Showing posts with label ( நான் ஆணையிட்டால்) Nene Raju Nene Mantri (telugu) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ( நான் ஆணையிட்டால்) Nene Raju Nene Mantri (telugu) - சினிமா விமர்சனம். Show all posts

Friday, September 22, 2017

( நான் ஆணையிட்டால்) Nene Raju Nene Mantri (telugu) - சினிமா விமர்சனம்

Image result for nene raju nene mantri poster

ஹீரோ தன்னோட சொந்த சம்சாரம் மேல அளவு கடந்த பாசம் வெச்சிருக்காரு ஜெ . தீபா மேல மாதவன் இப்போ வெச்சிருக்கற மாதிரி .ஆனா ஊர் தலைவர் பதவி வெறில மாசமா இருந்த ஹீரோயினை தாக்கி இனிமே மாசமே ஆகாதபடி கண்டம் பண்ணிடறாரு ( ரேப் எல்லாம் இல்லை).அப்போதான் ஹீரோ சம்பந்தமே இல்லாம சபதம் போடறாரு, நானும் அரசியலுக்கு வந்து சி எம் ஆவேன்னு ( இப்பொ நம்ம கமல் சொல்ற மாதிரி _)


அவர் சபதத்தில் ஜெயிச்சாரா? தோத்தாரா? என்பது திரைக்கதை

பாகுபலி மெகா ஹிட்டுக்குப்பின் ராணா வுக்கு கிடைச்ச லட்டு சப்ஜெக்ட் , அரசியல் கதை ஆந்திராவில் அள்ளும். இதிலும் வசனங்கள் பட்டாசா இருக்கு , ஹிட்டுதான் . ராணா வின் ஜிம் பாடி , ரகுவரன் ஹைட் எல்லாம் சொல்லவே தேவை இல்லை , ஆனானப்பட்ட த்ரிஷாவையே மயக்கிய ஆகிருதி ஆச்சே. பஞ்ச்டயலாக்  பேசும்போது இவர் முகம்  பாறை போல் இறுகிடுது  , அதுதான் மேனரிசம் போல . ஃபைட் சீன்கள் கம்மிதான், தப்பிச்சோம்


 நாயகியா காஜில் ஜில் அகர் வாவ் வால் .மகதீரா ( மாவீரன்) க்குப்பின் இதில் தான் காஜலுக்கு செம சீன் , மாமியாவுக்குப்பிடிக்காத மருமக நின்னா குத்தம், நடந்தா குத்தம் ஒரு பழமொழி இருக்கு, அது மாதிரி காஜல் என்ன செஞ்சாலும் , அழுதாலும் கேமரா ஆங்கிள் எப்பவும் ஹிப் ஹோப்  தமிழா என இடைப்பிரதேசங்களிலே  பயணம் செய்யுது 


இடைச்செருகல் நாயகியா கேத்ரின் தெரசா. இவரோட கேரக்டரைசேஷன் செம காமெடி . மாதர்  சங்கங்கள் பார்த்தா பொங்கிடுவாங்க . மீடியாவில் பகிரங்க சவால் விடும் இவரை ஹீரோ  ரேப்பி விடுகிறார். அதை தொடர்ந்து இவர் பூ ஒன்று புயலானது ரேஞ்சுக்கு பொங்குவார்னு பார்த்தா இவரும் பதிலுக்கு ஹீரோவை ரெண்டு மூணு டைம் ரேப் பண்ணிடறாரு

 அதை விட பெரிய காமெடி  ஹீரோ ஹீரோயினிடம் கொடுக்கும் சால்ஜாப் விளக்கம் , அவளை நான் வேணும்னு கெடுக்கலை . உன் நல்லதுக்காகத்தான், அரசியல்ல முன்னுக்கு வரத்தான் ( அரசியல்ல முன்னுக்கு வரனும்னா ஃபிகரை ரேப்பனுமா? என்ன கொடுமை சரவணா இது )  என கேவலமாக சொல்வதும் , அதை ஹீரோயின் நம்பி ஏமாறுவதும் 


படத்தின் ஜீவநாடி  உயிர் நாடி  எல்லாம் வசனங்கள் தான், அதில் தான் படம் தப்பிக்குது. நிகழ்கால தமிழக அரசியல் , பீகார் அரசியல் எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சிருக்காங்க , ஆனா நம்மாளுங்களுக்கு உரைக்க வாய்ப்பில்லை 


பின்னணி இசை கொடூரம் ,. சும்மா டம் டம்னு எதுனா சவுண்ட் கொடுத்துட்டே இருக்காங்க, ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் ஓக்கே 


கேத்ரீன் தெரசா   பிக் பாஸ் ரைசா மாதிரியே மிடி போட்டுக்கிட்டு ரம்பா மாதிரி உலா வருது, முடிஞ்ச வரை திறமை காட்டப்பாத்திருக்கு , ஆனா காஜல் காட்டுன திறமையை விட கம்மியா தான் காட்டி இருக்கு , வந்த வரை லாபம்

 நவ்தீப்  தியாகி கேரக்டர். க்ளைமாக்ஸ்  ஷங்கர் ,  முருகதாஸ் படங்களின் பாதிப்பு , க்ளைமாக்ஸ்  அப்ப்ட்டமான ரமணா தழுவல்

Image result for catherine tresa


சபாஷ் இயக்குநர் 


1   காஜல் அகர்வாலுக்கு கேமரா ஆங்கிள் வைத்த ஒளிப்பதிவாளர் அபார ஞானம். அழுகை காட்சியில் கூட சீன் காட்டறார்


2  லைப்ரரி போய் பழமொழிகள் புக்கை எடுத்து ஏகப்பட்ட டயலாக்ஸ் எழுதி இருக்காங்க அதிலும் ஒரு நேர்மை , ஒவ்வொரு பழ்மொழியையும் சொல்லும்போது இது ஒரு பழமொழினு அவங்களே சொல்லிக்கறாங்க ( அந்தக்கால இளைய தளபதி படங்களில் இந்தப்பாடலை பாடுவது உங்கள் அபிமான விஜய்-னு டைட்டில்ல போடுவாங்களே அப்டி ) 


3 கேத்ரீன் தெரசாவை ஹீரோ ரேப் செய்யும் மறைமுக சீன்


Image result for kajal agarwal


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்



1   எவ்ளோ பெரிய ரவுடியாக இருந்தாலும் மாநில முதல்வர் ஆஃபீசுக்கே வந்து சி எம்மையே மிரட்டுவது  ஓவர் , செக்யூரிட்டி ஆபீசர்கள் வாயைப்பிளந்து பார்ப்பதும், சகிக்கலை 


2 மக்கள் வாட்சப்பில்; செய்தி பரப்பினால் தூக்குதண்டனைக்கைதிக்கு விடுதலை கிடைக்குமா?


3 எல்லா கேமராவும் ஆன் ல இருக்கு , உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது என ஹீரோயின் கேத்ரீன் சவால் விட்டதும் ஹீரோ அவரை ரேப்புவது என்ன லாஜிக், அதை விட கேவலம் ரேப்புக்கு  காஜலிடம் அவர் தரும் தன்னிலை விளக்கங்கள்: 

4 கேத்ரீன் கூட மேட்டர் பண்ணதையே ஜீரணிச்ச காஜல் அகர்வால் ஹீரோ சாப்பிட்ட எச்சில் காபியை கேத்ரீன் குடிப்பதை பொறுத்துக்கொள்ளாமல் துடிப்பது இன்னும் கேவலம், ஏம்மா அதான் எல்லாம் முடிச்ட்டாரே?


5  நவ்தீப் தியாக மரணம் சேப்டர் எடுபடலை.  திரைக்கதையில் கவனம் தேவை 

Image result for kajal agarwal

நச் வசனங்கள் 

1 எனக்கு எதுக்குடா இனி நடு ராத்திரில நாதஸ்வரம்? #NeneRajuNeneManthri ( TELUGU)

2 OPS & EPS பற்றி சொல்லு

டேய், அரசியல் வேணாம்

ஓப்பனிங் சீன், எண்ட் சீன் பற்றி கேட்டேன் #NeneRajuNeneManthri ( TELUGU)


3 அடுத்த வேளை சோத்துக்கு வக்கில்லை , ஆனா ஊருக்கு நான் தான் ராஜான்னானாம் #NeneRajuNeneManthri ( TELUGU)


4 எனக்கு வாங்கறதுல சந்தோஷம் , அவளுக்கு கொடுக்கறதுல சந்தோஷம் #NeneRajuNeneManthri ( TELUGU)

5 ஊர்ப்பெரியவா கிட்டேயும் , மதம் பிடிச்ச யானை கிட்டேயும் வம்பு வெச்சுக்கக்கூடாது #NeneRajuNeneManthri ( TELUGU)

6  தன்னோட புத்துல கை வெச்சா எறும்பே கடிக்கும், நான் எதும் செய்ய மாட்டேனா?  #NeneRajuNeneManthri ( TELUGU)

7  வாழ்றதா இருந்தா உங்க கூட வாழனும், சாகறதா இருந்தா உங்களுக்கு  முன்னால  சாகனும்   #NeneRajuNeneManthri ( TELUGU)

8 பவர் இருந்தா நாய் கூட சிங்கம் மாதிரி போஸ் கொடுக்குமாம்   #NeneRajuNeneManthri ( TELUGU)

9 செத்தா சாதிக்க முடியாதுன்னா சாகடிச்சு சாதிக்கனுமா?  #NeneRajuNeneManthri ( TELUGU)

10 கஷ்டப்பட்டது கோவிந்த ராஜனாம், காசு பார்த்தது ரங்கராஜனாம், அப்டி இருக்கு கதை  #NeneRajuNeneManthri ( TELUGU)

Image result for kajal agarwal

11  அடுத்தவன் போட்டிருக்கும் கோட்டு நாம உடுத்த ஆசைப்பட்ட நம்ம கிட்டே இருக்கும் கோவணமும் உருவப்படும் #NeneRajuNeneManthri ( TELUGU)


12  உதட்டை சுட்டுக்கறதுதான் சிகரெட் குடிப்பதற்கான முதல் தகுதி #NeneRajuNeneManthri ( TELUGU)

13 சர்தார் வல்லபாய் படேல் தான் பிரதமர் ஆகி இருக்கனும், ஆனா ஜவஹர்லால் நேரு ஆகிட்டாரு, அதான்யா பாலிடிக்ஸ் #NeneRajuNeneManthri ( TELUGU)

14 சில விஷயங்கள் நடக்காதுன்னு தெரிஞ்சாலும் அதை காதால் கேட்பதும் ஒரு வகை இனிமையே #NeneRajuNeneManthri ( TELUGU)

15 அவனோட வீக்னெஸ் என்ன?ன்னு விசாரிச்சயா?

 சம்சாரம்னா அவனுக்கு உயிரு

நம்ம அண்ணனுக்கு அடுத்தவன் சம்சாரம்னா உயிரு #NeneRajuNeneManthri ( TELUGU)

16 டெக்னாலஜி எல்லார் கிட்டேயும் இருக்கு, ஆனா அதை யூஸ் பண்ணனுமில்ல 

நம்ம டெக்னாலஜி துரு ஏறிக்கிடக்கு  #NeneRajuNeneManthri ( TELUGU)


17 யுத்தத்தை நிறுத்த ரெண்டே வழி
`1 ராஜா வை போட்டுத்தள்ளனும்
2 படைகளை நிர்மூலம் ஆக்கனும்
 எது ஈசி?னு நீயே டிசைட் பண்ணிக்கோ #NeneRajuNeneManthri

18 காசு இருக்கறவன் திருப்பதி போனாலும் அவனுக்கு மொட்டை தான் அடிச்சு விடுவாங்க , கிரீடம் வெச்சு விட மாட்டாங்க  #NeneRajuNeneManthri(TELUGU)


19  என் வாழ்க்கைல குற்ற வாளியும் நான் தான், நீதிபதியும் நான் தான் #NeneRajuNeneManthri(TELUGU)

20 செய்யற ஒவ்வொரு வேலைக்கும் ஒரு கணக்கு இருக்கும், சும்மா எவனும் எதையும் செய்ய மாட்டான்   #NeneRajuNeneManthri(TELUGU)


21  கால்ல முள் குத்தினா முள்ளை தான் எடுக்கனும், வலில அவசரப்பட்டு காலையா எடுக்கறோம்?    #NeneRajuNeneManthri(TELUGU)

22 என் இடது கை என்னை எதிர்த்தா என் வலது கையால அதை வெட்டிடுவேன்   #NeneRajuNeneManthri(TELUGU)

23 இந்த நாட்ல ஊழல் செய்யாத கட்சியே இல்லை , மக்களுக்கும் வேற ஆப்சன் இல்லை, ரெண்டே கட்சி, இதை விட்டா அது, அதை விட்டா இது   #NeneRajuNeneManthri

24 நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் பின்னாடியும் அந்தந்த கட்சியின் சுயநல ஓட்டரசியல் இருக்கு #NeneRajuNeneManthri(TELUGU)

25 அரசியல் சதுரங்கத்தில் மேலே போக தேவை  உயரம் இல்லை , மூளை தான், குயுக்தியா யோசிப்பவன் ஜெயிப்பான்  #NeneRajuNeneManthri(TELUGU)
Image result for catherine tresa


சி.பி. கமெண்ட் - நான் ஆணையிட்டால் -NeneRajuNeneManthri(TELUGU)- தமிழக அரசியல் சூழலை நக்கலடிக்கும் தெலுங்குப்படம்,  காஜல் அகர்வாவ்!செம சீன் - ரேட்டிங் 2.5 / 5