Tuesday, September 13, 2022

தள்ளு மாலா (2022) - THALLUMAALA மலையாளம்) - சினிமா விமர்சனம் ( பிளாக் ஹ்யூமர் ஆக்சன் காமெடி டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


ஹீரோயின்  பேரு  மாலா . ஹீரோ  போற  பக்கம் எல்லாம்  குறுக்கால  வர்றாரு .ஏம்மா ஏகப்பட்ட  ஸ்பேஸ்  அங்கே  கிடக்கு  ஏன்  நான்  போற  பக்கம்  எல்லாம்  வர்றே? தள்ளு  மாலா  அப்டினு  கடுப்பாகறார் . மன்னன்  ரஜினி  - விஜயசாந்தி  போல  ரெண்டு  பேருக்கும்  நடக்கும்   ஈகோ  மோதல் தான்  கதை  அப்டினு  டைட்டில்  பார்த்ததும்  நானா  கதையை  யூகிச்சேன் . ஆனா  அந்தக்கதை  இல்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹம் ஆப் கே  ஹேங்  கோன்   அப்டினு  ஒரு  ஹிந்திப்படம்  மேரேஜ்  ஃபங்க்‌ஷன்  பேக் க்ரவுண்டில்  சொல்லப்பட்ட  ஒரு  லவ்  ஸ்டோரி . மாங்கு  மாங்குனு  ஓடுச்சு அதே  மாதிரி  ஒரு  மேரேஜ்  ஃபங்க்‌ஷனில்  நடக்கும்  அடிதடின் தான்  கதை  அப்டினு  சொன்னா  நம்பவா  போறீங்க ? 


 ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அதகளமா  இருக்கும் . எனக்குத்தெரிஞ்சு தமிழ்  சினிமாவில்  கேப்டன்  பிரபாகரன்  போலீஸ்  ஸ்டேஷன்  ஃபைட்  மாதிரி  கை தட்டல்  வாங்குன  ஆக்சன்  சீக்வன்சை  இது வரை  பார்த்ததில்;லை .  பாட்ஷா  படத்தில்  இடைவேளை  டைமில்  வரும்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்  ஃபைட் . விஸ்வரூபம்  கமல்  ஃபைட் , தூங்காதே  தம்பி  தூங்காதே  படத்தில்  வரும்  பெஞ்ச்  ஃபைட்   இதெல்லாம்   மறக்க  முடியாத  ஃபைட்  சீன்கள் 


 இந்தப்படத்தில்  வரும்  ஒரு  சினிமா  தியேட்டர்  ஃபைட்  இது வரை  இந்திய  சினிமாவில்  காட்டாத  ஆக்சன்  சீக்வன்ஸ் . அதே  போல்  க்ளைமாக்ஸில்  வரும் கல்யாண  மண்டப  ஃபைட்   சீக்வன்ஸ்  இப்ப்டி  எல்லாம்  சீன்  எடுக்க  முடியுமா? என  யோசிக்க  வைத்த  அதகளமான  காட்சிகள் 


 சரி  , கதை  என்ன? விலா வாரியா  பார்ப்போம்


ஓப்பனிங்  சீன்ல  யே  ஹீரோவுக்கு  மேரேஜ்  அந்த  மேரேஜ்  ஃபங்க்‌ஷனில்  ஒரு  தகறாரு  நடக்குது . அதனால  மேரேஜ்  நின்னு  போகுது . எதனால  அந்தத்தகறாரு  நடந்ததுனு  நான்  லீனியர்  முறைல  திரைக்கதை  ஓடுது 


 ஹீரோ  ஒரு  முன்  கோபி . அது  ஏன் எல்லா  ஹீரோவும்  முன்  கோபியாவே  இருக்காங்க? பாதிப்பேராவது  முன்  சத்திய மங்கலமாக  இருக்கலாமில்ல ? 


 அடிக்கடி  யார்  கூடவாவது  சண்டைப்போடறது    அதன்  மூலம்  வீடியோ  வைரல்  ஆகி  ஹிட்  ஆவது இதுதான் ஹீரோ.  ஹீரோயின்  அதுக்கும்  மேல . இன்ஸ்டா , ஃபேஸ் புக் ல  லைக்  வாங்கற  அரைப்பைத்தியம் 


 இந்த  வேலை  வெட்டி  இல்லாத  வெட்டாஃபீசுங்க  ரெண்டு  பேருக்கும்  லவ்  ஆகி  மேரேஜ்  வரை  போகும்போது  அங்கே  நடக்கும்  தக்றாருல  மீண்டுய்  கல்யாணம்  நிக்குதா? திக்குதா?  என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


 ஹீரோவா  டோவினோ தாமஸ் .  பேசும்  படம்  கமல்  மாதிரி  அட்டகாசமான  கெட்டப்ல  சில  சீன்கள்  வர்றார் . சூர்யா  , விக்ரம் , கமல்  எல்லாம்  பல  கெட்டப்  போட  மெனக்கெட்டு  கதையை  யோசிக்கறாங்க ., ஆனா  கதையே  இல்லாத  இந்த  மசாலாப்படத்துல  ஏகப்பட்ட  கெட்டப் ல வர்றார் .   இவரது  ரசிகைகளுக்கு  இந்தப்படம்  சக்கரைப்பொங்கல்  தான் 


ஹீரோயினா  கல்யாணி  பிரியதர்சன்  அழகிய  முகம். கண்ணிய  உடை  , மிதமான  சிரிப்பு  என  மனம்  கவர்கிறார் 


 இருவருக்கும்  இடையே  ஆன  காதல்  காட்சிகள்  நம்பும்படி  இருக்கு 


  கிட்டத்தட்ட  வில்லன்  மாதிரி  ஆனா  வில்லன்  அல்லாத  கதாபாத்திரத்தில்   சைன்  டாம்  சாக்கோ  நடிச்சிருக்கார் ., இவர்  தான்  இஸ்க்  படத்தின்  வில்லன் . அடிபொலி  ஆக்டிங் 


படத்தில் கிட்டத்தட்ட 10  பாட்டு  12  ஃபைட்டு .  கரெக்ட்டா  10  நிமிசத்துக்கு  ஒரு  பாட்டு    12  நிமிசத்துக்கு  ஒரு  ஃபைட்டு  என  லைன்  கட்டி  வருது  ரசித்த  வ்ச்னங்கள் 


1      எதிரியைத்தோற்கடிக்கறவன்  பலசாலியே  இல்லை , தன்னுடைய  கோபத்தை  யார்  அடக்கறாங்களோ  அவன்  தான்  பலசாலி 


2 என்  தங்கச்சியைக்கல்யாணம்  பண்ணிக்குடுனு இவன்  கேட்கறான், ஆனா  எனக்குதான்  தங்கச்சியே  இல்லையே? 


3  இப்போ  நீ  என்ன  நினைக்கறே?


 என்ன  நினைக்கறது ? நம்மைப்பத்தி  நினைக்காதவங்களைப்பற்றி  நாம  ஏன்  நினைக்கனும்? 


4  வாழ்க்கைங்கறது  சாதா  சைக்கிள்  இல்லை , பிரேக்  இல்லாத  சைக்கிள் 


5   சில அடி  வாங்கித்தீர்க்கனும்   சில அடி  கொடுத்துத்தீர்க்கனும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


 கதைனு  ஒண்ணு  இருந்தாதானே  திரைக்கதை  அமைக்கனும்?  லாஜிக்  பார்க்கனும்? தக்காளி  கதையே  இல்லைன்னா  எதுல  போய்  மிஸ்டேக்ஸ்  கண்டுபிடிப்பீங்க>  பார்க்கறேன்  இதுதான்  டைரக்டர்  மைண்ட்  வாய்ஸ் 


 இந்தப்படம்  கேரளாவில்  ரிலீஸ்  ஆகி  மெகா  ஹிட்  ஆகிடுச்சு  நம்ம  ஊர்  உள்ளத்தைஅள்ளித்தா  லெவல்  ஹிட். 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாஸ்  மசாலா  பார்க்கும்  சிரஞ்சீவி  ரசிகர்கள் . வேலை  இல்லாத  வெட்டாஃபீஸ்கள்  தாராளமாப்படம்  பார்க்கலாம் /   ரேட்டிங் 2 / 5  நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது   தல்லுன்னா  மலையாளத்தில்  பைக். ஹீரோ  ஒரு  பைக்   ரேசர். இந்த  அர்த்தத்தை  சொன்ன  கோட்டயம்  குருப்பந்தாரா  குலங்காரா   லக்சி  சேச்சிக்கு  நன்றி  ஆனா  கூகுள்ல  பார்த்தா  செயின் ஆஃப்  ஃபைட்ஸ்னு  அர்த்தம்  போட்டிருக்கு 

0 comments: