சூர்யா ,விஷால் இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் இது ஒரு ஆரோக்யமான போட்டியாகவே இருக்கும்.14/8/2026 வெள்ளி அன்று. இரு படங்களும் மோதிக்கொள்கின்றன.இரு படங்களின் ட்ரெய்லரை வைத்து இரு படங்களின் கதை,திரைக்கதை என்னவாக இருக்கும்?எது ஜெயிக்கும் ?என்ற யூகப்பார்வையே இந்தக்கட்டுரை.
கறுப்பு என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்குப்பின் வர இருக்கும் சூர்யா படம் என்பதால் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்க்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் இருக்கும்.அதே போல் மார்க் ஆண்ட்டனி(2023),ரத்னம்(2024), மதகஜராஜா(2025) என ஹாட்ரிக் ஹிட் அடித்த விஷால் படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.படத்தின் கதை,திரைக்கதை ,இயக்கம் எல்லாம் விஷால் தான் என்பதாலும் ட்ரெய்லரில் மார்க் ஆண்ட்டனி படத்தின் சாயல் இருப்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.சத்யராஜ்,பானுப்ரி யா நடிப்பில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1992ல் வெளியான மகுடம் கதைக்கும் ,இந்தக்கதைக்கும் சம்பந்தம் இல்லை.
1. விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்
லக்கி பாஸ்கர் என்ற பிரம்மாண்டமான ஹெய்ஸ்ட் திரில்லர் ஹிட் படத்தைக்கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேமிலி எண்ட்டர்டெய்னர் இது.
ட்ரெய்லரை வைத்து யூகித்த கதை இதுதான்.
நாயகன் துப்பாக்கி சுடுவதில் கோல்டு மெடலிஸ்ட்.சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து வெல்பவன்.அவரது நோக்கம் ,லட்சியம் எல்லாமே துப்பாக்கி சுடுவதில் தான்.நாயகனின் அப்பா வால் நாயகன் சின்ன வயதிலிருந்தே மிகவும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவர் .வாழ்க்கையில் வெற்றி அடைவது மட்டும் தான் முக்கியம் என்று அட்வைஸ் செய்து அப்பா வளர்க்கிறார்
இப்போது நாயகனுக்கு 40 வயது.பிளாஸ்பேக்கில் அவருக்கு ஒரு மனைவி இருந்தாள்.இறந்து விட்டாள்.ஒரு கைக்குழந்தை இருக்கிறது.அதற்கு மிகப்பெரிய மெடிக்கல் பிராப்ளம். இருக்கிறது.குழந்தையை கவனித்துக்கொள்ளும் கேர் டேக்கராக நாயகி வருகிறாள்.
நாயகியின் கேரக்டர் நாயகனின் கேரக்டருக்கு நேர் எதிராக இருக்கிறது.வாழ்க்கையை எஞ்சாய் செய்யனும் ,ஜாலியாய் இருக்கனும். பீலிங்க்சை வெளிக்காட்டனும்,சுதந்திரப்பறவை யாய். சுத்தனும்.
நாயகியின் இந்த விசித்திரமான கேரக்டர் நாயகனுக்குப்புதுசு.நாயகி ஒருதகலையாய் நாயகனைக்காதலிக்கிறாள்.நாயகனுக் கு உள்ளூர விருப்பம் இருந்தாலும் எரிந்து விழுகிறான்.நாயகியின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா?இல்லையா? என்பது தான் மீதித்திரைக்கதை.
கே பாக்யராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு + அகத்தியன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த விடுகதை. ஆகிய இரு படங்களின் கலவைதான் இந்தப்படம்.
முந்தானை முடிச்சு படத்தில் நாயகன் ஒரு கைக்குழந்தையுடன் இருப்பார்.நாயகி வம்படியாய் காதலிப்பாள்.விடுகதை படத்தில் அப்பா வயதுள்ள நாயகனை நாயகி காதலிப்பாள்.இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்தால் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் கதை ரெடி.
சூர்யாவின் கைக்குழந்தையைப்பார்க்கும்போது நாகார்ஜூனா-அமலா நடித்த சுட்டிக்குழந்தை படத்தில் வரும் குழந்தை நினைவு வருகிறது.ஆனால் அந்தக்கதை. வேற கதை.ஹோம் அலோன் ஹாலிவுட் படத்தின் அன் அபிஷியல் ரீமேக் அது.குழந்தை செய்யும் சுட்டித்தனங்கள்,அதைப்பிடிக்க வரும் திருடன் படும் பாடுகள் தான் கதை.
இதில் மமிதா பைஜூவின் சுட்டித்தனமான நடிப்பு ,க்யூட்டான முக பாவனைகள் பிரமாதம்.சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஜெனிலியா கேரக்டர் போல துறு துறுப்பெண்.இவரது நடிப்பு நாயகனின் நடிப்புக்கு இணையாக இருக்கும்
நாயகனின் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார்.நாயகனின் முதல் மனைவியாக ரவீனா டாண்டன் நடித்திருக்கலாம்.
ஜி வி பிரகாஷ் குமார்தான் இசை.பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார்.
காமெடிக்கு யோகிபாபு ,குணச்சித்திர நடிப்புக்கு நாசர் மற்றும் ஒரு நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது.
ரசித்த வசனங்கள்
1 நம்ம பணம் ,ஸ்டேட்டஸ் எல்லாம் நமக்கு கவுரவமா இருக்கனும்,கர்வமா இருக்கக்கூடாது.
2 திருட்டுத்தனமா அன்பு காட்டுவார்,அது எனக்கு வேணும்னு தோணுச்சு.
3 ஒரு பையனைப்பத்தி நினைக்கும்போதே கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் வரும்,தெரியுமா?
4 ரொம்ப ஒட்டாத,ஒட்டாதன்னு சொன்னேன்,இப்போப்பாரு ,எவ்ளோ கஷ்டமா இருக்குன்னு...
5 மனுசங்க பிரியறது சண்டை போடறதால் இல்லைங்க,சண்டைக்குப்பின் எப்படிப்பேசறதுன்னு தெரியாததால்தான்.
7 ஜெயிக்கறவரைக்கும் நிற்கக்கூடாது,ஜெயிச்சபின் அதைப்பத்தியே பேசிட்டு இருக்கக்கூடாது.
8 இப்போ எதுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி பிஹேவ் பண்றே?
மகுடம்
விஷால் முதல் முதலாக இயக்குநராகக்களம் இறங்கி இருக்கிறார்.ட்ரெய்லரில் மூன்று விதமான கெட்டப்களில் வருவதால் மூன்று வேடங்களில் நடித்திருப்பாரோ?என பலரும் யூகித்த வேளையில் அது டபுள் ஆக்சன் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.அப்பா,மகன் என இரு கேரக்டர் தான்.அப்பாவின் பிளாஸ்பேக்கில் இளமைத்தோற்றம்.ஆக மொத்தம் 3 கெட்டப் ,2 வேடங்கள்.
நாயகன் ஒரு மெடிக்கல் ரெப்.நாயகனின் அப்பா மிகப்பெரிய டாண்..அப்பா கேரக்டருக்கு ஜோடியாக அஞ்சலி.இவருக்கு ஒரு ஆக்சன் சீக்வன்ஸ் உண்டு.ஒரு செமகுத்தாட்டம் கூட இருக்கிறது.
நாயகனின் அப்பா பெரிய கேங்க்ஸ்டர்.ஒரு துறைமுகத்தையே கட்டி ஆள்பவர்.பெயர் லிங்கா.அப்பா கேரக்டருக்கு. ஒரு பழைய ரீமிக்ஸ் சாங்க் இருக்கிறது.
லோகேஷ் கனஜராஜ் தான் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தார்.பழைய ஹிட் பாட்டைப்பின்னணியில் ஓடவிட்டு பைட் சீக்வன்சை அமைப்பது.
லிங்கா கேரக்டருக்கு ஒரு வில்லத்தனமான ஓப்பனிங்க் சீன் இருக்கிறது. எரியும் பிணத்தில் இருக்கும் தீயிலிருந்து சிகரெட்டுக்கு நெருப்பு எடுப்பது.இது புதிய பாதை படத்தில் ஆர் பார்த்திபன் ஏற்கனவே செய்தது தான் என்றாலும் இதில் இன்னமும் சுவராஸ்யப்படுத்தி இருந்தார்கள்.
மகன் கேரக்டருக்கு ஜோடி துஷாரா.
அப்பா கேரக்டருடன் ஒரு நண்பர் பிளாஸ்பேக்கில் இருக்கிறார்.ஆனால் நிகழ்காலத்தில் வயதான அப்பா கேரக்டருடன் நண்பர் இல்லை.அப்போ பாட்ஷா படத்தில் வருவது போல நண்பரைக்கொன்றவரைப்பழி வாங்கும் கதையாக இருக்கலாம்.
சூப்பர் குட் பிலிம்சின் 99 வது படம் இது.
ரசித்த வசனங்கள்
1 கடல்ல வாழறவன் வேற,அந்தக்கடலையே ஆள்றவன் வேற.
2 லிங்கா முடிவெடுத்துட்டா அது முடிஞ்சிடுச்சுனு அர்த்தம்.
3 அந்தப்பையன் மீது கை வெச்சுடலையே?
4 அந்த சரக்கை இறக்க மாட்டேன்,வேற யாரையும் இறக்கவும் விட மாட்டேன்.
இப்போது க்ளைமாக்ஸ்க்கு வருவோம்.விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பேமிலி எண்ட்டர்டெய்னர் படமாக இருக்கும்,மகுடம் ஆக்சன் மசாலாவாக இருக்கும்.48 மணி நேரம் காத்திருக்கத்தான் வேண்டும்.ஒருவேளை இரண்டுமே ஹிட் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.என் கணிப்பு சூர்யா முந்திவிடுவார் என்பது.

