச்சியாவே  தெரியுது 


9  வில்லன்  மனநிலை  பாதிக்கப்பட்டவன்னு  ஹீரோ  ஒரு  சீன்ல  ஹீரோயின்  கிட்டே  சொல்றார்  அப்படி  இருக்க  ஜெயிலுக்குப்போகும்போது  வில்லன்  பொறுப்பில்  தன்   மனைவியை  விட்டு  செல்வது  எப்படி ? 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்தக்கால  ரசிகர்களுக்கு  எந்த  அளவுக்கு  படத்தைப்பிடிக்கும்னு  தெரியல. ரொம்ப  போர்  எல்லாம்  இல்லை  பார்க்கலாம் .  யூ  ட்யூப்ல  கிடைக்குது   ரேட்டிங்  2.5 / 5 

0 comments: