Tuesday, September 01, 2026

ஹாய்(2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி பேமிலி மெலோ டிராமா)






டாடா(2023) என்ற ஹிட் படத்தில் நடித்த கவின் அதற்குப்பின் ஸ்டார்(2024),பிளடி பெக்கர்(2024),கிஸ்(2025),மாஸ்க்(2025) ஆகிய நான்கு தோல்விப்படங்களில் நடித்தார்.மூன்று வருடங்களுக்குப்பின் அவருக்கு ஒரு ஹிட் படம்.

மனசங்கர வரப்பிரசாத்காரு(2026) என்ற பிளாக்பஸ்டர் படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா டாக்சிக் (2026) என்ற டப்பாப்படத்தில் நடித்தார்.மீண்டும் தன் இமேஜைத்தக்க வைக்க அவர் எடுத்திருக்கும்  சொந்தப்படம் இது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ,பெத்லேகம் குடும்ப யூனிட் ஆகிய இரு ஏஜ் கேப் லவ் ஸ்டோரி மூவிகள் ஹிட்டானபின் இப்போது லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் படம் இது.40 வயதான நயன் தாரா,36 வயதான கவின் அக்கா,தம்பி மாதிரி இருக்கிறார்களே?ஜோடியாக செட் ஆகுமா?என்று பலரையும் முணுமுணுக்க வைத்த படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப்பார்ப்போம்.

ஸ்பாய்லர் அலெர்ட்

கோவையைச்சேர்ந்த நாயகன் தன் சொந்த அத்தை பெண்ணிடம் ஐ லவ் யூ சொல்கிறான்.ஆனால் அவள் அதை ஏற்கவில்லை.அவனைக்கழுவிக்கழுவி ஊத்தித்திட்டி அனுப்பி விடுகிறாள்.சின்ன வயதிலிருந்தே நாயகனுக்கு எந்தப்பெண்ணும் செட் ஆகவில்லை.ஸ்கூல் லைப்,காலேஜ் லைப் எதிலும் காதலி கிடைக்கவில்லை.30 வயது ஆகியும் தனக்குக்காதலி கிடைக்காததால் விரக்தியான நாயகன் ஒரு லெட்டர் எழுதி வைத்து விட்டு ஊரை விட்டு ஓடுகிறான்.

பொள்ளாச்சியில் இருக்கும்
நாயகியின் அப்பா ஒரு சரக்கு சங்கரலிங்கம்.நாயகியின் அம்மா நாயகி சிறுமியாக இருக்கும்போதே வேறொருவருடன் சென்று விட்டாள்.இப்போது நாயகிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.அது நாயகிக்குப்பிடிக்கவில்லை.ஊரை விட்டு ஓடி விடுகிறார்.

இப்படி வெவ்வேறு காரணங்களுக்காக ஊரை விட்டு ஓடி வந்த நாயகன்,நாயகி இருவரும்  சென்னையில் சந்திக்கிறார்கள் முதல் பார்வையிலேயே நாயகனுக்கு நாயகியைப்பிடித்து விடுகிறது.ஆனால்  காதலை சொல்லவில்லை.

இருவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு போட்டோ வெளியாக அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து இரு தரப்புக்குடும்பமும் சென்னை வருகிறது.

நாயகியைக்காப்பாற்ற நாயகன் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்,அவள் வயிற்றில் என் வாரிசு வளர்கிறது எனப்பொய் சொல்லி விடுகிறான்.திருமணத்திலிருந்து தப்பிக்க நாயகியும் அதை ஆமோதிக்கிறார்.

இதற்குப்பின் என்ன நிகழ்ந்தது?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக கவின்  நன்றாக நடித்திருக்கிறார்.ஆனால் சில சீன்களில் சதி லீலாவதி கமல் மாதிரி ,அசோக் செல்வன் மாதிரி , விஜய் மாதிரி ஸ்டைலில் எதற்கு நடிக்கிறார்?என்பது தெரியவில்லை.நளினிகாந்த் ,யோகராஜ் இருவரும் காபிகேட் ஆக்டர்ஸ் என்பதால் தான் காணாமல் போனார்கள் என்பதை  உணர்ந்தால் நல்லது.

நாயகியாக நயன் தாரா கிராமத்து கெட்டப்பில் எடுபடவில்லை.மாடர்ன் டிரசில் கலக்குகிறார்.பல இடங்களில் நல்ல முக பாவனை.சில இடங்களில் மட்டும் நான் தான் புரொடியூசர் என்ற கெத்து  தெரிகிறது.

நாயகனின் அம்மா,அப்பாவாக ராதிகா ,கே பாக்யராஜ் நடித்திருக்கிறார்கள்.தூக்குப்போட முயற்சிக்கும் மகனிடம்  அப்பாவியாக இந்த நேரத்தில் எதுக்கு Fan க்ளீன் பண்றே?என அப்பாவித்தனமாகக்கேட்பது வெடிச்சிரிப்பு.

அமரர் கே பாக்யராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார்.அவரது அக்மார்க் டபுள் மீனிங்க் காமெடியும் உண்டு.சில இடங்களில் அவரது கவுண்ட்டர் ரசிக்க வைக்கிறது.

நாயகியின் அப்பாவாக பிரபு நல்ல குணச்சித்திர நடிப்பு.உயிருள்ளவரை உஷா என அவர் சொல்வது உருக்கம்

.சத்யன் முதல் பாதியில் காமெடியனாகவும்,கடைசியில் வில்லனாகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

அதே போல் ஆதித்யா  டிவி புகழ் கதிர் ,விஜய் டி வி புகழ் குரேஷி இருவரும் செய்யும் காமெடியும் சிரிக்க வைக்கின்றன.

ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.பின்னணி இசை  கச்சிதம்.ரசகுல்லா பாட்டு ஹிட்டு.

லியோன் பிரிட்டோ + ராஜேஷ் ஷூக்லா ஒளிப்பதிவு கண்களுக்குக்குளிர்ச்சி.நயன்தாரா வை இளமையாகக்காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.


 பல படங்களில் பாடலாசிரியராக இருந்த விஷ்ணு எடவன் அறிமுக இயக்குநராக பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

வன்முறை வெறியர் லோகேஷ் கனகராஜின் அசிஸ்டெண்ட் ஆக இருந்தும் குடும்பப்பாங்கான படம் தர வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்புக்காகவே பாராட்டலாம்






சபாஷ் டைரக்டர்


1 பாத்ரூமில் நாயகி நாயகனிடம் பேசும் வசனம்,பாலத்தில் நாயகன் பூ தரும் இடம் இந்த இரண்டு இடங்களிலும் டைரக்சன் அருமை.

,2 இண்ட்டர்வெல் பிளாக் சீன் செமக்காமெடி.ஆனால் ட்ரெய்லர் கட்டில் அந்த சீன் வந்து விட்டதால் வெடிச்சிரிப்பு மிஸ் ஆகி விட்டது.

3. அம்மா,மகன் செண்ட்டிமெண்ட்  காட்சிகள் ஒர்க் அவுட் ஆகிறது.



ரசித்த வசனங்கள்




1 ஆணின் வாழ்க்கையில் 3 ரகங்கள்

1 காதலிச்சுக்கல்யாணம் பண்றது.
2 கல்யாணம் பண்ணிட்டுக்காதலிக்கறது.
3 காதலிக்கவும் முடியாம ,கல்யாணம் பண்ணவும் வழியில்லாம  வேஸ்ட் லக்கேஜா சுத்திட்டு இருப்பது.

2. நாட்ல எவ்ளோ பிரச்சனைகள் இருக்கு ? நீ என்னடான்னா ஒரு பொண்ணு உன்னை லவ் பண்ணலைன்னு சாகப்போறேங்கற.உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா?

3 என்னை விட கண்ணாடி மட்டும் தான் உனக்கு சிறுசு,மூத்த சமாச்சாரம் எல்லாம் பெருசு.

4 எப்பேர்ப்பட்ட பொண்ணா அவ இ

ருந்தாலும் நீ எடுக்கற ரிஸ்க் ரொம்பப்பெருசு.

5 இதுவரை ஈசியா தோத்துட்டேன் ,இனி உசுரைக்குடுத்தாவது ஜெயிப்பேன்.

6 அவளை மாதிரி இன்னொருத்தி கிடைக்க மாட்டா
7 எங்கப்பா என்னையும் அடிப்பாரு,என்னை அடிக்க வர்றவனையும் அடிப்பாரு.





லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 லவ் சப்ஜெக்ட்டில் ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட் ரி ரொம்ப முக்கியம்.நாயகி தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் ஒரு கம்பெனி எம் டி யிடம் மரியாதையாக நடந்து கொள்ளும்  ஊழியர் போலத்தான் நாயகன் கவின் நடந்து கொள்கிறார்.இது மிகப்பெரிய பின்னடைவு.நாயகன்,நாயகி இருவரும் தனித்தனியக
 நன்றாக நடித்திருந்தாலும் ஒரே பிரேமில் வரும்போது லவ் ஜோடி மாதிரியே தெரியவில்லை.

2 நாயகி நாயகன் மீது காதல் கொள்ள ஒரு நல்ல சீக்வன்சே உருவாக்கலை.ஏதோ நன்றி உணர்ச்சிக்காக லவ் பண்ணுவது போல் தான் காட்டுகிறார்கள்.

3
நாயகனின்  அப்பா  மகனுக்காக ரூ 57 லட்சம் ரூபாயை உடனே எடுத்துக்கொடுப்பது எல்லாம் ஓவர்.

90S  கிட்ஸ் ,80S கிட்ஸ்  க்கு மிகவும் பழக்கமான கதைக்களம் இது.பல படங்கள் இதே பார்மட்டில் வந்திருக்கின்றன.

5 சீரியசான ஒரு காட்சியில் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்க அந்தக்கேரக்டரில் சுஹாசினியைப்பார்த்தது தான் காரணம். தவிர்த்திருக்கலாம்.

,6 ஓடிப்போன நாயகியின் அம்மாவைத்தேடி நாயகன் கேரளா போவது ரொம்பவே நீளம்.அந்த போர்ஷனை டிரிம் பண்ணி இருக்கலாம்.

7 பின் பாதி படம் டி வி சீரியல் மாதிரி  இழுக்கிறது.நாடகத்தனம்

8 நாயகனும் ,நாயகியும் பேசிக்கொண்டே வரும் காட்சி விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் வந்த சீன நினைவு படுத்துகிறது.அதிலும் நாயகி நயன் தாரா தான்.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 16+ (  டபுள் மீனிங் டயலாக்ஸ்)



சிபி எஸ் பைனல் கமெண்ட் - பார்த்துப்பழக்கப்பட்ட காதல் கதை என்றாலும் போர் அடிக்காமல் ,காமெடியாகக்கொண்டு போன விதம் குட்.ரேட்டிங்க் 2.5/5 .விகடன் மார்க் யூகம் 42 .குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே.