Wednesday, May 06, 2020

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு - பாகம் 2 2/5/2020

குமுதம் ரிப்போர்ட்டர்  வாரம் இருமுறை இதழ்  புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வருகிறது, சில முக்கிய நகரங்களான சென்னை , கோவை , ஈரோடு  மாவட்டங்களில் செவ்வாய் இரவு, வெள்ளி இரவே வந்து விடுகிறது/ அதில் ஆன் லைன் ஆப்பு என்ற பகுதி வரும். ( இப்ப வர்றதில்லை) அன்றாட செய்திகள் , அரசியல் தலைவர்கள் அறிக்கை இவ்ற்றை கலாய்த்து கமெண்ட் போடுவது பரிசீலிக்கப்படும். நிபந்தனைகள் ஜாதி , மத ரீதியான விமர்சனம் தவிர்க்கனும் . உருவ கேலிகள் , நிற பேதம் , தனிநபர் தாக்குதல் , தனிநபர் குடும்ப நபர்களைப்பற்றிய தாக்குதல் தவிர்க்கனும்.

  ட்விட்டர் , ஃபேஸ் புக் போன்றவற்றில் இருந்து அவங்க்ளே எடுத்து பிரசுரிப்பார்கள். த இந்து தமிழ் திசை  நாளிதழில் பஞ்ச்சோந்தி பராக் என்ற பெயரில் தினசரி 4 பஞ்ச்கள் ( ஒரு முதன்மை பஞ்ச் , 3  உதிரி பஞ்ச்கள் ., ஒரு கார்ட்டூன் என வரும். ஒரு பஞ்ச்க்கு 100 ரூபா பரிசு , கார்ட்டூன்க்கு ரூ 250 பரிசு

1  காவிரி நதி நீர் விவகாரம் :விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் -அமைச்சர் டி.ஜெயக்குமார் 

நானும் விவசாயக்குடும்பம்தான்னு முதல்வர் சொன்னாரு, அப்போ அவரோட குடும்ப நலன்கள் பாதுகாக்கப்படுமோ?

=========================================================
சமையல் எரிவாயு விலை 192 ரூபாய் குறைந்து 569ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அப்டியே அந்த பெட்ரோல், டீசல் விலையையும் குறைச்சா தேவலை

==================================================
மகாராஷ்ட்ரா சட்ட மேலவைக்கு மே -21ல் தேர்தல்!


 ஓட்டு போட மட்டும் வெளில வரலாமா?

=================================================


கொரோனாவுக்கு ஊரடங்கை பிரகனப்படுத்தி நாட்டை முடக்கி போடுவது மட்டுமே பிரதமரின் செயலாக உள்ளது -மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன்


கொரோனாவை முடக்கத்தானே  நாட்டை முடக்கறாங்க?நீங்க தான் வேற ஐடியா குடுங்களேன்?


============
5
தமிழகத்தில் கரோனா தொற்றில் சென்னை முதலிடம்.


ஊரடங்கா? போய்யா வெண்ணை என அலட்சியமா இருந்ததால் சென்னைக்கு வந்த வினை

===============
மே 4 முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல் 
.
ஊரடங்கு கடுமையா இருக்கும்போதே  இவ்ளோ பாதிப்பு, தளர்வு பண்ணா என்ன ஆகுமோ?

============================================ 
7
சென்னையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய காவல் ஆய்வாளர்


காக்கிச்சட்டைக்குள் ஒரு மனிதநேயம்

=============================================

  பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி
  
விஐபி -னு ஒரு பயம் கொரோனாவுக்குக்கிடையாது போல
==============================================
9

தனியார் பள்ளிகளில் கரோனா சிகிச்சை அமைக்க எதிர்ப்பு அரசுப்பள்ளின்னா யாரும் எதிர்க்கறதில்லை
====================================================
10  

வங்கித் தலைவர்களுடன் ஆர்பிஐ தலைவர் ஆலோசனை 

மக்களின் சேமிப்புப்பணத்துக்கு வட்டியைக்குறைப்பாங்களோ?

===============================================
11

தொழிலாளர் வர்க்கத்துக்கு துணை நிற்போம் :மம்தா 

கம்யூனிஸ்ட் கூட்டணி அமைப்பார் போல

=============
12
 போலீஸ் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வச்திகளும், ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் வழங்க வேண்டும்.- அன்புமணி

அவங்களுக்கு தொப்பையும் இருக்கனுமா?

================
13
,: ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை, அரசு எடுக்கும் போது, மக்களுக்கு குழப்பம் ஏற்படாதபடி, முன்கூட்டியே, தெளிவான நடைமுறைகளோடு அறிவிக்க வேண்டும்-தினகரன்

ஜனங்க தெளிவா குழம்பிடுவாங்க, கடை வீதியில் கூட்டம் கூடி அலம்பிடுவாங்க 

================ 
14
 கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டது; இனி ஆபத்து அதிகமாகும்.-விஷ்ணுபிரசாத் 

சென்னை ஸ்கோர் பாத்தா ஸ்கோப் இல்ல

==============
15
 கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டதனால் தான் அரசு பள்ளிகள் மட்டும் போதாது என்று, தனியார் பள்ளிகளையும், தயாராக வைத்திருக்க சொல்லி, அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது--விஷ்ணுபிரசாத் 

 அரசு என்ன செஞ்சாலும் அதுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கறது

==================
   16


 'ரேபிட் டெஸ்ட்'  கருவியின் விலை, 245 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. - காங்கிரஸ் தலைவர், அழகிரி

இரட்டை இலை ஆட்சி என்பதால் இரு மடங்கு கூடுதல் விலை போல

===============
17

விவசாயிகள் நலனுக்காக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை தாங்க முடியாத\ ஸ்டாலின், துரைமுருகன், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.'-

 அமைச்சர் ஜெயகுமார்:


தேவையான குழப்பத்தைத்தான் ஏற்படுத்தறோம், அதாவது எதிர்க்கட்சிக்குத்தேவையான....

==================
18
,  போஸ்கோ, ஹூண்டாய் ஆகிய பன்னாட்டு பெரு நிறுவனங்கள், இந்தியாவிற்கு இடம் மாறும் பட்சத்தில், துாத்துக்குடியில், அந்நிறுவனங்களை அமைக்க வேண்டும்.-கனிமொழி:

ஸ்டெர்லைட் ஆலை மாதிரி ஆகிடுமோ?னு பயப்படமாட்டாங்களா?

எதுக்கு? நீங்க எதிர்த்துப்போராடவா? 


================
19

என் மீது,சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய, கவர்னர் கிரண் பேடி முயற்சித்து வருகிறார்,'' = அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்  


உலகமே கொரோனாவை எதிர்த்துப்போராடிட்டு இருக்கு, புதுச்சேரில மட்டும் கவர்னரை எதிர்த்துப்போராடிட்டு இருக்காங்க 


டீச்சர், டீச்சர் கிரண் பேடி அந்த பையனோட பென்சில், ரப்பர், பிடுங்கிட்டான் டீச்சர்

===========
20


 பைலட் தப்பா புரிஞ்சுக்கிட்டு வேகமா ஓட்டிடப்போறாரு 

=================

============= 
21
''மக்கள் நம்பிக்கையை இழந்த, ஸ்டாலின், தான் இருப்பதை காட்டிக் கொள்ள, முதல்வர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் -அமைச்சர் உதயகுமார் 

 மக்கள் நம்பிக்கை எப்போ அவர் மேல இருந்துச்சு? இப்போ இழக்க?


============== &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
22
மத்திய அரசு, தமிழகத்தின் முடிவுக்கேற்ப புதுவையில் ஊரடங்கு தளர்த்தப்படும்!- நாராயணசாமி.

அப்போ இவரா சொந்தமா யோசிச்சு எந்த முடிவும் எடுக்க மாட்டாரா?


===============
23
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களைவிட முன்மாதிரியாக தமிழக முதல்வர் செயல்படுகிறார்!- அமைச்சர் உதயகுமார். 
அதிமுக அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் முன்மாதிரியாக செயல்படுகிறார் அமைச்சர் உதயகுமார். 


===============
24
ஆல்கஹால் நிறைந்த சானிட்டைஸரைக் கொண்டு கைகழுவுவது கரோனா வைரஸை நீக்குவது போல, ஆல்கஹால் நிறைந்த மதுவைக் குடிப்பது தொண்டையில் உள்ள கரோனா வைரஸை நீக்கும்!- ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ பரத் சிங்.


ட்ரம்ப்புக்கே அண்ணனா இருப்பார் போல


================

25 சுமார் 40 விழுக்காடு உணவகங்களை நிரந்தரமாக திறக்க முடியாத சூழல்: இந்திய உணவகங்கள் சங்கம்!


அப்போ அம்மா உணவகங்கள் பிராஞ்ச் அதிகப்படுத்தனும்?


====================

26 புதுச்சேரியில் ரசீதை வாயில் கடித்து மாஸ்க் என ஏமாற்ற முயன்றவருக்கு அபராதம்...!

போலீஸ் உடனே 100 ரூபாய்க்கு ரசீது கிழிச்சுக்குடுத்திருக்குமே?

சயிண்ட்டிஸ்ட்ங்களுக்கே தோணாத ஐடியாக்கள் நம்மாளுங்களுக்குத்தோணுது

=================


27   கோயம்பேட்டில் இருந்து லாரியில் சொந்த ஊர் சென்ற வியாபாரிகள் பலருக்கு கொரோனா தொற்று...!

சொந்த ஊருக்குப்போனா பாதுகாப்புனு நினைச்சிருப்பாங்க, நொந்த நிலை தான் மிச்சம்


================
28 அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர்
அப்போ இனி கம்மியா டெஸ்ட் பண்ணுனா க்ரீன் அல்லது ஆரஞ்ச் ஜோன்ல இருக்கலாமா?

==============

0 comments: