Wednesday, July 31, 2013

மூடு அவுட் VS மூடு இன்

1. பவானி கூடுதுறைக்கும் இப்போ டோல்கேட் போட்டாச்சு.50,ரூபா டிக்கெட் ஒரு காருக்கு # நல்லா கொள்ளை அடிங்கடா



-------------------------


2. காசு வாங்கிட்டு பாடறவங்க தான் காசுவல் சிங்கரா?



------------------------


3. எங்க ஆஃபீஸ்ல டியூட்டி டைம் ல யார்ட்டயும் பேசக்கூடாது , ஆனா சிலர் டியூட்டியே டியூட்டி டைம்லபேசிட்டு இருப்பதுதான் ஹூம்


-----------------------------


4. மிஸ்! உங்க டிரஸ்ஸிங் சென்சை மாத்திக்கனும்.



நீங்க ஓக்கே சொன்னா டிரஸ்ஸையே மாத்திக்கறேன்.ஹேன்ட் பேக் ல ஒரு மிடி இருக்கு


------------------------


5. மேடம்.இன்ட்டர்வ்யூவுக்கு உங்க பொண்ணு கூட நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க?


 சார்.அவ அந்நிய ஆண்கள்ட்ட பேச மாட்டா.கூச்ச சுபாவம்


--------------------------------


6. என் மனதைக்கொள்ளை அடித்தவளே! என் பர்சை சுத்தமாய் வெள்ளை அடித்தவளே!


----------------------------------


7. நிருபர் - மேடம்.வருங்கால சந்ததியினருக்கு நீங்க ஒரு வழி காட்டியா இருப்பீங்ளா?



நமீதா - ஸாரி.கவர்ச்சி மட்டும் தான் காட்டுவேன்


------------------------------


8. டியர்.பிசியா?,



ம்ஹூம்.ஏன்?


சும்மா கேட்டேன்.


உம்மா கேட்ட மாதிரி இருந்தது?


----------------------------

9. மிஸ்டர்.பஸ்ல தான் அவ்ளவ் இடம் இருக்கே.பின்னால போனா என்ன?



ஓக்கே மிஸ்.நீங்களும் வாங்க



--------------------------


10. டேமேஜர் - என்னை யாராலும் ஏமாத்தவே முடியாது .



 லொள் ஸ்டாf - மாத்தவே முடியாதுனு சொல்லுங்க சார்.



--------------------------


11 டேமேஜர் - பருப்பு மாதிரி வேலை செய்யாம பொறுப்பா இரு .



லொள் ஸ்டாf - கறுப்பா இருக்கறவன் கடமை தவற மாட்டான் சார்


--------------------------


12. டேமேஜர் - ஆபிஸ்க்கு டெய்லி லேட்டா வர்றீங்ளே ஏன்?



 லொள் ஸ்டாf - எதுலயும் ஒரு ரெகுலாரிட்டி வேணும்னு சொன்னீங்ளே?




----------------------------


13.  ஆனந்த,ம் ,  பேரானந்தம்  என்ன வித்தியாசம் ?



பிகர்ட்ட நாம போய் வலியனா பேசுனா அது ஆனந்தம்.பிகர் நம்ம கிட்டே வலியனா வந்து பேசுனா அது பேரானந்தம்



------------------------


14. ஜட்ஜ் - சின்ன வயசுல இருந்தே சோம்பேறி.எந்த முயற்சியும் எடுக்காதவன்னு சர்ட்டிபிகேட் காட்றீங்க்ளே எதுக்கு?



 கேப்டன் - கொலைமுயற்சி வழக்கு



-------------------------


15. டாக்டர்.நான் 3 வருசமா ட்விட்டர்ல இருக்கேன்.



அடப்பாவமே.வீட்டுக்கே போலலையா?இப்பவே டிஸ்சார்ஜ் பண்றேன்.கிளம்பு



------------------------

16. டியர்.உடம்பை நல்லா பார்த்துக்குங்க.நான் கிளம்பறேன்.



ஹாஸ்பிடலில் பேஷண்ட் - நீ போய்ட்டா எப்டி பார்க்க?



-----------------------------


17. மாமா.பொண்ணுக்கு நீங்க என்ன போடுவீங்க?



 நல்ல மேக்கப்பும் ஃபேர் அண்ட் லவ்லியும் போடுவோம்



-------------------------------


18. மாப்ளை ஐ ஏ எஸ் ஆபீசர்னு சொல்லியும் ஏன் பொண்ணு தர்ல?



 லூஸ் மாதிரி உளறிட்டு இருந்தா என் பொண்ணுக்கு பிடிக்காது.செம டைட் ஆகிடுவா




------------------------------


19. டேமேஜர் - நான் மூடு அவுட் டா இருக்கேன்.எந்த பைலையும் பார்க்க மாட்டேன்



. ஓஹோ.எப்போ மூடு இன் க்கு வருவீங்க ஆபிசர்?



-------------------------------


20. டியர்.எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது.



 ஓஹோ.ஏன்? நீ மக்கு ஸ்டூடன்ட்டா?


-----------------------------

தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank - 3

1.@amas32 ஒரு உறையில் இரு வாட்கள் - மாமியார் மருமகள் இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு வீடு!  #tsy20130730


2.@amas32 மருமகளை அனுசரித்துப் போகவில்லை என்றால் மாமி யாரோ தான்!  #tsy20130730


‏3.@yami_tina ஒவ்வொரு பெண்ணும் மாமியாரை தாய் போலவும், மருமகளை மகள் போலவும் நடத்தத்தான் விரும்புகின்றனர் திருமணத்திற்க்கு முன்னால் . #tsy20130730


4.@RajaThamizhachi அம்மா பிடிக்கும், மனைவி பிடிக்கும்..ஆனால்,  மாமியார்,மருமகள் சண்டையில் அந்த ஆணுக்கு...கிலி பிடிக்கும்...:)))
 #tsy20130730

5.@SeSenthilkumar அக்கா மாமியார் ஆவதும் பேத்தி மருமகள் ஆவதுமான புதிய உறவு. அக்கா மகளை மணந்தவருக்கும் அவர்தம் மனைவிக்கும்.  #tsy20130730


6.@kiramaththan மாமியாராக வேண்டிய வயதிலும், மருமகளாகவே இருக்கிறாள், மக்கட்பேறு இல்லாதவள்!#tsy20130730

7.@kavi_rrsk சிறந்த மாமியார் மருமகளுக்கான உதாரணத்திற்கு அடுத்த வீட்டில் இருப்பவர்களை சொல்லாத வரை குடும்பம் சொர்க்கம் #tsy20130730


8.@MEKALAPUGAZH மாமியாருக்கும் மருமகனுக்கும்  வராத பிணக்கு, மாமனாருக்கும் மருமகளுக்கும்  வராத பிணக்கு-எப்படி    #tsy20130730


9.@aathirai2 மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே வித்தியாசம்தான் என்ன அது காலம்தான் 'இன்று நாளை'
 #tsy20130730


10.@arivucs மாமி,யாராக இருந்தாலும் மறு,மகளாய் இருக்கும் மருமகள்,மாமியார் மனங்கவர்ந்தவள்! #tsy20130730


11.@rkthiyagarajan மாமியார்,மருமகள் இவர்களை சமாளிப்பதை போல் கடினமான காரியம் ஆண்களுக்கு வேறு இல்லை.#இந்த பக்கம் அம்மா , அந்த பக்கம் பொண்டாட்டி. #tsy20130730


12.@ikaatupayal மின்வெட்டால் தடைபட்டன மாமியார் மருமகள் சண்டைகள் -நெடுந்த்தொடர் #tsy20130730

13.@kavi_rrsk மாமியாரிடம் சண்டைக்கு வரும் மருமகளிடம் சொல்ல வேண்டியது "இன்று போய் நாளை வா" #மாமியாராக #tsy20130730


14.@NamVoice மாமியார் மருமகள் எப்படி இருக்ககூடாதுன்னு தெரியனும்னா இப்ப ஓடுற எல்லா தொலைக்காட்சி தொடரையும் பாத்துக்கோங்க #tsy20130730
‏@

15.007suillan மாமியார் - மருமகள்  சண்டையயை பல நேரங்களில் இறுதியாக தீர்த்து வைத்தது . மண்ணென்ய், கேஸ்.அடுப்புகளும்.:((
#tsy20130730

16.@oorkkaaran 'மருமகள்' என்பது பயிற்சிக் காலம்.. 'மாமியார்' என்பது அதை அமல்படுத்தும் நேரம். #tsy20130730


17.@bluefortfish 'மாமி'யார், 'மரு'மகள் என பெயரிலேயே ஒரு அந்நியம் தொனித்து விடுவதாலேயே இருவருக்கிடையில் ஒற்றுமை இருப்பதில்லையோ என்னவோ! #tsy20130730

18.@trajuvel தன் பிள்ளையோடு தன் உரிமைகளையும் மருமகளுக்கு பரிசாக தருபவள் மாமியார்!!! #tsy20130730


19.@raajeswaran பெண்களின் சின்ன சின்ன சுயநல மனப்பான்மையே மாமியார் மருமகள் பிரச்சனையின் ஆணிவேர் #tsy20130730


20.@grvijai குடும்பத்தின் குத்துவிளக்கு மருமகளென்றால், மாமியார்தான் கலங்கரைவிளக்கம்!! #tsy20130730


21.@sambanths தன் அண்ணிக்குப் தான் போடும் கட்டளைகளை மருமகளும் தன் பெண்ணின் மாமியாரிடம் தான் எதிர்பார்த்தவைகளை மாமியாரும் உணர்ந்தால் ஏது சண்டை #tsy20130730


22.@GOVINDARAJEN புதிய மருமகள் கண்ணாடியை போன்றவள்.அதன் முன்னர் நின்று மாமியார் புன்னகைத்தால்,அதுவும் புன்னகைக்கும்.சீறினால் அதுவும் சீறும்.
#tsy20130730


23.@paramporul மருமகளோ, மாமியாரோ : இருவரும் ஒளிந்திருப்பது அவளுக்குள்ளேதான்.
 #tsy20130730
24.@shaan_64 நான்  மருமகளா வந்தப்ப எனக்கு குடுத்த அதே அறிவுரைய இப்ப நான் மாமியார் ஆனவுடனும் எனக்கே குடுக்குறாங்க! என்ன கொடுமை இது:) tsy20130730

Tuesday, July 30, 2013

வசப்பட்ட கழுத்தும் , வசப்படாத எழுத்தும்

1. இனி ஒரு விதி செய்வோம் அதிலாவது பழைய விதி பட கோர்ட் சீன் குறைச்சு பீச் ,லாட்ஜ் சீன் அதிகம் வைப்போம் # விதி ரீ மேக்




---------------------------------



2. விஜய் டி வி ஸ்டூடியோவை விட்டு போகும்போது பாதிப்பேரு பிகரை கரெக்ட் பண்ணிட்டுதான் போவாங்க போல ;-) # நீயா நானா ?



-------------------------------


3. படத்தை பார்த்தவுடன் கமர்ஷியல் ஹிட்டா ? அட்டர் பிளாப்பா? என்பதை ஒரு படைப்பாளியை விட ,ரசிகனை விட ஒரு விமர்சகனால் சரியாக கணிக்க முடியும்



-------------------------------


4. ஆங்க்ரி பேர்ட் ஆக இருக்கும் நீ என்னைப்பார்த்ததும் ஜாங்க்ரி பர்ட் ஆகி விடுவாயே



-----------------------------


5. மல்லிகைப்பூச்சரத்தை கூந்தலில் சூடும் பெண்கள் அதை முன்னால எடுத்துப்போட்டுக்கறாங்க.இதுல ஏதாவது ரகசியக்காரணம் இருக்குமோ ?


------------------------


6. ஒரு பிகரை லவ் பண்ற வரை நம்ம வாழ்க்கை ஒரு வ்ட்டமா இருக்கும்.அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டா வாழ்க்கை மட்டமாகிடும்.தரை மட்டமாகிடும்



-----------------------------



7. 5 வருசம் கழிச்சு சிம்புவை மேரேஜ் பண்ணிக்குவேன் - ஹன்சிகா # வருங்கால மாமனார் நல்லவர்தான்.ஆனா மாப்ளையை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீங்க




------------------------------



8. கோஹினூர் னு சொன்னதும் வைரம் நினைவு வந்தா ஜி கே ஓக்கே.ஒரு ஊர் பேருன்னு நினைச்சா அப்பாவி.வேற ஏதாவது நினைச்சா அடப்பாவி


-------------------------


9. தேங்காயைத்துருவி அந்த தேங்காப்பூ ல அஸ்கா சர்க்கரை கலந்து 20 நிமிஷம் ஊற வெச்சு அப்பறம் அதை சாப்ட்டா.. ஆஹா செம டேஸ்ட்



----------------------


10. ஆண்களின் ரசனை நாயகிகளின் முகம் சார்ந்தது அல்ல ;-))




---------------------------


11. மத்தவங்க ட்வீட்சை மொக்கைனு குறை சொல்லும் சிலரது டைம் லைன் பார்த்தேன்.அடேங்கப்பா.உலக இலக்கியம் # சாப்டாச்சா? இன்னைக்கு என்ன குழம்பு?



----------------------------


12 மரியான் படத்துக்கு நான் யோசித்த டைட்டில் = பார்வதி என்னைப்பாரடி




---------------------------


13.  ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா =,மிட் நைட்ல டாஸ்மாக் புகுந்து சரக்கை திருடிட்டு வந்துடனும் ? # சபாஷ் துபாஷ்


--------------------------



14. ஹாய்.என் வாய்ஸ் கேட்கும்போது மனசுல என்ன தோணுச்சு? 



 ம் உன் வாய்லயே 1 போடனும்னு தோணுச்சு #,சும்மா 



------------------------


15. தமிழ்நாடு பூரா நேத்து நைட் எத்தனை பேர் கனவுல சிம்பு - ஹன்சிகா.வந்தாங்க்ளோ?





-------------------------


16. பேசாம ( அல்லது பேசிக்கிட்டே) பால்காரனா போயிடலாம்னு இருக்கேன்.எல்லா ஆன்ட்டிகளையும் காலைலயே எசகு பிசகா நைட்டில் பாக்கலாம்



---------------------------


17. டீக்கடைல இருக்கும் பிரட்,டீ யை லுக் விட்டுட்டே வாக்கிங்போகும் லேடி கூட பிரட்டி விமன் தான் ( pretty .bread tea)


---------------------


18. வாக்கிங்க் போகும்போது எதிரே எந்த பிகர் வந்தாலும் அடடே உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்னு அள்ளி விட்டுடனும் ;-)



----------------------------


19. ஒரு படத்துக்கு போறதுக்கு முன் அந்த படத்தை பத்தி நமக்குள்ள இருக்குற கற்பனை எல்லாத்தையும்  உடைச்சிருது அந்த படம் :-)



---------------------


20. அன்பே! உன் கழுத்து வசப்பட்டது போல் எழுத்து எனக்கு வசப்படலையே!


--------------------------

தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank - 2

1.@oorkkaaran ஆனிமாசம் வரை போணியாக துணிகளைக் கண்டு 'ஆடி'ப்போகின்ற வணிகர்களின் வியாபார தந்திரம்தான் இந்த 'ஆடி தள்ளுபடி'! 

2.@thalarockss  ஆடி னா காத்தடிக்கும் தள்ளுபடி னா மக்கள் அலை அடிக்கும் !
 
3.@SeSenthilkumar ஆடியே தள்ளுபடியாகாதா? #புது மாப்பிள்ளை
 
4.@raajeswaran ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் ஆடித் தள்ளுபடியில் அம்மணியும் நகருவர் கடைகளுக்கு
 
5.@grvijai காவிரிக்கும், தள்ளுபடிக்கும் ஆடியில்தான் கொண்டாட்டம்!
6.@bluefortfish தள்'ஆடி' நடந்தால் வாழ்நாளில் உண்டு 'தள்ளுபடி'!
7.@kavi_rrsk இயற்கை ஆடியதில் பயிருகாக வழங்கிய கடன்கள் தள்ளுபடியாகின்றன
8.@anna_tuty நீதிமன்றங்களில் சாட்சிகள் ஆடிவிட்டால்,வழக்கு தள்ளுபடி ஆகிவிடுவது உறுதி...

9.@mp_samy ஆடித்தள்ளுபடில எடுத்த துணிமணிகள் அடுத்த ஆடிக்குள்ள தள்ளும்படி ஆகுறதுல இருக்கு ஆடித்தள்ளுபடியின் வியாபார சூட்சமம்

10.@FrancisPichaiah ஆட்டம் ஆடி காலை உடைத்து அறுவை சிகிச்சை நிபுணரிடம் விவாதித்தேன் ஆகும் செலவுகளுக்கு ஆடி தள்ளுபடி கிடையாதா என்று

11.@MEKALAPUGAZH நீ என்னைத் தள்ளுபடி செய்ததனால் ஆடித்தான் போனேனடி. எனை மீண்டும் அள்ளும்படிச் செய்ய என்னிடம் எதைத் தள்ளுபடி செய்ய

12.@kavi_rrskஆடியில் தள்ளுபடி செய்யப்படுகின்றன அணைத்து சுபகாரியங்களும்

13.@radjes மாரிஅம்மனுக்கு 'ஆடி'யில் திருவிழா! என் மணைவிக்கு 'தள்ளுபடி' என்றால் திருவிழா!

14.@Am_mathan கொஞ்சம் ஆடித்தான் போனேன் நீ என் காதல் மனுவை தள்ளுபடி செய்கையில்..

15.@rajinirams  ஆடியில் புதிதாக வாங்ககூடாது என்ற ஐதீகத்தால், நஷ்டத்தை தவிர்க்க வந்ததே"ஆடி தள்ளுபடி"கண்துடைப்புகள்.
16.@sambanths ஆடித் தள்ளுபடி குறைத்தது விலையை மட்டுமல்ல நம் சமுகத்தில் இருந்த ஒரு மூட நம்பிக்கையையும் தான்
 
17.@sambanths பெண்களுக்கு ஆடி தள்ளுபடி இருக்குது ஆண்களுக்கு ஆடி தள்ளும் படி இருக்குது
 
18.@anna_tuty எவனுடனாவது, வாங்கப்பட்டு போய்விடும் பேராவலில் முதிர்துணிகள் ஆடித்தள்ளுபடியில் முன்வரிசையை அலங்கரித்தபடி...
 
19.@RajaThamizhachi "ஆடி, தள்ளுபடி "... சிந்தனை ஆடாமல், தள்ளுபடி செய்து விடுங்கள்... தரமற்ற பொருட்கள்...  

20.@shaan_64 பறவைகளுக்கு வேடந்தாங்கல்.பெண்களுக்கு ஆடி தள்ளுபடி :)

 21.@MEKALAPUGAZH போன ஆடியில் வாங்கியது இந்த ஆடியில் தள்ளு(ம்)படி ஆனது.

22.@parthi_pen காசை கரியாக்குவது தீபாவளி,கரியையும் காசாக்குவது ஆடித்தள்ளுபடி

23.@ikaatupayal தள்ளுபடியான நிலா ஆடி அமாவாசை ஆனது

24.@sambanths அரசாங்கம் கொலை செய்ய காத்திருக்கும் மரண தண்டனைக் கைதிகளுக்கு முன் ஆடிக் கொண்டிருக்கும் துக்குக் கயிறுக்கு எப்போது வரும் தள்ளுபடி
 
25.@arivucs ஆடுற மாட்டை 'ஆடி'தான் கறக்கணும்,மற்ற 11 மாதங்களும் இங்கு தள்ளுபடி

Monday, July 29, 2013

WARM BODIES (2013) - சினிமா விமர்சனம்

                                
                                   நாம் ஹாலிவுட்டில் பல வகையான திகில் படங்கள் பார்த்திருப்போம். அந்த வகைகளில் ZOMBIES படங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.( உ.ம். RESIDENT EVIL series, WORLD WAR Z, DAWN OF DEAD...  )



இவை அனைத்தும் நம்மை மிரட்டின.ஆனால் சற்று வித்தியாசமாக திகிலுடன் சேர்ந்து சிரிக்கவும் வைத்துள்ளது இப்படம் . RESIDENT EVIL படத்தை கொஞ்சம் உல்டா பண்ணி சிறிது காதல்,காமெடி தூவினால் அதான் WARM BODIES.

இதெல்லாம் அந்தக்காலத்துல தெரிஞ்ச்சுக்கிட்ட பெரியவங்க்க தான் " சோம்பித்திரியெல்" சொல்லி இருக்கனும்



சும்மா சொல்லக்கூடாது  ZOMBIES எனப்படும் ஜந்துவை வெச்சு  சந்து கேப்பில் சிந்து பாடிவிட்டனர். இது வரை திகிலாக பார்த்து பழக்கப்பட்ட  ZOMBIES-ஐ கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.





                உலகம் முழுக்க டி-வைரஸ் தாக்கி பலர் இறக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட  இடங்களை தடுப்பு போட்டு தடுத்து பாதுகாப்பாக மனிதர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதை தயாரிக்க மூலப்பொருள் தேவை. அது தடுப்பிற்கு வெளில இருக்கு. அதாவது  ZOMBIES வாழற பகுதில இருக்கு.



 ஹீரோயின் தலைமை அதிகாரியோட பொண்ணு. சோ...  தைரியமா பாப்பாவும் அவங்களோட அஞ்சு ஃப்ரெண்ட்ஸும் களத்துல இறங்கறாங்க. மாட்டிக்கறாங்க.. அஞ்சு பேர்ல மூணு பேர் ZOMBIES-க்கு இறை. மிச்சம் ஹீரோயினும் ஒரு உயிர்த்தோழியும்.



              இப்பதான் ஹீரோ இன்ட்ரோ. இதுல ஹீரோ ஒரு ZOMBIE. ஹீரோயினை கண்டதும் லவ்வறார் (லவ் பண்ணும்போது இப்படிதான்... மிருகம் மனிதனாகும் அப்புறமா கல்யாணத்துக்குப்பின்  மிருகமாய்டுவாங்க...).மத்த ZOMBIESகிட்ட இருந்து காப்பாத்தி தன் இடத்துக்கு கூட்டிட்டு போய்...கூட்டிட்டு போயி..





. வச்சி காப்பத்தறார்னு சொல்ல வந்தேன். அந்த தோழிய... மீட்புப்படை வந்து கூட்டிட்டு போறாங்க.ஆனா ஹீரோயினை தேடல.. அப்புறம் எப்படி படத்த ஓட்றதாம்...?

சரி ...படத்துல வில்லன் வேனுமே...டைரக்டர் அங்க தான்  நிக்கறார். ZOMBIES-ல ரெண்டு கேங்கா பிரிச்சுட்டார். ஒண்ணு ஹீரோ மாதிரி கொஞ்சம் கொஞ்சமா குணமடைஞ்சுட்டு வர்ற குரூப்,( இது அதிமுக சம்பத் ,பரிதி இளம்வழுதி மாதிரி ஆரம்பக்கட்ட  ஆபத்து )  இன்னோன்னு... வெறி முத்திப்போன குரூப் அவங்களுக்கு மேல் தோல் இருக்காது.பயங்கரமான தோற்றம். ( இது தி மு க அடி பொடிகள் மாதிரி முத்துன பார்ட்டி) 



ரெண்டு பேரும் சேந்தாங்களா...?  குணமடைஞ்சாங்களா? என்பது மிச்ச சொச்சம்.



படத்துல ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் (ஐ ஜாலி..) . ஆனா திரைக்கதை அதை மறைச்சுடுது.வசனங்கள் அனைத்தும் தேவையான அளவே உள்ளன. இயல்பாகவே உள்ளன.வசனங்கள் மிக மிக கம்மி. சில காட்சிகளில் தட்டு தடுமாறி பேசும் ஹீரோவின் வசனங்கள் கேட்கவே இல்லை.

ஷுட்டிங்க் டைமில் எடுத்தது





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :


1.கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதம்.



2.படத்தின் நீளம்.1.30மணி மட்டுமே.கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் வைத்தது.



3.படத்தின் ஹீரோ ஆரம்பக்காட்சி...உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது ஹீரோயினைப் பார்த்து ஸ்லோ மோஷனில் லவ்வுவது. ( எந்த மோஷன்லயும் அண்ணன் லவ் தான் )



4.பின்னணி  இசை. காமெடிக்கும்,திகிலுக்கும் ஏற்றவாறு  மாற்றி மாற்றி அமைத்தது.

5.கதைக் களத்திற்கு ஏற்ற செட் அமைப்பு. ஆர்ட் டைரக்சன் கன கச்சிதம் 

6.கடைசி அரை மணி நேர பர பர காட்சிகள்.



7.ஹீரோவிற்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் காட்சி, கூலிங்கிளாஸ் மாட்டி நையாண்டி செய்யும் சில காட்சிகள்.


8.போதுமான அளவு கிராஃபிக்ஸ்.மொத்தத்தில் எல்லாம் அளவிற்கு மிகாமல்.திகட்டத வண்ணம் இருக்கு.


ஹிரொயின் தன்னம்பிக்கையை ஹிரொ செக் பண்ணும் காட்சி 



இயக்குநரிடம்  சில  கேள்விகள்:

1.ஹீரோயினைப் பார்க்கும் போது மட்டும் எப்படி லவ் வந்துச்சு. இதுக்கு முன்னாடி எந்த பொண்ணையும் பார்த்தது இல்லையா?அந்த அளவு பெரிய ஃபிகர் இல்லையெ?





2.ZOMBIES-க்கு யோசிக்கற சக்தி இருக்கா? மனுஷனால கூட அது முடியல 


3.ஏன் இடையிடயே பிட்டு பிட்டா ஹீரோயினோட பழைய காதல் கதை.அவன் தான் முதல் சீன்லையே பூட்டானே...1.30 மணி நேரம் ஓட்டவா? அந்த லவ் ஃபிளாஸ்பெக்கில் கூட கிளு கிளுப்பு கம்மி ) 

4.தடுப்பு சுவரை விட்டு வெளில போக ஹீரோயினுக்கு மட்டும் எப்படி இரகசிய வழி தெரிகிறது? மோப்ப சக்தி இருக்கற ZOMBIESஆல கூட கண்டுபிடிக்க முடியல.


5. படம் பூரா ஹீரோ ஹீரோயின் ராஜ்ஜியம்தான்.ஒரு வேளை அவுங்கதான் புரொட்யுசர்ஸா?

6. ஹீரொயினை பார்த்த உடனே ஹீரோ மனுஷனா மாற ஆரம்பிக்கறார். மருந்துக்குகூட மருந்த பத்தி காட்லையே....

8.ஹீரோயினுக்கு ZOMBIE மேல லவ் வர்றதுக்கு சரியா காரணம் சொல்லல.இந்தக்காலப்பொண்ணுங்க்க மனுஷனைக்கூட நம்பாம அப்பப்ப டெஸ்ட் வைக்கறாங்க்க 

 பின்குறிப்பு: ஹீரொயினைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.மெய் பார்த்து மெய் மறந்துட்டன்



ஹாலிவுட் பட விரும்பிகள், வித்தியாசமான திகில் பட விரும்பிகள் பார்க்கலாம். பெண்களும் பார்க்கும் விதத்தில்தான் இருக்கு.


ரேட்டிங் =  3.25   / 5



இன்னொரு பெண் குறிப்பு சாரி பின் குறிப்பு - இந்த விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் அட்ரா சக்க பொதுக்குழுவின் முக்கிய உறுப்பினரான என் அக்கா பையன் கார்த்திக் . எடிட்டிங்க்க் டைரக்சன் MALE  பார்வை மட்டும்  நான் , ஹி ஹி  

Sunday, July 28, 2013

THE WOLVERINE - சினிமா விமர்சனம்


 
தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தானைத்தலைவர் டாக்டர் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாள் எப்படி தன் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துடுச்சுன்னு அந்தர்பல்டி அடிச்சு கோர்ட் ல அடிச்சு விட்டாரோ அந்த மாதிரி தன்னோட பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்துட்டா தேவலைன்னு நினைக்கறாரு ஹீரோ . இவருக்கு பல அற்புத  சக்திகள் இருக்கு . உயிர்  போனாலும் பரவாயில்லைன்னு எப்டி கலைஞர் பதவியை விடாம பிடிச்சுட்டு இருக்காரோ அந்த மாதிரி எது போனாலும் பரவாயில்லைன்னு ஹீரோ தன் உயிரை தன் கிட்டேயே வெச்சிருக்காரு .
இவரு ஒரு ரவுடி கேங்கோட மோத நேரிடும்போது எதார்த்தமா அங்கே வந்த பதார்த்தமா ஹீரோயினைப்பார்க்கறாரு .முன் பக்கமா? முதுகுப்பக்கமா? என்று ஒரு முடிவுக்கே வரமுடியாத சைனீஷ் ஃபிகர் தான் அது . ஆனாலும் ஹீரோ விடலையே? விடாம பின்னால போறாரு 


இதை தெரிஞ்சிக்கிட்ட ஹீரோயினோட தாத்தா ஹீரோக்கிட்ட இருக்கற சக்திய கேக்கறார்.ஹீரோ சம்மதிக்கல... இருவருக்கும் மோதல்... இதில் வென்றது யார் என்ற புளித்துப் போன கதையை எந்த அளவு சுவாரசியமா சொல்ல முடியுமோ அந்த அளவு சுவாரசியம சொல்லயிருக்காங்க.

Street Style Tao Okamoto Hot


ஹீரோ ஹியூ ஜாக்மேன்  வாரணம் 1000 சூர்யா மாதிரி, 555 பரத் மாதிரி 6 பேக் , 8 பேக் பாடியோட எப்பவும் கமல் மாதிரி பாடியை காட்டிட்டே விரைப்பா வர்றார. இவருக்கு 2 ஜோடி  ( லபோதிபோ  லபோதிபோ   )

ஆக்‌ஷன் காட்சிகளில் அப்ளாஷை அள்ளிக்கறார். இவருக்குன்னு ஒரு ஆடியன்ஸ் கைதட்ட ரெடியா இருக்காங்க  

ஹீரோயின் பேரை கவனமா படிங்க . தவறான உச்சரிப்பால் பப்ளிக்ல கெட்ட பேரு வாங்கிக்காதீங்க TAO OKAMOTO . 


 





இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்துல மொத்தமா  சாரி ஒல்லியா 12 பொண்ணுங்க . எல்லாமே வித விதமான பெயிண்ட் டப்பா மாதிரி புல் மேக்கப்போட வந்தாலும் ரசிக்கும்படி இருக்குங்க ( நாம எந்தக்காலத்துல யாரை ரசிக்காம விட்டிருக்கொம் ? ) 


2. ஓப்பனிங்க் ஷாட்டில் துரத்தும் பிரம்மாண்டமான வெடித்த மலைப்பகுதியை விட்டு விலகி ஓடும் ஹீரோவின் ஓட்டம் அபாரம் . கம்ப்யூட்டர் கிராஃபிகஸ் கலக்கல் 


3.  சாகா வரம் பெறத்துடிக்கும் தாத்தா அந்த முள் படுக்கைல எந்திரிக்கும்போது செம . ஆர்ட் டைரக்‌ஷன் அபாரம் 


4. படத்தின் 20 வது நிமிடத்தில் வரும் அந்த 18 நிமிட சேசிங்க் காட்சி அற்புதம் வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர் 




5. செந்தூரப்பூவே வை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ரயில் ஃபைட் இருக்கு . அபாரமான வேகத்தில் செல்லும் புல்லட் ட்ரெயினில் நடக்கும் காட்சி அதி அற்புதம் ( இதே தமிழ்ப்படம்னா ரயில் ஃபைட் நடக்கும்போது மட்டும் மெதுவா அன்னக்கொடி மாதிரி சாரி அன்னப்பறவை மாதிரி போகும் ) 


6. வில்லி ஒரு காட்சியில் பேனாவில் தன் நாக்கை நீட்டி விஷத்தை அதில் தடவி பேனாவால் அடியாளை கொல்லும் காட்சி மிரட்டல் ( இதே நான் இந்த சீனை எடுத்திருந்தா டைரக்டா அடியாளுக்கு லிப் கிஸ் கொடுத்து அப்டியே நாக்கால் விஷத்தை செலுத்திடற மாதிரி எடுத்திருப்பேன் , சீனுக்கு சீன் திகிலுக்கு திகில் டூ இன் ஒன் _) 


7. இந்தப்படம் 3 டி யில் இன்னும் செமயா இருக்குன்னு சொல்லிக்கறாங்க . நான் சாதா டி யில் தான் பார்த்தேன். 100 மில்லியன்  டால்ர்கள் செலவாம் , அடேங்கப்பா  ( புரொடியூசருக்கு தெரியாம டைரக்டர் எத்தனை அடிச்சாரோ? ) 


8. ஹீரோ தன் உடம்பில் வயிற்றுப்பகுதியில் இருக்கும் பூச்சியை எடுக்கும் சீன் இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் என்றாலும் பதை பதைப்பை ஏற்படுத்ததவறவில்லை  








இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. எதிர்காலத்தை தன் கனவு மூலமா உணரும் தன்மை அல்லது சக்தி கொண்ட அந்த பவுடர் டப்பா தலை ஃபிகரு ஹீரோவை ஒரு மார்க்கமா அடிக்கடி பார்க்குது . ஹீரோ தன்னை லவ்வறாரா? இல்லையா?னு புரியாம பம்முது . ஏன் எதிர்காலத்துல அவன் தனக்கா? இல்லையா?ன்னு பார்க்கலை?


2. ஹீரோ அந்த ட்ரீம் கேர்ளை 100% நம்பறாரு . இதுதான் சாக்குன்னு அந்த பவுடர் டப்பா ஏன் ரீல் விடலை? இந்த மாதிரி இந்த மாதிரி நான் தான் வருங்கால சம்சாரம் அப்டினு? இந்தான் சாக்குன்னு மேட்டரை முடிச்சிருக்கலாமே? 


3.  ஹீரோ வுக்கு உடம்பெல்லாம் அம்பு துளைக்க தடுமாறி வர்ற சீன் நல்லாருக்கு .ஆனா லாஜிக்கலா ஒரு குழப்பம் . அவருக்கு அபூர்வ சக்தி இருந்தா அவருக்கு எதுவும் ஆகாது . சக்தி இல்லைன்னா ஆள் ஒரே அம்பில் பணால் . ரெண்டும் கெட்டானா  மைனாரிட்டி ஆட்சி மாதிரி மைனாரிட்டி பவர் வர்றது வந்துட்டு வந்துட்டு விட்டு விட்டு போக அது என்ன தமிழ் நாட்டு மின்சார வாரிய கண்ட்ரோல்ல  இருக்கும் கரண்ட்டா? இந்த சீனை மகாபாரதத்துல இருந்து சுட்டுட்டாரு போல


4. தாத்தா வில்லனுக்கு அறிவே இல்லையா? தன் பேத்தி மூலமா உயிர் சக்தியை ஹீரோ கிட்டே கேட்காம டைரக்டா தானே கேட்கறாரே? ஒரு பொண்ணு கேட்டா எந்த ஆம்பளை முடியாதுன்னு மறுக்க முடியும் ? 







மனம் கவர்ந்த வசனங்கள்


1.திறமைங்கறது எல்லாருக்கும் அமைஞ்சிடறதில்லை.அதனால அது அமைஞ்சவங்க அதை வளர்த்திக்கனும் 



2. நீ ஒரு டாக்டரா ?


 ம்.வெட்னரி டாக்டர்.     ஆகப்போறேன் 





3. சாகா வரம் கறது ஒருத்தனுக்கு சாகற கடைசி நொடில கூடக்கிடைக்கலாம்.காத்திருக்கனும்.பொறுத்திருக்கனும் # சபாஷ் டயலாக் w


4. நவீன அறிவியலை வளர்த்துவதில் எந்த அளவு தீவிரமா இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தை விட்டுத்தரக்கூடாது #! W






5. எவன் ஒருவனுக்கு தினமும் கெட்ட கனவு வருதோ அவன் வருத்தத்துல இருக்கான்னு அர்த்தம்


6. போர் வீரனின் கடமை எது தெரியுமா ? மரியாதைக்குரிய மரணம்


7. மேரேஜ் நிச்சயம் ஆன ஒருத்தன் இந்த ஊர்ல  மத்த பொண்ணுங்களோட கில்மா பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமில்ல? 

நான் ஒரு மினிஸ்டர்  ( எல்லா ஊர்லயும் இதே கதைதானா? அடேய் அரசியல்வாதீஸ்... ) 


8. இதை ரெசசிவ் ஜீன்ஸ்னு சொல்வாங்க . கண் , புருவம், இமை , சில நடத்தைகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் 

 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- இங்க்லீஷ் படத்துக்கு விக்டன்ல மார்க் போடறதில்லை , இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக 41



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.75  / 5


சி பி கமெண்ட் -படம் போர் அடிக்காம 2 மணி நேரம் போகுது . ஆனா ரொம்ப சுவராஸ்யமான காட்சிகள் மொத்தமே 20 நிமிஷம் தான் . அதனால டி வி ல பார்ப்பதே சாலச்சிறந்தத

Saturday, July 27, 2013

சொன்னா புரியாது - சினிமா விமர்சனம்

 

 
 மாதவன் ஜோதிகா ஜோடி நடிச்ச டும் டும் டும் படக்கதை முன் பாதி பூரா , இடைவேளைக்குப்பின் கொஞ்சம் ஹேங்க் ஓவர் ஹாலிவுட் படத்தில் இருந்து கொஞ்சம் உருவி க்ளைமாக்ஸில் சொந்தச்சரக்கு 2 ரீல் சேர்த்தால் ஒரு புது படம் தயார்


மேரேஜ் பண்ணிக்கிட்டா டெய்லி ஒரே வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடனும் , மேரேஜ் பண்ணலைன்னா டெய்லி விதம் விதமா வெளீல சாப்பிடலாம் , யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க என்ற நல்ல கொள்கை உள்ளவன் ஹீரோ . இவன் தண்ணி அடிப்பான் , பொண்ணுங்களோட சுத்துவான், ஆனா தமிழ் சினிமா பாரம்பரியப்படி நல்லவன்


இப்படிபட்ட  ஆளுக்கு அவனை மாதிரியே  மேரேஜ் பண்ணிக்க பிடிக்காத சரக்கு அடிக்கும் சந்திரிகா வை  எதேச்சையா பொண்ணு பார்க்கறாங்க , 2 குடும்பமும் சேர்ந்து  ஏற்பாடு செய்யும் அந்த மேரேஜை எப்படி 2 பேரும் சேர்ந்து தடுக்கறாங்க? பின் எப்படி அவங்க 2 பேரும் லவ்வறாங்க என்பதை எவ்வளவு நிதானமா கதை சொல்ல முடியுமோ அவ்வளவு நிதானமா சொல்றாங்க . உஷ் அப்பா ஜவ்வுன்னா ஜவ்வு அப்டி ஒரு ஜவ்வு


சிவாவுக்கு ஓப்பன்பிங்க்லயே ஒண்னே ஒண்ணு சொல்லிக்கறேன். கே பாக்யராஜோ , எஸ் வி சேகரோ , கமலோ அவர் கிடையாது . எல்லா சீன்லயும் தானே டாமினேட் பண்ணனும் , எல்லாரையும் மட்டம் தட்டி தான் கை தட்டல் வாங்கிக்கனும் என்ற எண்ணத்தை மாத்திக்கனும். 10 சீன்ல அப்டின்னா பரவாயில்லை , சீனுக்கு சீன் அப்டின்னா?



 மத்தபடி அவர் டைமிங்க் விட் , எல்லாரையும், கலாய்க்கும் ஹியூமர் சென்ஸ் , சோக சீன்களில் கூட காமெடி பண்ணுவது எல்லாம் ஓக்கே . காமெடி நடிகர்னா முகத்தில் கொஞ்சமாவது எக்ஸ்பிரஷன் காட்டனும் , நாகேஷ் , வடிவேல் இதுக்கு நல்ல உதாரணம், அதே போல் பாடி லேங்குவேஜ் க்கு கவுண்டமணி , செந்தில் நல்ல உதாரணம் . சிவாவுக்கு  இந்த 2ம் வர்லை . டெவலப் பண்ணிக்கனும் , நல்லா வருவார் 


ஹீரோயின் வசுந்த்ரா .சூரியகாந்திப்பூவை நல்லெண்னெய் பாட்டில்ல போட்டு வெச்ச மாதிரி அவ்வளவு தெளிவு அவர் முகம் . பீட்ரூட்டை வெய்யில்ல காய வெச்சது மாதிரி  ஒரு இளஞ்சிவப்பு உதடு , மயில் தோகைல  ஐ டெக்ஸ் மை தடவிய மாதிரி ஒரிஜினல் கூந்தல் ( இழுத்துப்பார்த்தியா? ) ஆஹா . இவர் தமிழ் சினிமாவில் நல்லா வளர வாய்ப்பு  இருக்கு. இன்னும் காம்ப்ளான் , பூஸ்ட் எல்லாம் சாப்பிட்டா அபாரமா வளர்ச்சி வரலாம் .இப்போதைக்கு இது போதும்

 இவருக்கு  நடிக்க ஏகப்பட்ட வாய்ப்பு . குஷ்பூ எப்படி தி முக கட்சியை தன் வளர்ச்சிக்கு பயன் படுத்திக்கிட்டாரோ அதே போல் மிகச்சிறப்பா நடிச்சிருக்கார் . பின் பாதியில்  ஹீரோ மேல் காதல் வந்ததும் அவர் முகத்தில் வரும் வெட்கம் குங்குமப்பூ சிவப்பு , லவ்வை சொல்லலாமா? வேணாமா? என பரிதவிப்பது அபாரம் 


மனோபாலா  காமெடியில் பாஸ் மார்க் வாங்குகிறார் , ஹீரோவின் அம்மாவாக  வருபவர் நல்ல குணச்சித்திர நடிப்பு 




 




இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர் பார்த்திபன் கவுண்டமணி நடிச்ச வீ ஆர் நாட் டாட்டா பிர்லா மாதிரி ஜேம்ஸ் பாண்ட் டைப்  காமெடி ஆக்‌ஷன் படம் போல் ஒரு போஸ்டர் டிசைனை உருவாக்கியது 



2. பத்திரிக்கை, டி வி , மீடியா பேட்டிகளீல் இது டும் டும் டும் படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதை மூச்சு விடாதது 

3. ஹோம்லியான ஃபிகரை ஹீரோயின் ஆக்கியது .தேவையான இடங்களில் அவரை ஸ்லோமோஷனில் ஓட விட்டு , குதிக்க விட்டு  கேமரா மேனை  மொட்டை மாடிக்கு அனுப்பி சரியான கோணத்தில் படம் ஆக்கியது ( 6 சீன் ) 


4. ஹீரோ சிவாவின் டைமிங்க் விட் , காமெடி சென்ஸ் , ஹீரோயினின் முக வசீகரம் அழகான நடிப்பு 


5. உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவை சொன்னாலும் புரியாது , படத்தை பார்த்தாதான் பட்டுத்தெளிவீங்க என்னும் அர்த்தம் வரும் விதத்தில் டைட்டில் வைத்தது



6. மேரேஜை வலியனா நிறுத்த ஹீரோவுக்கு அந்த இடத்தில் அடிபட்டு பல்பு ஃபியூஸ் போன விதத்தை காமெடியாக்கி அடிக்கடி அது போல் சீன் வைத்தது சபாஷ் , ஆடியன்ஸ் செம ரசிப்பு 


 



இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. மேரேஜ்க்கு பெண் பார்க்க மாப்ளை வீட்டுக்காரர் வரும்போது பாரம்பரியம் மிக்க பண்பாடு மிக்க குடும்பப்பெண்ணாக வருபவர் ஸ்லீவ் லெஸ் ட்ரான்ஸ்பெரண்ட் ஜாக்கெட் தான் போட்டுட்டு வருவாரா?லோ ஹிப் வேற . தர்ம தரிசன தேவியா அவரு? 


2. படத்தில் ஹீரோயின் யார் கிட்டே பை பை சீ யூ  சொன்னாலும் இடது கையால தான் சொல்றார். அதுதான் நாகரீகமா? 


3. ஹீரோயின் மஞ்சள் பூசி மங்களகரமாக இருக்க வேண்டாம் , அட்லீஸ்ட் குங்குமப்பொட்டு வைத்தாவது நீட்டாக இருக்க வேண்டாமா? ஒரு சீனில் கூட அப்டி இல்லை , ஆல் ஸ்டிக்கர் பொட்டுதான் ( மாடர்ன் கேர்ள்ஸ்ன்னா பெண் பார்க்கும் படலத்தில் கூட அப்டி இருக்கக்கூடாதா? 


4. பொண்ணு சரக்கு அடிக்குது , எல்லாம் பண்ணுது , ஆனா  பாய் ஃபிரண்ட்ஸ் கூட டேட்டிங் போகுதா? இல்லையா? என்பதில் தெளிவு இல்லை 


5. அதே போல் ஓப்பனிங்க்கில் ஹீரோ கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கில்மா மன்னர் என காட்டி விட்டு தொபுக்கடீர் என்று அவருக்கு எல்லாம் ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்ஸ் தான் என பம்முவது 

 
6. ஹேங்க் ஓவர் காப்பி சீன்கள் படத்துக்குத்தேவை இல்லை . இடைவேளை ட்விஸ்ட்டுக்கு வலியத்திணிக்கத்தேவை இல்லை . இன்னொரு முக்கிய பாயிண்ட் , திரைகக்தையில்  தேவை இல்லாமல் ஒரு காமெடி படத்துக்கு இடைவேளை ட்விஸ்ட் தேவை இல்லை ( வலுவந்தமா) 


7. லவ் வந்த பின் ஹீரோயின் ஆக்டிங்க் அபாரம், ஆனா ஹீரோ ஏன் முகத்தில் ஃபீலிங்கேஎ காட்டலை ? ஹீரோயின் மாதிரி அவர் அளவுக்கு கிளாமர் தான் காட்ட முடியாது , உணர்ச்சி காட்ட ஏது தடை?


8. பட முதல் பாதியில் பி ஜி எம்மே ( பின்னணி இசை) போடலை , ஒய் ஜி மகேந்திரன் டிராமா மாதிரி மொக்கையா போகுது 


9.  க்ளைமாக்சில் வரும் டி வி போட்டி மகா மொக்கை , கடந்த 20 வருட சினிமா வரலாற்றில் இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸ் ராமராஜன் படத்தில் கூட இல்லை 



10 . வசனகர்த்தா கம் இயக்குநர் பெரிதும் நம்பியது போல் ஹீரோ டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட்டாய் வந்து ஹாலிவுட் படங்களை நக்கல் அடிக்கும் காட்சிகள் எடுப்டலை . இது எல்;லாம் டி வி ஷோக்களீல் ஆல்ரெடி பார்த்தாச்சு . இது எப்படி இருக்குன்னா பில்லா  படத்துல நயன் தாரா காட வேண்டிய எல்லாத்தையும் காட்டிய பின்  சீதையா நடிச்சது மாதிரி இருக்கு , எடுபடலை 




மனம் கவர்ந்த வசனங்கள் 



1. ஸாரி சார்.நோ கட்டிங் .


1லார்ஜும் ,ஒரு ஸ்மாலும் சேர்ந்தா அது தான் ஒரு கட்டிங்.இது கூடத்தெரியாம.உன்னை யார் வேலைக்கு சேர்த்தது ?


2. தமிழ் நாட்டு மானத்தை நீங்க தான் காப்பாத்தனும்.


 ரோசா ஹை தில் மே ரோசா ஹை.மை தேரே பி ுரேக் பாஸ்ட் தோஸா ஹை.



3. மிஸ்.இங்க நாய்ஸ் ஜாஸ்தி.வாய்ஸ் நாஸ்தி. பீச்க்கு போய்ட்டா வசதி



4. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.


நீ என்ன பேசப்போறேனு எனக்குத்தெரியும்.நீ பாட்டுக்கு பேசிட்டு இரு.இதோ வந்துடறேன்



5. இந்த நாள் உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ.


ம்க்கும்.இப்டி சொல்லி சொல்லியே ஆல்ரெடி 4 டைரி புல் ஆகிடுச்சு



6. டேய்.அதுக்குள்ளே எப்டிடா அவளை கரெக்ட் பண்ணே?



 விட்றா.அழகா இருந்தாலே இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்



7. டெய்லி குடிக்கலாமாடா ?



க்ரியேட்டிவ் பியூப்பிள்னா அப்டித்தான் # சொ பு ( தவறான கருத்து)



8. என் பையனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை.ஆனா டெய்லி நைட் வீட்டுக்கு வரும்போது கொய்யாப்பழம் சாப்டுட்டு வருவான்


9. கோயில்ல ஆந்திரப்பிரதேசமா? அய்யோ அது அங்கப்பிரதட்சணம்.உருண்டு உருண்டு வருவாங்க்ளே


10  உன் கல்யாணத்தன்னைக்குதான் பிளான் பண்ணி என் கல்யாணத்தை நிறுத்தப்போறேன். எப்டியோ என் மேரேஜை நிறுத்தாம இருந்தா சரி





11. எங்க ஊர்ல சரக்கடிச்சா ஊரை விட்டுத்தள்ளி வெச்சுடுவோம்.



நாங்கதான் உங்க ஊரே இல்லையே?


அப்போ இதே ஊர்ல தங்க வெச்சுடுவோம்


12  இதை நம்பாதீங்க.போட்டோ ஷாப் ல ஒர்க் செஞ்ச போட்டோ.


பின்னே மெக்கானிக் ஷாப்லயா ஒர்க் செய்வாங்க?


13. பெரிய பெரிய படைப்பாளிகளுக்கு சரக்கு அடிச்சுட்டு டக் ஆனாத்தான் ஐடியாவே வருமாமே? உண்மையா ?



14. மேட்டரே இல்லை.அதான் மேரேஜை நிறுத்திட்டோம்


15. சின்ன வயசுல கிரிக்கெட் விளையாடும்போது ஒருத்தன் புல்டாஸ் பால் போட்டான்.அதை அடிக்க பேட்டை ஓங்கினேன்.பால் (BALL) மிஸ் ஆகிடுச்சு.ஹி ஹி



16. 3 தடவை அந்த சம்பவம் நடந்துச்சு.


 ஓஹோ.பட்ட கால்லயே படும் பாங்க்ளே.அப்டி ?


17. ஸ்வேதா வண்டில போய் அவளை டிராப் பண்ணிட்டு அப்டியே என்னையும் டிராப் பண்ணிக்கவா ?


 வேனாம்.அவளே அவளை டிராப் பண்ணிக்கறாளாம் #


18. இப்போ தான் வரும் ,இப்போ தான் போகும்னு கணிச்சு சொல்ல இது கரண்ட் இல்லை.காதல்.அது எப்போ வேணாலும் வரும்


19  அவன் எவ்ளவ் பீல் பண்ணி தன் சோகத்தை கொட்டிட்டு இருக்கான்.ஆப் பாட்டில் வாங்கிட்டு வரவா? னு கேட்கறியே? எப்டிடா பத்தும்? புல் வேணும்



20. என்னடா சொல்றே? கடைசில அவன் உன் ஆள் பிளேட்ல்யே கை வெச்சுட்டானா?


21. எனக்காக நீங்க 2 பேரும் ஏன் 1 சேரக்கூடாது ? எனக்காக நீ ஏன் சாகக்கூடாது ?




 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  39

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - ஏ செண்ட்டர்ல மட்டும் சுமாரா போகும் , காமெடி ப்ரியர்கள் சிவாவுக்காக டி வி ல போடும்போது பார்த்துக்கலாம் ,மத்த படி படம் தேறாது 



a
 
 
 
 
 
 அடங்கோ மேங்கோ
 

தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank