Sunday, May 03, 2020

நாட்டு நடப்பு நையாண்டிச்சிரிப்பு - பாகம் 1 ( 1/5/2020)

குமுதம் ரிப்போர்ட்டர்  வாரம் இருமுறை இதழ்  புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வருகிறது, சில முக்கிய நகரங்களான சென்னை , கோவை , ஈரோடு  மாவட்டங்களில் செவ்வாய் இரவு, வெள்ளி இரவே வந்து விடுகிறது/ அதில் ஆன் லைன் ஆப்பு என்ற பகுதி வரும். ( இப்ப வர்றதில்லை) அன்றாட செய்திகள் , அரசியல் தலைவர்கள் அறிக்கை இவ்ற்றை கலாய்த்து கமெண்ட் போடுவது பரிசீலிக்கப்படும். நிபந்தனைகள் ஜாதி , மத ரீதியான விமர்சனம் தவிர்க்கனும் . உருவ கேலிகள் , நிற பேதம் , தனிநபர் தாக்குதல் , தனிநபர் குடும்ப நபர்களைப்பற்றிய தாக்குதல் தவிர்க்கனும்.

  ட்விட்டர் , ஃபேஸ் புக் போன்றவற்றில் இருந்து அவங்க்ளே எடுத்து பிரசுரிப்பார்கள். த இந்து தமிழ் திசை  நாளிதழில் பஞ்ச்சோந்தி பராக் என்ற பெயரில் தினசரி 4 பஞ்ச்கள் ( ஒரு முதன்மை பஞ்ச் , 3  உதிரி பஞ்ச்கள் ., ஒரு கார்ட்டூன் என வரும். ஒரு பஞ்ச்க்கு 100 ரூபா பரிசு , கார்ட்டூன்க்கு ரூ 250 பரிசு


 நான் எழுதிய சில  பஞ்ச்கள்

1  அம்மா உணவகங்களில் 2¼ கோடி இட்லி விற்பனை.


அம்மா, இட்லி, கோடி , அப்போலோ  சிங்க் ஆகுதில்ல?

=======================

2  வங்கிக்கடன் தவணை காலத்தை நீட்டிக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தண்டம் வேற முட்டுக்கோல் வேற

வங்கிக்கடனே 5000 ஆகத்தான் இருக்கும், அபராதம் 10,000

=========================

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்; மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் 

படி  படியா அரிசி  பருப்பு கொடுத்துட்டு என்ன வேணா செய்ங்க 

======================
ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் சொமேட்டோ, டன்சோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மூலம் நேரடியாக விற்பனை: ஆவின் நிறுவனம்

நமக்கு பால் சப்ளை பண்றது சந்தோஷம், அப்டியே கொரோனாவுக்கு பால் ஊத்திட்டாங்கன்னா பரவால்ல 

 =====================
கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் சீனா பெரும் சாதனை: அதிபர் ஜி ஜின்பிங் 

உலக அளவில் அதிக பலி தந்ததுல வேணா சாதனை பண்ணலாம்
===========================
‘‘நடந்து வர வேண்டாம்; ஏற்பாடு செய்கிறோம்’’ புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும் பாலிசி சரிதான் அதுக்காக நூற்றுக்கணக்கான கிமீ தூரம் நடக்கறது நல்லது இல்ல

====================
7n
 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது-  ராமதாஸ்

எப்படியோ கொரோனா இடம் பெயர்ந்து கூட வராம இருந்தா சரி

===============
வங்கியில் கடன் பெறாத
விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவை அரசு வழங்க வேண்டும்-விருத்தகிரி 

இது நடந்தா ஆளாளுக்கு விவசாயி ஆகிடுவாங்க

================
9

.வங்கியில், கடன் பெற்ற விவசாயிகளுக்கு, அந்த கடனை, அரசே அடைக்க வேண்டும்.-விருத்தகிரி

விவசாயி என்ன பெரிய தொழில் அதிபரா?

==================
 10

  கொரோனா தொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், முன்னுக்கு பின் முரணாக கருத்துகளை தெரிவித்திருந்தார். அதை, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டவர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அது, கண்டிக்கத்தக்கது.-

ks அழகிரி 

பீலா விடறாருன்னு ட்வீட் போட்டுட்டாரோ?
=======================

11 கொரோனா போரில், தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கும் எங்களுக்கு, ஸ்டாலினுக்கு பதில் லாவணி பாட நேரமில்லை-முருகன் 

அப்போ ஸ்டாலின் வெட்டியாதான் இருக்காருன்றீங்களா?

===============
12
. மக்களுக்கு துரோகம்
இழைத்துவிட்டு, நல்லவன் போல, தி.மு.க., வேஷம் போடுவதை, நாடு ஏற்காது-முருகன் 

நாட்டுக்கு ஒரு நல்லவன் கான்செப்ட் ரஜினிக்கே செட் ஆகலை, படம் ஓடலை, இவருக்கு மட்டும் செட் ஆகுமா?

======================
13

சில்லரை வியாபாரத்தை துவக்கவும்அனுமதிக்க வேண்டும்.-வசந்தகுமார் எம்.பி., 

எப்படியோ ஒரு சேஞ்ச் வந்தா சரி

======================
14 


  காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை, ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பதால், தமிழகத்தின் உரிமை வஞ்சிக்கப்பட்டுள்ளது.-துரைமுருகன்

வஞ்சிக்கப்படுவதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டான் தமிழன், பழகிடுச்சு
================
15 
 அ.தி.மு.க., அரசு, அமைதியாகவும், ரகசியமாகவும், காவிரி மேலாண்மை
ஆணையத்தை, மத்திய அரசுக்கு தாரை வார்த்திருக்கிறது. - துரைமுருகன்

ரகசியமா தாரைவார்த்தது இவருக்கு எப்படி தெரிஞ்சுது?
 

===================
16 

: 'அம்மா' உணவகங்களுக்கு, தனி பொறுப்பு அலுவலர்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும்-அமைச்சர் வேலுமணி

திமுக ஆட்களை பணிக்கு அமர்த்துனா கண் ல விளக்கெண்ணெய் ஊத்தி கண்காணிப்பாங்க
===============

17
 உணவகங்களில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை, அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.- அமைச்சர் வேலுமணி 


சோசியல் டிஸ்டென்ஸ் எஜூக்கேசன்

=

==================
==============

அப்போ லாக்டவுனை மீண்டும் நீட்டிப்பாரோ?

===============
19 
சரக்கு லாரிகள், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல, 'பாஸ்' எதுவும் தேவையில்லை  ஓட்டுனர் உரிமத்தை காட்டினாலே போதும்'  மத்திய உள்துறை அமைச்சகம் 

பை”பாஸ்” ரோட்லயே இனி தைரியமா போவாங்க?
============
20

ஒரே நாளில் 6 லட்சம் பேர் உதவி கேட்டதாக தி.மு.க., கூறுவது 'ஜீபூம்பா' வித்தை = அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அப்போ ஸ்டாலின் ஒரு வித்தைக்காரர்னு ஒத்துக்கறீங்க?

=============


21   மதுவை அருந்தினால் தொண்டையில் கொரோனாவை ஒழிக்கலாம்- ராஜஸ்தான் MLA -வின் சர்ச்சை பேச்சு.  


தொண்டை சரி ஆகிடும், ஆனா மண்டை டேமேஜ் ஆகிடும்


நல்ல வேளை ஆசிட் குடிக்க சொல்லலை


 அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கே டஃப் ஃபைட் கொடுப்பர் போல


===================


22 விவசாயிகளே நமது அட்சயப் பாத்திரம்!- மோடி. 

ஆனா அவங்க கையில் இருப்பது பிச்சைப்பாத்திரம்


ஆனால் அரசாங்கத்தின் சலுகை தொழில் அதிபர்களுக்கு மாத்திரம்?

முதலீட்டுக்கே மோசமான தொழில் என்பதே விவசாயிகளின் சாஸ்திரம்?

===================

23   கொரோனா ஒழிப்புப் பணிகளில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.- அமைச்சர் உதயகுமார்.  

சில இடங்களில் கொரோனா ஒளிப்புப்பணிகள் நடக்குதாமே?


===============


24 நீரவ் மோடியை 'நாடு கடத்தும்' விசாரணை மே 11-ம் தேதி தொடங்குகிறது! 

இப்படி ஓவரா லோன் வாங்குனவங்களையெல்லாம் நாடு கடத்திட்டா கடனை எப்படி வசூலிக்க?

====================

25   ப.சிதம்பரத்திடம் ராகுல் டியூஷன் படிக்க வேண்டும்!- பிரகாஷ் ஜவடேகர். 


அரசியல்ல இருக்கறவங்களுக்கு படிப்பு எதுக்கு? படிக்கறவங்களுக்கு அரசியல் எதுக்கு?================

26  கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனாவை முளையிலேயே கிள்ளி எறிய சீனா   தவறிவிட்டது!- ட்ரம்ப். 

சீனா   தவறிவிட்டது!- அப்டினு மீடியாக்கள் நியூஸ் போடாம இருந்தா சரி  


==============27  அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் 

லாக்டவுன்  முடியற டைமாப்பார்த்து ஏன் அதிக சோதனை செய்யறீங்க? டெஸ்ட் அதிகப்படுத்தப்படுவதே பெஸ்ட்


=================


28  நான்காவது காலாண்டில் ₹ 2331 கோடி லாபத்தை ஈட்டிய ஜியோ...! 


ஜி”யோகம்”  இன் கம்


==============

29  ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று..! 

கொரோனா பயம் மிகைப்படுத்தப்பட்டதுனு அசால்ட்டா இருந்திருப்பாரோ 

================


30   கொரோனா பாதித்தவர்களை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி...!

அந்த நாய் மோப்பம் பிடிச்சு கண்டுபிடிக்கறப்ப அதுக்குப்பரவி அது மூலமா மற்றவர்களுக்குபரவாதா? 

=================

31 கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு -

உலகப்புகழ் பெற்ற  பர்பி க்கு  உரிய அங்கீகாரம் லேட்டா கிடைச்சாலும் லேட்டஸ்ட்டாகிடைச்சிருக்கு
0 comments: