Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  தன்னோட  ஓனரோட  பணம்  2 லட்சத்த பஸ் ல  கொண்டு போகும் போது  ஹீரோயின் அறிமுகம்  கிடைக்குது .அந்த  குதிரேமுக்  டப்பா  பிகரை  இவரு  லவ்வறாரு .அந்த கேனமும்  இவரை  லவ்வுது .அதே ஹீரோயினை  வில்லனும் லவ்வறாரு.வில்லன்னா லட்சணமா  ஹீரோயினை ரேப்  பண்ணாம பொண்ணு கேட்டு  டார்ச்சர்  பண்றாரு .வில்லன் கிட்டே  இருந்து  ஹிரோயினை  ஹீரோ  எப்படி காப்பாத்தறார்  என்பதே  மீதி  தலைவலி  கதை .


பார்த்து  பார்த்து  புளிச்சுப்போன அரதப்பழசான கதை .விஷால் கழுவாத முகத்தோட  படம் பூரா  வர்றாரு .இதுல என்ன காமெடின்னா  சநதானத்தை விட இவருக்கு வசனங்கள்  3 ல்  1 மடங்கு கூட இல்லை.


இடைவேளை ட்விஸ்ட்க்காக  அவர் மதுரைல ஆல்ரெடி 3 கொலை  பண்ணி இருக்கேன்னு சொல்லும்போது பெரிய  ஷாக் எல்லாம் வரலை .இவர் டான்ஸ் ஆடும்போது  விஜயை இமிடேட் பண்றது பத்தாதுன்னு  கவுண்டமணியும் இமிடேட்டிங் அண்ட் இரிட்டேட்டிங் 

ஹீரோயின் ஆக்ஷன் கிங்க் அர்ஜூன் பொண்ணு  ஐஸ்வர்யா அர்ஜூன் . கார்த்திகா மாதிரி  வரைஞ்சு வெச்ச  பெரிய புருவம் . அது மட்டும் தான் பெருசு . மத்ததெல்லாம் சிறிசு . ஐ மீன் கண்ணு கன்னம் எல்லாம் .ரொம்ப சின்னது . ஓவர் மேக்கப் . பொம்மை மாதிரி இருக்கார் . ரசிக்கவே முடியலை . துப்பட்டாவே தேவைப்படாத  அதிர்ஷ்டசாலி .அது போக  கண்ணுக்கு கீழே  தூக்கம் கேட்ட தடயம் .ம்ஹூம் . தேறாது.


சந்தானம் தான்  நி ஜ ஹீரோ . படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான் . ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது ,. ஓவர் டோஸ். ஏதோ அவருக்கு சீன் வெச்சா போதும்னு அதிகமா ஸ்க்ரிப்டுக்கு மெனக்கெடலை போல.


மயில்சாமி ஒரு ஆச்சரிய அப்ளாஸ் . செம காமெடி  வரும்போதேல்லாம் செம சிரிப்பு


வில்லன் காமெடியன். அவர் அடியாள் காமெடியும் ஓக்கேஇயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 1. பட ஷூட்டிங்க்க் நடக்கும்போது ஹீரோ  டைரக்டரை பாராட்டினார்னு பீலா விட்டது 2. இந்தப்படம் பெரிய டர்நிங்க்க் பாயிண்ட்னு  விஷால் ரீல் பேட்டி குடுக்க வெச்சது 3. வில்லன் அண்ட் கோ அடியாள்கள் காமெடி அலப்பரைகள் , மயில்சாமி காமெடி சீன்கள் 


4. முதலாளி முன் ஹீரோ  அடிக்கடி " எங்க முதலாளி ந ல்ல  முதலாளி  பாட்டு ரிங்க் டோன் போட்டு கலாய்ப்பது 


5.  கண்டிப்பா கடன் கிடையாது பேப்பரை சந்தானம்  சாப்பிட்டு ஹோ ட்டலில் செய்யும் காமெடி காட்சிகள் 

 6. அரங்கை அதிர வைத்த மயில்சாமி பிக் பாக்கெட் அடிக்கும்போது  மெயின் பேன்ட் ஜிப்பில் கை வைக்கும் காமெடி 
இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. முதல் சீன்ல வில்லன் ஒரு சூட்கெஸ் ல அரிவாளை காட்டி  கத்தி என்பது 


2. விஷால் 20 ரூபா குடுத்து  ஏழைக்கு மல்லிகைப்பூ வாங்கிக்குடு என்றதும்  பூக்காரி 7 முழம் மல்லிகைப்பூ தருவது 


3. பண்பாடு ., கலாச்சாரம் , பாரம்பரியம்  என பேசும் பட்டிமன்ற ராஜா  சாப்பிட்டுப்போங்க என்பதை இடது கையால் சைகை காட்டி சொல்வது , அதே போல் ஹீரோயினும்  இடது கையால் சாப்பிடுவது பற்றி சைகை காட்டுவது 4. ஸ்கூல் பெண்கள் எல்லாரும் ரோஸ் கலர் தாவணி அநிந்திருக்கும்போது  பேப்பரில் வரும்  போட்டோவில் மட்டும்  மற்ற பெண்கள்  ப்ளூ டிரஸ் , ஹீரோயின்  மட்டும் ரோஸ் எப்படி? 5. பெட்ரோல் போடப்போகும்  வில்லன் பங்க்கில் டீச்சரைப்பார்த்ததும்  ஆன் த ஸ்பாட் கடத்தி ரேப் பண்ணுவது  செம காமெடி . பாசிபிலிட்டியே இல்லை 


மனம் கவர்ந்த வசனங்கள் 1. முதலாளி.உங்கப்பா போட்டோவை நாங்க 4 பேரும் ஆளுக்கு 1 காப்பி வெச்சுக்கறோம் 


சந்தானம் - ஆளாளுக்கு வெச்சுக்க அது என்ன நயன் தாரா வா? எங்க நைனா 


2. இன்ஸ்பெக்டர்.நான் ஒரு ஜென்ட்டில்மேன் 


 நெல்லை சிவா -,ஜென்ட்டில்மேனே ஒரு திருடன் தானே? 


3. சந்தானம் - ஹலோ. 


 அடடே.முதலாளி.நானே கூப்டனும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஓஹோ. சரி.கால் கட் பண்றேன்கூப்டு 4. என்ன சாப்டறீங்க? லைட்டா டிபனா ? புல் மீல்சா?, லைட்டா டிபன் சாப்ட்டுட்டு அப்டியே மீல்சும் சாப்ட்ரோம் 


5. டாடி மம்மி வீட்டில் இல்ல #பாட்டு


 முதல்ல இந்தப்பொண்ணோட அட்ரஸ் வாங்குங்கடா.எப்போ பாரு சிக்னல் குடுத்துட்டே இருக்கு 
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  38

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - 

ரேட்டிங் =  2.25  / 5


சி பி கமெண்ட் - சந்தானம்  , விஷால் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் . பூர் அடிக்கலை , ஆனா  தலை வலிக்குது  . சி சென்ட்டர் ல மட்டும் சுமாரா ஓடும்