ஜெயிலர் 2 படத்தின் கதை ,திரைக்கதை+ சில சுவராஸ்ய தகவல்கள்
ஜெயிலர் முதல் பாகத்தில் மெயின் வில்லன் வினாயகம் க்ளைமாக்சில் நாயகனிடம் சொல்வார்.என்னை நீ அழிச்சுடலாம்.ஆனா எனக்கும் மேலே பெரிய நெட் ஒர்க் இருக்கு.அவங்க உன்னை சும்மா விட மாட்டாங்க. என்பார்.
ஜெயிலர் பாகம் 1 முடிந்த பின் 3 மாதங்கள் கழித்து ஜெயிலர் பாகம் 2 கதை தொடங்குகிறது.
முதல் பாக வில்லன் வினாயகனின். சகோதரன் தான் இரண்டாம் பாகத்தில் வரும் சுராஜ் வெஞ்சாரமூடு.3 மாதங்களாக ஜெயிலர் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறார்.
காமெடியன் நமோ நாராயணன் ஒரு லோக்கல் அரசியல்வாதி.வைத்து வேட்டு பில்டப் பார்ட்டி.அவரிடம் நாயகன் கார் டிரைவராக வேலை பார்க்கிறார்.
நாயகன் ஒரு முன்னாள் ஜெயிலர் என்பதோ ,அவருக்க்ய்ப்பின்னணியில் பெரிய பெரிய ஆட்களின் சப்போர்ட் இருக்கும் என்பதோ காமெடியனுக்குத்தெரியாது.
வில்லன் சுராஜ் வெஞ்சார மூடுவின் பாஸ் தான் எஸ் ஜே சூர்யா.அவரது மனைவி தான் வில்லி வித்யா பாலன்.
இருவர் கழுத்திலும். ஒரே மாதிரி செயின் டாலர் இருக்கும்.அது போக அந்த டாலர் அடையாளத்தை வில்லி கழுத்தில் பச்சை குத்தி இருப்பார்.
முதல் பாகத்தில் நாயகனுடன் சுற்றிக்கொண்டிருந்த யோகி பாபுவை வில்லன் சுராஜ் சித் ரவதை செய்து நாயகனின் இருப்பிடத்தை ப்பற்றிக்கேட்க அவர் சொல்லவில்லை.
நாயகன் தன் குடும்பத்தை பத்திரமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு கேரளா ,தமிழக பார்டரில் வசிக்கிறார்.
பாட்சா வில் ஆட்டோ டிரைவராக இடை வேளை வரை வருவது போல கார் டிரைவராக வருகிறார்.
இடைவேளைக்குப்பின் சிலை திருட்டு நெட் ஒர்க்கின் முக்கியப்புள்ளிகளை கோவா வர வைக்கிறார் நாயகன்.அங்கே ஒரு பில்டிங்கில் மீட்டிங்க் நடப்பதாக ஏற்பாடு செய்து விட்டு அனைத்து வில்லன்களும் அங்கே வந்ததும் பாம் வைத்துத்தகர்க்கிறார்.
முதல் பாதி முழுக்க வரும் வில்லன் சுராஜ் வெஞ்சாரமூடு.இண்ட்டர்வெல் பிளாக்கில் அறிமுகமாகி கடைசி வரை வரும் வில்லன்கள் எஸ் ஜே சூர்யாவும் ,வில்லி வித்யா பாலனுன்.
கன்னடா சிவராஜ் குமாரும் ,கேரளா மோகன் லாலும் நாயகனுக்கு உதவி செய்யும் கேரக்டரில் ஒரு சீன் மட்டும் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்.
ஹிருத்திக் ரோசன் முக்கியமான ரோலில் வருகிறார்.அவர் எஸ் ஜே சூர்யாவுக்கு பாஸ் ஆக இருக்கலாம்.
விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் வருகிறார்.ஆனால் ட்ரெய்லரில் அவரைக்காட்டவில்லை.ரோலக்ஸ் சூர்யா மாதிரி 3 ம் பாகத்துக்கான வில்லன் ரோலுக்கான லீடாகவும் இருக்கலாம்.
சில சுவராஸ்யத்தகவல்கள்
1 அமெரிக்கா மற்றும் கனடா வில் பிரீமியர் ஷோ டிக்கெட் புக்கிங்க் 5 லட்சம் டாலர் வசூலைத்தாண்டி விட்டது
2 உலகம் முழுக்க முதல் நாள் வசூல் மட்டும் 150 கோடி வசூலாகும் என கணிக்கிறார்கள்
3 படம் ரிலீஸ் ஆகும் முன்பே 500 கோடி வசூல் அதாவது பட்ஜெட்டை விட அதிகம் முதல் எடுத்தாகி விட்டது.
4 ஓ டி டி நிறுவனங்கள் இப்போதெல்லாம் குறைந்த ரேட்டுக்குக்கேட்கும் காலம்.ஆனால் ஜெயிலர் 2 அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக 105 கோடி பேசப்பட்டு இருக்கிறது
,5 கேரளாவில் 800 + திரைகளில் ஒரு தமிழ்ப்படம் வருவது இதுவே முதல் முறை
6 சென்சார் சான்றிதழ் 16+ அதாவது யு/ஏ கிடைத்திருக்கிறது.டைனிங் டேபிள் மேல் வெட்டப்பட்ட மனிதத்தலை வைக்கப்படும் சீன் இருக்கிறது.அந்த சீன ரிமூவ் செய்தால். யு/ஏ. அல்லது முடியாது எனில் ஏ சான்றிதழ் என்றார்களாம் சென்சார் தரப்பு.
7 ஜெயிலர் 650 கோடி வசூலித்தது என்பதால் ஜெயிலர்2. 1000 கோடி லட்சியம் 750 கோடி நிச்சயம் என்கிறார்கள்
8 படத்தின் ரன்னிங்க் டைம். 165 நிமிடங்கள்
9 முதல்வர் விஜயை மறைமுகமாகத்தாக்கும் பொலிடிக்கல் அட்டாக் டயலாக்ஸ் இருக்கலாம் என்கிறார்கள்.
10 படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்தது ஒரு பெரிய பாசிட்டிவ்.காரணம் கூலி படம் ஏ என்பதால் ரஜினியின் டீன் ஏஜ் ரசிகர்களால் திரையரங்கில் பார்க்க முடியவில்லை.வசூலும் குறைந்தது.

