Tuesday, September 20, 2022

attention please( 2021) ( மலையாளம்) -- அட்டென்ஷன் ப்ளீஸ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இயக்குநர்  கார்த்திக்  சுப்புராஜ் பீட்சா , இறைவி , ஜிகிர்தண்டா  போன்ற  படங்களில் திரைக்கதையின்  வீரியத்தை  உணர்த்தியவர் . அவரு  ஒரு  மலையாளப்படத்தை  தயாரிக்கிறார்னா  அதனோட  கதை  அமைப்பு  எப்படி  இருக்கும்னு  ஈசியா  கெஸ்  பண்ணிடலாம் 


1964ல்  ரிலீஸ்  ஆன  காதலிக்க  நேரமில்லை  ப்டத்துல  நாகேஷ்    கதை  சொல்லும்  சீன்  செம  ஃபேமஸ். அதுல  விஷூவல்ஸ்  இருக்காது  . கதை  சொல்பவரின்  பில்டப்  கதை  கேட்பவரின்   ரீ  ஆக்சன்  இந்த  ரெண்டும்  பிரமாதமா  இருக்கும் . ஒட்டு  மொத்த  தமிழ்  சினிமாவில்  அதை  மிஞ்சக்கூடிய  சீன்  இதுவரை  வந்ததில்லை .


 ஒரு  முழுப்படத்திலுமே  ஒருவர்   கதை  சொல்றதையே  காட்டிட்டு  இருந்தா  போர்  அடிக்கும் தானே? ஆனா  அடிக்கலை . எப்படி  என்பதுதான்  திரைக்கதை  மேஜிக் 


வ்ழக்கமான  மசாலா  பட்ம்  பார்க்கறவங்க  டூயட்  மொக்கை  காமெடி  டிராக், செண்ட்டிமெண்ட்  சீன்ஸ்  எதிர்பார்க்கறவங்க  ஒன் ஸ் டெப்  பேக்  மேன் 


ஒரே  நைட்டில்  நடக்கும்  கதை , லொக்கேஷன்  மொட்டை  மாடி . மொத்தமே  6  கேரக்டர்கள் . ஒரு  கொலை. பின்  த்ரில்லிங்  மொமெண்ட்ஸ்


\ஸ்[பாய்லர்  அலெர்ட் 


 ஹீரோ  ஒரு  ஸ்டோரி  ரைட்டர் .  ஏகப்பட்ட  கதை  ஸ்டாக்  வெச்சிருக்கார் , அவரும்  அவர்  ஃபிரண்ட்ஸ்  4  பேரும்  அவங்க  ஊர்ல  இருந்து  பட்ட்ணம்  வர்றாங்க , ஒரு  வீட்டில்  தங்கி இருக்காங்க . சினிமா  சான்ஸ்க்காக  வந்தவங்க தான் . மத்தவங்க  எல்லாம்  வாழ்வதாரத்துக்காக   ஆளுக்கு  ஒரு  வேலைக்குப்போறாங்க , ஆனா  ஹீரோ  மட்டும்  எந்த  வேலைக்கும்  போகாம  ரூம்ல  இருந்து  கதை  ரெடி  பண்ணிட்டு  இருக்கார் 


 அவருக்கு  சாப்பாடு  தம்  சரக்கு  எல்லாமே  நண்பர்கள்  மூலமாதான் . ஹீரோ  ஏழை  . பிற்படுத்த[ப்பட்ட  வகுப்பை சேர்ந்தவர் . அதனால  அடிக்கடி  மத்த  ஃபிரண்ட்ஸ்  எல்லாம்  அவரைக்கேவலப்படுத்தறாங்க . நக்கல்  ப்ண்றாங்க 


ஒரு நாள்  நைட்  ஃபிரண்ட்ஸ்  எல்லாரும்  பேசிக்கிட்டு  இருக்கும்போது  ஹீரோவை  கதை  சொல்லச்சொல்றாங்க . ஹீரோ  மைன்ட்  டிஸ்ட்டர்ப்  பண்ற  மாதிரி  ஒரு  கதை  சொல்றார். படம்  போட்டு  முதல்  ஒரு  மணி  நேரம்  இந்தக்கதை  சொல்ற  கதை  தான். 3  வெவ்வேற  கதை  த்ரில்லிங்கா  சொல்றார்


 இப்போ  தான்  இடை வேளை  ட்விஸ்ட்.,  இந்தக்கதை  ஏதோ  ஃபிரெஞ்ச்  படத்துல  இருந்து  உருவுன  மாதிரி  இருக்கே?னு  ஒருத்தன்  நக்கல்  ப்ண்ண  கோபத்துல  ஹீரோ அவனைப்போட்டுத்தள்ளிடறார்


 மத்தவங்க  எல்லாம்  அரண்டு  போய்  இருக்காங்க ., அதுக்குப்பின்னும்  க்தை  சொல்றார் ., அப்போ  ஒரு  ஃபிரண்ட்  தன்  கேர்ள் ஃபிரண்டோட  அங்கே  வர்றார். இதுக்குப்பின்  நடக்கும்  ச்ம்பவங்கள்  தான்  திரைக்கதை 


இதுல  நடிச்சிருக்கற   எல்லாருமே  நமக்குப்புதுமுகங்கள்  அதுல  ஹீரோதான்  மெயின்  . கேமரா  அவரையே  ஃபோகஸ்  பண்ணி  இருக்கு 


 அவர் நடிப்பு  பாடிலேங்க்வேஜ் எல்லாம்  அபாரம் . கதை  சொல்லும்போது  ஒலிக்கும்  பிஜிஎம்  பக்கா 


 ரசித்த  வசனம்


 நான்  சின்னப்பையனா  இருக்கும்போது  டீச்சர்  என்கிட்டே  உன்  பேரென்ன?னு  கேட்டாங்க . ஹரினு  சொன்னேன் , ஹரினா?  ஹரிஜனா? அப்டினு  நக்கல்  பண்னாங்க அதை  என்னால  தாங்கிக்கவே  முடியலை 

லாஜிக்  மிஸ்டேக் 

 நாலு  ஆண்கள்  தடி  மாடு  மாதிரி  இருக்காங்க   அவங்க  எல்லரும்  ஒண்ணு  சேர்ந்து  ஹீரோவை  தாக்க  முடியாதா? அட்லீஸ்ட்  ஒரு  முயற்சி  கூட  பண்ண  மாட்டாங்களா? என்ற  ஒரே  ஒரு  லாஜிக்  மிஸ்டேக்  மட்டும்  இருக்கு


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  போன  வருசம்  கேரளாவில்  சில  குறிப்பிட்ட  தியேட்ட்ர்களில்  மட்டுமே  ரிலீஸ்  ஆச்சு ., அவார்டுக்கு  குறி  வெச்சு  எடுக்கப்பட்ட  படம்  . இப்போ நெட்  ஃபிளிக்ஸ் ல  ரிலீஸ்  ஆகி  இருக்கு கமர்ஷியலான  த்ரில்லர்  படம்  தான்  பார்க்கலாம். ரேட்டிங்  3 / 5 0 comments: